>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 14 செப்டம்பர், 2017

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடையாது; துறை ரீதியாக நடவடிக்கை: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜாக்டோ - ஜியோ போராட்டம் குறித்த வழக்கில் தமிழக அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராட்டம் நடத்தும் இவர்கள் எதிர்காலத்தில் ஏதாவது நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என நேற்று நீதிபதி கிருபாகரன் எச்சரித்தார். ஆசிரியர் சங்கங்கள்தான் போராட்டத்தை தூண்டுகின்றன. எனவே ஆசிரியர் சங்கங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தருணம் இது என்றும் கூறியுள்ளார்.
இந்த போராட்டத்தால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டியதிருக்கும். மேலும் தவறு செய்த ஆசிரியர்கள் மீது ஆசிரியர் சங்கத்தினர் எப்போதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா?
அது போல் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு ஆசிரியர்கள் கூட சங்கத்தில் இருந்திருக்க மாட்டார்கள். ஆசிரியர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பாக உயர்நீதிமன்றம் 12 கேள்விகளை கேட்டிருந்தது. இந்த கேள்விகள் தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
அதில் போராட்ட நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாளாக கருதப்படும். 6 ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. போராட்டம் தொடர்பாக 43,508 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஓராண்டில் அரசு ஊழியர்களுக்கான சம்பளமாக ரூ.700 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டால் மாற்று ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்திற்கு உதயசந்திரன் ஏன் அழைப்பு இல்லை?

கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்திற்கு உதயசந்திரனுக்கு அழைப்பில்லை. அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கல்வித்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டனர். கலைத்திட்ட வடிவமைப்புக் குழு உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பள்ளி கல்வுத்துறை செயலாளர் உதய சந்திரனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை.
உதயசந்திரன் ஏன் அழைப்பு இல்லை?
செங்கோட்டையனுடன் நடந்த மோதலால் இரு மாதமாக உதயசந்திரனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சில முறைகேடுகளுக்கு உதயசந்திரன் ஒத்துப் போகாததால் நெருக்கடி என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை முதன்மை செயலாளரை நியமித்து உதயசந்திரன் அதிகாரித்தை குறைத்தனர். முதன்மை செயலாளர் நியமிக்கப்பட்ட பிறகு கல்வித்துறையில் உதயசந்திரன் ஓரம்கட்டப்பட்டார்.
மாற்றம் கொண்டுவந்த உதயசந்திரன்
கல்வித்துறையில் முன்னேற்றகரமான பல மாற்றங்களை உதயசந்திரன் செய்தார். பிளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத்தேர்வை உதயசந்திரன் அறிமுகப்பத்தினார். நீட்டுக்கு ஏற்ப பாடத்திட்ட மாற்றம், ஸ்மார்ட் வகுப்புகளை கொண்டுவர முயன்றார். ஆசிரியர் பணியிட மாறுதலில் வெளிப்படைத் தன்மையை உதயசந்திரன் கடைப்பிடித்தவர். 

தனியார் பள்ளி ஆசிரியருக்கு தகுதி தேர்வில் விலக்கு?


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல், தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவோருக்கு, மத்திய அரசு புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. 2019க்குள் படிப்பை முடிக்கவும், கெடு விதிக்கப் பட்டுள்ளது.
அவகாசம் : மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளி ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டப்படி, தனியார் பள்ளி ஆசிரியர் கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, 2009ல், ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது; அது, 2014ல் முடிந்தது. பின் மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், 2019க்குள் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, 8ம் வகுப்பு வரையான, தனியார் பள்ளிகளில் பணிபுரியும், பட்டம் மற்றும் டிப்ளமா முடித்த ஆசிரியர்களுக்கு, சிறப்பு தொடக்க கல்வி டிப்ளமா படிப்பையும், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
அனுபவம் : இந்த படிப்பை, என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசிய திறந்தநிலை பள்ளி யில், தொலைநிலை கல்வி யாக, இரண்டு ஆண்டு படிக்கலாம். இதற்கான பதிவு, செப்., 15ல் முடிவதாகவும், அதற்குள் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளி நிர்வாக சங்க தலைவர், ஜே.மார்ட்டின் கென்னடி கூறியதாவது: தனியார் பள்ளிகளில், பல ஆண்டு அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களை, வெறும் தகுதித் தேர்வுக்காக, பணியில் இருந்து அனுப்ப முடியாது. எனவே, அவர்கள் பணியில் தொடரும் வகை யில், மத்திய அரசு, இந்த படிப்பை அறிமுகம் செய்து உள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

2 லட்சம் ஆசிரியர்களுக்கு 'மெமோ!'

ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள, இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார் பில், செப்., 7 முதல், கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. 
இதனால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்கு செல்லவில்லை; அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் பணிகள் முடங்கி உள்ளன. பல பள்ளிகளில், காலாண்டு தேர்வை நடத்தவும், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் பட்டியலை, பள்ளிக்கல்வித்துறை சேகரித்துள்ளது. 
இதில், மாநிலம் முழுவதும், இரண்டு லட்சம் ஆசிரியர்கள் வரை பணிக்கு வராதது தெரிய வந்துள்ளது. நிலைமை மோசமாகாமல் தடுக்க, போராட்டத்தில் பங்கேற்று உள்ள ஆசிரியர்களுக்கு, தனித்தனியாக விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கும்படி, மாவட்ட முதன்மை மற்றும் தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. 
ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வராததால், அவர்களின் வீட்டிற்கே, தலைமை ஆசிரியர்கள் வழியாக, 'மெமோ' அனுப்பப்பட உள்ளது.அதில், 'பணிக்கு வராமலும், விடுமுறைகடிதமும் இல்லாமலும் வேலை நிறுத்தத்திற்கு சென்றதால், தங்கள் மீது, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?' என, விளக்கம் கோரப்படுகிறது. 
ஆசிரியர்கள் தரும் விளக்கத்தை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.

74 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை

சென்னை;சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும், 74 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.மாநகராட்சி பராமரிப்பில், 281 பள்ளிகள் உள்ளன. இவற்றில், 200 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மழலையர் வகுப்பு துவங்கியுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள், 74 மாநகராட்சி பள்ளிகளில், அமைக்கப்பட்டுள்ளன. இதில், 43 ஆயிரம் மாணவ -மாணவியர் படிக்கின்றனர்.மாநகராட்சி பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வி பெற உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஏழு ஆண்டுகளில், 511 மாணவர்களுக்கு, 2.29 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை தொடர தவிக்கும் மாணவி

சேலம்:குடும்ப வறுமை காரணமாக, கல்லுாரி கட்டணம் கட்ட வழியின்றி, விவசாய படிப்பை தொடர முடியாமல், சேலம் மாவட்ட மாணவி தவித்து வருகிறார்.
சேலம் மாவட்டம், தலைவாசல், ஆறகளூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 49; சலுான் வைத்துள்ளார். இவருக்கு, தவப்பிரியா, 19, என்பவர் உட்பட, மூன்று மகள்கள். 2014ல், ஆறகளூரில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்த தவப்பிரியா, 500க்கு, 480 மதிப்பெண்பெற்றார். இவரை, தலைவாசல், நத்தக்கரையில் உள்ள தனியார் பள்ளி, பிளஸ் 1 படிப்பில், கட்டணமின்றி சேர்த்து கொண்டது.தவப்பிரியா, 2016 பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,131 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றார். விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால், விவசாய படிப்பிற்கு விண்ணப்பித்தார். 200க்கு, 190.25, 'கட் - ஆப்' பெற்று, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், அக்ரி பட்ட படிப்பை தேர்வு செய்தார்.கல்லுாரி விடுதியில் தங்கி படித்த நிலையில், இரண்டாம் பருவ தேர்வின் போது, தந்தை ஆறுமுகம் பக்கவாதநோயால் பாதிக்கப்பட்டார்.
இதனால், இரண்டாம் ஆண்டு, கல்லுாரி கட்டணம் கட்ட இயலவில்லை.கல்லுாரி, விடுதி உள்ளிட்ட கட்டணங்கள் சேர்த்து, இரண்டாம் ஆண்டுக்கு, 68 ஆயிரத்து, 250 ரூபாய் கட்ட வேண்டும். தந்தையின் உடல்நிலை, குடும்ப வறுமை உள்ளிட்ட காரணங்களால், பணம் கட்ட முடியாததால், தவப்பிரியா படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தவப்பிரியாவின் தந்தை ஆறுமுகம் கூறியதாவது: நான்கு மாதங்களுக்கு முன், உயர் ரத்த அழுத்தத்தால், பக்கவாதம் ஏற்பட்டது. தற்போது, அதன் தாக்கத்தில் இருந்து, சிறிது சிறிதாக விடுபட்டு வருகிறேன். தவப்பிரியாவின் கல்லுாரி படிப்புக்கு கட்டணம் கட்ட முடியாத நிலையில் தவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
உதவ விரும்புவோர், 94425 - 25326 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புத்திசாலி மாணவர்களுக்கு மாதம் ரூ.75,000 ஊக்கத்தொகை

புதுடில்லி: உயர் கல்வி மையங்களில் படிக்கும், புத்திக் கூர்மையான மாணவர்களுக்கு, மாதம், 75 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை, விரைவில் வழங்க உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற, பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: அறிவுக்கூர்மையான மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதால், நம் நாட்டுக்கு பாதிப்புஏற்படுவதை தடுக்கவும், நவீனத்துவத்தை ஊக்குவிக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, உயர் கல்வி மையங்களில் பயின்று வரும், புத்திக்கூர்மை உள்ள மாணவர்களுக்கு, மாதந்தோறும், 75 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தொகை, ஐ.ஐ.டி., போன்ற, உயர் கல்வி மையங்களில் படிக்கும், 1,000 மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும், பிரதமர் கல்வி ஊக்கத் தொகை திட்டம் துவக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முதுநிலை சட்ட படிப்பு: 15ம் தேதி கவுன்சிலிங்

அரசு சட்ட கல்லுாரிகளில், முதுநிலை சட்ட படிப்புக்கான கவுன்சிலிங், வரும், ௧௫ம் தேதி நடக்கும்' என, சட்டக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.சட்டக்கல்வி இயக்குனர், என்.எஸ்.சந்தோஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு ஆகிய அரசு சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.எம்., என்ற, முதுநிலை சட்ட படிப்புக்கு மாணவர்சேர்க்கை நடக்க உள்ளது. இதற்கான கவுன்சிலிங், செப்., 15, காலை, 9மணிக்கு, சென்னையிலுள்ள, அம்பேத்கர் சட்ட கல்லுாரி வளாகத்தில் நடக்கும்.இதற்கான தரவரிசை பட்டியல், 'கட் ஆப்' மதிப்பெண் விபரம், www.tndls.ac.in மற்றும் அரசு சட்டக்கல்லுாரி இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த மதிப்பெண்ணுக்குள் அடங்கிய மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம் . இதனால் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் இல்லை

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்.. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரோட்டில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 7ஆம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறியல் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தடையை மீறியும், அரசு எச்சரிக்கைக்கு சட்டை செய்யாமலும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமையல் செய்து சாப்பிட்டும், பாய் தலையணையுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். வர மறுத்த ஊழியர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். பல ஊழியர்களுக்கு காவல்துறையினரை கண்டித்து முழக்கமிட்டனர்.
விழுப்புரத்தில் கைது
விழுப்புரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். வலுக்கட்டாயமாக கைது செய்யும் காவல்துறையினரைக் கண்டித்து ஊழியர்கள் முழக்கமிட்டனர்.

தீவிரமாக போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் .. 2003 போராட்டம் மீண்டும் திரும்புகிறதா?

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும், 8 வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். அது வரை இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 11-ம் தேதி முதல் 7 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2003 போராட்டம்
அரசு ஊழியர்களின் போராட்ட வரலாற்றிலேயே 2003-ம் ஆண்டு போராட்டம் அழியா நினைவுகளாக ஒவ்வோர் அரசு ஊழியர் நினைவிலும் பதிவாகி உள்ளது. அப்போது அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேரை ஒரே நாளில், அன்றைய  அரசு டிஸ்மிஸ் செய்தது. இருந்தாலும் அரசு ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை, கொலைகுற்றவாளிகள் போல நள்ளிரவில் வீடு புகுந்து போலீஸார் கைது செய்த கொடுமையும் நடைபெற்றது. எனினும் போராட்டம் ஓயவில்லை. மாறாக முன்னைவிட தீவிரமாகப் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் வேறு வழியில்லாமல், அரசு ஊழியர் சங்கங்களுடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தினார். சஸ்பென்ட் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
மீண்டும் போராட்டம்
இப்போது புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன் வைத்து செப்டம்பர் 11- முதல் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளில், ஊழியர்கள் தங்களின் வாழ்வாதாரமாகக் கருதுவது புதிய ஓய்வு ஊதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான். இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 14 ஆண்டுகளாக அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 10 சதவிகிதம் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அதே அளவுக்கு அரசு சார்பில் 10 சதவிகிதம் செலுத்தப்படுகிறது. இதுவரை அரசு ஊழியர்கள் தரப்பிலிருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய் பிடிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் 9 ஆயிரம் கோடி ரூபாய் தரப்பட்டிருக்கிறது. இந்த 18 கோடி ரூபாயை ஓய்வு ஊதியத்துக்காக மத்திய ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தாமல் தமிழக அரசு செலவழித்து விட்டது.
இதனைத் திருப்பித் தர வேண்டும் என்பதுடன் பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டாம் என்றுதான் ஊழியர்கள் கூறி வருகின்றனர். புதிய ஓய்வு ஊதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு நான்குமுறை காலக்கெடு நீடிக்கப்பட்டபோதிலும், எந்தவிதப் பரிந்துரையையும் செய்யவில்லை.
முடிவு எடுக்காத குழு
இதனிடையே சாந்தா ஷீலா நாயர் ஓய்வு பெற்று விட்டதால், கடந்த ஜூலை மாதம் ஶ்ரீதர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவின் தலைவர் ஶ்ரீதரை அரசு ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகள் சிலர் சந்தித்தபோது, புதிய ஓய்வு ஊதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை மட்டும் களைய உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். புதிய ஓய்வூதியத் திட்டமே வேண்டாம் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைக்கும் நிலையில், அதற்கு மாறாக அந்தத் திட்டத்தில் உள்ள குறைகளை மட்டுமே ஆய்வு செய்து, அதே திட்டத்தை பரிந்துரை செய்யப்போவதாக ஶ்ரீதர் கூறியது அரசு ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனால், மீண்டும் ஒரு போராட்டத்தை அறிவித்து, திங்கள் கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் எல்லாம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில்தான் இருக்கிறது.
முதல்வரின் கோரிக்கை
அரசு ஊழியர்களின் சங்கப் பிரதிநிதிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினர். கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், நவம்பர் 30-ம் தேதி வரை பொறுத்திருக்கும்படி முதல்வர் அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.  நவம்பர் 30-ம் தேதி புதிய ஓய்வு ஊதியத்திட்டம் குறித்துதான் அறிக்கை வெளியிட உள்ளனர். எனவே, அதைத் தடுக்கும் வகையில்தான் இப்போதே போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்று அரசு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
இந்தச் சூழலில் எப்படியும் அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்று தமிழக அரசு நினைக்கிறது. ஆனால்,கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அரசு ஊழியர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்புவதாகக் கூறி மிரட்டுவதால் மட்டும் எங்கள் போராட்டம் ஓய்ந்து விடாது. எந்த வித அடக்குமுறைக்கும் அஞ்சமாட்டோம் என்று நம்மிடம் பேசிய அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறினர்.
புதிய ஓய்வு ஊதியத்திட்டத்தை கைவிடுதல், ஊதிய முரண்பாட்டுக்குத் தீர்வு காணுதல், ஊதிய உயர்வு அமல்படுத்துவதற்கு முன்பாக இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் தொகை வழங்கபட வேண்டும் ஆகிய கோரிக்கைகளுக்கு இப்போது உடனடியாக நிதி ஒதுக்கி அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கேட்கவில்லை. அரசின் நிலைப்பாட்டை உறுதியான அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், உறுதியான அறிவிப்புகளைக் கூட வெளியிடாமல் அரசு தடுமாற்றத்தில் இருக்கிறது.

ஜேக்டோ-ஜியோ அறிக்கை வெளியீடு!!!

அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் சங்கம் வைப்பதை தடை செய்ய முடியாது!!( என்ற தீர்ப்பு )

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய ஆசிரியர் விபத்தில் மரணம்


கண்ணீர் அஞ்சலி

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு வீட்டுக்கு திரும்பிய போது பொன்னமராவதி காரையூர் அருகே சாலை விபத்தில் பொன்னமராவதி ஒன்றியம் இடையாத்தூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர் ,
  முள்ளிப்பட்டி இடைநிலை ஆசிரியர் கிருஷ்ணன் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ,பிறகு உடனடி மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் தலைமை ஆசிரியர் சேவியர் கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். ஆசிரியர் கிருஷ்ணன் கவலைக்கிடம்.

ஜாக்டோ-ஜியோவை அழைத்துப் பேச ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

போராடும் ஜாக்டோ-ஜியோவை அழைத்துப் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று தமிழக அரசை ஓய்வூதியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து
   தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :
 கடந்த 7ம் தேதியிலிருந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள் முடங்கியுள்ளன. இந்த நிலையில் புதனன்று (செப். 13) முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதற்கிடையில் பெரும்பாலான
மாவட்டங்களில் கைது நடவடிக்கை தொடர்கின்றன.
நீதிமன்றத்தையும், காவல்துறையையும் பயன்படுத்திக் கொண்டு ஜனநாயக ரீதியில் போராடும் ஜாக்டோ-ஜியோ தலைவர்களை அழைத்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல் மேலும் சிக்கலாக்கவே தமிழக அரசு விரும்புகின்றது. அமைதியான முறையில் யாருக்கும் தொந்தரவின்றி காத்திருக்கும் போராட்டம் நடத்துபவர்களை அவ்விடத்தை விட்டு அகற்றுவதை தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. *ஜாக்டோ-ஜியோவை அழைத்துப் பேசி பிரச்சனையை தீர்த்திட தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.* இல்லையெனில் பிரச்சனையை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து தீவிரமான போராட்டத்தை அனைத்துத் துறை ஒய்வூதியர் சங்கம் முன்னெடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதன், 13 செப்டம்பர், 2017

மாணவர்கள் மீது அக்கறையே இல்லையா?- ஆசிரியர்களைக் கடிந்து கொண்ட நீதிபதி கிருபாகரன் (FULL UPDATE)

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களால் மாணவர் சமுதாயம்தான் பாதிக்கப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு உடனடியாக கவுன்சிலிங் மையத்தை அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை நாளை இன்னொரு வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதி கிருபாகரன் ஆசிரியர் போராட்டம் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
அப்போது நீதிபதி கிருபாகரன், ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். போராடும் ஆசிரியர்கள் மாணவர்கள் நிலை பற்றி கவலை கொள்வதில்லை என்று தெரிவித்தார்.
கல்வி முறையை தன் கைக்குள் வைத்திருப்பது ஆசிரியர்கள்தான்.. அவ்வாறு தன் கைகளில் கல்வி முறையை வைத்துள்ள ஆசிரியர்கள் நடத்தும் போராட்டங்களால் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அரசுப்பள்ளிகளில் பயின்ற 5 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது என்பது ஆசிரியர்களுக்கு அவமானம் என்று தெரிவித்தார்.
நல்லாசிரியர்களும் பல பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் சாதாரண பள்ளியில்தான் படித்தேன் எனக்கு தங்கமான ஆசிரியர்கள் கிடைத்தார்கள். ஆனால் சங்கம் அமைத்து செயல்படும் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுபவர்களால் மாணவர்களுக்குத்தான் பாதிப்பு என்று கண்டனம் தெரிவித்தார்.
விருத்தாசலம் அருகே ஒரு ஊரில் ஆசிரியர் ஒருவர் மூன்று மாதம் பள்ளிக்கு விடுப்பு போட்டு சென்றுவிட்டார். இதனால் பிள்ளைகள் படிப்பு பாதிக்கப்பட்டதாக பள்ளியை இழுத்து மூடிய பெற்றோர் பின்னர் ஆசிரியரை திருப்பி அனுப்பியதையும், இதை பின்னர் கேள்விப்பட்ட அரசு அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ததையும் தனியார் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
ஆசிரியர் சங்கத்தினர் தங்கள் சங்கத்தில் இருப்பவர்கள் தவறே செய்யவில்லை என்று கூற முடியுமா? பொது நல நோக்கோடு நாங்கள் கருத்து தெரிவிக்கும் போது அதையும் வெளியில் விமர்சிக்கிறார்கள், அது நீதிமன்ற அவமதிப்பாகும். அவ்வாறு செயல்படுபவர்கள் மீண்டும் நீதிமன்றத்தைத்தான் நாடி வரும் நிலை ஏற்படும்.
சங்கம் அமைத்து தலைவர்களாக இருப்பபவர்கள் தங்களுக்கு உச்சபட்ச அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். மருத்துவம், காவல் துறை, கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.
போராட்டத்தை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள் நாளை ஆளுங்கட்சியாக வரும்போது அதை எதிர்ப்பார்கள். இதெல்லாம் அரசியல். போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் தொழிலாளர்களா? நல்ல சம்பளம் கிடைத்தும் இது போன்ற போராட்டங்களை நடத்துபவர்கள் மாணவர்கள் நலனைப் பற்றி கவலைப்படுவதில்லை. மயிலே மயிலே என்றால் இறகுகள் விழாது, அரசுதான் போராட்டத்தை ஒடுக்க வேண்டும்.
கல்வித்துறையை மேம்படுத்துவதில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது. வரும் 18-ம் தேதி போராட்டம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதி கிருபாகரன் வழக்கை ஒத்திவைத்தார்
        

             அரசுப்பள்ளி    ஆசிரியர்கள்   அசத்தல்

    
        Today we have started"ELCOM-CLUB"                  in our PUMS  -PALLIKULAM
                              Vallam Union.


                Our school HM. Welcomed our chief guest.
Our Block AEEO Inaugurated the CIub and given a good speech about the important of English Communication. Then Mr.D. PANNEER  English BT has given the explanation of the club [ ELCOM-CLUB] English language communication             and given many skills through the activities. The Dictionaries  have sponsored by Mr. A. JERALD MICHAEL  PRESIDENT of Rotary Club and owner of the Fathima Store at Gingee and  Mr. PARTHIPAN  the owner of the VENKATE Shwara Saries centre has given pen , pencils and scales to the Children. Finally the function has finished with vote of thanks
to those Spencers and one and all..












THANKS  .PANNER SIR. கல்விச்சிகரம் தங்களை மனமார பாராட்டுகிறது.

ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் கல்வி உதவித் தொகைக்கான நிதி ரத்து: மத்திய அரசு எச்சரிக்கை

ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான மத்திய நிதி ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தென் மாநிலங்களுக்கான ஆய்வுக் கூட்டம் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோட் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத் தீவுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக நலத் துறை அதிகாரிகளும், செயலர்களும் பங்கேற்றனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதியும் பங்கேற்றார். இதில் மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.), பழங்குடியின (எஸ்.டி.) பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான நிதி, முதியோர் ஓய்வூதியத் திட்டம், போதை மறுவாழ்வு மையத் திட்டம் என்பன உள்ளிட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

கூட்டத்தில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறைச் செயலர் ஜி.லதா கிருஷ்ண ராவ், எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது தொடர்பான எந்தவொரு விவரங்களையும் தமிழகம், கேரளம், புதுச்சேரி போன்ற சில மாநிலங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இந்த விவரங்களை உடனடியாக, ஓரிரு வாரங்களில் இந்த மாநிலங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனில், நிதி ரத்து செய்யப்படும்.

உத்தரவு பிறப்பிக்க புதிய 'மொபைல் ஆப்ஸ்' : கல்வித்துறையில் அறிமுகம்...

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் 'குரல்' பதிவு மூலம் ஊழியர்களுக்கு  அதிகாரிகள் உத்தரவுகள் பிறப்பிக்க புதிய மொபைல் ஆப்ஸ் கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் ஏராளமானதொழில்நுட்ப முறைகள் பயன்பாட்டில் உள்ளன. மாநில

கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் வழிகாட்டுதலில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 'வாய்ஸ் ஸ்னாப்' எனும் ஸ்மார்ட் போன்களில் (அலைபேசிகளில்) பயன்படுத்தப்படும் செயலி தற்போது கல்வித் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்ட அளவிலான துறைஅதிகாரிகள், தங்களுக்கு கீழ் பணிபுரியும் உதவி அதிகாரிகள், ஊழியர் களுக்கான உத்தரவை அலைபேசி மூலம் தெரிவித்து, பணி செய்ய அறிவுறுத்தலாம்.இதற்கான வழிவகைகளையும், பயன்பாட்டு முறைகளையும் ஆராய்ந்த அனைவருக்கும் கல்வி திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்காணிக்கும் குழுவினர், கல்வித்துறையில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளனர்.நேற்று தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில்

'வாய்ஸ் ஸ்னாப்' செயலியை பயன்படுத்தி குரல் பதிவு மூலம், ஊழியர்களுக்கு

அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதன் மூலம் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும், கட்டாயம் இந்த 'வாய்ஸ் ஸ்னாப்' செயலியை பதிவேற்றம்

செய்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் இந்த 'வாய்ஸ் ஸ்னாப்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் தங்கள் கட்டளைகள் அல்லது உத்தரவுகளை குரலாக பதிவு செய்து அனுப்பலாம். மேலும், ஊழியர்களின் அலைபேசி எண்களும் அரசு ஆவணங்களோடு பதிவு செய்யப்பட்டு, குறிப்பிட்ட பிரிவுகளில் மாவட்ட அலுவலர்களோடு இணைக்கப்பட்டிருக்கும். இந்த செயலியில் அரசு ஊழியர்கள் தவிர பிற நபர்கள் இணைக்கப்பட வாய்ப்புக்கள் குறைவு. அதனால் அரசு விபரங்கள் வெளியில் தெரிய வும் வாய்ப்புக்கள் இல்லை. செயலி தனி மென்பொருள் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது என்றனர்

நீட்' தேர்வின் முக்கியத்துவம் : மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'

நீட்' போராட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 'ஜாக்டோ - ஜியோ' போராட்டம், 'நீட்' தேர்வுக்கு எதிராக சில அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் என, அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இது தவிர, அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையும், கூடுதல் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.

'நீட்' போராட்டத்தில் இருந்து, மாணவர்களை விலக்கி, அவர்களுக்கு முறையாக வகுப்பு களை நடத்த, தலைமை ஆசிரியர்கள் வழியே, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'நீட்' போராட்டத்தில் பெரும்பாலும், அரசு பள்ளி மாணவர்களே பங்கேற்று உள்ளனர். தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்கா மல், படிப்பில் கவனம் செலுத்துகின்றனர்.

இவர்கள் தான், மருத்துவப் படிப்புகளில், பல ஆண்டுகளாக, பெரும்பாலான இடங்களை பெறுகின்றனர். இதை சுட்டிக்காட்டி, அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கவுன்சிலிங் வழங்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.அரசு பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, நீட், ஜே.இ.இ., போன்ற தேர்வுகள் எழுதுவதால், நாடு முழுவதும், மருத்துவ இடத்தை பெற முடியும்.

அதற்கு, மாணவர்களை தயார்படுத்த வேண்டும். பள்ளிகள் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். மாறாக, போராட்டத்திற்கு சென்றால், பிளஸ் 2 தேர்ச்சி பெறுவது கூட கடினமாகி, எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என, ஆலோசனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள், நீட், ஜே.இ.இ., பயிற்சியில் தீவிர ஆர்வம் காட்டுவது போல், அரசு பள்ளி மாணவர்களும் ஆர்வம் காட்ட வேண்டும் என, உளவியல் ஆலோசனை அளிக்கப்பட உள்ளது.