வியாழன், 30 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
கட்டியணைத்து வாழ்த்திய குழந்தைகள்.... இதுதான் விருது!" தேசிய நல்லாசிரியர் ஸதி டீச்சர்
மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின்
பிறந்த நாளான செப்டம்ர் 5-ம் தேதி, தேசிய ஆசிரியர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அதையொட்டி, மத்திய-மாநில அரசுகள் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து கெளரவப்படுத்தும். இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோர் பட்டியலில், தமிழகத்திலிருந்து கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ஸதி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராடி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இவர். வாழ்த்துடன் உரையாடினோம்.
``என் பூர்வீகம், கோத்தனூர். அப்பா கல்வித்துறையில் வேலை பார்த்தார். நானும் என் அக்காவும் கல்வித்துறையிலேயே பயணிக்க ஆசைப்பட்டார். 1995-ம் ஆண்டு, டிஆர்பி (ஆசிரியர் தகுதித்தேர்வு) எழுதி, ஆசிரியராகத் தேர்வானேன். சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தின் அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியைப் பணியைத் தொடங்கினேன். பல பள்ளிகளுக்கு இடமாறுதலாகி, 2009-ம் ஆண்டில், தலைமை ஆசிரியை ஆனேன். இந்தப் பள்ளிக்கு வந்தது 2012-ம் ஆண்டு.
நான் வொர்க் பண்ணின எல்லாப் பள்ளிகளிலுமே, மாணவர்கள் நல்ல சுற்றுப்புறச் சூழலில் படிக்கணும். அவர்களின் கல்வித்தரம் உயரணும் என்பதில் கவனமா இருப்பேன். பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பலரின் உதவிகளுடன் மேம்படுத்தியிருக்கிறேன். இந்தப் பள்ளிக்கு வந்தபோது, வகுப்பறையும் கட்டடங்களும் பழுதாகி இருந்தன. கழிவறை வசதி சரியில்லை. இவற்றைச் சரிசெய்ய களம் இறங்கினேன். மாணவர்களுக்குக் கழிவறை வசதியை ஏற்படுத்த, எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் நிதி போதுமானதா இல்லை. எங்க கிராமத்தில் உள்ள எல்.என்.டி கம்பெனி நிர்வாகத்திடம் உதவி கேட்டேன்.
அவங்க கொடுத்த 5 லட்சம் நிதியுதவியால், தரமான கழிவறை வசதியை உருவாக்கினோம். அந்த முதல் வெற்றி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. அப்போது, 146 மாணவர்கள் இருந்தாங்க. மாணவர்கள் இடைநிற்றலும் அதிகமா இருந்துச்சு. இந்தக் கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் எங்க ஸ்கூல்ல படிக்கிறாங்க. அவங்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது சவாலாக இருந்துச்சு. இதை எல்லாம் மாற்றி, தனியார் பள்ளிக்கு இணையா கொண்டுவரும் முயற்சியில் இறங்கினோம்'' எனப் பெருமிதத்துடன் தொடர்கிறார் ஸதி.
``நிறைய நிறுவனங்களின் உதவியை நாடினோம். எல்.என்.டி நிறுவனம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுக் கட்டடங்களைக் கட்டிக்கொடுத்தாங்க. டேப்லெட் பயன்பாட்டுடன், ஸ்மார்ட் கிளாஸ் வசதி மற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் உட்பட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகளைச் செய்துகொடுத்திருக்காங்க. `மெஷர் கட்டிங்' என்ற நிறுவனம், சுகாதாரமான குடிநீர் வசதி, கணினி பயிற்சி வசதிகளைச் செய்துகொடுத்தாங்க. வி.கே.சி நிறுவனத்தினர்,
ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் எல்லோருக்கும் புது ஷூ, பெல்ட், டை, ஐடி கார்டு கொடுத்து உதவுறாங்க. ஃபர்னிச்சர் உதவிகளையும் செய்றாங்க. இவர்களின் உதவியால், சில ஆண்டுகளிலேயே எங்க பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாச்சு. இப்போ 270 மாணவர்கள் படிக்கிறாங்க. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் மாணவர்கள் சிறப்பா இருக்காங்க. 42 வட மாநில மாணவர்களின் தமிழ்ப் பேச்சும் இனிமையா இருக்கும். யோகா, கராத்தே, இசைப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி உட்பட பல பயிற்சிகள் கொடுக்கிறோம். பல போட்டிகள்லயும் மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுவருகிறாங்க" என்கிறார்.
பள்ளி மாணவர்களால் சிறப்பாக நடைபெற்றுவரும் `குட்டி கமாண்டோ' திட்டம் பற்றிக் குறிப்பிடும் ஸதி, ``எங்க கிராமத்தில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால், பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுச்சு. பல குழந்தைகள் சரிவர பள்ளிக்கு வராம இருந்தாங்க. இதைத் தடுக்க, `குட்டி கமாண்டோ' என்ற படையை உருவாக்கினேன். அந்தப் படையில் 10 மாணவர்கள் வீரர்களாக இருக்காங்க. அவங்க தினமும் காலையில 5.30 மணிக்கும், மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்குள் விசிலடித்தபடி வலம்வருவாங்க. அதனால்,
பலரும் பொதுவெளியில் மலம் கழிப்பதில்லை. மீறிக் கழிப்பவர்களிடம், `பொதுக்கழிப்பிட வசதி அல்லது தனிக்கழிப்பிட வசதியைப் பயன்படுத்துங்க. இல்லையெனில் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்'னு சொல்வாங்க. இந்தத் திட்டம் பெரிய அளவில் வெற்றிபெற்றிருக்கு. அடுத்து, பிளாஸ்டிக் பை பயன்பாடில்லா கிராமம் என்ற முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்" எனப் புன்னகைக்கிறார் ஸதி.
இவர், கடந்த ஆண்டு மாநில அளவிலான `சிறந்த நல்லாசிரியர் விருது' வென்றது குறிப்பிடத்தக்கது. ``தேசிய நல்லாசிரியர் விருது செய்தி கிடைச்சதும், நான் செய்துவரும் அறப்பணியை ஊக்கப்படுத்துவதாகவும், மற்ற ஆசிரியர்களுக்குத் தூண்டுகோலாகவும் இந்த விருது அமையும்னு நினைச்சேன். விருது செய்தியைக் கேள்விப்பட்டு, பல குழந்தைகள் எனக்கு போனில் வாழ்த்துச் சொன்னாங்க. எதிர்பாராத அவர்களின் வாழ்த்துகளால் நெகிழ்ந்துபோனேன். இன்னைக்குப் பள்ளி தொடங்கினதும், பிரேயர்ல விருது செய்தியைக் குழந்தைகள் எல்லோரிடமும் சொன்னேன். என்னைக் கட்டியணைத்து வாழ்த்துச் சொன்னாங்க. இதுவே சிறந்த விருதா நினைக்கிறேன். சீக்கிரமே குழந்தைகளுக்குப் பிரியாணி விருந்து கொடுத்துக் கொண்டாட ஆசைபடறேன்" என்கிறார் ஆசிரியை ஸதி.
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018
2017 ஆம் ஆண்டிற்கான தமிழகத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருது ..!புதிய தலைமுறைக்கு பேட்டி.
நாடு முழுவதும் சிறந்த ஆசிரியர்களுக்கான 2017 - 18 விருதுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
2017 ஆம் ஆண்டிற்கான தமிழகத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருது ..! மத்திய அரசு அறிவிப்பு
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்னன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 யை ஆசிரியர் தினமாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த நாளை, நாடும் முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறோம்.
டாக்டர் ராதாகிருஷ்னன் அவர்கள் ஆசிரியர் பணியை மிகவும் விரும்பி செய்ததால், அவருடைய பிறந்தநாளை ஆசிரியர் தினமாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், அந்த நாளில் நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், அனைத்து மாநிலங்களுக்கும் தலா 20 ஆசிரியர்களுக்கும் மேல், விருது வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே, தகுதியற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படுவதை தடுக்க, இந்த ஆண்டு முதல், நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும் என மனிதவள மேம்பாட்டு துறை சமீபத்தில் தெரிவித்தது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 23 என்று எண்ணிக்கையில், மத்திய அரசால் ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு 1 அல்லது 3 நபர்களுக்கு மட்டுமே மத்திய அரசின் ஆசிரியர் விருது கிடைக்கும் என்ற நிலை உருவாக்கியது. இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டிற்கான, தமிழகத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பணிபுரியும் ஸதி என்ற ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர் ஸதி அவர்கள் தெரிவிக்கையில், இந்த விருதை தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். இந்த விருதால், தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். மேலும் இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன எனவும் அந்த ஆசிரியை தெரிவித்தார். மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது ஆரம்ப கல்வியுடன் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத்தருகிறோம் - தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான கோவையை சேர்ந்த ஸதி புதிய தலைமுறைக்கு பேட்டி.
தமிழகத்திற்கு பொதுவாக கடந்த வருடம் வரை 23 விருதுகள் வரை கிடைக்கும். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த மாற்றத்தினால், இந்த வருடம் ஒரே ஒரு விருது மட்டும் தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Emis ல் student list ல் தலைமையாசிரியரால் சரிபார்க்கப்பட வேண்டியவை
Emis ல் student list ல் தலைமையாசிரியரால் சரிபார்க்கப்பட வேண்டியவை ஒரு மாணவனுக்கு 25 கலங்களும் சரிபார்த்து சரிசெய்யப்பட வேண்டும்.
ஆதார் அட்டை இருந்தால் அதில் உள்ளவாறு spelling இருக்க வேண்டும்
ஆதார் அட்டையில் தவறு இருக்கும் பட்சத்தில் நீங்கள் சரியான எழுத்துக்களை பதிவிடுங்கள்
பிறந்த தேதி ,மாதம், ஆண்டை சரிபார்க்கவும்
சாதி, சாதியின் உட்பிரிவு சரியாக உள்ளதா என பார்க்கவும்
ஆண்,பெண் சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்
blood group இருந்தால் சரியாக குறிப்பிடவும்..இல்லை எனில் N/A என கொடுக்கவும்..நீங்களாக ஒரு group ஐ பதிவு செய்ய வேண்டாம்
தாய்,தந்தை பெயர் spelling சரியாக உள்ளதா என பார்க்கவும்
கதவு எண், தெரு பெயர், ஊர்,நகரம், பின்கோடு ஆகியவற்றை சரிபார்க்கவும்
admit date, admission number ஆகியவற்றை சரிபார்க்கவும்
Tamil medium,english medium சரியாக உள்ளதா என பார்க்கவும்
தவறுகளுக்கு இடமின்றி மிகச்சரியான பதிவுகளை சரிசெய்ய இதுவே இறுதி வாய்ப்பு
புவி வெப்பமயமாதல்: இந்தியாவுக்கு எச்சரிக்கை
புதுடில்லி: வெப்பமயமாதலை கட்டுப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கனமழை
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 13 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய வழக்கமான மழையை விட, கடந்த 2 வாரங்களில் மட்டும் இரண்டரை மடங்கு மழை பெய்துள்ளதாக வானியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். கடந்த 10ம் தேதி, மாநிலத்தில் உள்ள 35 அணைகள் முழுவதும் நிரம்பின. 26 ஆண்டுக்கு பின் இடுக்கி அணை திறந்துவிடப்பட்டது.
உயிரிழப்பு அதிகரிப்பு
இந்நிலையில், கேரள கனமழை குறித்து இந்திய வெப்பமண்டல வானிலை தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானி ராக்சி மேத்யூ கூறுகையில், கேரள வெள்ளம் போன்ற ஒரு இயற்கை சீற்றங்களை வைத்து பருவிலை மாற்றத்தை தொடர்புபடுத்துவது கடினம். இந்தியாவில் 1950 - 2017 ஆண்டுக்ள் பெய்யும் கனமழையின் அளவு மும்டங்கு அதிகரித்துள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளோம். இது தான் வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறினார். இதேகாலகட்டத்தில், கனமழை காரணமாக 69 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடியே 7 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கடினம்
ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானி கிரா வின்கே கூறியதாவது: கேரளாவில் தற்போது ஏற்பட்ட பெரு வெள்ளம், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் மாற்றத்தின் ஒரு பகுதியே. நாம் இன்னும் மாசு அளவை அதிகரித்து கொண்டே சென்றால், அதனால் ஏற்படும் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். பருவநிலையை கணிப்பது மேலும் கடினமாகி கொண்டு போகிறது. இந்தியாவில் புவி வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டால், மழைகாலங்களில் அதிக மழை பெய்யும். வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். என்றார்.
அதிக மழை
ரஷ்யாவை சேர்ந்த விஞ்ஞானி எலினா என்பவர் கூறுகையில், சில ஆண்டுகளாக, பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் அதிகரிப்பு காரணமாக, மத்திய மற்றும் தெற்கு இந்தியாவில் அதிக மழை பெய்வதாக கூறினார்.
பாதிக்கும்
இந்தியா, சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால்,மாறி வரும் பருவநிலையும் வெப்ப அளவு கூடுதலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா ஜிடிபியில் 2.8 சதவீதத்தை இழப்பது மட்டுமல்லாமல், பாதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என உலக வங்கி எச்சரித்துள்ளது. இந்தியாவில் வெப்பநிலையானது 1.5 செல்சியஸ் முதல் 3 செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக உலக வங்கி கணித்துள்ளது.
இணையதளத்தில் ஆசிரியர்களின் விவரம் பதிவு செய்ய அரசு உத்தரவு.....
திண்டுக்கல், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முழுத் தகவல்களை சேகரித்து 'எமிஸ்' எனும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பற்றிய முழுத் தகவல்களை அறிய, 'எமிஸ்', (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) எனும் திட்டம் சிலஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஆசிரியர், மாணவர் விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டது.பள்ளி திறக்கப்பட்ட நாள், மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை, வகுப்பறைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர் பெயர், வயது, பிறந்த தேதி, தந்தையின் பெயர், பள்ளியில் சேர்ந்த ஆண்டு விவரங்களை சேகரித்து பதிவு செய்ய அறிவுறுத்தியது. அதே போல், ஆசிரியர்களின் பெயர், பணியில் சேர்ந்த ஆண்டு, முகவரியை பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் இதுவரை மாணவர்களின் விவரங்களை மட்டுமே பள்ளிகள் பதிவு செய்துள்ளன. சில பள்ளிகளே ஒரு சில ஆசிரியர்களின் விவரங்களை மட்டும் பதிந்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்களையும் உடனே புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் பயன்பாட்டாளர் பெயர், கடவுச்சொல் வழங்கப்படும். அதை பயன்படுத்தி அந்தந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்யவும், தேவைப்படும்போது மாணவர், ஆசிரியர் குறித்த விபரங்களை உடனே பெறவும் முடியும்.ஒவ்வொரு பள்ளி வாரியாக தொகுக்கப்படும் விவரங்கள் வட்டார அளவில், மாவட்ட அளவில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக முதன்மை கல்வி அலுவலகத்தில் சிறப்பு மையம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இதனை எளிமைப்படுத்த விரைவில் அலைபேசி செயலியையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.அறிவியல் உண்மைகள்- ஜீரோ வாட் பல்புகளுக்கு மின்சக்தி தேவைப்படாதா?
எந்த பல்பும் ஜீரோ வாட் கிடையாது. மிகக் குறைந்த அளவு
மின்சக்தியைக் கொண்டு ஒளியை
வெளியிடுவதால் இப்படி அழைக்கப்படுகிறது. உண்மையில்
இந்த பல்புகளுக்கு 15 வாட்கள் மின்சக்தி தேவைப்படுகிறது.
ஆரம்பத்தில் மிகக் குறைந்த அளவு மின்சாரத்தை மீட்டர்கள்
பதிவு செய்யாத காரணத்தாலும் இவை ஜீரோ வாட் பல்புகள்
என்று அழைக்கப்பட்டன. தற்போது ஜீரோ வாட் பல்புகளுக்கும்
மின் கட்டணம் உண்டு. 15 வாட்களுக்குக்குக் குறைவான
பல்புகளும் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டன.
PLASTIC POLLUTION FREE TAMILNADU THE LATEST APP DEVELOP BY GOVT OF TAMILNADU......
VIDEO CLIP
CLICK HEAR
https://www.shutterstock.com/video/clip-5543090-colombia-bandera-gente
https://www.shutterstock.com/video/clip-25128104?utm_source=adwords&utm_medium=acq_display&utm_campaign=footage_in_rtconv&utm_content=footage-feed_25128104
VIDEO CLIP
CLICK HEAR
https://www.shutterstock.com/video/clip-5543090-colombia-bandera-gente
https://www.shutterstock.com/video/clip-25128104?utm_source=adwords&utm_medium=acq_display&utm_campaign=footage_in_rtconv&utm_content=footage-feed_25128104
சனி, 25 ஆகஸ்ட், 2018
உதயசந்திரன் மாற்றத்தால் உற்சாகம் இழந்த ஆசிரியர்கள்: அதிருப்தியில் கல்வியாளர்கள்
மதுரை : கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமான பாடத்திட்ட செயலர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டது கல்வியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இடமாற்றம்,உற்சாகமிழந்த,ஆசிரியர்கள்
இத்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றபோது செயலராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாத பாடத் திட்டங்களை மாற்ற முயற்சி எடுத்து 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
பாடத்திட்டம் உருவாக்க அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், வரலாற்று ஆய்வாளர்களை தேடிப் பிடித்தார். இது கல்வியாளர்கள், பெற்றோரை மகிழ்ச்சியடைய செய்தது. தவிர பிற மாநிலங்களில் பள்ளி கல்வி செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கல்வித்துறை இணை இயக்குனர்களை அனுப்பினார். அவர்களின் பரிந்துரைகளை புதிய பாடத்திட்டங்களில் புகுத்தினார்.
தமிழக மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ள 'நீட்' தேர்வில் கேட்கப்படும் 99 சதவீதம் வினாக்களுக்கு, புதிய பாடத்திட்டங்களில் பதில் உள்ளதாக வெளிப்படையாகவே அவர் கூறி வந்தார். இதன் மூலம் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில் புதியபாடத் திட்டங்களில் 'கியூ.ஆர். கோடு' உட்பட பல அம்சங்கள் புகுத்தப்பட்டதற்கும் உதயசந்திரனுக்கு வரவேற்பு கிடைத்தது.
என்னவாகும் பாடத்திட்டம் பணி :
இதற்கிடையே இரண்டாம் கட்டமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட பிற வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. உதயசந்திரனுக்கு பதில் பாடத்திட்ட செயலராக யாரையும் நியமிக்காததால், அந்த பணிகள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. உதயசந்திரனை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் 'வாட்ஸ் ஆப்' முகப்பில் அவரது படத்தை வைத்துள்ளது கல்வித்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கருத்துகேட்பு கூட்டம்
புதிய பாடத்திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து மாவட்ட வாரியாக கருத்துக் கேட்பு கூட்டங்களை உதயசந்திரன் நடத்தினார். இதுபோன்ற கூட்டத்திற்கு துறை அமைச்சரையும்
அதிகாரிகள் அழைப்பது வழக்கம். ஆனால் உதயசந்திரன் அழைக்காததால் அமைச்சர் தரப்பு அதிருப்தியில் இருந்தது. அவர் மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர்.
உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய பாடத்திட்டங்களில் என்ன பகுதிகள் சேர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய பாடவாரியாக நிபுணர்கள், பேராசிரியர்கள், இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டிய பகுதிகள் அனைத்தும் முடிவு செய்யப்பட்டுவிட்டன.
1, 6, 9, பிளஸ் 1 தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால் உதயசந்திரன் மாற்றத்தால் பணிகள் பாதிக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் முழுமையாக பாடத்திட்டம் வெளிவரும் வரை அவர் தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், என்றார்.
EMIS - Teachers Profile அப்டேட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை..
Teachers Profile அப்டேட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை..
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018
வரலட்சுமியே வருக! சுப வாழ்வு தருக!! இன்று வரலட்சுமி விரதம்
வரலட்சுமி தாயே! நாராயணரின் திருமார்பில் உறைபவளே! ஸ்ரீபீடத்தில் அருள்பவளே! செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளே! மதுர வல்லித்தாயே!
உன் திருவடியைப் போற்றும் எங்களுக்கு மங்கள வாழ்வு தந்தருள்வாயாக.*பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குலக் கொடியே! ஸ்ரீதரனின் துணைவியே! நல்லோரின் மனதில் குடியிருப்பவளே! குபேரனுக்கு வாழ்வு தருபவளே! சுபவாழ்வு தரும் உமது தாமரைத் திருவடிகளைச் சரணடைகிறோம்.*அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கியவளே! அருளாளர்களின் உள்ளத் தாமரையை இருப்பிட மாக கொண்டவளே! அலங்கார நாயகியே! உன் கடைக்கண் பார்வை எங்கள் இல்லத்தில் என்றும் நிலைக்கட்டும். *பூங்கொடி போன்றவளே! இளமயிலே! அலமேலு மங்கைத்தாயாரே! தேவரும், மூவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதாவே! பாற்கடலில் உதித்த அலைமகளே! அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவாயாக.*முதலும் முடிவும் இல்லாதவளே! ஆதிலட்சுமியே! தஞ்சமென வந்தவரை தாங்கும் தயாபரியே! மகாவிஷ்ணுவின் இதயத்தில் உறைபவளே! நிலவு போல குளிர்ந்த பார்வையால் எங்கள் மீது அருள்மழை பொழிவாயாக.*நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே! செவ்வானம் போல சிவந்த நிறம் கொண்டவளே! குறையில்லாத வாழ்வருளும் கோமளவல்லியே! செங்கமல வல்லியே! பெருந் தேவித் தாயாரே! அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும்.*மங்கள ரூபிணியே! பசுவின் அம்சம் கொண்டவளே! வேண்டிய வரம் தரும் கற்பகமே! சிவந்த தாமரை மலரை இருப்பிடமாக உடையவளே! உன் அருளால் இந்த உலகம் செழிக்கட்டும். உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழட்டும்.வியாழன், 23 ஆகஸ்ட், 2018
பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தல் கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு!
சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 ம் வகுப்பில் மொழிப்பாடம், சுற்றுச்சூழல், அறிவியல், கணினி மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று நீதிபதி கிரூபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
பாடச்சுமையை குறைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனித்தேர்வர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவது எப்படி?
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வினைபள்ளியின் மூலம் எழுதாமல் தனியாராக (பிரைவேட்டாக) எழுதியவர்கள் தங்களது தமிழ் வழி சான்றிதழை சென்னையில்உள்ள பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பெற வேண்டும்.
நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் உங்களது பத்தாம் வகுப்புமதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (SSLC Mark Sheet Xerox) / உங்கள்பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (HSC Mark Sheet Xerox) மற்றும் உங்கள் மாற்றுச் சான்றிதழின் ஒளிப்பிரதி (TC Xerox) ஆகியவற்றுடன் ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பக்கடிதத்தையும் அனுப்ப வேண்டும்.
10 நாட்களுக்குள் உங்களுக்கான தமிழ் வழி சான்றிதழ் நீங்கள்பகிர்ந்துள்ள முகவரிக்கு அனுப்பப்படும்.
நீங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்சான்றிதழ் சரி பார்ப்பு அல்லது கலந்தாய்விற்குத் தேர்வு செய்யப்பட்டுஇருந்தால் அந்த குறிப்பாணையின் ஒளிப்பிரதியையும் ( CV or Counselling Memo) இணைத்து அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Director of Government Examination,
DPI campus,
College Road,
Nungampakkam,
Chennai - 600 034.
Ph: 044-2827 8286, 044-2822 1734.
email: dgedirector@gmail.com
Web: www.tn.gov.in/dge
.......................................................................................................................................................................................................................
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)