புதன், 11 ஏப்ரல், 2018
GPF/TPF ஆசிரியர்கள் ACCOUNT SLIP பெறவழிமுறைகள்...
1. Accountant General (A&E), Tamil Nadu
என்ற வெப் ஓபன் செய்யவும்...
2.user name : GPF NUMBER
password: D.O.B
( 00/00/0000)
suffix: PTPF
password: D.O.B
( 00/00/0000)
suffix: PTPF
3.GPF கணக்கு பக்கம் ஓபன் ஆகும் இதில் current balance & account slip (2016-17) பார்த்து கொள்ளலாம்...
4.MOBILE UPDATE - option ல் mobile number கொடுத்து save & update கொடுக்கவும்...
5.LOG OUT செய்யவும்...
திங்கள், 9 ஏப்ரல், 2018
`ஆசிரியர்கள் அறிவுரைகளைப் பின்பற்றினால் சாதிக்கலாம்' - ஜப்பான் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்!
கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் அரசுப்பள்ளி மாணவர் ஒருவர் ஜப்பான் செல்லும் வாய்ப்பை பெற்று, அந்த ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து அரசுப்பள்ளியில் பயின்று அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஜப்பான் நாட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். அங்கே, அந்நாட்டு அறிவியல் முன்னேற்றங்களைக் காணச் செய்வதுடன், அந்நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் தமிழக அரசு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில் தமிழகம் சார்பாக மே மாதம் 12-19 தேதி வரை ஜப்பான் செல்லும் 6 மாணவர்கள் கொண்ட குழுவில், கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 பயிலும் ம.ஹரிஹரன் என்ற மாணவர் தேர்வாகியுள்ளார். ஜப்பான் செல்லும் அந்த மாணவருக்கு பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சி.தமிழரசன் தலைமை ஏற்றார் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறையை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் கலியபெருமாள் பங்கேற்றார்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மாணவர் ஹரிஹரனை வாழ்த்திப் பேசினார்கள். விழாவில் பேசிய மாணவர் ஹரிஹரன், ``எனது வழிகாட்டி ஆசிரியர் தனபால் அவர்கள் என்னிடம் புதைந்துள்ள அறிவியல் திறன்களை கடந்த ஆறு ஆண்டு காலமாக வெளிக்கொணரும் விதத்தில், எனக்கு வழிகாட்டியதன் மூலம், நான் கண்டுபிடித்த 4 கண்டுபிடிப்புகளில் ஒன்றான, சூழலியல் காக்கும் கழிவறை என்ற கண்டுபிடிப்பிற்காக, இன்ஸ்பயர் விருதில் தங்கம் வென்றேன். அதன் மூலமாகத்தான் நான் ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளேன். சக இளம் விஞ்ஞானி மாணவர்கள் வழிகாட்டி ஆசிரியர்கள் அறிவுரைகளைப் பின்பற்றினால், என்னைப்போல் சாதிக்கலாம்" என மனம் உருகிப் பேசி நன்றி கூறினார்.
அரசு பள்ளியில் உலகத்தரம் வாய்ந்த பாடங்கள் தமிழ் வீடியோ மூலம் கற்பிப்பு: ஓர் நம்பிக்கை ஒளி....
சான் பிரான்சிஸ்கோ: சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடம் பெருமளவு இல்லாததால் படிப்பறிவு வேகமாக பரவுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால் தற்போது தமிழகம் முழுதும் அரசு பள்ளிகள் பெருவாரியான கிராமங்களில் தொடங்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் பள்ளிக்கு செல்வது எளிதாக ஆகிவிட்டது. ஆனால் தற்போதைய மிக முக்கியமான பிரச்சனை நகர் புறங்களிலும், கிராமப் புறங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கல்வி தரத்தின் வேறுபாடு தான்.
உலகத் தரம் வாய்ந்த கல்வி
உலகத் தரம் வாய்ந்த கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை என்ற பிரச்சனை தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுதும் உள்ளது. 2006ம் ஆண்டு சல்மான் கான் என்ற அமெரிக்கர் இணையதளம் மூலம் பல்வேறு கணிணி மென்பொருள் கொண்டு பாடங்களை உருவாக்கி தன்னுடைய உறவினர்களுக்கு கற்றுக் கொடுத்து வந்தார். அவரது உறவினர்கள் அதை எளிதாக புரிந்து கொண்டு அதை தனது தோழர்களுக்கும் பகிர்ந்து கொண்டனர். பல பேர் அதை உபயோகப்படுத்த ஆரம்பித்த பின்னர், சல்மான் கான் தரம் வாய்ந்த பாடங்களை உலகில் உள்ள அனைவருக்கும் சென்றடைய கான் அகாடமி என்ற அமைப்பை தொடங்கி அதை உலகில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்தார். கூகிள், AT&T போன்ற நிறுவனங்களும் பேரளவு நிதி உதவி செய்து அனைத்து பள்ளி பாடங்களையும் காணொளிகளாக ஆங்கிலத்தில் தயார் செய்ய உதவின. தற்போது அமெரிக்க SAT, GMAT தேர்வு போன்றவற்றிற்கான பயிற்சி வீடியோக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் , தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், படிக்கவும், பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு தயார் செய்யவும் கான் அகாடமி வீடியோக்களை பார்ப்பது வழக்கம்.
வெற்றிவேல் அறக்கட்டளை
கான் அகாடமியின் வீடியோக்கள் மற்றும் இணையதளம் இந்தி மற்றும் வங்காள மொழியில் முழுமையாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்தாலும் தமிழில் இல்லாமல் இருந்தது. கான் அகாடமியில் உள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் முழுமையான வலைதளத்தை தமிழில் மொழி பெயர்க்கும் சீரிய பணியை வெற்றிவேல் அறக்கட்டளை எடுத்து செய்து வருகிறது. வெற்றிவேல் அறகட்டளையின் நோக்கம் பற்றி திரு சொக்கலிங்கம் கூறுகையில், கான் அகாடமி வீடியோக்கள் அனைத்தையும் தமிழில் மொழியாக்கம் செய்து அனைத்து தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பாட திட்டங்களை எளிதில் விளங்கும் படி தமிழ் காணொளி மூலம் அளித்து, அவர்களை உலகத் தரம் வாய்ந்த அறிவு சார் பொருளாதாரத்தில் போட்டியாளர்களாக கொண்டு வர வேண்டும் என்பதே என்றார்.
இதற்காக இந்தியா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து வருகின்றனர். சில ஆயிரம் வீடியோக்களை முழுமையாக தமிழ் மொழியாக்கம் செய்வதும், வலை தளத்தில் இருக்கும் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளை தமிழ் மொழி மாற்றம் செய்வதும் மிகவும் கடினமான காரியம். இதற்கு பல்லாயிரம் மனித நேரங்களும் , பொருட்செலவும் ஆகும். இந்த சீரிய பணியை வெற்றிவேல் அறகட்டளை எடுத்து செயல்படுத்தி வருவது பெரும் பாராட்டுக்குறியது.
தற்போது வெற்றிவேல் அறக்கட்டளை கான் அகாடமி பாடத் திட்டங்களை சமச்சீர் பாடத்திட்டத்தின்படி வகுப்பு வாரியாக வரிசை படுத்தியுள்ளது. தற்போது IIT போன்ற தேர்வுக்கு தேவையான பயிற்சி கூட கான் அகாடமி வீடியோக்களில் வர தொடங்கியுள்ளது. இந்த முயற்சியை முழுமையாக முடித்து அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சென்றால் தற்போது தமிழகத்தில் நகர் புறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கூட எட்டாகனியாக இருக்கும் IIT படிப்பு , கிராமப்புறத்தில் தமிழ் வழி படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்காவில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்பு மூலம் கான் அகாடமியின் பயன் தெரிய வந்துள்ளது. வெற்றிவேல் அறக்கட்டளை, சான் பிராசிஸ்கோ தமிழ் மன்றம் நிதி உதவியுடன் Team India அமைப்பின் உதவியுடன் கான் அகாடமி தமிழ் படுத்தபட்ட வீடியோக்களை தமிழகத்தில் உள்ள சுமார் 10 அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் மற்றும் டிவி கொண்டு நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் அந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு கான் அகாடமி வீடியோ காட்டப்படுகிறது. அதனால் பயன் பெறும் மாணவர்கள், ஆசிரியர் துணை இல்லாமலேயே கடினமான பாடங்களை காணொளி மூலம் எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது என்கின்றனர். இது அவர்களது கல்வி தரத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமும் உதவுவோம்
ஹார்வர்ட் தமிழ் இருக்கை மூலம் தமிழின் பெருமையை உலகெங்கும் பரவ வழி செய்து உள்ளோம். கான் அகாடமியை தமிழ் படுத்துவதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கவும், எதிர் காலத்தில் பல மாணவர்கள் தனது தாய் மொழி (தமிழ்) வழி கல்வி தொடர வழி வகுக்கவும் வாய்ப்பாக இருக்கும். இந்த பணியை முழுமையாக செய்து முடிக்க பல தன்னார்வலர்களின் உதவி தேவைப்படுகிறது. நீங்கள் வாரத்திற்கு ஒரு சில மணி நேரங்கள் இந்த சேவைக்கு செலவிட்டாலே மாபெரும் மாற்றத்தை நாம் கொண்டு வர முடியும். நீங்கள் தன்னார்வலாராக உதவ விரும்பினால் info@vetrivelfoundation.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு தெரிந்த நிறுவனங்கள் Corporate Social Responsibility மூலம் உதவ முன் வந்தாலும் வெற்றிவேல் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம்.
தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு இடங்களை நாளை வெளியிட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்...
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களை பள்ளிகளின் தகவல் பலகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீடு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கு ஏப்ரல் 20-ம்
தேதியில் இருந்து மே 18-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை அந்தந்தப் பள்ளிகளின் தகவல் பலகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) வெளியிட வேண்டும். உதாரணமாக எல்.கே.ஜி. வகுப்பில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 200 இடங்கள் இருப்பின் அதில் 25 சதவீத இடங்களின் எண்ணிக்கையை பட்டியலில் குறிப்பிட வேண்டும்.
இந்தச் சேர்க்கையின்போது வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றோர், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம் இருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கப்பட வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் பள்ளி சேர்க்கைக்கு ஏப்.20-ஆம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களை பெற்றோர் எடுத்துச் செல்ல வேண்டும்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் (அசல்), நலிவடைந்த பிரிவினரில் இதர வகுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருப்பின், அவர்களின் வருமானச் சான்று (அசல்), பள்ளிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் இடையேயான தொலைவு ஒரு கிலோ மீட்டர் முதல் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருத்தல் வேண்டும். (வருவாய்த் துறையினரால் அளிக்கப்பட்டுள்ள இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை (இவற்றுள் ஏதேனும் ஒன்றின் அசல்). இந்த ஆவணங்களுடன் சென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
கையடக்க கணினியில் கல்வி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்....
கற்றலை எளிமைப்படுத்தி, அதே நேரத்தில் அவர்களை கற்றலில் ஈடுபாடு கொள்ள செய்யும் வகையில் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கையடக்க கணினி மூலம் விருப்ப முறையிலான கற்றல் கற்பித்தலை தொடக்கப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தி வருகிறது தொடக்கக் கல்வித் துறை. இந்த கல்வி முறைக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்திருக்கிறது.
ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே புத்தகங்கள் வந்த நிலை மாறி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றலை அறிமுகப்படுத்திய கல்வித் துறை, தற்போது விருப்பக் கற்றலை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் முழுமையாக தொடக்கப் பள்ளிகளில் இந்த முறையை அமல்படுத்துவதற்கு முன்பு பரிட்சார்த்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் இந்த கல்வி முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
முழு புத்தகமாக வந்த நிலை மாறி, மூன்று பருவங்களுக்குத் தனித்தனியே புத்தகங்களை வழங்கி, தனித்தனி பருவத் தேர்வுகளையும் நடத்தி, அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்ற நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, அடுத்த வகுப்புக்கு தரம் உயர்த்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், தொடக்க நிலை வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதை அதிகப்படுத்துவதற்கும், மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் விருப்பக் கற்றல் முறை கையடக்க கணினி கொண்டு நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கல்வி முறையில் பாடங்கள் அலகு அலகுகளாகப் பிரித்து நடத்தப்படுகின்றன. முதல் அலகில் ஆசிரியர் 30 நிமிஷங்கள் வகுப்பறையில் பாடம் நடத்துவார். அதன் பின்னர் மாணவ, மாணவிகள் குழுவாக கற்கும் முறையும், தன் மதிப்பீடும், கேள்வி- பதிலும் இடம்பெறும் வகையில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
5 மாணவர்களுக்கு ஒரு கணினி: திருச்சி மாவட்டத்தில் விருப்பக் கற்றல் கல்வி முறை மணிகண்டம் மற்றும் மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களில் 10 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பிராட்டியூர், கொழுக்கட்டைக்குடி, ஓலையூர், கொத்தமலை, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, திருமலைச்சமுத்திரம், கே.கே.நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளிலும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் சென்னகரை தொடக்கப்பள்ளியிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
1,2,3 வகுப்புகளில் இந்த கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. 5 மாணவர்களுக்கு ஒரு கணினி வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட கணினி மூலமாக மாணவ, மாணவிகள் பாடப்பொருளை வலுவூட்டப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆசிரியர் தான் பாடம் நடத்தி முடிந்தவுடன், மாணவர்கள் செய்ய வேண்டிய செய்முறைகளை எந்த பக்கத்தில் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு கூறியவுடன், கணினி மூலமாக அந்த பக்கத்தில் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால், மாணவர்கள் செய்ய வேண்டிய செய்முறைகள் கொண்ட பக்கம் வருகிறது. அந்த பக்கத்தில் மாணவ, மாணவிகள் கேள்விகளுக்குரிய பதிலை பதிவிடுகிறார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு மாணவரும் செய்ய வேண்டிய செய்முறைகளுக்குப் பின்னர், அவர்களுடைய விடைவிவரங்கள் பதிவாகிவிடும். இந்த விவரங்கள் அனைத்தும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நேரடியாக கையடக்க கணினி வழியாகப் பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருப்பதால், இந்த கற்றல் முறையில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது என்கிறார் மணிகண்டம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கா. மருதநாயகம்.
கையடக்க கணினி மூலமாக பாடப்பொருள்களை காணொலிக்காட்சியாக பார்ப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் மிகுந்த கவனத்துடன் மாணவர்கள் உள்வாங்குகின்றனர். இதனால் பாடப்பொருள்களை எளிதில் புரிந்து கொள்வதுடன், அவர்கள் மனதில் பாடப்பொருள் நன்கு பதிந்து வருகிறது. கையடக்க கணினி மூலம் மாணவர்களின் மதிப்பீடு சோதித்து அறியப்படுகிறது. மேலும், அவர்கள் பெறும் மதிப்பெண்கள் குறித்த விவரங்களும் சோதித்து அறியப்படுகின்றன. இந்த மதிப்பீடு கருவி வண்ணமயமாகவும், படங்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளதால் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு விருப்பமான கற்றல் கற்பித்தல் வகுப்பறைகளில் நிகழ்கின்றன என்கிறார் எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்
பள்ளித் தலைமையாசிரியை
பூ.ஜெயந்தி.
மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது: பொதுவாக தொடக்க வகுப்புகளுக்கு மாணவர்கள் வருகை என்பது குறைந்தே காணப்படும். அவர்கள் வீட்டுச் சூழலிலிருந்து பள்ளிச் சூழலுக்கு மாறுவதற்கு 2 மாதங்கள் ஆகும். அதன் பின்னர், அவர்களுக்கு கற்பிக்கவே முடியும். ஆனால், இந்த கணினி மூலமாக கல்வி கற்பிப்பதன் மூலம், மெல்ல கற்று வந்த மாணவர்கள் கூட தற்போது ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். இதுபோல, பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. தாங்களும் கையடக்க கணினி பயன்படுத்தப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கிறது. எங்கள் பள்ளியில் கடந்தாண்டைக் காட்டிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், நிகழாண்டில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆசிரியைகளின் பணிச்சுமையும் குறைகிறது என்கிறார் இப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை புஷ்பலதா.
புத்தக மூட்டைகளைச் சுமந்து சென்ற மாணவ, மாணவிகள் இனி ஒவ்வொருவரும் கையடக்க கணினியை மட்டுமே பள்ளிக்கு எடுத்துச் சென்று கல்வி பயிலும் நிலையை நோக்கிய பயணத்துக்கு தற்போது அடித்தளமிடப்பட்டிருக்கிறது. முழுமையான பயணத்தை விரைவில் காணும் நிலையை நோக்கி கல்வித்துறை பயணிக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி; ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி!!!
பாடத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்கள், செய்முறை விளக்கங்களை, மாணவர்கள் அறியும் வகையில், இணையதள பிளாக், செயலி குறித்த தகவல்கள், புதிய புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
சமச்சீர் பாடத்திட்ட அடிப்படையில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கின்றன.
வண்ண படங்கள்:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையானதாக, புதிய பாடத்திட்ட கருத்துக்கள் இடம்பெறும் என, ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன.
இதில், தமிழக ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட, டிஜிட்டல் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் எளிதில் உள்வாங்கி கொள்வர். புத்தகத்தை தாண்டி, மாணவர்கள் சிந்திக்கவும், தகவல்களை பெறவும், இம்முறை உதவும் என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
பாடத்திட்டக் குழு ஆசிரியர்கள் கூறியதாவது: ஒருங்கிணைந்த கணினி வழி கல்விக்கென, ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் மூலம், ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், நிறைய செயல்திட்டங்கள் வடிவமைத்து, கல்வித்துறை இணையதளம், செயலி உருவாக்கி, பதிவேற்றம் செய்து வருகிறோம். இதை, ஆசிரியர்கள் மட்டுமே, பார்வையிட்டு வந்தனர்.
தேடல்:
தற்போது, மாணவர்களும் தெரிவிக்கும் வகையில், புதிய பாடப்புத்தகத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும் இடையே, 'பாக்ஸ்' ஆக, இத்தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தை, கல்வியில் புகுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம், பள்ளி மாணவர்களின் தேடலை விரிவாக்கும். இதுதொடர்பாக, ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Teaching of English by Phonetic Method Video- Unit 16
இளையராஜா தன்னோட முதல் பாட்டுப் பதிவைத் தொடங்கியதுமே CURRENT போயிடுச்சாம். எல்லாரும் என்னடா இது? நேரம் சரியில்லனு..... பேசிக்கிட்டாங்களாம். ஆனால், இன்னைக்கி வரை என்ன, என்னைக்குமே இசைனா ராஜா மட்டும் தான்.
இரண்டு மாசமா அங்கயும் இங்கயும் அலஞ்சு, இடத்தப் பிடிச்சி பெயிண்ட் அடிச்சு சுவர் பூராம் PHONETICS படம் வரைஞ்சி CONTENT எல்லாத்தையும் SCREEN PLAY ஆ எழுதி, நடிக்கிற டீச்சர்ஸ் எல்லாத்து கிட்டயும் ஒரு மாசத்துல முடிச்சுருலாமுனு சும்மானாச்சிக்கும் ஒரு தைரியத்தச் சொல்லி SHOOTING START பண்ண நாள் குறிச்சி AEEO அல்போன்ஸ் சார் தலைமையில குத்து விளக்கெல்லாம் பொருத்த தயார் பண்ணிட்டு எல்லோரும் கிளம்பிகிட்டு இருக்கிற சமயத்துல, இரு சக்கர வாகனத்துல வந்த ஒரு தர்மத்தின் தலைவன் UNIT – 16 எடுக்குற சுகுமாரி டீச்சரை விபத்துக்குள்ளாக்கிட்டு பறந்து போயிட்டான். நாங்களெல்லாம் பயந்து போயிட்டோம்.
முதல் நாளு வேற....., சரித்தான்!! இனி ஆரம்பிச்ச மாதிரிதானு சின்னதா ஒரு கலக்கம் எல்லோர் முகத்திலும்.... அந்த நேரத்தில் மருத்துவமனையிலிருந்து அலைபேசி அழைப்பு..... சரி, பரவாயில்லை இன்னொரு நாள் ஆரம்பிச்சுக்கலாம் என்ற மனநிலையுடன் அலைபேசிய ON செய்தால், சார் நீங்க மத்த வேலைகள பார்த்துக்கிட்டே இருங்க. ஒரு பத்து நிமிஷத்துல டாக்டரப் பாத்துட்டு, சித்ரா மிஸ்ஸோட வந்துடுறேன் என்று தீர்க்கமான சுகுமாரி ஆசிரியரின் இந்த குரல், PROJECT – ன் முதல் தைரியத்த உள் ஊட்டியது. சுகுமாரி ஆசிரியரின் கணவரும் அந்த சூழலில் பக்க பலமாக இருந்து படப்பதிவுக்கு அழைத்து வந்தது HATS OFF செய்ய வேண்டிய நெகிழ்வு.
இக்கட்டான சூழலில் நடக்குமோ நடக்காதோ என்ற தடுமாற்றத்திலும், தன்னம்பிக்கையுடன் அன்று ஏற்றப்பட்ட குத்து விளக்கின் சுடர்தான் இன்றுவரை அணையா ஜோதியாக மாணவ நெஞ்சங்களில் வாஞ்சையுடன் விடியலேற்றிக் கொண்டிருக்கிறது.
தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நான் உட்படத் தங்குவது, சாப்பிடுவது என்பது கடைசி நாள்வரை எதிர் நோக்குப் பிரச்சனையாகவே இருந்து வந்தது. தங்கும் வீட்டில், FAN, CURRENT இல்லாத பல இரவுகள் காருக்குள் உட்கார்ந்திருந்தபடியே கழித்திருக்கின்னறன. கண்ணன் சார், சுகுமாரி டீச்சர் போன்றோரது கரிசனத்தாலும், தாயுள்ளத்தாலும் தான் அடிப்படை வசதிகள் ஆசுவாசப்படுத்தப்பட்டன.
இவர் கொண்டு வரும் லெமன் ஜூஸ் தான் சுட்டெரிக்கும் வெக்கையில் சக்கரமாய் எங்களைச் சுழல வைத்தன.
எதைச் செய்தாலும் நேர்த்தியாக இருக்க வேண்டுமென முன் கூட்டியே திட்டமிடுதல் இவரது அசாத்தியப் பெருமை.
RHYMES SHOOTING (OUT DOOR) – ல் இவரது பங்களிப்பு ஈடு செய்ய முடியாதது.
ஒரே மாதிரி டிரஸ் ஆறு குழந்தைகளுக்கு புதுசா எடுத்துத் தைச்சாச்சு. SHOOTING அன்று காலையில பாத்தா ஒரு கட்சியோட கொடி கலருல டிரஸ். SHOOTING எடுப்பதில் எனக்குத் தயக்கம். வேற ஏற்பாடு செய்ய முடியுமானு கேட்ட அடுத்த செகண்ட் ஒரு டெயிலர (TAILOR) வரவழைச்சி, ஒரு மணி நேரத்துல BORDER(பார்டர்) துணி வேற கலர்ல வாங்கி தைச்சு.........!!! என்னாவொரு டைமிங்க்(TIMING). சூழ் நிலையைக் கையாளும் அலட்டாத நேர்த்தி. இதுதான் ஒரு ஆசிரியரின் ஆளுமை. சிறப்பாக முடிந்தது அன்றைய நாள்.
காந்தம் என்பதன் வட துருவம்,தென் துருவம் (NORTH POLE,SOUTH POLE) COLOUR PICTURE உலகம் பூராம் ஒரே மாதிரி கலர் தான். தமிழ் நாட்டுப் பாடப்புத்தகத்துல மட்டுந்தான் வேற கலர்ல இருக்கும். . பாடப்புத்தகத்துக்கே இந்த கதினா, பாட்டு தாங்குமானுதான் கலர் சேஞ்ச் (COLOUR CHANGE) பண்ணினேன்.
அரசியல் கலக்காத கல்வியே அறிவினைத் தூண்டும். இல்லையேல் அது வெறும் உணர்வையேத் தூண்டும்.
எழுதுவதற்கு இன்னும் நிறைய மிச்சமிருக்கிறது. ஒவ்வொருவரைப் பற்றியும்....
பிறரது உழைப்பிற்கும் திறமைக்கும் கை தட்டும் கரங்களை விட, கண்குத்தும் விரல்களே உலகில் அதிகம்.
அறியப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களே இங்கு அதிகம்.
எனவேதான் PHONETIC DVD இயக்குநர் என்ற முறையில் படைப்புகளையும், தியாகங்களையும் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஊடகங்கள், முகநூல் இவர்கள் முகங்களை முன்னிருத்தட்டும். சந்தோசமான குழந்தைகளின் கற்றல் ஆசிகளாக இவர்கள் சந்ததிக்கே புண்ணியப் பூச்சொரியட்டும்.
"ஆசிரியராகவே" வாழ்ந்து கொண்டிருக்கும் சக தோழமை சுகுமாரி அவர்களுக்கு வார்த்தைகள் வாழ்த்துகளாகட்டும்.
Video
Pls click the below link:
https://youtu.be/EfjcNZ0T65M
வாழ்த்து சொல்வதோடு நின்று விடாமல் பிறரும் வாழ்த்த ஒரு SHARE செய்யலாமே.........
அரசுப்பள்ளியின் செயல்பாடுகளை முழுமையாக ஒளிபரப்பு செய்த திருச்சிராப்பள்ளி வானவில் பண்பலை 102.1 "உங்களோடு நாங்க" நிகழ்ச்சி
பட்டாம்பூச்சிச் சிறகு
பறந்தால் மட்டும் அழகு
தொட்டுப்பிடிக்க நினைத்தால்
தூள் தூளாகும் விலகு....என்ற பாடல் வரிகள் பறக்கும் பட்டாம் பூச்சியைப் பிடிக்க நினைத்தால் ......தேர்வு,படிப்புஎன்பதையும் தாண்டி இன்று பறக்கும் பட்டாம் பூச்சிகளாய்
........................திருச்சிராப்பள்ளி வானவில் பண்பலை 102.1 இன்று எங்கள் பள்ளியில் ......உங்களோடு நாங்க நிகழ்வு(6/4/2018)...மழலையர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வானொலி நிலையம் சென்ற எங்களுக்கு ,”உங்களோடு நாங்க “.என்ற நிகழ்வுக்கு வானொலி நிலையம் எங்கள் பள்ளியை நோக்கி .....அட்டகாசமான வரவேற்பு ...தாங்கள் கூறும் கதை , பாடல் , நேரடியாக ஒலிபரப்புவதைக்கேட்டவுடன் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
,ஐயாகூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்திரு மருத நாயகம் அவர்கள் பள்ளியின் கல்விச்செயல்பாடுகளை விளக்க , நேரடி ஒலி பரப்பு ஆரம்பமானது ......... அடுத்து குழந்தைகளின் மழலைப்பேச்சு,அடுத்து அவர்களுக்கு பிடித்தமான பாடல் ......இடையிடையே பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பூ.ஜெயந்தி அவர்கள் பள்ளியின் வளர்ச்சி பற்றிய பேச்சு
அடுத்து SSAமேற்பார்வையாளர் திரு துரைப்பாண்டியன் அவர்கள் பள்ளிகளுக்கு Ssa செய்யும் திட்டங்கள் ,ஆசிரியர் பயிற்றுநர் திரு மணிமாறன அவர்கள் பள்ளியின் சேர்க்கை பற்றிய விபரங்களின் ஒலிபரப்பு ,அடுத்து ஆசிரியர் ஹ.புஷ்பலதா அவர்கள் பள்ளியின் திட்டங்கள் பற்றி கூறிய ஒலி பரப்பு மற்றும் குழந்தைகளின் தனித்திறமைகள் நேரடி ஒலி பரப்பு என்று 1 மணி நேரம் பள்ளிக்குள்ளே ரெயின்போ பண்பலையின்102.1 திருவிழாவாக இருந்தது ...பள்ளியின் செயல்பாடுகள் ,பள்ளியின் வளர்ச்சி ,சத்துணவு ,மற்றும் 1,2,3 வகுப்புகளில் மாணவச்செல்வங்கள் Pedagogy. கைக்கணினிக்கொண்டு கற்றலை எவ்வாறு வலுப்படுத்துவது,மொத்த மாணவர்கள் போன்ற விபரங்கள் அனைத்தும் நேரடியாக ஒலி பரப்பிய வானவில் பண்பலைக்கு நன்றி ..நன்றி ......,நன்றி
பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது.
11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு அத்தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துப் பேசினார்.
அப்போது, “குழந்தைகளுக்கு அங்கன்வாடிகளில் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி குழந்தைகள் 5 வயதுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளிலேயே படிப்பைத் தொடரும் வகையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.
11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக சில மாணவர்களும், எளிமையாக இருப்பதாக சில மாணவர்களும் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து, கல்வித்துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது.
அகில இந்திய அளவில் பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர்”
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
சனி, 31 மார்ச், 2018
🕉 ஒம் நம சிவாய 🕉 அருணாசலேஸ்வரரை நினைத்தாலே முக்தி நிச்சயம்
சிவபெருமான் அருள்பாலிக்கும் எத்தனையோ தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்களுக்கு எல்லாம் இல்லாத ஒரு மிக முக்கியமான சிறப்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தலத்துக்கு மட்டுமே உண்டு.
அதாவது அருணாசலேஸ்வரரை நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்துதான் வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனம் கசிந்து, ஆத்மார்த்தமாக இருந்த இடத்தில் இருந்தே அருணாசலேஸ்வரரை நினைத்தாலே போதும், நிச்சயம் முக்தி கிடைக்கும்.
அதனால்தான் அருணாசலேஸ்வரருக்கு நிகர் அருணாசலேஸ்வரர்தான் என்று அனைத்துத் தரப்பினரும் சொல்கிறார்கள். இந்த சிறப்பை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டுமானால், முதலில் அருணாசலேஸ்வரரின் மகிமையை புரிந்து கொள்ள வேண்டும்.
அயோத்தி, மதுரை, மாயாபுரி, காசி, காஞ்சீபுரம், அவநிதி, துவாரகை ஆகிய 7 தலங்களும் முக்தி தரும் தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. இந்த 7 தலங்களை ஒரு தட்டிலும், திருவண்ணாமலையை மற்றொரு தட்டிலும் வைத்தால், திருவண்ணாமலை தலமே உயர்ந்த சிறப்புடையது என்பது தெரிய வரும் என்று அருணாசலபுரத்தில் சைவ எல்லப்ப நாவலர் குறிப்பிட்டுள்ளார்.
சிலருக்கு அருணாசலேஸ்வரரை விட உயர்ந்த தலம் ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படுவதுண்டு. அத்தகைய எண்ணம் வரவே கூடாதாம். அப்படி எண்ணம் வந்தால் இதுவரை அவர் செய்த தான, தர்ம புண்ணியம் அனைத்தும் கைவிட்டுப் போய் விடும் என்று அருணாசலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடி, முடி காண முடியாதபடி அக்னிப் பிழம்பாகக் காட்சியளித்த சிவபெருமான், தன்னை குறுக்கிக் கொண்டு மலையாகவும், சுயம்பு லிங்கமாகவும் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இதனால் திருவண்ணாமலை சென்று வழிபட்டால் ஈசனை நேரில் பார்த்து வழிபட்டதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
திருவண்ணமலை தலத்தில் உள்ள லிங்கம் சுயம்பு லிங்கமாகும். ராஜகோபுரம் தாண்டி ஒவ்வொரு பிரகாரமாக சென்ற பிறகு கருவறையில் உள்ள மூலவர் திருச்சுற்று வரும். இந்த பிரகாரம் மற்ற பிரகாரங்களை விட சற்று உயரமாக கட்டப்பட்டுள்ளது.
கொடிக்கம்பம் பகுதியில் இருந்து கருவறை பகுதியைப் பார்த் தால் இது உங்களுக்குத் தெரிய வரும். அங்கு முதல் பிரகாரத் துக்குள் நுழையும் வாசலை வேணு உடையான் கதவு என்றும், கர்ப்பக் கிரகத்துக்குள் நுழையும் வாசலை உத்தமச் சோழன் வாசல் என்றும் சொல்கிறார்கள்.
கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் நின்று அருணாசலேஸ்வரரை பார்த்ததுமே, நமது மனம் நம்மிடம் இருக்காது. அண்ணாமலையாரிடம் ஓடிப் போய் ஒட்டிக் கொள்ளும்.
மற்ற ஆலயங்களில் நாம் பார்க்கும் லிங்க மேனிக்கும், இத்தல லிங்க மேனிக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளது. மற்ற தலங்களில் ஆவுடையாரின் மத்தியில் லிங்கத்தை நிலை நிறுத்தி இருப்பார்கள். ஆனால் திருவண்ணாமலையில் அப்படி அல்ல.
அருணாசலேஸ்வர் அடிமுடி காண முடியாதபடி அற்புதம் செய்தவர் என்பதால் சுயம்பு லிங்கத்தை சுற்றி ஆவுடையாரை அமைத்துள்ளனர். அதாவது ஆவுடையாரின் ஒரு பகுதி பிரம்ம பீட மாகவும், மற்றொரு பகுதி விஷ்ணு பீடமாகவும் உருவாக்கப் பட்டுள்ளது.
அந்த இரு பகுதியையும் ஒன்றாக சேர்த்து ஆவுடையார் அமைத்துள்ளனர். பெரும்பாலும் லிங்க ஆவுடையார் சதுர வடிவில் இருக்கும். ஆனால் திருவண்ணாமலையில் ஆவுடையார் வட்ட வடிவில் இருக்கிறது.
ஆகம விதிப்படி அண்ணாமலையார் லிங்கத்தின் ஒரு பகுதி பிரம்ம பீடமாகவும், மற்றொரு பகுதி விஷ்ணு பீடமாகவும், இன்னொரு பகுதி சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது. எனவே கருவறை அண்ணாமலையானை வழிபட்டாலே பிரம்மா, விஷ்ணு, சக்தி ஆகியோரையும் சேர்த்து வழிபட்ட பலன்கள் கிடைக்கும். இந்த அரிய தத்துவத்தை நினைவில் வைத்துக் கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டால், நிச்சயம் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
மற்ற தலங்களில் லிங்கத்தையும் ஆவுடையாரையும் அஷ்ட பந்தனத்தில் நிலைநிறுத்தி இருப்பார்கள். ஆனால் இங்கு ருத்ரபாகம் சொர்ணபந்தனத்துடன் காணப்படுகிறது.
கருவறைக்குள் சென்று பூஜை செய்யும் எல்லா சிவாச்சார் யார்களும் இந்த சுயம்பு லிங்கத்தைத் தொட்டு விட முடியாது. தீட்சைப் பெற்று பட்டம் மற்றும் இளவரசு பட்டம் எனும் அந்தஸ்து பெற்றவர்கள் மடடுமே இந்த லிங்கத்தை தொட்டு அபிஷேகம் செய்ய முடியும்.
இநத லிங்கமேனி உச்சிப் பகுதியில் சிறு வெட்டுக் காயம் போன்று வடு உள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை. உளியால் செதுக்கப்படாத லிங்கம் என்பதால் அது சொர, சொரப்பாக காணப்படுகிறது. எதிர்த் திசையில் தடவினால் கையை கிழித்து விடும் என்று தொட்டு அபிஷேகம் செய்யும் சிவாச்சார்யார் ஒருவர் தெரிவித்தார்.
சிவாச்சார்யார்களில் “ஸ்தானீகம்” என்று ஒரு பிரிவினர் உள்ளனர். இவர்களது பணியே அண்ணாமலையாரை அலங்காரம் செய்வதுதான். இவர்கள் பூஜை எதுவும் செய்ய மாட்டார்கள்.
அண்ணாமலையாருக்கு தினமும் 6 தடவை அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்வார்கள். காலையில் திருமஞ்சனநீர் எடுத்து வந்து கொடி மரம் முன்புள்ள படியை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வார்கள். பிறகு பள்ளியறை எழுச்சி நடைபெறும்.
ஹோமம் முடிந்து சூரிய, சந்திர, நந்தி துவார பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு காலை 5.30 மணிக்கு முதல் அபிஷேகம் நடைபெறும். திருவண்ணாமலை ஆலயத்துக்குள் 12 கிணறுகள் உள்ளன. அதில் மூலவருக்குரிய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்கள்.
மாவுப்பொடி, மஞ்சள், அபிஷேகப் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு நறுமணப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். சுமார் 1 மணி நேரம் இந்த அபிஷேகம் நடைபெறும்.
பிறகு லிங்கத்துக்கு தங்க கவசம், வெள்ளிக் கவசம் சாத்தி அலங்காரம் செய்வார்கள். ஒருவித சாமந்தி தவிர மற்ற அனைத்து வாசனைப் பூக்களையும் கொண்டு ஈசனை அலங்கரிப் பார்கள்.
இதையடுத்து ஆராதனை நடைபெறும். ரத ஆரத்தி, திரிநேத்திர தீபம், பஞ்ச தட்டு தீபம், பூர்ணகும்பம், கண்ணாடி, குடை, விசிறி, சாமரம் என்று அண்ணா மலையாருக்கு 16 வகை தீபம் மற்றும் பூஜைகள் நடத்துவார்கள்.
ஆனால் அண்ணா மலையாருக்கு படைக்கப்படும் நைவேத்தியம் மட்டும் நேரத்துக்கு நேரம் மாறுபடும். காலை-வெண் பொங்கல், காலசந்தி பூஜை- புளி சாதம், சர்க்கரைப் பொங்கல், உச்சிக்காலம்- வடை பாயாசத்துடன் குழி தாம்பளத்தில் அன்னம். சாயரட்சை-புளி சாதம், வடை, சுண்டல், இரண்டாம் சாமம்-புளி சாதம், அர்த்தஜாமம்- மிளகு சீரக சாதம், (செரிமானத்துக்காக மிளகு சேர்க்கிறார்கள்), பள்ளியறை-பால், அடை, அப்பம்.
அணணாமலையாருக்கு நைவேத்தியம் படைக்கப்படுவதை பக்தர்கள் யாரும் பார்க்கக் கூடாது என்பது ஐதீகமாகும். அதுபோல மூலவரை படம் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1965-ம் ஆண்டு புகைப்பட கலைஞர் ஒருவர் தடையை மீறி மூலவரைப் படம் பிடித்தார். மறுநாள் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ஆனால் ரமணர் ஆசிரமத்தில் அண்ணாமலையார் கருவறை படம் ஒன்று உள்ளது. அந்த படம் எப்போது, யாரால் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
அண்ணாமலையார் முன்பு ஆணவம், அகந்தையுடன் தலைக்கனத்துடன் நடந்து கொண்டால் அவ்வளவுதான், அண்ணாமலையார் தமது திருவிளையாடலைக் காட்டி விடுவார். ஆணவத்தோடு நடந்து கொள்பவர்கள் அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார்கள்.
நிறைய பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள், இத்தலத்துக்குள் வந்து முடிசூடி கொண்டாலும், அண்ணாமலையார் சன்னதியில் பதவி ஏற்பு விழாவை நடத்துவதில்லை. விநாயகர் சன்னதி முன்பு நின்றுதான் முடி சூட்டிக் கொள்வார்கள்.
அவ்வளவு ஏன்... அண்ணாமலையார் சன்னதியில் அமர்ந்து திருமணம் கூட செய்து கொள்ள மாட்டார்கள். இன்றும் இது நடைமுறையில் உள்ளது.
திருமணம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளும் உண்ணாமுலை அம்மன் சன்னதியில்தான் நடைபெறும். அந்த காலத்தில் அண்ணாமலையார் முன்பு நின்று பஞ்சாங்கம் படிப்பதை வழக்கத் தில் வைத்திருந்தனர். அதுபோல ஒவ்வொரு சுவாமிக்கும் பூஜை நடக்கும்போது அதிர்வேட்டு போடுவார்கள். இத்தகைய பழக்கம் எல்லாம் இப்போது கடைபிடிக்கப்படவில்லை.
ஆனால் சில பழக்கங்கள் உறுதியாக கடை பிடிக்கப்படுகின்றன. அதில் ஒன்று பள்ளியறைக்கு அம்மன் செல்வது. மற்ற சிவ தலங்களில் அம்மனைத் தேடிதான் ஈசன் செல்வார். ஆனால் இங்கு ஈசனைத் தேடி உண்ணாமுலை அம்மன், “வைபோக நாயகி” என்ற பெயரில் செல்கிறாள்.
சுவாமி திருமேனி ரூபமாக பள்ளியறைக்கு செல்ல மாட்டார். மகாமேரு சக்கர வடிவத்தில்தான் செல்வார். காலையில் அந்த மகாமேடு பள்ளியறையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கருவறை வெளிமேடையில் வைக்கப்படும்.
மற்ற தலங்களில் ஈசனுக்கு வலது பக்கத்தில் அம்பாள் வீற்றிருப்பாள். ஆனால் திருவண்ணாமலையில் மட்டும் இடது புறத்தில் அம்பாள் உள்ளார். தவம் இருந்து ஈசனின் உடலில் இடது பாகத்தை சரி பாதியாக பெற்றதால் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் அண்ணாமலையாருக்கு இடது பக்கத்தில் உள்ளது. நண்பரின் பதிவு. சிவஅன்பர்களே நாம் செய்யும் செயலில் சிவம் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள். வாழ்க மெய்அன்பர்கள் வளர்க அண்ணாமலையார் புகழ். அன்பே சிவம். சிவாயநம அருணாச்சலம்
நமசிவாய வாழ்க

செவ்வாய், 27 மார்ச், 2018
அறிவியல் ஆசிரியர்களுக்கான புதிய இலவச ஆன்ட்ராய்டு செயலி - ICT4SCIENCE
அறிவியல் ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி அறிவியலை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள், ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து"ICT4SCIENCE" என்னும் ஒரு எளிய ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
"ICT4SCIENCE" என்னும் இந்த ANDROIDசெயலி அனைத்து நிலைகளிலும்(ஆரம்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் அறிவியல் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு அறிவியலை மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.
அனைத்து அறிவியல் ஆசிரியர்களும் "ICT4SCIENCE" என்னும் இந்த FREE ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.
LINK:
https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_vallaba1979.ICT4SCIENCE
ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 8 ஆயிரம் மாணவர்கள், நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடி பயிற்சியும், மீதமுள்ள 6 ஆயிரம் மாணவர்களுக்கு மின்னணு முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நேரடி பயிற்சி பெறும் 2 ஆயிரம் மாணவர்கள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் 25 நாட்கள் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள பூச்சி அருங்காட்சியங்கள் உதவும் - முதல்வர்
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூச்சி அருங்காட்சியகம் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் பூச்சி அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திங்கள்கிழமை (இன்று) திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் உரையாற்றிய அவர்,
இந்த அருங்காட்சியகத்தை விடியோ கான்பிரன்ஸிங் முறையில் திறந்து வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் நேரில் வந்து பார்த்து திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இங்கு வந்து பார்த்ததால் தான் இதன் சிறப்பம்சங்களை நேரடியாக தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்தியாவில் சுமார் 75 ஆயிரம் பூச்சிகள் இருப்பதாக இந்த அருங்காட்சியகத்திற்கு வந்ததால் தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் எது என்பது குறித்து அறிந்து கொள்ள முடிந்தது.
உலக அளவில் பூச்சிகள் குறித்து இது போன்ற அருங்காட்சியகங்கள் 20 இடங்களில் மட்டும் இருக்கிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் அருங்காட்சியகம் தத்ரூபமாக அமைந்துள்ளது.
பூச்சிகளால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் குறித்து தெரிந்து கொள்ளவும், அவற்றினால் வரும் பாதிப்புகள் குறித்தும், அதற்கு எந்த மருந்துகள் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள இந்த அருங்காட்சிகம் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் வேளாண்மை மாணவர்களும், பள்ளி மாணவர்களும் தன் அறிவை வளர்த்துக்கொள்ள இந்த அருங்காட்சியம் உதவும் வகையில் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4 பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் டிபிஐ வளாகத்தில் பரபரப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4 பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் நேற்று காலை 10 மணி முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் என 4 பிரிவினராக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தனித்தனிக் குழுக்களாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வை 2013ம் ஆண்டு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு கூட்டமைப்பாக கோஷம் போட்டபடி வந்தனர். அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்திக்க காத்திருந்தனர். அது குறித்து அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 93 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். 5 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்னும் பணி நியமனம் இல்லை.
பள்ளிக் கல்வி அமைச்சர் விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று ஜனவரி மாதம் தெரிவித்தார். தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இல்லை என்றால், சட்டப் பேரவையை முற்றுகையிடுவோம் என்றார்.
அடுத்ததாக 2017ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் சார்பில் நடத்த முற்றுகை போராட்டத்தில் சென்னையை சேர்ந்த வெங்கட் கூறியதாவது:
கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி–்த் தேர்வில் தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் எழுதினர். அதில் 34 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பணி ஆணை கிடைக்கும் என்று காத்திருக்கிறோம்.ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதிச் சான்று வழங்க வேண்டும். தாள் ஒன்றுக்கு சான்று சரிபார்ப்பு நடத்த வேண்டும் என்று கேட்டு பள்ளிக் கல்வி இயக்குநரை சந்திக்க வந்தோம். அவரை சந்தித்த பிறகு ஒரு மாதம் காத்திருக்க சொன்னார் என்றார்.
சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதியவர்கள் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கான 1325 இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. அதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினோம்.
தேர்வு முடிந்து 6 மாதம் கடந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய உதவி பேராசிரியர் போட்டித் தேர்வில் குளறுபடிகள் நடந்ததால், சிறப்பு ஆசிரியர் தேர்வில் இடம் பெற்ற ஓஎம்ஆர் தாளை மீண்டும் திருத்த முடிவு செய்துள்ளோம். விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஆர்பி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் முடிவுகள் வெளிவரும் காத்திருப்போம் என்று செல்வம் தெரிவித்தார்.
முதுநிலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வு எழுதி பணி நியமனத்துக்காக காத்திருப்ேபார் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 3300 நிரப்ப போட்டித் தேர்வு நடந்தது. அதில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து 2300 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுவிட்டது.
மீதம் உள்ளவர்களுக்கு சான்று சரிபார்–்ப்பு முடிந்துள்ள நிலையில் பணி நியமன ஆணை இன்னும் வழங்கவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறையில் 220 பணியிடங்கள் உள்ள நிலையில் அந்த இடங்களில் எங்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வந்தோம். விரைவில் முடிவு தெரிவிப்பதாக டிஆர்பி அதிகாரிகள் ெ தரிவித்துள்ளனர். அதனால் முதுநிலை பட்டதாரி ஆசிரியரகள் கலைந்து சென்றனர்.
போலீசாரை வெளியே நிற்க வைத்த அதிகாரிகள்
மேற்கண்ட நான்கு பிரிவினரும் டிஆர்பி அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டு இருந்ததால் நுங்கம்பாக்கம் போலீசார் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி உரிய அதிகாரிகளிடம் பேச ஏற்பாடு செய்தனர். ஆனால் டிஆர்பியின் தலைவர் நந்தகுமாரிடம் பேச வேண்டும் என்று போராட்டக் காரர்கள் கேட்டுக் கொண்டனர்.இது குறித்து டிஆர்பி தலைவருக்கு தகவல் தெரிவிக்க சென்ற போலீஸ் அதிகாரிகளை உள்ளே விடாமல் ெவளியில் காக்க வைத்தனர் டிஆர்பி அதிகாரிகள்.
மேலும், டிஆர்பி தலைவர் நந்தகுமார் முக்கியமான மீட்டிங்கில் இ ருப்பதால் அதிகாரி ஒருவர் பேச்சு வார்த்தை நடத்துவார் என்று போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி டிஆர்பி உறுப்பினர் செயலாளர் உமாவை பேச அழைத்தனர். ஆனால் அவர் வழக்கம் போல மனுக்களை வாங்கிக் கொண்டு பதில் கூறி அனுப்பி விட்டார். இது வழக்கமாக நடப்பதுதான். இவ்வளவு களேபரத்துக்கும் இடையிலும் தலைவர் நந்தகுமார் அவர் அறையில் இருந்து வெளியில் வரவே இல்லை. அதனால் பட்டதாரிகள் அதிருப்தி அடைந்தனர்.

1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு
1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பல புதிய நவீனங்கள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக அவற்ைற அச்சிடும் பணிகள் முடிய உள்ளன. மே இறுதி வாரத்தில் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றிஅமைக்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.
பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு 100 தலைப்புகளில் 1.70 கோடி பாடநூல் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் தொடங்கியுள்ளது. பிராந்திய மொழிகளிலும் பாடப்புத்தகம் அச்சிடப்படுகிறது.
இந்த புதிய புத்தம் வழவழப்பான அட்டை, திடமான தாளில் பல நிறங்களில் படங்கள் என்று மாணவர்களை கவரும் வகையில் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்துக்கான புத்தகத்தை பொறுத்தவரையில் பாடப்புத்தகங்கள் எண்ணிக்கையில் 1 முதல் 3 வரை இருக்கும். பாடப்புத்தகங்களின் உள்ளே இடம் பெறும் பாடங்களுக்கு ஏற்ற பல நிறங்களில் படங்கள் அச்சிடப்படுகிறது. அதற்கு அருகில் ‘கியூ ஆர்’ எனப்படும் ‘கியூக் ரெஸ்பான்ஸ் கோட்’ அச்சிடப்படுகிறது.
அந்த படங்கள் குறித்து கூடுதல் தகவல் வேண்டும் மாணவர்கள் அந்த கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து செல்போனில் பார்த்தால் அந்த படங்கள் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
மேலும், முப்பரிமாணத்தில்(3டி) அந்த படத்தையும் பார்க்க முடியும். அதுமட்டும் இல்லாமல் சில இடங்களில் இணைய தளங்களின் லிங்க்-கும் குறிப்பிடப்படும். அதைக் கொண்டு மாணவர்கள் அந்த இணைய தளத்துக்கு சென்று கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
மேலும், 9, 10, பிளஸ் 1 வகுப்பு பாடப்புத்தகங்களில், ஆங்காங்கே, மேற்படிப்பு குறித்த தகவல்களும் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன. இந்த பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி மே மாதம் இரண்டாவது வாரத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பணி முடிந்ததும் மே இறுதி வாரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று சேரும்.
வழக்கம் போல பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் சுமார் 4.50 கோடி அச்சிடும் பணியும் நடக்கிறது.

ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: கருவூல கணக்கு துறை செயலாளர் உத்தரவு
தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள்ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசின் கருவூல கணக்கு துறை முதன்மை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை பதிவு செய்யவும், நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நேர்காணலுக்கு கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய கருவூலத்தின் வேலை நாட்களில் நேரில் வர வேண்டும்.
ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்மந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள் வழியாக நேர்காணலை இணையதளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார் அட்டை வாயிலாக பதிவு செய்து அதன்மூலம் நேர்காணல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை குறிப்பிட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்கலாம்.
ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம் கொண்டு வரவேண்டும்.நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதியப் புத்தகம், இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் (www.tn.gov.in/karuvoolam/) சமர்ப்பிக்கவில்லை எனில் அதன் நகல்களுடன் வாழ்வு சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும்.
குடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர்கள், நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்) மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும். தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் விவரம் அளிக்க வேண்டும். இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)