>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 18 மார்ச், 2018

கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை


நாகப்பட்டினம், நாகையில், அரசு துவக்கப் பள்ளியில், கிராம மக்கள் முயற்சியால், 'ஏசி' வகுப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.நாகை, அக்கரைப்பேட்டை டாடா நகரில், ஊராட்சி துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம்வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில், மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தன்னிறைவு திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. கிராம மக்கள் பங்களிப்பாக 1.50 லட்சம் மற்றும் அரசு நிதியாக மூன்று லட்சம் என, 4.50 லட்ச ரூபாய் மதிப்பில், இவை அமைக்கப்பட்டன.மேலும், கிராம மக்கள் சார்பில், 10 லட்ச ரூபாய் செலவில், பள்ளிக்கு தேவையான தளவாடப் பொருட்கள், அனைத்து வகுப்பறைகளுக்கும், 'லேப்டாப்' மற்றும் ஒரு வகுப்பறைக்கு குளிர் சாதன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சுரேஷ்குமார் பங்கேற்று, ஸ்மார்ட் வகுப்புகளையும், 'ஏசி' வகுப்பறையையும் துவக்கி வைத்தார்.

எல்.ஐ.சி.,யின் புதிய திட்டம் அறிமுகம்....

சென்னை, தனிநபர் மற்றும் குடும்பம் சார்ந்த நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும், எல்.ஐ.சி.,யின், 'பீமாஸ்ரீ' எனும் புதிய பாலிசி திட்டம், நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது.'பீமாஸ்ரீ' திட்டம், பங்குச்சந்தையுடன் இணையாத, லாபத்தில் பங்கேற்கும், குறிப்பிட்ட காலம் மட்டுமே, பிரீமியம் செலுத்தும் பாலிசியாகும்.
இதில், 8 வயது முதல் 55 வயது வரை, உள்ளவர்கள் சேரலாம். பாலிசி காலம் 14, 16 ,18 மற்றும் 20 ஆண்டுகள்; பிரீமியம் செலுத்தும் காலம், 10,12,14, மற்றும் 16 ஆண்டுகள் ஆகும்.
பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திர தவணைகளில் செலுத்தலாம். திட்டத்திற்கான, குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.10 லட்சம்; அதிகபட்ச வரம்பு இல்லை.முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, ஆயிரம் ரூபாய்க்கு, 55 ரூபாய் வீதம், உத்தரவாத தொகையும், 6வது ஆண்டில் இருந்து, பிரீமியம் செலுத்தும் காலம் வரை, 55 ரூபாய் வீதம், உத்தரவாத தொகையும், விசுவாச தொகையும் அளிக்கப்படுகிறது.மேலும், திட்டத்தில் வாழ்வு கால பயன், முதிர்வு தொகை பயன், இறப்பு தொகை பயன் என, மூன்று விதமான பயன்கள் உள்ளன. வாழ்வு கால பயன்களை, குறித்த காலத்தில் பெற, பணம் தேவைப்படும் நேரத்தில் விண்ணப்பித்தால், 
பணமீட்பு தொகையுடன், வட்டியும் வழங்கப்படும்.
முதிர்வு தொகையை, மொத்தமாக பெற, மாற்றாக ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் அல்லது 15 ஆண்டுகளில், தவணை முறையாக மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தவணையிலும் பெற்றுக் கொள்ளலாம்.
அதே போல், இறப்பு உரிம தொகையையும், தவணை முறையிலோ அல்லது மொத்தமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

உங்களிடமே நீங்கள் போட்டி போடுங்கள்: மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை....


உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து மாணவ -மாணவிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கலந்துரையாடல் புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை மாணவ -மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, கிண்டி ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியது:
மனதை ஒருமுகப்படுத்துவதென்பது கற்றலினால் வருவதல்ல. இறந்தகாலம் என்பது ஒரு சுமை; எதிர்காலம் என்பது கனவு; நிகழ்காலத்தில் தற்சிந்தனையுடன் வாழ்வதே மனதே ஒருங்கிணைக்க வழிவகுக்கும். 
உங்களிடமே போட்டி போடுங்கள்: மற்றவர்களை ஒப்பிட்டு அவர்களுடன் போட்டி போடுவதைவிட உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனித்திறமை உண்டு. ஒவ்வொரு நாளும் நாம் ஏற்கெனவே செய்த சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைக்க முயற்சி செய்யும் போதுதான், தன்னம்பிக்கை வளர்ந்து சிறந்த சாதனையாளராக உருவாக முடியும்.
மாணவ -மாணவிகள் நேரமே இல்லை என்று ஒருபோதும் கூறக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் உள்ளது. ஒருவர் தமக்கு நேரமே இல்லை என்று கூறுவாராயின், அவர் அவருடைய நேரத்தையும் வேலைகளையும் சரிவர திட்டமிடாதவராக கருதப்படுவார் என்று ஆளுநர் புரோஹித் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த 50 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு புத்தகங்கள் அளிக்கப்பட்டன. 
இதில், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் ஜெகந்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வின்வெளியில் ஒரு வருடம் தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம்..நாசா கண்டுபிடிப்பு

வாஷிங்டன்:

வின்வெளியில் ஒரு ஆண்டு தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.


இரட்டையர்களில் ஒருவரை வின்வெளியில் தங்க வைக்கும் ஆராய்ச்சியை நாசா மேற்கொண்டது. இந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த அஸ்ட்ரோநாட் ஸ்காட் கெல்லி என்பவர் சர்வதேச வின்வெளி மையத்தில் 340 நாட்கள் தங்கி இருந்தார். கெல்லி இரட்டையர்களில் ஒருவர்.

2016ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் பூமிக்கு திரும்பி வந்தார். சர்வதேச வின்வெளி மையத்தில் ஒரு ஆண்டு தங்கியிருந்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் கெல்லியின் ரத்த மாதிரி சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது.

அப்போது அவரது மரபணுவில் 7 சதவீதம் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. கெல்லியின் மற்றொரு சகோதரரின் டிஎன்ஏ.வுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த மாற்றம் உறுதியாகியுள்ளது.

இந்த தகவல் நாசாவின் இரட்டையர் ஆராய்ச்சி அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து எனது மரபணுவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அறிந்து கொண்டதாக கெல்லி தெரிவித்துள்ளார்.

பள்ளி விழாவில் அலங்கார மின்விளக்குகளால் மாணவர்கள் உள்பட 130 பேருக்கு கண்களில் பாதிப்பு....

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகளைப் பயன்படுத்தியதால், விழாவில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர் உள்பட 130 பேருக்கு கண் அழுத்தம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

ஏர்வாடியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் எஸ்.வி. இந்து தொடக்கப் பள்ளியில் 100}க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக நிகழ்ச்சி நடைபெற்ற அறையில் அதிக திறன் கொண்ட அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், விழாவில் பங்கேற்ற பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு இரவில் கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. கண்களில் நீர் வடியத் தொடங்கி, சிவந்தும் காணப்பட்டது. 
பள்ளியின் தாளாளர் பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியை (பொறுப்பு) சித்ரா, ஆசிரியர்கள் உள்பட 130 பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை காலை 83 குழந்தைகள், மாணவர்கள், பெற்றோர் உள்பட 117 பேர் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். இதுதவிர பாதிக்கப்பட்ட 13 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக கண் பார்வைத் திறன், கரு விழிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அனைவருக்கும் கண்களில் மருந்திட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், வலி நிவாரணம், எதிர்ப்பு சக்திக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டன.
கோட்டாட்சியர் இல. மைதிலி, சார் ஆட்சியர் ஆகாஷ், அரசு மருத்துவமனை டீன் எஸ்.எம். கண்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், நான்குனேரி வட்டாட்சியர் வர்கிஷ் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆட்சியர் விசாரணை: மருத்துவமனைக்கு வந்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நடந்த சம்பவம் குறித்து குழந்தைகள், பெற்றோர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: ஏர்வாடி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தியதால் குழந்தைகள், பெற்றோர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 
அவர்களுக்கு கண் பார்வையில் எந்தவித பாதிப்பும் இல்லை. 2 தினங்களில் கண்ணில் ஏற்பட்ட எரிச்சல், பாதிப்பு குணமாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அனைவரும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஏர்வாடியில் அரசு மருத்துவக் குழுவினர் 2 தினங்கள் முகாமிட்டு வீடு வீடாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களின்போது எந்த மாதிரியான விளக்குகள் பயன்படுத்துவது என்பது குறித்து பல்வேறு துறைகள் மூலம் ஆய்வு செய்து தகுந்த சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார் அவர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பள்ளித் தாளாளர், ஒலி ஒளி அமைத்தவர்கள் மீது ஏர்வாடி போலீஸர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுப்பள்ளிக்காண வீடியோ விளம்பரம் வெளியீடு .....


தேர்வுத் தாளை திருத்த மாட்டோம்... ஜாக்டோ ஜியோ முடிவு

திருச்சி: பொது தேர்வு விடைத்தாளை திருத்த மாட்டோம்... புறக்கணிக்கிறோம் என்று ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.


ஏப்.,12-ல் பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில் பொது தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உழைப்பு ஊதியத்தை அதிகரித்து தர வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சனி, 17 மார்ச், 2018

19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைப்பு

காலிப்பணியிடங்கள் சரியாக தயாரிக்கப்படவில்லை  என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு புகார் வந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் சரி செய்த பின்னர் கலந்தாய்வு நடைபெறவேண்டும் என்ற கருத்திற்கிணங்க 19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஏர்வாடியில் பள்ளி மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிப்பு

ஏர்வாடியில் மின்விளக்கு வெளிச்சத்தால் பள்ளி மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நேற்று இரவு ஆண்டு விழா நடந்தது. மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர். விழாவிற்காக சக்தி வாய்ந்த மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
விழா முடிந்த நிலையில், இன்று காலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு கண்ணில் வீக்கம், எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 60 மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்கைகாக அனுமதிக்கப்பட்டனர்.
அதிக வெளிச்சம் காரணமாக கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2 நாளில் இது சரியாகிவிடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஒளி, ஒலி அமைப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது ஏர்வாடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கண் எரிச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்களை சந்தித்து நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆறுதல் கூறினார். அப்போது மாணவர்கள் உட்பட அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Tamil Nadu school education invites all the Teachers to watch the updates of school education and to showcase their students talents to the world.

What should you do?
just click the below link and like the official page
1.CLICK the link
2.LIKE the page
share this information with others
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் அங்கீகரிக்கப்பட்ட முகநூல் பக்கத்தை நீங்கள் பார்க்கவும் உங்கள் மாணவர்களின் திறமையை உலகறிய செய்ய அருமையான வாய்ப்பு
கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து லைக் பட்டனை அழுத்தவும்.
பிறருடன் அவசியம் பகிரவும்

புறக்கணிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் : பாரபட்சத்தால் அதிருப்தி!!!

பத்தாம் வகுப்பு தேர்வு பணியில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக 
நியமிக்கப்பட்ட மூத்த பட்டதாரி ஆசிரியர்களின் அலுவலக பணிக்கு ஊழியர் நியமிக்காததால் கண்காணிப்பு பணி பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.new
 பத்தாம் வகுப்பு தேர்வையொட்டி தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களாக உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் நியமிக்கப்படுவர். இரண்டு ஆண்டுகளாக உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்படாததால் முதன்மை கண்காணிப்பாளர் நியமனத்தில் சிக்கல் நீடித்தது.
இதனால் அப்பணிக்கு மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் இந்தாண்டு நியமிக்கப்பட்டனர். ஆனால் தலைமையாசிரியர்களுக்கு வழங்குவது போல் எழுத்தர், அலுவலக உதவியாளர் (ஓ.ஏ.,) ஒதுக்கீடு பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.இதனால் கண்காணிப்பு பணியுடன் பேப்பர் பண்டல் பிரிப்பது, ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மணி அடிப்பது உட்பட ஓ.ஏ.,க்கள் பணியையும் அவர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர்.
இதனால் கண்காணிப்பு பணியில் முழு கவனம் செலுத்த முடியவில்லை என புகார் எழுந்துள்ளது.பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், "தலைமையாசிரியர் பற்றாக்குறையால் கடைசி நேரத்தில் பட்டதாரி ஆசிரியரை முதன்மை கண்காணிப்பாளராக நியமித்தனர். இதனால் பிரச்னை ஏற்பட்டது. அடுத்தாண்டு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பற்றாக்குறை இருந்தாலும் கூடுதலாக தின ஊதியம் கொடுத்து, வினாத்தாள் கட்டுக் காப்பு மையத்தில் இரண்டு தலைமையாசிரியர்களை ஏன் நியமிக்க வேண்டும். அந்த இடத்தில், ஒரு பட்டதாரி ஆசிரியரை நியமிக்கலாம்," என்றார்.

வெள்ளி, 16 மார்ச், 2018

பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்.....

பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 படிப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 
அதன்படி கடந்த 7ம் தேதி தேர்வுகள் ஆரம்பித்தது. அன்றைய தினம் மொழி பாட தேர்வுகள் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. தமிழகம், புதுச்சேரியில் 27,994 மையங்களில் 8.6 லட்சம் மாணவ, மாணவிகள் பொது தேர்வை எழுதினர். அதில், 1 மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கூறினர்.
இதேபோல், இன்று ஆங்கிலம் 2ம் தாள் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் 1 பொது தேர்வுக்கான தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வி துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மத்திய, மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் நுழைவு தேர்வுக்கு தயார் ஆவதிலேயே முணைப்பு காட்டி வந்தனர். இந்நிலையில், பிளஸ் 1 படிப்பை பொது தேர்வாக நடத்த முடிவு செய்தது அனைத்து மாணவர்களையும் பிளஸ் 1 பாடத்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வைத்துள்ளது. 

பள்ளி கல்வித் துறையில் மாற்றம்; அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு/.....

பள்ளிக் கல்வித் துறை யில், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள தற்கு, ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஒரு ஆய்வாளர்; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிக்க, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி இருப்பர். தொடக்க கல்வியில், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம், இரண்டு தொடக்க கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், மூன்று வகை நிர்வாகங்களை கலைத்து விட்டு, ஒரே ஒரு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி பதவியை மட்டும் வைத்திருக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதன்படி, வட்டாரஅளவில், அனைத்து அரசு மற்றும் தனியார் நர்சரி, மெட்ரிக், மேல்நிலை பள்ளி களின் நிர்வாகங்களை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரி கவனிப்பார். இந்த திட்டத்தால், ஏ.இ.இ.ஓ.,க்கள், தற்போது கவனிக்கும், தொடக்க பள்ளி நிர்வாகத்தை மட்டுமின்றி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டும்.

அதனால், வேலைப்பளு பல மடங்கு அதிகரிப்பதுடன், நிர்வாக பணிகளை முடிக்க, காலதாமதம் ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போதைய நிலையில், மூன்று இயக்குனரகத்துக்கும் தனியாக, மாவட்ட அளவில் அதிகாரிகள் இருப்பதே தொடர வேண்டும்.

அதிகாரிகள் எண்ணிக்கையை குறைத்து, ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு மட்டும், முழு அதிகாரத்தை கொடுத்தால், யார் பெரியவர் என்ற, அதிகார பிரச்னையும் அதிகரிக்கும்.ஏ.இ.இ.ஓ., பதவி என்பது, கீழ்நிலையில் உள்ள பதவி. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஏ.இ.இ.ஓ.,க்களை விட சீனியர்களாக இருப்பதால், முரண்பாடுகள் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையிலான குழு அறிக்கை அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர்-ஆசிரியர்கள் கலந்துரையாடல், பிற திறன்களில் மாணவர்களின் நிலை, கல்விச்சூழலில் சந்திக்கும் சவால் குறித்தும் ஆய்வு செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: 9.6 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 9.6 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் 2017-18ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்,மார்ச் 16  தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவதாக இன்று மொழிப்பாடத்தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 12,337 பள்ளிகளிலிருந்து மொத்தம் 9,64,491 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.

இவர்களில் 4,81,371 பேர் மாணவிகள், 4,83,120 பேர் மாணவர்கள், மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுத உள்ளனர். அதே போல், தனித்தேர்வர்களாக 11,098 பெண்கள், 25,546 ஆண்கள், 5 திருநங்கைகள் தேர்வு எழுத உள்ளனர். சென்னை மாநகரில் 567 பள்ளிகளிலிருந்து 211 தேர்வுமையங்களில் மொத்தம் 26,043 மாணவிகள் மற்றும் 24,713 மாணவர்கள் என 50,756 பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரியில் 305 பள்ளிகளிலிருந்து 48 தேர்வுமையங்களில் மாணவிகள் 8,694 பேர், மாணவர்கள் 8,820 பேர் என மொத்தம் 17,514 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மொத்தம் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 237 புதிய தேர்வு மையங்கள் மாணவர்கள் நலன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள 186 பேர் தேர்வு எழுத 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கும் 3,659 மாற்றுத்திறனாளிகளில் 1,898 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசமும் அளிக்கப்படுகிறது. 1,067 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்களிப்பு  வழங்கப்பட்டுள்ளது. 

10ம் வகுப்புத் தேர்வு: கைதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு வருகிற 16/03/2018 அன்று துவங்கி 20/04/2018 வரை நடைபெறவுள்ளது. தமிழகம், புதுச்சேரி என இந்தத் தேர்வை 10 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதில் தேர்வு எழுதும் 186 சிறை கைதிகள் மற்றும் 3,659 மாற்றுத் திறனாளிகளுக்கு எனப் பிரத்தியேக ஏற்பாடுகளைத் தேர்வு துறை செய்துள்ளது.

சிறை கைதிகள்:

இவ்வாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புழல் ஆகிய சிறைகளிலுள்ள 186 சிறைவாசிகள் எழுதுகிறார்கள். இவர்களுக்கான தேர்வு மையங்கள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணாக்கருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து அரசு விலக்களித்து உள்ளதால், தமிழ் வழியில் பயின்ற இவர்களிடமும் தேர்வு கட்டணம் வசூலிக்கப் படவில்லை. இவ்வாண்டு தமிழ் வழியில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இவர்களுடன் சேர்த்து 5,55,621 ஆகும்.

மாற்றுத் திறனாளி தேர்வர்கள்:

டிஸ்லெக்சியாவால்  பாதிக்கப்பட்டவர்கள், கண்பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் அரசுத் தேர்வுத் துறையால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குத் தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் கூடுதல் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  3,659 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 1898 பேருக்குச் சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அதைத் தவிர 1067 மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு மொழிப்பாடத்தில் இருந்தும் விலக்களிக்கப் பட்டுள்ளது.

வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவம்....

வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவத்தையொட்டி நேற்று காலை மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கனூர்,

திருக்கனூரை அடுத்த பி.எஸ்.பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலையில் அந்த பள்ளியின் மாணவன் வேல்முருகன் (வயது 10), வகுப்பறையில் தூங்கி விட்டான். இது தெரியாமல் பள்ளி நேரம் முடிந்ததும் ஆசிரியர் பள்ளியை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் மாலை 5.30 மணி அளவில் தூக்கம் கலைந்து எழுந்த மாணவன் வேல்முருகன் பள்ளியில் யாரும் இல்லாததைக் கண்டும், பள்ளி கதவு பூட்டி இருப்பதை அறிந்தும் வகுப்பறை கதவில் ஏறி உதவி கேட்டு கூச்சல்போட்டான். சத்தம் கேட்டு அந்தபகுதியைச் சேர்ந்தவர்கள் திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மாணவன் வேல்முருகனை மீட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளி தொடங்கியதும், அந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் சிலர் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பள்ளியில் தொடர்ந்து தவறுகள் நடப்பதாகவும், அவை மூடி மறைக்கப்படுவதாகவும், மாணவ-மாணவிகளை வகுப்பறைகளையும், கழிவறைகளையும் சுத்தம் செய்யச் சொல்வதாகவும் குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினார்கள். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கல்வித்துறை 5-ம் வட்ட ஆய்வாளர் பக்கிரிசாமி மற்றும் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவனை பள்ளியில் வைத்து பூட்டிவிட்டு சென்ற ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கல்வித்துறை அதிகாரி பக்கிரிசாமி விசாரணை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி துறை அதிகாரி உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பெற்றோரின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்தி....

சென்னை,
தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-

* நிலுவையிலுள்ள பல்வேறு வழக்குகளாலும், 2011-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகளின் எல்லை வரையறைப் பணிகளை தமிழ்நாடு எல்லை வரையறை ஆணையம் செய்து கொண்டிருப்பதாலும், மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்த பின்னரே, மாநிலத் தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட இயலும். எனினும், வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தும் செலவினங்களுக்காக ரூ.172.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


* 2018-2019-ம் ஆண்டிற்கு, மாநில நிதிக்குழுவின் பரிந்துரைப்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,980.33 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,834.75 கோடியும் பகிர்ந்தளிக்கப்படும். அதேபோல் மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,975.07 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,877.10 கோடியும் பகிர்ந்தளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் 1,496 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் பற்​றாக்​குறை.....

நாட்​டில் 1,496 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் பற்​றாக்​கு​றை​யாக இருப்​ப​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. அதற்​குத் தீர்வு காணும் வித​மாக கூடு​தல் எண்​ணிக்​கை​யி​லான அதி​கா​ரி​களை தகு​தித் தேர்​வு​கள் மூலம் நிய​மிக்​கும் நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்டு வரு​வ​தா​க​வும் அரசு கூறி​யுள்​ளது.
கடந்த சில ஆண்​டு​க​ளாக மத்​திய, மாநில அர​சு​க​ளின் பல்​வேறு துறை​க​ளில் காலி​யாக இருக்​கும் முக்​கி​யப் பொறுப்​பு​க​ளுக்கு ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் நிய​மிக்​கப்​ப​டா​மல் உள்​ள​னர். இதன் கார​ண​மாக உரிய முடி​வு​கள் எடுக்​கப்​ப​டா​மல் சில திட்டங்​கள் கால​தா​ம​தம் ஏற்​ப​டு​வ​தாக அவ்​வப்​போது செய்​தி​கள் வெளி​யா​கின்​றன. போதிய அதி​கா​ரி​கள் இல்​லா​ததே காலிப் பணி​யி​டங்​கள் நிரப்​பப்​ப​டா​மல் இருப்​ப​தற்​குக் கார​ணம் எனக் கூறப்​ப​டு​கி​றது.
இந்​நி​லை​யில், இந்த விவ​கா​ரம் தொடர்​பாக மாநி​லங்​க​ள​வை​யில் வியா​ழக்​கி​ழமை கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு மத்​திய பணி​யா​ளர் நலத் துறை இணை​ய​மைச்​சர் ஜிதேந்​திர சிங் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதில்:
நாடு முழு​வ​தும் 6,500 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் ஆட்சிப் பணி​யில் இருக்​க​லாம் என்ற வரம்பு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போ​தைய நில​வ​ரப்​படி 5,004 அதி​கா​ரி​கள் மட்டுமே இருக்​கின்​ற​னர். 1,496 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் பற்​றாக்​கு​றை​யாக உள்​ள​னர். காலி​யாக உள்ள இடங்​களை நிரப்​பு​வ​தற்​குத் தேவை​யான நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.
ஆண்​டொன்​றுக்கு 180 ஐஏ​எஸ் அதி​கா​ரி​களை மத்​திய குடி​மைப் பணி​கள் தேர்​வு​கள் மூலம் தேர்ந்​தெ​டுக்​கும் நடை​முறை 2012-ஆம் ஆண்டு கொண்டு வரப்​பட்​டது. அதன் அடிப்​ப​டை​யில் தற்​போது வரை அதி​கா​ரி​கள் நிய​மிக்​கப்​பட்டு வரு​கின்​ற​னர் என்று அந்த பதி​லில் தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தது.
2,490 சொத்​து​க​ளுக்கு முடக்​கம்: ​இ​த​னி​டையே, மாநி​லங்​க​ள​வை​யில் எழுப்​பப்​பட்ட மற்​றொரு கேள்​விக்​குப் பதி​ல​ளித்த மத்​திய வீட்டு​வ​ச​தித் துறை அமைச்​சர் ஹர்​தீப் சிங் பூரி, ''தில்​லி​யில் விதி​க​ளுக்​குப் புறம்​பா​கக் கட்டப்​பட்ட 2,490 சொத்​து​கள் கடந்த 4 மாதங்​க​ளில் முடக்​கப்​பட்​டுள்​ளன'' என்​றார்.
வடக்கு, கிழக்கு, தெற்கு மற்​றும் புது தில்லி பெரு நகர மாந​க​ராட்​சி​கள் சார்​பில் அந்த நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்​ட​தா​க​வும் அவர் விளக்​க​ம​ளித்​துள்​ளார்.
​கங்கை திட்டத்​துக்கு ரூ.3,633 கோ​டி:​ மக்​க​ள​வை​யி​லும் கேள்வி நேரத்​தின்​போது பல்​வேறு விவ​கா​ரங்​கள் தொடர்​பாக தக​வல்​கள் கோரப்​பட்​டன. அவற்​றில் கங்கை நதி​யின் வழித்​த​டத்​தில் உள்ள படித்​து​றை​க​ளைத் தூய்​மைப்​ப​டுத்​து​வது குறித்து ஒரு கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு மத்​திய நீர்​வ​ளத் துறை இணை​ய​மைச்​சர் சத்​ய​பால் சிங் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதில்:
கங்கை நதியை ஒட்டி​யுள்ள 361 படித்​து​றை​களை அழ​கு​ப​டுத்​த​வும், தூய்​மைப்​ப​டுத்​த​வும் கடந்த 3 ஆண்​டு​க​ளில் ரூ.3,633 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அவற்​றில் 228 படித்​து​றை​க​ளில் பணி​கள் முழு​மை​யாக நிறை​வ​டைந்​துள்​ளன என்று அந்த பதி​லில் தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தது

PGTRB - வேதியியல் 6 மதிப்பெண் வழங்கிய வழக்கில் 6 வார காலத்திற்குள் பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு....