>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 6 நவம்பர், 2016

Epayslip க்கு மாதந்தோறும் DDOக்கள் டோக்கன் நம்பரை UPDATEசெய்ய வேண்டுமென உத்திரவிட்டுள்ளது.

அரசு பள்ளியை மேம்படுத்த '"ஷாலா சிதி "திட்டம்

2-ஆம் ஆண்டு பியூசி தேர்வு: அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் தொடங்குகிறது.

2-ஆம் ஆண்டு பியூசி தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து பியூ கல்வித் துறை வெளியிட்ட செய்தி: 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத் தேர்வு நடத்தப்படும் வரைவு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. 

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்ப்பு எப்போது?

TNTET CASE: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கின் தீர்ப்பு வரும் 12ம் தேதிக்குள் வழங்கப்படும் என தெரிகிறது.

குழந்தைகள் கல்வி: பெற்றோர் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்!

படிப்பு, மதிப்பெண், ஸ்கூல், தேர்வு... இவைதான் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தினமும் தவறாமல் பயன்படுத்தும் வார்த்தைகள். வாழ்க்கைக்கு வெறும் பள்ளி, தேர்வு சார்ந்த விஷயங்கள் மட்டுமே பிரதானம் என்ற

GROUP 4 தேர்வு எழுதும் தோழர்களுக்கு...!

இத்தேர்வில் கவனத்தோடும், கருத்தோடும் எதிர் கொண்டு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
* இனி புதிதாக படிப்பது தேவையற்றது. ஏற்கனவே படித்தவற்றை பலமுறை அசைபோடுங்கள்.
* மக்கள் தொகை புள்ளிவிவரங்கள், பட்ஜெட், அரசு நலத்திட்ட்ங்கள், அரசு விருதுகள், பரிசுகள் உள்ளிடட நடப்பு விவரங்களில் எப்போதும் தெளிவாக இருங்கள்.
* படிக்கும் ஆர்வத்தில் சரியான உணவு, போதிய தூக்கம் ஆகியவற்றில் அசட்டையாக இருக்க வேண்டாம்.

'குரூப் - 4' தேர்வில் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இன்று நடத்தும், குரூப் - 4 தேர்வில், 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அரசு துறையில், 5,451 காலியிடங்களுக்கு, குரூப் - 4 தேர்வு, இன்று நடத்தப்படுகிறது.

பள்ளிகளில் விளையாட்டை கட்டாய பாடமாக்க வேண்டும்: மத்திய மந்திரி பேச்சு

டெல்லியில் நடைபெற்ற மத்திய கல்வி வாரிய ஆலோசனை குழு கூட்டத்தில் விளையாட்டு துறை மந்திரி விஜய்கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:-

மத்திய அரசு பணியில் இருந்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர் !!

மத்திய அரசு பணியில் இருந்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பட்டியல் பின்வருமாறு

சனி, 5 நவம்பர், 2016

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் மிக முக்கிய அம்சங்கள் !!

1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.
2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.
3. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்கள்  தொழிற்கல்வி பிரிவுக்கு மாற்றப்படுவர்.

7th CPC DA Orders copy - 2% from July 2016

கிராம மாணவர்கள் எண்ணிக்கை 13 லட்சம்

அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கருத்தாய்வு கூட்டம்,  நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:
கடந்த ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொண்ட, கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை, 10 லட்சம். தற்போது, இந்த எண்ணிக்கை, 13 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரிக்க, பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது.ஆனால் பள்ளிகளில், ஒரு மாணவர், இரண்டு மாணவர் என, குறைவாக இருப்பதால், ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் இருக்கக் கூடாது. துாத்துக்குடி மாவட்டத்தில், ஐந்து மாணவர்கள் மட்டுமே இருந்த ஒரு அரசு பள்ளியில், கணினி மூலம் பாடம் நடத்தியதால், தற்போது, 20க்கும் அதிகமாக,மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தரமான கல்வியை வழங்குவதன் மூலம் தனியார் பள்ளி மாணவர்களும், அரசு பள்ளிகளை நோக்கி வரும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க வேண்டும். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியருடன் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில், அடுத்த கல்வி ஆண்டு முதல் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் மிக முக்கிய அம்சங்கள் !!

1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.
2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.
3. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்கள்  தொழிற்கல்வி பிரிவுக்கு மாற்றப்படுவர்.

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு விலக்கு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு நாளை (நவ.,6) ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதே நாளில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு பணியில் பங்கேற்கவும் அவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் குழப்பம் அடைந்தனர்.

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு விலக்கு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு நாளை (நவ.,6) ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதே நாளில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு பணியில் பங்கேற்கவும் அவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் குழப்பம் அடைந்தனர்.

நாளை குரூப்-4 தேர்வு : 15 லட்சம் பேர் பங்கேற்பு.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 4ல் (குரூப்-4) அடங்கிய 5 ஆயிரத்து 451 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நாளை மாநிலம் முழுவதும் உள்ள 301 தாலுகா மையங்களில் நடக்கிறது.
  இத்தேர்விற்காக விண்ணப்பித்துள்ள 15 லட்சத்திற்கும் கூடுதலான தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டு தேர்வாணைய இணையதளமான www.tnpscல் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது.
 தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண், பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை இணையதள பக்கத்தில் உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும் அதே இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது கணினியில் பதிவிறக்கம் செய்யும் முன் பாப் அப் ப்ளாக் நிலையை உபயோகப்படுத்தும்பட்சத்தில் அந்நிலையை மாற்றி  தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை கண்டிப்பாக உடன் எடுத்துவரவேண்டும். தேர்வுக்கூடத்திற்குள் நுழையும்போதும், அறை கண்காணிப்பாளர் கேட்கும்போதும் காண்பிக்கவேண்டும்.  தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் வரும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வுக்கூட வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
 உடன் வரும் பெற்றோர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.  அகவி, செல்லிடத் தொலைபேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களையும் விண்ணப்பதாரர் தேர்வுக்கூடத்திற்குள் எடுத்து வரவோ, வைத்திருக்கவோ கண்டிப்பாக அனுமதி கிடையாது. மீறி தேர்வுக்கூடத்தினுள் எந்த தேர்வரேனும் வைத்திருப்பது தெரியவரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.  தேர்வு மையத்தை மாற்றவோ, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விருப்பப் பாடத்தை மாற்றி எழுதவோ கண்டிப்பாக அனுமதியில்லை.
 விண்ணப்பதாரர்களுக்கான தேர்வாணைய அறிவுரைகளை தேர்விற்கு வரும் முன் கவனமாகப் படித்துவிட்டு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வாணைய அறிவுரைகளை மீறும் விண்ணப்பதாரர்கள் மீது தேர்வாணைய அறிவுரைகளின்படி  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர் ஷோபனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நாள் கொண்டாட உத்தரவு.

அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், நவ., 11ல், தேசிய கல்வி நாள் கொண்டாட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.மத்திய முன்னாள் கல்வி அமைச்சரும், சுதந்திர போராட்ட வீரருமான, மவுலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவ., 11, தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைகள், கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றைஅனுப்பி உள்ளது. அதில், 'தேசிய கல்வி நாளையொட்டி, நவ., 11ல், கல்வி தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2, 10ம் வகுப்பு: 14 முதல் முன் அரையாண்டு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 14 முதல், முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுக்கு இடையே, பருவத் தேர்வு நடத்தப்படும்.
அரசு பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், பருவத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாளில், அனைத்து பாடங்களிலிருந்தும் கேள்விகள் இடம் பெறும்.
அரசு பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வை சமாளிக்கும் வண்ணம், இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 'இந்த ஆண்டுக்கான முன் அரையாண்டு தேர்வு, வரும், 14ல் துவங்கி, 25 வரை நடத்தப்படும்' என, பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

'பெஸ்ட்' திட்டம் பள்ளிகளில் அறிமுகம்



அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, 'பெஸ்ட்' என்ற பெயரில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளிகள், மாநில அளவில், 'ரேங்க்' பெறவில்லை. அதனால், சென்னை அரசு பள்ளி மாணவர்களையாவது, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக, சிறப்பு திட்டம் கொண்டு வர, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'போர்டு எக்ஸாம் ஸ்கோர் டிப்ஸ் - பெஸ்ட்' என்ற பெயரில்,புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதில், சராசரி மாணவர்கள், சராசரிக்கு மேற்பட்டவர், 70சதவீத மதிப்பெண் பெறுவோர் மற்றும் மாவட்ட அளவில், 'ரேங்க்' பெறும் மாணவர்கள் என, பிரிக்கப்பட்டு உள்ளனர்.
ஒவ்வொரு வகை மாணவர்களும், எந்தெந்த மதிப்பெண்ணில், எத்தனை வினாக்களை, எந்த பாடங்களில் படிக்கலாம் என, கூறப்பட்டு உள்ளது.'இந்த திட்டத்தை முறையாக அமல்படுத்தினால், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறலாம்' என, ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.