>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 15 ஜூலை, 2018

HOW TO e-FILE INCOME TAX - STEP BY STEP VIDEO

காமராஜர் கட்டுரை மற்றும் கவிதை ,பாடல் மற்றும் திரைப்படம்



Image result for காமராஜர்

பெற்றோரை செருப்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்...

சேலத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில், மாணவனின் பெற்றோரை செருப்பால் அடித்த கணித ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சேலம் 4 ரோட்டில் அரசு உதவிபெறு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு மாணவர்
ஒருவர், கடந்த இருதினங்களுக்கு முன்பு வகுப்பில் பேசிக்கொண்டிருந்தார். இதனை முதுகலை கணித பட்டதாரி ஆசிரியை ஒருவர், கண்டித்துள்ளார். 

மேலும், அவரது குடும்பத்தினரை பற்றி கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே, அந்த மாணவர்களின் பெற்றோர், நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து முதல்வரிடம் இதுபற்றி கேட்டனர். அப்போது, அவர் சம்பந்தப்பட்ட  ஆசிரியையிடம் அவர்களை அனுப்பி வைத்தார். நடந்த சம்பவம் குறித்து ஆசிரியையிடம், பெற்றோர் பேசிக்கொண்டிருந்தனர்.



அப்போது திடீரென கோபமடைந்த ஆசிரியை, பெற்றோர்களை கடுமையான சொற்களால் பேசியுள்ளார். மேலும் இருதரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், பள்ளியிலிருந்து பெற்றோர் திரும்பிச் செல்ல முயன்றபோது, அந்த ஆசிரியை தனது செருப்பை கழற்றி வீசியுள்ளார். இது பெற்றோரின் முதுகில் பட்டு கீழே விழுந்தது.

தொடர்ந்து செருப்பை எடுத்த ஆசிரியை, பெற்றோரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்,

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வந்து விசாரித்தனர். இதனிடையே பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட கணித ஆசிரியையை சஸ்பெண்ட் செய்துள்ளது.
............................................................................................................................................................................................................

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11¾ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கையடக்க கணினி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி
(டேப்லட்) விரைவில் வழங்கப்பட உள்ளது.


அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.

1st standard EVS - Training introduction for text book training Videos



1st standard English - Training introduction for text book training Videos


1st standard Maths- Training introduction for text book training Videos



1st standard Tamil- Training introduction for text book training Videos


Eleventh Standard - All - Training Intro videos




Eleventh Standard - Tamil - Training Intro videos - Click here .......

Eleventh Standard -Advance  Tamil - Training Intro videos - Click here .......

Eleventh Standard - English  - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Maths - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Physics - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Botany - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Economics - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Zoology - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Geography - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Mathematics & Statistics - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Statistics - Training Intro videos - Click here .......

Eleventh Standard - Computer - Training Intro videos - Click here .......

தேசிய வேளாண் நுழைவுத்தேர்வு ரத்து மறு தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு

கோவை:நாடு முழுவதும், கடந்த ஜூன் மாதம் நடந்த, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ், நாடு முழுவதும் செயல்படும் வேளாண் பல்கலைகள் மற்றும் நிறுவனங்களில், பல்வேறு வேளாண் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், இளநிலை படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வுகள் மூலம், இட ஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகின்றன.
நடப்பாண்டு, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகளுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 18 முதல், ஜூன், 3ம் தேதி வரை நடந்தது.நாடு முழுவதும், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேர்வு, ஜூன், 22ம் தேதியும்; இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, ஜூன், 23ம் தேதியும் நடந்தன.
சென்னை, தனியார் கல்லுாரி தேர்வு மையத்தில் நடந்த, இளநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வில், மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில், பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன.தேர்வு மையத்தில் தேர்வெழுதிய, 32 மாணவர்களும், வினாக்களுக்கு முழுமையாக விடையளிக்க முடியாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், 'அகில இந்திய வேளாண் ஒதுக்கீடுகளுக்கு, மறுதேர்வு நடத்த வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து, ஜூன் மாதம் நடந்த, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.ஏ.ஆர்., நிறுவன விஞ்ஞானி, முத்தமிழ் செல்வன் கூறியதாவது:ஐ.சி.ஏ.ஆர்., சார்பில் நடப்பாண்டு நடத்தப்பட்ட, இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள், அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு தேர்வுகளுக்கான தேதி, ஐ.சி.ஏ.ஆர்., இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுகள் தொடர்பான தகவல்களுக்கு, 011 - 25843635, 011 - 25846033 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

'பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு'

கோவை:''பொறியியல் சேர்க்கைக்கு, பொது நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகின்றன; எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரலாம்,'' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஆலோசகர், திலீப் மால்ஹெடே தெரிவித்தார்.

கோவையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் சார்ந்த செயல்பாடுகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு, அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது.
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் கடந்து, தொழில்முனைவோராக உயர்த்த, ஹெக்கத்தான் போன்ற, பலவிதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு, 'ஸ்டார்ட் அப்' நிதிகளும் வழங்கப்படுகின்றன.
பொறியியல் கல்லுாரிகளில், மாணவர்களுக்கான, 'கிரெடிட்' புள்ளிகள், 190 என்பதிலிருந்து, 160 என்ற அளவில் குறைக்கப்பட்டதால், ஆசிரியர், மாணவர்களுக்கான எண்ணிக்கை விகிதமும் மாற்றப்பட்டது. தனியார் கல்லுாரிகளில், கூடுதலாக ஆசிரியர்கள் தேவை எனும்பட்சத்தில், அவர்கள் வைத்துக் கொள்வதற்கு தடையில்லை.
ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், பொறியியல் பிரிவின் கீழ், பாடத்திட்டங்களை தரம் உயர்த்தி, அறிமுகப்படுத்தியுள்ளோம். சில கல்வி நிறுவனங்கள், இப்பாடத்திட்டத்தை செயல்படுத்திஉள்ளன.இதை அடிப்படையாக வைத்து, மனப்பாடம் செய்யாமல், சிந்தித்து பதில் அளிக்கும் வகையில், தேர்வு முறைகளிலும் விரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, எஸ்.எஸ்.பி.சி.ஏ., எனப்படும் ஆராய்ச்சி திட்டத்தில், இந்தியாவில் இருந்து, 10 அணிகள், அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. இதில், முதல் மூன்று இடங்களை, அமெரிக்க மாணவர்களும், நான்காம் இடத்தை இந்திய மாணவர்களும் வென்றனர் என்பது பெருமைக்குரியது.
பொறியியல் சேர்க்கையின் கீழ், பல்வேறு நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தயார்படுத்திக் கொள்வதில், மனதளவில் மாணவர்கள் பல்வேறு அழுத்தங்களை சந்திப்பது மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் செலவிடும் நிலை உள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில், பொது நுழைவுத்தேர்வு நடத்த, ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இது சார்ந்த இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில், நடைமுறைப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

'நீட்' தேர்வு முடிவு: இன்று வெளியீடு...

சென்னை:உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.நாடு முழுவதும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான, டி.எம்., - எம்.சி.எச்., போன்றவற்றை படிக்க, அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 1,215 இடங்கள் உள்ளன. அதிகபட்சமாக, தமிழகத்தில், 192 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், 2018 - 19ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்வு, ஜூலை, 6ல் நடந்தது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை உட்பட, நாடு முழுவதும், 42 நகரங்களில் தேர்வு நடந்தது.தேர்வு முடிவுகள், www.nbe.edu.in என்ற இணையளத்தில், இன்று வெளியிடப்பட உள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங்கை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது.
கவுன்சிலிங் அட்டவணை உள்ளிட்ட விபரங்கள், www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கு பள்ளியில் பதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு வசதி

சென்னை:'பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, தாங்கள் படித்த பள்ளிகள் வழியே, வேலை வாய்ப்புக்கு பதிவு செய்யலாம்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர், ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், தங்களின் கல்வித் தகுதியை, தாங்கள் படித்த பள்ளிகள் வழியே, https://tnvelaivaaippu.gov.in என்ற, வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில், நேரடியாக பதிவு செய்யும் வசதி, 2011 முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, நாளை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அன்று முதல், 30ம் தேதி வரை, 15 நாட்களுக்கு, ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி, பள்ளியிலேயே, இணையதளம் வழியே பதிவு செய்யலாம். 
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில், 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம் அல்லது தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி, பதிவு செய்து கொள்ளலாம்.பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை ஏற்கனவே பதிவு செய்துள்ள மாணவர்கள், அந்த பதிவு அடையாள அட்டையுடன், மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில், தாங்கள் படித்த பள்ளிகளை அணுகி, பிளஸ் 2 கல்வித் தகுதியை, கூடுதலாக பதிவு செய்யலாம்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, புதிதாக பதிவு செய்யும் மாணவர்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ் ஆகிய விபரங்களுடன், சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி, பதிவு மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் சீருடை நிறத்திலேயே உடை அணியும் தலைமையாசிரியை!

கோபிசெட்டிபாளையம்:வகுப்பறையில் கற்பிக்கும் சூழலுக்காக, மாணவ - மாணவியரின் சீருடை நிறத்திலேயே, பெண் தலைமை ஆசிரியை, சீருடை அணிந்து வருகிறார்.

தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டு முதல், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு, சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடர்பச்சை நிறத்தில் கால்சட்டையும், வெளிர்பச்சை நிறத்தில் சட்டையும், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கே.ராமநாதபுரத்தில், இயங்கும் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக வாசுகி உள்ளார். இவருடன் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பணியாற்றுகிறார்.இவர்கள், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம், 35 குழந்தைகளுக்கு கல்வி போதிக்கின்றனர். கல்வித்துறை உத்தரவின் படி, இப்பள்ளி குழந்தைகள், புதிய சீருடைக்கு மாறியுள்ளனர்.
குழந்தைகள் அணிந்து வரும் சீருடை நிறத்திலேயே, தலைமை ஆசிரியை வாசுகியும், சீருடை உடுத்தி வரும் வழக்கத்தை கையாண்டு வருகிறார். வகுப்பறை சூழலில், குழந்தைகள் ஆசிரியரை வேறுபடுத்தி பார்க்காமல் இருக்கவும், சகஜமான அணுகுமுறைக்காகவும், அதே நிறத்தில் சீருடை அணித்து வருவதாக, தலைமை ஆசிரியை வாசுகி கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:வகுப்பறையில் ஆசிரியரின் நடவடிக்கை மற்றும் செயலை வைத்து தான் குழந்தைகள் கற்றுக்கொள்வர்.அனைத்து குழந்தைகளையும், வகுப்பறை சூழலுக்கு ஒருங்கிணைத்து போதிக்க, அணுகுமுறை அவசியமாகிறது. குழந்தைகளை நல்வழிப்படுத்தம் பொறுப்பு நல்ல ஆசிரியருக்கு உள்ளது. என்னுடைய ஆசிரியை, என்னுடைய வகுப்பு, என்னுடைய மாணவர்கள் என்ற புரிதலை உருவாக்க வேண்டும்.
அப்துல் கலாம் இறப்புக்கு பின், குழந்தைகள் அணிந்துள்ள சீருடை நிறத்திலேயே, நானும் சீருடை அணிந்து வருகிறேன். இதனால், குழந்தைகள் என்னிடம், நம்பிக்கை, பாசம், அன்பு கலந்த அணுகுமுறையில் பழகுகின்றனர்.சீருடை மாற்றத்துக்கு முன், குழந்தைகள் அணிந்து வந்த, இளஞ்சிகப்பு மற்றும் சந்தன கலரில் நானும், வகுப்புக்கு தினமும் சீருடை உடுத்தி வந்தேன்.
தற்போது, குழந்தைகளை போல நானும், புதிய சீருடைக்கு மாறியுள்ளேன்.குழந்தைகள் அணிந்துள்ள நிறத்திலேயே, சீருடை அணிந்து வருபவர்களில், தமிழகத்தில் முதல் பெண் தலைமை ஆசிரியை நானாக தான் இருப்பேன். இந்த சீருடை அணிந்து வரும் முறையை, என்னுடைய பணிக்காலம் முடியும் வரை தொடர்வேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விருதுகளை குவிக்கும் தலைமை ஆசிரியை
கடந்த, 2004ல், இந்திய அளவில், கற்றலில் புதுமை ஏற்படுத்திய ஆசிரியை விருது, 2006ல், காமராஜர் நல்லிணக்க விருது மற்றும் பசும்பொன் தேவர் விருது, 2012ல் தமிழக அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 2017ல் தேசியளவில் நல்லாசிரியர் விருது ஆகியவற்றை வாசுகி பெற்றுள்ளார். தவிர, பிரஞ்ச் அசோசியேஷன் விருது, சிகரம் தொட்ட ஆசிரியர் விருது என, தலைமை ஆசிரியை வாசுகி விருதுகளை குவித்துள்ளார்.

உதவி பெறும் பள்ளிகளில்ஆங்கில பிரிவு கோரி வழக்கு

மதுரை:அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், ஆங்கில வழி பிரிவுகளை விரிவுபடுத்த கோரி தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பொதுச் செயலர், கனகராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:'அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த, 1 மற்றும் 6ம் வகுப்பில், தலா இரண்டு ஆங்கில வழி இணை பிரிவுகள் துவக்கப் படும். படிப்படியாக, பிளஸ் 2 வரை ஆங்கிலவழி பிரிவுகள் துவக்கப்படும். 'முதல் கட்டமாக, 2012 - 13ம் கல்வியாண்டில், 320 அரசு பள்ளிகளில் துவக்கப்படும்' என, 2012 ஜூலை, 17ல், பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.
இதனால், கட்டணம் இன்றி, ஏழை மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வி பெறுகின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அப்படிச் செய்தால், 'நீட்' உட்பட போட்டித் தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள முடியும்.உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படும், உபரி ஆசிரியர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவும் உதவும். 
உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கிலவழி பிரிவுகளை ஏற்படுத்தக் கோரி, பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.நீதிபதிகள், சி.டி.செல்வம், ஆர்.தாரணி அமர்வு, மனு மீதான விசாரணையை, இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

அரசு மேல்நிலை பள்ளிகளில் 2 மாதத்தில் இலவச, 'வைபை'

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி களில், இரண்டு மாதங்களில், இலவச இணைய தள, 'வைபை' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில், கல்வியில் பின்தங்கிய, 13 மாவட்டங்களில் உள்ள, 366 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு, 9.06 கோடி ரூபாய் மதிப்பில், இலவச இணையதள, வைபை வசதி ஏற்படுத்த, அரசு ஒப்புதல் அளித்தது.இதில், முதல் கட்டமாக, 50 அரசு மேல் நிலைப்பள்ளிகளில், 1.23 கோடி ரூபாய் செலவில், வைபை சேவை வசதி வழங்க,நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளில், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:அரசு மேல்நிலை பள்ளிகளில், இலவச இணையதள, வைபை வசதி வழங்கும் திட்டத்தை, 2017ல், தமிழக அரசு, அறிவித்தது. தற்போது, இதற்கானநிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.முதல் கட்டமாக, 50 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சேவை வழங்க, 'டெண்டர்' கோரப்பட்டுஉள்ளது.
விரைவில் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களில், பள்ளிகளுக்கு, இலவச, வைபை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 

உயர்கல்வி கற்றல் மையம் விண்ணப்பிக்க அவகாசம்

கோவை:பாரதியார் பல்கலையில்புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள, உயர்கல்வி கற்றல் மையங்களை துவக்குவதற்கான விருப்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, கல்லுாரிகளுக்கு, இம்மாதம், 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல்கலையில் தொலைதுார கல்வி முறையில் எழுந்த சிக்கல் காரணமாக, தமிழக எல்லைதாண்டியும், எல்லைக்குள்ளும் செயல்பட்டு வந்த, 500க்கும் மேற்பட்ட தனியார் தொலைதுார கல்வி மையங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, முறைகேடுகள் களையப்பட்டு, பல்கலையின் நேரடி கண்காணிப்பில், உயர்கல்வி கற்றல் மையங்கள், கல்லுாரிகளில் துவக்கப்படவுள்ளன. இதற்கான முதல்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.உயர்கல்வி மையங்களை நடத்த ஆர்வமுள்ள கல்லுாரிகள் விருப்பம் தெரிவிக்க, ஜூன், 18 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதில், 27 கல்லுாரிகள் மட்டுமே விருப்பம் தெரிவித்த நிலையில், மீண்டும் கால அவகாசம் நீடித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி, இம்மாதம், 31ம் தேதி வரை விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை கல்லுாரிகள், பல்கலையில் சமர்ப்பிக்கலாம்.

மாணவர் விடுதி விரைவில் திறப்பு

மூன்றரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதி, மாணவர்களின் பயன்பாட்டிற்கு, விரைவில் திறக்கப்பட உள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், அடித்தட்டு மக்கள், அதிகளவில் வசிக்கின்றனர்.மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லுாரி மாணவர்கள் விடுதி, 3.64 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என, அறிவித்தார்.
தண்டையார்பேட்டை, இரட்டை குழி தெருவில், மாணவர்கள் விடுதி கட்டுமான பணி, 2015 ஆகஸ்ட்டில் துவங்கி, வேகமாக நடந்து வந்தது.உடல்நல குறைவால், ஜெ., மரணமடைந்ததை அடுத்து, கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டன. சில மாதங்களுக்கு பின், மீண்டும் கட்டுமான பணிகள் துவங்கி, வேகமாக முடிவடைந்தன. தரைத்தளத்துடன், மூன்று மாடி கொண்ட, மாணவர்கள் விடுதி கட்டப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில், சமையலறையுடன் கூடிய உணவு சாப்பிடும் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாடிகளும், மாணவர்கள் தங்கும் அறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.அனைத்து கட்டுமான பணிகளும் முடிவடைந்த நிலையில், இக்கட்டடம், மாணவர்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்பட உள்ளது.