>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 3 நவம்பர், 2016

பிளஸ் 2 துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடக்கும். பின், ஜூன் - ஜூலையில் சிறப்பு உடனடி துணைத் தேர்வும்; செப்., - அக்., மாதங்களில், தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வும் நடக்கும். செப்டம்பரில் நடந்த, தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'நவ., 3, காலை, 10:00 மணிக்கு பின், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவுகளை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக பதிவிறக்கம் செய்யலாம்' என, தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : அறிக்கை தர அரசுக்கு உத்தரவு

'அரசு பள்ளிகளில் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த எத்தகைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்பது குறித்து, அரசு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 
மதுரை ஆனந்தராஜ் 2014ல் தாக்கல் செய்த மனு: 'தமிழகத்தில், 5,720 பள்ளி களில் கழிப்பறை வசதி இல்லை' என, 2014 ஆக., 8 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.
நீதிபதிகள், 'அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தண்ணீர் வசதியுடன் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும். பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதில் மேற்கொண்ட நடவடிக்கை, நிறைவேற்ற எவ்வளவு கால அவகாசம் தேவை என்பது பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, 2014ல் உத்தரவிட்டனர். 
இந்த வழக்கை நேற்று, நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அடங்கிய அமர்வு விசாரித்தது. மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வழக்கறிஞர் கமிஷனர்கள் குழுவினர் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர். இதில், கழிப்பறைகள், தண்ணீர் வசதி, துப்புரவு பணியாளர்கள் போதிய அளவு இல்லை. கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன. 
சில பள்ளி களில் மின் கட்டணத்தை ஆசிரியர்கள் சொந்த பணத்திலிருந்து செலுத்துகின்றனர். அதை கல்வித்துறையே ஏற்று, மின்வாரியத்திற்கு செலுத்தலாம். நாப்கின் வசதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது: பல்வேறு குறைபாடுகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மூன்று மாவட்ட பள்ளிகளிலேயே இந்நிலை எனில், மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் நிலை பற்றி உங்களுக்கே தெரியும். 
வழக்கறிஞர் கமிஷனர்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், எத்தகைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை செயலர் நவ., 8ல் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறினர்

ஒரே வாரத்தில் பி.எஃப். பணம்!

‘தொழிலாளி இறந்தால் அவரது வாரிசுக்கு ஒரே வாரத்தில் பி.எஃப். செட்டில்மென்ட் பணம் வழங்கப்படும்’ என மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் வி.பி.ஜாய் தெரிவித்தார். தொழிலாளர்களின்
பி.எஃப். கணக்குகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நிர்வகித்து வருகிறது. தற்போது பி.எஃப். சந்தாதாரராக உள்ள தொழிலாளி மரணம் அடைந்தால், அவரது பி.எஃப். செட்டில்மென்ட், பென்ஷன், இன்சூரன்ஸ் பலன்களை அவரது குடும்பத்தினருக்கு அல்லது வாரிசுக்கு வழங்குவதற்கு ஒரு மாதம் ஆகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பி.எஃப். தொடர்பாக நடந்த ஆலோசனையின்போது, பி.எஃப். செட்டில்மென்ட் வழங்க இவ்வளவு நாள் தாமதம் ஆகக்கூடாது என்றும், குறிப்பாக தொழிலாளர்கள் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு உடனடியாக செட்டில்மென்ட் கிடைக்கச்செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
“தொழிலாளி மரணம் அடைந்த பிறகு அவரது மனைவி அல்லது வாரிசுதாரரால் சமர்ப்பிக்கப்படும் பி.எஃப். கோரிக்கைகளை விண்ணப்பம் பெற்ற ஒரே வாரத்தில் பரிசீலித்து செட்டில்மென்ட் செய்ய வேண்டும். இதற்கான உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தொழிலாளியின் கணக்கு உள்ள பி.எஃப். அலுவலகம் மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, தொழிலாளியின் இறப்புக்குப் பிறகு விண்ணப்பிக்கும் கோரிக்கைகளை பரிசீலிக்க தனியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை அதிக முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிக்க வேண்டும்.
‘தொழிலாளியின் இறப்புக்குப் பிறகு வைக்கப்படும் கோரிக்கையாக இருந்தால் இங்கு அணுகவும்’ என்று ஆங்கிலம், இந்தி அல்லது அந்தந்த பிராந்திய மொழியில், விண்ணப்பம் பெறும் கவுண்டரில் தெளிவான அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும்”. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பி.எஃப். கோரிக்கைகள் தாமதமாவது குறித்து பேட்டியளித்த ஆணையர் ஜாய், ‘‘சில கோரிக்கை விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் வருகின்றன. இதுவும் தாமதத்துக்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. இருப்பினும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவு செய்ய நாங்கள் முயற்சி செய்கிறோம்’’ என்றார்.

தமிழ்நாட்டில் 12485 தொடக்கப்பள்ளிகளில் தலைமைஆசிரியர்கள் கிடையாது தகவல்அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்!!!!

புதன், 2 நவம்பர், 2016

ஆசிரியர்/அரசு ஊழியர்களின் SERVICE REGISTER (SR) டிஜிட்டல் மயமாகிறது

நிலுவையில் உள்ள பதிவுகளை விரைந்து பதிவு செய்ய அரசு முதன்மை செயலாளர் உத்தரவு.
கருவூலச்செய்தி;
அனைத்து  அரசு ஊழியர்கள்-  ஆசிரியர்களுடைய   SR ஐ தயார் நிலையில் வைக்க வேண்டும்..SR கள் அனைத்தும்  கருவூலத்தில்  SCAN செய்து பதிவு செய்யப் பட உள்ளது

TRB - 38 ஏ.இ.இ.ஓ. விரைவில் நேரடி நியமனம்

தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்விஅலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுமூலமாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகின்றனர். சம்பளப்பட்டியல் தயாரிப் பது, பள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது, ஆசிரியர் களுக்கு விடுமுறை, ஈட்டுவிடுப்பு சரண்டர், வங்கிக் கடன்,பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் (ஜிபிஎஃப்) முன்பணம்போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது முதலான பணிகளை அவர்கள்மேற்கொள்கிறார்கள்.
நேரடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நியமனமுறை முதல்முறையாக 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தஆண்டு 67 பேரும் தொடர்ந்து 2011-ல் 34 பேரும் நேரடியாக உதவிதொடக்கக் கல்வி அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 5ஆண்டுகளாக நேரடி நியமனம் எதுவும் இல்லை. 
இந்த நிலையில், 38உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களை நேரடியாக தேர்வு செய்ய,ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாகதொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். நேரடிஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியைப் பொருத்த வரையில்சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டமும், பிஎட் பட்டம் பெற்றவர்கள்இதற்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35ஆகும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு 40 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியது எல்காட் நிறுவனம்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011-12, 12-13ம்ஆண்டு களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கலை, அறிவியல் கல் லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து 2013-14 நிதியாண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாண்டு படிக்கும் மாணவர் களுக்கும் இத்திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையின் கண்காணிப்பில், 2011 முதல் 2016 வரை 33 லட்சம் மடிக்கணினிகள் எல்காட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இதையொட்டி அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.
இதற்காக 5 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்யும் பணியில் எல்காட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.முதல்கட்டமாக இதற்கான ஒப்பந்தத்தை எல்காட் நிறு வனம் கோரியுள்ளது. தகுதி யான நிறுவனங்கள் தரும் மடிக்கணினிகள் அரசு வகுத்துள்ள வரம்புக்குள் இருக்கும்பட்சத்தில், அவை கொள்முதல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

பள்ளி மாணவரை ஆதார் மூலம் பின்தொடர மத்திய அரசு முடிவு.



நாடு முழுவதிலும் பள்ளி மாணவர் களை ஆதார் எண் மூலம் தீவிர மாகப் பின்தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், மாணவர்கள் படிப்பை பாதியில் விடுவதைத் தடுக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. நாடு முழுவதிலும் அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தின் கீழ் சுமார் 15 லட்சம் பள்ளிகள் உள்ளன.
இவற்றில் சுமார் 26 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களில் பலருக்கு படிப்பை பாதியில் விடவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகளால் கண்காணித்து தடுக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையை போக்க மத்திய அரசு அவர்களின் ஆதார் எண்களைப் பதிவு செய்து 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதில் ஆதார் எண் இல்லாத குழந்தைகளுக்கு அதை அவர்கள் பெறும் வரை 18 இலக்கம் கொண்ட சிறப்பு எண் அளிக்கப்பட உள்ளது. இந்த எண்ணைப் பதிவுசெய்து குழந்தைகளைத் தீவிரமாகப் பின்தொடரும் பணியை, கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் (National University of Educational planning and Administration) செய்ய உள்ளது. இதற்கு, 'கல்விக்கான ஒருங்கிணைந்த - மாவட்ட தகவல் முறை (Unified -District Information System for Education (U-DISE)' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள்  கூறும்போது, 'தற்போது, பள்ளியில் சேரும் குழந்தைகள், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் உட்பட சில தகவல்கள் மட்டுமே மத்திய அரசால் தொகுக்கப்பட்டு வருகிறது. இந்தப் புள்ளி விவரங்களில் பள்ளியை பாதியில் விடும் குழந்தைகளின் விவரம் துல்லியமாக இருப்பதில்லை. எனவே இந்த விவரம் மற்றும் பிற குறைபாடுகளையும் புதிய திட்டத்தின் மூலம் அறிந்து அதை போக்கும் நடவடிக்கைகளை எடுப்பது எங்கள் திட்டம் ஆகும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது" என்று தெரிவித்தனர்.
 இந்த முறையை சண்டீகர் மற்றும் சில மாநிலங்கள் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிவைத்து தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதைத் கவனத்தில் கொண்ட மத்திய அரசு நாடு முழுவதிலும் தனது நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் பள்ளியை பாதியில் விடும் குழந்தைகள் விவரம், அவர்களின் பின்னணி, பள்ளிகளின் குறைபாடு உட்பட அனைத்து விவரங்களையும் தொகுத்து உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் படிப்பை பாதியில் விடுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். மத்திய அரசின் 2014-15 கல்வியாண்டு கணக்கெடுப்பின்படி தற்போது, நாடு முழுவதிலும் பள்ளியைப் பாதியில் விடும் குழந்தைகள் எண்ணிக்கை 18 சதவீதமாக உள்ளது. சுமார் 13 லட்சம் அரசுப் பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக உள்ளன. சுமார் 5 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது இதற்கு காரணம் ஆகும். பிளஸ் 2-க்கு பிறகு தற்போது 25 சதவீத மாணவர்கள் மட்டுமே உயர்கல்வியில் சேருகின்றனர். 

NTSE 2016 - Hall Ticket Download revised Instructions



NAMAKKAL CEO PROCEEDINGS- பள்ளிக்கல்வி- வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கைபேசிகளை உபயோகிக்கக்கூடாது என்பது கட்டாயம் அமல் செய்தல் சார்பு

உணவு பாதுகாப்பு சட்டம் அமல் : ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு!!

உணவு பாதுகாப்பு சட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்ததால், அதிகாரிகள், ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
தமிழக ரேஷன் கடைகளில், 1.91 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி வழங்கப்படுகிறது. தமிழக அரசு, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தை நேற்று முதல் அமல்படுத்தியது.
அதன்படி, நான்கு பேருக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு, தற்போது ரேஷனில் வழங்கப்படும் அதே அளவில் இலவச அரிசி வழங்கப்படும்.
25 கிலோ இலவச அரிசி
ஐந்து பேர் உள்ள குடும்பத்துக்கு வழங்கப்படும், 20 கிலோ அரிசிக்கு பதில், 25 கிலோ இலவசம்; அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு
உறுப்பினருக்கும், தலா, ஐந்து கிலோ அரிசி, கூடுதலாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இதையடுத்து,ரேஷன் கடைகளில், உணவுத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்து உள்ளதால், ரேஷன் கடைகளுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அரசு நிர்ணயித்துள்ள அளவில், ஊழியர்கள், அரிசியை வழங்குகிறார்களா என்பதை கண்காணிக்க ஆய்வு செய்யப்படுகிறது. மொத்தமாக அரிசியை எடுத்து செல்ல முடியாதவர்கள், இரண்டு தவணைகளில் பெறலாம். இந்த சட்டத்தால், அரிசி மானியத்துக்காக, மாநில அரசுக்கு, 1,193 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
ரசீது வழங்க கருவி :
ரேஷன் கடைகளில், உணவு பொருட்கள் வாங்கும் போது, காகித ரசீது வழங்கப்படுகிறது. இதில், முறைகேடுநடப்பதால், நவீன கருவியில், ரசீது போட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தற்போது, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில், ரசீது போடும் போது, அந்த விபரம் கார்டுதாரருக்கு,
எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும். நேற்று முதல், அனைத்து ரேஷன் கடைகளிலும், கருவி மூலம் ரசீது போடும் முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 34 ஆயிரத்து, 776 ரேஷன் கடைகள் உள்ளன; அதில், 70 சதவீத கடைகளில், அக்., 1 முதல், பாயின்ட் ஆப் சேல் கருவியில் ரசீது போடப்பட்டது. நேற்று முதல் அனைத்து கடைகளிலும், கருவி மூலம் தான் ரசீது போடப்படும். எனவே, ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் மொபைல் போன் எண்ணை, ரேஷன் கடைகளில் உடனே பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

மாணவர்களுக்கு 11 விதிமுறைகளுடன் கல்வித்துறை அதிரடி உத்தரவு !

மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன்,
‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கல்வித்துறையின் 11 விதிமுறைகள்: 
* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும். 
* லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.
* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது
* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். 
* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.
* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும். 
* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.
* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது. 
* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.
* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும். திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது. 
* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும். 
இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான 11 விதிமுறைகள் குறித்து ‘பிளக்ஸ் பேனர்’கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

TNPSC:குரூப்-4 தேர்வுக்கு 12,75,000 நபர்கள் விண்ணப்பித்து உள்ளனர்

06.11.2016 அன்று நடைபெற உள்ள குரூப் - 4 தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 12,75,000 நபர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

Puppet Making video

Click Here

அறியாமையை அகற்றும் அகல் விளக்குகள் ஆசிரியர்கள்

How to Create Own Website for You?

1.கூகுளில் புதிய கணக்கு ஒன்றை தொடங்குங்கள்.


2.அதனுள் சென்று மேலே வலது பக்கம் உள்ள 6 புள்ளியை க்ளிக்செய்யுங்கள்.


3. கீழே more என்ற வார்த்தையை க்ளிக் செய்யுங்கள்.

4. ஆரஞ்சு நிற சின்னத்தோடு Blogger என்பதை க்ளிக் செய்யுங்கள்.


5.create your blog என ஆங்கிலத்திலுள்ளதை க்ளிக் செய்யுங்கள்.

6,create a new blog கீழ் Title என்னுமிடத்தில் எந்த தலைப்பின் கீழ்நீங்கள் செயல்பட விரும்புகிறீர்கள் என கொடுக்கவும். (இது இணையமுகவரி அல்ல.தலைப்பு மட்டுமே)

7.Address என்ற பகுதியில் வழங்க விரும்பும் முகவரியைகொடுக்கவும்.(இதுதான் நீங்கள் அனைவருக்கும் பகிரப் போகும்உங்களது ப்ளாக்கர் முகவரிஎல்லாம் small letters இடைவெளியின்றிதர வேண்டும்.என்ன வார்த்தை கொடுத்தாலும் அதன் பின்.blogspot.com என்பது default ஆக வரும் Example: (www.padasalai.blogspot.com). எனவே மிக எளிதாகத் தரவும்.

8.Template(எப்படி தோன்ற வேண்டும்என்பதில் ஏதேனும் ஒன்றைதேர்ந்தெடுக்கவும்.

9.create blog என்பதை க்ளிக் செய்யவும்.

10.இடது மூலையில் தென்படும் new post  க்ளிக் செய்யவும்.

11.எழுதப் போகும் பதிவிற்கான தலைப்பை post title என்ற பகுதியில்கொடுக்கவும்.

12.compose பகுதியில் கீழ் தெரியும் பெரிய தாள் போன்ற பகுதிக்குள்மேல் கொடுத்த தலைப்பு தொடர்பான படைப்பை பதிவு செய்யவும்.

13.பதிவில் எழுத்துகளை பெரிதாக்க,சிறிதாக்க,தடித்த,சாய்ந்தஎழுத்துகளை பயன்படுத்தஅவற்றின் நிறத்தை மாற்றஅடிக்கோடிட,படங்களை,வீடியோக்களை இடைச் செருகஒரு இணைப்பைவேறொரு பக்கத்திலிருந்து இங்கே வழங்கஇது போன்றசெயல்களுக்கு நீங்கள் எழுத ஆரம்பிக்கும் இடத்திற்கு மேலே உள்ளவிருப்பங்களிலிருந்து தெரிவு செய்து கொள்ளலாம்.

14.பதிவை முடித்த பிறகு பதிவு சார்ந்த குறிப்பினை வழங்க வலதுபக்கம் தோன்றும் lables என்பதை க்ளிக் செய்ததும் தோன்றும் சிறியபெட்டிக்குள் குறிப்பினை கொடுக்கவும்பின்னர் கீழே உள்ள Done என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.

15,இறுதியாக Post Title க்கு வலது புறம் தோன்றும் Publish என்றவார்த்தையை க்ளிக் செய்யஉலகத்தின் எந்த இணையஇணைப்புள்ள ஒரு கணினியிலிருந்தும் உங்கள் ப்ளாக் முகவரிதெரிந்த எவரும் நீங்கள் எழுதியதை வாசிக்க முடியும்.


-முனைவர்.ஜெயபிரபு,பட்டதாரி ஆசிரியர்,தஞ்சாவூர்.

Income Tax 2016-17 – All Salaried Employees to declare deductions and savings under Form 12BB

1 2BB – Download Form 12BB as a Word, Excel or PDF file- All Employees to file Declaration under Form 12BB to claim deduction for savings under Section 80 C, payment of house loan interest under Section 24, and HRA exemption under Section 10
The Finance Act, 2015 had introduced section 192(2D) of the Income-tax Act, 1961 (the Act) wherein the person responsible for making payment of salary (employer) was obliged to collect the necessary evidence or proof in the prescribed form and manner to allow any claim for any deduction and/or tax saving investments. However, the relevant rules and form were yet to be prescribed. The Central Board of Direct Taxes (CBDT) has come out with the relevant rules1 and also prescribed the form i.e. Form 12BB, in which salaried employees would now be required to furnish evidence of claims and tax saving investments to the employer.
Till Finance Act 2016, there was no standard format for salaried employees for filing declaration with their employer to claim deduction for savings under Section 80 C, payment of house loan interest under Section 24, and HRA exemption under Section 10. In the absence of single declaration form, employees had to submit proof for each investment made in the year.
As a relief to employees and also to employer, Income Tax Department has introduced a new Form 12BB. This form, applicable from June 1, 2016, will act as a single entity that you can use to declare your to claim deduction for savings under Section 80 C, payment of house loan interest under Section 24, and HRA exemption under Section 10.
Deductions that can be declared under Form 12BB:
The standard Form 12BB is for all salaried Employees to claim tax deductions. You use can use it to claim deductions for leave travel allowance (LTA/LTC), house rent allowance (HRA), interest paid on home loans, and all other tax deductions pertaining to Chapter VI-A of the Income Tax Act.
House Rent Allowance (HRA):
With form 12BB, you can claim any HRA tax deductions under Section 10 (13A) of the Income Tax Act. Along with 12BB you will need to provide the relevant rent receipts for this deduction. You will also need to submit the name and address of the landlord. In the event the aggregate rent paid by you exceeds Rs 1 lakh, you will also need to submit the Permanent Account Number (PAN) of your landlord.
Amount claimed under Leave travel Concession (LTC)
With Form 12BB, you need to furnish amount and provide evidence of expenses made towards your travel. Unlike in the past, it is now mandatory to provide proof of all travel expenses in the form of receipts for your claim.
Interest on home loan under Section 24:
Earlier to claim deduction for interest paid on home loan, we have to submit interest certificate from the concerned bank. Now, in addtion to the same we will have to fill up Form 12BB to claim deductions under Section 24 of the Income Tax Act.
Savings / deductions under Chapter VI-A:
All tax deductions under Section 80C, Section 80CCC, and Section 80CCD, as well as other sections like 80E, 80G, and 80TTA come under Chapter VI-A of the IT Act. For deductions, fill up Form 12BB and provide details and proof of your investments and expenditures incurred related to the relevant section you are seeking deductions under.

MINORITY SCHOLARSHIP-பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.