தனியார் பள்ளி முதல்வர்களுக்கு கருத்தரங்கம் : அமெரிக்க கல்வி முறையை அறிய வாய்ப்பு
அமெரிக்காவில் கிடைக்கும் செயல்முறை கல்வி பயிற்சி வாய்ப்புகள் குறித்து, தனியார் பள்ளி முதல்வர்களுக்கான கருத்தரங்கம், வரும், 9ல், சென்னையில் நடக்கிறது.
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும்'கோ பார் குரு' நிறுவனம் இணைந்து, இதை நடத்துகின்றன.அமெரிக்காவில் உள்ள கல்வி வாய்ப்பு, பள்ளி மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சி மற்றும் மாணவர் கல்வி பரிமாற்ற வாய்ப்புகள் குறித்து, சென்னையில், வரும், 9ம் தேதி, கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.தாஜ் கோரமண்டல் ஓட்டலில், காலை, 9:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, 'எஜு கனெக்ட்' என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடக்கிறது.இதில், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., - ஐ.ஜி.சி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளி முதல்வர்கள் பங்கேற்கலாம்.
'தினமலர்' நாளிதழின், மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்கள்... நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு, தமிழக பள்ளி, கல்லுாரி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்லும், 'கோ பார் குரு' நிறுவனம் இணைந்து, நிகழ்ச்சியை நடத்துகின்றன.அமெரிக்க துாதரகத்தின் கல்வி அதிகாரிகள், 'கோ பார் குரு' நிறுவன, சி.இ.ஓ., காயம்பூ ராமலிங்கம், மதுரை விஸ்வவித்யாலயா குரூப் ஆப் ஸ்கூல்ஸ் முதல்வர், பி.சந்திரசேகரன் ஆகியோர் விளக்கம் தர உள்ளனர்.நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் பெயர்களை, EDUCONNECT@GO4GURU.com என்ற இ- மெயிலிலும், 87542 55117, 99523 53851 என்ற தொலைபேசி எண்ணிலும், முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு கட்டாயம்; அதேநேரம் அனுமதி கட்டணம் எதுவும் இல்லை