>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

ஜூன்-6 உலாவரும் வதந்திகள்???

ஜூன்-6 உலாவரும் வதந்திகள்-

*#ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் மற்றுமே பணியாற்றமுடியும் அடுத்தகல்வி ஆண்டு முதல் எனத்தகவல்.
*#நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஒரே அலகு UNIT ஆக மாற்றம் எனத்தகவல்.
*#கூடுதலாக 12 கல்வி மாவட்டங்கள்உருவாக்கப்படும் எனத்தகவல்.
*#அனைத்துவகை பள்ளிகளில் யோகா ஆசிரியர் நியமனம் எனத்தகவல்.
*#பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரப்படுத்தலாம் எனத்தகவல்.
*#6வது வகுப்பு முதல் கணினியியல் கல்வி ஒரு பாடமாக கட்டாயமாக கொண்டுவரப்படும் எனத்தகவல்.
*#தொடக்கக்கல்வியில் மாவட்டத்தில் உள்ள 1முதல்5 வரையிலும் அனைத்து ஓன்றியங்களையும் இனைத்து மாவட்ட அளவில் ஒரே அலகின் கீழ்கொண்டுவரப்படும் எனத்தகவல்.
*#அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளில் 10% வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத்தகவல்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் வேலூரில் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது!!

கட்டட தொழிலாளர் குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் இலவச அட்மிஷன்!!

EMIS NEW FORM (2017 -18) FOR NEW STUDENTS ONLINE ENTRY 

PGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள TRBஅனுமதி....

முதுகலை ஆசிரியர்கள் தற்போது நடைபெறும் (28.08.2017 முதல்) சான்றிதழ் சரிபார்ப்பில் நீதிமன்ற உத்தரவின் படி "சேலம் விநாயகா மிஷன்" பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் கலந்து கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அனுமதிஅளித்துள்ளது.
பணி நியமனம் நீதிமன்ற இறுதி தீர்புக்கு உட்பட்டது.

How to link PAN card with Aadhaar online...

If you want to link your Aadhaar with PAN card, head over to the Income Tax e-filing portal and follow the steps below:
1.On the website, click on the link on the left saying Link Aadhaar.
2.Now, enter your PAN number, Aadhaar number, name as per Aadhaar, and the Captcha, and then click on Link Aadhaar.

3.This should link the PAN and Aadhaar, but if there is any discrepancy in your details, you'll receive an Aadhaar OTP to confirm the linkage. 
4.Enter the OTP and click on Save to continue.
5. You can also link the details after logging in to the income tax website. 
Log in as you normally would and then click on Profile Settings in the top menu.
6. Next, find Link Aadhaar.
7.Enter your Aadhaar number and click on Save to continue.


This will only work if the details on the PAN and the Aadhaar card match. In case of any discrepancies, you can upload a scan of your PAN card, or register via OTP on your linked mobile number as mentioned above.

எளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்....

கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று (ஆக.,29) நடக்கிறது.
ஒரு மாணவரின் பெயர் உட்பட முழு விபரம் சேகரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு முதல் கல்வித்துறையில் ’எமிஸ்’ (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) பணிகள் நடந்து வருகின்றன. கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இப்பணி நுாறு சதவீதம் முடிந்து பயன்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இழுபறி நீடிக்கிறது.
குறிப்பாக, பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள மாணவர்கள் பெயர்களை இணைப்பது, கல்வியாண்டு இடையிலேயே வேறு பள்ளி அல்லது வேறு மாவட்ட பள்ளிகளில் சேர்க்கையாவது, இடைநிற்றல் மாணவரை கண்டறிவது, அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள சில குளறுபடிகள் என பல காரணங்களால், நுாறு சதவீதத்தை எட்ட முடியாமல் கல்வி அதிகாரிகள் திணறினர்.
மேலும் ’எமிஸ்’ பணிகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள் பழமையானதாகவும், அதிக விபரங்களை ஏற்று தக்க வைக்கும் திறன் குறைவானதாகவும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. 
இதனால் சிறு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும், சென்னை தலைமை தொகுப்பு அலுவலகத்தில் மட்டுமே மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. 
இதுபோன்ற காரணங்களால் போதிய தகவல்களை தக்க வைக்கும் வகையிலான நவீன மென்பொருள் உருவாக்க வேண்டும் என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து செயலராக இருந்த உதயச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கையால், புதிய மென்பொருள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பத்து ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருந்த மென்பொருள் மூலம் ’எமிஸ்’ பணிகளை முடிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் எண்ணிக்கையை விட ’எமிஸ்’ எண்கள் எண்ணிக்கை அதிகரித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து உதயசந்திரன் எடுத்த நடவடிக்கையால், தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அந்தந்த மாவட்டத்திலேயே திருத்தம் செய்யும் வசதியும் ஏற்படும். இதன்மூலம் நுாறு சதவீதம் ’எமிஸ்’ பணிகளை எட்ட முடியும். மாணவர்கள் ’ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதும் எளிதாகும், என்றார்.

GO 506 DSE DATE:22.08.17 - MODEL SCHOOL PAY ORDER UPTO 31.03.2018....





வருகையை கண்காணிக்க 'ஸ்மார்ட் கார்டு' முறை அறிமுகம்....

பள்ளி மாணவர்களின் வருகையை பதிவு செய்து கண்காணிப்பதற்கு தமிழக அரசு புதிய முறையை அறிமுகப்படுத்தப் போவதாக கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 
ஈரோட்டில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, ‘பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்மாட் கார்டு வழங்கப்படும். அதில் ஒரு சிம் கார்டு இணைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் மாணவர்களின் வருகையானது பதிவு செய்யப்படும். மேலும் இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்றார்களா, இல்லையா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.
மேலும், இந்த ஸ்மாட் கார்டு திட்டம் வடமாநிலங்களில் உள்ள பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. விரைவில் தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு வரும் என அவர் கூறினார்.

2017 ஆம் ஆண்டிற்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெற இருக்கின்றன தோழமைகள்....


*அறிவியலில் அசத்தும் அன்பழகன்
*ஆங்கிலத்தில் மாணவர்களை அருமையாய் உறை நிகழ்த்த வைத்த அண்ணப்பூரனா
*கணிதத்தை கற்கண்டாய் கற்றுத் தரும் ரூபி தெரசா
*கலைகளில் அரசன் கோபிநாத்
*தலைமை பண்புடைய ISO தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்
*மாணவர்கள் மனம் கவர்ந்த மணிமாறன்.
விருதுபெறவிருக்கும் பிற ஆசிரியர்களுக்கும் அனைத்து ஆசிரியர் தோழமைகளின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த ஆண்டு புதிய தலைமுறை மேடையை அலங்கரிக்கும் நவரத்தினங்களுக்கும் வாழ்த்துகள்
நாளைய நவரத்தினம் நீங்களாக இருக்கலாம்

BRC LEVEL TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS.


TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS DIRECTOR PROCEEDING.

JACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என தற்போது அறிவிப்பு...

*ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் முடிவு செய்யப்பட்டது.*
*செப்டம்பர் 7 வட்டார தலைநகரங்களிலும்*
*செப்டம்பர் 8 மாவட்டத் தலைநகரங்களிலும் மறியல் செய்யப்பட வேண்டும்.*
*9&10 சனி ஞாயிறு விடுமுறை.*
*செப்டம்பர் 11 முதல் வேலைநிறுத்தம் தொடரும். மறியல் குறித்து சனிக்கிழமை அன்று அறிவிக்கப்படும்.*

EMIS  NEW STUDENT DATA SHEET



CLIK HEAR

https://emis.tnschools.gov.in/asset/pages/img/TN%20school%20-%20EMIS%20Student%20data%20template.pdf





திங்கள், 28 ஆகஸ்ட், 2017

பள்ளிக்கல்வி - பள்ளி/வட்ட/மாவட்ட அளவிலான அறிவியல், கணிதம், சுற்றுப்புற கண்காட்சி போட்டிகளை நடத்த உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்....




நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா? துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விளக்கம்..

சென்னை:''மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்துஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 68, தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலையில் நடந்த, 'புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார்.
ஒப்பந்தம்
மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
வேளாண்மைக்கும், உற்பத்திக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறி விட்டு, வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் அனுமதிப்பது ஏன்?
சர்வதேச வர்த்தக அமைப்பில் நாம் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்தியாவில் தேவைக்கு அதிக உற்பத்தி உள்ளதால், அதை, நாம் ஏற்றுமதி செய்கிறோம். வெளிநாட்டு பொருட்களின் இறக்குமதியை தடை செய்தால், நம் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது. மேலும், சர்வதேச அளவில், இந்தியாவின் நட்புறவில் சிக்கல் ஏற்படும்.
மதிப்பீட்டு முறை
வல்லரசு நாடாக மாறும் உறுதி ஏற்று விட்ட நிலையில், ௩௦ சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பது ஏன்?
மக்களின் கல்வியறிவை வளர்க்கவும், பொருளாதாரத்தை முன்னேற்றவும், பல நிதியுதவி, மானியம் ஆகியவை வழங்கப்படுகிறது.மக்களுக்கு வழங்கப்பட்ட மானியம், வேறு வகையில் சென்று கொண்டிருந்தது. அதை மாற்றவே, நேரடி மானிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவில் ஒரே வகை பாடத்திட்டம் உருவாக்க முடியாதா?
இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டம், பாடங்கள், பயிற்று முறை, தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறை உள்ளது.
கல்வி கொள்கை
இங்கே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயர், மற்ற மாநிலத்தவருக்கு தெரியாது. அங்கே உள்ள தியாகிகளின் பெயர், இங்கே தெரியாது. இந்தியா பல மாநிலங்கள் கொண்ட கூட்டாட்சி தத்துவத்தில் செயல்படுகிறது. தற்போது சமமான கல்வி வழங்க, தேசிய அள வில் கல்வி கொள்கை உருவாக்கப்படுகிறது. அதன் பின், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை நோக்கி செல்லலாம்.
இந்தியாவில் வேளாண்மை வளர வேண்டுமா; தொழிற்துறை வளர வேண்டுமா?
இரண்டும் வளர வேண்டும். வேளாண்மை வளர்ந் தால் தான், தொழிற்துறையும் வளரும்; தொழிற் துறை வளர்ந்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், பொருளாதாரம் உயரும். விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்ற முறையில், விவசாயத்திற்கே என் முன்னுரிமை.
நடிகர், அரசியல்வாதி, ஆசிரியர் என, ஒவ்வொரு வரும் தங்கள் பிள்ளைகளை, தங்களை போல் வர விரும்புகின்றனர். ஆனால், ஒரு விவசாயி தன் பிள்ளையை, விவசாயியாக்க விரும்புவதில்லை. இந்த நிலைமாறும் வகையில், வேளாண் துறை வளர வேண்டும்.
உரிமை
சமூக வலைதளங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவு செய்வது, அனைவருக்கும் சுதந்திரமான உரிமை. ஆனால், எந்தவித பிழை திருத்தம் இன்றி, எப்படி வேண்டு மானாலும் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. செய்தி தாள்களில் தவறுகள் வந்தால், அதை திருத்தி கொள்ளலாம். அதற்கென, ஆசிரியர் குழு இயங்கு கிறது; ஆனால், சமூக வலைதளத்திற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதற்கு, ஒழுங்குமுறை தேவை.
மாணவி கேட்டார்
'இந்தியாவில் ஜாதியை ஒழிப்போம்' என, மத்திய அரசே உறுதி ஏற்க சொல்கிறது. அப்படியென்றால், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவது ஏன்?
குறிப்பிட்ட ஜாதியினர், நம் நாட்டில் கோவிலுக்குள் செல்ல முடியாமலும், கல்வி அறிவு கிடைக்காமலும், சம உரிமை இன்றியும், அடக்கி, ஒடுக்கப்பட்டனர். அவர்களையும் சமமாக கொண்டு வர, இட ஒதுக்கீடு முறை அமலுக்கு வந்தது. 'யாரோ செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். இட ஒதுக்கீட்டில் நான் பாதிக்கப்படுகிறேன்' என, ஒரு மாணவி என்னிடம் கேட்டார்.
'எப்படி உன் மூதாதையரின் சொத்து உனக்கு கிடைக்கிறது' என, கேட்டேன். 'அது பாரம்பரியமாக வாரிசுகளுக்கு வழங்கப்படுகிறது' என்றார். அப்படி தான், ஜாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு, பாரம்பரியமாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அனைவரும் சமம் என்ற நிலை வரும் போது, இதை பற்றி யோசிக்கலாம்.இவ்வாறு, வெங்கையா நாயுடு பதில் அளித்தார்.

துணிச்சலாக செயல்பட்டு மாணவர்களை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு ரூ.50,000 பரிசு: ம.பி. முதல்-மந்திரி அறிவிப்பு...



மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களை காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடிய துணிச்சலான போலீஸ்காரருக்கு முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ரூ.50,000 பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.
போபால்:
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களை காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடிய துணிச்சலான போலீஸ்காரருக்கு முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ரூ.50,000 பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிதோரா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் சுமார் 400-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி வளாகத்தில் இருந்து உள்ளூர் போலீசாருக்கு சமீபத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பள்ளி மைதானம் அருகில் வெடிகுண்டு கிடப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, காவல் நிலையத்தில் இருந்த தலைமை காவலர் அபிஷேக் படேல் உடனே அங்கு விரைந்து சென்றார். பள்ளி மைதான வளாகத்தில் கிடந்த சுமார் 10 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை கைப்பற்றினார். மாணவர்களின் உயிரை காப்பாற்றும் விதமாக, அந்த வெடிகுண்டை தோளில் தூக்கி வைத்தபடி, அங்கிருந்து ஓட தொடங்கினார்.
இதுதொடர்பான புகைப்பட காட்சிகள் உள்ளூர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. விசாரணையில், அந்த வெடிகுண்டு ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
மாணவர்களின் உயிரை துணிச்சலுடன் காப்பாற்றிய தலைமை போலீஸ் காவலருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். போலீஸ் அதிகாரிகளும் அவரது செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவர்களின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர் அபிஷேக் படேலுக்கு மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ரூ.50,000 பரிசு வழங்கி கவுரவித்துள்ளார். இதேபோல், மாநில காங்கிரசாரும் அபிஷேக் படேலின் வீரச் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருடவே முடியாது: ஆதார் திட்டவட்டம்...


புதுடில்லி:யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம்,
ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக வந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நாடு முழுவதும், 115 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள், அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வால் திருடப்படுவதாக, சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.இதை, ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
இதுகுறித்து, ஆதார் ஆணையம் வெளியிட்ட அறிக்கை விபரம்:
'பயோமெட்ரிக்' முறையில் தகவல் சேகரிக்கும் தொழில் நுட்பம், இந்தியாவில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில், கடுமையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொழில் நுட்பத்தில், மக்களிடம் சேகரிக்கப்படும் தகவல்கள், மிகவும் பாதுகாப்பாக உள்ளன.
இந்த தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுவதில் உண்மை கிடையாது. இத்தகைய தகவல், உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டு வருகிறது. ஆதார் தகவல் சேகரிப்புக்காக, பயோமெட்ரிக் சாதனங்களை பயன்படுத்தும் முன், முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன.
இதற்கு, எஸ்.டி.கியு.சி., எனப்படும், தர பரிசோதனை முறை பயன்படுத்தப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இதைத் தவிர, மேலும் பல பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படுவதால், தனிநபர்களின் தகவல்களை, யாரும், எந்த வகையிலும், திருடவே முடியாது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

சவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்?

இன்று முதல் நிர்வாக பணிகளை துவக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய செயலருக்கு, அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் ஆதிக்கத்தை சமாளிப்பது உட்பட, பல சவால்கள் காத்திருக்கின்றன. 

 தமிழக பள்ளிக்கல்வி செயலராக, மார்ச், ௬ல் உதயசந்திரன் பொறுப்பேற்றார். 
நிர்ப்பந்தம் காரணம் : அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவுப்படி, பள்ளிக்கல்வியில் பல மாற்றங்களை, அவர் அமல்படுத்தினார். இதற்கு, பெற்றோர், மாணவர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, சிலரின் நிர்ப்பந்தம் காரணமாக, பாடத்திட்டத்துக்கான பள்ளிக் கல்வி செயலராக மட்டும், உதயசந்திரன் மாற்றப்பட்டுள்ளார்.
புதிய பள்ளிக்கல்வி செயலராக, முதன்மை செயலர் அந்தஸ்தில் உள்ள, பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், இன்று முதல் அதிகாரபூர்வமாக பணிகளை துவக்க உள்ளார். 
அவரை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து, அவரது கட்டுப் பாட்டில் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உதயசந்திரன் மேற்கொண்ட மாற்றங்களை தொடர்வதில், பிரதீப் யாதவுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.
 ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆதிக்கத்தை சமாளித்து, நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்
 இட மாற்றம், பதவி உயர்வு, 'டெண்டர்' வழங்குவது என, பல பணிகளில், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், ஆளுங்கட்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் அணிகளை சேர்ந்தவர்களை சமாளிக்க வேண்டும்
 மத்திய அரசின் பல நிதியுதவி திட்டங்களை, அரசியல்வாதிகளின் விருப்பத்துக்கு ஏற்ப, மாற்று பணிகளுக்கு மாற்ற வேண்டும்
 புதிய பாடத்திட்ட பணி களை சுதந்திரமாக மேற்கொள்ள, செயலர் உதயசந்திரன், பாடத்திட்டக்குழு மற்றும் அதிகாரிகளுக்கு, அனுமதி வழங்க வேண்டும்
 பள்ளிக்கல்வியில் செயல்படும் அதிகாரி களின், ஆளுங்கட்சி செல்வாக்கை சமாளித்து, அவர்களை ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும்
பல்வேறு சவால்கள் :  'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ள போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து, பள்ளிக் கல்வி பணி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
 புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள, பிளஸ் ௧ பொது தேர்வை, புதிய விதிகளின்படி, குழப்பமின்றி நடத்த வேண்டும்
 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகளுக்கு, பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும்.
இப்படி பல்வேறு சவால்கள், புதிய முதன்மை செயலருக்கு காத்திருக்கின்றன.

MBBS படிப்பு: அரசு ஒதுக்கீடு, 'ஹவுஸ்புல்'

அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டு இடங்களை தவிர்த்து, அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின. 
தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,534 இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 592 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. 
அதேபோல, பல் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,198 பி.டி.எஸ்., இடங்களும், சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்களும் உள்ளன.
இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சென்னை, பல்நோக்கு அரசு மருத்துவமனையில், 24ம் தேதி துவங்கியது. முதல் நாள் சிறப்பு பிரிவினருக்காக கவுன்சிலிங்கில், 14 இடங்கள் நிரம்பின. இரண்டாம் நாளில், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்கியது. 
அன்று, 1,029; மூன்றாம் நாளில், 1,260 இடங்கள் நிரம்பின. மூன்று நாட்களில், அரசு, சுய நிதி கல்லுாரிகளில் உள்ள, 80 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின.
இந்நிலையில், நேற்றைய கவுன்சிலிங்கிற்கு, 1,596 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டு இடங்களை தவிர, அனைத்து, எம்.பி.பி.எஸ்., இடங்களும், பிற்பகலுக்குள் நிரம்பின. 
எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பிய நிலையில், பி.டி.எஸ்., படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள் !!.

நிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு  குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
 இதனை அறிந்துகொள்வதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் தங்களுக்கான வருமான வரியை இன்னும் துல்லிய மாகத் திட்டமிட்டுக்கொள்ள முடியும். இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள முக்கியமான வருமான வரி மாற்றங்கள் சிலவற்றைக் கீழே பட்டியலிட்டுள்ளோம்.
1. வருமான வரி வரம்பு குறைப்பு
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்களுக்கு 2016-17-ம் ஆண்டில் 10% வருமான வரி விதிக்கப்பட்டது. இது நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வரம்புக்குள் வருமானம் கொண்ட 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியில் ரூ.12,500 மிச்சமாகும்.
2. வரிக்கழிவு குறைப்பு
பிரிவு 87A-ன் கீழ் வழங்கப்பட்ட வரிக்கழிவு (Rebate) ரூ.5,000-லிருந்து ரூ.2,500-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வரி கட்டுபவர்களுக்கு ரூ.2,500 இழப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும், இந்த வரிக்கழிவு சலுகையைப் பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தச் சலுகையைப் பெறுபவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு கணிசமாகக் குறைத்திருக்கிறது. இந்த வரிக்கழிவானது, இந்து கூட்டுக் குடும்பத்தினர் (ஹெச்.யூ.எஃப்), வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குக் (என்.ஆர்.ஐ) கிடையாது.
3. ராஜீவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டம் வரிச் சலுகை ரத்து
கடந்த 2012-13-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ராஜீவ் காந்தி பங்கு சேமிப்புத் திட்டம் (Rajiv Gandhi Equity Savings Scheme – RGESS) அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதற்கு வரிச் சலுகையும் அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 80சி-க்கு வெளியே வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சிசிஜி பிரிவின் கீழ் வரிச் சலுகை அளிக்கப்பட்டது. வரிச் சலுகை பெற பல குழப்பமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன (விளக்கமாகப் படிக்க: http://bit.ly/2uuqRfG). இதன் காரணமாக இதில் அதிகமான வர்கள் முதலீடு செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், 2017-18-ம் நிதியாண்டு முதல் இந்த வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வரிச் சலுகையின் மூலம் குறிப்பிட்ட சில தனிநபர்களே பயன்பெற்று வருவதால், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. வீட்டுக் கடன் வட்டிச் சலுகை குறைப்பு
நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் வட்டிக்கான வரிச் சலுகை குறைக்கப் பட்டுள்ளது. இது பற்றி முன்னணி ஆடிட்டரான எஸ்.சதீஷ்குமார் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
“வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதில் குடியிருந்தால் திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.2 லட்சம் வரைக்கும் நிதியாண்டில் வரிச் சலுகை அளிக்கப்பட்டது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் வரம்பு இல்லாமல் முழு வட்டிக்கும் வரிச் சலுகை தரப்பட்டது. அதே நேரத்தில், வீட்டு வாடகையை வருமானமாகக் காட்டுவது அவசியம். ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்கி, ஒரு வீட்டில் குடியிருந்து, மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால், அனைத்துக் கடன்களையும் திரும்பக் கட்டும் வட்டியில், மேலே கூறப்பட்டது போல் வரிச் சலுகை அளிக்கப்பட்டது.
நடப்பு 2017-18 ம் நிதியாண்டில், ஒருவர் வீட்டுக் கடனுக்கான வட்டியில் வரிச் சலுகையாக அதிகபட்சம் ரூ.2 லட்சம் மட்டுமே பெற முடியும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு வீட்டில் இருந்துகொண்டு, மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தவர்கள் அதிகமாக வரி கட்டும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, வரிச் சலுகைக்காக வீடு வாங்குவது குறைந்து ரியல் எஸ்டேட் துறை மந்த நிலைக்குத் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும்.
எனினும், வீட்டுக் கடன் வட்டி மூலமான இழப்பை எட்டு ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லும் முந்தைய சலுகை இப்போதும் தொடர்கிறது” என்ற சதீஷ்குமார், இழப்பை எட்டு ஆண்டுகளுக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது பற்றியும் சொன்னார்.
“வீட்டுக் கடன் மூலம் வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டதன் மூலம் நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் ரூ.1,20,000 கிடைத்திருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வாடகைத் தொகையில் நகராட்சிக்குக் கட்ட வேண்டிய வரி மற்றும் பராமரிப்புச் செலவைக் கழித்துக்கொண்டு, மீதியை வாடகை வரவாக எடுத்துக்கொள்ள வேண்டும். நகராட்சிக்கு கட்டிய சொத்து வரி ரூ.15 ஆயிரம் என வைத்துக் கொண்டு, அதைக் கழித்துக் கொள்வோம். மீதமுள்ள 1.05 லட்சத்தில் 33 சதவிகிதத்தைப் பராமரிப்புச் செலவான ரூ.34,650-யைக் கழித்தால் ரூ70,350-ஆகக் கிடைக்கும். இதனை வாடகையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த நிதியாண்டில் வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் வட்டி ரூ.2.25 லட்சம் என வைத்துக் கொள்வோம். இதிலிருந்து வீட்டு வாடகை ரூ.70,305-யைக் கழித்தால், அவருக்கு வட்டி மூலமான இழப்பு ரூ.1,54,650 ஆகும். இந்தத் தொகையை அடுத்த எட்டு ஆண்டுகளில் கிடைக்கும் வாடகை வருமானத்தில் ஈடுசெய்துகொள்ளலாம். இதேபோல், அடுத்து வரும் வருடங்களுக்கும் வீட்டு வாடகையையும், திரும்பக் கட்டும் வட்டியையும் கணக்கிட வேண்டும். வட்டிக் குறைந்தால் அல்லது வாடகை தொகை அதிகரித்தால் மட்டுமே இப்படி ஈடு கட்டுவது லாபகரமாக இருக்கும்” என்றார்.
5. என்.பி.எஸ் – கூடுதல் வரிச் சலுகை தொடர்கிறது
நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்.பி.எஸ்) மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு 80CCD (1B) -ன் கீழ் வழங்கப்பட்ட ரூ.50,000-க்கான வருமான வரிச் சலுகை இந்த ஆண்டும் தொடர்கிறது. இது 80சி பிரிவுக்கு வெளியே தரப்படும் சலுகை என்பதால், மாத சம்பளக்காரர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் கூடுதல் வரியை மிச்சப்படுத்த முடியும். இதற்குமுன்பு, என்.பி.எஸ் திட்டத்தில் 60 வயதுக்குப் பிறகுதான் பணத்தை எடுக்க முடியும் என்கிற நிலை இருந்தது. இப்போது மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்கு நாம் ஏற்கெனவே செய்த பங்களிப்பிலிருந்து 25 சதவிகித தொகையைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். இந்தத் தொகைக்கு வரிப் பிடித்தம் இல்லை என்பது கூடுதல் சலுகையாகும்.
7. பணவீக்க விகித சரிகட்டல் அடிப்படை ஆண்டு மாற்றம்
நீண்ட கால மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவதற்கான பணவீக்க விகித சரிக்கட்டல் அடிப்படை ஆண்டு 1981 என்பது 2001-ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான வரிதாரர்கள் பயன் அடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
8. சொத்துகளுக்கான நீண்ட கால ஆதாயம்
சொத்துகளுக்கான (மனை மற்றும் வீடு) நீண்ட கால ஆதாயம் கணக்கிடுவதற்கான கால வரம்பு மூன்று ஆண்டுகளாக இருந்தது. அது 2017-18 நிதியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் சொத்துப் பரிமாற்றம் நடப்பதோடு, சொத்து விற்பவர்கள் கட்டும் வரியும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
9. பங்குகளுக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரி
பங்குகளை வாங்கும்போது பங்குப் பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax – STT) கட்டியிருந்தால் மட்டுமே நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகையைப் பெற முடியும். 2014, அக்டோபர் 1-ம் தேதிக்குப்பிறகு வாங்கப்பட்ட அனைத்து பங்குகளுக்கும் இது பொருந்தும்.
10. ஆதார் கார்டு, பான் எண் இணைப்பு
2017 ஜூலை 1 முதல், புதிய பான் கார்டு பெற ஆதார் எண் அவசியமாகும். மேலும், பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11. வரிக் கணக்கு தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம்
2017-18-ம் நிதியாண்டுக்கான, வருமான வரிக் கணக்கை 2018 ஜூலை 31-ம் தேதிக்குள் மாத சம்பளக்காரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கெடு தேதி தாண்டினால், வரிக் கணக்கு தாக்கலில் திருத்தம் ஏதும் செய்ய முடியாது. அதே நேரத்தில், கெடு தேதி தாண்டி, 2018 டிசம்பர் 31-க்குள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால், ரூ.5,000 அபராதம் கட்ட வேண்டும். இது தாமதக் கட்டணம் என்கிற பெயரில் வசூலிக்கப்படும். வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால், இந்த தாமதக் கட்டணம் ரூ.1,000 கட்ட வேண்டும்.
சுயதொழில் செய்பவர்களுக்கும் நிறுவனங் களுக்கும் தாமதக் கட்டணம் ரூ.10,000 என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தாமதக் கட்டணம், வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது, கம்ப்யூட்டர் திரையிலேயே தாமதக் கட்டணம் காட்டப்படும் எனச் சொல்லப்படுகிறது.
12. ஒரு பக்க எளிய வருமான வரிப் படிவம்
2017-18-ம் நிதியாண்டில், ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைவான சம்பளம் உள்ளவர்கள் (வணிக வருமானம் இருக்கக் கூடாது), வருமான வரிக் கணக்கை எளிமை யாகத் தாக்கல் செய்ய வசதியாக ஒரே ஒரு பக்கம் கொண்ட வருமான வரிப் படிவம் (Income Tax Return – ITR) அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
13. முதல் முறை வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மீளாய்வு இல்லை
முதன்முதலாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களின் வருமான விவரங்கள் மீளாய்வு (Scrutiny) செய்யப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், மிக அதிக தொகையைப் பரிவர்த்தனை செய்து, அது குறித்த தகவல் வருமான வரித் துறைக்கு கிடைத்திருக்கும்பட்சத்தில் இது பொருந்தாது.
14. பத்து ஆண்டுகள் வரை வருமான வரிக் கணக்குகள் ஆய்வு
தற்போது, கடைசி ஆறு ஆண்டுகளுக்கு வருமான வரி விவரங்கள், குறிப்பாக அறிவிக்கப்படாத வருமானம் அல்லது சொத்து குறித்து வருமான வரித் துறையால் மீளாய்வு செய்யப்படுகிறது. இனி பத்து ஆண்டுகளுக்கான விவரங்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இதனால் வரிதாரர்கள், குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கான ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பழைய ஆவணங்களைப் பலரும் ஒழித்துக் கட்டியிருப்பர்கள். அவர்களிடம் இப்போது அந்த ஆவணங்களையும், ஆதாரங்களையும் கேட்டால், அவர்கள் எங்கே போவார்கள்?
வருமான வரி தொடர்பாக வந்துள்ள இந்த மாற்றங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, நன்மை பெறுங்கள்.