ஒரே வாரத்தில். நெஞ்சு சளியை நிரந்தரமாக குணமாக்கலாம் இதை செய்து பாருங்கள்
புகைப்பழக்கம் மற்றும் பல்வேறு விதமான பழக்கவழக்கங்களால் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தீராத சளியை ஏற்படுத்தும்.
இது நாளடைவில் நெஞ்சில் தங்கி பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்தும். உடல் பலவீனம்,ரத்த ஓட்டத்தை தடுக்கும். அதிகமாகநெஞ்சில் சளி இருந்தால் மூச்சடைப்பு ஏற்படும்.
இதற்கு எளிய முறையில் வீட்டில் உள்ள ஒரு பொருளைவைத்தே நாம் தீர்வு காணலாம்.இரண்டு மூன்று வெற்றிலையை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். ஒரு டம்ளர் நீர் கால் டம்ளராக சுண்டும் வரை விட்டு பிறகு எடுத்து வடித்து தேவைப்பட்டால் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
இதை தினமும் அதிகாலை நேரங்களில் காபி,டீயை தவிர்த்து விட்டு இந்த கசாயத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நெஞ்சில் கட்டியுள்ள சளி முழுவதுமாக வெளியேறி உடல் நன்றாக தேறாஆரம்பிக்கும்.