>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

EMIS website ல் teacher details பதிவேற்றம் செய்வது எப்படி?

Step - 1:
EMIS teacher details பதிவேற்றம்
செய்யும் போது staff details option செல்லவும்.
Step-2 select செய்யவும்.
நம்முடைய பெயரின் மீது கிளிக் செய்யவும்.
Edit option click செய்யவும்.
Enable/ disable option click செய்யவும்.
விவரங்களை பதிவு செய்யவும்.
Step-3 ல் பதிவு செய்ய வேண்டாம்.
நம் பள்ளிக்கு புதிதாகவோ, மாற்றலாகியோ வந்திருந்தால் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே பெயர் உள்ளவர்கள் பதிவு செய்தால் இன்னொரு முறை நம் பள்ளியின்  கணக்கில்  இரண்டு முறை நம் பெயர் காட்டும்.
..............................................................................................................................................................................

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

C & D RECORD ( தமிழ், ஆங்கிலம், கணக்கு) ( PRIMARY & UPPER PRIMARY)

CCE – READ, WRITE AND MATHS BASIC SKILLS FORMAT


Thanks
S.PRABUDOSS*
BT ASSISTANT (MATHS)
PUMS KUNNAPPATTU
THIRUPPORUR UNION
CHENGAI EDUCATIONAL  DISTRICT.

EMIS தலைமை ஆசிரியர் உறுதிமொழி printout எடுக்கும் வழிமுறை

EMIS login page ல் நமது UserId மற்றும் password கொடுத்து login செய்த உடன் dashboard ல்  student, school போன்ற pictures(box) தெரியும். அதில் இறுதியாக  4 வதாக வரும் HM DECLARATION PICTURE(BOX) ஐ click செய்தால் நமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆண்,பெண், மதம் மற்றும் இன வாரியாக page ல் தோன்றும் அந்த விவரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

அவ்வாறு இல்லை எனில் emis -  student ல் சென்று தவறாக உள்ள வகுப்பை open செய்து அந்த மாணவர்களின் விபரங்களை திருத்தம் செய்யவேண்டும்.
அதன் பிறகு HM DECLARATION  ஐ open செய்து மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்தப்பின் right click செய்தால் save as PDF என்ற option ஐ click செய்யவும். பிறகு மாணவர்கள் விவரங்களுக்கு கீழே ACCEPT & SUBMIT ஐ click செய்துவிடவும்.

அதன் பிறகு my computer ல் download folder ல் நாம் save செய்த தலைமை ஆசிரியர் உறுதிமொழி ஐ click செய்து அதனை printout எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட(with hm seal)வேண்டும்.
இதை அலுவலகத்தில் நமது அலுவலர்கள் சொல்லும் தருணத்தில் சமர்பிக்கப்படவேண்டும்.
................................................................................................................................................................

95 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்வு...

சென்னை:தமிழகத்தில், 95 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை, அரசு வெளியிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, ஐந்து பள்ளிகளை தரம் உயர்த்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மீதமுள்ள, 95 பள்ளிகளையும், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, பள்ளிக் கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், அரசாணை பிறப்பித்துள்ளார். 

இதை பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.அரசாணைப்படி, அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும். 

முதற்கட்டமாக, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், தலா, ஒரு முதுகலை ஆசிரியர் பணியிடம், புதிதாக ஏற்படுத்தப்படும்.இந்த பள்ளிகளில், கலை பாடப்பிரிவு துவங்கப்பட்டு, அதில், ஊரகப் பகுதிகளில் இருந்து, 15 மற்றும் நகர் பகுதிகளில் இருந்து, 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர். அதில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியலுக்கு, தலா, ஒரு முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு ஒப்புதல் தரப்படும். 

காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், நீலகிரி, பெரம்பலுார், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தலா, 1; அரியலுார், கடலுார், திண்டுக்கல், துாத்துக்குடி, தலா, 2 தரம் உயர்த்தப்படுகின்றன.திருச்சி, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தலா, 3; தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, தலா, 4 ஆகியவை தரம் உயர்த்தப்படுகின்றன.

திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, கோவை, தலா, 5; வேலுார், 6; சேலம், 7 என, 30 மாவட்டங்களில், மொத்தம், 95 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
95 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாக உயர்வு
தமிழகத்தில் செயல்படும், 95 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. புதிதாக, ஐந்து பெண்கள் உயர் நிலை பள்ளிகளும் அமைகின்றன.

திண்டுக்கல், அரியலுார், கரூர், நீலகிரி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், தலா, 2; காஞ்சி புரம், நாகப்பட்டினம், திருவாரூர், வேலுார், விருதுநகர் மாவட்டங்களில், தலா, 3; ஈரோடு, தேனி, துாத்துக்குடி, பெரம்பலுார், கடலுார், ராமநாதபுரம் மாவட்டங்களில், தலா ஒரு நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாமக்கல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், தலா, 4; தர்மபுரி மற்றும் மதுரையில், தலா, 5; சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில், தலா, 6 என, 31 மாவட்டங்களில், மொத்தம், 95 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுதவிர, பெரம்பலுார், பண்ருட்டி, திருப்பூர் - பெருமாநல்லுார், வேலுார் - திருமால்பூர் மற்றும் விழுப்புரம் - ஜீ ஆரியூர் என, ஐந்து இடங்களில், பெண்கள் உயர்நிலை பள்ளிகள் புதிதாக அமைகின்றன. தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிதாக துவக்கப்படும் பள்ளிகளுக்காக, 500 பட்டதாரி பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

முகநூல் பக்கத்தில் இணைய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பள்ளிக்கல்வித் துறையின் முகநுால் பக்கத்தில் இணையும்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையில், பாடத்திட்டம் மாற்றத்தை தொடர்ந்து, நிர்வாக பணிகள், கற்பித்தல் பணிகள் போன்றவற்றையும், டிஜிட்டல் முறைக்கு மாற்ற, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.முதற்கட்டமாக, அனைத்து மாணவர்களின் விபரங்களையும், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் இணைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களை பயன்படுத்தி, போலி மாணவர் பதிவுகளை நீக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அதேபோல், பாடத்திட்ட மாற்றத்தின்படி, 'வீடியோ' வழி பாடங்கள் நடத்தவும், 'ஸ்மார்ட்' வகுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதன் ஒரு கட்டமாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிெபறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பள்ளி கல்வியின், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்தில் இணைய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்காக ஆசிரியர்கள், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்திற்கு சென்று, அதிலுள்ள, குரூப்பில் இணைவதற்கான விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.அதிகாரிகள் அவர்களின் விபரங்களை சரி பார்த்து, குரூப்பில் இணைய அனுமதி அளிப்பர். அதன்பின், அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட குரூப்பில் இணைக்கப்படுவர்.

அதில், ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறை, தனித்திறன் உள்ளிட்டவற்றை பதிவு செய்யலாம். அவற்றை மற்ற ஆசிரியர்களும் பார்த்து, தெரிந்து கொள்வர்.ஆசிரியர்களின் புதிய கற்பித்தல் முறைகள், வழிமுறைகள் நன்றாக இருந்தால், அவற்றை மற்ற பள்ளிகளிலும் செயல்படுத்த, அதிகாரிகள் அறிவுறுத்துவர்.எனவே, ஒரு ஆசிரியரின் திறமை, மற்ற பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
.................................................................................................................................................................

Flash News: SSA - BRTEs Transfer to Schools - New GO Published

அரசாணை (1D) எண். 556 Dt: August 09,
2018  பள்ளிக் கல்வி   அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ்மாநிலமற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள்வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில்தற்போதைய மாநில காலிப்பணியிட சராசரியான 15சதவிகிதத்தை அனைத்துமாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப்பணியிடமாக ஒதுக்கிவிட்டுபொது கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்துஅனைத்து 
மாவட்டங்களுக்கும் மாறுதல் வழங்கி பொதுக் கலந்தாய்வு நடத்தஅனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.


click here to download ............அரசாணை (1D) எண். 556 Dt: August 09, 2018   
பள்ளிக் கல்வி – அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ்மாநில மற்றும்மாவட்ட திட்ட   அலுவலகங்கள்வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில்பணிபுரியும்  3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போதைய மாநிலகாலிப்பணியிட சராசரியான 15சதவிகிதத்தை அனைத்து மாவட்ட மற்றும்வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப் பணியிடமாகஒதுக்கிவிட்டுபொது   கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்து அனைத்துமாவட்டங்களுக்கும்  மாறுதல் வழங்கி பொதுக் கலந்தாய்வு நடத்த அனுமதி –ஆணை வெளியிடப்படுகிறது.
..........................................................................................................

G.O.NO:-167 Dt: August 07, 2018 -பள்ளிக் கல்வி – தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதி உதவி பெறும் அனைத்து வகையான பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் – உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.05.2019 வரை நீட்டித்து – ஆணை வெளியிடப்படுகிறது_*

பள்ளிக் கல்வி – தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதி உதவி பெறும் அனைத்து வகையான பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் – உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.05.2019 வரை நீட்டித்து – ஆணை வெளியிடப்படுகிறது

G.O.NO :- 168 Dt: August 09, 2018 -பள்ளிக் கல்வி – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு – 2448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.!!!

சுதந்திர தினம் (15.08.2018) அன்று காலை 9.30 க்கு கொடியேற்ற வேண்டும்


ATM இரகசிய எண்ணை மறந்துவிட்டீர்களா?? உடனடியாக இரகசிய எண்ணை பெற... ›



ATM இரகசிய எண்ணை மறந்துவிட்டீர்களா?? உடனடியாக இரகசிய எண்ணை பெற... ›



EMIS -CLASS & CASTE WISE ABSTRACT FORMAT

TNUSRB - 2018 : காவலர் தேர்வு முடிவு வெளியீடு!

COMMON RECRUITMENT - 2017 - 18 (GR. II POLICE CONSTABLES           [Armed Reserve], GR. II JAIL WARDERS, FIREMEN)


✍ கடந்த 11-3-2018 அன்று நடைபெற்ற காவல் துறையில் பணிபுரிய  தேர்வு நடைபெற்றது.

*✍சுமார் 6140 காவல் துறை இடங்களுக்கான தேர்வு நடத்த பட்டது.


*✍தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியிட பட்டு உள்ளது.

*✍ தேர்வு முடிவுகளை கான*👇

....................................................................................................................................................

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல் இரு சான்றிதழ்களால் திடீர் குழப்பம்.....

தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை போன்ற பாடப்பிரிவுகளுக்கு, 1,325 சிறப்பாசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வாயிலாக, 2017 செப்., 23ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது.

இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, 10 மாதங்களுக்கு பின், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, நாளை சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் பலர், இரண்டு வகையான தொழிலாசிரியர் பயிற்சி சான்றிதழ் வைத்திருப்பதால், திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தேர்வு எழுதியவர்கள், தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் தலைமையில், பள்ளிக் கல்வி செயலர், பிரதீப் யாதவ் மற்றும் டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் கூறியதாவது:

தொழில்நுட்ப தேர்வு என்பது, பள்ளி கல்வியின் தேர்வு துறையால் நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 'தொழிலாசிரியர் சான்றிதழ்' என்ற பெயரில் சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களையே, சிறப்பாசிரியர்களாக பள்ளி கல்வித்துறை நியமித்து வருகிறது.இந்நிலையில், தொழிலாசிரியர் தேர்வு முடித்தவர்களுக்கு, வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், 1994 முதல் தேர்வு நிறுத்தப்பட்டு, 2002க்கு பின், மீண்டும் நடத்தப்படுகிறது. 

தேர்வை அரசு நிறுத்தியிருந்த காலத்தில், தமிழக வேலைவாய்ப்பு துறை சார்பில், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, தொழிலாசிரியர் பயிற்சி தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை பெயரிலேயே சான்றிதழ் அளித்துள்ளனர்.அதனால், தற்போது இரண்டு தரப்பினரும் சான்றிதழ் வைத்திருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை நடத்தும் தொழிலாசிரியர் தேர்வுக்கு மட்டுமே, விதிகள் ஏற்படுத்தி, நேரடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு துறையின் படிப்பை, தனியார் நிறுவனங்கள் நடத்தியுள்ளன.

எனவே, பள்ளி கல்வித்துறை தேர்வுக்கு மட்டுமே, இந்த நியமனத்தை மேற்கொள்ள வேண்டும். அரசாணையே இல்லாத படிப்புகளுக்கு, வேலைவாய்ப்பு அளிப்பதால், முறைப்படி படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்காத அபாயம் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்றுனர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

சென்னை:ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


பள்ளி கல்வித்துறையில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பணியாற்றும், ஆசிரியர் பயிற்றுனர்கள், 3,890 பேருக்கு, மாவட்ட அளவில் பணி நிரவல் அடிப்படையில், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துஉள்ளார்.

மேலும், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியில், 697 காலியிடங்களை, அனைத்து மாவட்டங்களுக்கான சராசரி காலி இடமாக மாற்றி, இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தவும், அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை குறைப்பு

காரைக்குடி:செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையால் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஒதுக்கீடு முறையில் ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.


கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 23 பேர் இதை பெற்றனர். நடப்பாண்டில் மாநில ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்பட்டு தலை சிறந்த ஆசிரியர்களுக்கே இந்த விருது வழங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

பள்ளி செயல்பாடுகளின் அடிப்படையில் ஆன்லைனில் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் மாவட்ட வாரியாக மூன்று பேரை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், கலெக்டரால் நியமிக்கப்பட்ட கல்வியாளர் ஒருவர் அடங்கிய குழு மாநில குழுவுக்கு பரிந்துரைத்தது. இதன்படி 90க்கும் மேற்பட்டோர் பரிந்துரைக்கப்பட்டனர். மாநில குழு இதில் ஆறு பேரை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

சென்னை ரேஷ்மி, கோவை சத்தி, காஞ்சிபுரம் மாதவன், கரூர் செல்வகண்ணன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பீட்டர்ராஜா, திருவள்ளூர் சாந்தி இதில் இடம் பெற்றுள்ளனர்.இவர்களுக்கு ஆக.16 முதல் 21 வரை டில்லியில் நேர்காணல் நடக்கிறது. இந்தியா முழுவதும் 157 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 45 பேருக்கு மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதால் தேசிய நல்லாசிரியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது!!!