>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்- 16-08-2019



*இன்றைய திருக்குறள்*

*குறள்- 687*

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
 எண்ணி உரைப்பான் தலை.

*பொருள்*:

தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

தர்மம் வகுத்த வழியில் பணம் சம்பாதியுங்கள். வேதம் விதித்த வழியில் வாழ்க்கை நடத்துங்கள்.

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி மற்றும் விளக்கம்*

*பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ*

நாம் அறிந்த விளக்கம் :

விருந்து நடக்கும் இடங்களில் சாப்பாட்டுக்கு முதல் வரிசையும் போரில் கடைசியாளாக இருப்பின் தற்காப்பதற்கு நல்லதும் என நேரிடையாக பொருள் கொள்ளப்படும் அதிக உலக வழக்கில் உள்ள பழமொழியாக இது அறியப்படுகிறது.

விளக்கம் :

இந்த பழமொழியின் உண்மையான வடிவம் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என்பதாகும். இந்தப் பழமொழியை சாதாரணமாக உட்பொருள் கொண்டால் பந்திக்கு அமர்ந்து சாப்பிடுகையில் கை முந்தும். போர்க்களத்தில் வேலோ வாளோ வில்லுக்கோ கை பிந்தும். எவ்வளவு கை பிந்துகிறதோ அந்தளவிற்கு அந்தப் படை முந்தும். இதல்லாது இன்னொரு பொருளையும் இதனூடே சொல்வார்கள். அந்த கால புலவர்கள் உடல் உறுப்புகளைப் பற்றி பாடி வைக்கையில் நமது வலது கையைப் பற்றி சொல்லும்போது பயன்படுத்தப்பட்ட வாக்கியமே இந்த பழமொழி. வில் அம்பு பயன்படுத்தி நடந்த போர்களில் வில்லில் அம்பு வைத்து நான் இழுக்க கை பின்னே போகும். அதே கை உணவருந்தையில் முன்னே போகும். இதை அர்த்தம் கொண்டே இந்த பழமொழி பயன்படுத்தப்பட்டது.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important   Words*

 Plague  பிளேக்

 Boil  இரத்தக் கட்டி

 Pimple  முகப்பரு

 Piles  மூல நோய்

 Diabetes  சர்க்கரை வியாதி

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. ஹெலிகாப்டர் கண்டுபிடித்தவர் யார்?

புரோக்கெட்

2.ரோபோவின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

ஐசக் அசிமோ

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Introducing Yourself and others*

There is a range of ways to introduce yourself and people. Introducing yourself:

Here are expressions to introduce yourself:

My name is ...

I'm ....

Nice to meet you;

Pleased to meet you;

Let me introduce myself

I'd like to introduce myself

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

 *பஞ்சதந்திரக் கதை*

*குளக்கரை மீன்கள்*

 குளக்கரையின் கரையோரத்தில் கொக்கு ஒன்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்று கொக்கிடம் வந்து என்ன கொக்காரே! உமது ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்? என்று கேட்டது. அதற்கு கொக்கு செம்படவன் ஒருவன் வந்து ஒட்டுமொத்தமாக உங்கள் அனைவரையும் பிடித்துச் செல்லப் போகிறான் என்றது.

 இதனைக்கேட்ட அம்மீன் உடனே உள்ளே சென்றுவிட்டது. சில நிமிடம் கழித்து பல மீன்கள் மேலே வந்து கொக்கின் முன்பு துள்ளியது. அனைத்து மீன்களும் கொக்கிடம் வந்து உதவிக்கேட்டன. அதற்கு கொக்கு உங்களை இந்த குளத்திலிருந்து வேறு குளத்திற்கு மாற்றிவிட்டால் வேண்டுமானால் நீங்கள் தப்பிக்க முடியும் என்றதும் மீன்களும் சம்மதித்தது.

 நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது. குளத்திலிருந்த நண்டு ஒன்றிற்கு தானும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. கொக்கிடம் என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுப் போங்கள் என்று கெஞ்சியது. ஒப்புக்கொண்ட கொக்கு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.

 பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு. தன் உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. அதனால் கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால் என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன் என்றது நண்டு.

 ஆஹா! நமக்கு யோகம் அடித்தது என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது. குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

நீதி ;

பிறர் சொல்லும் யோசனைகள் அனைத்தையும் அப்படியே ஏற்பது நன்றன்று.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட உள்ளது என சுதந்திர தின் உரையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

🔮காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறலுக்கு இந்தியா தந்த பதிலடியில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.

🔮ஜப்பானில் நிலநடுக்கம் : ரிக்டரில் 5.4 அளவாக பதிவு.

🔮மிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி.

🔮உலக ஜூனியர் மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் சாம்பியன்

🔮India celebrates 73rd Independence Day.

🔮Independence Day speech: Modi announces Chief of Defence Staff post, Jal Jeevan Mission.

🔮Indian crew aboard Iranian oil tanker released in Gibraltar.

🔮Free rides for women in DTC buses from October 29: Arvind Kejriwal.

🔮Pak’s close ally China asks for ‘closed consultations’ on Kashmir at UNSC.
.......................................