புதன், 23 ஆகஸ்ட், 2017
JIO FREE PHONE - பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம்.
ஜியோவின் இலவச போனை பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ஜியோ மேலும் ஒரு புரட்சியை உருவாக்க தொடங்கிவிட்டது.
ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது ஜியோ. ஜியோவின் எந்தொரு அறிவிப்பாக இருந்தாலும் மக்களுக்கு சலுகையாகத்தான் தெரிகிறது.
ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது ஜியோ. ஜியோவின் எந்தொரு அறிவிப்பாக இருந்தாலும் மக்களுக்கு சலுகையாகத்தான் தெரிகிறது.
ஜியோ ஸ்மார்ட் போன்
ஜியோ தற்போது , INDIA KA SMARTPHONE (JIO PHONE ) என்ற போனை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இலவசமாக என்றால்எவ்வளவு பெரிய விஷயம்.அதற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது
ரூ .1500 இல் (INDIA KA SMARTPHONE (JIO PHONE )
ஜியோவின் இந்த ஸ்மார்ட் போனை இலவசமாக பெறுவதற்கு முதலில் 1500 ரூபாய் கட்ட வேண்டும்.பின்னர் நீங்கள் வாங்கிய தேதியிலிருந்து அடுத்த 3 ஆண்டுகள் கழித்து, அந்த ரூ.1500 -ஐ திருப்பிக்கொடுத்துவிடும் ஜியோ.
இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி , ஜியோவின் ஸ்மார்ட்போனை பெற ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் (நாளை ) முதல் முன்பதிவு செய்யலாம் என இஷா அம்பானி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
எப்படி முன்பதிவு செய்வது ?
ஜியோவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்ம் பூர்த்தி செய்து , ஜியோவின் இலவச போனை பெறலாம்.
அல்லது அருகில் உள்ள ஜியோ ஷோ ரூம் சென்று , உங்கள் முன் பதிவை உறுதி செய்யலாம் அல்லது my jio app மூலமாகவும் முன்பதிவை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது .
செப்டம்பர் 23இல் சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தையல், ஓவியம், இசை,
உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணிக்கு 1,325 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்கள் முதல்முறையாகப் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்த தகவல்களைத் தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருமான டி.ஜெகன்நாதன் வெளியிட்டுள்ளார். “சிறப்பாசிரியர் போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடந்தது. சிறப்பாசிரியர் தேர்வுக்கு 37,900 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெறும். தேர்வு முறையில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 95 இடம்பெறும். 2.30 மணி நேரம் தேர்வு நடக்கும். தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் 40% எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017
தமிழக அரசு பள்ளிகளில் மட்டும் அழிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடம்
2012-ல் வெளியிடப்பட்ட 4000-கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கான ICT எனப்படும் ஒருங்கிணைந்த கணினி அறிவியல் பாடத்திட்டம் தற்போது சுருக்கப்பட்டு 1000 பள்ளிகளுக்கு மட்டும் என வரைவு செய்யப்பட்டுள்ளது.... இதனால், அரசு பள்ளிகளின் கல்வித்தரம் சரிந்துள்ளது என்றே கூறலாம்...
தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் 90,00,000 மாணவர்களுக்கு பயன்பட வேண்டிய நிதிப்பணம் திறமையாகப் பயன்படுத்தப்படாமல் மத்திய அரசிற்கே திருப்பி அனுப்பப்பட்டதுதான் கணினிக்கல்வி மீது நடத்தப்பட்ட பகிரங்க படுகொலை...
1992-லிருந்து இன்று வரையில் கணினி அறிவியலின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி மட்டுமே சுமார் *_2.5 இலட்சம் கோடி.._* இதுபோன்ற கல்வியை சீரழிக்கும் நிகழ்வு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் அரங்கேறியுள்ளன...
சென்ற ஆட்சிக்காலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு நிதியின் கீழ் ₹.900 கோடி நிதி கணினி அறிவியல் பாடத்திற்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது... ஆனால் அந்த நிதிப்பணமும் மத்திய அரசிற்கே திருப்பி அனுப்பியது தமிழக அரசு.... இப்படி தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதன் விளைவுதான், அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட கல்வியில் பின்தங்க நேர்ந்தது...
கணினி ஆய்வகங்கள், கணினி சார்ந்த கல்வி உபகரணங்கள் என இதற்காக ஆறு முறைக்கு மேல் தனியார் நிறுவனங்களுக்கு *டெண்டர் விடப்பட்டு ரத்து செய்திருப்பது மிகவும் அதிர்ச்சி அடையச் செய்கிறது...*
தமிழக வரலாற்றில் ஒரு துறை இத்தனை அமைச்சர்களை சந்திருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது... சென்ற ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் *_சி.வி.சண்முகம், சிவபதி, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, பழனியப்பன், வைகைச்செல்வன், வீரமணி_* என ஆறு அமைச்சர்களும், தற்போதைய ஆட்சியில் *_பெஞ்சமின், மா.ஃபா. பாணடியராஜன்,_* தற்போது *_செங்கோட்டையன்_* என ஆறு ஆண்டுகளில் ஒன்பது அமைச்சர்களை மாற்றம் செய்தது தமிழகக் கல்வித்துறைக்கு பெரும் பின்னடைவு...
குறிப்பு:கணினி ஆசியர்கள் சங்க்த்தின் சார்பில் இதுவரை கல்வி அமைச்சர் ,செயலாளர் ,இயக்குனர் ,மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் மனு கொடுத்து கால்கள் தேய்ந்து போயின நாங்கள் எங்கள் அரசு பணிக்காக போராடவில்லை இதில் 90இலட்ச மாணவர்களின் கல்விக்காக போராடுகின்றோம் தற்போது இருக்கும் கல்வி அமைச்சரை இதுவரை 36முறையும் செயலாளர் அவர்களை 15க்கும் மேற்ப்பட்ட முறையும் ,பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களிடம் மனு கொடுத்து கொடுத்து மன தோய்வுதான் அடைந்தது எங்கள் மனுக்கு பதில் இல்லை.கொடுத்தது பதில் இணையதளத்தில் முதல்வர் தனிப்பிரிவு மட்டும் தான் பதில் சொன்னது
நிராகரிக்கப்பட்டது என்று.
(முதல்வர் தனிபிரிவில் கணினி கல்வி என்ற வாரத்தைக்கு பொருள் நிராகரிக்கப்பட்டது என அர்த்தம்)அனைத்து மனுக்கும் பதில் கணினி மட்டும் தான் கொடுத்தது தவிர மனிதர்கள் அதையும் தரவில்லை ..
தற்போது இருக்கும் கல்வி முதன்மை செயலாளர் ஐயா அவர்களுக்கு மனு அளித்தபோது நான் துறைக்கு புதிது என்று எங்களிடம் கூறினார் ஆனால் மறுதினம் 1000பள்ளிக்கு கையொப்பம் செய்துள்ளார் (அரசாணை எண்:41,42).
"கடந்த இரண்டு மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கணினி அறிவியல் பி.எட். பட்டதாரிகளுக்கு தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று முக்கிய கட்சிகள் வாக்குறுதிகள் அளித்துள்ளன.இதில், ஆளும் அதிமுகவும் அடக்கம். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் வழக்கம் போல எங்களை மறந்துவிடுகிறார்கள். மாநிலம் முழுக்க 39019 பேர் இப்போது பி.எட். படிப்பை முடித்துவிட்டு, அரசு வேலை வழங்கும் என்று நம்பியிருந்த நிலையில், தமிழக அரசின் தொடர் புறக்கணிப்பு எங்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாகியுள்ளது. மொத்தமாக 39 ஆயிரம் பேரும் வாழ்வாதராத்தை இழந்து நிற்கிறோம்.
தற்போது இருக்கும் மதிப்புமிகு ஆனால், 6 ஆண்டுகளில் 9 கல்வி அமைச்சர்களை மாற்றிய தமிழக அரசு *திருமதி, சபீதா* போன்ற அதிகாரிகளை எட்டு வருடங்களாக மாற்றாமல் இருந்தது மிகவும் வேடிக்கையாக உள்ளது...
ஒரு அமைச்சரோ (அ) அதிகாரியோ ஒரு துறையில் புதிதாக நியமனம் செய்த பின்னர் அந்த துறைக்கான முழு செயல்வடிவத்தையும் அறிந்து கொள்ளவே ஆறு மாதங்கள் ஆகின்றன... ஆனால், அவர் தனது செயலை தொடங்கும்போதுதான் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்... இது என்ன கொடுமை...
இறுதிவரையில்... அரசு பள்ளிகளும், அரசு பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், வேலையில்லாப் பட்டதாரிகளும் விளங்காமல் போவதே விலக்கப்படாத விதி என அரசாணைகளில் மாற்றி எழுதிவிட்டார்களோ என ஐயமாகிறது...
இந்த ICT திட்டத்தில் தகுதியுள்ள கணினி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாமல், ELCOT போன்ற ஒப்பந்த ஊழியர்களை நியமித்து *_பி.எட்., கணினி ஆசிரியர்களின் வயிற்றிலடித்ததுதான் தமிழக அரசின் சாபம்_*
பாடநூல் கழக அதிகாரிகள் ICT திட்டத்தைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை எனவும், அதைப்பற்றி இனிமேல்தான் ஆலோசனை செய்யப் போகிறோம் என கூறுவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது...
இதுபற்றி, முன்னால் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் கூறுகையில், முன்னால் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா ஆட்சியில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்த ICT திட்டம் முழுமையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது.... பிறகு இது, 110-விதியின் கீழ் 4000 பள்ளிகள் என குறைத்து அறிவிக்கப்பட்டது... தற்போது இது மேலும் குறைக்கப்பட்டு 1000 பள்ளிகள் என்ற நிலைக்கு வந்துள்ளது... இதுவும் 1000 பள்ளிகளிலாவது செயல்படுமா (அ) 500 என குறையுமா என பொருத்துருந்துதான் பார்க்க வேண்டும் என கூறுகிறார்...
*தமிழகத்தில் மட்டும் கணினி கல்விக்கும் கணினி ஆசியர்களுக்கும் வந்த சோதனை!!!*
இவ்வாறாக, அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், அடக்குமுறைகளாலும் மற்ற மாநிலங்களை விட தமிழக கல்விதுறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
*கணினி அறிவியல் பாடபுத்தகம் குப்பை தொட்டியில்..*
" சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு 6 ஆண்டுகளாக முடங்கிப் போயுள்ளது. அதே நேரத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடம் இருக்கிறது. அரசு நடுநிலைப் பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ. மூலம் ஐ.டி.சி. திட்டமும் அமலில் உள்ளது. இதில் ஆசிரியர்களுக்கு மட்டுமே கணினி பயிற்சித் தரப்படுகிறது. மாணவர்களுக்கு இல்லை. அதில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இந்த நிலையில்தான் அரசுப் பள்ளிகளில், கணினி வழிக்கல்வி, 2011ம் ஆண்டு சமச்சீர் கல்வியில் அறிமுகமானது. தமிழ்நாடு பாட நூல் கழகமும் 6 முதல் 9ம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களும் அச்சிட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.
ஏழைக் கிராப்புற மாணவர்கள் கணினி அறிவுப் பயிற்சி பெறுவதை தமிழக அரசு விரும்பவில்லையா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள், முதல் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டர் கல்வியை வழங்கிவருகின்றன. இது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. மேலும் புதியதாக 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அனுமதியும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அப்டேட் கல்வி இல்லாத நிலையில்தான் அரசுப்பள்ளிகளில் இருந்து 11 லட்சம் மாணவர்கள், கடந்த 6 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இந்த இடைவெளியை தமிழக அரசு எப்போது உணரும் என்று தெரியவில்லை.
50இலட்சம் மாணவர்களின் கனவான கணினி அறிவியல் பாடபுத்தகம் இன்று குப்பை தொட்டியில் (RTI தகவல்)அரசுப்பள்ளிகள் சமச்சீர் கல்வியல் கணினி அறிவியல் பாடபுத்தகம்
2011ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங் கப்படவில்லை.இன்று இதன் நிலையை யார் அறிவார்..(குப்பையில் உறங்கும் 6-10 கணினி அறிவியல் பாடபுத்தகம்)தமிழ்நாடுபாடநூல் கழகம் RTIயில் தந்த அதிர்ச்சியான தகவல்.
கணினி ஆசிரியர்களாகப் பள்ளிகளில் பணியாற்றுவதன் மூலம், அரசுப்பள்ளி மாணவர்களும் தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கணினிகளைக் கையாளவும் தொழில் நுட்ப வளர்ச்சிப் பெறவும் உதவிட முடியும் என்ற எங்களின் கனவு கானல் நீராகி விட்டது. மாணவர்களின் எதிர்காலம் இன்றளவும் இருண்டுகிடக்கிறது.
மத்தியரசின் நிதியை முறையாக பயன்படுத்தி தமிழகத்திலும் விரைவில் கணினி கல்வி கொண்டுவரவேண்டும்..
இனியாவது கணினியின் அவசியத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் நன்கு அறிந்துள்ள தமிழக அரசாங்கம், அரசுப்பள்ளிகள் அனைத்திலும்.
புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பிலிருந்து கட்டாயப்படமாக
கொண்டுவர மாண்புமிகு கல்வி அமைச்சர் மதிப்புமிகு செயலாளர் தமிழகத்தில் கணினி கல்வியை ஆறாம் வகுப்பிலிருநதே ஆறாவது பாமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டம் விரைவில்.
செய்தி:ராஜ்குமார்,
இணைய ஆசிரியர்.
வெ.குமரேசன் ,
பொதுச்செயலாளர் ,
9626545446 ,9789180422 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசியர்கள் சங்கம் சங்கம்655/2014.
செப்டம்பர் 1 முதல் ORIGINAL DRIVING LICENSE வைத்திருக்க வேண்டியது கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு...
வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்கவும் உயிரிழப்புக்களை தடுக்கவும் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 9500 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் நகல் ஓட்டுநர் உரிமம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. என்று கூறியுள்ளார்.
வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்கவும் உயிரிழப்புக்களை தடுக்கவும் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 9500 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் நகல் ஓட்டுநர் உரிமம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. என்று கூறியுள்ளார்.
தமிழகம் ஸ்தம்பித்தது!! அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து பணிகளும் முடக்கம்!!
ஊதிய மாற்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு இன்று மாநிலம் முழுவதும் ஒரு நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தல் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜாக்டோ மற்றும் ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஏற்று ஊதிய மாற்று உள்ளிட்டவைகளை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஊதியக் குழுவினை அமல்படுத்தும் முன்னர் 20 சதவீதம் இடைக்கால நிவாரணத் தொகையை 2016, ஜனவரி மாதம் முதல் உடனடியாக அறிவித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று ஜாக்டோ - ஜியோ அமைப்பு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடின. அரசுப் பள்ளி ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போரட்டத்துக்குப் பிறகும், அரசு தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முதல் காலை வரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.
11th Pulic Exam Official Model Question Paper Download
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | TAMIL PAPER - 1
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | TAMIL PAPER 2
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | ENGLISH PAPER - 1
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | ENGLISH PAPER - 2
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | MATHS T/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | MATHS E/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | PHYSICS T/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | PHYSICS E/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | CHEMISTRY T/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | CHEMISTRY E/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | ZOOLOGY E/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | ZOOLOGY T/M & E/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | BOTANY T/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | BOTANY E/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | BIO - BOTANY & BIO - ZOOLOGY T/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | BIO - BOTANY & BIO - ZOOLOGY E/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | HISTORY T/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | HISTORY E/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | ECONOMICS T/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | ECONOMICS E/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | COMMERCE T/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | COMMERCE E/M
CLICK HERE - 11 TH OFFICIAL MODEL QP | ACCOUTANCY T/M
இன்ஜி., மாணவர் சேர்க்கை : அண்ணா பல்கலை கெடு...
தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், வரும், 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும், அனைத்து இன்ஜி., கல்லுாரிகளிலும், ஜூலை, 31க்குள், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கையை முடித்திருக்க வேண்டும்.
ஆக., 1ல், அனைத்து கல்லுாரிகளிலும் வகுப்புகள் துவங்கப்பட்டிருக்க வேண்டும். 'நீட்' நுழைவுத்தேர்வு பிரச்னையால், தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை தள்ளிப் போனதால், இன்ஜி., மாணவர் சேர்க்கை, தாமதமாக துவங்கியது. ஆக., 18ல் கவுன்சிலிங் முடிந்துள்ளது. தொடர்ந்து, அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கி உள்ளன. 'தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை, வரும், 31ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும்' என, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது. செப்.,1ல், வகுப்புகள் துவங்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆக., 1ல், அனைத்து கல்லுாரிகளிலும் வகுப்புகள் துவங்கப்பட்டிருக்க வேண்டும். 'நீட்' நுழைவுத்தேர்வு பிரச்னையால், தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை தள்ளிப் போனதால், இன்ஜி., மாணவர் சேர்க்கை, தாமதமாக துவங்கியது. ஆக., 18ல் கவுன்சிலிங் முடிந்துள்ளது. தொடர்ந்து, அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கி உள்ளன. 'தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை, வரும், 31ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும்' என, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது. செப்.,1ல், வகுப்புகள் துவங்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் மாற்றமில்லை...
பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் வினாத்தாள் முறையில், மாற்றம் இல்லை' என, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், தேர்வுக்கான மதிப்பெண்கள், பாட வாரியாக தலா, 200 என்பது, 100 ஆக மாற்றப்பட்டு உள்ளது.அது போல, பிளஸ் 2 தேர்வுக்கு மாற்றம் உண்டா என, மாணவ மாணவியரும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், இந்த ஆண்டு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத் தேர்விலும், வினாத்தாள் மதிப்பெண் முறையிலும், மாற்றம் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், தேர்வுக்கான மதிப்பெண்கள், பாட வாரியாக தலா, 200 என்பது, 100 ஆக மாற்றப்பட்டு உள்ளது.அது போல, பிளஸ் 2 தேர்வுக்கு மாற்றம் உண்டா என, மாணவ மாணவியரும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், இந்த ஆண்டு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத் தேர்விலும், வினாத்தாள் மதிப்பெண் முறையிலும், மாற்றம் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: பழைய முறைப்படியே, இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, 'புளூ பிரின்ட்' அடிப்படையில், கேள்விகள் அமையும். சிந்திக்கும் வகையிலும், சிக்கலுக்கு தீர்வு காணும் வகையிலும், பதில் எழுத, சில வினாக்கள் இடம் பெறும்.
தேர்வுக்கான மதிப்பெண்ணில், இந்த ஆண்டு மாற்றம் இல்லை.எனவே, மாணவர்கள் குழப்பமின்றி, பழைய தேர்வு முறையின்படி பயிற்சி பெறலாம். தமிழக பெற்றோர் - ஆசிரியர் கழகம் வெளியிட்ட, வினா வங்கிகளை பயன்படுத்தியும் பயிற்சி எடுக்கலாம். 'நீட்' போன்ற தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், மாணவர்களை, ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு பள்ளிகளில் பாடம் நடத்த தற்காலிக ஆசிரியருக்கு உத்தரவு....
ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேரும் பணிக்கு வந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களின், 25க்கும் மேற்பட்ட சங்கத்தினர் அடங்கிய,
'ஜாக்டோ' கூட்டமைப்பும், அரசு ஊழியர்களின், 'ஜியோ' கூட்டமைப்பும் இணைந்து, இன்று, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளன.இதில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.எனவே, அரசு பள்ளி களில், குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில், இன்று வகுப்புகள் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
'ஜாக்டோ' கூட்டமைப்பும், அரசு ஊழியர்களின், 'ஜியோ' கூட்டமைப்பும் இணைந்து, இன்று, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளன.இதில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.எனவே, அரசு பள்ளி களில், குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில், இன்று வகுப்புகள் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி, 'அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், இன்று கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். 'வேலை நிறுத்த நாளில் பணியாற்றும், தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும்.'பணி நிரந்தரம் செய்யும் போது,'போனஸ்' மதிப்பெண் தரப்படும்' என, அதிகாரிகள் கூறிஉள்ளனர்.பல பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்பதால், அங்கு அதிகாரிகளே, பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
5000 ஆண்டு வரை தேதி சொன்னால் கிழமையை சொல்லும் சிறுவன்; இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்!!
ஒன்று முதல் ஐயாயிரம் ஆண்டு வரை, தேதியை சொன்னால், கிழமையை
சொல்லும் 13 வயது சிறுவனுக்கு, அபார நினைவாற்றலுக்காக இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் கிடைத்தது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைசேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகம்மது பஹீம்,13. துபாயில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். அபார ஞாபக சக்தி கொண்டவரான முகம்மதுபஹீமை அவரது பெற்றோர் 4 வயது முதல் ஊக்கப்படுத்தினர்.
சிறுவயதில் உறவினர் வீட்டிற்கு சென்றால், அவர்களின் வீட்டில் உள்ள காலண்டரை பார்த்துக்கொண்டே இருப்பார். இந்த நிலையில், தற்போது ஒன்று முதல் 5000 ஆண்டு வரை, எந்த தேதியை கூறினாலும் அதன் கிழமையை கூறுகிறார்.
இதேபோல் உலக நாடுகளின் கடிகார நேரத்தையும் கூறுகிறார். எந்த நாட்டை கேட்டாலும், அதன் தலைநகர், கொடி, மொழி, நாணயத்தை கூறுவார். சர்வதேச எண் முறை, அனைத்து அலைபேசி நிறுவனங்களின் பெயர், மாடல், தயாரிப்பு தேதி, மென்பொருள் குறித்தும் கூறுகிறார்.
எங்கெல்லாம் சென்றாரோ அந்த இடத்தின் பெயர், தேதி, நேரத்தை ஞாபகத்தில் வைத்து உள்ளார். இவருக்கு, சிறந்த ஞாபக சக்தியாளர் என்ற முறையில், 5000 ஆண்டுகளுக்கான தேதியை சொன்னால், கிழமையை சொல்லும் திறனுக்காக இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் கிடைத்தது. இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை இந்தியா சாதனையாளர் புத்தகத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் கலைவாணி வழங்கினார். பின்னர் அந்த சிறுவன் கலெக்டர் நடராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார்....
மாற்றங்களை உருவாக்குவோம்!!தமிழக அளவில் தனது கற்பித்தலாலும் செயல்பாடுகளாலும் சிறந்து விளங்குபவர்களை கொண்டாடும் அசத்தல் மேடை!!
மாற்றங்களை உருவாக்குவோம்!!
தமிழக அளவில் தனது கற்பித்தலாலும் செயல்பாடுகளாலும் சிறந்து விளங்குபவர்களை கொண்டாடும்
அசத்தல் மேடை!!
*நம்பிக்கை நட்சத்திரங்கள் விருது* விருது பெறும் மாணவர்கள்
*Airtel super singer Title winner*
செல்வி.பிரித்திகா
திருவாரூர்
*ரஷ்ய விண்வெளி மையம் சென்ற இளம்விஞ்ஞானி*
செல்வன்.ஜெயக்குமார்
விருதுநகர்
*நரம்புத்தளர்ச்சி பாதிப்புடன் அசத்தும் அறிவாற்றல்* செல்வன்.ஆலன்விஜய் பால்
தஞ்சாவூர்
*ஒருவார்த்தை ஒரு லட்சம் போட்டியின் வெற்றியாளர்கள்*
சீ.சுனில்குமார்
ர.கோகுல்
கோயம்புத்தூர்
*மது ஒழிப்பிற்காக 1 ம் வகுப்பில் இருந்து போராடும் மாணவி*
ந.பாரதி
நீலகிரி
தமிழகத்தில் தனது கல்விப்பணியால் சிறந்து விளங்கி சாதனை புரிந்து சமூகச்சிற்பி விருது பெறப் போகும்
அசத்தல் ஆசிரியர்கள்
*திரு.பிராங்க்ளின்*
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்
*திரு.கருப்பையா*
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
*திரு.செல்வக்கண்ணன்*
கரூர்
கரூர்
*திரு.தென்னவன்*
மதுரை
மதுரை
*திருமதி.கிருஷ்ணவேணி*
திருப்பூர்
திருப்பூர்
*திரு.தமிழரசன்*
விழுப்புரம்
விழுப்புரம்
*திரு.வசந்தன்*
கடலூர்
கடலூர்
*திருமதி.விஜயலெட்சுமி*
திருப்பூர்
திருப்பூர்
*திருமதி.கவிதா*
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
*திரு.இளவழகன்*
பெரம்பலூர்
பெரம்பலூர்
*திரு.திலீப்*
விழுப்புரம்
விழுப்புரம்
*திரு.குருமூர்த்தி*
திருச்சி
திருச்சி
*திரு.செந்தில்செல்வன்*
சிவகங்கை
சிவகங்கை
*திரு.தென்றல்*
வேலூர்
வேலூர்
*திருமதி.மகாலெட்சுமி*
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
*திரு.தனபால்*
கரூர்
கரூர்
*திரு.தாமஸ் ஆண்டனி*
ஈரோடு
ஈரோடு
*திருமதி.ரூபி கேத்தரின் தெரஸா*
நாமக்கல்
நாமக்கல்
*திரு.அமலன் ஜெரோம்*
சேலம்
சேலம்
*திரு.பெர்ஜின்*
ராமநாதபுரம்
ராமநாதபுரம்
*திரு.அன்பழகன்*
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
*திரு.விஜய்குமார்*
விழுப்புரம்
விழுப்புரம்
*திருமதி.பார்வதிஸ்ரீ*
சேலம்
சேலம்
*செல்வி.சாந்தி*
சென்னை
சென்னை
*திருமதி.புஷ்பலதா*
திருச்சி
திருச்சி
*திருமதி.சுவேதா*
சிவகங்கை
சிவகங்கை
*திரு.லோகநாதன்*
ஈரோடு
ஈரோடு
*திருமதி.பிருந்தா*
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்
*திருமதி.சிவகாமிசுந்தரி*
மதுரை
மதுரை
*திரு.கோபிநாத்*
வேலூர்
வேலூர்
*திரு.ஆனந்த்*
திருவாரூர்
திருவாரூர்
*திரு.கருணைதாஸ்*
விருதுநகர்
விருதுநகர்
*திரு.ஸ்டாலின் ஆரோக்கியராஜ்*
விழுப்புரம்
விழுப்புரம்
*திரு.மணிமாறன்*
திருவாரூர்
திருவாரூர்
*திரு.சதிஷ்குமார்*
திருச்சி
திருச்சி
*திருமதி.லதா*
சேலம்
சேலம்
*திரு.மாரிமுத்து*
நீலகிரி
நீலகிரி
*திருமதி.எஸ்தர்வேணி*
ராமநாதபுரம்
ராமநாதபுரம்
*திரு.சக்திவேல்முருகன்*
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
*திருமதி.சந்திரா*
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
*திரு.செந்தில்குமார்*
தேனி
தேனி
*செல்வி.அன்னபூர்ணா*
விழுப்புரம்
விழுப்புரம்
*திரு.நல்லமுத்து*
நீலகிரி
நீலகிரி
*திருமதி.சபரிமாலா*
விழுப்புரம்
விழுப்புரம்
*திரு.தங்கராஜ்*
திருநெல்வேலி
திருநெல்வேலி
*திரு..ஸ்டீபன் மிக்கேல் ராஜ்*
சிவகங்கை
சிவகங்கை
*திருமதி.ராஜலெட்சுமி*
கடலூர்
கடலூர்
*திருமதி.தேன்மொழி* திருவண்ணாமலை
*திரு.திருமுருகன்*
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்
*திரு.சங்கர்*
தர்மபுரி
தர்மபுரி
*திரு.சிங்கராஜ்*
திருவள்ளூர்
திருவள்ளூர்
*திரு.தேவதாஸ்*
விழுப்புரம்
விழுப்புரம்
*திரு.கண்ணபிரான்*
திருப்பூர்
திருப்பூர்
*திரு.கணேஷ்குமார்*
சென்னை
சென்னை
*திரு.பழனிக்குமார்*
திருநெல்வேலி
திருநெல்வேலி
🌷🌷🌷🌷🌷🌷🌷
வரும் கல்வியாண்டில் தங்களது பணியால் முத்திரை பதிப்பார்கள் என்னும் நம்பிக்கையுடன்
*நம்பிக்கை 2018* என்னும் விருது பெறும் விருதாளர்கள்
திருப்பூர் *பிரியதர்ஷினி*
புதுக்கோட்டை *கிறிஸ்டி*
வேலூர் *ஜானகிராமன்*
சிவகங்கை *கணேசன்*
காஞ்சிபுரம் *யுவராணி*
நீலகிரி வசந்தா*
சென்னை *கனகலெட்சுமி*
வேலூர் *கார்த்திகேயன்*
திருச்சி *கனகராஜ்*
தஞ்சாவூர் *ராமநாதன்*
விழுப்புரம் *நிகிலா*
திருப்பூர் *கனகராஜ்*
கடலூர் *ஹேமகுமாரி ஜூலி*
நாகப்பட்டினம் *முழுமதி*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*கல்விக்காவலர் விருது*
பெறப்போகும் பெருமைக்குரியவர்கள்
*பெற்றோர் ஆசிரியர் கழகம், அ.ம.மே.பள்ளி கீரமங்கலம்*
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
*முழுமதி அறக்கட்டளை* ஜப்பான்
*அக்னிச்சிறகுகள் அறக்கட்டளை*
தஞ்சாவூர்
தஞ்சாவூர்
*பரஸ்பரம் அறக்கட்டளை*
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்
*சிறுதுளி அமைப்பு*
சென்னை
சென்னை
*கலாம் அறக்கட்டளை*
சென்னை
சென்னை
வரும் *செப்டம்பர் 3 ல்*
திருச்சியில்
அசத்துவோம்
திருச்சியில்
அசத்துவோம்
வருகை தாருங்கள்
வண்ணமயமாக கொண்டாடுவோம்.
வண்ணமயமாக கொண்டாடுவோம்.
NEET - தமிழகத்தில் நாளை மறுநாள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு : மாநில சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்த நீட் தேர்வின் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் செப்டம்பர் 4-ம் தேதி வரை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்த தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறாது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே MBBS சேர்க்கையில் பங்கபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு கோரும் சட்டத்தை அமல்படுத்தினால் குழப்பமே ஏற்படும் என்றார். எனவே அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தர கூடாது என மத்திய அரசுக்கு அவர் பரிந்துரைத்தார். இதனை ஏற்ற மத்திய அரசு, தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியது. ஒரு மாநிலத்திற்கு மட்டும் நீட்டிலிருந்து விலக்களிக்க முடியாது. ஏற்கனவே மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தமிழக அரசின் அவசர சட்டம் உள்ளது. எனவே தமிழக அரசின் அவசர சட்டத்தை ஏற்க முடியாது என மத்திய அரசு கூறியது. இதனை அடுத்தே தமிழகத்தின் அவசர சட்டம் ஒப்புதல் அளிக்கப்படாமல், நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை மறுநாள் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கி நடைபெறும் என மாநில சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நாளை மாணவர் தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஜீயோவிற்கு போட்டியாக ஏர்டெல்: தீபாவளிக்கு அசத்தல் சர்ப்ரைஸ்!
ஏர்டெல் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள ரூ.1,500 விலையில்
வழங்கும் 4ஜி பீச்சர் போன் திட்டத்திற்கு போட்டியாக புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் சொந்தமான 4ஜி ஸ்மார்ட்போனை தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
லாவா மற்றும் கார்பன் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு ஜியோ போனுக்கு போட்டியாக உள்ளது. ஏர்டெல் போன் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை டவுன்லோடு செய்யும் வசதி கொண்டிருக்கலாம் என தெரிகிறது...
லாவா மற்றும் கார்பன் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு ஜியோ போனுக்கு போட்டியாக உள்ளது. ஏர்டெல் போன் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை டவுன்லோடு செய்யும் வசதி கொண்டிருக்கலாம் என தெரிகிறது...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)