>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 3 டிசம்பர், 2016

ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம் - ஆர்.பி.ஐ. அறிவிப்பு-முழு விவரம்

டெல்லி: வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய வரும் 
ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என ரிசர்வ்
 வங்கி அறிவித்துள்ளது.

ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகள், இணையதள வங்கி சேவைகள்,

 மொபைல் பேங்கிங் உள்ளிட்ட பணப்பரிமாற்றத்திற்கு பின் நம்பர் 
மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனை 
மேற்கொண்டு வருகின்றனர். இந்த சேவைகளுக்கு மாற்றாக
 ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை 
மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பியுள்ள

 சுற்றிக்கையில், வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி
 பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம்
 பயன்படுத்த வேண்டும். டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் 
ஆதார் வழி மட்டுமே செய்ய முடியும். ஆதார் அடையாளங்களை
 உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொறுத்த வேண்டும்.

ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த

 வேண்டும். வங்கிகள், வாடிக்கையாளர்கள் இடையிலான 
கே.ஒய்.சி திட்டத்திற்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்த
 வேண்டும். வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை 
பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 வரும் 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை
 முழுமையாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும்.
 இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

பள்ளிகளில் 'டெக்னோ கிளப்'

மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்க பள்ளிகளில் 'டெக்னோ கிளப்' துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில் தொழில் நுட்ப கழகம் எனும் 'டெக்னோ கிளப்' துவக்க

மாணவர்களின் ஆதார் எண் பதிவு டிச., 20 வரை கெடு.

மாணவர்களின் ஆதார் எண்ணை, டிச., 20க்குள் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது. அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கும், ஆதார் எண் பதிவு செய்து, அதை பள்ளி ஆவணங்களில் குறித்து வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள், இரு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. பல காரணங்களால், பல லட்சம் மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண் கிடைக்கவில்லை.எனவே, ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட, மின்னணு கல்வி மேலாண்மை திட்டமான, எமிஸ் திட்டத்திலும், மாணவர்களின் விபரங்களை, முழுமையாக பதிவேற்ற முடிவதில்லை.
இந்நிலையில், அனைத்து பள்ளி மாணவர்களும் ஆதார் எண் பெறும் வகையில், பள்ளிகளில், தமிழ்நாடு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. யாரும் விடுபடாமல், டிச., 20க்குள், ஆதார் எண் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது.

வியாழன், 1 டிசம்பர், 2016

SLAS 2016 - SCHOOL WISE INVIDUAL RESULTS - ALL DISTRICTS (VELLORE, COIMBATORE, THENI, DHARMAPURI DISTRICTS UPDATED)

BRC level Trainings

#Developing basic skills in teaching of tamil-2days primary
1st Batch-Dec 7&8
2nd Batch-Dec 9&12

#Teaching of maths using SLM kit box-up.pri-3days
Jan-10 to 12

Flash News:⛈ கனமழை - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நாளை (2.12.2016) கீழ்கண்ட 7         
மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

1.விழுப்புரம்(பள்ளிகளுக்கு விடுமுறை)
3.சென்னை (பள்ளிகளுக்கு விடுமுறை)
4.திருவள்ளூர் (பள்ளிகளுக்கு விடுமுறை)
5.காஞ்சிபுரம் (பள்ளிகளுக்கு விடுமுறை)
6.நாகை (பள்ளிகளுக்கு விடுமுறை)
7.கடலூர்  (பள்ளிகளுக்கு விடுமுறை)

செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு!.

பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை  நாளை வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 15-ஆம் தேதி வரை பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு முதலில் அறிவிப்பு செய்திருந்தது. ஆனால் தற்போது பழைய 500 ரூபாய் நோட்டுகளை நாளை வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம்  என்று மத்தியஅரசு 'திடீர்' அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனிடையே வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2.07 காசுகள் உயந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியியல், தமிழ்வழி புவியியல் உட்பட 26 புதிய படிப்புகள் அடுத்த ஆண்டு அறிமுகம்

சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அப் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் 14 ஆயிரம் பேர் பட்டம் பெறுகிறார்கள். தமிழ்நாடு திறந்தநிலைப் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.பாஸ்கரன் 'தி இந்து'வுக்கு சிறப்பு பேட்டியளித் தார்.

பள்ளி மாணவர்களுக்கு யோகா கட்டாயம் மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு.

பள்ளி மாணவர்களுக்கு யோகா கட்டாயம் மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு | நாடு முழுவதும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு யோகாவை கட்டாயப் பாடமாக்குவது குறித்து 3 மாதங் களுக்குள் முடிவெடுக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DECEMBER DIARY

💥💥 *DECEMBER DIARY* 💥💥
🎯 *Dec 3 -GRI DAY & CRC*
🎯 *Dec 12 -R L*
🎯 *Dec 13 - GOVT LEAVE*
             *( Miladi Nabi )*
🎯 *Dec 19 to 23 - Term II EXAM*
🎯 *Dec 24 to Jan 1 - Term II Holidays*
🎯 *BRC LEVEL TAMIL Training  - 2 Days*
🎯 *SLAS TEST*
🎯 *RE OPEN on JAN 2*

பொறுப்பாசிரியர் வங்கி கணக்கில் தேசிய பசுமைப்படை திட்ட நிதி

தலைமையாசிரியர் மேற்பார்வையில் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் திட்ட பொறுப்பாளர்களாக செயல்படுகின்றனர்.
இதற்கு ஆண்டுக்கு 2500 முதல் 5000 வரை நிதி வழங்கி வருகின்றன.இந்த நிதி தலைமையாசிரியரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.பெரும்பாலான பள்ளிகளில் தலைமையாசிரியருக்கும் பொறுப்பாசிரியருக்கும் சுமூக உறவு இல்லை.வெளிப்படை தன்மை இல்லை.எனவே இந்தாண்டு பொறுப்பாசிரியரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

சம்பளத்தில் வருமான வரி பிடித்தமா? : புதிய வசதி அறிமுகம்


வருமான வரி பிடித்தம் செய்யும், டி.டி.எஸ்., திட்டத்தில், புதிய சேவையை, வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது. சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகம், புதுச்சேரி பிராந்திய வருமான வரி முதன்மை தலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, நேற்று, இந்த சேவையை துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: ஊழியர்களிடம், அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலேயே, டி.டி.எஸ்., என்ற முறையில், வருமானத்திற்கு தக்கபடி, மாத சம்பளத்தில் வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது.
படிவம் - 13 : அது தேவையில்லை என, ஊழியர்கள் விரும்பினால், வருமான வரித் துறைக்கும், அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்து, படிவம் - 13ஐ நிரப்பி தரலாம். அந்த வசதியை, இனி தமிழகத்தில், 'ஆன்லைனில்' பெறலாம்.
அதற்காக, www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில், சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில், 'tds (for197)' என்ற பகுதியினுள் நுழைந்து, சம்பளதாரர்கள், தங்களது முந்தைய, இரு ஆண்டு கணக்குகளைபதிவு செய்தால் போதும். அலுவலகத்தில் வரிப் பிடித்தம் செய்வது நிறுத்தப்படும் அல்லது தேவைக்கேற்ப குறைக்கப்படும். இவ்வசதி அறிமுகம் செய்யப்படும், மூன்றாவது மாநிலம், தமிழகம். இந்தியாவை, 'டிஜிட்டல்' மயமாக்க வேண்டும் என, மத்திய அரசு முனைப்பாக செயல்படுகிறது. அந்த வேகத்திற்கு, வருமான வரித் துறையும் ஈடுகொடுத்து வருகிறது. அதற்கு,இப்புதிய சேவையே உதாரணம். கணினிமயமாக்கல் காரணமாக, வரி செலுத்தாத நிறுவனங்களை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூன்றில் ஒரு பங்கு : வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரல், முரளிகுமார் பேசுகையில், ''வருமான வரித் துறைக்கு கிடைக்கும் வருவாயில், மூன்றில் ஒரு பங்கு, டி.டி.எஸ்., மூலமாகவே கிடைக்கிறது,'' என்றார். மேலும்,

ஜியோ சிம் இலவச சேவை வரும் மார்ச் 31 வரை நீடிப்பு..




ரிலையன்ஸ் ஜியோ-வின் 4 ஜி ஆஃபர் மார்ச் 2017- வரை நீட்டிக்கப்படு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ்நிறுவனம் ஜியோ சிம்மின் 4 ஜி அறிமுகச் சலுகை ஆஃபரை டிசம்பர் மூன்றாம் தேதி வரை அறிவித்திருந்தது. இதன்படி அளவற்ற டேட்டா மற்றும்
அளவற்ற அழைப்புகளை ஜியோ 4ஜி சிம் பயனர்கள் இலவசமாக பெறுகிறார்கள். இந்நிலையில் 100 மில்லியன் பயனாளர்களை அடைவதற்காக இந்த சலுகையினை மார்ச் 2017 வரை நீட்டிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராயின் விதிகளின் படி, ஜியோ உள்பட எந்த தொலை தொடர்பு நிறுவனமும் தாங்கள் வழங்கும் சலுகையை 90 நாட்களுக்கு நீட்டிக்கக் கூடாது.

அதனால் ஜியோ வின் இந்த ஆஃபர் நடைமுறைபடுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் ஜியோ ‘வெல்கம் ஆஃபர் ’ என பெயரை மாற்றி இந்த சலுகைகளை மீண்டும் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது

Flash News: ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி ...திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் மட்டுமே வைத்திருக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு தனி நபரும் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
வருமான வரி சட்ட திருத்த மசோதா தொடர்பாக நிதியமைச்சகம் அளித்திருக்கும் விளக்கத்தில், திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 32 சவரன் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம்.
ஆண்களைப் பொறுத்தவரை 12 சவரன் 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்பட மாட்டாது
அதே சமயம், அதிகப்படியாக தங்கம் வைத்திருப்பவர்கள் தங்கள் வருமான வரி கணக்கின் படி வைத்திருந்தால், அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்படாது

Half Pay Salary News - அரை சம்பள விடுப்பு உத்தரவு - விளக்கம்

சமீபத்தில் வந்திருக்கும் Half pay salary government letter ல் அனைத்து படிகளுக்கும் Half pay தான் என கூறப்பட்டுள்ளது அதாவது இது SUPERIOR SERVICE க்கு மட்டும் தான் பொருந்தும் யாரெல்லாம் 6600 GRADE PAY வாங்ஙகுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான்.


தொடக்க நிலை ஆசிரியர்களின் உச்சபச்ச GRADE PAY 5400 தான் மற்றும் Hr.Sec hm GP 5700/-ஆகையால் இதற்கும் நமக்கும் துளி அளவு கூட தொடர்பில்லை நம் ஆசிரியர்களில் யாரும் தேவை இல்லாமல் கவலை பட வேண்டாம் .

புயல் சின்னத்துக்கு பெயர் சூட்டும் வழக்கம் உருவானது பற்றிய சுவாரஸ்ய தகவல்

சென்னை: பிறந்த குழந்தை போல, புயல் சின்னங்களுக்கு பெயர் சூட்டும் வழக்கம் உருவானது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.
      ஒரே சமயத்தில் இரண்டு பகுதிகளில் ஏற்படும் புயல் சின்னங்களை வேறுபடுத்திக் காட்டவே புயல் சின்னங்களுக்கு பெயர் சூட்டும் முறை அறிமுகமானது. இதனை முதன் முதலில் ஆஸ்திரேலியாதான் அறிமுகப்படுத்தியது. இந்த முறையினால் வானிலை ஆய்வு மையங்களின் பணி எளிதானது.
அதுவும், ஆஸ்திரேலியா இந்த புயல்களுக்கு என்ன பெயர்களை வைத்தது தெரியுமா? ஆஸ்திரேலியாவில் மக்களிடம் செல்வாக்குக் குறைந்த அரசியல்வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டி மகிழ்ந்தது.
இந்த முறையை 1954ம் ஆண்டு அமெரிக்காவும் பின்பற்றத்  தொடங்கியது. அமெரிக்கா பின்பற்றத் தொடங்கி சரியாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2004ம் ஆண்டுதான் நாமும் இதனை பின்பற்றத் தொடங்கினோம்.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டும் முறை 2004ல் துவங்கியது.இதற்காக இந்தியா, மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தின.
இவைகள் தாங்கள் விரும்பும் பெயர்களை பரிந்துரைத்து ஒரு பட்டியல் உருவாக்கப்படும். இதில் ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயர் அடுத்தடுத்து சூட்டப்படுகிறது.
வங்கக் கடலில் தற்போது நாடா புயல் உருவாகியுள்ளது.பெயர் வைக்கும் முறை அறிமுகமாகி இது 35வது புயல் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய புயல் பெயர் பட்டியலில் 64 பெயர்கள் இடம்பெற்றுள்ளன

புயலுக்கு பெயரை யார் தேர்வு செய்வது? பெயர் வைப்பதற்கான காரணம் என்ன?

புயலுக்கு பெயரை யார் தேர்வு செய்வது?
பெயர் வைப்பதற்கான காரணம் என்ன?
புயல் சின்னம் உருவாகும் போதெல்லாம், அதற்கு ஒரு பெயர் சூட்டப்படுவது பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். அவற்றிற்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது என்பதை இங்கே காணலாம்.
ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று புயல்கள் உருவானால் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் மனிதர்களைப் போலவே புயலுக்கு பெயர் வைக்கும் முறை உருவானது.
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்திரேலியா தான் இந்தப் பழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தது. ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர் மக்களிடம் செல்வாக்கு குறைந்த அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். பின்னர் 1954-ஆம் ஆண்டு இந்தப் பழக்கத்தை அமெரிக்கா தொடங்கியது.
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில் உருவானது. இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு,‌ மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்த், இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து பெயர் பட்டியலைத் தயாரித்து வருகின்றன.

SLAS QUESTION PAPERS ALL LINKS....UPDATED...



  • SLAS TEST GENERAL POINTS 

ஜனவரியில் TET - PG TRB அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு!

TET தேர்வு ஜனவரியில் நடத்த அதிகாரிகள் ஆலோசனை.முதுகலை ஆசிரியர்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு.

'நாடா' புயல் எச்சரிக்கை: அண்ணா பல்கலை. தேர்வு தள்ளிவைப்பு

'நாடா' புயல் எச்சரிக்கையால் வியாழக்கிழமை அன்று நடைபெற இருந்த தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''புயல் எச்சரிக்கையால் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற இருந்த பொறியியல் தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது.

தேர்வு நடைபெற உள்ள மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நாடா' புயல் எச்சரிக்கை: தமிழக அரசின் 15 அறிவுறுத்தல்கள்

'நாடா' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

15 அறிவுறுத்தல்கள்

1. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.

2. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.


3. புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.

4. கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.

5. தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.

6. நீர்நிலைகள் மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கன மழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.

7. சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.

8. நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்கவும்.

9. குழந்தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்கவும்.

10. மழைநீரில் செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினை வைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

11. மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு உள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.

12. அமைதியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாக எதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும் பயன்படலாம்.

13. அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.

14. மின்கம்பங்களிலிருந்து தளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாக தவிர்க்கவும்.

15. பேரிடரால் பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில் மட்டுமே செல்லவும்.

இவ்வாறு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

மழை விடுமுறை விழித்துக்கொண்ட கல்வித்துறை...!!

புயல் காரணமாக மழை பெய்யப்போகிறது என்ற முன்னெச்சரிக்கையே விவசாயிகள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்னொரு புறம் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது மாணவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வழக்கமாக கனமழை