>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 18 செப்டம்பர், 2017

தேனியில்.... நாடகத்துடன் இணைந்த கல்விசார் உரையாடல் நிகழ்ச்சி. ....

கலகலப்பு வகுப்பறை சிவாவும்
மக்கள் கலைக்கூடம் பெருஞ்சித்ரனும்
கோமாளிகளாக நடிப்பதோடு கல்வி சார் உரையாடலை நெறியாள்கையும் செய்யஉள்ளனர். 
நாடகம்  -"கோமாளியின் குதிரை "
உரையாடல்  - " கனவு பள்ளி கனவு ஆசிரியர் கனவு சமூகம் "
தலைமை 
தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அறிவொளி இயக்கத்தின் முன்னோடியும்
விஞ்ஞானச்சிறகுகள்  இதழின் ஆசிரியருமான
பேரா.பொ.இராசமாணிக்கம் அவர்கள். 
சிறப்பு விருந்தினர்கள்
* நீதியரசர் ப.மதுசூதனன் அவர்கள்
   மாவட்ட நீதிபதி, வேலூர். 
* திருமிகு. V. பொன்ராஜ் அவர்கள்
   பாரதரத்னா A.P.J.அப்துல்கலாம்       அவர்களது அறிவியல் ஆலோசகர் 
* திருமிகு. துளசிதாசன் அவர்கள்
  கனவு ஆசிரியர் - நூலாசிரியர் 
* திருமிகு. பாஸ்கர்சக்தி அவர்கள்
   எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா 
நாள் - 30.09.17 சனிக்கிழமை
இடம் - அம்பி வெங்கிடுசாமி திருமண   மண்டபம், உழவர்சந்தை அருகில்,
               தேனி. 
* ஆசிரியர்களுக்கு முன்னுரிமை
* நுழைவுக்கட்டணம் ஒரு ரூபாய் 
மேலதிக தகவல்களுக்கு  9942052222

மாவட்ட தோறும் நடைபெறும் விளக்க கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சார்பில் கலந்து கொள்ளும் பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது...!



ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமையும் பள்ளிகள் எவை?

தமிழகம் முழுவதும், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான, 3,௦௦௦ பள்ளிகள் பட்டியலை, வரும், 21ம் தேதிக்குள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், கணினி வசதிகளுடன் கூடிய, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்' என, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.  
இதற்கான பணிகள் துவங்கி உள்ளன; ஒவ்வொருசரகங்களில், ஏழு பள்ளிகள் வீதம் தேர்வு செய்ய, தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு சரகத்துக்கு, நான்கு தொடக்கப் பள்ளிகள், மூன்று நடுநிலைப் பள்ளிகள் என, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், கணினி வசதி, டிஜிட்டல் திரை, நவீன ஒலி அமைப்பு வசதிகளும், 'வீடியோ கான்பரன்ஸ்' வசதிகளும் இடம் பெறும். இதற்கான பள்ளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியை, 21 ஆம் தேதிக்குள் முடித்து, அரசின் அனுமதி பெற, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

வால்பாறை,பந்தலுார்,கூடலுார் பள்ளிகளுக்கு நாளை(செப்-18)விடுமுறை

வால்பாறையில் கன மழை பெய்துவருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செப்.,18 )விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கூடலுார், பந்தலுார் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செப்.,18) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் கனமழை பெய்துவருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பந்தலூர் அருகே சேரம் பாடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் காயம் அடைந்தார். பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. மாற்றுப்பாதையில் வாகனங்கள் குமுளி அருகே கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வண்டிப்பெரியார் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் கட்டப்பனை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.


கோவை: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாளை வெளியாகுமா?

தேர்தல் நடத்தும் நிலையில், அ.தி.மு.க., அரசு இல்லாததாலும், வார்டு வரையறை பணி நிறைவு பெறாததாலும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, நாளை வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 12 மாநகராட்சி; 123 நகராட்சி; 529 பேரூராட்சி; 385 ஊராட்சி ஒன்றியம்; 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றின் பதவி காலம், 2016 அக்., 24ல் நிறைவடைந்தது.


உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக, மாநில தேர்தல் ஆணையம், 2016 செப்., 26ல், தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டது. 'இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை' எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு தொடர்ந்தது. 
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'தேர்தல் அறிவிப்பு முறையாக செய்யப்படவில்லை' என, தெரிவித்து, அக்., 4ல், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது.இதை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில், தனி அதிகாரிகள் நியமனத்தை எதிர்த்தும், அவர்களின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்தும், தன்னார்வ அமைப்பு சார்பில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.அத்துடன், உள்ளாட்சி தேர்தலை, விரைவாக நடத்த வலியுறுத்தி, தி.மு.க., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இம்மனு, பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மே, 14க்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், 'வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் காலதாமதம் ஏற்படும்' என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இவ்வழக்கு, செப்., 4ல் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, 'உள்ளாட்சி தேர்தலை, நவ., 17க்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை, செப்., 18க்குள் வெளியிட வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால், தற்போது அரசு கடும் நெருக்கடியில் உள்ளது. 'அரசுக்கு பெரும்பான்மை இல்லை. முதல்வர் சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், அக்கட்சிக்கு, இன்னமும் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை.மேலும், இட ஒதுக்கீடு அடிப்படையில், தொகுதி வரையறை பணிகள், இன்னமும் முடிவு பெறவில்லை. எனவே, நாளை தேர்தல் அறிவிப்பு வெளியாவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. 
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மேலும் அவகாசம் கேட்க, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

நவீனத்திலும், பாரம்பரியத்திலும் அசத்தும் அரசுப்பள்ளி...

பிஏட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்கள் நாற்பதாயிரம் பேர் வேலையற்ற நிலையில் காத்திருப்பு...

பிஏட் படிப்பில் கணினி படித்து முடித்த ஆசிரியர்கள் நாற்பாதாயிரம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர் . தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் மூலம் கணினி ஆசிரியர் படிப்புகள் முடித்து 40000 பிஏட் பட்டம் பெற்று ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர் .
*ஆசிரியர் படிப்பு*
தமிழக அரசு அங்கிகரித்து நடவடிக்கை எடுத்தால்தான தனியார் பள்ளிகளிலாவது ஆசிரியராக பணியாற்ற முடியும் . பிஏட் பட்டம் கணினியில் பெற்ற ஆசிரியர்களுக்கும் வேறுஎங்கும் பணி வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர் .
இவர்களால் பகுதிநேரமாக கூட எங்கும் பணியாற்ற இயலவில்லை. இளங்கலை பட்டத்துடன் பிஏட் மற்றும் முதுகலை பிஏட் பெற்றவர்களே அதிகம் வாய்ப்பு பெறும் நிலையில் அதுவே கட்டாயமான நிலையில்  ஆனால் பிஏட் கணினி முடித்தவர்களுக்கான வாய்ப்பு எனபது துளியும் இல்லை . அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை . இதுவரை அரசு பள்ளி , தனியார் பள்ளிகளில் கணிணி அறிவியல் ஆசிரியர்க்கான எந்த சரியான கல்வித்தகுதியும் நிர்ணயிக்கவில்லை .
அரசு இது குறித்து நடவடிக்கையெடுத்தால்தான படித்து முடித்து காத்திருக்கும் 40 ஆயிரம் பேருக்கும் ஒரு வழிகிடைக்கும் இல்லையெனில் படித்தும் பயணின்றி வேலையற்ற நிலையில் இருக்கும் நிலையே ஏற்டுகின்றது . ஆகவே கணினி ஆசிரியர்கள் படிப்பு முடித்து பிஏட் பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் குறித்து அரசு சிந்தித்து அவர்களுக்கான அங்கிகாரம் வேலையில் கிடைக்கபெற முன் வரவேண்டும் . தமிழகத்தில் 2011 முதல் பள்ளிகளில் அச்சிடப்பட்ட கணினி பாடபுத்தகங்கள் குப்பையில் போடும் நிலையில் இருப்பதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கணினி அறிவியல் பாடம் கற்றுத்தர நடவடிக்கையெடுத்தும் அரசு அதனை முழுமையாக முடிக்காமல் பாதியிலே கைவிட்டுள்ளது . இதனால் அரசு அச்சடிப்புக்கு செய்த செலவு தான் இறுதியில் நட்டக்கணக்கில் நிற்க்கின்றன. தமிழக அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டி 40ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டங்களை "நீதிமன்றம் " தங்களின் எல்லையை தாண்டி விமர்சிக்கிறது - திருமாவளவன் குற்றச்சாட்டு!!

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை மாற்றம்?

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 21ம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றார்.
மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் ஏற்பட்டுள்ள  குறைபாடுகளைக் களைய குழு அமைக்கப்பட்டுள்ளது.குழுவின் அறிக்கையின் அடிப்படையில் விரைவில் வெயிட்டேஜ் முறை மாற்றி அமைக்கப்படும் என்றார்.

TRANSFER TO STUDENT POOL - 18.09.2017 முதல் EMIS ல் மாற்றுச்சான்று வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்.

தற்போது EMIS ல் மாற்றுச்சான்று. வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்
ஏற்கனவே அனுப்பப்பட்ட படிவத்தில் ( தற்போதும் இணைக்கப்பட்டுள்ளது ) மாணவர் விவரங்கள் தொகுத்து அம்மாணவர்களை transfer செய்யலாம்
தங்கள் பள்ளியில் தற்போது (01.09.2017 அன்று) பதிவில் உள்ள மாணவர்கள் விவரம் மட்டும் தான் Emis லும் இருக்க வேண்டும்.
மற்ற மாணவர்கள் பொது தொகுப்பிற்கு (student pool) மாற்ற வேண்டும்

ஒரே கிராமத்தை சேர்ந்த 900 பேர் ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர் கிராமம்.


ஒரே கிராமத்தை சேர்ந்த 900 பேர் ஆசிரியர்களாக பணிபுரியும் பெருமையை பெற்றிருக்கிறது, கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள அலவான்டி கிராமம்.
ரே கிராமத்தை சேர்ந்த 900 பேர் ஆசிரியர்களாக பணிபுரியும் பெருமையை பெற்றிருக்கிறது, அலவான்டி கிராமம். கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவர் ஆசிரியர் படிப்பு படித்திருக்கிறார்கள். மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் அவர்கள் ஆசிரியர்களாக தங்கள் பணியை திறம்பட செய்து வருகிறார்கள்.
இந்த கிராமத்தை சேர்ந்த சிவமூர்த்தி சுவாமி அலவான்டி, சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர். அவர்தான் அங்குள்ள மக்களுக்கு படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறார். ஆரம்பத்தில் அந்த கிராமத்து பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு வரையே இருந்திருக்கிறது. 1955-ம் ஆண்டு 7-ம் வகுப்பு வரையும், 1968-ம் ஆண்டு 10-ம் வகுப்பு வரையும் வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. 1981-ம் ஆண்டு கல்லூரி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் கிராமத்தில் படிப்பறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்து விட்டது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு விவசாயம்தான் பிரதான தொழிலாக அமைந்திருந்தாலும் கல்வி புரட்சியில் தங்களை இணைத்து கொண்டு விட்டார்கள். தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து ஆசிரியர்களாக உருவாக்கி இருக்கிறார்கள்.
அலவான்டி கிராமத்தில் 23 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கும் குருராஜ் பாட்டில், “ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு அல்லது மூன்று பேர் ஆசிரியர்களாக இருக் கிறார்கள்” என்கிறார். அவர்களை ஆசிரியர்களாக உருமாற்றியதில் தனக்கும் பங்கு இருக்கிறது என்கிற பூரிப்பு அவரிடம் வெளிப்படுகிறது.
விரிவுரையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரான ஏ.டி கல்மாத், “சுதந்திர போராட்டம் எந்த அளவிற்கு கிளர்ச்சியை ஏற்படுத்தியதோ அதேபோல் இந்த கிராமத்தில் கல்வியும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார்.
அலவான்டியில் 1800 குடும்பங்களை சேர்ந்த சுமார் 8000 பேர் வசிக்கிறார்கள்.

235 இடங்கள் காலி வேளாண் பல்கலையில் மீண்டும் கலந்தாய்வு?

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அதன் உறுப்பு கல்லூரிகளில் நடத்தப்படும் 13 பட்டப்படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்தது. இதில் 931 இடங்கள் நிரப்பப்படாததால், மேலும் இரு கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டன. 
இதன் பின்னர் 285 காலியிடங்கள் இருந்ததால், நேற்று முன்தினம் இறுதிகட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வுக்கு 2,112 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர். 224 பேர் மட்டும் பங்கேற்றனர். இதில் 167 பேர் தங்களுக்கான இடத்தை விரும்பிய கல்லூரிகளில் தேர்வு செய்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக மேலும் இரு இணைப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான தகவல் நேற்று முன்தினம் கிடைத்தது. ஒவ்வொரு கல்லூரியிலும் 60 இடங்கள் இருப்பதால், இதில் 39 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களாகும். 
இதையடுத்து இறுதிகட்ட கலந்தாய்வு முடிந்தாலும் மேலும் 235 காலியிடங்கள் இருப்பதாகவும், அந்த இடங்களை நிரப்புவதற்காக மீண்டும் கலந்தாய்வு நடத்தலாமா என்பது குறித்து பல்கலைக்கழகம் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்று பல்கலை டீன் மகிமைராஜா தெரிவித்துள்ளார்.

பி.எஸ்சி., நர்சிங்: 19ம் தேதி கவுன்சிலிங்

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு, வரும், 19ல் கவுன்சிலிங் துவங்குகிறது. இதற்கான தகுதி பட்டியல், வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங் - பி.பார்ம்., உள்ளிட்ட ஒன்பது, துணை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், 8,000 இடங்களுக்கு மேல் உள்ளன.
இதற்கு, 26 ஆயிரத்து, 460 பேர் விண்ணப்பித்தனர். அதில், 25 ஆயிரத்து, 293 பேருக்கான தகுதிப்பட்டியல், www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில், நேற்று வெளியிடப்பட்டது.இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில்,
வரும், 19ல் துவங்கி, அக்., 7 வரை நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

நீரில் இருந்து மாசில்லா எரிபொருள் : அரசுப்பள்ளி மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு

இயந்திரமயமான இன்றைய வாழ்க்கைச்சூழலில் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நடுத்தர மக்கள் கூட, டூவீலர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் தேவையும், நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

அதிகபயன்பாட்டால் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, எரிபொருட்களில் இருந்து வெளிப்படும் புகையே மாசு பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் என்பதும் பரவலான தகவல். தற்போது நாம் பயன்படுத்தும் படிம எரிபொருட்களான பெட்ரோல் 60 வருடங்களும், நிலக்கரி 150 வருடங்களும், இயற்கை வாயு 60 வருடங்களும் மட்டுமே இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
அதே நேரத்தில், எதிர்கால தேவைக்காக மாசு இல்லாத எரிபொருளை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதற்கான கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானிகள் மூழ்கியுள்ளனர். 
இப்படிப்பட்ட நிலையில் நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து மாசில்லா எரி பொருளை உருவாக்கி,  அசரவைத்துள்ளார் அரசுப்பள்ளி மாணவி கலைச்செல்வி. சேலத்தை அடுத்த ஓமலூர் பாலகுட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்த இவர், கடந்த ஆண்டு, டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பை காட்சிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி கலைச்செல்வி கூறுகையில், ‘‘நான் தற்போது முத்தநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறேன். கடந்தாண்டு பாலகுட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்தேன். 
அப்போது பள்ளி தலைமையாசிரியை கிரிஜா மற்றும் அறிவியல் ஆசிரியர் வரதராஜன் ஆகியோர் கொடுத்த ஊக்கத்தினால் நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்து எரிபொருள் தயாரிப்பதை கண்டுபிடித்தேன். ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு  இயக்கப்படும் வாகனங்கள் அதிக செயல்திறன் கொண்டவையாக இருக்கும். கார்பன்டை  ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்களை வெளியிடாது. இதனால், புவி  வெப்பமயமாதலை தடுக்கலாம். 
தற்போது ஹைட்ரஜன் ஆற்றல் உற்பத்தி என்பது  ஆராய்ச்சி நிலைகளில் மட்டுமே உள்ளது. இந்திய அரசு புதுப்பிக்ககூடிய வளங்களை  உருவாக்க பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
இந்நிலையில்  எனது கண்டுபிடிப்பை மாவட்ட, மாநில அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் காட்சிக்கு வைத்த ேபாது பரிசுகளும், பாராட்டுகளும் கிடைத்தது. ‘‘ஹைட்ரஜன் உலகம்’’  என்ற தலைப்பில்  டெல்லியில் நடந்த 6வது தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் பாராட்டுகள் குவிந்தது. எதிர்காலத்தில் இதனை நாட்டுக்கு அர்ப்பணித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே லட்சியம்’’ என்றார்.
கலைச்செல்வியின் அப்பா சக்திவேல், அம்மா கவிதா இருவரும் சலவைத்தொழிலாளர்கள். அண்ணன்  சதீஷ்குமார் முத்துநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து  வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் கலைச்செல்வி படிப்பில் படுசுட்டி. கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் எப்போதும் சென்டம் வாங்குவார் என்கின்றனர் ஆசிரியர்கள்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை

அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுக்க, தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார்பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், 'டியூஷன்' என்ற, தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கின்றனர்.
மாத சம்பளம்சில ஆசிரியர்கள், தனியார் நடத்தும், 'டியூஷன் சென்டர்'களில், காலை மற்றும் மாலைநேரங்களில், மாதசம்பளம் பெற்று பாடம்நடத்துகின்றனர்.அதனால், பிளஸ் ௧, பிளஸ் ௨ வகுப்பு எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களும், ௧௦ம் வகுப்பு எடுக்கும்பட்டதாரி ஆசிரியர்களும், தங்கள் வகுப்புகளில்,அரசு நிர்ணயித்தபடி, பாடங்கள் நடத்துவதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது.
தங்கள் வகுப்பு மாணவர்களை, டியூஷனுக்கு வரவழைத்து, அங்குகற்றுத் தருவதாக கூறப்படுகிறது. எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகளில் படிக்கும், பிளஸ் ௧, பிளஸ் ௨ மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, தங்கள் ஆசிரியர்களின்டியூஷன் வகுப்புக்குசெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எச்சரிக்கை
இதற்காக, மாதந்தோறும், ௧,௦௦௦ - ௩,௦௦௦ ரூபாய் வரை கட்டணம் தேவைப்படுவதால், பண வசதியின்றி அவதிப்படுகின்றனர். இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு, சில பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 
இதையடுத்து, 'அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள்,டியூஷன் எடுக்கக் கூடாது' என, தடை விதிக்கப்பட்டு உள்ளது.'கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, டியூஷன் எடுக்க தடை உள்ளதால், ஆசிரியர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்' என, மாவட்டக் கல்வி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
காசி மற்றும் இராமேஸ்வரம் யாத்திரை எப்படி செல்வது...?

இந்துவாக பிறந்த ஒவ்வொருவரது ஆசையும் வாழ்நாளில் ஒருதடவையாவது காசி யாத்திரை செல்வது தான் நமக்கு இந்த மானிடப் பிறப்பு கொடுத்ததின் பயன் ஆகும்

காசியாத்திரை என்பது காசிக்கு மட்டும் செல்வது கிடையாது. காசியுடன் ராமேஸ்வரமும் செல்வது தான். அப்படியானால் காசி-ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி? என்பதை காண்போம்:

காசி யாத்திரை செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி எழ வேண்டும்.

ஒவ்வொரு தடவை மூழ்கும் போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க வேண்டும்.

முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை சேது மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும்,

இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை பிந்து மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும்,

மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை வேணு மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும்,

கரையில் வைக்க வேண்டும். பின்னர் மூன்று லிங்கத்திற்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வில்வ இலை போட்டு ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் கூறி வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்தியம் வைத்து, பின் சூட தீபாராதனை காட்டி கும்பிட வேண்டும்.

பின் சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்து பத்திரமாக நாம் வைத்து கொள்ள வேண்டும்.

பிந்து மாதவ மற்றும் வேணு மாதவ லிங்கம் இரண்டையும் கடலில் போட்டு விட வேண்டும்.

அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் (1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்,

 2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன்,

 3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை

 4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி,

5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு,

6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்

7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.

8. நள தீர்த்தம்,

9. நீல தீர்த்தம்,

10.கவய தீர்த்தம்,

11.கவாட்ச தீர்த்தம்,

12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.

13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,

 14. கங்கா தீர்த்தம்,

 15. யமுனை தீர்த்தம்,

 16. கயா தீர்த்தம்,

17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்

 18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்

19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி

20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்

21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்

22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) நீராடி விட்டு கோடி தீர்த்த்தை மட்டும் ஒரு கேனில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின் ஈர உடையை மாற்றி கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பின் இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப வேண்டும். உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும்.

காசி செல்லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீரத்த்தையும் எடுத்து செல்ல வேண்டும்.

காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இட வேண்டும்.

பின் அங்கிருந்து ஒரு கேனில் தீர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும்.

பின்னர் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவு பொருளை விட்டு விட வேண்டும். பின்னர் கயா சென்று அங்கு நமது இறந்த மூதாதையருக்கு பித்ருக்கடன் செய்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட வேண்டும்.

இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.
அதன் பின் ராமேஸ்வரம் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.

அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும.

இப்படி செய்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும்.

காசியிலி இறக்க முக்தி என்பது மும்மலம் ( ஆணவம் கன்மம் மாயை)  நீங்க வேண்டும் என்பதுதான் காசியில் இறக்க முக்தி ஆகும்

திருச்சிற்றம்பலம் 🥀🥀🥀🙏🥀🥀🥀

NAS - National Achievement Survey Test Dates Announced!

NAS Exam Dates:

Oct 10 - Model Exam - 1
Nov 07 - Model Exam - 2
Nov 13 - "NAS" Exam
Standards - 3, 5, 8.

பில் கேட்ஸின் திறந்த மனம்..

பில் கேட்ஸின் திறந்த மனம்
உலக பணக்காரர், மென்பொருள் உலகின் சக்கரவர்த்தி பில் கேட்ஸிடம் ஒருவர் கேட்கிறார்.
"உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா ?" என்று உலக பணக்காரர், கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் பில் கேட்ஸிடம் அவரின் நண்பர் ஒருவர் கேட்கிறார்.
அதற்கு பில் கேட்ஸ் சொல்கிறார்.. 
“ஆம்.  ஒருவர் இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு இருந்த சமயம்.  நியூயார்க் நகர விமான நிலையத்தில் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை.  அதனால், வாங்காமல் விட்டுவிட்டேன்.  
அப்போது, ஒரு கருப்பினச் சிறுவன்,  என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.
என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை , இலவசமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றான்.
மூன்று மாதங்கள் கழித்து,  மறுபடியும் அ்ங்கே செல்ல வேண்டியதாகிவிட்டது.  அன்றும் என்னிடம் சில்லறைக்காசுகள் இல்லை.   அதே  சிறுவன் நாளிதழை இலவசமாகக் கொடுத்தான்.
ஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், தனக்கு  
கிடைத்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி, என்னிடம் தந்தான்.
19 வருடங்கள் கழிந்தன.
நான் பணக்காரன் ஆனேன். ஒருநாள்  அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்குள் உண்டானது.
நீண்ட நாட்களுக்குப்பின் ஒருவழியாக அவனைக் கண்டுபிடித்தேன்.
அவனிடம் கேட்டேன். "என்னைத் தெரிகிறதா ?" என்று. அவனும், "தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த பில் கேட்ஸ்" என்றான்.
பல வருடங்களுக்கு முன்னால், நீ எனக்கு இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கியதை நான் மறக்கவில்லை.   அதற்காக , நீ என்னவெல்லாம் விடும்புகிறாயோ, அவற்றை நன்றிப்பெருக்கோடு உனக்குத்தர விரும்புகிறேன் என்றேன்.
"அது உங்களால் ஒருபோதும் முடியாது." என்றான் அந்தக் கருப்பு இளைஞன்....
"ஏன் ? " என்றேன் நான்.
அந்த இளைஞன்,  "நான் ஏழையாய் இருந்த போது , உங்களுக்குக் கொடுத்தேன். ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்புதானே எனக்குக் கொடுக்க வருகிறீ்ர்கள். இது எப்படி சரியாகும்? என்றான். 
இப்போதும், எப்போதும் அந்தக்  கருப்பு இளைஞன் தான் என்னை விடப் பணக்காரன் என்றே நான் சொல்வேன்.” என்றார் பில் கேட்ஸ்.
மேலும்,  அந்த இளைஞன் மூலமாக,
உதவ வேண்டும் என்ற குணத்திற்கு கால, நேரம் அல்லது ஏழை, பணக்காரன் என்பதும்  கிடையாது என்கிற  அற்புதமான எண்ணத்தை அனுபவ பூர்வமாக நான் பெற்றுக்கொண்டேன். வறுமையிலும் பரோபகாரமே  இறைத்தன்மைக்கு இணையானது  என்கிறார் பில் கேட்ஸ்.😍🙏
படித்ததை வடித்த மகிழ்வில்...

DEE - Term 1 Exam Time Table

DEE - Term 1 Exam Time Table

*முதலாம் பருவத்தேர்வு அட்டவணை*
18.09.2017தமிழ்
19.09.2017ஆங்கிலம்
20.09.2017கணிதம்
21.09.2017அறிவியல்
22.09.2017சமூகஅறிவியல் & சூழ்நிலையியல்
1,3,5,7வகுப்புகள் *காலை*
2,4,6,8வகுப்புகள் *மதியத்தேர்வு*
*23.09.2017 வேலைநாள்