கிராமப்புற மாணவர்களும் புதிய தொழில்நுட்ப கல்வி கற்கும் வகையில் அரசுப்பள்ளியில் "ஸ்மார்ட் வகுப்பறை" தொடக்கம்
"SMART CLASS " திறப்புவிழா 13.12.2017 அன்று
கிராமப்புற மாணவர்களும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் கல்வி கற்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - கருங்குழி,குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கடலூர் மாவட்டத்தில் ஏ.சி வசதியுடன்
கூடிய." SMART CLASS" உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு.சவரிமுத்து அவர்களின் தலைமையில், பள்ளி தலைமைஆசிரியர் திரு.அந்தோணி ஜோசப் அவர்களின் முன்னிலையில்தொழிலதிபர் திரு.TRM சாந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தொழிலதிபர் திரு. TRM அவர்கள், பள்ளி தலைமைஆசிரியர்,உதவி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முழு பங்களிப்போடு இவ்வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும்
நன்றி! நன்றி!
🌹18-08-14 தஞ்சை மாநகரில் கல்வி அமைச்சர் மற்றும் முதன்மை கல்வி செயலர் அவர்களால் எமது பள்ளிக்கு மாவட்டத்திலேயே சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
🌹01-04-17 அன்று சைகை ஒலிப்புமுறை படப்பிடிப்பானது தாயெனப்படுவது தமிழ் இயக்குனர் ஜெரோம், கலைமுருகன் மற்றும் ஷாம் அவர்களால் எமது பள்ளியில் படப்பிடிப்பு செய்யப்பட்டது.
🌹தொடக்கப்பள்ளியில் 203 மாணவர்களை கொண்டு சிறப்பானக்கல்வி அளித்துவருகிறோம்.