>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 5 மார்ச், 2020

காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
05-03-2020


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 567

அதிகாரம் : வெருவந்த செய்யாமை

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
 அடுமுரண் தேய்க்கும் அரம்.


பொருள்:
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

 எவராவது தன்னுடைய வாழ்நாளில் தவறு செய்ததில்லை என்று நினைத்தால் , அவர்கள் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி 
  கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

Sound of things - பொருள்களின் ஒலிகள்

1. Aeroplane - Zoom
2. Bells - peel
3. Drums - beat
4. Doors - bang

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. விழுப்புரம் மாவட்டத்தில் கல் மரங்கள் எங்கு கணப்படுகிறது ?

 திருவக்கரை

2. சாத்தனூர் அணை எந்த மாவட்டத்தில் உள்ளது ?

 திருவண்ணாமலை

✡✡✡✡✡✡✡✡
Daily English
 Di -syllabic words

1. science - sci-ence
2. rubbish - rubbish
3. support - sup-port
4. subscribe - sub-scribe

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

வாடாமல்லி



🍃 எப்போது பார்த்தாலும் அப்போதுதான் மலர்ந்தது போல் வாடாமல் இருப்பது போல் இருப்பதால்தான் இதற்கு பெயர் வாடாமல்லி. இது வறண்ட பகுதியில் கூட வளரக் கூடிய ஒரு செடியாகும். இந்த செடிகள் மிகவும் குறைவாக ஒன்று அல்லது இரண்டு அடி உயரம் வரை மட்டுமே வளரும். வாடாமல்லி பூக்கள் எளிதாக சந்தைகளில் அன்றாடம் கிடைக்கக் கூடிய ஒன்றாகும்.

🍃கோம்பிரினா குளோபோசா என்பது இதன் தாவர பெயர் ஆகும்.

🍃வாடாமல்லி பூ மாலை கட்டவும் அலங்காரம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பூக்கள் வெள்ளை, சிவப்பு முதலிய பல நிறங்களில் காணப்படுகின்றன.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

ஊருக்கென்ன லாபம்

தவம் செய்து யோகங்கள் கைவரப் பெற்ற வரத யோகிக்கு கர்வம் ஏற்பட்டது. தன் சித்து விளையாட்டுக்களை மற்றவர் முன் செய்து காட்டி புகழ் பெற்றார். ஒரு நாள் அந்த ஊருக்கு துறவி வந்தார். அவரிடம் தன் சக்தியைக் காட்டி தன்மதிப்பு பெற யோகி முடிவு செய்தார். அவர் துறவியிடம் நீண்ட நெடும் தவத்தின் பயனாக பறக்கும் சக்தியையும் தண்ணீரில் மூச்சை அடக்கும் சக்தியையும் பெற்றுள்ளேன். மற்றவர்களுக்கு எளிதில் கைவராத பயிற்சிகள் இவை. என தன்னைத்தானே புகழ்ந்து கொண்டார்.

அதைக்கேட்ட துறவி யோகியே பறவைகள் வானில் பறக்கின்றன. புழுக்கள் பூமியின் அடியில் நீண்ட காலம் வாழ்கின்றன. மீன்கள் தண்ணீரின் ஆழம் வரை நீந்துகின்றன. இது போன்ற வாழ்க்கை எப்படி சாத்தியம் என்கிறீர். அதனால் உமக்கும் உலகத்துக்கும் ஆகப் போவது என்ன? மிக உயர்ந்த மனிதப்பிறப்பு எடுத்து விட்டு புழுவாய் பறவையாய் வாழ்வதில் லாபமென்ன? தற்பெருமையை தவிர்த்து விட்டு தர்மத்தை அன்பை மக்களுக்கு ஊட்டுங்கள் அதுவே உயர்வு தரும் இறைப்பணி என்றார். தற்பெருமை பேசிய யோகி தலை கவிழ்ந்தார்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

🔮கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஜனாதிபதி மாளிகையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🔮எதிர்காலத்தில் மக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வதை விட அரசு மருத்துவமனைக்கு வரும் சூழல் ஏற்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

🔮பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி இரு லீக் ஆட்டங்கள் மழையால் ரத்தானது. அரைஇறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது.

🔮கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி: உலக வங்கி அறிவிப்பு.

🔮ரூ.348 கோடி செலவில் கட்டப்படவுள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

🔮கச்சத்தீவில் மார்ச் 6, 7ல் அந்தோணியார் ஆலயத் திருவிழா: தமிழகத்தில் இருந்து செல்லும் படகுகள் ஆய்வு.

HEADLINES
🔮COVID-19 updates | IMF members pledge all available resources against epidemic.

🔮Govt approves amendments to Companies Act.

🔮ISRO's launch of GISAT-1 postponed due to technical reasons.

🔮Social media curbs lifted in Jammu and Kashmir after 7 months.

🔮Water can associations call off strike as Madras HC directs TN govt to issue valid licenses in 15 days.

🔮CSK has made me better player, helped tackle difficult times: MS Dhoni.                                    🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴