தொப்பையை குறைக்க கூடிய முன்னோர்களின் முறைகள்..!
இப்போதெல்லாம் உடல் எடை பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாகி கொண்டே போகின்றனர். உணவு கட்டுபாடின்றியும், தேவையற்ற அன்றாட பழக்கத்தாலும், ஆரோக்கியமற்ற சூழலாலும் இந்த நிலை அதிகமாகி கொண்டே செல்கிறது. இதன் விளைவாக தொப்பை என்கிற விரும்பாத பரிசு தான் நமக்கு கிடைக்கிறது.
ஒரே மாதத்தில் தொப்பையை குறைக்க கூடிய முன்னோர்களின் முறைகள்..!
இதனை சரி செய்ய ஏராளமான வழிகள் இருந்தாலும் நமது முன்னோர்களின் முறை சற்றே ஆற்றல் மிக்கது. எப்படியெல்லாம் நம் முன்னோர்கள் உடலை கச்சிதமான அமைப்புடன் வைத்து கொண்டார்கள் என்பதை பற்றி இனி அறிந்து கொள்வோம்.
ஆற்றல் மிக்க முறைகள்
முன்னோர்கள் கடைபிடித்த ஒவ்வொரு முறைகளுக்கும் பல வித அர்த்தங்கள் இருந்ததாம். எல்லா வகையான முறைகளும் இயற்கையுடன் பின்னி பிணைந்துள்ளது என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் எடை பிரச்சினைக்கு மட்டுமன்றி பல வகையான பிரச்சினைகளுக்கும் இவர்களின் முறைகள் நன்கு உதவியது.
புஜங்காசனம்
பாம்பு படமெடுப்பது போன்ற தோற்றத்தை இந்த பயிற்சி முறை தரவல்லது. உடலின் தசைகளை இலகுவாக்கி உடல் எடையை கச்சிதமாக வைத்து கொண்டு, தொப்பையை விரைவில் குறைக்க செய்யும். அத்துடன் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து எந்த வித பிரச்சினைகளும் இன்றி ஆரோக்கியமான உடல் நலத்தை தரும்.
பயிற்சி முறை...
முதலில் குப்புற படுத்து கொண்டு, இரண்டு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக வைத்து கொள்ளவும். பிறகு தலை மற்றும் மார்பு பகுதியையும் சேர்த்து மேலே தூக்கி மூச்சை மெல்ல இழுத்து விடவும். அதன் பின், இரு கால்களையும் மேலே தூக்கி மூச்சை இழுத்து விடவும். இந்த பயிற்சியால் தொப்பையில் உள்ள கொழுப்புகள் குறைந்து எளிதில் ஸ்லிம்மாக ஆகிவிடலாம்.
உஸ்ட்ராசனம்
தொப்பையை குறைப்பதில் உஸ்ட்ராசனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆசனம் உடலின் முழு நிலையையும் சீராக வைத்து, அதிக நலனை தருகிறது. இந்த பயிற்சியை தினமும் செய்து வருவதால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறைந்து, மிக சீக்கிரமாகவே தொப்பை குறையும்.
ஆசன முறை...
முதலில் கால்கள் உள்ளே மடங்குவது போன்று முழங்காலில் உட்கார்ந்து கொண்டு, மெதுவாக உடலை எழ செய்து பின்னங்கால்களை கைகளால் பிடித்து கொள்ளுங்கள். இந்த நிலையில் உடலை நன்றாக வலைத்து இருக்க வேண்டும். இந்த நிலையில் மெல்லமாக மூச்சை நன்கு இழுத்து வெளியே விடவும். இதனை தொடர்ந்து செய்யவும்.
கும்பகாசனம்
தொப்பையை குறைப்பதில் இந்த முறை முதன்மையான பங்கு வகிக்கிறது. தொப்பையை குறைப்பதோடு தசைகளுக்கு அதிக வலிமையை இது தருகிறது. அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளும் உறுதி பெறுகிறது. கிட்டத்தட்ட "புஸ் அப்ஸ்" போன்ற நிலையில் தான் இதை நீங்கள் செய்ய வேண்டும்.
பயிற்சி முறை
குப்புற படுத்து கொண்டு தோல் பட்டையை மேலே தூக்கி நிறுத்து கொள்ளவும். அடுத்து கைகளை தோல் பட்டைக்கு நேராக நிறுத்தவும். இந்த நிலையில் கால்கள் பாதி முட்டி போடுவது போன்று இருக்கவும். அடுத்து உங்களின் உடலை மெல்ல மேலே எழும்ப செய்யவும். இந்த நிலையில் 10 நொடிகளுக்கு மேல் இருக்கலாம். பின் மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.
தனுராசனம்
தனுராசனம் செய்வதால் உடலின் முழு செயல்படும் சீராக நடைபெறும். தொப்பையை முழுக்க குறைக்க இந்த தனுராசனம் பெரிதும் உதவும். தனு என்பதற்கு "வில்" என்ற அர்த்தம் உண்டு. ஆதலால், இந்த ஆசனத்தை செய்வதற்கு, வில்லை போன்று நம் உடலை வளைக்க வேண்டும்.
பயிற்சி முறை...
முதலில் குப்பற படுத்து கொண்டு, இரண்டு கணுக்காலை கைகளால் பிடித்து கொள்ளவும். அடுத்து, மார்பு பகுதியை மேல் நோக்கி தூக்குமாறு செய்ய வேண்டும். இந்த நிலையில் மெல்லமாக மூச்சை இழுத்து வெளியில் விடவும். இவ்வாறு, வில்லை போன்று உடலை வளைத்து தொடர்ந்து செய்து வந்தால், தொப்பையை விரைவில் குறைத்து விடலாம்.
விருக்சாசனம்
"விருக்ஷம்" என்பதற்கு மரம் என்று பொருள் உண்டு. மரத்தை போன்று நின்ற நிலையில் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். இந்த முறை வயிற்று தசைகளுக்கு அதிக வலிவை தந்து, தொப்பையற்ற வயிறாக மாற்றுகிறது. இந்த ஆசன நிலையில் 10 முதல் 30 விநாடிகள் வரை இருக்கலாம்.
ஆசன முறை...
இந்த பயிற்சியை செய்ய, முதலில் இரு கால்களையும் சிறிது விரித்து வைத்து கொண்டு, வலது காலை மடக்கி, அதை மேலே உயர்த்தி அடிப்பாதத்தை இடது தொடையின் மேல் வைக்க வேண்டும். இந்த நிலையில் முதலில் நிலையாக நின்று கொள்ளவும்.பிறகு மெல்லமாக மூச்சை இழுத்து விடவும். அடுத்து கைகளை மேலே உயர்த்தி வணக்கம் சொல்வது போன்று வைத்து கொள்ள வேண்டும்.
மேற்சொன்ன முன்னோர்களின் முறைப்படி எளிதில் உங்களின் தொப்பையை குறைத்து விடலாம் நண்பர்களே.