அறிவியல் வினாக்கள் எளிமை : 'சென்டம்' வாய்ப்பு அதிகம்
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாக்கள் எளிதாக இருந்ததால் ஏராளமான மாணவர் 'சென்டம்' எடுக்க முடியும், என மாணவிகள் கூறினர்.பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வுநேற்று நடந்தது.
அனைத்து பகுதி வினாக்களும் எளிதாக இருந்ததால் இக்கல்வியாண்டில் 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர்.
அனைத்து பகுதி வினாக்களும் எளிதாக இருந்ததால் இக்கல்வியாண்டில் 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர்.
ஆர்.சந்தோஷ்சிவன், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர் நலச்சங்க மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்: பாடங்களை முழுமையாக படித்ததால் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க முடிந்தது. எந்த பகுதியிலும் கடின வினாக்கள் கேட்கப்படவில்லை. விரைவாக எழுதும் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் 40 நிமிடத்தை மிச்சப்படுத்தியிருக்கலாம். பள்ளியில் மாதிரி தேர்வு எழுதி பாடம் முழுவதும் மனப்பாடம் ஆனதால் சென்டம் உறுதி.
எம்.லேகாஸ்ரீ, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாவில் 11 வது வினா மட்டும் புத்தகத்திற்கு உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டதால் பதில் எழுதுவதில் சற்று சிரமம் இருந்தது. ஏனைய பகுதிகளில் அனைத்து வினாக்களும் எளிமை. படிப்பில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள் கூட 75 மதிப்பெண்களுக்கு அதிகம் எடுத்து விடலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள் சென்டம் எடுப்பது உறுதி.
எம்.ஷேக் அப்துல்லா, ஆசிரியர், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: இயற்பியல், உயிரியல், வேதியியல் என அனைத்து பிரிவுகளில் வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. புத்தகத்தை முழுவதும் படித்து தயாரான மாணவர்களுக்கு குழப்பம் தரும் வினாக்கள் எதுவும் இல்லை.மாதிரி தேர்வு எழுதி பார்த்து விடைகளை விரல் நுனியில் வைத்திருந்த மாணவர்கள் நிச்சயமாக 'சென்டம்' எடுப்பர். மெல்ல கற்கும் மாணவர் கூட 80 மதிப்பெண் எளிதாக எடுக்கலாம். கடந்தாண்டை விட இந்தாண்டு வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. இதனால் 'சென்டம்' எடுக்கும் மாணவர்கள்எண்ணிக்கையை கடந்தாண்டை விட அதிகரிக்கும்.