>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 15 மார்ச், 2018

கூகுள் மேப்ஸ்-ன் 4 புதிய அப்டேட்ஸ் என்ன தெரியுமா?

கூகுள் மேப்ஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் புதிய அப்டேட்டில் நான்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் கூகுள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள் குறிப்பிட்ட லொகேஷனை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள வழி செய்வதோடு வேகமாகவும் செய்ய உதவுகிறது. மேப்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி முன்பை விட கூடுதல் மொழிகளில் செயலிகளை இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.
பிளஸ் கோடுகள்:
கூகுள் மேப்ஸ் செயலியில் பிளஸ் கோடுகள் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் இந்தியவிலும் வழங்கப்பட்டுள்ளது.
ஆல்ஃபா நியூமெரிக் கோடுகளின் முதல் நான்கு இலக்க எண்கள் பகுதியை குறிக்கும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது. இதனுடன் கூடுதல் எண்களை பதிவிடும் போது குறிப்பிட்ட பகுதியின் சரியான இடத்தை சூம் செய்யும். பிளஸ் கோடுகளை மேப்ஸ் செயலியில் இருந்தபடியே உருவாக்கி அதனை அனைத்து வகையான குறுந்தகவல் சேவை மூலமாகவும் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். 
மேலும் பிளஸ் கோடுகளை கூகுள் சர்ச் பாரிலும் பேஸ்ட் செய்ய முடியும். இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட இடம், கூகுள் மேப்ஸ் சேவையில் தானாக திறக்கும்.
முகவரி சேர்க்கலாம்:
கூகுள் மேப்ஸ்-இல் இதுவரை சேர்க்கப்படாத முகவரியை சேர்க்கும் சேவையை இந்த வசதி வழங்குகிறது. இந்த அம்சம் கொண்டு குறிப்பிட்ட இடத்தில் பின் வைத்து அதனை மற்றவர்கள் பார்க்கும் படி செய்ய முடியும். இந்த அம்சத்துடன் வெரிஃபிகேஷன் ஃபில்ட்டர் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
ஸ்மார்ட் அட்ரெஸ்:
ஸ்மார்ட் அட்ரெஸ் அம்சம் செயற்கை நுண்ணறிவு கொண்டு வாடிக்கையாளர்கள் தேடும் இடத்தின் அருகாமையில் இருக்கும் புகழ் பெற்ற அல்லது அனைவருக்கும் தெரிந்த இடங்களை காண்பிக்கும். இதை கொண்டு வாடிக்கையாளர்கள் தேடும் குறிப்பிட்ட இடத்தின் அருகாமையில் சென்றிட முடியும்.
கூடுதல் மொழிகள்:
கூகுள் மேப்ஸ் செயலியில் ஆறு இந்திய மொழிகளுக்கான சப்போர்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வாய்ஸ் நேவிகேஷன் வசதியை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, பெங்காலி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் தேட முடியும். முன்னதாக இந்தியாவில் கூகுள் மேப்ஸ் சேவையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு இருந்தது.

செவ்வாய், 13 மார்ச், 2018

CPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் 80 C ல் ரூ:1,50,000 த்திற்கு மேல்கூடுதலாக சேமிப்பு இருப்பின் தங்கள் CPS தொகையில் ரூ50000 வரை 80CCD (1B)ல் கழித்துக்கொள்ளலாம் என பல்வேறு மாவட்டங்களில் வருமான வரி துறையும், கருவூல கணக்குத்த்துறையும் இணைந்து நடத்திய கூட்டத்தில் அறிவுறித்தயுள்ளது.

வருமான வரி படிவத்தில், Under chapter VI A ல் ரூ:150,000 வரை கழிக்கலாம். CPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு  மட்டும் ஒரு சலுகை உண்டு. ரூ:1,50,000 த்திற்கு மேல்கூடுதலாக சேமிப்பு இருப்பின், படிவத்தில் காட்டியவாறு chapter VI ல் 150000, போக மீதமுள்ள தொகையினை ரூ50000 வரை 80CCD (1B)ல் கழித்துக்கொள்ளலாம். (அவர் CPS ல் சுமார் 82000 காட்டியிருந்தால் 32000+50000 என பிரித்துக்கொள்ளவும் கொள்ளவும்,) Tax Payable for 2016-2017 ல் ரூபாய் 5 லட்சம் அல்லது அதைவிட குறைவாக வருபவர்களுக்கு பிரிவு 87A ன்படி ரூ:5000 கழித்துக்கொள்ளலாம். ரூபாய் 250000-வரி இல்லை, ரூபாய் 250001முதல் 500000 வரை 10% வரி, ரூபாய் 500001 முதல் 1000000 வரை 20% வரி செலுத்த வேண்டும்.
கூடுதலாக ரூபாய் 50000 வரை 80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் ரூபாய் 150000 மேல் சேமிப்பு உள்ளவர்கள் கூடுதலாக ரூபாய் 50000 வரை 80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம் என மண்டல இணை இயக்குநர், கருவூல கணக்குத் துறை அலுவலர் தெளிவுரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருச்சி மாவட்டம் கிளைக்கு வழங்கியுள்ளார். அவர்களுக்கு அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தகவல்: உதுமான் மாவட்டச் செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருச்சி மாவட்டம் 9790328342

திங்கள், 12 மார்ச், 2018

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கையேடு

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கையேடு




தனி ஊதியம் 750பதவி உயர்வில் சேர்த்தது தவறு திருப்பூர் DEEO ஆணை!!!

PG Teachers - முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - CM CELL Reply

4ஆம் வகுப்பு மாணவர்களுக்காக டிஜிட்டல் வடிவில் QR CODE தொழில்நுட்பத்தில் பாடங்கள்

ஞாயிறு, 11 மார்ச், 2018

ஓய்வூதியர்கள் குறைகளை எழுதி அனுப்பலாம்

குறை தீர்க்கும் கூட்டத்திற்கு, ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை எழுதி அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில், ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம், ஏப்., 10ல் நடக்கிறது.
இதில், சென்னையைச் சேர்ந்த, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் இருப்பின், எழுதி அனுப்பலாம்.மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 62, ராஜாஜி சாலை, சென்னை- - 1 என்ற முகவரிக்கு, 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பருவ தேர்வு:அட்டவணை வெளியீடு

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்தேர்வுகால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கும், ஏப்., 9ம்தேதி தேர்வுகள் ஆரம்பமாகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், தேர்வுகள், ஏப்., 9ம்தேதி துவங்கி, 17ம்தேதி வரையும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில், 19ம்தேதி வரையும் நடக்கிறது.
துவக்க, நடுநிலையில், 1, 3, 5, 7ம் வகுப்புகளுக்கு, காலை, 10:00 மணி முதல் 12:30 மணி, 2, 4, 6, 8ம் வகுப்புகளுக்கு, மதியம், 2:00 மணி முதல் 4:30 மணிவரை, உயர்நிலை மற்றும் மேல்நிலையில், 6, 7, 8 மற்றும் 9ம்வகுப்புகளுக்கு, மதியம், 1:30 மணி முதல் 4:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

மூன்றாம் பருவ தேர்வு:அட்டவணை வெளியீடு

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்தேர்வுகால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது.அனைத்து பள்ளிகளுக்கும், ஏப்., 9ம்தேதி தேர்வுகள் ஆரம்பமாகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், தேர்வுகள், ஏப்., 9ம்தேதி துவங்கி, 17ம்தேதி வரையும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில், 19ம்தேதி வரையும் நடக்கிறது.
துவக்க, நடுநிலையில், 1, 3, 5, 7ம் வகுப்புகளுக்கு, காலை, 10:00 மணி முதல் 12:30 மணி, 2, 4, 6, 8ம் வகுப்புகளுக்கு, மதியம், 2:00 மணி முதல் 4:30 மணிவரை, உயர்நிலை மற்றும் மேல்நிலையில், 6, 7, 8 மற்றும் 9ம்வகுப்புகளுக்கு, மதியம், 1:30 மணி முதல் 4:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

விளையாட்டு விளையாடுவதற்கு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஏன் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்கான 50 காரணங்கள்...

உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் சிங்கப்பூரில் நடக்கும் கல்வியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க இந்திய அளவில் அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வு!



மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளவில் மைக்ரோசாப்ட் மென்பொருட்களை வகுப்பறையில் சிறப்பாக பயன்படுத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களை ஒருங்கிணைத்து கருத்தரங்கு நடத்துகிறது. அக்கருத்தரங்கில் கலந்து கொள்ள உலகளவில் 300 ஆசிரியர்களைத் தேர்வு செய்தது . இந்தியாவில் இருந்து 15 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஓரே ஓர் அரசுப்பள்ளி ஆசிரியராய் கருணைதாஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1st std to 10th std all  maths formulas- Tamil medium

..........................................................................................

அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்.....

சென்னை:'அரசு துறைகளை ஒப்பந்தமயமாக்கும் அரசாணையை, திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து தாலுகா தலைநகரங்களிலும், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சங்கத்தின் பொதுச் செயலர், அன்பரசு விடுத்துள்ள அறிக்கை:அரசின் செலவுகளை குறைக்க, அரசு துறைகளில் உள்ள, தேவையற்ற பணியிடங்களைக் கண்டறிந்து, அவற்றில் ஒப்பந்த அடிப்படையில், ஆட்களை நியமிக்க, பணியாளர் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதை, இப்போதே எதிர்க்காவிட்டால், ஏற்கனவே காலியாக விடப்பட்டுள்ள, மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாது.வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலமும், தேர்வாணைய தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் எதிர்காலமும், குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும். 
எனவே, பணியாளர் சீரமைப்பு குழு நியமன அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், அனைத்து தாலுகா தலைநகரங்களிலும், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

11 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க கூடாது; ஓடிசாவில் அதிரடி முடிவு

 கோடை வெயில் தாக்கம் காரணமாக 11 மணிக்கு மேல் பள்ளிகள் திறந்திருக்க கூடாது என்று ஓடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோடை காலங்களில் பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓடிசா மாநில அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளின் வேலை நேரம் காலை 6.30 மணி முதல் 10.30 மணிக்கு முடிவடைய வேண்டும், மதிய உணவு இடைவேளை காலை 10 மணிக்கு வழங்கப்பட வேண்டும். 11 மணிக்கு மேல் பள்ளிகள் திறந்திருக்க கூடாது. வெயில் காலங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் முதல் உதவி ஆகிய வசதிகள் இருக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது குடை மற்றும் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வர அறிவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் கூட்டுறவு சங்க தேர்தல் பணி தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் அவதி....

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அலுவலர்களாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் சரகத்தில் உள்ள, 572 பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, மார்ச், 12, 19, 26, ஏப்ரல், 2 ஆகிய தேதிகளில், தேர்தல் நடத்தப்பட உள்ளது.இதற்காக, வாக்காளர்பட்டியல் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்களாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே, பெரும்பாலான ஆசிரியர்கள், தேர்வுப் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், இந்த தேர்தல் பணி, கூடுதல் சுமையை ஏற்படுத்திஉள்ளது.
இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:கூட்டுறவு சங்க தேர்தல், ஒரு நாளில் நடந்தாலும், அதற்கான பணிகள், பயிற்சி என, பலநாட்களை செலவிட வேண்டியிருக்கும்.ஏற்கனவே, பெரும்பாலான ஆசிரியர்கள்,தேர்வுப் பணிக்கு சென்று விட்டனர்.பள்ளியில் ஓரிருஆசிரியர்களை வைத்து சமாளிக்கும் சூழலில், தேர்தல் பணிக்கும்ஆசிரியர்களை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்வு நேரத்தில், இத்தேர்தல் பணியைத் தவிர்த்திருக்கலாம்.இவ்வாறு அவர்கள்கூறினர்.

சனி, 10 மார்ச், 2018

பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; ஏப்., 6ல் முடிகிறது. மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்., 16ல் முடிகிறது. மார்ச், 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு தேர்வு, ஏப்., 20ல் முடிகிறது. பொது தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 20க்குள் தேர்வுகளை முடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.


விடுப்பு நாட்கள்: இதையடுத்து, ஏப்., 21 முதல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டு, ஜூன், 1, வெள்ளிக்கிழமை துவங்குகிறது. அன்று வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து, கோடை விடுமுறையை, ஜூன், 3 வரை நீட்டிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளத
வழக்கமாக ஜூன், 1ம் தேதி, வார வேலைநாளாக இருந்தால், அன்றே பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறை சேர்த்து, ஜூன், 3 வரை விடுமுறையை நீட்டிக்கப்பட உள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு, 31 நாட்கள் தான் விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு, 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது.கடந்த ஆண்டு வரை, தொடக்க பள்ளிகள், ஏப்ரல், 30 வரை இயங்கின. நடப்பு கல்வி ஆண்டில், தொடக்க பள்ளி வேலை நாட்களை, 220 நாளில் இருந்து, 210 நாட்களாக, தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது

உயிர்களுடன் பழகும் பணியில் ஆசிரியர்கள்:-தொடக்கக் கல்வி அலுவலர் உருக்கம்!!!

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் இயக்குனர் சுற்றறிக்கை!!!

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு 
கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திறந்துவைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்தது, பள்ளி விளையாட்டு விழாவின்போது வாயு உருளை வெடித்து மாணவர் உயிரிழந்தது, பள்ளிக் கட்டிடத்தின் மாடியிலிருந்து மாணவர் விழுந்து உயிரிழந்தது போன்ற துயரமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்றபோதிலும், பள்ளி நிர்வாகங்களின் கவனமின்மை காரணமாகவும், மெத்தனப்போக்கினாலும் நடைபெற்றுவருவது ஏற்கத்தக்கதல்ல.
பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகம் மட்டுமே முழுப்பொறுப்பாகும். பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை நம்பியே தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
மாவட்ட அளவில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் அமைக்கப்படும் குழுவால் அளிக்கப்படும் அறிக்கையின் மீது நடவடிக்கை மேற்கொண்டு சுட்டிக்காட்டப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாக பிரதிநிதி, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும்.
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகம் முழுமையும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும்.
முட்புதர்கள், கழிவு பொருட்களின் குவியல், கற்குவியல் போன்ற விஷ ஜந்துக்களின் புகலிடங்கள் இல்லாமல் பள்ளி வளாகம் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும்.
பள்ளி வளாகத்தில் கிணறு இருப்பின் அதனை தடிமனான இரும்புக்கம்பி கொண்டு வலை அமைத்து பாதுகாப்பாக மூடவேண்டும். கிணற்றை சுற்றி சுவர் எழுப்பப்பட வேண்டும். கிணற்றுக்கு செல்லும் வழி மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தால் அதனை மூடி பாதுகாப்பாக பூட்டிவைக்க வேண்டும்.
பள்ளிக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்குச் செல்லும் வழி மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும். மின் இணைப்புகள் மற்றும் மின் சாதனங்களால் பள்ளிக் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பராமரிக்க வேண்டும்.
 ஆய்வகத்தில் பயன்படுத்தும் அமிலம் மற்றும் ரசாயனங்கள் உரிய ஆசிரியரின் மேற்பார்வையில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
மழலையர் மற்றும் தொடக்கநிலை வகுப்பு குழந்தைகளை நடத்தாட்டிகள் உதவியுடன் கழிவறைக்கு அழைத்துச்சென்றுவர ஏற்பாடு செய்யப்பட வேண்டும். கழிவறைக்குள் எக்காரணம் கொண்டும் நீர்த்தேக்கத் தொட்டி இருக்கக் கூடாது. குழாய் வழியாக மட்டுமே கழிவறைக்குள் தண்ணீர் செல்ல வேண்டும். கழிவுநீர் தேக்கத்தொட்டி பாதுகாப்பாக மூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும்.
அதனை சுத்தம் செய்யும் பணி விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலங்கள் பள்ளிக் குழந்தைகள் கைகளுக்கு அகப்படாவண்ணம் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
 பள்ளிக் குழந்தைகளின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வாயு, எரிவாயு உருளை பயன்பாடு, மின்சாதனங்கள் பயன்பாடு போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். பள்ளிக் குழந்தைகளை உரிய அலுவலரின் முன் அனுமதி இல்லாமல் பள்ளி வளா கத்தினைவிட்டு வெளியே அழைத்துச்செல்லக் கூடாது.
கல்வி நிறுவனங்களின் வாகன விபத்தினை தடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது!!!

மருத்துவ படிப்பில் சேர இந்தியா முழுவதும் ‘நீட்’ என்கிற தேசிய தகுதி மற்றும்
நுழைவுத்தேர்வு அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதலே நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டது.
தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு கடந்த ஆண்டு வரை 2 ஆயிரத்து 900 இடங்கள் இருந்தன. அவற்றில் 455 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிட்டது.
மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே தலா 150 இடங்கள் இருந்தன. வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக 2 மருத்துவ கல்லூரிகளிலும் தலா 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் ஏற்கனவே 100 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு 50 இடங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 250 இடங்கள் அதிகரித்து உள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ளது.
தமிழகத்தில் 11 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1,450 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டுக்கு 881 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 569 இடங்களும் அடங்கும்.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 12-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு மே 6-ந் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அலுவலர்கள் குழு மூலம் பார்வையிடுதல் மற்றும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்புதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்