>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 22 நவம்பர், 2017

SCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் பட்டியல் - தர்மபுரி மாவட்டம்


அரசாணை எண் 962 நாள்:21.11.2017- மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 (02.12.2017)க்கு மாற்றம் .அரசாணை வெளியீடு

01-01-2016 முதல் 31-10-2017 வரை ஓய்வுபெற்ற மற்றும் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் திருத்திய ஓய்வூதிய கருத்துருக்கள் பணிப்பதிவேட்டுடன் மாநிலகணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்-அரசாணை வெளியீடு

கட்டுரைப்போட்டியில் பெற்ற பரிசுத்தொகையை பள்ளி வளர்ச்சி நிதிக்கு அளித்த ஏழாம் வகுப்பு மாணவி நிவேதா


நிவேதா...

எங்கள் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி.கூரை வேய்ந்த வீடு.பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு  பொருளாதார வசதி இல்லை.ஆனால் எதையும் தெளிவான பார்வையோடு அணுகும் திறமையான பெண்...படிப்பில் படு சுட்டி.. கணக்கு பாடத்தில் மிக மிக கெட்டி..

எங்கள் ஒன்றியத்தில் சென்ற வாரம் நடைபெற்ற RTE தொடர்பான  போட்டிகளில் உயர் தொடக்கப்பள்ளி நிலையில் *நிவேதாவை* கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ள தயார் செய்திருந்தோம்...
போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், விளையாட்டாய் "நிவேதா, நீயோ ஏழாம் வகுப்பு தான் படிக்கிறாய்..எட்டாம் வகுப்பு  மாணவர்களுடன்  போட்டியிட வேண்டியிருக்கும்..முதல் பரிசுவாங்குவது சற்று கடினம்தான்..குறைந்தது மூன்றாவது பரிசாவது பெற முயற்சி செய்வோம் நிவேதா" என்றேன்..
அதற்கு சிறிதும் தாமதிக்காதவளாய் "சார்  ,நாம முதல் பரிசுதான் வாங்குறோம் சார் " என்று உறுதியாக  சொன்னாள்...
 அவள் தன்னம்பிக்கைக்கு தகுந்தார்போல் போட்டியில்  இரண்டாம்  பரிசை வென்று பரிசுத்  தொகையாக ₹1300 பெற்றாள்.

அதுக்கப்புறம்தான் நடந்ததுதான் ஹைலைட்டு...வங்கிக்கு சென்று பரிசுத்தொகைக்கான
காசோலையை  பணமாக மாற்றிய கையோடு நேராக பெற்றோரோடு பள்ளிக்கு வந்தவள் தான் பெற்ற பரிசுத் தொகையை எங்கள் பள்ளியின் த ஆ  யிடம் வழங்கி இதை பள்ளியின் வளர்ச்சிக்கு தன் பங்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி எங்களை வியப்புக்குள்ளாக்கினாள்..

பெற்றோரிடம் என்னங்க இதெல்லாம் என்று விசாரித்த போது,"அவள் பெரியவளாகி வேலைக்கு சென்று சம்பாதிக்க துவங்கியதும் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பாள்....அதற்கான வாய்ப்பு இப்போதே கிடைத்துவிட்டது.என் மகள் விருப்பபடியே பரிசுத் தொகையை பள்ளிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என பெற்றோரும் தலைமையாசிரியரிடம் வற்புறுத்த  துவங்கி விட்டனர்..

 தலைமையாசிரியருக்கு  என்ன செய்வது என்று புரியவில்லை.., அவர்களிடம் எவ்வளவு எடுத்துகூறியும்  நிவேதாவும் அவள் பெற்றோரும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளாமல் உறுதியாக நிற்கின்றனர்.

இந்த பெருமித மனநிலையில் இருந்து மீளாத தலைமை ஆசிரியை அவர்கள்  காலை இறைவணக்க கூட்டத்தில் *நிவேதாவின்* செயலை எடுத்துக்கூறி  அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் பாராட்டினார்..

அவளின் உழைப்பால்  கிடைத்த பரிசு அவளுக்கு மட்டுமே உரியது என்று நாங்கள் உறுதியாக இருந்தாலும் அவர்களின் உறுதிக்கு முன் என்ன செய்வதென்று அறியாத நிலையில், அருமையான மாணவியை வளர்த்தெடுத்த பெருமிதத்தோடு
*ஊ ஒ ந நி பள்ளி,வடசிறுவளூர்,ஒலக்கூர் ஒன்றியம்,விழுப்புரம் மாவட்டம்.*

10th ANSWER KEYS

  • CLICK HERE - X MATHS II MID TERM Q&A ||Mr.Rajadhurai

10th Standard Quarterly Exam - 2017 Question And Answer

  • Tamil I Paper | 10th Standard Quarterly Exam - 2017 Question And Answer - Mr Vel Murugan - Click Here
  • Tamil II Paper | 10th Standard Quarterly Exam - 2017 Question And Answer - Mr Vel Murugan - Click Here

  • English I Paper | 10th Standard Quarterly Exam - 2017 Question And Answer - Way to Success - Click Here
  • English II Paper |10th Standard Quarterly Exam - 2017 Question And Answer - Mr D.Sridar - Click Here

மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 க்கு மாற்றம் - அரசு அறிவிப்பு

டிசம்பர் 1ம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி விடுமுறை அறிவித்து அரசானை வெளியிடப்பட்டது. அரசின் தலைமை ஹாஜியின் வேண்டுகோளை ஏற்று மிலாதுநபி விடுமுறையை மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

CM CELL REPLY : 2009க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் 6 மற்றும் 7வது ஊதிய முரண்பாடு மனுவுக்கு CM பதில்

DEE - MIDDLE SCHOOL HM B.ED INCENTIVE REGARDING - DIR PROC (08.11.2017)

நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பின் பி.எட் முடித்தமைக்கு ஊக்க ஊதியம்-குறித்து செயல்முறைகள்-நாள்:08.11.2017

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு!


தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும்
அடிப்படை வசதி குறித்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து பினாக பாணி என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி குறித்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் படி, சம்பவத்திற்கு காரணமானவர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதேபோல தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், 2002-2004 வரை மாவட்ட கல்வி அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகித்த பினாகபாணி, தீ விபத்துக்குள்ளான பள்ளியை ஆய்வு செய்ய தவறி விட்டதாக கூறி அவரை பணிநீக்கம் செய்து 2012-ல் பள்ளி கல்விதுறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும், தனக்கு பணி பயன் வழங்க வேண்டும் என கோரியும் உயர்நீதிமன்றத்தில் பினாகபாணி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி முரளிதரன் விசாரித்தார். அப்போது, மனுதாரரை மட்டுமே குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அரசு சார்பில், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி பள்ளியை ஆய்வு செய்ய மனுதாரரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் பள்ளியை முழுமையாக ஆய்வு செய்யாமல் மெத்தன போக்குடன் செயல்பட்டதால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 அதிகாரிகளின் மேல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 6 பேர் மீது குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை, 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரருடன் பணியாற்றிய 5 பேர் நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவருக்கு முன் பணியாற்றிய தலைமை கல்வி அதிகாரி தான் அந்த பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார். அதனால் இவர் மீதான நடவடிக்கை தன்னிச்சையானது. அதனால் இவரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, 8 வாரங்களுக்குள் இவரை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக கருதி, இவருக்கு சேர வேண்டிய பண பலனை வழங்க உத்தரவிட்டார்.
மேலும், கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்றாலும் அதில் பாதுகாப்பான முறையில் கல்வி பெறுவது அடங்கும். பள்ளிகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதி விதிகளின்படி அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் வழங்க பெற்றுள்ளதா என அரசு திடீர் சோதனை நடத்த வேண்டும். விதிமீறல்கள் இருந்தால் அந்த பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் சொத்துக்களான குழுந்தைகளுக்கு பாதுகாப்பன சூழ்நிலையை வழங்க வேண்டியது அரசின் கடமை எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்திவைப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொறியியல் பாடங்களுக்கு நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு.

சென்னை தரமணி மத்திய பல்தொழில்நுட்ப கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவிருந்தது.பொறியியல் அல்லாத பாடங்களுக்கு திட்டமிட்டபடி நடைபெறும்.விழுப்புரம்,மதுரையில் திட்டமிட்டபடி நவம்பர் 24,25ல் நடைபெறும்.சான்றிதழ் நடைபெறும் தேதி பின்னர் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.

TNPSC: தமிழகம் முழுவதும் நூலக பணியாளர்கள் பணிக்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நூலக பணியாளர்களுக்கள் பணிக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது

விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 20 எனவும் அறிவிப்பு

ஆசிரியர்களே இல்லாமல் இயங்கும் அரசு பள்ளி..

ஆசிரியர்களே இல்லாமல் பள்ளி இயங்குவதாக தேனி கலெக்டரிடம் மாணவ, மாணவியர் புகார் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் கோம்பைத்தொழு அருகே மஞ்சனூத்து கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி உள்ளது. ஈராசியர் பள்ளியான இப்பள்ளியில் மஞ்சனூத்து மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 
ஈராசியர் பள்ளியான இப்பள்ளியில் கடந்த மாதம் வரை அனிதா என்ற இடைநிலை ஆசிரியை பணிபுரிந்து வந்தார்.-கணினிகல்வி- ஒரேயொரு ஆசிரியை மட்டுமே அனைத்து குழந்தைகளுக்கும் பாடம் நடத்தி வந்தநிலையில், கடந்த மாதம் 16ம் தேதி முதல் இருந்த ஒரு ஆசிரியையான அனிதாவை மாற்றுப்பணிக்காக உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு இடமாறுதல் செய்து மாவட்ட தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டது. 
ஈராசியர் பள்ளியான மஞ்சனூத்து ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஒரு ஆசிரியர்  இல்லாத நிலையில் பள்ளிக்கு மாணவ, மாணவியர் வந்தாலும், பாடம் ஏதும் நடக்காததால், வீணாக வீடு திரும்பி வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நேற்று மஞ்சனூத்து கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் தேனி மாவட்ட  கலெக்டரை சந்தித்து தங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என  கோரிக்கை வைத்தனர். இடைநின்ற பள்ளி மாணவ, மாணவியர்களை ஆண்டுதோறும் கணெக்கெடுக்க தனி நிதி ஒதுக்கி, இதற்காக உண்டு உறைவிடப்பள்ளி துவக்கி பாடம் நடத்த மத்திய அரசு திட்டம் உள்ள நிலையில், தமிழகத்தை ஆளும் அரசில், ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரை முதல்வராக ஆக்கிய ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மஞ்சனூத்து கிராமத்தில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் தங்கள் கல்விக்கு உத்தரவாதமாக ஆசிரியர்களை நியமிக்க கேட்டு கலெக்டர் அலுவலகம் வரை வந்தது ஆட்சியின் அவலத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. 
இது குறித்து தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேசனிடம் கேட்டபோது,”  இதுகுறித்து தற்போது என் கவனத்திற்கு வந்தது. உடனே, உத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு மாற்றுப் பணிக்காக அனுப்பப்பட்ட ஆசிரியையின் இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மஞ்சனூத்து கிராம ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது” என்றார். ஈராசியர் பள்ளியில் ஓராசிரியை மட்டுமே நியமிக்கிறீர்களே, இன்னொரு ஆசிரியரை எப்போது நியமிக்க உள்ளீர்கள் என்றதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

பள்ளிக் கல்வியில் ஐக்கியமாகும் தேர்வுத்துறை: தமிழக அரசு புதிய திட்டம்...

தமிழக அரசுத்தேர்வு துறையை படிப்படியாக பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக கல்வித்துறையில், அரசு தேர்வுத்துறை ஒரு இயக்குனரின் தலைமையில் தனியாக செயல்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வு, செய்முறைத் தேர்வுகள் மட்டுமின்றி, எட்டாம் வகுப்பு, சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வுகள் உட்பட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது.இதன் கீழ் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உட்பட 7 மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
பள்ளிக் கல்விக்கு மாற்றம் : சமீபகாலங்களில் இத்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் படிப்படியாக கல்வித்துறைக்கு மாற்றப்பட்டு வந்துள்ளது. உதாரணமாக தேர்வுத்துறை செய்து வந்த, பொதுத் தேர்வு மாணவர் பெயர் பட்டியல் தயாரிப்பு பணியை தற்போது பள்ளிக் கல்வித்துறையே செய்து வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளஸ்1 பொதுத் தேர்வையும், அவற்றின் செய்முறை தேர்வுகள் நடத்துவதையும், பின்னர் நடத்தும் தனித்தேர்வர்களுக்கான தேர்வையும் பள்ளிக் கல்வித்துறைதான் கவனித்து வருகிறது.
ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் பணியை நடத்தி முடிப்பதும் பள்ளிக்கல்வித் துறைதான்.
சான்றிதழ் சரிபார்ப்பு : தேர்வுத்துறையின் வசம் சான்றிதழ் சரிபார்க்கும் பணி மட்டுமே முக்கிய பணியாக இருந்துவந்தது. சமீபத்தில் இந்தப் பணியும் மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் வசம் சென்றுவிட்டது . தமிழகத்தில் அரசு பணிகளுக்கு நியமனம் செய்யப்படுவோரின் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியை தேர்வுத்துறையினரே இதுவரை செய்து வந்தனர். இனி இதனை முதன்மை கல்வி அதிகாரிகளே மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு வசதியாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு பயன்படுத்தும் 'சாப்ட்வேரின்' முக்கியமான ரகசிய 'பாஸ்வேர்ட்' அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுத்துறையின் 90 சதவீதப் பணிகளும் தற்போது பள்ளிக் கல்வித்துறை வசம் சென்றுவிட்டன.
தேர்வுத்துறை ரத்தாகும் : இதைத் தொடர்ந்து இன்னும் ஓராண்டுக்குள் தேர்வுத்துறையை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைத்து, தேர்வுத்துறையை ரத்து செய்ய அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக அரசு 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. தேர்வுத்துறையின் முன்னாள் துணை இயக்குனர் அந்தஸ்தில் இருந்த ஒரு அதிகாரியின் தலைமையில் குழு அமைத்து, ஆலோசனை நடத்தி, அரசுக்கும் கருத்துரு (புரபோசல்) அனுப்பப்பட்டுள்ளது. படிப்படியாக ஓராண்டுக்குள் தேர்வுத்துறை அலுவலர்கள் கல்வித்துறையுடன் இணைய உள்ளனர்.அரசின் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரையில் அரசு நிறுவனங்களில் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். அதிக வேலைப்பளுவில்லாத துறைகள், ஊழியர்களை அதோடு இணைந்த துறைகளுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம்அலுவலகங்களின் வாடகை, ஊழியர் சம்பளம் உட்பட பலவகைகளில் சிக்கனப்படுத்த முடியும் என்ற ஆலோசனையின் பேரில் இந்த ஏற்பாடுகளை அரசு செயல்படுத்த உள்ளது....

2017-2018 ஆம் கல்வியாண்டிற்கான Shaala siddhi-school standardization programme என்ற தலலைப்பில் தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி குறித்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரின் செயல்முறைகள்!!!

தேசிய ஒருமைப்பாட்டு வார விழா கொண்டாடுதல் சார்பாக செயல்முறைகள்..


1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு; கருத்துகளை பகிர தமிழக அரசு அழைப்பு...

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம்
வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளார்.
பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (20.11.2017) தலைமைச் செயலகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை வெளியிட்டார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தினை மாற்றியமைக்கும் அரசாணையில் மாணவர்களின் கற்றலை படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல், தேர்வு முறைகளை மாற்றியமைத்தல், அறிவியல் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணரச்செய்தல், மாணவர்கள் தமிழர் தம் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை இலக்கியம் குறித்த பெருமித உணர்வை பெறச் செய்தல் ஆகியன வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் கலைத்திட்ட வடிவமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு புதிய கலைத்திட்ட வடிவமைப்பு 2017 உருவாக்கம் தொடர்பாக 20.7.2017 முதல் 22.7.2017 வரை மூன்று நாட்கள் பல்வேறு துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 2000 நபர்கள் பங்கு பெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கணிதம் மற்றும் அறிவியல், மொழி மற்றும் கலைப்பிரிவு பாடங்கள், மதிப்பீட்டு முறை வடிவமைப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய புலங்கள் சார்ந்து கலைத்திட்ட வடிவமைப்பு துணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
தமிழ்நாடு புதிய கலைத்திட்ட வடிவமைப்பு 2017 தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கல்வி நிறுவன நிர்வாகிகள் ஆகியோர்களின் கருத்துகளை அறியும் வகையில் மண்டல அளவில் சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பெற்று அக்கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.
‘கருத்தறியும் பெட்டி மூலம் பெறப்பட்ட கருத்துகள்’
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கருத்தறியும் பெட்டி வைக்கப்பட்டு பள்ளி அளவில் பெறப்பட்ட கருத்துக்கள், மாவட்ட அளவில் தொகுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நிலை ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கருத்தறியும் கூட்டம் நடத்தப்பட்டு கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.
கலைத்திட்ட வடிவமைப்புக்குழு பல்வேறு நிலைகளில் தொடர்புடைய துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசித்து கலைத்திட்ட வடிவமைப்பில் இடம் பெற வேண்டிய கருத்துகளைப் பெற்று, அக்கருத்துகள் கலைத்திட்ட வடிவமைப்புக்குழுவில் விவாதிக்கப்பட்டு, தமிழ்நாடு புதிய கலைத்திட்ட வடிவமைப்பு 2017 தொடர்பாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தகவல் தொடர்பு தொழில் நுட்பம் ஆகிய பாடவாரியாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
'பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களுடன் ஒப்பீடு'
தேசிய அளவில் மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்திட்டம், பல்வேறு மாநில வாரியங்களின் பாடத்திட்டங்கள் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களை தமிழ்நாட்டில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் பாடத்திட்டத்தோடு ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டது. வகுப்பு வாரியாக, பாட வாரியாக துறை சார்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பாடவல்லுநர்கள் ஆகியோர் கலந்து கொண்ட பயிலரங்கம் நடத்தப்பட்டு அதில் பாடத்திட்ட ஒப்பீட்டு அறிக்கை விவாதிக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டிய கருத்துகள் ஆலோசிக்கப்பட்டு வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
'எஸ்சிஇஆர்டி இணையதளத்தில் வெளியிடப்படும்'
கலைத்திட்ட வடிவமைப்பு குழு வரைவு அறிக்கை மற்றும் வரைவு பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டிய விவரங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டு கருத்துரைகள் பெறப்பட்டு வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வரைவு பாடத்திட்டம் வகுப்பு வாரியாக, பாடவாரியாக, www.tnscert.org என்ற இணையதளத்திலும் வெளியிடப்படவுள்ளது.
தேசிய பாடத்திட்டங்களுக்கு நிகராக…
இதர மொழிப்பாடங்களுக்கான வரைவு பாடத்திட்டம் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டு இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும். தற்போது வெளியிடப்படும் வரைவு பாடத்திட்டம் தேசிய அளவில் பிற பாடத்திட்டங்களுக்கு நிகராகவும், நம் மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் போது பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் பெற வேண்டிய கற்றல் அடைவுகளை அடிப்படையாகக்கொண்டு பாடத் துணை தலைப்புகள் இடம் பெறும். மேலும், மாணவர்களின் சிந்தனையை தூண்டுதல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், தொடர்புடைய துறைகளில் சமீப கால தொழில் நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட ஆர்வமூட்டும் வகையிலான விவரங்களும் புதிய மதிப்பீட்டு முறையும் இடம் பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்து கேட்பு
தற்போது வெளியிடப்படும் பாடத்திட்டத்தினை உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் படித்துப்பார்த்து, தாங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை இணைய வழியே பதிவேற்றம் செய்திடலாம். மேலும், கடிதம் வாயிலாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்படும் கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu New Draft Syllabus 2017 - Published by TNSCERT

Draft Syllabus – Tamil Nadu 2017

Tamil Nadu Chief Minister Edappadi
K Palaniswami today released the first draft of State Board syllabus for classes one to 12.
Tamilnadu New Draft Syllabus 2017 ( TNSCERT ) -

பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு
விதிகள் தற்போது  திருத்தப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
போட்டித்தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதிமுறையானது கடந்த 1955-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''
குரூப் 4-ல் அடங்கிய பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதென்றும், பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும், விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது தவறானது என்றும், தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் நாளிதழ்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி தவறானதுமாகும். வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.
வெளிமாநில விண்ணப்பதாரர்கள் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக மாநிலத்தில் உள்ளோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் மாற்றமும் இல்லை. இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையே தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 4-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான 14.11.2017 நாளிட்ட அறிவிக்கையிலும் கடைபிடித்து வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால் சேர்க்கப்படவில்லை. பிறமாநிலங்களிலும் இவ்விதிமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.
கடந்த மூன்றாண்டுகளில் 66 போட்டித் தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு 30,098 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் பெற்றுள்ளார்கள். இவற்றுள் 11 நபர்கள் மட்டுமே பிறமாநிலத்தைச் சார்ந்தவர்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இன்று மறுகூட்டல் முடிவு வெளியாகிறது.தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்புக்கு, அக்டோபரில் நடந்த துணை தேர்வில், 22 ஆயிரத்து, 665 தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். அவர்களில், 184 பேருக்கு, பல்வேறு பாடங்களில், 383 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. இதில், 17 பேருக்கு மதிப்பெண் மாறிஉள்ளது. அவர்கள், தற்காலிக சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று காலை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மாறியவர்கள் பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு

மத்திய அரசின், துாய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுஉள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில், சுத்தமாக வளாகங்களை பராமரிக்கும் பள்ளிகளுக்கு, கடந்தாண்டு முதல், விருது வழங்கப்படுகிறது. இதன்படி, நாடு முழுவதும், 172 பள்ளிகளுக்கு, தேசிய துாய்மைப்பள்ளி விருது, சமீபத்தில் வழங்கப்பட்டது. இப்பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. நடப்பாண்டில், இத்திட்டத்துக்கு அனைத்துவகை பள்ளிகளும், விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, www.swachvidyalaya.com என்ற இணையதளத்தில், பள்ளிகள் சார்பில், புகைப்படங்களுடன் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில், மாவட்ட வாரியாக சிறந்த, 40 பள்ளிகள், ஆன்லைன் மூலமாக, தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய, அனைத்து மாவட்டங்களிலும், குழு அமைக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரி உட்பட, 10 பேர் கொண்ட குழு, 30ம் தேதிக்குள் ஆய்வு செய்து, இணையதளத்தில் தகவல்களைபதிவேற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.