திங்கள், 6 நவம்பர், 2017
ஆசிரியர்களுக்கான ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி : நவ.12-ற்குள் விண்ணப்பிக்கலாம்!
ஆசிரியர்களின் திறமைகளைக் கண்டறியும் 'சென்டா' ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க
12.11.2017 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான கணித, அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகள்போல, ஆசிரியர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அதை ஊக்குவிக்கும் விதமாக சென்டா நிறுவனம் (Centre for Teacher Accreditation) சார்பில் 'சென்டா' ஒலிம்பியாட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் முதல், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.
இதில், 14 வகை பாடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.
பாடத்தில் ஆசிரியர்களின் திறன், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறை, நுண்ணறிவு, தகவல் பரிமாற்றத் திறன் போன்றவற்றை ஆராயும் வகையில் இத்தேர்வு இருக்கும்.
அப்ஜெக்டிவ் முறையிலான இத்தேர்வு 2 மணி நேரம் நடக்கும்.
2017-ம் ஆண்டுக்கான 'சென்டா' ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட நாடு முழுவதும் 28 நகரங்களில் டிசம்பர் 9-ம் தேதி நடக்க உள்ளது.
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு முதல்முறையாக தமிழில் நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள், இணையதளத்தில் (www.tpo-india.org) நவம்பர் 12 வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ், தெலுங்கில் தேர்வு எழுதி வெற்றிபெறும் ஆசிரியர்கள் 2 பேருக்கு கையடக்க கணினி பரிசாக வழங்கப்படும்.
தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களுக்கு டெல் நிறுவனம் சார்பில் கணினியும் பரிசாக வழங்கப்படும்.
'எடில் கிவ்' நிறுவனம் சார்பில், போட்டியில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது.
நன்றி : தி இந்து
நவம்பர் 3 அல்ல நவம்பர் 25 அன்று தேர்வுகள் நடைபெறும்!
அண்ணா பல்கலையில், பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. நவ., 2ல், சென்னையில் பெரும் மழை கொட்டியதால், மறுநாளான, 3ம் தேதி நடக்கவிருந்த தேர்வு மட்டும் தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தேர்வு, வரும், 19ல் நடத்தப்படும் என, நேற்று காலை, அண்ணா பல்கலை அறிவித்தது. ஆனால், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அந்த தேதியை மாற்றும்படி, பொறியியல் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, வரும், 25ல், அந்த தேர்வு நடத்தப்படும் என, தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது
ஜாக்டோ-ஜியோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எங்கு வரும் ??எப்போது வரும்???
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை
உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் (23.10.2017) வரும் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக தள்ளிபோனது.
இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதிகளான மதிப்புமிகு சசிதரன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளார்.
( உயர் நீதிமன்ற விதிப்படி மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீதிபதிகள் இடமாறுதல்) மற்றும் நீதியரசர் திரு. சுவாமிநாதன் அவர்கள் தற்போதும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இருக்கிறார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கினை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.
நீதியரசர் திரு.ஜி.ஆர்.சவாமி நாதன் சென்னை நீதிமன்றத்திற்கு வரும் தேதி தெரிந்தவுடன் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் அநேகமாக இந்த வார இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் உள்ள ஜாக்டோ ஜியோவின் மூத்த வழக்கறிஞர் அவர்கள் வழக்கை விரைந்து கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன்
7வது ஊதியக்குழு விருப்ப படிவம் (OPTION FORM) கொடுக்கும் போது கீழ்கண்ட தகவல்களை கவனத்தில் கொள்ளவும்!!!
✍ *அனைவரும் 01.01.2016 ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.*
ஏனெனில் 01.01.2016 முதல் 30.09.2017 முடிய பெற்ற ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, தேர்வு/சிறப்பு நிலை ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் 7th pay commission நிர்ணயம் செய்வதால் இன்றைய தேதியில் (01.10.2017) ஊதிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று இருந்தால், பதவு உயர்வு பெற்ற தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம். *(இது பயனளிக்கும்)*
✍01.01.2016 க்கு முன் தேதியில் ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/மூத்தோர் இளையோர் ஊதியம் நிர்ணயம் செய்து (if any), அதற்கான நிலுவையை 01.01.2016 க்கு பிறகு பெற்றவர்கள், விருப்ப படிவத்தில் 01.01.2016 அன்று ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/ மூத்தோர் இளையோர் ஊதிய நிர்ணயம் (if any) செய்த தொகையை குறிப்பிடவும்.
✍ஜனவரி 1, ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் 31.12.2015 அன்று பெற்ற தொகையை விருப்பப் படிவத்தில் குறிப்பிடவும்.
✍மேற்கண்ட Option தேதியில் இருந்து ஊதிய நிர்ணயம் செய்த பிறகு 01.10.2017 ல் பெறும் ஊதியமும், 01.10.2017 அன்று பெற்ற பழைய அடிப்படை மற்றும் தர ஊதியத்தை 2.57 ஆல் pay matrix ல் நிர்ணயம் செய்து பார்த்தால் பெறக்கூடிய ஊதியமும் சமமாக இருக்கும். ஒருவேளை அதிகமாக இருந்தால் option தேதியை 01.01.2016 முதல் 30.07.2017 முடிய, ஏதேனும் ஊதிய நிர்ணயம் செய்து இருந்தால் அத்தேதிக்கு மாற்றி கொடுக்கலாம். *(மாற்றம் இருந்தால்)*
✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு/ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு/சிறப்ப நிலை மற்றும் மூத்தோர் இளையோர் ஊதியம் பெற்று இருந்தால் அதற்கான உத்திரவை option படிவத்துடன் இணைத்து அனுப்ப தயார் நிலையில் வைத்திருக்கவும்.
பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி
மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான ஓவியப் போட்டி வரும் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியில்,
6, 7 மற்றும் 8-ம் வகுப்பில்படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். ‘நம் எதிர்கால தலைமுறையினரைக் காப்பாற்றுவதற்கு, அதிக கவனத்துடன் தண்ணீரைபயன்படுத்தவும்’ என்ற தலைப்பில் இந்த ஓவியப் போட்டி நடைபெற வுள்ளது.இதில் வெற்றி பெறும் மாணவர்கள், அடுத்த கட்டமாக மாநில அளவில் நடைபெறும் போட்டி யில் பங்கேற்க தகுதி பெறுவர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்ததாக தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம்.
இப்போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் விதமாக அனைத்துப் பள்ளி களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-24914334, 9600152202 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)