புதன், 2 நவம்பர், 2016
தமிழ் ஆசிரியர்கள் பணி வரன்முறை ஐந்தாண்டு காத்திருப்புக்கு தீர்வு
பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள், 2,000 பேர், ஐந்தாண்டு காத்திருப்புக்கு பின், பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில், 2011 முதல், பல கட்டங்களாக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக, புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களை பணி வரன்முறை செய்வதில், கால தாமதம் ஏற்பட்டது. ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், தமிழ் தவிர, இதர பாட ஆசிரியர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டனர்; தமிழ் ஆசிரியர்கள் மட்டும் வரன்முறை செய்யப்படவில்லை.
இதனால், அரசின் சலுகைகள் கிடைக்காமல் அவர்கள் அவதிப்பட்டனர்; அரசுக்கு தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, 2011 முதல், 2015 வரையில் நியமிக்கப்பட்ட, பட்டதாரி தமிழ் ஆசிரியர்களை, பணி வரன்முறை செய்து, பள்ளிக்கல்வித் துறை, நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதனால், 2,000 ஆசிரியர்கள் பலனடைவர். 'பணி வரன்முறை உத்தரவால், தமிழ் ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பயிற்சி காலம் முடிவுக்கு வரும். மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, ஊக்க ஊதியம், உயர்கல்வி ஊக்க ஊதியம் போன்ற சலுகைகள் கிடைக்கும்' என, ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
போஸ்ட்மேன் வேலை நவ., 15 கடைசி
'தமிழகத்தில், காலியாக உள்ள, 310 போஸ்ட்மேன்கள், மெயில் கார்டு பணி இடங்களுக்கு, நவ., 15க்குள், விண்ணப்பிக்கலாம்' என, அஞ்சல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அஞ்சல் வட்டத்தில், 304 போஸ்ட் மேன்கள்; ஆறு மெயில் கார்டுகள் என, காலியாக உள்ள, 310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, பிளஸ் 2 முடித்தோர், ஆன்லைன் வழியே, நவ., 15க்குள் விண்ணப்பிக்கலாம். 21 ஆயிரம் ரூபாய் முதல், 69 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். பொது பிரிவினருக்கும், மற்ற பிரிவினருக்கும், அரசாணைகளின்படி, வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.
வயது வரம்பு, 2016, நவ., 15ஐ அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். விண்ணப்பங்கள் பெறவும், மேலும் விபரங்களுக்கும், www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இல்லந்தோறும் இணையம் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
"இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் விவரம்:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ள இணைய சேவை உரிமத்தை பயன்படுத்தி, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில், அதிவேக அகண்ட இண்டர்நெட் சேவைகளை மாவட்ட தலைநகரங்களில் வழங்கி வருகிறது. குறைந்த கட்டணம் -சிறப்பான சேவையின் காரணமாக இந்தத் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து இரண்டாம் கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து, அதிவேக அகண்ட அலைவரிசை இண்டர்நெட் சேவைகளை வருவாய் பங்கீட்டு முறையில் வழங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பத்தை நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tactv.in) இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15, மாலை 3 மணி.
விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் தொழில் தொடங்க ஏதுவாக, தேசிய வங்கியிலிருந்து கடன் பெறவும் உதவி செய்யப்படும் அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மனஅழுத்தம் போக்க கல்வித்துறையில் யோகா
மாநில அளவில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மன அழுத்தம் போக்கும் சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நவ.,7 பொள்ளாச்சியில் துவங்குகிறது.
ஆசிரியர்கள் மனஅழுத்தம் குறைய, திறன் மேம்பாடு, ஆளுமை திறன் அதிகரிப்பு, மாணவர் - ஆசிரியர் உறவு மேம்பாடு உட்பட பல்வேறு காரணங்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி நவ.,7 முதல் 2017 டிச., வரை 17 கட்டங்களாக பொள்ளாச்சி ஆழியார் மனவளக்கலை யோகா மையத்தில் நடக்கிறது.
இதில் அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் 950 பேர் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதற்காக முதன்மை கல்வி அலுவலகங்கள் வாரியாக தலைமையாசிரியர் பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்," என்றார்
மாணவர்களுக்கு ''வாட்ஸ் அப்'' வரமா.... சாபமா
அலைபேசியில் அனுப்பும் குறுந்தகவலுக்குப் பதில் காணொலி, கேட்பொலி மற்றும் உருப்படிமங்களை எளிமையாகத் தடையின்றி அனுப்புவதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது 'வாட்ஸ் ஆப்' செயலி. அமெரிக்காவைச் சார்ந்த ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகியோரின் முயற்சியால் 2009 பிப்., 24ம் தேதி சிலிகான் பள்ளத்தாக்கில் 55 பணியாளர்களைக் கொண்டு 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் துவங்கப்பட்டது. அதன் மூலம் 'வாட்ஸ் ஆப்' செயலி உருவாக்கப்பட்டது.
ஜான், பிரைன் இருபதாண்டுகளாக 2007 செப்., வரை யாஹூ நிறுவனத்தில் கணினி சார்ந்த வேலைகளைச் செய்தனர். பின் 'பேஸ்புக்' நிறுவனத்தில் வேலையில் சேர முயற்சித்தனர். அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. மனம் தளராத இருவரும், வரும் காலங்களில் மக்கள் 'ஸ்மார்ட் போன்' உபயோகிப்பர் என கணித்து, 'வாட்ஸ் ஆப்' செயலியை உருவாக்கியதுதான் இன்றைய அவர்களின் இமாலய வெற்றிக்குக் காரணம். 'வாட்ஸ் ஆப்' நிறுவனர்களான ஜான் மற்றும் பிரைன் ஆகியோரை வேலைக்கு எடுக்காத 'பேஸ்புக்' நிறுவனம், ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு 2014 பிப்., 19 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்தைத் 1600 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
மைனர்களுக்கு தடை
'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துபவர்கள், தங்கள் சொந்தத் தகவல்களை வெளியிடுவதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும். பதினாறு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அதைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்துவது தெரிந்தால் உடனடியாக 'வாட்ஸ் ஆப்' குழுவிலிருந்து நீக்கப் படுவர் என்பதை 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் விதிமுறையாக குறிப்பிட்டது. ஆனால் நடைமுறையில் இந்த விதிமுறை எவ்வளவுதுாரம் காப்பாற்றப்பட்டுள்ளது என தெரியவில்லை.
80 கோடி பேர்
உலகில் 80 கோடி நுகர்வோர் 'வாட்ஸ் ஆப்' செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். மாதம் லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனாளர்கள் உருவாகின்றனர். 'வாட்ஸ்ஆப்' பயன்படுத்துபவர்களில் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
'ஸ்மார்ட் போனுடன் 'வாட்ஸ் ஆப்' வைத்திருப்போரை, இன்றைய நாகரிகக் குறியீடாக உருவாக்கி, அவர்களைத் தங்கள் மாய வலைக்குள் சிக்கவைக்கும் வேலையைப் பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.
இந்த கவர்ச்சி வலையில் சிக்கிய மாணவர்கள், 'வாட்ஸ் ஆப்'க்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் மாணவர்கள் சுயமாகச் சிந்திக்கும் நேரத்தையும் கல்வி கற்கும் நேரத்தையும் இழக்க நேரிடுகிறது. இதைப் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் உணர்ந்து, அதைப் பயன்படுத்த முறையாக வரையறை செய்ய வேண்டும்.
அரட்டைக்காக பயன்படும் அவலம்
'ஸ்மார்ட் போனுடன் வாட்ஸ் ஆப் பயன்படுத்தக் கூடிய மாணவர்களிடம், அவர்கள் கல்வி முறையில் ஏற்படக்கூடிய நன்மை மற்றும் தீமைகளை அறிய, தென்மாவட்ட தகவல் தொழில் நுட்ப இளைஞர்களை ஒருங்கிணைத்து வரும் 'மதுரை ஐடியன்ஸ்' அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.
மதுரை மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளிடம் ஆய்வு நடந்தது. அவர்களிடம் கலந்துரையாடல், அலைபேசி, மின்னஞ்சல், முகநுால், மற்றும் டுவிட்டர் வழியாகக் கேள்விகளை கேட்ட போது கல்வி, பொதுத் தகவல், அரட்டை, குடும்பம் போன்ற நான்கு நியாயமான காரணங்களுக்காக இதைப் பயன்படுத்துவதாகப் பெரும்பாலோர் தெரிவித்தனர்.
அவர்களிடம் பெற்ற தகவல்களைப் பகுப்பாய்வு செய்ததில், மாணவர்கள் அரட்டைக்காகவும், பொதுத் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், “வாட்ஸ்ஆப்'” பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.
மாணவிகள் பெரும்பாலும் குடும்பம் சார்ந்த தகவல்களை நண்பர்களிடம் தெரிவிக்கவும் அரட்டைக்காகவும் பயன் படுத்துவதாகத் தெரிவித்தனர்.
கல்விக்கான பயன்பாடு குறைவு
மிக குறைந்த எண்ணிக்கையினரே கல்விக்காக பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது.கல்விக்காக -8, பொதுத் தகவலுக்காக -11, அரட்டைக்காக -72, குடும்பத்திற்காக -9 சதவீதம் பயன்படுத்தியுள்ளனர். 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்தியவர்கள் 72 சதவீதம் பேர் நடந்து முடிந்த தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுத்ததையும்
ஒப்புக்கொண்டனர்.
நுாறு பேர் கொண்ட குழுவாக இருப்பதால், அரட்டையடிப்பதிலேயே மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், அதனால் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த நேரத்தை ஒதுக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைப் பார்க்கும் போது வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும், வலிமை இழந்து போய்க் கொண்டிருக்கும் மாணவ மாணவியரின் பொன்னான நேரம் குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் ஏற்படுத்தித் தர வேண்டியது
அவசியம் என்பது தெரிகிறது. 'வாட்ஸ்ஆப்' செயலியில் மாணவ மாணவியர் ஆங்கிலத்தில் மிகச் சுருக்கமாகவும், வேகமாகவும் எழுதிப் பழகுவதால் மொழிப் பயன்பாட்டில் நிறைய குழப்பங்களும் இலக்கணப் பிழைகளும் ஏற்படுகின்றன. இது தேர்வுகளிலும் அவர்களை அறியாமல், எழுத்துப் பிழை ஏற்படுத்த வைப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பாதிக்கப்படும்
கல்வியின் தரம்
'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, ஆம் என 76, பாதிப்பு இல்லை என 24 சதவீதத்தினரும் பதில் அளித்துள்ளனர்.
மாணவர்களின் கல்வி மட்டும் பாதிக்கப்படாமல், ஒருவர் பொழுதுபோக்காகக் காணொலி, கேட்பொலி ஆகியவற்றை 'வாட்ஸ்ஆப்' பில் தடையின்றி அனுப்புவதால் அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் அவை செல்கின்றன.
அவற்றை விருப்பம் இல்லாமலும் பார்க்க வேண்டிய சூழல் அக்குழுவிலுள்ள அனைவருக்கும் ஏற்படுகிறது. ஒருவகையில் அதுவே அவர்களின் நேரத்தைச் சூறையாடத் தொடங்குகிறது.
'வாட்ஸ் ஆப்' போதை
உண்மையான தேவைக்குப் பயன்படவேண்டிய மின்சாரம் மற்றும் இணைய சேவையும் திசைமாறி வீணாகிறது என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இதுவே தொடர்ந்து, கணவன் மனைவியாகிற நிலையில், அவர்களுக்குள் பேசி பகிர்ந்து கொள்ளுதல் என்ற பரஸ்பர உறவு நிலை மாறி 'வாட்ஸ்ஆப்' மூலம் பகிர்ந்து கொள்ளுதல் என்கிற நிலை மேலோங்கி, அவர்களின் நெருங்கிய உறவிற்கு தடையாகவும் அமைந்து விடும்.
'டிவி' மூலம் கால் நூற்றாண்டு களாக மாணவர் கிரிக்கெட் நோய்க்கு ஆட்கொள்ளப்பட்டார்களோ, அதைப்போல 'ஸ்மார்ட்போன்' உதவியுடன் 'வாட்ஸ்ஆப்' என்ற நோயால் இப்போது உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வரு கின்றனர் என ஆய்வு முடிவு மூலம் அறிய முடிந்தது.
எனவே இளம் தலைமுறையினர் வாழ்வை செம்மைப்படுத்தும் விதம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எல்லா நல்லதற்குள்ளும் கெட்டதும் இருக்கிறது. எல்லாக் கெட்டதற்குள்ளும் நல்லதும் இருக்கிறது என்பது 'வாட்ஸ் ஆப்' செயல்பாடு தெரியப்படுத்துகிறது.-பெரி.கபிலன்
கணினி அறிவியல் பேராசிரியர்மதுரை. 98944 06111
மாணவர்களுக்கு கவுன்சலிங் தர மாவட்டத்துக்கு 100 ஆசிரியர்கள்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் முழு ஆண்டுத்தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை, சமூக பாதுகாப்புத்துறை இணைந்து ஆசிரியர்கள் மூலம் பள்ளி அளவில் மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா நூறு ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள 100 ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்டத்திலேயே, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பது எப்படி, தற்கொலை எண்ணம் வராமல் தடுக்கும் வழிமுறை குறித்து மனவளக்கலை பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெறும் ஆசிரியர்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு கவுன்சலிங் அளிப்பர். ஆசிரியர்களுக்கான பயிற்சி விரைவில் அளிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர்/அரசு ஊழியர்களின் SERVICE REGISTER (SR) டிஜிட்டல் மயமாகிறது
நிலுவையில் உள்ள பதிவுகளை விரைந்து பதிவு செய்ய அரசு முதன்மை செயலாளர் உத்தரவு.
கருவூலச்செய்தி;
அனைத்து அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுடைய SR ஐ தயார் நிலையில் வைக்க வேண்டும்..SR கள் அனைத்தும் கருவூலத்தில் SCAN செய்து பதிவு செய்யப் பட உள்ளது.
கருவூலச்செய்தி;
அனைத்து அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுடைய SR ஐ தயார் நிலையில் வைக்க வேண்டும்..SR கள் அனைத்தும் கருவூலத்தில் SCAN செய்து பதிவு செய்யப் பட உள்ளது.
செவ்வாய், 1 நவம்பர், 2016
தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம்
ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கல்வித் துறையில், 1978ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, அனைத்து பணியாளர்களும், அலுவலக ஆவணங்களில், தமிழில் மட்டுமே கையெழுத்திடவேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை, 1998ல் பிறப்பித்த அரசாணைப்படி, 'இன்ஷியல்' என்ற முன்னெழுத்தையும், தமிழில் மட்டுமே எழுத வேண்டும்; இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி, இளங்கோ கூறுகையில், ''தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவை வரவேற்கிறோம். அதேபோல், கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை உள்ளிட்ட அரசுத்துறை
கோப்புகளில், தமிழில் எழுத வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதையும், ஆய்வு செய்ய வேண்டும். தமிழில் எழுதாதவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
அரசு பள்ளிகளில் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு பாட வேளையிலும் வருகை பதிவு செய்ய வேண்டும்
அரசு பள்ளிகளில் பாட இடைவேளையில், ‘கட்’ அடிக்கும் மாணவர்களை கண்காணிக்க, பாடவாரியாக வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பல பள்ளிகளில் மாணவர்கள் காலையில் வகுப்புக்கு வந்து விட்டு, இடைவேளையில் வகுப்பை, ‘கட்’ அடித்து விட்டு சென்று விடுகின்றனர்.
இவர்கள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொண்டால், அவர்கள் அந்த நேரத்தில் பள்ளியில் இருந்தது போன்றே ஆவணம் இருக்கும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் இருப்பதாகவே நினைப்பர். ஆனால், திருவள்ளூர், பூண்டி, பேரம்பாக்கம், கடம்பத்தூர், திருமழிசை உட்பட பல பகுதிகளில் மாணவர்கள் பள்ளி நேரத்தில் வெளியில் ஊர் சுற்றி வருகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘பள்ளிகளில் ஒவ்வொரு பாடமும் துவங்கும்போது, மாணவர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர் யாராவது இடையில் இல்லாவிட்டால், உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து போனில் தகவல் சொல்ல வேண்டும். மறுநாள் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி விளக்கம் கேட்டு மாணவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும்’ என்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், ‘இந்த திட்டம் ஊர் சுற்றும் மாணவர்களை திருத்துவதுடன், மாணவர்களுக்கு தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படாமலும், பெற்றோரின் நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் இருக்கும். அதனால், அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு பாட வேளையிலும் வருகை பதிவு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். எனவே, அரசு பள்ளிகளில் பாட இடைவேளையில், ‘கட்’ அடிக்கும் மாணவர்களை கண்காணிக்க, வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லாம் காதல் மயக்கம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், சினிமாவும், டிவியும் பள்ளி மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை பாழடித்து வருகின்றன. பொழுது போக்கு சாதனங்களின் நிகழ்ச்சிகளில் மூழ்கும் சிறுவர்கள், எளிதில் காதல் வயப்பட்டு விடுகின்றனர். தங்களது எதிர்காலம் என்னாகும் என்பது குறித்த அச்சமின்றி, காதல் வயப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறி மாணவிகளுடன் சிலர் செல்கின்றனர். ‘’பிள்ளையை காணவில்லை’ என பெற்றோர் அளிக்கும் புகாரை அலட்சியப்படுத்த முடியாது என்பதால், அவர்களை தேடி கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கிறோம் என்றார்.
மாணவர்களுக்கு வீட்டு பாடம் முதல் வகுப்பறை சோதனைத்தேர்வுவரை தினமும் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வாரத்திற்கு ஒருவருக்கு நட்சத்திர மாணவர் என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் பள்ளிக்குளம் ஆசிரியர் பன்னீர்
எங்க பள்ளிகுளம் பள்ளிக்கு புதுசா வந்திருக்கிற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு. பன்னீர் தினமும் காலை 8.30 க்கே
தன்னோட கணக்கை தொடங்குவார். வகுப்பறைக்குள் அவர் நுழைந்தாலே பசங்களுக்கு கொண்டாட்டம்தான்.
தன்னோட கணக்கை தொடங்குவார். வகுப்பறைக்குள் அவர் நுழைந்தாலே பசங்களுக்கு கொண்டாட்டம்தான்.
அவர் வந்த பிறகு பள்ளியோட வளர்ச்சி நல்ல வேகமெடுத்து இருக்கு.
மாணவர்கள் நலசார்ந்த பல திட்டங்கள செயல்படுத்தராரு. அதில் என்னை ரொம்ப கவர்ந்த திட்டம் 'நட்சத்திர மாணவர்'
( STAR STUDENT).
மாணவர்கள் நலசார்ந்த பல திட்டங்கள செயல்படுத்தராரு. அதில் என்னை ரொம்ப கவர்ந்த திட்டம் 'நட்சத்திர மாணவர்'
( STAR STUDENT).
அதாவது மாணவர்களுக்கு வீட்டு பாடம் முதல் வகுப்பறை சோதனைத்தேர்வுவரை தினமும் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வாரத்திற்கு ஒருவருக்கு நட்சத்திர அடையாளத்தை கொடுக்கிறார். அந்த மாணவர்கள் தினமும் தன்னோட நெஞ்சிப்பகுதியில அந்த Start Batch யை குத்திக்கிட்டு தான் பள்ளிக்கு வராங்க. போலீஸ் மாதிரி ஒரு Star....நெஞ்சில குத்தியிருப்பது பசங்களுக்கு பெரிய கௌரவத்த கொடுப்பதால மாணவர்களுக்குள்ள நல்ல போட்டிமனப்பான்மை வளர்ந்து நிறையபேர் நல்லா படிக்க ஆரம்பிச்சி இருக்காங்க.
இது ரொம்ப நல்லா இருக்கேனு கொஞ்சம் மேல போயி Star Batch வாங்குற மாணவர்களோட பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து திங்கட்கிழமை காலை வழிபாட்டுல தேசிய கொடிய ஏற்ற வெச்சி கௌரவிக்கலானு செயல்படுத்தினோம்.
கொடியேற்ற வர பெற்றோர்கள் ரொம்பவே பூரிச்சிதா போராங்க.
கொடியேற்ற வர பெற்றோர்கள் ரொம்பவே பூரிச்சிதா போராங்க.
அந்த வகையில இன்னைக்கு கொடி ஏற்ற வந்த வெற்றிவேலிலின் அப்பா சார் ஒன்னுமே புரியல கையிலா படபடனு அடிச்சிகிது. எங்க ரொம்பவும் கௌரவிச்சிட்டிங்க சார்னு சொல்லுபோது அடடா இதுவும் நல்லாதா இருக்கேனு தோனுது...
By
கி.தமிழரசன்.
பள்ளிகுளம்
விழுப்புரம்
கி.தமிழரசன்.
பள்ளிகுளம்
விழுப்புரம்
திங்கள், 31 அக்டோபர், 2016
வருகின்ற 05-11-2016 அன்று குறுமைய அளவிலான கூட்டத்தில் நடைபெற இருக்கின்ற " பொம்மலாட்ட வழி கல்வி கற்பித்தல் " பயிற்சிக்கு பயன்படும் வீடியோ
இந்த வீடியோ ஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவத்தில் வரும் பெண் கல்வி பாடலை ஒரு விழிப்புணர்வு நாடகமாக (பொம்மலாட்டத்தில்) நடத்தப்பட்டது.இந்த வீடியோ பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.சரியாக 30 நிமிடங்கள் ஓடக்கூடியது......
Click Here
Click Here
பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி சாம்பியன்
இந்தியா-பாகிஸ்தான் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கோப்பயை கைப்பற்றியுள்ளது.
தென்கொரிய அணியை வீழ்த்தி இறுதிப் பொட்டியில் நுழைந்த இந்திய அணி , அசத்தலாக விளையாடி இன்று இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
பிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்வில் புதுமை இருக்காது
பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது.
2017 மார்ச் பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழக பள்ளிக் கல்வி துறையின் அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் உயர் கல்வி எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் போட்டி போட்டு, பொதுத் தேர்வை எதிர்கொள்ள, தங்கள் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தருகின்றன. இந்நிலையில், 2017 மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு, வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. பல்வேறு வகை வினாத்தாள்கள் பாட வாரியாக பெறப்பட்டுள்ளன.
இதில், ஐந்து வகை வினாத்தாள் பட்டியல் தயாரிக்கப்படும். டிசம்பர் இறுதி யில், இந்த பட்டியலுக்கு அரசின் அனுமதி கிடைத்ததும், அச்சிடப்பட உள்ளது. இந்த வினாத்தாளில், எந்தவித மாற்றமும் இன்றி, முந்தைய ஆண்டுகளின் படியே வினாக்கள் இடம் பெறும் என, தெரிகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள், விரைவில் சுற்றறிக்கை வெளியிட உள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் பாட வீடியோ 'சிடி:' அரசு உதவி பள்ளிகளுக்கு மறுப்பு
ஐந்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழ் பாட புத்தகத்தின் வீடியோ, 'சிடி'யை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாக வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
சமச்சீர் கல்வியில், தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக்கொடுக்க, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடங்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், வீடியோ பாடங்களாக தயாரிக்கப்பட்டுள்ளன.
'தாயெனப்படுவது தமிழ்' என்ற, இந்த வீடியோ தொகுப்பு, இணையதளத்தில், 'யூ டியூப்'பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மாணவர்களின் நடனத்துடன், தமிழகத்தின் பல ஊர்களில், 40 பாடங்களும், பாடல்களாக படமாக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ தொகுப்பு, 'சிடி'யை, 35 ஆயிரம் தொடக்க பள்ளிகளுக்கு, இலவசமாக அனுப்ப, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு, வீடியோ, 'சிடி'யை இலவசமாக தர, மாவட்ட அதிகாரிகள் மறுத்துள்ளனர். 'தமிழகத்தின் பல கிராமங்களிலும், அரசு தொடக்க பள்ளிகளை விட, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான், ஏழை மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். அவர்களுக்கு பலன் தரும் வகையில், பாடல், 'சிடி'யை இலவசமாக வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
2020: இந்தியாவில் 100 கோடி மொபைல் சந்தாதாரர்கள்!!
வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உயரும் என்று ஜி.எஸ்.எம். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகளவில் உள்ள மொபைல் ஆபரேட்டர்களின் நலனுக்காக கடந்த 1995ஆம் ஆண்டு ஜி.எஸ்.எம். (குரூப் ஸ்பெஷல் மொபைல்) அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த
அமைப்பில் உலகளவில் உள்ள சுமார் 800 ஆபரேட்டர்களும் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
அமைப்பில் உலகளவில் உள்ள சுமார் 800 ஆபரேட்டர்களும் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள, ‘இந்தியா 2016: மொபைல் பொருளாதாரம்’ அறிக்கையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் 616 மில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. உலகளவில் மொபைல் சந்தையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மொபைல் சேவைகளை அதிகரிப்பது, மொபைல் கட்டணத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிராட்பேண்ட் சேவை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு உயர்ந்து வரும் சூழலால் வரும் 2020க்குள் இந்தியாவில் பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை 670 மில்லியனாக உயரும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, அடுத்ததாக இந்தியாவில் உள்ள மொபைல் வாடிக்கையாளர்கள் அதிகளவில் 3G சேவையில் இருந்து 4G சேவைக்கு தங்களை மாற்றி வருகின்றனர். இதையடுத்து வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 280 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்கள் 4G சேவையைப் பயன்படுத்த உள்ளதாகவும், கடந்த 2015ஆம் ஆண்டு முடிவில் இந்தியாவில் 4G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மூன்று மில்லியன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஜி.எஸ்.எம். அமைப்பின் இயக்குநர் மாட்ஸ் கூறுகையில், ‘இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவலும் இந்தியாவில் அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் மொபைல் சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் சந்தை அதிகரிப்பதன் மூலம் அனைவரையும் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு இது உதவும்’ என்றார்.
ஞாயிறு, 30 அக்டோபர், 2016
மாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி: தமிழ் வளர்ச்சித்துறை நடத்துகிறது
திருவள்ளூர் மாவட்ட மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் திருவள்ளூரில் நவம்பர் 2-ம் தேதி நடத்தப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் இடையே பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் 11, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
மேல்நிலை வகுப்புகள்
அந்த வகையில், நடப்பாண்டுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி நவம்பர் 2-ம் தேதி திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடக்கும் இந்த போட்டிகளில், ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியில் இருந்தும், ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து ஆளறிச்சான்று பெற்று போட்டியில் பங்கேற்கலாம்.
கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாயும், 2-ம் பரிசு 7 ஆயிரம் ரூபாயும், 3-ம் பரிசு 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)