>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

G.O 636- PUBLIC ( SPECIAL -B) DEPARTMENT DATED-25.08.2018- ONE DAY's SALARY TO KERALA FLOODS



புவி வெப்பமயமாதல்: இந்தியாவுக்கு எச்சரிக்கை


புதுடில்லி: வெப்பமயமாதலை கட்டுப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


கனமழை
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 13 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
ஒரு ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய வழக்கமான மழையை விட, கடந்த 2 வாரங்களில் மட்டும் இரண்டரை மடங்கு மழை பெய்துள்ளதாக வானியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். கடந்த 10ம் தேதி, மாநிலத்தில் உள்ள 35 அணைகள் முழுவதும் நிரம்பின. 26 ஆண்டுக்கு பின் இடுக்கி அணை திறந்துவிடப்பட்டது.

உயிரிழப்பு அதிகரிப்பு

இந்நிலையில், கேரள கனமழை குறித்து இந்திய வெப்பமண்டல வானிலை தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானி ராக்சி மேத்யூ கூறுகையில், கேரள வெள்ளம் போன்ற ஒரு இயற்கை சீற்றங்களை வைத்து பருவிலை மாற்றத்தை தொடர்புபடுத்துவது கடினம். இந்தியாவில் 1950 - 2017 ஆண்டுக்ள் பெய்யும் கனமழையின் அளவு மும்டங்கு அதிகரித்துள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளோம். இது தான் வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறினார். இதேகாலகட்டத்தில், கனமழை காரணமாக 69 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடியே 7 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கடினம்
ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானி கிரா வின்கே கூறியதாவது: கேரளாவில் தற்போது ஏற்பட்ட பெரு வெள்ளம், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் மாற்றத்தின் ஒரு பகுதியே. நாம் இன்னும் மாசு அளவை அதிகரித்து கொண்டே சென்றால், அதனால் ஏற்படும் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். பருவநிலையை கணிப்பது மேலும் கடினமாகி கொண்டு போகிறது. இந்தியாவில் புவி வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டால், மழைகாலங்களில் அதிக மழை பெய்யும். வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். என்றார்.

அதிக மழை

ரஷ்யாவை சேர்ந்த விஞ்ஞானி எலினா என்பவர் கூறுகையில், சில ஆண்டுகளாக, பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் அதிகரிப்பு காரணமாக, மத்திய மற்றும் தெற்கு இந்தியாவில் அதிக மழை பெய்வதாக கூறினார்.

பாதிக்கும்

இந்தியா, சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால்,மாறி வரும் பருவநிலையும் வெப்ப அளவு கூடுதலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா ஜிடிபியில் 2.8 சதவீதத்தை இழப்பது மட்டுமல்லாமல், பாதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என உலக வங்கி எச்சரித்துள்ளது. இந்தியாவில் வெப்பநிலையானது 1.5 செல்சியஸ் முதல் 3 செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக உலக வங்கி கணித்துள்ளது.

இணையதளத்தில் ஆசிரியர்களின் விவரம் பதிவு செய்ய அரசு உத்தரவு.....

திண்டுக்கல், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முழுத் தகவல்களை சேகரித்து 'எமிஸ்' எனும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பற்றிய முழுத் தகவல்களை அறிய, 'எமிஸ்', (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) எனும் திட்டம் சிலஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஆசிரியர், மாணவர் விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டது.பள்ளி திறக்கப்பட்ட நாள், மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை, வகுப்பறைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர் பெயர், வயது, பிறந்த தேதி, தந்தையின் பெயர், பள்ளியில் சேர்ந்த ஆண்டு விவரங்களை சேகரித்து பதிவு செய்ய அறிவுறுத்தியது. அதே போல், ஆசிரியர்களின் பெயர், பணியில் சேர்ந்த ஆண்டு, முகவரியை பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் இதுவரை மாணவர்களின் விவரங்களை மட்டுமே பள்ளிகள் பதிவு செய்துள்ளன. சில பள்ளிகளே ஒரு சில ஆசிரியர்களின் விவரங்களை மட்டும் பதிந்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்களையும் உடனே புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் பயன்பாட்டாளர் பெயர், கடவுச்சொல் வழங்கப்படும். அதை பயன்படுத்தி அந்தந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்யவும், தேவைப்படும்போது மாணவர், ஆசிரியர் குறித்த விபரங்களை உடனே பெறவும் முடியும்.ஒவ்வொரு பள்ளி வாரியாக தொகுக்கப்படும் விவரங்கள் வட்டார அளவில், மாவட்ட அளவில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக முதன்மை கல்வி அலுவலகத்தில் சிறப்பு மையம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இதனை எளிமைப்படுத்த விரைவில் அலைபேசி செயலியையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Online ல் EMIS விவரங்கள் சரிபார்த்தல் படிவம்.




CLICK HERE TO DOWNLOAD EMIS ONLINE VERIFY FORM - 2018 

அறிவியல் உண்மைகள்- ஜீரோ வாட் பல்புகளுக்கு மின்சக்தி தேவைப்படாதா?















எந்த பல்பும் ஜீரோ வாட் கிடையாது. மிகக் குறைந்த அளவு 
மின்சக்தியைக் கொண்டு ஒளியை 
வெளியிடுவதால் இப்படி அழைக்கப்படுகிறது. உண்மையில்
 இந்த பல்புகளுக்கு 15 வாட்கள் மின்சக்தி தேவைப்படுகிறது. 
ஆரம்பத்தில் மிகக் குறைந்த அளவு மின்சாரத்தை மீட்டர்கள் 
பதிவு செய்யாத காரணத்தாலும் இவை ஜீரோ வாட் பல்புகள் 
என்று அழைக்கப்பட்டன. தற்போது ஜீரோ வாட் பல்புகளுக்கும்
 மின் கட்டணம் உண்டு. 15 வாட்களுக்குக்குக் குறைவான
 பல்புகளும் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டன.

சனி, 25 ஆகஸ்ட், 2018

உதயசந்திரன் மாற்றத்தால் உற்சாகம் இழந்த ஆசிரியர்கள்: அதிருப்தியில் கல்வியாளர்கள்


மதுரை : கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமான பாடத்திட்ட செயலர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டது கல்வியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இடமாற்றம்,உற்சாகமிழந்த,ஆசிரியர்கள்


இத்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றபோது செயலராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாத பாடத் திட்டங்களை மாற்ற முயற்சி எடுத்து 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

பாடத்திட்டம் உருவாக்க அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், வரலாற்று ஆய்வாளர்களை தேடிப் பிடித்தார். இது கல்வியாளர்கள், பெற்றோரை மகிழ்ச்சியடைய செய்தது. தவிர பிற மாநிலங்களில் பள்ளி கல்வி செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கல்வித்துறை இணை இயக்குனர்களை அனுப்பினார். அவர்களின் பரிந்துரைகளை புதிய பாடத்திட்டங்களில் புகுத்தினார்.


தமிழக மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ள 'நீட்' தேர்வில் கேட்கப்படும் 99 சதவீதம் வினாக்களுக்கு, புதிய பாடத்திட்டங்களில் பதில் உள்ளதாக வெளிப்படையாகவே அவர் கூறி வந்தார். இதன் மூலம் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில் புதியபாடத் திட்டங்களில் 'கியூ.ஆர். கோடு' உட்பட பல அம்சங்கள் புகுத்தப்பட்டதற்கும் உதயசந்திரனுக்கு வரவேற்பு கிடைத்தது.


என்னவாகும் பாடத்திட்டம் பணி :


இதற்கிடையே இரண்டாம் கட்டமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட பிற வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. உதயசந்திரனுக்கு பதில் பாடத்திட்ட செயலராக யாரையும் நியமிக்காததால், அந்த பணிகள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. உதயசந்திரனை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் 'வாட்ஸ் ஆப்' முகப்பில் அவரது படத்தை வைத்துள்ளது கல்வித்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


கருத்துகேட்பு கூட்டம்


புதிய பாடத்திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து மாவட்ட வாரியாக கருத்துக் கேட்பு கூட்டங்களை உதயசந்திரன் நடத்தினார். இதுபோன்ற கூட்டத்திற்கு துறை அமைச்சரையும்

அதிகாரிகள் அழைப்பது வழக்கம். ஆனால் உதயசந்திரன் அழைக்காததால் அமைச்சர் தரப்பு அதிருப்தியில் இருந்தது. அவர் மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர்.

உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய பாடத்திட்டங்களில் என்ன பகுதிகள் சேர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய பாடவாரியாக நிபுணர்கள், பேராசிரியர்கள், இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டிய பகுதிகள் அனைத்தும் முடிவு செய்யப்பட்டுவிட்டன. 

1, 6, 9, பிளஸ் 1 தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால் உதயசந்திரன் மாற்றத்தால் பணிகள் பாதிக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் முழுமையாக பாடத்திட்டம் வெளிவரும் வரை அவர் தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், என்றார்.

EMIS - Teachers Profile அப்டேட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை..



Teachers Profile அப்டேட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை..

1 , ஏற்கனவே இருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் எடிட் செய்யவும்.2 , புதிதாக உருவாக்க வேண்டாம்..3 , தங்கள் பள்ளிக்கு புதிதாக வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விபரங்கள் மாநில கல்வி தகவல் மேலாண்மை முறைமை மூலம் விரைவில் தங்கள் பள்ளிக்கு மாற்றப்படும்.4 , தங்கள் பள்ளியில் இருந்து மாறுதல் பெற்றுச் சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விபரங்கள் மாநில கல்வி தகவல் மேலாண்மை முறைமை மூலம் விரைவில் தங்கள் பள்ளியில் இருந்து அவர்கள் சென்ற பள்ளிக்கு மாற்றப்படும்.5 , கீழே காணும் விளக்கப் படங்கள் மூலம் கவனமாக அப்டேட் செய்யவும்.




 




Prepared by Mr. AMU SHAHUL HAMEED , TEACHER

PUMS , ABIRAMAM,

KAMUTHI UNION,

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

வரலட்சுமியே வருக! சுப வாழ்வு தருக!! இன்று வரலட்சுமி விரதம்



வரலட்சுமி தாயே! நாராயணரின் திருமார்பில் உறைபவளே! ஸ்ரீபீடத்தில் அருள்பவளே! செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளே! மதுர வல்லித்தாயே!
உன் திருவடியைப் போற்றும் எங்களுக்கு மங்கள வாழ்வு தந்தருள்வாயாக.*பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குலக் கொடியே! ஸ்ரீதரனின் துணைவியே! நல்லோரின் மனதில் குடியிருப்பவளே! குபேரனுக்கு வாழ்வு தருபவளே! சுபவாழ்வு தரும் உமது தாமரைத் திருவடிகளைச் சரணடைகிறோம்.*அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கியவளே! அருளாளர்களின் உள்ளத் தாமரையை இருப்பிட மாக கொண்டவளே! அலங்கார நாயகியே! உன் கடைக்கண் பார்வை எங்கள் இல்லத்தில் என்றும் நிலைக்கட்டும். *பூங்கொடி போன்றவளே! இளமயிலே! அலமேலு மங்கைத்தாயாரே! தேவரும், மூவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதாவே! பாற்கடலில் உதித்த அலைமகளே! அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவாயாக.*முதலும் முடிவும் இல்லாதவளே! ஆதிலட்சுமியே! தஞ்சமென வந்தவரை தாங்கும் தயாபரியே! மகாவிஷ்ணுவின் இதயத்தில் உறைபவளே! நிலவு போல குளிர்ந்த பார்வையால் எங்கள் மீது அருள்மழை பொழிவாயாக.*நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே! செவ்வானம் போல சிவந்த நிறம் கொண்டவளே! குறையில்லாத வாழ்வருளும் கோமளவல்லியே! செங்கமல வல்லியே! பெருந் தேவித் தாயாரே! அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும்.*மங்கள ரூபிணியே! பசுவின் அம்சம் கொண்டவளே! வேண்டிய வரம் தரும் கற்பகமே! சிவந்த தாமரை மலரை இருப்பிடமாக உடையவளே! உன் அருளால் இந்த உலகம் செழிக்கட்டும். உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழட்டும்.

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

EMIS Web Portal ல் உடனடியாக செய்யவேண்டிய பணிகளின் பட்டியல்

TNSCHOOLS Attendance Mobile App - New Version Published Now!



...................................................................................................................................................................................................

பள்ளிக்கல்வி துறை- கல்வி தகவல் மேலாண்மை முறை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் சுய விவரங்கள் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்!



பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தல் கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு!



சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 ம் வகுப்பில் மொழிப்பாடம், சுற்றுச்சூழல், அறிவியல், கணினி மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று நீதிபதி கிரூபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

பாடச்சுமையை குறைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனித்தேர்வர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவது எப்படி?


பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வினைபள்ளியின் மூலம் எழுதாமல் தனியாராக (பிரைவேட்டாக) எழுதியவர்கள் தங்களது தமிழ் வழி சான்றிதழை சென்னையில்உள்ள பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பெற வேண்டும். 

நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் உங்களது பத்தாம் வகுப்புமதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (SSLC Mark Sheet Xerox) / உங்கள்பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (HSC Mark Sheet Xerox) மற்றும் உங்கள் மாற்றுச் சான்றிதழின் ஒளிப்பிரதி (TC Xerox) ஆகியவற்றுடன் ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பக்கடிதத்தையும் அனுப்ப வேண்டும்.

10 நாட்களுக்குள் உங்களுக்கான தமிழ் வழி சான்றிதழ் நீங்கள்பகிர்ந்துள்ள முகவரிக்கு அனுப்பப்படும்.

நீங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்சான்றிதழ் சரி பார்ப்பு அல்லது கலந்தாய்விற்குத் தேர்வு செய்யப்பட்டுஇருந்தால் அந்த குறிப்பாணையின் ஒளிப்பிரதியையும் ( CV or Counselling Memo) இணைத்து அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Director of Government Examination,
DPI campus,
College Road,
Nungampakkam,
Chennai - 600 034.
Ph: 044-2827 8286, 044-2822 1734.
email: dgedirector@gmail.com
Web: www.tn.gov.in/dge
.......................................................................................................................................................................................................................

1.10.1979 முதல் 30.6.1996 முடிய அரசு பணியிலிருந்துஓய்வு பெற்றவர்கள் 33 வருடம் பணி முடித்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1.7.1996 முதல் 30 வருடம் பணி முடித்தாலே முழு ஓய்வூதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 1.7.1996 க்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு30 வருடம்பணிமுடித்தால் முழு ஓய்வூதியம் வழங்குவது போல் 30.6.1996க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் அவ்வாறே வழங்கவேண்டும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் 1.7.1996 க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க. கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அரசாணை எண். 245 வழங்கப்பட்டுள்ளது.


சனி, 18 ஆகஸ்ட், 2018

நுண்புழைக்குழாய்(6TH STD QR CODE VIDEO)

நுண்புழைக்குழாய்(6TH STD QR CODE VIDEO)

நுண்புழைக்குழாய்(6TH STD QR CODE VIDEO)

நுண்புழைக்குழாய்(6TH STD QR CODE VIDEO)
  1. .......................................................................................................................................................................
  2. .....................................................................................................................................................................

தாவரங்கள் அனிச்சைச் செயல்கள்(6TH STD QR CODE VIDEO)



..................................................................................................................................................................................................................................................................................................................

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை பள்ளி, கல்லூரிகள் இயங்காது

தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். மாமனிதரான வாஜ்பாயின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் 16-ந்தேதி (நேற்று) முதல் 22-ந்தேதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 நாட்களும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது. இந்த நாட்களில் திட்டமிட்டிருந்த அரசு விழாக்களும் ரத்து செய்யப்படுகின்றன.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதையொட்டி, இன்று மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், மாநில அரசின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் மாநில பொது நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது.
எனவே தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இன்று இயங்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தலைமைச்செயலாளரின் இந்த உத்தரவு அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதன்படி செயல்படுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்ளுமாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.