தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஆப் அறிமுகம்....
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது
இதற்க்கான அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை 'சி-விஜில்' செயலி மூலம் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது
லிங்க்
https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil
இதில் செல்போன் எண்ணை பதிவு செய்தும், செய்யாமலும் பயன்படுத்த முடியும்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா,
பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானம் விநியோகிப்பது,
திருமண மண்டபங்களில் விருந்து வைப்பது,
வாக்காளர்களை மிரட்டுவது,
வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது,
வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது,
பொய்யான செய்திகளைப் பரப்புவது,
போன்ற அனைத்து நடத்தை விதிமீறல்கள் தொடர்பாகவும் இந்த செயலி மூலம் இது தொடர்பாக புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து புகார்அளிக்கலாம்.
புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து தேர்தல் ஆணையம் 1 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்
உங்கள் பகுதியில் தேர்தல் முறைகேடு நடந்தால் இந்த ஆப் மூலம் போட்டோ வீடியோ எடுத்து அனுப்பினா போதும்
.......................................