>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 29 நவம்பர், 2017

4 மாணவியர் தற்கொலை: 18 தற்காலிக ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'

வேலுார்: நான்கு மாணவியர் தற்கொலையை அடுத்து, அந்த பள்ளியில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த, பனப்பாக்கத்தில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 16 வயதுடைய நான்கு மாணவியர், பிளஸ் 1 படித்து வந்தனர். 


இவர்களை ஆசிரியர் திட்டியதால், நவ.,24ல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.மாவட்ட கல்வி அலுவலர், அமுதா, நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விசாரணை செய்தார். அதில் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியைகள், மாணவியரை மிகவும் அசிங்கமாகவும், சாதி பெயரை குறிப்பிட்டு திட்டுவதும் தெரியவந்தது.

பட்டியல் தயாரிப்பு : இதைடுத்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியைகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், பள்ளியில் பணியாற்றும், 48 ஆசிரியைகளில், 18 பேர் தற்காலிகமாக பணியாற்றி வருவது தெரியவந்தது.தற்காலிக ஆசிரியர்கள், 18 பேரையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நேற்று கூண்டோடு டிஸ்மிஸ் செய்தார். மேலும், இவர்கள் வேறு எந்த அரசு பள்ளியிலும் பணியாற்றவும் தடை விதித்துள்ளார்.மாணவியர் தற்கொலை விவகாரத்தில், தற்காலிக ஆசிரியர்கள் பலர் காரணமாக இருந்துள்ளதால், அவர்கள் பனப்பாக்கத்தை விட்டு செல்லவும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என, தனிப்படை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

வீடுகளில் டியூஷன் : இந்நிலையில், பள்ளியில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியைகள் சிலர், தங்கள் வீடுகளில், 'டியூசன்' எடுத்து வருவதாகவும், இதில், மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவியரை சேரும்படி கட்டாயப்படுத்துவதாகவும் விசாரணையில் மாணவியர் கூறினர்.
இதையடுத்து, 'பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், யாரும் தங்கள் வீடுகளில் டியூசன் நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் அவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, மாவட்ட கல்வி அலுவலர் அமுதா எச்சரித்துள்ளார்.வேலுார் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மன நல மருத்துவர் நேற்று பள்ளிக்கு சென்று, 10ம் வகுப்பு, பிளஸ், 1, பிளஸ் 2 மாணவியரை தனித்தனியாக அழைத்து 'கவுன்சிலிங்' செய்தார்.

பாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள்:-

🏛 பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் - விதி 79 முதல் 123 வரை

🏛 விதி 79 - பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது
🏛 விதி 80 - ராஜ்யசபா அமைப்பு
🏛 விதி 81 - லோக்சபா அமைப்பு
🏛 விதி 82 - ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி மறுவரையறை செய்வது
🏛 விதி 83 - பாராளுமன்றம் ஈரவைகளின் ஆயுட்காலம்
🏛 விதி 84 - பாராளுமன்றம் M.P. தகுதிகள்
🏛 விதி 85 - பாராளுமன்றம் கூட்டத்தொடர் கூட்டத்தொடரை கூட்டுதல் குடியரசு தலைவர் லோக்சபா வை கலைத்தல்
🏛 விதி 86 - குடியரசு தலைவர் ஈரவைகளில் உரையாற்றுதல்
🏛 விதி 89 - ராஜ்யசபா தலைவர் (ம) துணை தலைவர்
🏛 விதி 90 - ராஜ்யசபா துணைத்தன பதவிகாலம்
🏛 விதி 93 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர்
🏛 விதி 94 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர் பதவி நீக்கம்
🏛 விதி 98 - பாராளுமன்றம் தலைமைச் செயலகம்
🏛 விதி 99 - பாராளுமன்றம் M.P. க்களின் பதவிக்காலம்
🏛 விதி 100 - பாராளுமன்ற வாக்கெடுப்பு, குறைவெண்
🏛 விதி 101 - பாராளுமன்ற M.P. க்களுன் பதவி காலியிடமாறுதல்
🏛 விதி 102 - பாராளுமன்ற M.P. க்களுன் தகுதியிழப்பு
🏛  விதி 108 - பாராளுமன்ற ஈரவைகளின் கூட்டுக்கூட்டம்
🏛 விதி 110 - பணமசோதா
🏛 விதி 111 - குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தல்
🏛 விதி 112 - பட்ஜெட்
🏛 விதி 117 - நிதி மசோதா
🏛 விதி 120 - பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி
🏛 விதி 122 - பாராளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது
🏛 விதி 123 - குடியரசுத்தலைவர் அவசரச் சட்டமிற்றும் அதிகாரம்

🍄குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பற்றி கூறும் விதிகள்:-
🏛 விதி 52 - குடியரசு தலைவர் பதவி
🏛 விதி 53 - குடியரசு தலைவரின் நிர்வாக அதிகாரம்
🏛 விதி 54 - குடியரசு தலைவர் தேர்தல்
🏛 விதி 55 - குடியரசு தலைவர் தேர்தல் நடத்தும் முறை
🏛 விதி 56 - குடியரசு தலைவர் பதவிக்காலம்
🏛 விதி 57 - குடியரசு தலைவர் மறுநியமணம்
🏛 விதி 58 - குடியரசு தலைவர் தகுதிகள்
🏛 விதி 60 - குடியரசு தலைவர் பதிவியேற்றம் போது உறுதிமொழி
🏛 விதி 61 - குடியரசு தலைவர் பதவி நீக்கம்
🏛 விதி 62 - குடியரசு தலைவர் பதவி காலியிடமாகும் போது தேர்தல் நடத்தப்பட வேண்டிய கால அவகாசம்
🏛 விதி 63 - துணை குடியரசு தலைவர் பதவி
🏛 விதி 64 - துணை குடியரசு தலைவர் ராஜ்யசபா பதவி வழித்தலைவர் பற்றி
🏛 விதி 65 - குடியரசு தலைவர் இல்லாத போது அவர் பொறுப்புகளை துணை குடியரசு தலைவர் கவனிப்பார்
🏛 விதி 66 - துணை குடியரசு தலைவர் தேர்தல்
🏛 விதி 67 - துணை குடியரசு தலைவர் பதவிக்காலம்
🏛 விதி 69 - துணை குடியரசு தலைவர் பதவிப் பிரமாணம்
🏛 விதி 67b - துணை குடியரசு தலைவர் பதவி நீக்கம்
🏛 விதி 72 - குடியரசு தலைவர் மரண தண்டனை மற்றும் பிற தண்டனைகளை மன்னிக்கும் அதிகாரம்

🍄அரசு நெறிமுறை கொள்கைகள்:-
🏛 அரசு நெறிமுறை அமைந்துள்ள பகுதி - IV
🏛 அரசு நெறிமுறைகள் அமைந்துள்ள விதி 36 - 51
🏛 அரசு நெறிமுறைகளில் உள்ள கொள்கைகள் - 3
1. காந்திய கொள்கை
2. சோசலிச கொள்கை
3. மேற்கத்திய சித்தாந்த கொள்கை
🏛 காந்திய கொள்கை விதி - 40, 43, 45, 46, 47, 48
🏛 சோசிலிச கொள்கை விதி - 38, 39, 39(A), 39(b),  39(d), 39(e), 41, 42, 43(A), 45
🏛 மேற்கத்திய சித்தாந்த கொள்கை விதி - 44, 45, 49, 50, 51
🏛 விதி 38 - வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்
🏛 விதி 39 (A) - ஒரே வேலைக்கு சம்மான கூலி ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தரவேண்டும்
🏛 விதி 40 - கிராம பஞ்சாயத்து அமைக்க வழிவகுக்கிறது
🏛 விதி 41 - வேலை செய்வதற்கு கல்வி பெறுவதற்கு உரிமை முதமையில் நோயுற்ற நிலையில் அரசு உதவி செய்ய வேண்டுமென கூறுகிறது
🏛 விதி 42 - தொழிலாளர் பணிசெய்ய சூழல் நன்றாக இருக்க வேண்டும்.
🏛 விதி 43 - அரசு கிராம கைவினை தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்
🏛 விதி 44 - நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுகிறது
🏛 விதி 45 - 14 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி அளித்தல்
🏛 விதி 46 - ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோர் கல்வி நலன் மற்றும் பொருளாதார உதவியை மேம்படுத்தல்
🏛 விதி 47 - பொது ஆரோக்யத்தை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து அளவை உயர்த்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்
🏛 விதி 48 - பசுவதையைத் தடுத்தல்
🏛 விதி 49 - தேசிய நினைவுச் சின்னங்கள் பாதுகாத்தல்
🏛 விதி 50 - நிர்வாகத்தில் இருந்து நீதித்துறையை பிரித்தல்
🏛 விதி 51 - உலக அமைதியில் நாட்டம்

🍄 மாநில ஆளுநர்கள் பற்றிய கூறும் விதிகள் :-
🏛 மாநில ஆளுநர் பற்றி கூறும் விதி 152 முதல் 161 வரை
🏛 விதி 152 - மாநிலம் என்பதை வரையறை
🏛 விதி 153 - மாநில ஆளுநர் பதவி
🏛 விதி 154 - மாநில நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் இருக்கும்
🏛 விதி 155 - மாநில ஆளுநர் நியமனம்
🏛 விதி 156 - ஆளுநரின் பதவிக்காலம்
🏛 விதி 157 - ஆளுநரின் தகுதிகள்
🏛 விதி 159 - ஆளுநரின் பதவிக்காலம்
🏛 விதி 161 - ஆளுநர் தண்டனை மன்னிக்கும் அதிகாரம், ஆனால் மரண தண்டனையை மன்னிக்க முடியாது.

சிறந்த கல்லூரிகள்: அகமதாபாத் 


ஐஐஎம் முதலிடம்!

எம்பிஏ பட்டப் படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்களில் அகமதாபாத் ஐஐஎம் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக இன்று (நவம்பர் 28) அறிவிக்கப்பட்டுள்ளது.

க்யூ.எஸ். குளோபல் ரேங்கிங் 2018 பட்டியலில் உலக அளவில் எம்பிஏ படிப்பு வழங்கும் சிறந்த 50 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஹார்வேர்டு (Harvard) மேலாண்மை முதலிடத்தில் உள்ளது. இன்சீட் (INSEAD)இரண்டாவது இடத்திலும், ஹெக் (HEC)மூன்றாவது இடத்திலும் உள்ளன. யேல் பல்கலைக்கழகம் 18ஆவது இடத்திலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 19ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவிலிருந்து ஒரே ஒரு கல்லூரிக்கு மட்டும் இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் நிறுவனம் 49ஆவது இடத்தைப் பிடித்து இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 50ஆவது இடத்தில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் உள்ளது. 100 இடங்களுக்குள் இரு இந்திய நிறுவனங்கள் உள்ளன. ஐஐஎம் பெங்களூர் 58ஆவது இடத்திலும் இந்திய மேலாண்மைப் பள்ளி 93ஆவது இடத்திலும் உள்ளன.

தேர்வு மதிப்பெண்களில் மாற்றம்!

இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (கவுன்சில் ஃபார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட் எக்ஸாமினேஷன்ஸ்) நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 27) அறிவிக்கப்பட்டுள்ளது.



நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 40 ஆகவும் உள்ளது. இதனை இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (CISCE) மாற்றியுள்ளது. அதன்படி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 33 மதிப்பெண்களும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கான குறைந்த தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றம் வரும் 2018-19ஆம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் நடத்திய பொதுத் தேர்வில், ஹச்சிங்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜூனியர் காலேஜில் பயின்ற புனேவைச் சேர்ந்த முஸ்கன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மாணவன் அஸ்வின் ராவ் ஆகியோர் 99.4% மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்தனர்.

தேர்வு மதிப்பெண்களில் மாற்றம்!

இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (கவுன்சில் ஃபார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட் எக்ஸாமினேஷன்ஸ்) நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 27) அறிவிக்கப்பட்டுள்ளது.



நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 40 ஆகவும் உள்ளது. இதனை இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (CISCE) மாற்றியுள்ளது. அதன்படி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 33 மதிப்பெண்களும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கான குறைந்த தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றம் வரும் 2018-19ஆம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் நடத்திய பொதுத் தேர்வில், ஹச்சிங்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜூனியர் காலேஜில் பயின்ற புனேவைச் சேர்ந்த முஸ்கன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மாணவன் அஸ்வின் ராவ் ஆகியோர் 99.4% மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்தனர்.

Flash News: கனமழை காரணமாக இன்று 29.11.2017 விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!

கனமழை செய்தி☔ 


  •  திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (29.11.17) விடுமுறை அறிவிப்பு -ஆட்சியர்

தொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்...

வேலூர் பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது, இந்த சமுதாயத்தின் அடுத்த கல்வி கொலை. இதில் யாரும் குற்றவாளிகளாக முடிவு செய்யப்பட போவதில்லை.
ஏனெனில், இது ஒரு பெரும் அறிவார்ந்த மனித சமுதாயமே சேர்ந்து நிகழ்த்திய கொலை. ஆசிரியர் திட்டியதால் மாணவிகள் இறந்ததற்கு எப்படி சமுதாயமே பொறுப்பேற்கும்? இதன் விடை எளிது. ஏனெனில், இவர்களின் மரணத்திற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் ஆகி விட மாட்டார்கள் எனும் பதிலிலிருந்து இதன் விடையை நெருங்கலாம்.
இந்த கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலரும் பொது தேர்வுக்கு தயாராகும் அல்லது பள்ளிக்கு செல்லும் ஏதேனும் குழந்தையை உடையவர்களாக அல்லது அவர்களுக்கு வேண்டப்பட்டவராக இருப்பீர்கள். அவர்களின் மீது நீங்களும் இந்த சமுதாயமும் திணிக்கும் போட்டிகளும் அது சார்ந்த நிர்பந்தங்களும் மேலிருந்து கீழே பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் நியாயமாக தோன்றலாம். 
ஆனால், அது கீழே இருப்பவர்களின் பார்வையிலிருந்து பார்த்தால் தான் தெரியும் அது எவ்வளவு பெரிய வன்முறை என்பது. 2011 வருடத்திற்கு பிறகு குழந்தைகள் மீதான வன்முறை 300 மடங்காக அதிகரித்து விட்டது. இதில் வன்முறைக்கு எதை அளவுகோலாக பயன்படுத்தி இருப்பார்கள் என்பது தெரிந்தால், இன்னும் சில அளவுகோல்களை சேர்க்க பரிந்துரைக்கலாம்.
காலையில் ஒரு மனிதனை வம்படியாக எழ வைப்பது எவ்வளவு பெரிய வன்முறை என்பது நாம் அவர்களாக இருந்தால் தான் தெரியும்! பள்ளிக் கூடங்கள்,பாடங்கள், ஆசிரியர்கள் கசக்கிறார்கள் என்றால் அதை சகித்துக் கொண்டு பன்னிரண்டு வருடங்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வன்முறையை அவர்கள் மீது திணிக்கிறீர்கள்! அதன் மூலம் அவர்கள் என்ன பயன் அடைந்து விடப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள்? இல்லை, நீங்கள் தான் என்ன பயன் அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
இந்தியாவில் வேலைக்கு போகும் இருவரில் ஒருவர் ஏதேனும் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அதாவது, உங்கள் அலுவலகத்தில் அருகருகே நீங்களும் உங்கள் நண்பரும் அமர்ந்து இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
இருவரில் ஒருவருக்கு ஏதோ ஒரு மன நோய்! சரி அது நண்பருக்கு என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா?
இரத்த அழுத்தம் இருக்கிறதா? நீங்கள் ஆய்வுகளையோ தரவுகளையோ நம்ப வேண்டாம், உங்களிடமிருந்தும் உங்களை சுற்றி இருப்பவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். ஓடி ஓடி உழைத்து, காலை உணவு சரியாக மென்று சாப்பிட நேரம் இல்லாமல், மனைவியிடமோ, நண்பர்களிடமோ சிரித்து பேசி நாள் கடந்து, மேலதிகாரியிடம் திட்டு வாங்கி,யார் யாருக்காகவோ உழைத்து, மாத கடைசியில் பணமே இல்லாமல் அடுத்த மாதத்திற்காக தவம் கிடப்பதெல்லாம் என்ன வாழ்க்கை? பணம் தான் வாழ்க்கை என நியாயப்படுத்துவதில் என்ன ஆகி விடப் போகிறது?
பணம் தான் வாழ்க்கையா என்று சற்று யோசித்து பாருங்கள்? ஜாதி, மதம், அழகு,நிறம்,மொழி, கொள்கை, அரசியல், தகுதி, நியாயம், தேர்வு என எல்லாமே அடுத்த நேரத்திற்கு உணவு இல்லையென்றால் பொய்யாகி போய் விடும். எவ்வளவு பெரிய முரண் இது. நீங்கள் வாழ தேவை உணவும் இருப்பிடமும் மட்டுமே.
உடையும் நாமே சேர்த்துக் கொண்டு விட்டோம். சரி அதுவும் இருந்துவிட்டு போகட்டும். இதற்காக இயற்கை கொடுத்த அந்த குழந்தை தன் சுயத்தை இழந்து, தன விளையாட்டை இழந்து, தன் நேரத்தை இழந்து யாருக்காக, எதற்காக போராடுகிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து அதுவும் உங்களை போல் ஆகிவிட வேண்டுமா? சற்றே சிந்தித்து பாருங்கள், எவ்வளவு பட்டதாரிகள் வீட்டுக்கு வீடு வாசப்படி போல் வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அனைவருக்கும் வேலை என்பதெல்லாம் நடக்கும் காரியமா? ஒரு பக்கம் இயற்கையை அழிக்கும் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டம் வழுத்து வரும் நிலையில், அதே தொழிற்சாலைகள் ஆள் எடுக்கும் பொழுது,முதல் ஆளாக நிற்கிறார்கள் நம் இளைஞர்கள். இன்று இயற்கை காப்பதற்கான போராட்டங்களில் இளைஞர்களின் பங்கு குறைவாக இருப்பதற்கு காரணமே, அவனுக்கும் இயற்கைக்கும் இடையே விழுந்த பிளவு தான். இவற்றை சரிப்படுத்த வேண்டுமானால், கல்வி முறையை மாற்ற வேண்டும்.
அதை இந்த அரசாங்கங்கள் செய்து விடும் என நினைக்கிறீர்களா? நானே தலைமை அதிகாரி ஆனாலும் செய்ய முடியாது. அதுதான் எதார்த்தம். நீங்களே கல்வி முறையை மாற்றுங்கள்.
இயற்கையோடு இணைந்த கல்வி முறை. அமைதியை மட்டுமே போற்றும் கல்வி முறை, ஊடகத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் கல்வி முறை, தற்சார்பு கல்வி முறை, பாலியல் கல்வி முறை. இதை நீங்கள் பணம் கொட்டி கொடுக்கும் பள்ளிகள் சொல்லி தராது. அதற்கு தேவை எல்லாம் மதிப்பெண்கள் தான்.
இந்த கல்வி முறையில் ஆசிரியர்கள் தேவை இல்லை. மதிப்பெண்கள் தேவை இல்லை. தற்கொலைகளும் தேவையே இல்லை. இவையெல்லாம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலையே வேண்டாம்.
குக்கூ காட்டுப்பள்ளி போன்று தனியார் பள்ளிகள் உருவாக்க உறுதுணையாக இருங்கள். ஜவ்வாது மலை அடிவாரத்தில் புளியனுர் கிராமத்தில் இயங்கி வரும் குக்கூ காட்டுப் பள்ளி மாற்று கல்வி சிந்தனையாளர்களின், இயற்கை ஆர்வலர்களின் வாழ்நாள் கனவு. வாழ்வின் ஒரு முறையாவது சென்று விட்டு வாருங்கள். அவர்களின் பாடமுறை, சொல்லிக் கொடுக்கும் தன்மை எல்லாம் ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ் நாள் கனவு.
இப்படி ஒரு பள்ளிக்காக தான் ஏங்கி தவிக்கிறார்கள். இப்படி பள்ளிகளை உருவாக்கி தர வேண்டியது நம் கடமை. குழந்தைகளுக்கு தேவை பள்ளிக் கஊடங்கள் தானே ஒழிய, ஆசிரியர்கள்' இல்லை. அவர்களின் நேரத்தை அவர்கள் விரும்பியது போல் செலவு செய்யட்டும்.
மனித வாழ்வோடு எந்த சம்பந்தமும் இல்லாத, வகுப்பறைகளும், பாழடைந்த புது புத்தகங்களும், ஆசிரியர்களும் கால அட்டவணைகளும், திட்டும் கேலியும், போட்டியும் மதிப்பெண்ணும் இல்லாத ஆரோக்கியமான சூழலை உங்கள் குழந்தைக்கு உருவாக்கி கொடுங்கள். 
வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுமே முதல் மதிப்பெண் தான் வாங்க வேண்டும் என்றால் யார் தான் இரண்டாம் மதிப்பெண் வாங்குவது? அனைவருமே ஆசிரியராக, கலெக்டராக, மருத்துவராக, பொறியாளராக வேண்டும் என்றால் யார் தான் விவசாயம் செய்வது? கஷ்டங்கள் எதில் தான் இல்லை?
இந்த வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை விட இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையில் கஷ்டங்கள் குறைவு தான். அனுப்பி வையுங்கள். இயற்கைக்காக, நீங்கள் பெற்ற குழந்தையை இயற்கையிடமே அனுப்பி வையுங்கள். அது தான் நீங்கள் இந்த மனித இனத்திற்கு செய்யப் போகும் கைமாறு.
- சந்தோஷ் ஸ்ரீ....

புதிய பாடத்திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துகள்:

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அவர்களிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அளித்த மனு
பெறுநர்:
த. உதயச்சந்திரன் அவர்கள்,
செயலாளர் (புதியப் பாடத்திட்டம்),
பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு,
பள்ளிக்கல்வி வளாகம், சென்னை- 06
திரு. உதயச்சந்திரன் அவர்களுக்கு,
பொருள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான புதியப் பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை மீதான பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துக்கள் - பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக கல்வியின் நோக்கம் என்பது படித்த பட்டதாரிகளை உருவாக்குவது மட்டுமல்ல. ஆழ்ந்து சிந்திக்கவும், ஆராய்ந்து விமர்சிக்கவும் கூடிய மனிதர்களை உருவாக்குவது தான் கல்வியின் முதன்மை நோக்கமாகும். அத்தகைய கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி  தொடர்ந்து உழைத்து வருகிறது. கல்வி சுகமானதாகவும், சுமையற்றதாகவும், கற்றல் மற்றும் அதைச் சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதாகவும், விளையாட்டு, தொழிற்பயிற்சி ஆகியவற்றை ஓர் அங்கமாகவும் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் விருப்பம்.
தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் அளவுக்கு பாடத்திட்டம் வலிமையாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, இத்தகைய பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த காலங்களில்  ‘‘காலத்திற்கேற்ற கல்வித் திட்டம்’’ என்ற தலைப்பில் 3 நாள் கருத்தரங்கம் நடத்தி அரிய ஆலோசனைகளை வழங்கியது உள்ளிட்ட ஏராளமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. தமிழக மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் முன்முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை புதியப் பாடத்திட்டத்திற்கான வரைவை தயாரித்து பொதுமக்கள் பார்வைக்காக தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  வெளியிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
இப்பணியை சிறப்பாக மேற்கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினருக்கும், இப்பணியை ஒருங்கிணைத்த பள்ளிக்கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரனுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். புதியப் பாடத் திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துக்களையும், யோசனைகளையும் வல்லுனர் குழுவின் ஆய்வுக்காக தாக்கல் செய்கிறோம்....
மேனிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம்
தமிழ்
1. தமிழ் மொழிப் பாடத்திற்கான கலைத் திட்டம் மாணவர்களின் மொழி அறிவைப் பெருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.  அறிவியலும், தமிழும் இணைந்த மொழிக் கலைச்சொற்களை பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.  அத்துடன் பிறமொழி கலப்பின்றி பேச பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், அவற்றின் பயன்பாடு சார்ந்து அவற்றுக்கு நல்ல தமிழ்ப் பெயரை மாணவர்கள் சூட்டும் வகையில் சொற்பிறப்பியலின் (Etymology) அடிப்படைகள்  மாணவ, மாணவியருக்கு கற்றுத்தரப்பட வேண்டும். இதன்மூலம்  தமிழில் புதிய சொற்கள் பிறக்கும்.
2.  மேல்நிலை வகுப்புகளில் மாணவர்கள் விளம்பர வாசகங்கள் எழுதுதல், செய்தி சேகரித்து எழுதுதல் உள்ளிட்ட பயிற்சிகள் கற்றல் விளைவுகளாக இல்லாமல் தேர்வு மதிப்பீடுகளாக அமைய வேண்டும். அத்துடன் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த முடியும்.
3.  துணைப்பாடமாக அரசு நிர்வாகம் சார்ந்த நாடகங்கள் சேர்க்கப்படும் என்று வழிகாட்டப்பட்டிருக்கிறது.  மன்னர் காலத்து அரசு நிர்வாகங்களை விளக்குவது மட்டுமின்றி, நிகழ்கால அரசியல், அரசு நிர்வாகம், நல்ல நிர்வாகம் அமைய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கற்பிக்கப்பட வேண்டும்.
4.  தமிழ் மொழிப்பாடத்தின் செய்யுள் மற்றும் உரைநடையில் இயற்கை, சுற்றுச்சூழல், தமிழரின் நீர்மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை வெறும் பாடமாக மட்டும் நடத்தாமல் இயற்கை, சுற்றுச்சூழல், தமிழரின் நீர்மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வசதியாக களச் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
5.  தமிழ் சார்ந்த கணினிப் பயன்பாடுகளை அதிகரிக்க வேண்டும். துணைப் பாடங்களில் நன்னெறியை போற்றும் பாடங்களை சேர்க்க வேண்டும்.
6. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கூட தமிழை முதன்மை மொழிப் பாடமாக படிப்பது குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் தமிழ் மொழிப் பாடம் கடினமாக இருப்பதால் அதில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என்பதும், பிரெஞ்ச், சமஸ்கிருதம் போன்ற பாடங்கள் மிகவும் எளிமையாகவும், அதிக மதிப்பெண் பெறக் கூடியதாக இருப்பதும் தான். இந்த நிலையை மாற்றி பிற மொழிகளை தாய்மொழிகளாகக் கொண்டவர்களும் தமிழை முதன்மை மொழிப்பாடமாக கற்கும் வகையில் தமிழ் பாடத்தையும், தேர்வையும் எளிமையாக்கி அதிக மதிப்பெண் வழங்க வேண்டும்.
ஆங்கிலம்
1.  வங்கியில் பணம் செலுத்துவதற்கான படிவம், தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு படிவம் உள்ளிட்ட படிவங்களை நிரப்பும் பயிற்சி 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவது மிகவும் தாமதமானது ஆகும். உயர்நிலை வகுப்புகளிலேயே இந்தப் பயிற்சியை வழங்க வேண்டும்.
2.  தமிழ்நாட்டு மாணவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் சரளமாக ஆங்கிலம் பேச வராததும், நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொண்டு பதிலளிப்பதில் உள்ள தயக்கமும் அவர்களின் வேலைவாய்ப்புக்கு பெரும் தடையாக உள்ளது. இக்குறையை போக்க அறிவியல் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படுவதைப் போன்று ஆங்கிலத்தை சரளமாக பேசுதல், நேர்காணலில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளித்தல் ஆகியவற்றை செய்முறைத் தேர்வாக (PracticalExamination) நடத்தி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும். இதற்கு மாணவர்கள் தயாராவதால் அவர்களின் ஆங்கிலம் பேசும் திறன் அதிகரிக்கும்.
3.  உயர்நிலை மற்றும் மேனிலை வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில மொழி வார்த்தைகளை சரியாக பேசுவதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இதற்காக மொழி ஒலிப்பியலை (Phonetics) ஆங்கிலப் பாடத்தின் ஓர் அங்கமாக மாற்ற வேண்டும்.
4. ஆங்கில மொழித்திறனை வளர்க்கும் வகையில்  செய்தி வாசித்தல், குழு விவாதம், நேர்காணல் பயிற்சி, நிகழ்ச்சி வர்ணனை, கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான உரை தயாரித்தல் ஆகியவை குறித்த பயிற்சி வழங்கப்படுவது மகிழ்ச்சி. இதை மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டும்.
5.  ஆங்கிலம் என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் பாடமாகவே உள்ளது.  இதை மாற்றி மாணவர்கள் ரசிக்கும் வகையிலான கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
6. சென்னையிலும், பிற மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் ஆங்கில மொழி கருத்தரங்குகளில்  மாணவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும். அத்தகைய கருத்தரங்குகளில் பங்கேற்றதன் மூலம் மாணவர்கள் கற்றுக்கொண்டது என்ன? என்பதை மதிப்பிட வேண்டும்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள்
1. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான கலைத்திட்டங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. கலைத்திட்டங்களில் மாற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்புகளும் குறைவு.
2. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் முற்றிலும் புதுமையாகவும், மாணவர்களின் சிந்திக்கும் திறனை சோதிக்கும் வகையிலும் உருவாக்கப்பட வேண்டும். பாடத்திற்கு பின்னால் உள்ள வினாக்கள் பட்டியலில் இருந்து மட்டும் தான் தேர்வில் வினா எழுப்பப்படும் என்ற நிலையை மாற்றி, பாடத்தில் எந்த பகுதியிலிருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வினா எழுப்பப்பட்டாலும் அவற்றுக்கு மாணவர்கள் உடனடியாக பதிலளிக்கும் வகையில் பாடம் எழுதப்பட வேண்டும்; நடத்தப்பட வேண்டும்.
3. அறிவியல் பாடங்கள் மிகவும் ஆழமாகவும், நிகழ்காலத் தேவைகளுடன் தொடர்புப் படுத்தியும் பாடங்கள் தயாரிக்கப்பட வேண்டும். உதாரணமாக ‘இராமன் விளைவு’ என்பது மிகவும் சாதாரணமாக சொல்லித் தரப்படுகிறது. அதன் சிறப்புகள் விளக்கப்படுவதில்லை. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இராமன் விளைவு எவ்வாறு ஏற்படுகிறது என்பது குறித்து விரிவாக விளக்கப்படுவதுடன், நிகழ்காலத்  தேவைகளுக்கு எந்த வகையில் உதவுகின்றன என்பதும் கற்றுத் தரப்படுகிறது. அதன் மூலம் இராமன் விளைவு குறித்த அனைத்து விவரங்களும் மாணவர்கள் மனதில் பதிகின்றன. அதேபோன்ற பாடத் தயாரிப்பையும், கற்பித்தல் முறையையும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்திற்கும் கொண்டுவர வேண்டும்.
4.  கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கான சூத்திரங்களை மனப்பாடம் செய்யும் வழக்கம் தான் இன்று வரை நீடிக்கிறது. இதனால் அந்த சூத்திரங்களின் பயன்பாடுகள் பெரிதாக யாருக்கும்  புரிவதில்லை. இதற்கு மாறாக சூத்திரங்களை உதாரணங்களின் மூலமாகவும், செயல்முறை மூலமாகவும் மாணவர்கள் தெளிவாக புரிந்து கொண்டு வாழ்க்கையிலும் பயன்படுத்தும் வகையில் பாடநூல்கள் தயாரிக்கப்படவேண்டும்.
5.  செய்முறைத் தேர்வுகள் அனைத்து பள்ளிகளிலும் வெறும் சடங்குகளாகி விட்டன. தமிழகத்தில் பல பள்ளிகளில் செய்முறைக்கான ஆய்வகங்களே இல்லாத நிலையில், செய்முறைத் தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் 100% மதிப்பெண் வழங்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.  எனவே, செய்முறைத் தேர்வுகளை பயனுள்ளதாக மாற்ற வேண்டும். அனைத்து மாணவர்களின் செய்முறைத் திறனையும் தனித்தனியாக சோதித்து மதிப்பெண் வழங்கும் வகையில் செய்முறைத் தேர்வின் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
வரலாறு
1.  மேனிலை வகுப்புகளுக்கான வரலாற்றுப் பாடத்திட்டத்திற்கான கலைத்திட்டம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. விடுதலைப் போராட்டம், பக்தி இயக்கம், கிளர்ச்சி, மன்னர்கள் ஆகியவற்றின் பொதுவான வரலாற்றின்  ஒரு பகுதியில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு நிகழ்வுகள் குறித்த சிறு குறிப்பு வருகிறதே  தவிர தமிழ்நாட்டு வரலாறு குறித்து விரிவாக எந்தப் பதிவும் செய்யப்படாதது பெரும் குறையாக உள்ளது.
2.  சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு தான் என்பது ஒட்டுமொத்த இந்தியாவும் அறிந்த ஒன்றாகும்.  இந்தியாவின் பெரிய மாநிலங்களில் அதிக அளவில் இட ஒதுக்கீடு வழங்குவது தமிழ்நாட்டில் மட்டும்  தான். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இரு அடுக்குகளாக 50% இட ஒதுக்கீடு வழங்குவதும் தமிழகம் மட்டும் தான். இத்தகைய சிறப்புகள் குறித்தெல்லாம் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இட ஒதுக்கீட்டு வரலாறு குறித்து தனி அத்தியாயம் சேர்க்கப்பட வேண்டும்.
3.  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட தமிழக அரசியல் குறித்த அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் மேனிலை வகுப்புக்கான வரலாற்று பாடநூலில் தமிழக அரசியல் வரலாறு குறித்த எந்த பதிவும் இல்லாமல் இருப்பது தவறாகும். அதைப் போக்கும் வகையில்  தமிழக அரசியல் குறித்து தனி அத்தியாயம் வரலாற்றுப் பாடநூலில் சேர்க்கப்பட வேண்டும்.
4.  இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிக அளவில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆதிச்சந்ல்லூர், கீழடி, புதுவையில் அரிக்கமேடு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மற்றும் அவற்றில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் மூலம் தெரியவந்த பொருட்கள் குறித்த அத்தியாயமும் பாடநூலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
5. தமிழ்நாடு உள்ளிட்ட மொழிவாரி மாநிலங்கள் உருவான விதம், அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்து வருங்காலத் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே, அதுகுறித்த பாடமும் வரலாறு பாட நூலில் சேர்க்கப்படுவது நலமாக இருக்கும்.
ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை
தமிழ்
1.  தொடக்க நிலை (1&5 வகுப்புகள்), உயர்தொடக்க நிலை (6,7,8 வகுப்புகள்), உயர்நிலை (9,10 வகுப்புகள்) வகுப்புகளுக்கான தமிழ் பாடத் திட்டம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் வலிப்பிலேயே கணினி மூலம் பாடல்கள் கற்பிக்கப்படுவதால் அடுத்தடுத்த வகுப்புகளில் குழந்தைகள் அச்சமின்றி கணினிகளை கையாள உதவியாக இருக்கும்.
2.  மூன்றாம் வகுப்பில் சொல் விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் குழந்தைகளின் மொழித்திறனை மேம்படுத்தும் முயற்சி நிச்சயம் பயனளிக்கும். நான்காம் வகுப்பில் விளம்பரங்களை உருவாக்குதல், கட்டுரை எழுதுதல் போன்றவை குழந்தைகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவும்.
3. நான்காம் வகுப்பிலிருந்து திருக்குறள் கற்பிக்கப்படும் என்று கலைத்திட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முதல் வகுப்பிலேயே பாடல்கள் ஒலி வடிவில் கற்பிக்கப்படும் நிலையில், திருக்குறளை மூன்றாம் வகுப்பிலிருந்தே அறிமுகம் செய்வது மானவச் செல்வங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
4.  உயர்தொடக்க வகுப்புகளில் கூட்டங்களில் உரையாற்றுதல், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், எந்த ஒரு பொருள் சார்ந்தும் அறிக்கை தயாரித்தல் போன்ற மொழித்திறன் பயிற்சிகள் உண்மையாகவே பயனளிப்பவை. எனினும் இவை ஏட்டில் மட்டுமே இருக்கக்கூடாது. இப்பயிற்சிகளால் மாணவர்கள் எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய மதிப்பீடுகள் தேவை.
5. 9, 10 ஆகிய உயர்வகுப்புகளுக்கான துணைப் பாடம் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பதாகவும், நன்மை, தீமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைக்கப்பட வேண்டும்.
ஆங்கிலம்
1.  தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலப் பாடம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில், தொடக்க வகுப்புகளில் ஆங்கிலத்தை எளிதாக கற்கும் வகையில் கலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
2. ஐந்தாம் வகுப்பிலிருந்து காணொலிக் காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்படுவது அவர்களின் மொழி பேசும் திறனை மேம்படுத்தும்.
3. சொல் விளையாட்டுக்கள் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதால் மாணவர்கள் மனதில் தெளிவாக பதியும். முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் கற்றுத்தரப்படுவதால் அம்மொழி குறித்து மாணவர்களிடையே நிலவி வந்த அச்சம் விலகும்.
4.  மேனிலை வகுப்புகளுக்கான பயிற்சியாக வைக்கப்பட்டுள்ள வங்கியில் பணம் செலுத்துவதற்கான படிவங்களை நிரப்புதல், தொடர்வண்டி முன்பதிவு படிவங்களை நிரப்புதல் போன்றவை 9&ஆம் வகுப்பிலிருந்தே அறிமுகம் செய்யப்பட வேண்டும்.
5.  ஒரு பாடத்தை படித்து முடித்தவுடன் அதை நாடகமாக மாற்றுதல், வானொலி நாடகத்திற்கான திரைக்கதையாக மாற்றுதல் போன்றவை மாணவர்களின் படைத்தல் திறனை மேம்படுத்தும்.
கணிதம், அறிவியல்
1.  கணிதம், அறிவியல் பாடங்களை தனித்த பாடமாக மற்றும் கற்றுத் தராமல் அன்றாட வாழ்க்கையுடன்  தொடர்பு படுத்திக் கற்றுத்தர வேண்டும்.  அப்போது தான் கணிதம், அறிவியல் ஆகியவற்றின் மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படும்.
2.  உதாரணமாக 17 & (3*4) என்ற கணிதத்தை அப்படியே கேள்வியாக வைப்பதற்கு பதிலாக  ஒருவரிடம் 17 கொய்யாப்பழங்கள் உள்ளன. அதை ஒவ்வொருவருக்கும் தலா 4 வீதம் 3 பேருக்கு கொடுத்தால் மிச்சம் எவ்வளவு இருக்கும்? என்று வினா எழுப்பலாம்.
3.  ஒன்றாம் வகுப்பிலேயே கணினி வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும் நிலையில் அறிவியல் சார்ந்த நிகழ்வுகள், தத்துவங்களை விளக்க கணினியை பயன்படுத்தி படக்கதைகளை சொல்லலாம்.
4. கணிதம், அறிவியல் பாடங்களைப் பொருத்தவரை மாணவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டும் வகையில் பாட நூல்கள் எழுதப்பட வேண்டும்.
5.  அறிவியல், கணிதம் பாடங்களை மாணவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்பதை அறியும் வகையில் தேர்வு முறையும், வினாத் தாள்களும் அமைக்கப்பட வேண்டும்.
சமூக அறிவியல்
1. தொடக்கக் கல்வியில் சமூக அறிவியல் பாடம் மூன்றாம் வகுப்பில் தான் அறிமுகம் செய்யப்படுகிறது.  சமூக அறிவியல் பாடத்தை பயில சற்று பக்குவம் தேவை என்பதால் இது சரியான முடிவு தான்.
2.  சமூக அறிவியலின் ஓர் அங்கமான குடிமையியலில் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல தலைப்புகளில் பாடங்கள் தயாரிக்கப்படவிருப்பது பாராட்டத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், மக்களாட்சி, உள்ளாட்சி, மகளிருக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட பல தலைப்புகளில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் தயாரிக்கப்படவுள்ளன.
3.  எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் ஒன்பதாவது பாடமாக மகளிரின் நிலை என்ற தலைப்பில் கடந்த காலங்களில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து விளக்கப்படவுள்ளது.  சி.பி.எஸ்.பி பாடத்திட்டத்தில் மகளிர் நிலை குறித்த பாடத்தில் தான் நாடார் சமுதாயத்தை பிழைப்பு  தேடி வந்தவர்கள் என்றும், அவர்கள் பூர்வகுடிகள் அல்ல என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக அரசு தயாரிக்கும் பாடநூல்களில் இத்தகைய தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
4.  தமிழக அரசியல் குறித்தும், நீதிக்கட்சி வளர்ச்சி குறித்தும் பல பாடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. திராவிட இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து பாடங்கள் எழுதப்படவுள்ளன. இவற்றில் ஆட்சியாளர்களை துதிபாடும் வகையில் தவறான வரலாறு எதுவும் சேர்க்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5.  வரலாற்றுப் பாடத்தில் களப்பிரர்கள் காலம் வரையிலான பழங்காலத் தமிழகம் என்ற பாடத்தலைப்பு இடம் பெற்றிருக்கிறது. ஆனால், தற்கால நிலைமை குறித்து எந்தப் பாடமும் இடம்பெறாதது பெரும் குறை தான்.
பொதுவான பரிந்துரைகள்
1.  தமிழக அரசால் அமைக்கப்பட்ட கலைத்திட்டக் குழுவினர் தயாரித்துள்ள புதியப் பாடத்திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டுமானால் மிகப்பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
2.  கோத்தாரிக் குழு பரிந்துரைப்படி, கல்விக்காக மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்தது 6% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன்படி ஆண்டுக்கு குறைந்தது ரூ.70,000 கோடி கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும். அது சாத்தியமாகாவிட்டால் ரூ.57,500 கோடி (5%) ஒதுக்க வேண்டும்.
3. புதியப் பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் சிறப்பாக உள்வாங்கிக் கொள்ளாவிட்டால் அவர்களால்   மாணவர்களுக்கு தரமாக கல்வி கற்பிக்க முடியாது. அதனால் புதியப் பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
4. ஆந்திரம், இராஜஸ்தான் மாநிலங்களின் பாடத்திட்டம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அதேபோன்று தரமானப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மாநிலங்களுடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் செய்து கொண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களையும், பிற மாநில அரசு பள்ளி மாணவர்களையும் ஆண்டுக்கு ஒரு மாதம் பரிமாற்றம் செய்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கல்வித் திட்டத்தில் உள்ள சிறப்பான அம்சங்களை கற்றுக் கொள்ள வகை செய்ய வேண்டும்.
5. அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு செலவிலான கல்விச் சுற்றுலாவை கட்டாயமாக்க வேண்டும்.  வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று அதன் மூலம் மாணவர்கள் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
6. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் 4 தனிக்கல்வி வாரியங்கள் நீடிப்பது முறையல்ல. அனைத்துக் கல்வி வாரியங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும். மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாட நூல்கள் பயன்படுத்தப்படுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும்.
7. தேர்வு முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் சீர்திருத்தம் செய்யாமல் மாணவர்களின் கற்றலையும்,  புரிதலையும் மேம்படுத்த முடியாது. எனவே, தேர்வு முறையில் விரிவான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
8 தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்குவது குறித்து வல்லுனர் குழு எந்த பரிந்துரையும் வழங்க வில்லை. கல்வி வணிகமாவதைத் தடுக்கும் வகையில் தமிழ் வழிக் கல்வியை பத்தாம் வகுப்பு வரையாவது முதல் கட்டமாக கட்டாயமாக்க வேண்டும்.
9. மாணவர்களிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்த வசதியாக நீதிபோதனை வகுப்புகள் கட்டாயமாக்கப் பட வேண்டும். வாரத்திற்கு 5 பாட வேளைகள் விளையாட்டிற்கும், 3 பாட வேளைகள் தொழில் பயிற்சிக்கும், இரு பாட வேளைகள் நீதி போதனைக்கும் ஒதுக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அத்துடன் யோகா பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
10. பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களாக ( School Management  Committee) மாற்றப்படும். பள்ளியின் தேவைகள் தொடர்பான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தும் அதிகாரம் இந்த குழுவுக்கு வழங்கப்பட வேண்டும்.
11. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாகத் தமிழக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். மாணவர்களுக்கான தனிநபர் கல்விச் செலவு உயர்த்தப்பட வேண்டும்.
12. பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளித் தர இயக்குனர் (Director of School Standards) நியமிக்கப்பட வேண்டும்.
13.   புதியப் பாடத்திட்டம் அதற்குரிய பயனை அளிக்க வேண்டுமானால் பாடநூல்கள் தான் மிகவும் முக்கியமானவை. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை விட தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் சிறப்பாக அமையும் வகையில் பாடநூல்கள் வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும்.
14. பள்ளிகளில் திறன் சார் கல்வி (Skill Based Education), அறிவுசார் கல்விமுறை (Knowledge  Based Education), தொழில்கல்வி (Vocational Education) ஆகிய கல்வி முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன்படி 11 ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
15. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9&ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
16. தொடக்கப்பள்ளிகளில் குறைந்தது 5 வகுப்பறைகளும், 5 ஆசிரியர்களும் இருக்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும். ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்துள்ள இந்த யோசனைகளை வல்லுனர் குழு மூலம் ஆய்வு செய்து பயனுள்ளவற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
                              
நன்றி!
                                                  
அன்புடன்,
                                 
(மருத்துவர் அன்புமணி இராமதாஸ்)

TNPSC : தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.
நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?
வாங்கலாம் , பயன்படுத்தலாம் ஆனால் 10 ஆம் வகுப்பிற்கு மட்டுமே வாங்கி விண்ணப்பிக்க வேண்டும் , பட்ட்ப்படிப்பில் நீங்கள் வாங்கி இருந்து விண்ணப்பித்தால் இத்தேர்வுக்கு அது செல்லாது.
#ஏன் 10 ஆம் வகுப்புக்கு வாங்க வேண்டும்?
எந்த ஒரு தேர்வுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி என்னவோ அதை தமிழ் வழியில் படித்திருந்தால் நீங்கள் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீடு பெறமுடியும். குருப் 4 தேர்வைப் பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு தான் கல்வித்தகுதி எனவே 10 ஆம் வகுப்புக்கு வாங்க வேண்டும். எ.கா நீங்கள் 9 வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்திருந்தாலும் 10 ஆம் வகுப்பு தமிழ் வழியில் படித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் இதற்கு தகுதியானவர்தான்.
#அப்படியென்றால் , கல்லூரியில் வாங்கவா அல்லது பள்ளியில் வாங்கவா?
10 ஆம் வகுப்பு எங்கு படித்தீர்களோ அந்த பள்ளியில் வாங்கவேண்டும். ஏற்கனவெ வாங்கியிருந்தால் தேவையில்லை . தனியராக தேர்ச்சி பெற்றிருந்தால் உங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஆதாரமாக வைத்து பள்ளிக்கல்வித்துறையில் வாங்க வேண்டும்.
மாதிரி படிவம்:

CPS ACCOUNT SLIP – PUBLISHED ONLINE

JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH

( Date of Birth must have 10 Characters in the format dd/mm/yyyy eg. 18/06/1953. )

மாணவிகளின் தற்கொலை எண்ணத்தை போக்க புதிய முயற்சி

வேலூர் மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகள் சமீபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கிவிட்டது.
ஆனால் மாணவ–மாணவிகள் தற்கொலைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை கண்டாக வேண்டும் என்ற முழு உத்வேகத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான திட்டங்களை வகுப்பதில் இந்த ஆணையத்தின் தலைவர் எம்.பி.நிர்மலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:–
பள்ளி, கல்லூரி மாணவப் பருவத்தில் ஏதோ ஒரு வகையில் அவமானம் அடைந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருப்பதில்லை. பெற்றோர் திட்டுவதைக்கூட அவமானமாகக் கருதி பிள்ளைகள் தற்கொலை செய்வதுண்டு. மற்றவர்கள் முன்னால் கண்டிக்கப்படுவதைத்தான் பெரும்பாலான குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
தவறு செய்யும் குழந்தையை பெற்றோரோ அல்லது ஆசிரியர்களோ, தனியாக அழைத்து கண்டித்தால் அவர்களுக்கு அவமான உணர்ச்சி, தற்கொலை செய்யும் அளவுக்கு எழாது. மேலும் அவர்களை கண்டிக்கும் வார்த்தைகளிலும் ஆசிரியர், பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகள் செய்த தவறுக்கு ஏற்ற வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி கண்டித்துவிட்டு, இறுதியில் அவர்களை சமாதானம் செய்து சிரித்து அனுப்பவேண்டும்.
நல்ல படிப்பும், அதிக மதிப்பெண்ணும் மட்டுமே குழந்தைகளின் எதிர்காலம் இல்லை. நன்றாகப் படித்தால் மட்டும்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதெல்லாம் நிச்சயம் இல்லை. படிக்காத எத்தனையோ பேர் படித்தவர்களைவிட முன்னேறிச் சென்றுள்ளனர். படிக்காமலேயே உயர்ந்த இடத்துக்கு சென்றவர்களுக்கான உதாரணங்களும் போதும் போதும் என்ற அளவுக்கு உள்ளன.
ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதைக் கண்டறிந்து அந்த வழியில் அவர்களை நடத்தினாலே போதும். பள்ளிக்கூட தேர்வில் தோற்றுவிட்டால் உலகத்தில் வாழவே முடியாது என்பதெல்லாம் இல்லை. எனவே தோல்வி அடையும் குழந்தைகளை ஆசிரியர் மற்றும் பெற்றோரே தேற்றுவதுதான் முறை.
இவ்வாறு பள்ளி மாணவ–மாணவிகளை கையாளும் விதம் பற்றி சில புதிய பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிக்க பள்ளிக் கல்வித் துறையிடம் பேசி வருகிறோம். குழந்தைகளுக்கு புரியும்படி படிப்பை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களை இலவச கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது.
பொதுவாக, குழந்தைகள் ஏதாவது தவறு செய்துவிட்டால், அதைக் கண்டித்து பெற்றோரிடம் சொல்வேன் என்று ஆசிரியர்கள் கூறுவது வழக்கம். இது அந்த மாணவ–மாணவிகளிடம் மிகுந்த பயத்தையும், மனபாரத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. பெற்றோரிடமும் சொல்லி நிவாரணம் தேடும் மனநிலை அந்தக் குழந்தைகளுக்கு அப்போது இருக்காது.
எனவே இதற்கு நிவாரணம் பெறுவதற்காக ‘1098’ என்ற இலவச தொலைபேசி எண்ணை நாங்கள் அறிவித்து இருக்கிறோம். இந்த எண்ணை பயன்படுத்தி மாணவ–மாணவிகள் தீர்வு பெறலாம். பெற்றோரோ அல்லது ஆசிரியரோ கண்டித்து அவமானப்படுத்திவிட்டால், தற்கொலையை நாடாமல் முதலில் இந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும். அதற்கு பதிலளிக்க 24 மணிநேரமும் ஆட்கள் இருப்பார்கள்.
படிப்பு, நட்பு என்று எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் சரி, எங்களிடம் சம்பந்தப்பட்ட குழந்தைகள் நேரடியாகச் சொல்லிவிட்டால், அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து, அவமான உணர்ச்சியை நீக்குவதுடன், தேவையான பாதுகாப்பும் அளிப்போம்.
எனவே நல்ல தீர்வு எங்களிடம் இருக்கும்போது, தற்கொலையை எந்த காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் நாடிவிடக் கூடாது. தற்கொலை என்பது தீர்வே அல்ல. அது தங்கள் குடும்பத்துக்கு காலங்காலமாக அவமானத்தை ஏற்படுத்தும் செயல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளில் புகார் பெட்டி : ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்
, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான புகார் பெட்டி இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
50 லட்சம் : தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பல பள்ளிகளில், ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை; பாடம் நடத்துவதில்லை; கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை; ஆசிரியர் - மாணவர் மோதல் என, பல புகார்கள் உள்ளன.இவை குறித்து, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவான, எஸ்.எம்.சி., ஆகியவை, ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், எந்த பள்ளியிலும், ஆய்வுகள் நடத்தி, தீர்வு காண்பதில்லை.
உத்தரவு : அதனால் ஆசிரியர்களுக்கு, மாணவர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், மாணவர்களுக்கு, ஆசிரியர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், தீர்வு காண்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன்படுத்தும் வகையில், புகார் பெட்டி வைக்க வேண்டும் என்ற விதியை, தலைமை ஆசிரியர்கள் பின்பற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடவடிக்கை : புகார் பெட்டிகளை உடனடியாக அமைத்து, அதில் வரும் புகார்களை, எந்தவித பாரபட்சமும் இன்றி விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பின், அது தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்கு, அறிக்கை அளிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

அரசு ஊழியர்கள் விபரம் : புதுச்சேரி கவர்னர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள, அரசு ஊழியர்
பற்றிய விபரங்களை முழுமையாக கம்ப்யூட்டரில் பதிவு செய்ய, கவர்னர், கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான, பி.டி.ஆர்.சி.,யில் பணியாற்றும், 37 டிரைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகளுக்கு சர்வீஸ் 'பிளேஸ்மென்ட்' அடிப்படையில், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, கேள்வி எழுப்பியுள்ள கவர்னர் கிரண்பேடி, அரசு ஊழியர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என, புதிய தலைமை செயலர் அஸ்வனி குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் பற்றிய விபரங்களை, கணினியில் பதிவு செய்ய வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் கிரண்பேடி கூறியுள்ளதாவது:
அரசு ஊழியர்களின் வேலைகள் பற்றிய பதிவுகள், கணினி மயமாக்குவதன் மூலம், பதவி உயர்வு மற்றும் பிற தொடர்புடைய பிரச்னைகளும் அதில் இருக்கும். எதற்காக தேர்வு செய்யப்பட்டனர், எங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற விபரமும் இருக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், வெளிப்படைத் தன்மை இருக்கும். இதை, அனைத்து துறை செயலர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலைமை செயலர் மற்றும் செயலர்களுடன் கூட்டத்தில் இதுவும் விவாதிக்கப்பட்டுள்ளது. இப்பணியை வேகப்படுத்தி, அடுத்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 28 நவம்பர், 2017

வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள் தமிழகத்துக்கு மீண்டும் வருபவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கட்டாயம் இல்லை

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என்று அரசுஉத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பது கட்டாயம் என கடந்த 2006ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாகிறது என்றும், முதற்கட்டமாக 2006-2007ம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் இது நடைமுறைக்கு வரும், 2007-2008ம் ஆண்டில் இரண்டாம் வகுப்புக்கும் அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் தமிழ் கட்டாயமாக்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பகுதி ஒன்றில் தமிழ் கட்டாய பாடமாக படிக்க வேண்டும். பகுதி இரண்டில் ஆங்கிலம், பகுதி 3ல் மற்ற பாடங்கள் பகுதி நான்கில் விருப்ப மொழி படிக்கலாம். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழை கட்டாய பாடமாக எழுத முடியாது என்றும் அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணி காரணமாக வேறு மாநிங்களுக்கு சென்று பின்னர் திரும்ப தமிழகம் வரும்ேபாது அவர்களின் குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று நீதி மன்றம் தெரிவித்தது.
இதை அடிப்படையாக கொண்டு பள்ளிக் கல்வி இயக்குநரும் அரசுக்கு கடிதம் எழுதினார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்றுக் கொண்ட அரசு, அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு சென்று பின்னர் தமிழகத்துக்கு திரும்ப இடம் பெயர்ந்து வந்தால் அவர்களின் குழந்தைகள், தமிழக பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பில் சேரும் போது தமிழை கட்டாய பாடமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

"கதை வண்டி" -சிறுவர்களுக்காக, சிறுவர்களே கதை எழுதும் பயணம்

தமிழில் சிறுவர்களுக்கான கதைகளை அவர்களே எழுதும்போது அவை இன்னும் உயிர்ப்போடு இருக்கும். அதற்கான ஒரு முயற்சியே இந்த ‘கதை வண்டி’ பயணம்.
தமிழில் கதைகள் எழுத ஆர்வமாக இருக்கும் 20 சிறுவர்களுடன் நேரிலும், அஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாகவும் ஒரு வருடம் பயணிக்க இருக்கிறோம். பயணத்தின் முடிவின் ஒவ்வொருவரின் கதைகளையும் தனித்தனிப் புத்தகமாக்கி, சிறப்பான விழாவில் வெளியிடவும் இருக்கிறோம்.
செய்யவேண்டியது:
உங்கள் வீட்டில்/பள்ளியில் கதை எழுத ஆர்வமாக இருக்கும் பிள்ளைகள் இருப்பின், அவர்களே சொந்தமாக எழுதிய கதையை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். தங்களைப் பற்றிய சுய அறிமுகக் குறிப்பை (பெயர், பெற்றோர், படிக்கும் வகுப்பு/பள்ளி, தொடர்பு எண், முகவரி உள்ளிட்டவை) அத்துடன் இணைக்கவும்.
வயது : 9 வயது முதல் 14 வயது வரை
தேர்ந்து எடுக்கப்படும் 20 குழந்தைகளுடன் ஒரு வருடம் நாங்கள் பயணிப்போம். அதில் அவர்களுக்குள் இருக்கும் கதை எழுதும் ஆற்றலை வெளிக்கொணர உதவுவோம்.
கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 28- 2017
மின்னஞ்சல் - kathaivandi@gmail.com
அஞ்சல் முகவரி -
விழியன், 2A, சாந்தமாள் தெரு, சிவன் நகர், துண்டலம், சென்னை - 600077
தொடர்பு எண்: 9094009092
ஒருங்கிணைப்பு:
விழியன் & வித்யா
விஷ்ணுபுரம் சரவணன்
வெற்றிச்செழியன்

INCOME TAX FORM 2017 - 2018 (NEW)

IT FORM - வருமான வரி கணக்கிடும் படிவம்...




🌟 வருமான வரி கணக்கிடும் படிவம் (மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை உள்ள காலம்)


⚡ நிதி ஆண்டு 2017-2018,

⚡ மதிப்பீடு ஆண்டு 2018-2019.



🌟 வருமான வரி கணக்கீடு (60 வயதிற்குள் உள்ளவர்களுக்கான வருமான வரி கணக்கீடு)


⚡ ரூ.250000 வரை - வரி இல்லை,

⚡ ரூ.250000 க்கு மேல் ரூ.500000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.250000 கழித்து வரும் வருமானத்தில் 5% வரி,

⚡ ரூ.500000 க்கு மேல் ரூ.1000000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.500000 கழித்து வரும் வருமானத்தில் 20% வரி + ரூ.12500,

⚡ ரூ.1000000 கற்கும் மேல் இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.1000000 கழித்து வரும் வருமானத்தில் 30% வரி + ரூ.112500.


🌟 படிவம் 12BB - ஊழியரின் வருமான வரி விலக்கு பெறும் விவரங்கள் மற்றும் சான்று பிரிவு 192 வருமான வரிச் சட்டம்.


🌟 நிதி ஆண்டு 2017-2018 பெறப்பட்ட வருமான விவரங்கள் படிவம்.


🌟 பிரிவு 80C முதல் 80U வரையுள்ள கழிவுகளை பற்றிய விரிவான தகவல்கள்.


🌟 மேலும் வருமான வரி கணக்கீடு சம்பந்தமான தகவல்களுடன் வருமான வரி கணக்கீடு படிவங்கள் jpg மற்றும் PDF வடிவிலான கோப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
Click Here

திண்டுக்கல் CEO - ஆசிரியர்கள் CELL PHONE பயன்படுத்துகிறார்களா என தலைமை ஆசிரியர்கள் அடிக்கடி வகுப்பறையில் பார்வையிட வேண்டும் - செயல்முறைகள்

DEEO - பணிப்பதிவேடுகாணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் (AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாணவர் சேர்க்கை அதிகப்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் மாதிரி சான்றிதழ்


மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? - ஆனந்த விகடன்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள பனப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தமிழக அளவில் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அங்கும், இங்குமாகப் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பள்ளி ஆசிரியர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களின் இதுபோன்ற செயல்பாட்டுக்கு என்ன காரணம் என்று கல்வியாளர்களிடம் பேசினோம். 
மனித உரிமை ஆர்வலரும், கல்லூரிப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவருமான கல்யாணி "பள்ளி மாணவர் தற்கொலை, மாணவிகள் தற்கொலை எனத் தொடர்ந்து செய்தியாக வருவது பரிதாபமாக இருக்கிறது. ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வரச் சொன்னதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள் என்று கேட்கிறபோது மாணவர்களின் மனவலிமை குறைந்து வருவதைத்தான் காட்டுகிறது. 
மாணவர்கள், படிப்பு... படிப்பு என்று மதிப்பெண்ணை மட்டுமே வாழ்க்கை என்று நோக்கி நகரும்போது மனவலிமையை இழக்கிறார்கள். பள்ளிக்கூடங்களும் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டாமல் மதிப்பெண் பெறுவதை மட்டுமே வாழ்க்கை என்று வழிகாட்டுகிறார்கள். இதனால் பள்ளிகளில் கல்விசாரா திறனை மேம்படுத்துவதற்கான (ExtraCurricular activities) வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன. இதற்கான வாய்ப்புகள் இருந்திருந்தால் கல்வி ஆர்வம் குறைந்தாலும் இதர திறமைகளை வளர்ப்பதில் அதிகளவில் கவனம் செலுத்தி மாணவர்கள் முன்னேறுவார்கள், தற்கொலை போன்ற எண்ணங்கள் மனதில் வளர இடங்கொடுக்க மாட்டார்கள். 
பள்ளியில் ஓவிய ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருப்பதில்லை. கல்வி என்பதே ஆளுமையை வளர்க்க வேண்டும் என்பதே. ஒவ்வொரு மாணவர்களிடமும் தனி ஆளுமைத் திறன்கள் இருக்கின்றன. அதனை ஆசிரியர்கள் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி மேம்படுத்திட வேண்டும். ஆனால், ஆசிரியர்களுக்குத் தேர்ச்சி என்பதை மட்டுமே வைத்துச் செயல்படச் சொல்வதால் இதர விஷயங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை. 
பல பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பைப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை பதினொன்றாம் வகுப்பிலும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களை மதிப்பெண்ணை நோக்கித் தள்ளும்போது கல்வியில் ஈடுபாடு இல்லாமல் போகிறது. தனியார் பள்ளிகளில்தான் இவ்வளவு சதவிகிதம்பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள், 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை இவ்வளவு பேர் என விளம்பரம் செய்துகொண்டிருந்தார்கள். தற்போது அரசுப் பள்ளிகளிலும் இந்த விளம்பர யுக்தி பரவியிருக்கிறது. 
மாணவர்களிடம் மென்மையாக நடந்துகொள்ளவேண்டும். தவறு செய்தாலும் அனைவரின் முன்னிலையில் திட்டாமலும் அவமானப்படுத்தாமலும் தனியே அழைத்துப் பேசவேண்டும். மாணவர்களை ஊக்குவிக்கவேண்டும். வகுப்பறையில் எல்லா மாணவர்களுக்கும் சம வாய்ப்பை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் வந்தால் மாணவர்கள் பயப்படவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
பள்ளியிலும், வகுப்பிலும் கட்டுப்பாடு அதிகமாகும்போதே மாணவர்கள் திசை திரும்புகின்றனர். வகுப்பில் இயல்பாகவும், ஜாலியாகவும், மகிழ்ச்சியாகவும் பாடத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதன்மூலம் தடம்மாறும் பிள்ளைகள் மனம்மாறி கற்றலில் கவனத்தை செலுத்த ஆரம்பிப்பார்கள். 
கல்வி வாழ்க்கையில் நல்ல தைரியம் மிக்கவர்களை உருவாக்க வேண்டுமே தவிர, மதிப்பெண் மதிப்பெண் எனத் தைரியமில்லாத பிள்ளைகளை உருவாக்கக் கூடாது. இப்போது அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியிருப்பதாலும் மாணவர்களின் கற்றல் திறனும், படைப்பாற்றல் திறனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனைப் பெற்றோர்கள் கருத்தில்கொண்டு பள்ளியில் சேர்க்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கிறார் பேராசிரியர் கல்யாணி. 
தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைப்பின் ஆலோசகரும், கல்வியாளருமான சுவாமிநாதன் "தற்போது எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று இருக்கிறது. ஒன்பதாம் வகுப்பில் நுழைந்துவிட்டால் போதும். எளிதான தேர்வு முறையினால் பத்தாம் வகுப்பிலும் எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம். மாணவர்கள் பதினொன்றாம் வகுப்புக்கு வரும்போது மட்டுமே தடுமாற்றத்தை சந்திக்கிறார்கள். கல்விக்கும் இவர்களுக்கும் ஏதோ முரண்பாடு இருப்பதுபோல் உணர்கிறார்கள். பதினொன்றாம் வகுப்பில் சேரும்முன்பே மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். 
மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் குரூப்-1 மற்றும் குரூப்-2 எடுத்துத் தடுமாறும்போது தங்களது பிரிவை மாற்றிக்கொள்ளும்வசதியும் இல்லை. மேலும், பெற்றோர்கள் குரூப்-1 அல்லது குரூப்-2-வில்தான் தன்னுடைய பிள்ளை படிக்க வேண்டும் என்று நெருக்குதலைத் தருகிறார்கள். இதுவும் பிள்ளைகளுக்குக் கல்வியின் மீது கசப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளியில் அதிக தேர்ச்சி விகிதத்தைத் தரும்போது ஏன் அரசுப் பள்ளியில் தர முடிவதில்லை என்று கேட்டு, ஆசிரியர்களுக்குக் கூடுதல் அழுத்தத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றனர். இதனால் ஆசிரியர்கள், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைக் கூட்டவேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுவதால் கண்டிப்புடன் நடந்துகொள்கின்றனர். 
தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் செயல்பாடுகளிலும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் செயல்பாடுகளிலும் வேறுபாடு இருப்பதை உணரலாம். பல தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளியில் இதுபோன்ற நடைமுறைகள் எதுவும் இல்லை.
அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகமும் செயல்படாமல் இருக்கின்றன. இனியாவது, இதனைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். கல்வி அதிகாரிகள் இதனைக் கண்காணிக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் அடிக்கடி பள்ளிகளுக்கு  விசிட் செய்ய வேண்டும்.
பள்ளிகளில் நீண்ட காலமாக நன்னெறி வகுப்புகள், கை வேலைப்பாடு, ஓவியப்பயிற்சி, உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. இதற்கான ஆசிரியர்கள் இடங்கள் காலியிடங்களாகவே இருக்கின்றன. இதனையும் கவனத்தில்கொள்ள வேண்டும். உயர்கல்வி அதிகாரிகள் தலைமையாசிரியர்களை மட்டும் வைத்து மீட்டிங் நடத்துகிறார்கள். ஆனால், ஆசிரியர்களையும் அழைத்து கூட்டங்களை நடத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.
மாணவர்களின் நன்னடத்தை தவறுதலுக்கு என்னமாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பதுகுறித்து வழிகாட்டுதல் நெறிமுறையை உருவாக்கிடவேண்டும். கல்வித்துறை ரிசல்ட்டை முதன்மை கொள்ளாமல் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தினால் இதுபோன்ற பிரச்னை வருவதற்கு வாய்ப்பில்லை.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், சைக்கிள், பாடப்புத்தகங்கள், உடை என நிறையவே செலவு செய்கிறது. இந்தச் சூழ்நிலையில் மாணவர்களுக்கும் பொறுப்பு உணர்வு அதிகமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர வேண்டும்" என்கிறார். 
நான்கு மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட வேலூர் மாவட்டத்தில் மேல்நிலை பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியரிடம் பேசியபோது "மேல்நிலை வகுப்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். வகுப்பில் அதிக மாணவர்கள் உள்ளதால் முழு கவனத்தையும் செலுத்த முடிவதில்லை. தற்போது மாணவர்களுக்கு பயந்துதான் வகுப்பு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. ஏதேனும் ஒரு பகுதியில் நிகழும் சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குற்றம்சாட்டுவது தவறானது" என்கிறார்.
பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க களமிறங்கி இருக்கும் தமிழகப் பள்ளி கல்வித்துறை மாணவர்களின் பிரச்னை குறித்தும் கவனம் செலுத்திட வேண்டும். 
நன்றி- ஆனந்த விகடன்