>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 28 அக்டோபர், 2016

பி.எஸ்.எம்.எஸ்., 'ரேண்டம்' எண்

அரசு மற்றும் தனியார், இந்திய முறை மருத்துவக் கல்லுாரிகளில், நடப்பாண்டு பி.எஸ்.எம்.எஸ்., - பி.ஏ.எம்.எஸ்., - பி.யு.எம்.எஸ்., - பி.என்.ஒய்.எஸ்., - பி.எச்.எம்.எஸ்., ஆகிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது.
தர வரிசை பட்டியல் மற்றும் ரேண்டம் எண்,'www.tnhealth.org'என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களுக்கு, அழைப்புக்கடிதம் மற்றும் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது.

எம்.டி., சித்தா 31ல் கலந்தாய்வு

எம்.டி., சித்தா, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, ஒற்றை சாளர முறை கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம், அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள, தேர்வுக் குழு அலுவலகத்தில், 31ல் நடைபெற உள்ளது. அன்று காலை, 11:00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வு தகவல், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, கடிதம் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப் பெறாதோர், 'www.tnhealth.org' என்ற இணையதளத்தில், அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள், கலந்தாய்வு நாளில், அசல் சான்றிதழ்களுடன், 5,500 ரூபாய்க்கான, 'டிடி'யுடன் கலந்து கொள்ள வேண்டும். 'அன்றைய தினமே, சான்றிதழ்களை சமர்ப்பித்து, கல்லுாரியில் இணைந்து கொள்ள வேண்டும்' என,இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

மின்வாரிய நேர்முக தேர்வு இடைத்தேர்தலால் ஒத்திவைப்பு.

இடைத்தேர்தலை முன்னிட்டு, ஊழியர் நியமன நேர்முகத் தேர்வை, மின் வாரியம் ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து,தமிழ்நாடு மின் வாரியம் விடுத்த செய்திக் குறிப்பு:
காலி பணியிடமாக உள்ள,25 சுருக்கெழுத்து தட்டச்சர், 25 இளநிலை தணிக்கையாளர்,50 உதவி வரைவாளர் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு, நவ., 2, 4, 5, 7ம் தேதிகளில் நடக்கும் என, இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலுக்கான நடத்தை விதி அமலில் உள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. புதிய தேதி, 19ம் தேதிக்கு பின் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம், கடந்த, 17ல் அறிவித்தது. அன்று முதல், மூன்று மாவட்டங்களிலும் நடத்தை விதி அமலுக்கு வந்தது. ஆனால், மின் வாரியம், நேர்முகத் தேர்வு அறிவிப்பை, நேற்று முன்தினம் தான் வெளியிட்டது. திடீரென தேர்தலை காரணம் காட்டி, நேற்று தேர்வை ஒத்திவைத்து உள்ளது.

CBSE., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்து

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு நடத்தப்படும், இரட்டை தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. கடந்த, 2010 முதல், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு இரண்டு வகையில், ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 1 தொடர விரும்புவோருக்கு, பள்ளி அளவில் மட்டும், 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும். 10ம் வகுப்புக்கு பின், பிற பாடத்திட்டத்தில் சேர விரும்புவோருக்கு, பொது தேர்வு நடத்தப்படும். ஆனால், பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,யில் பொது தேர்வு எழுதியவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தன. இதுகுறித்து, மத்திய அரசு அமைத்த சிறப்புக் குழு ஆய்வு செய்தது. அதில், பள்ளி அளவிலான தேர்வில் தரம் குறைவு என, தெரிய வந்தது.
எனவே, பள்ளி அளவிலான தேர்வுக்கு முடிவு கட்ட, தமிழகம் மற்றும் மஹாராஷ்டிர மாநில சி.பி.எஸ்.இ., பள்ளிகள் வலியுறுத்தின. பெரும்பாலான ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகிகளும், பள்ளி அளவிலான தேர்வு வேண்டாம் என, ஆய்வுக் குழுவிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளி அளவிலான தேர்வை ரத்து செய்ய, மத்திய அரசுக்கான கல்வி ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கும், 10ம் வகுப்பில், பொது தேர்வு மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்டம் ரத்து.

ஐந்தாம் வகுப்பு முதல், கட்டாயமாக ஆண்டுஇறுதி தேர்வு நடத்தவும், 'ஆல் பாஸ்' திட்டத்தை நீக்கவும், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, தேர்வின்றி ஆல் பாஸ் செய்வது அமலில் உள்ளது.
இதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்புகள் உள்ளன. மத்திய அரசு நடத்திய ஆய்விலும், இத்திட்டத்தால், பல மாணவர்கள், அடிப்படை கல்வியே தெரியாமல், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறுவது தெரிய வந்தது. எனவே, ஆல் பாஸ் திட்டத்தை, நான்காம் வகுப்போடு நிறுத்தி, ஐந்தாம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. டில்லியில், சமீபத்தில் நடந்த, மாநில கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், ஆல் பாஸ் திட்டத்திற்கு, சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், ஐந்தாம் வகுப்பில் தேர்வு வைக்கும் திட்டத்தை, மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என, மத்திய அரசின் கல்வி ஆலோசனைக் குழு, தெரிவித்து உள்ளது.
ஆல் பாஸ் திட்டம் ரத்தானால், ஐந்தாம் வகுப்பு, ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஆறாம் வகுப்புக்கு மாணவர்கள் செல்ல முடியும். ஆறு, ஏழாம் வகுப்புகளில், பள்ளி அளவிலும், எட்டாம் வகுப்பிற்கு மாவட்டம் அல்லது மாநில அளவிலும் தேர்வு நடத்தப்படும்.தேர்ச்சி பெறாவிட்டால், துணை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் அதேவகுப்பில், ஓராண்டு படிக்க வேண்டும்.

EMIS பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்

பள்ளி மாணவர்களுக்கு, ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கும், 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை திட்டத்தில், மாணவர் மற்றும் பள்ளி பெயர்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு நிதியுதவியுடன், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மூலம், 'எமிஸ்' கல்வி மேலாண்மை தொழில்நுட்ப திட்டம், அமலுக்கு வந்துள்ளது.
இத்திட்டத்தில், மாணவர்களின் பெயர், படிக்கும் பள்ளி, வகுப்பு, முகவரி, பெற்றோரின் மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இப்பதிவில், மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு, புதிய மாணவர்களின் விபரங்களை சேர்த்தல், பள்ளிமாறிய மாணவர் விபரங்களை மாற்றுதல் போன்ற பணிகளுக்கு, பள்ளிகளுக்கு இம்மாத இறுதி வரை கெடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த பணிகளை முடிக்கவில்லை.
ஆசிரியர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி அளிக்கும், எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள், கணினியை இயக்கவும், மாணவர் விபரங்களை பதியவும் பயிற்சி அளிக்கவில்லை என, ஆசிரியர்கள் குமுறுகின்றனர். பயிற்சி அளிக்காமல், எமிஸ் திட்டத்தில் மாணவர் பெயர்களை பதிவு செய்ததால், பல மாவட்டங்களில், மாணவர்களின் பெயரும், அவர்கள் படிக்கும் பள்ளியும் மாறி, மாறி பதிவாகி உள்ளது. அதனால், ஆசிரியர்கள், தனியார் கணினி மையங்களை அணுகி உள்ளனர். கட்டண அடிப்படையில், அங்குள்ள ஊழியர்கள், கல்வித் துறையின் இணையதளத்தில், பெயர்களை பதிவு செய்கின்றனர். வரும் காலங்களிலாவது, இது போன்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எதிர்பார்ப்பு.

பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது.
இதன்படி, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, அரசு உத்தரவிட்டது. அரசு உதவிபெறும் பள்ளி கள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 2011க்கு பின் நியமனம் செய்யப்பட்டவர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வை முடிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம், வரும் நவம்பருடன் முடிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில், இட ஒதுக்கீடு சலுகை வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதனால், புதிதாக ஆசிரியர்தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. அடுத்த மாதத்தில் அவகாசம் முடிவதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தங்கள் வேலை பாதிக்கப்படுமோ என, கவலையில் உள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து, தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்காததால், பல இடங்களில், தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை முடிப்பதற்கான கால அவகாசத்தை, 2020 வரை நீட்டித்து, அரசாணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Dear teachers kindly fill this form..

 Teachers Happy to share with all of you that I am attending UNESCO international meet from 31st October to 4th November. I wish to showcase all the teachers collaborative work and varied interest of teachers for that I need all the details of hard and smart working teachers like you kindly fill in this form.
 ஐ.  நா. மன்றம் UNESCO   31.10.2016 முதல் 4.11.2016 வரை  நடத்தும் பன்னாட்டு   கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அக்கருத்தரங்கில் எனக்கு பேச 10  நிமிடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.அவ்வமயம் வகுப்பரையில் மாணவர்களின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் அனைத்து ஆசிரிய்ரகளைப் பற்றியும் எடுத்துரக்கலாம் என உள்ளேன். அதற்கு இந்த விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யுங்கள். ஆசிரியர்களின்  திறமை  உலகறியச் செய்வோம்.
 CLICK HERE TO VIEW FORM..

பத்தாம் வகுப்பு - பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்பட்டியலை தயாரிப்பதை விரைந்து முடிக்கவேண்டும் !!

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணிக்கான மாதிரி வினா-விடை - 38: ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் அறிவோம் !!

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. இவைத்தவிர மேலும் சில எழுத்துக்களும் தரப்பட்டுள்ளன. தெரிந்து தெளிவு பெறுங்கள்.
ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.
உதாரணமாக தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ் மாதங்களில் வரும் மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும்.

இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதே ஒரேழுத்து ஒரு மொழியாகும்.
ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்
அ - சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ - பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
இ - சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ - பறக்கும் ஈ, தா, குகை, தேனீ, கொடு.
உ - சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
ஊ - இறைச்சி, உணவு, ஊன், தசை
எ - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ - அம்பு, உயர்ச்சிமிகுதி
ஐ - அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை, ஐந்து, வியப்பு
ஒ - மதகு, (நீர் தாங்கும் பலகை), வினா.
ஔ - பூமி, ஆனந்தம்
க - வியங்கோள் விகுதி
கா - காத்தல், சோலை
கி - இரைச்சல் ஒலி
கு - குவளயம்
கூ - பூமி, கூவுதல், உலகம்
கை - உறுப்பு, கரம்
கோ - அரசன், தந்தை, இறைவன்
கௌ - கொள்ளு, தீங்கு
சா - இறத்தல், சாக்காடு, மரணம், பேய், சாதல்
சீ - லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல், திருமகள்
சு - விரட்டுதல், சுகம், மங்கலம்
சே - காலை, எருது, அழிஞ்சில் மரம்
சை - அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ - மதில், அரண்
ஞா - பொருத்து, கட்டு
தா - கொடு, கேட்பது
தீ - நெருப்பு , தீமை
து - உண் கெடு, பிரிவு, உணவு, பறவை இறகு
தூ - வெண்மை, தூய்மை
தே - கடவுள், நாயகன், தெய்வம்
தை - தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா - நான், நாக்கு
நி - இன்பம், அதிகம், விருப்பம்
நீ - முன்னிலை ஒருமை, நீக்குதல்
நூ - யானை, ஆபரணம், அணி
நே - அன்பு, அருள், நேயம்
நை - வருந்து, நைதல்
நோ - துன்பப்படுதல், நோவு, வருத்தம்
நௌ - மரக்கலம்
ப - நூறு
பா - பாட்டு, கவிதை, நிழல், அழகு
பூ - மலர்
பே - மேகம், நுரை, அழகு, அச்சம்
பை - கைப்பை, பாம்புப் படம், பசுமை, உறை
போ - செல், ஏவல்
ம - சந்திரன், எமன்
மா - பெரிய, சிறந்த, உயர்ந்த, மாமரம்
மீ - மேலே , உயர்ச்சி, உச்சி, ஆகாயம், உயரம்
மூ - மூப்பு, முதுமை, மூன்று
மே - மேல், மேன்மை
மை - கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ - மோதல், முகர்தல்
ய - தமிழ் எழுத்து என்பதின் வடிவம்
யா - ஒரு வகை மரம், யாவை, இல்லை, அகலம்
வ - நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
வா - வருக, ஏவல், அழைத்தல்
வி - அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ - மலர் , அழிவு, பறவை
வே - வேம்பு, உளவு
வை - வைக்கவும், கூர்மை, வைக்கோல், வைதல், வைத்தல்
வௌ - வவ்வுதல், கௌவுதல், கொள்ளை அடித்தல்
நொ - நொண்டி, துன்பம்
ள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

வியாழன், 27 அக்டோபர், 2016

அகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாகவழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டையில்வருகின்றதீபாவளிக்குமுன்பாகஅகவிலைப்படிஉயர்வைஅறிவித்துவழங்கவேண்டும்என்பனஉள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்திஅரசுஊழியர்கள்புதுக்கோட்டைமாவட்டத்தில்60-க்கும்மேற்பட்டஇடங்களில்புதன்கிழமையன்றுஆர்ப்பாட்டங்களைநடத்தினர்.
புதுக்கோட்டைமாவட்டஆட்சியர்அலுவலகவளாகத்தில்நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்குதமிழ்நாடுஅரசுஊழியர்சங்கமாவட்டத்தலைவர்கே.ஜெயபாலன்தலைமைவகித்தார்.கோரிக்கைகளைவிளக்கிமாவட்டச்செயலாளர்சி.கோவிந்தசாமி,பொருளாளர்கே.நாகராஜன்மற்றும்நிர்வாகிகள்கு.சத்தி,மலர்விழி,ரெங்கசாமி,மு.முத்தையா,ஆர்.சுப்பிரமணியன்உள்ளிட்டபலர்கலந்துகொண்டனர்.தீபாவளிக்குமுன்பாகஅகவிலைப்படிஉயர்வைவழங்கவேண்டும்.ஊதியக்குழுவைஉடனடியாகஅமைக்கவேண்டும்.சிபிஎஸ்திட்டத்தைரத்துசெய்யவேண்டும்.முதல்வர்அறிவித்தபடிமகப்பேறுவிடுப்பை9மாதமாகஅமுல்படுத்தவேண்டும்.புதியபென்சன்திட்டத்தைரத்துசெய்யவேண்டும்என்பனஉள்ளிட்டபல்வேறுகோரிக்கைகள்எழுப்பப்பட்டன.

பிளஸ் 1 படிக்கும் மாணவிகள் மவுலானா ஆசாத் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் வசிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவிகளுக்கு, மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
இது 2 தவணைகளில் பிளஸ் 1-ல் ரூ.6 ஆயிரம், பிளஸ் 2-ல் ரூ.6ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற, 2016-17-ம் கல்வியாண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயில்பவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாகவும் இருத்தல் வேண்டும்.சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சிறு பான்மை மாணவியர் இக்கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தை www.maef.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: மாநிலங்களின் முடிவுக்கு விட்டது மத்திய அரசு

பள்ளி மாணவர்களுக்கு 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தேர்ச்சி அளிக்கும் கொள்கை தொடர்பான இறுதி முடிவை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமே விட்டுவிடுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் தில்லியில் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், "8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை கடைப்பிடிக்கப்படுவதால் கல்வித் தரம் குறைகிறது. எனவே, 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெறவைப்பது தொடர்பாக இறுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்' என்று பல்வேறு மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜாவடேகர் கூறியதாவது: மாநில அரசுகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக உரிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும். அது வரை 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கை தொடர்பான இறுதி முடிவை மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளலாம்.
மாநிலக் கல்வி வாரியத்தில் ஏற்கெனவே 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு உள்ளது. அதேபோல மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திலும் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பான திட்டம் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும். மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தை அடிக்கடி நடத்த வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு கல்வித் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் அளிப்பதில் முதன்மையானது மத்திய கல்வி ஆலோசனை வாரியமாகும். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, விஜய் கோயல், மகேந்திர நாத் பாண்டே, உபேந்திர குஷ்வாஹா, 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள், மாநிலப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

"ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை'

குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிக்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார். மேலும், ஆதார் எண்ணை இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் நிறுத்தப்படும் என்று வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.
சென்னையில் உள்ள அமுதம், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அமைச்சர் ஆர்.காமராஜ் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் நகர்வு செய்துமுடிக்கப்பட வேண்டும். மாத ஒதுக்கீட்டின்படி பொருள்கள் நகர்வு செய்து முடிக்க வேண்டும். மேலும், அத்தியாவசியப் பொருள்கள் சீரான முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வது உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆதார் எண் பதிவு: ஆதார் எண் பதிவுகள் மேற்கொள்ளாத அட்டைதாரர்களுக்கு பொருள்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது. இந்தப் பணிகளுக்கு காலநிர்ணயம் செய்யப்படவில்லை. ஆதார் எண்ணை இணைக்காதோரும் பொருள்கள் வழங்குவதற்கு வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.
பொருள் தேவைப்படாத அட்டைதாரர்களும்...:
எந்தப் பொருளும் தேவைப்படாத குடும்ப அட்டை ("என் கார்டு') வைத்துள்ளோர், குடும்ப அட்டை காலக்கெடு (31.12.16 வரை) நீட்டிப்பு பிரதி, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் தங்கள் பகுதிக்குரிய நியாய விலைக் கடைக்குச் சென்று செல்லிடப்பேசி உள்ளிட்ட சுயவிவரக் குறிப்புகளைக் கூறி ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றார்.ஆய்வின்போது உணவு பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் மதுமதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... நம்புங்க!

மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவரின் ஓய்வூதியம், தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தை விட குறைவாக உள்ளது.மதுரையில், மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகத்தில், பெண் ஊழியர் ஒருவர் 1990ல் தினக்கூலியாக சேர்ந்தார்; 1993ல் பகுதிநேர பணியாளராக நியமிக்கப்பட்டார்.
பின், 2008 ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, 2015 மே மாதம் ஓய்வு பெற்றார்.அப்போது, அவரது பணப்பலனில் 60 சதவீதம் வழங்கப்பட்டது.மீத தொகையை (ரூ.ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 33) ஓய்வூதியத்திற்காக எல்.ஐ.சி., 'ஜீவன் அக் ஷயா -6' திட்டத்தில் டிபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து, எல்.ஐ.சி., சார்பில் அந்த ஊழியருக்கு பத்திரம் கொடுத்துள்ளனர். அதில், 'டிபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு மாத ஓய்வூதியமாக ரூ.770 வழங்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் பெறும் ஆதரவற்றவர்களுக்கு, மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது; ஆனால், மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியருக்கு, மாத ஓய்வூதியம் ரூ.770 தான் கிடைக்கிறது.திண்டுக்கல்லை சேர்ந்த ஏங்கல்ஸ் கூறியதாவது: மத்திய அரசில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து, ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை டிபாசிட் செய்தவருக்கு, மாதம் ரூ.770 தான் என்பது வேதனைக்கு உரியது. இந்தத் தொகையும், 20 ஆண்டுகள் ஆனாலும் உயரப்போவது இல்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.

மின் வாரிய ஊழியர்கள் மின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு.நியமனம் : நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு.

இளநிலை தணிக்கையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, ஊழியர்களை நியமிக்க, மின் வாரியம், நேர்முகத் தேர்வு நடத்த உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட, 2,175 காலி பணியிடங்களை நிரப்ப, ஜூலை, ஆக., மாதங்களில், எழுத்துத்தேர்வு நடத்தியது. 
அதில், கள மற்றும் தொழில்நுட்ப உதவியாளர், 1,425 பணியிடங்கள் தவிர்த்து, மற்ற பதவிகளுக்கான, எழுத்துத்தேர்வு மதிப்பெண் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மூன்று பதவிகளுக்கு, நேர்முகத் தேர்வு தேதியை, மின் வாரியம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 25 டைப்பிஸ்ட் - நவ., 2லும்; 50 - உதவி வரைவாளர், நவ., 4, 5லும்; 25 - உதவி தணிக்கையாளர் பதவிக்கு, நவ., 7லும், நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேர்காணல் நடக்க உள்ளது; இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மற்ற பதவிகளுக்கான நேர்காணல் தேதி, விரைவில் அறிவிக்கப்படும்' என்றார்.

அரசு பள்ளிகளில் 'கழிப்பறை வசதி' கணக்கெடுப்பு

மதுரை, திண்டுக்கல், தஞ்சை மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் குறித்து கல்வி அதிகாரிகள் அவசர ஆய்வில்ஈடுபட்டுள்ளனர். 'தினமலர்' நாளிதழில் 2014 ஆக., 8ல் வெளியான செய்தி அடிப்படையில், மதுரை உயர் நீதிமன்றத்தில்தாக்கலான வழக்கு ஒன்றில், 'அக்.,27ல் திண்டுக்கல், தஞ்சையிலும், அக்.,31ல் மதுரை மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதியை 'வழக்கறிஞர் கமிஷனர்கள்' ஆய்வு செய்ய வேண்டும்' எனஉத்தரவிடப்பட்டது.
இதன்படி, இம்மூன்று மாவட்டங்களிலும் கல்வி அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி, கழிப்பறை விபரங்களை உடனடியாக தெரிவிக்க டி.இ.ஓ.,க்கள், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர். இதற்காக பிரத்யேக படிவம் தயாரித்து, 'பள்ளி, மாணவர் எண்ணிக்கை விபரம், பள்ளியில் பயன்பாட்டில் உள்ள கழிப்பறை எண்ணிக்கை, தண்ணீரின்றி பயன்படுத்த முடியாத கழிப்பறை எண்ணிக்கை, கூடுதல் கழிப்பறை தேவைப்படும் பள்ளிகள், கட்டட இடவசதி உள்ள பள்ளிகள்...' என விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
புதிய சிக்கல்: கழிப்பறை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர் அளித்த விபரங்கள் அடிப்படையில்தான் பயன்பாட்டில் உள்ள கழிப்பறை எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. அரசு பள்ளிகளில் 'கழிப்பறை பிரச்னை' எழும்போதெல்லாம், இந்த ஆதாரங்களைதான் கல்வித்துறை தெரிவித்தது.ஆனால், தற்போது 'வழக்கறிஞர் கமிஷனர்கள்' பள்ளிகளில் ஆய்வு செய்து, உண்மை நிலவரத்தை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால்,கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதிகாரி ஒருவர் கூறியதாவது:கழிப்பறை பயன்பாட்டில், அடிப்படையிலேயே குழப்பம் நீடிக்கிறது. மாணவர், கழிப்பறை விகிதம் குறித்து அனைவருக்கும் கல்வி திட்டத்திலும் (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்திலும் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மாறுபடுகிறது. உயர்கல்வி அதிகாரிகளும் இதுகுறித்து தெளிவான விபரம் தெரிவிக்கவில்லை.தலைமை ஆசிரியர்கள் கொடுத்த விபரம் அடிப்படையில்தான் கழிப்பறை செயல்பாடு குறித்து முடிவு எடுக்கப்பட்டது; பலர் தவறான தகவல்களை அளித்துள்ளனர். இதனால், 'வழக்கறிஞர் கமிஷனர்கள்' சென்று பார்ப்பதற்குள் மீண்டும் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறிய பழுது,தண்ணீர் இல்லாததால் பயன்படாமல் உள்ள கழிப்பறைகளை, இரண்டு நாட்களுக்குள் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Flash News:மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 2% அகவிலைப்படியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

RTI LETTER : ஒரே கல்வியாண்டில் M.A மற்றும் B.ED படித்தவருக்கு ஊக்க ஊதியம் வழங்க அரசாணை இல்லை

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல்.

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினை முன் வைத்தனர்.இருதரப்பு வாதத்தையும் தொடர்ந்து இரு நாட்களில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இருதரப்பும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு இன்று தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது.
மேலும் TET தேர்வு முறையில் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு தனது வாதத்தில் முன்வைத்துள்ளது.
இருதரப்பும் தனது அஎழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்த உடன், இதனை தொடர்ந்து அனைவரும் எதிர் நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.