>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 23 பிப்ரவரி, 2017

வாணியம்பாடி முத்தமிழ் விழா

EMIS website is now open.

தற்போதைக்கு கீழே உள்ள url ஐ பயன்படுத்தவும்
http://emis.tnschools.gov.in/accounts/login/?next=/
இதற்கு முன் பயன்படுத்திய url ல் https என இருக்கும்.. தற்போதைக்கு http மட்டும் பயன்படுத்தவும்...

தமிழக அரசுப்பள்ளிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு A/C மற்றும் Smart board உடன் கூடிய SMART CLASS தொடக்கம்

நீண்ட வருட கனவொன்று இன்று நிஜமானது...
எங்கள் பள்ளிகுளம் நடுநிலைப்பள்ளியில்  தமிழக அரசுப்பள்ளிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு A/C மற்றும் Smart board உடன் கூடிய SMART CLASS தொடங்க வேண்டுமென்ற பல வருட கனவு இன்று (22.02.2017 )
நிஜமாகி போனது.
ஆமாங்க இன்னிக்கி விழுப்புரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மரியாதைக்குறிய திரு. N.இளங்கோ M.sc.MEd., அவர்களால் மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டதின் மூலம் எங்களின் நீண்டவருட கனவு நிஜமானது.
பள்ளியை பற்றிய பத்திரிக்கை செய்தியை பார்த்து புரஜெக்டர் வாங்கிக்கொடுத்த திண்டிவனம் ஆடிட்டர் திரு.P.G. பாலசுந்தம் அவர்களுக்கும்,SMART BOARD வாங்கிக்கொடுத்த சென்னை தொழிலதிபர் திரு. S.தயாளன்  அவர்களுக்கும்,
பள்ளிக்கு கணினி வழங்கிய முன்னாள் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. A. கணேஷ்குமார் அவர்களுக்கும்,         
A/C ரூமுக்கு கதவு செய்து கொடுத்த சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் திரு. A. கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களுக்கும் A/C மற்றும் FURNITURE வாங்கிக்கொடுத்த கிராம பொது மக்களுக்கும் கோடான கோடி நன்றிகள்..
குறிப்பு...
அறை முழுவதும்
Designing & Painting works  முழுவதும் என் கைவண்ணத்தில்....
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
பள்ளிகுளம்
வல்லம் ஒன்றியம்,
விழுப்புரம் மாவட்டம்.
9786899951

முதல் முறையாக தேர்வு நடைபெறும் முன்பே பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதுக்கு முன்பாகவே தேர்வு முடிவு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,
பொதுத்தேர்வு முடிவுகள்:
12ம் வகுப்பு - மே 12ம் தேதியும்
10ம் வகுப்பு - மே 19ம் தேதியும்
 வெளியிடப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

TNTET - 2017:ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் சென்னையில் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:
ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 29-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30-ம் நடைபெறும் எனத்தெரிவித்தார்

EMIS - LATEST NEWS...

1.புதிய புகைப்படம் EMISல் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்*
2.அனைத்து பதிவுகளையும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்*
3.இதில் பிறந்தநாள், சேர்க்கை எண், பெற்றோர்கள் பெயர், ஆதார் எண், உடன்பிறந்தவர்கள் குறிப்பு போன்ற அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும்*
4.ஏதேனும் பதிவுகள் விடுபடாமல் பார்த்துக்கொள்ளவும் ஏனெனில் தற்போது சில கலங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது*
5.இவை அனைத்தையும் 28.2.2017 க்குள் முடித்துக்கொள்ளவும், ஏனெனில் அதற்குமேல் எடிட் வசதி அகற்றப்பட்டுவிடும்*
6.வகுப்பு 1 முதல் 8ஆம் வகுப்புவரை புதிய மாணவர்கள் சேர்க்கை செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே  ஏதேனும் மாணாக்கர்கள் தங்கள் பள்ளியில் பயின்றும் EMIS COMMON POOLல் இல்லாமல் இருந்தாலோ அல்லது நேரடிச் சேர்க்கை ( RTE) செய்து இருந்தாலோ அவை அனைத்தையும் இப்பொழுது புதிய பதிவுகளாக சேர்த்துக்கொள்ளலாம்*
7.கண்டிப்பாக தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணாக்கரின் விவரங்களும் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்து 28.2.2017 க்குள் முடிக்கப்பட வேண்டும்.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

பிளஸ்2 தேர்வுக்கான சிறப்பு அனுமதி திட்டம்: விண்ணப்பித்தோர் கவனத்துக்கு...

சிறப்பு அனுமதி திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்தோர் இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை சனிக்கிழமை (பிப்ரவரி 18) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் தனித் தேர்வர்கள் பிப்ரவரி 9,10 ஆகிய நாள்களில் தத்கல் மூலம் விண்ணப்பித்தோர்  www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முதலில் HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் HIGHER SECONDARY EXAM MARCH 2017-PRIVATE CANDIDATE-TATKAL HALL TICKET PRINT OUT  என்ற வாசகத்தை கிளிக் செய்து விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். பின்னர், அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதேபோல் மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித் தேர்வர்கள் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.
இதுவரையில் மேல்நிலைத் தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்யாத தனித் தேர்வர்கள், மேற்குறிப்பிட்ட இணையதளத்தின் மூலம் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

‘டான்செட்’ விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில், தமிழக கல்லூரிகளில் படிக்க விரும்புகிறீர்களா? 

‘ஆம்’ எனில் நீங்கள் கட்டாயம் எழுத வேண்டிய தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ‘டான்செட்’!தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்,இந்த தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகமண்டல வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

தகுதிகள்

எம்.பி.ஏ., படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஏ., படிப்பிற்கு கணிதப் பாடத்துடன் கூடிய இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பாடத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய படிப்புகளுக்கு ஒரு தேர்வு, எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளுக்கு தனித்தனி தேர்வு என மொத்தம் மூன்று தேர்வுகள் நடத்தப்படுகின்றன.எம்.பி.ஏ., படிப்பிற்கான தேர்வில் கணிதம், வர்த்தகம் மற்றும் ஆங்கில மொழித்திறன் ஆகிய திறன்கள் பரிசோதிக்கப்படும். எம்.சி.ஏ.,படிப்பிற்கான தேர்வில், குவாண்டிடேட்டிவ் ஏபிலிட்டி, அனாலிடிக்கல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், கம்ப்யூட்டர் அவார்னஸ் ஆகிய திறன்கள் பரிசோதிக்கப்படும்.எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய படிப்புகளுக்கான தேர்வில், இன்ஜினியரிங் மேத்மேடிக்ஸ், பேசிக் இன்ஜினியரிங் அண்ட் சயின்ஸ் மற்றும் துறைக்கு ஏற்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில்களுக்கு, 1/3 என்ற வீதத்தில் மதிப்பெண் பிடிக்கப்படும்.

தேர்வு நாட்கள்:எம்.சி.ஏ., - மார்ச் 25 (காலை)எம்.பி.ஏ., - மார்ச் 25 (மதியம்)எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான்., - மார்ச் 26

அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் 34 நகரங்களுக்கு பயணம்



புதுடில்லி: நாடு முழுவதும், 34 முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக செல்லக் கூடிய, அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணத்தை, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைத்தார்.
அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 16 பெட்டிகள் அடங்கிய, அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில், 2007 முதல், ஒவ்வொரு ஆண்டும் இயக்கப்படுகிறது.இந்த ஆண்டு, வடகிழக்கு மாநிலமான, திரிபுராவின் அகர்தலா உட்பட, 34 முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக, இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ஆண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், இந்த ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. டில்லியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த ரயிலை, கொடியசைத்து துவக்கி வைத்த, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதில், ஒருவரை ஒருவர் குறை கூறாமல், சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளே, தற்போதைய தேவை. இதை அனைவரும் இணைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அனில் மாதவ் தவே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர், நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பசிபிக் கடலில் மூழ்கிய ‘ஸீலாண்டியா’ என்ற கண்டம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

தென்-மேற்கு பசிபிக் கடலின் அடியில் மூழ்கிய கண்டம்
‘ஸீலாண்டியா’ என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜியலாஜிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா என்ற இதழில் இதன் விவரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மூன்றில் இரண்டு பங்கு உள்ள கண்டமாகும் ஸீலாண்டியா. இதன் நிலப்பரப்பளவு 4.5 மில்லியன் சதுர கிமீ ஆகும். இது 94% கடல்நீருக்கடியில் மூழ்கியுள்ளது. இதன் வெளியே தெரியும் மேல் பகுதிகள்தான் நியூஸிலாந்தும் நியூகேலடோனியாவும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்தக் கண்டம் ஆஸ்திரேலியாவிலிருந்து 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பிரிந்து பசிபிக் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். கொண்ட்வானாலேண்ட் என்ற சூப்பர் கண்டம் உடைந்து பிரிந்ததன் ஒருபகுதி இதுவாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

ஓவியம் கற்றுத்தர குழந்தைகளை தேடிச் செல்லும் கலைஞர்: ஓராண்டில் 18 மாவட்டங்களில் 3,248 பேருக்கு பயிற்சி


ஓவியம் வரைய கற்றுத் தருவதற் காக குழந்தைகளைத் தேடிச் செல்லும் கலைஞர், ஓராண்டில் மட்டும் 18 மாவட்டங்களைச் சேர்ந்த
3,248 பேருக்கு பயிற்சி அளித்துள்ளார்.
ஒரு பக்கச் செய்தியில் சொல்ல வேண்டிய தகவல்களை, ஒரு படத்தில் சொல்லி விடலாம். வண்ணங்கள் என்றாலே அவை ஓவியங்களைத்தான் குறிக்கும். தற்போது டிஜிட்டல் கலை நவீனமடைந்துவிட்டாலும், தூரிகை களால் உயிர்ப் பெறும் ஓவியங் களுக்கு இன்னமும் தனி மதிப்பு உள்ளது. தான் வாழும் சூழலை ஓவியங்கள் வாயிலாக கலைஞர்களால் அழகாக வெளிப்படுத்திவிட முடியும்.
கற்பனைத் திறனை அதிகரிப்பது டன், மனதில் தோன்றும் சிந்தனை யையும் வெளிக்கொண்டு வர முடியும். குழந்தைகள் ஓவியம் வரையப் பழகுவதால் அவர்களின் ஆளுமைத் திறனும், சிந்தனைக் குவிப்புத் திறனும் அதிகரிக்கும். ஆனால் பெரும்பாலான குழந்தை கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் உள்ளனர்.
அப்படிப்பட்ட குழந்தைகளைத் தேடி ஓவியம் கற்றுத்தருவதற்காக மதுரை ஜே.வி. அறக்கட்டளை மூலம் குழந்தைகளை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறார் மது ரையைச் சேர்ந்த ஓவியர் குணசேக ரன்.
வாழ்க்கையின் பிரதிபலிப்பு
இதுகுறித்து அவர் கூறிய தாவது: ஓவியம் என்பது வெறும் கலை மட்டுமல்ல. அது வாழ்க்கையின் பிரதிபலிப்பு. குழந்தையின் மழலைத்தனம் எவ்வளவு அழகானதோ, அவர் களின் கிறுக்கல்களும்கூட அதே போன்ற அழகான ஓவியங்கள்தான். நாம் மனதில் நினைப்பதை ஓவியங்கள்தான் வெளிக்கொண்டு வரும். ஒரு குழந்தையை அதன் வாழும் சூழலில் இருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றால் புதிய சூழலை புரிந்துகொள்ளவே சில நாட்கள் ஆகும். அதன் பின்னர், புதிய கற்பனையை உருவாக்க வேண்டும். எனவே, குழந்தைகள் வாழும் இடத்துக்கே சென்று ஓவியப் பயிற்சி அளிக்கிறோம். இதன்மூலம் ஒருவரால் தான் வாழும் சூழலை உணர முடியும். நாம் வாழும் சூழலை எங்கேயோ உள்ள ஒருவர் ஓவியமாக வரைவதைவிட நாமே அவற்றை ஓவியத்தில் பிரதிபலிப்பது இன் னும் சிறப்பாக இருக்கும். அனைத்து உண்மையும் அதில் பிரதிபலிக்கும். அப்போதுதான் எதார்த்தமான ஓவியங்கள் உருவா கும்.
மனநலம் பாதித்த குழந்தைகள்
மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர், வாடிப்பட்டி அரசுப் பள்ளி, ஈரோடு மனநலம் பாதித்த குழந்தைகள் பள்ளி, சிவகங்கை, சேலம், சீர்காழி, திருச்செங்கோடு, கோயில்பட்டி, சத்தியமங்கலம் பழங்குடியின குழந்தைகள், ஈரோடு பழங்குடியின குழந்தைகள் என மதுரை ஜே.வி. அறக்கட்டளை மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 3,248 குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்துள்ளேன்.
தொடர் பயிற்சி அவசியம்
பயிற்சியின்போது ஓவியம் வரை யும் முறை, புதிய வண்ணங்களை உருவாக்குதல், எதார்த்தத்தை ஓவியமாக உருவாக்குவது போன்ற பயிற்சிகளை கற்றுத் தருகிறோம். சில இடங்களில் ஒரு நாள், இரண்டு நாள் பயிற்சிகளும், சில இடங்களில் ஒரு வார பயிற்சி களும் வழங்கியுள்ளோம். ஆனாலும் முகாமில் நடத்தப்படும் பயிற்சியோடு நின்றுவிடாமல், அந்த மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் அளிக்க சம்பந்தப்பட்ட பள்ளிகள் முயற்சி எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tamil UniversityDate extended (till-28.2.2017) to Receiving application for the convocation



MEDICAL LEAVE EXTENSION FORM..

கே.வி., பள்ளிகளில் 'அட்மிஷன்' துவக்கம்



கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பதிவு, 8ல் துவங்கியுள்ளது. மார்ச், 10 வரை விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான பதிவு துவங்கிஉள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும், கே.வி., பள்ளிகளில், 'அட்மிஷன்' கிடைப்பது அரிதானது.
இந்நிலையில், 8 முதல், கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான பதிவு துவங்கியுள்ளது. http://admission.kvs.gov.in/OLAKVS/ என்ற இணைய தளத்தில், தங்களின் பெயர், விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஒன்றாம் வகுப்புக்கு மட்டும், தற்போது பதிவு செய்ய முடியும். மார்ச், 10 மாலை, 4:00 மணி வரை, பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்
பட்டுள்ளது. மார்ச், 20ல், தேர்வு செய்யப்பட்டமாணவர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும்.
இரண்டாம் வகுப்பு முதல் மற்ற வகுப்புகளுக்கு, ஏப்., 5 காலை, 8:00 மணி முதல், மாணவர் சேர்க்கை பதிவு துவங்குகிறது. ஏப்., 18 மாலை, 4:00
மணி வரை பதிவு செய்யலாம். ஏப்., 25க்கு பின், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.

தேர்வுகள் துவங்கும் நிலையில், பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த, ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளிகளில், மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து, விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.
நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவு நீர் தொட்டி மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து, அவை மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில், மாணவர்கள் குளிப்பதை தவிர்க்க, அறிவுரை வழங்க வேண்டும்.
பள்ளியை விட்டு செல்லும் போது, பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ கூடாது என, எச்சரிக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில், மரங்கள் விழும் நிலையில் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பாக உள்ளதாக என்பதை யும் ஆய்வு செய்ய வேண்டும்.
இதுபோன்று, பல, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சனி, 18 பிப்ரவரி, 2017

சசிகலா 4 ஆண்டுகளுக்கு முன்பே சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு?


அதிமுக பொதுச் செயலர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும், சிறையில் 4 ஆண்டுகள் முழுவதுமாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கு முன்பாகவே இவர்கள் விடுதலையாக ஒரே ஒரு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, சிறைச்சாலைக்குள் இவர்கள் சிறை அதிகாரிகள் கொடுக்கும் ஏதேனும் ஒரு கைத்தொழிலை செய்தால், இவர்களது சிறைத் தண்டனை காலம் குறைக்கப்படும் என்பது ஒன்றே அந்த வாய்ப்பு.
அதாவது, சிறைக் கைதிகளின் நன்னடத்தைக்கு ஒவ்வொரு மாதமும் 6 நாட்கள் சலுகை அளிக்கும் அதிகாரம் சிறை அதிகாரிகளுக்கு உள்ளது. இது தவிர, நன்னடைத்தைக்காக ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 20 நாட்களுக்கு சிறப்பு சிறை நேரம் என்ற ஒன்றும் வழங்கப்படும்.
இதன் அடிப்படையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் ஏதேனும் ஒரு கைவேலை செய்யும்பட்சத்தில், இவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் அதாவது 47 மாதங்களில் மூன்றில் ஒரு பங்கு காலத்தை மட்டும் சிறையில் கழித்தால் போதும் என்கிறது சட்டம்.
இதே குற்றத்துக்காக பெங்களூரு தனி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட போது, சசிகலா ஏற்கனவே 35 நாட்களும், இளவரசியும், சுதாகரனும் தலா 22 நாட்களும் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டனர். தற்போது அதே தண்டனைக் காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள், 10 கோடி அபராதம்.
சிறையில் கைவேலை செய்வதற்கு, சிறைக் கைதிகள் சிறைத் துறை கண்காணிப்பாளரிடம், தாங்கள் வேலை செய்ய தயாராக இருப்பதாக கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அந்த மனு மருத்துவ அதிகாரியிடம் போகும். அவர் ஒப்புதல் அளித்தால், எந்த வேலை செய்ய விருப்பம் தெரிவிக்கிறார்களோ, அதற்கான முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு வேலை செய்வதன் மூலமும், சிறையில் நன்னடத்தையோடு இருப்பதன் மூலமும், ஒவ்வொரு மாதமும் 6 நாட்கள் விலக்குப் பெறலாம். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 72 நாட்கள் சலுகை பெற்று முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு உள்ளது.
இது தவிர, சிறையில் தூய்மை, சமையல், நோயால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளை கவனித்தல் போன்ற வேலைகளை செய்யும் சிறைக் கைதிகளுக்கு மாதத்துக்கு 7 நாட்கள் சலுகை கிடைக்கும் என்று சிறைத் துறை முன்னாள் டிஐஜி ஜெயசிம்ஹா கூறியுள்ளார். ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒரு முறை இந்த நாட்கள் கணக்கிடப்பட்டு விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தப்புமா? - சட்டப்பேரவையில் இன்று பலப்பரீட்சை


தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற் கான பலப்பரீட்சை இன்று சட்டப்பேரவையில் நடக்கிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல் வரானார். அதன்பின் டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வா னார். புதிய அமைச்சரவை அமைந்து 2 மாதங்கள் கழிந்த நிலையில், திடீரென பிப்ரவரி 5ம் தேதி, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக் கப்பட்டார். அவர் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக தற்போது 10 எம்எல்ஏக்கள் தலை மையை எதிர்த்து வெளியேறியுள் ளனர். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சசிகலா சிறைக்கு சென்றார். அன்றே சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தங்களுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான் மையை நிரூபிக்க வாய்ப்பு கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தொடர்ந்து வலியுறுத்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். மாலையே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 30 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது. முன்னதாக, ஆட்சி அமைக்க அழைக்கும்போது, 15 நாட்களுக் குள் சட்டப்பேரவையில் அமைச்ச ரவையின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். இதையடுத்து, சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், இன்று பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டியுள்ளார். பேரவை அரங்கில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவையின் பெரும்பான் மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் இதுபோன்ற நிகழ்வு நடப்பது 3- வது முறையாகும். முதலில் 1952-54 காலகட்டத்தில் ராஜாஜி தமிழக முதல்வராக இருக்கும் போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின் எம்ஜிஆர் மறைவை அடுத்து 1988-ல் அரசு மீது நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. தற்போது 3-வது முறை யாக இன்று பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடக்கிறது. பேரவை காலை 11 மணிக்கு தொடங்கியதும், பேரவைத் தலைவர், அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப் பதற்கான தீர்மானத்தை கொண்டு வர முதல்வருக்கு அனுமதி அளிப்பார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தீர்மானத்தை முன்மொழிந்து, அதன் மீது பேசுவார். தொடர்ந்து, தீர்மானத்தை நிறைவேற்ற முதல்வர் கோரியதும், பேரவைத்தலைவர் வாக்கெடுப்பு நடத்துவார். பொதுவாக பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். ஆனால், தற்போது எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்த வாய்ப்புள்ளது. அதே நேரம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் எதிர்க்கட்சித் தரப்பில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், வாக் கெடுப்பு எந்த முறையில் நடத்தப் படும் என்பதையும், அதற்கான விதிகளையும் இன்று பேரவைத் தலைவர் பி.தனபால் பேரவையில் அறிவித்து, அதன்படி நடத்துவார். பேரவையில் அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்ப தற்கான வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், அரசு கொறடா எஸ்.ராஜேந்திரன் அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேரவை கூட்டத் தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதே நேரம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அமைச்ச ரவைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக திமுக தெரிவித்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை தற்போது 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 11 பேர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். மீதமுள்ள 123 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். தமிழக சட்டப்பேரவை யில் இப்போது 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் உடல் நிலை சரியில்லாததால் திமுக தலைவர் கருணாநிதியால் அவைக்கு வரமுடியாது. எனவே, பேரவைத்தலைவர் பி.தனபால் தவிர 231 எம்எல்ஏக்கள் வாக்கெடுப் பில் நேரடியாக பங்கேற்பார்கள். இதில், 117 எம்எல்ஏக்கள் ஆதரவு பெறும் பட்சத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மை பலத்தை பெற்று தப்பிக்கும். இதனிடையே, கூவத்தூரில் தங்கியுள்ள தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கொறடா ராஜேந்திரன் ஆகியோர் பேசி வருகின்றனர். எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பின்போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்தும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். அதேநேரம், ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் எம்எல்ஏக்க ளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், பேரவை காவலர்கள் அதிக எண் ணிக்கையில் வரவழைக்கப்பட் டுள்ளனர். மேலும், வாக்கெடுப்பு எந்த முறையில் நடத்துவது என்றாலும் அதற்கான ஏற்பாடுகளை பேரவை செயலக பணியாளர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.




எடப்பாடிக்கு எதிர்ப்பு: வெளியேறினார் அதிமுக எம்எல்ஏ
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்குமார். இவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தற்போதைய தலைமையின் செயல்பாடு தொண்டர்கள் விரும்பும் வகையில் இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 122ஆக குறைந்தது.


பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தீவிரம்: பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு


பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் களும் இணை இயக்குநர்களும் மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை ஏறத்தாழ 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8-ல் ஆரம்பித்து 30-ம் தேதி நிறைவடைகிறது. இத்தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகிறார்கள். பள்ளி மாணவ- மாணவிகள் தவிர கணிசமான எண்ணிக்கையில் தனித்தேர்வர் களும் பொதுத்தேர்வை எழுதுகி றார்கள். மாவட்டங்களில் முன்னேற்பாடு

பொதுத்தேர்வுகள் விரைவில் தொடங்க இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் சரியாக நடைபெறுகின்றனவா என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள். கண்காணிப்புப் பணி

இதற்கிடையே, பொதுத்தேர்வு முன்னேற்பாடுகளை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த இயக்குநர்களும், இணை இயக்கு நர்களும் பணியமர்த்தப்பட்டுள் ளனர். அவர்கள் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று முன்னேற்பாடு களை ஆய்வு செய்வதுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள். சென்னை மாவட்டத்தில் பணி களை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், வேலூர் மாவட்டத்தில் ஆர்எம்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் ஜி.அறி வொளி, திருவள்ளூர் மாவட்டத் தில் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப் பினர்-செயலர் உமா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், ஈரோடு மாவட்டத்துக்கு மெட்ரி குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வு ஆய்வுப் பணிக் காக நியமிக்கப்பட்டுள்ள இயக்கு நர்களும், இணை இயக்குநர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட் டங்களில் ஏற்கெனவே பணியை தொடங்கிவிட்டதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார். பொதுத்தேர்வு ஆய்வுப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள இயக்குநர்களும், இணை இயக்குநர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே பணியை தொடங்கிவிட்டனர்.

ஊக்க ஊதியம் - ஆசிரியர்கள்- பணிக்கு வருவதற்கு முன்னர் உயர்கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது சார்பு

EASY GRAMMAR STUDY MATERIAL FOR PRIMARY STUDENTS

மாணவர்கள் நீண்ட விடுப்பு 100 சதவீத கனவு தகர்ப்பு!

நீண்ட நாள் விடுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளதால், தேர்வில் பங்கேற்காத பட்சத்திலும், தோல்வியை தழுவியவர்களாக குறிப்பிடப்படுகிறது. இதனால், நுாறு சதவீத தேர்ச்சி பெற முடியாத நிலை இருப்பதாக, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகம்முழுக்க, மார்ச் 2ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கும், மார்ச் 8ம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு துவங்குகிறது. பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட, மாணவர்களின் தகவல்கள் கொண்டு, பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல், ஆண்டு துவக்கத்திலே பதிவு செய்யப்பட்டு சரி பார்க்கப்பட்டவை. எனவே, அனைத்துமாணவர்களின் தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.இதில், தொடர்ந்து நான்கு மாதங்களாக, பள்ளிக்கு வராமல், தேர்வு எழுதாத மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது.
இதில், பல அரசுப்பள்ளிகளில், தலா நான்கு மாணவர்கள் வீதம், நீண்டநாள் விடுப்பில் உள்ளனர்.இவர்களில், பெரும்பாலானோர் செய்முறை பொதுத்தேர்வு எழுதவரவில்லை என கூறப்படுகிறது. எழுத்துத்தேர்வுக்கும் வராத பட்சத்தில், 'ஆப்சென்ட்' என குறிப்பிட்டு, தேர்ச்சியடையாதோர் பட்டியலில் சேர்க்கப்படும். இதனால்,நுாறு சதவீத தேர்ச்சி பெறும் முயற்சிக்கு தடை ஏற்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'நீண்டநாள் விடுப்பில் இருக்கும் மாணவர்கள், எந்த தேர்வும் எழுதாதபட்சத்தில், அவர்களை தோல்வியடைந்தவர்களாக குறிப்பிடக்கூடாது.
ஒரு தேர்வு கூட எழுதாதபட்சத்தில், விடுப்பில் இருக்கும் மாணவர்களால், 100 சதவீத தேர்ச்சிஇலக்கு, தடைபடுகிறது. 'எனவே, தேர்வு எழுதியோரை கணக்கிட்டு,நுாறு சதவீத தேர்ச்சி பள்ளிகளின் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றனர்.