வரலாற்றில் இன்று 12.12.2018
டிசம்பர் 12 கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
627 – பைசண்டைன் பேரரசு இராணுவம் ஹெராகிளியஸ் தலைமையில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன.
1098 – சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.
1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமானது.
1812 – ரஷ்யாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.
1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.
1862 – யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ்.கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.
1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
1901 – அட்லாண்டிக் கடலூடாக முதன் முதலாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் வானொலி சமிக்கைகளை மார்க்கோனி பெற்றார்.
1911 – இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
1923 – இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
1939 – குளிர்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
1940 – இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, ஜப்பான் மீதும் போரை அறிவித்தன.
1941 – அமெரிக்கப் போர்க் கப்பல் வேக் தீவுக் கரைக்கப்பால் நான்கு ஜப்பானியக் கப்பல்களைத் தாக்கி மூழகடித்தது.
1941 – யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அடொல்ஃப் ஹிட்லர் அறிவித்தார்.
1942 – நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
1948 – மலேசியாவில் நிலை கொண்டிருந்த ஸ்கொட்லாந்துப் படையைச் சேர்ந்த 14 பேர் பட்டாங் காலி என்ற இடத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
1963 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.
1979 – ரொடீசியாவின் பெயர் சிம்பாப்வேயாக மாற்றப்பட்டது.
1984 – மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்’அஹமது டாயா புதிய அதிபரானார்.
1985 – கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.
1988 – லண்டனில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
1991 – ரஷ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1997 – களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1863 – எட்வர்ட் மண்ச், ஓவியர் (இ. 1944)
1927 – ராபர்ட் நாய்சு, பொறியியலாளர் (இ. 1990)
1949 – ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர்
1950 – எரிக் மாஸ்க்கின், நோபல் பரிசு மெற்ற அமெரிக்கர்
1981 – யுவராஜ் சிங், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1931 – சௌகார் ஜானகி, தென்னிந்திய நடிகை
இறப்புகள்
1940 – தியாகி விஸ்வநாததாஸ் நாடக நடிகரும், தேசியவாதியும் (பி. 1886)
2006 – இ. இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோஸ் என்ற ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)
சிறப்பு நாள்
கென்யா – விடுதலை நாள் (1963)