சூரியனுக்கு அடுத்த வருடம் ‘நாசா’ விண்கலம் அனுப்புகிறது
15 கோடி கி.மீ. தூரத்தில் இருக்கும் சூரியனுக்கு நாசா நிறுவனம் விண் கலம் அனுப்புகிறது.
பிப்ரவரி 28, 11:44 AM
வாஷிங்டன்,
சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியனாகும். சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப்போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு = 5,88,00,00,000 மைல்கள்).சூரியன்,புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது.
சந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.இந்த நிலையில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மற்ற கிரகங்களை விட கடுமையான வெப்பம் கொண்டது. எனவே அதற்கு ஏற்றாற்போல் விசேஷ விண்கலம் தயாரித்து அனுப்பப்பட உள்ளது. இதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ‘நாசா’ விஞ்ஞானிகளின் முதல் முயற்சி என காட்டார்ட் விண்வெளி மைய விஞ்ஞானி எரிக்- கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார். சூரியனை மிக நெருக்கத்தில் சென்று ஆய்வு செய்ய முடியாது. அதே நேரத்தில் அதன் மேற்பரப்பில் ஆய்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
சூரியனின் சுற்றுப்புற தட்ப வெப்ப நிலை 5,500 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. அதற்கு தகுந்தாற் போன்று வெப்பத்தை தாங்க கூடிய வகையில் விண்கலம் தயாரிக்கப்படும். அது அடுத்த ஆண்டு அதாவது 2018-ல் சூரியனுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது