>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 9 ஆகஸ்ட், 2017

Teachers Consolidate Period Service Reg | Chennai High Court Judgment

ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை இதுவரை நியமன நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்கியது தவறு சென்னை உயர்நீதிமன்றம் முரண்பாடான தீர்ப்பாணை!!

ஆசிரியர்கள் - மாணவர்களின் கருத்தறிய பள்ளிகளில் கருத்தறியும் பெட்டி...

பள்ளி கல்வி பாடத்திட்டம் குறித்த கருத்துக்களை அறிய பள்ளிகளில் கருத்துப் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்பட்டது.
தமிழக அளவில், பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டங்கள் கடந்த 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளது. பாடத்திட்டத்தை மாற்ற, கல்வியாளர்களும், பெற்றோர்களும் அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.
இன்று நடைபெற்ற கருத்தரங்கில், பள்ளி பாடத்திட்ட மாற்றம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி மற்றும் பட்ளளி கல்வி இயக்ககத்தில் நிபுணர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. 
இந்த கருத்தரங்கைத் தொடர்ந்து, மதுரை, கோவை, சென்னை என கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்க உள்ளது. அது மட்டுமல்லாமல் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கருத்தைக் கேட்க கருத்தறியும் பெட்டிகள் வைக்கப்பட உள்ளதாகவும் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடத்திட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களைப் பெட்டியில் எழுதிப் போடலாம் என்றும், பெயர் குறிப்பிட விருப்பம் இல்லாவிட்டாலும், பாடத்திட்டம் பற்றி கருத்துக்களை பதிவு செய்யலாம் என்றும் அப்போது கூறப்பட்டது.
இவற்றினை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் தொகுத்து, முதன்மை கல்வி அலுவலர் வழியாக மாநில கல்வியியல் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அனுப்பவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயச்சந்திரனுக்குப் பதில் இவரா🔀.......

'பள்ளிக் கல்வித்துறை செயலர் பொறுப்பிலிருந்து உதயச்சந்திரன் நீக்கப்படுவார்' என்ற தகவல், தலைமைச்செயலகத்தில் வலம் வருகிறது.

கடந்த சில வாரங்களாக அமைச்சர் செங்கோட்டையனுக்கும் உதயச்சந்திரனுக்கும் இடையில் பனிப்போர் நிலவிவருவதாகக் கல்வித்துறை வட்டாரத்தில் தகவல் பரவியது. இதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித்துறைக்கு பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படலாம் என்கின்றனர் கல்வி அதிகாரிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்வி அதிகாரி ஒருவர், " பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செயல்படுத்திவருகிறார் உதயச்சந்திரன். புதியப் பாடத் திட்டத்தை உருவாக்கும் வேலைகளிலும் அவர் ஆர்வம் செலுத்திவருகிறார். அதேநேரம், ஆசிரியர் பணி மாறுதல், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் பணிகள் ஆகியவற்றில் நேர்மையான அணுகுமுறையைக் கொண்டுவரத் திட்டமிட்டார் செயலர். இதை, பள்ளிக் கல்வித்துறையில் கோலோச்சும் ஒப்பந்ததாரர்கள் ரசிக்கவில்லை. 'செயலரை நீக்கியே ஆக வேண்டும்' என சேலத்தைச் சேர்ந்த அந்த நபர்கள், முதல்வரை சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியானது. நேற்றும் முதல்வரிடம் இதுகுறித்து கட்சி நிர்வாகிகளே கேட்டுள்ளனர்.

அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ' நான் அப்படி எந்த முடிவையும் எடுக்கவில்லை. அமைச்சருக்கும் அவருக்கும் இடையில்தான் ஏதோ மோதல்' எனப் பதில் அளித்திருக்கிறார். 'உதயச்சந்திரனை நீக்கக்கூடாது' என அனைத்து தரப்பிலிருந்தும் நெருக்கடிகள் வருவதால், தற்காலிகமாக அந்த முடிவைத் தள்ளிப்போட்டுள்ளனர். இருப்பினும், ' செயலரை மாற்றியே ஆக வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் அமைச்சர்" என்றார்.

நீட் அவசர சட்டத்துக்கு தமிழக அரசு ஆலோசனை பெறவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் 'பகீர்,.....

டெல்லி: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் அவசர சட்டம் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை கேட்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் அவசர சட்டம் கொண்டுவர அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் டெல்லியிலேயே முகாமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரையும் தமிழக அமைச்சர்கள் சந்திக்கின்றனர் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால் நீட் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், நீட் அவசர சட்டத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது. ஆனால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கு எந்த ஒரு ஆலோசனையையும் தமிழக அரசு கேட்கவில்லை என குண்டை தூக்கிப் போட்டார்.
இதனால் நீட் அவசர சட்டம் பற்றி தமிழக மக்களுக்கு பொய்யான தகவலை தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்த நீட் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

'டியூஷன் பீசு'க்கும் ஜி.எஸ்.டி., : பெற்றோர் அதிர்ச்சி....

டியூஷன் பீஸ்களுக்கும், ஜி.எஸ்.டி., வசூல் செய்யப்படுவது, பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள் கூறியதாவது:

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான டியூஷன் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வணிக ரீதியிலானவை என கூறி, 18 சதவீத, ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. இது, பெற்றோரை பெரிதும் பாதிக்கும். ஒரு மாணவர், 10 ஆயிரம் ரூபாய் டியூஷன் பீஸ் கட்டுகிறார் என்றால், அவர் வரியாக, 1,800 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும். தற்போது வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வு என்றாலும், 'நீட்' போன்ற மேற்படிப்புக்கான போட்டித் தேர்வு என்றாலும், பயிற்சி மையங்களைத் தான் தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆகவே, கல்விக்கான இந்த வரி விதிப்பை ரத்து செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நடுத்தர வர்க்கத்தினருக்கு, இது கூடுதல் சுமையாக அமையும். எனவே,டியூஷன் மையங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் விலக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.

ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.

அமைச்சர்களின் உறுதிமொழி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.

ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.

எப்படி வந்தது?

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.

இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.

தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே

தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.

தமிழகத்தால் முடியும்

பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.

புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.

விருப்பம் இல்லையா?

மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.

புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.

சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு.

- ஆர். இளங்கோவன், செயல்தலைவர்,

(தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன்) டிஆர்இயு.

கல்விக் கொள்கை.....

மத்திய அமைச்சரவை எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைக் கல்வி வரை தேர்வில்லாமல் அனைத்து மாணவர்களையும் வெற்றிபெறச் செய்யும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 
2009-இல் நிறைவேற்றப்பட்ட இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்ஒரு பிரிவாக எட்டாம் வகுப்பு வரை தேர்வில்லா தேர்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இப்போது ஐந்து, எட்டாம் வகுப்புகளில் தேர்வு வைத்து மாணவர்களின் தகுதியைநிர்ணயிப்பது என்றும், அதில் சிலர் தேர்வாகாமல் போனால் அவர்களுக்கு மறு தேர்வுக்கான வாய்ப்பை வழங்குவது என்றும் முடிவு எடுத்திருக்கிறது மத்திய அமைச்சரவை.கல்விக் கொள்கை குறித்து மத்திய - மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கும் மத்திய கல்வி ஆலோசனை வாரியம் கடந்த ஆண்டு எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்கிற கொள்கையை மறுபரிசீலனை செய்தது.
இந்தக் கொள்கையின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது என்றும் எட்டாம் வகுப்பில் படிக்கும் பல மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்புக் கணக்குகளைக்கூடப் போடும் திறமையோ, சரியாக வாக்கியங்களை எழுதும் திறனோகூட இல்லாமல் இருந்ததை வாரியம் சுட்டிக்காட்டியது. இதனால்கல்வியின் தரம் குறைந்துவருகிறது என்பதால் ஐந்து, எட்டாம் வகுப்புகளில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது அந்த வாரியம்.மத்திய கல்வி ஆலோசனை வாரியம் மட்டுமல்லாமல் 25 மாநிலங்களும் தேர்வில்லாமல் தேர்ச்சிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் மிக அதிக மாணவர்கள் படிப்பைப் பாதியில் கைவிடுகிறார்கள் என்பதும் அவர்களால் பொதுத்தேர்வுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதும்தான் அதற்கு அந்த மாநிலங்கள் கூறிய காரணங்கள். எட்டாம் வகுப்பு வரை தேர்வில்லாமல்தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9-ஆம் வகுப்பில் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது அவர்களால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதும் ஒன்றாம் வகுப்பு முதல் தேர்வே எழுதாததால் அவர்களுடைய கல்வித்தரம் நிர்ணயிக்கப்படவில்லைஎன்பதும் 9-ஆம் வகுப்பில் அவர்கள் தேர்ச்சியடையாமல் போவதற்கு முக்கியமான காரணிகள்.
இந்தியாவின் கல்விக் கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றாலும்கூட, ஆரம்பக் கல்வி நிலையிலும், நடுநிலைக் கல்வி நிலையிலும், உயர்நிலைக் கல்வி நிலையிலும் படிப்பைப் பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருந்துவருகிறது. 2015 புள்ளிவிவரப்படி தொடக்கக் கல்வி அளவில் 5 விழுக்காடு மாணவர்களும், நடுநிலைக் கல்வி அளவில் 17 விழுக்காடு மாணவர்களும் கல்வியைக் கைவிடுவதாகத் தெரிகிறது. இதில் மிக அதிகமான பாதிப்பு அரசுப் பள்ளிகளில்தானே தவிர, தனியார் பள்ளிகளில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி மாணவர்கள் பாதியில் கல்வியைக் கைவிடுவதை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் மதிய உணவு திட்டமும், எட்டாம் வகுப்பு வரை தேர்வில்லாமல் தேர்ச்சியும் கட்டாய இலவசக் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் உறுதி அளிக்கப்பட்டன. மாணவர்கள் பாதியில்படிப்பை நிறுத்துவதைக் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தால் ஓரளவுக்குத் தடுக்க முடிந்தது என்றாலும்கூட அவர்களது கல்வித் தரத்தை அது உறுதிப்படுத்தவில்லை.
இலவசக் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம், எட்டாம் வகுப்பு வரை தேர்வில்லாமல் தேர்ச்சி என்பதுடன் நின்றுவிடவில்லை. பள்ளிக்கூடங்களின் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவது, மாணவர் - ஆசிரியர் இடையேயான விகிதத்தை அதிகரிப்பது, ஆசிரியர்களுக்குத் தகுதி மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது, மாணவர்களுக்குத் தொடர்ந்து திறமை மேம்பாடு குறித்த தரமதிப்பீட்டை நடத்துவது உள்ளிட்டவையும் இச்சட்டத்தின்கீழ்கூறப்பட்டிருக்கிறது. அதேபோல தனியார் பள்ளிக்கூடங்களில் 25 விழுக்காடு இலவச இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தர அந்தச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது.
இதுகுறித்து எல்லாம் மத்திய - மாநிலஅரசுகள் எந்தவித கவனமும் செலுத்தியதாகத் தெரியவில்லை.ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான விகிதம் கணிசமாகக் குறைக்கப்படாமல், மாணவர்கள்மீது ஆசிரியர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்துவது என்பது இயலாது. அதேபோல ஆசிரியர்களின் தரத்தையும் உறுதிப்படுத்தியாக வேண்டும்.பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களைப்போல அர்ப்பணிப்பு இல்லாமல் செயல்படுவதும் கல்விக் கொள்கைகள் வெற்றியடையாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம். ஆசிரியர் நியமனங்களில் அரசியல் தலையீடும், கையூட்டும் இருக்கும் நிலையில் தரமான கல்வியை உறுதிப்படுத்துவது என்பது எப்படி சாத்தியம்?தேர்வு முறைத் தேர்ச்சியா, பயிற்சி முறைப் புரிதலா என்பது அல்ல முக்கியம். பணக்காரர் - ஏழை வேறுபாடில்லாமல் மாணவர்களுக்குத் தரமான கல்வியும், முறையான கற்பித்தலும் உறுதிப்படுத்தப்படாமல், கல்விக் கொள்கையை வகுப்பதால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடாது.
பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்கள் சிலர் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படுகிறார்கள் என்பதையும், வேறு சிலர் கூலித் தொழிலாளர்களாகவும் சமூக விரோதிகளாகவும் மாறும் அவலம் அரங்கேறுகிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.கல்வி கற்கும்திறன் குறைந்த மாணவர்களை எட்டாம் வகுப்பு நிலையிலேயே இனங்கண்டு அவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி அளிப்பதன் மூலம் திறன் தொழிலாளர்களாக அவர்களைஉருவாக்க முடியும். ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட கல்வி முறை காணப்படுகிறது. அதுபோன்ற முயற்சிகளையும் நமது கல்விக் கொள்கை உட்படுத்திக்கொள்ள வேண்டும்

சாலை ஆய்வாளர்கள் 2000த்தில் இருந்து2400ஆக தர ஊதியத்தை மாற்றி தமிழக அரசு உத்தரவு

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

கல்லூரிகளை போல் பள்ளிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து : நுழைவுத்தேர்வை சமாளிக்க 'தினமலர்' வெளியீட்டாளர் ஆலோசனை

தமிழக மாணவர்கள், அகில இந்திய நுழைவு தேர்வுகளை சமாளிக்கும் வகையில், பள்ளிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு, தமிழக அரசுக்கு, 'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் புதிய பாடத்திட்ட தயாரிப்புக்கு உதவும்வகையில், 'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி, கருத்துரு ஒன்றை உருவாக்கி உள்ளார். தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையனை நேரில் சந்தித்து, புதிய பாடத்திட்ட கருத்துருவை வழங்கினார். இதுகுறித்து, பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரனையும், பாடத்திட்ட கலைத்திட்டக்குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான, அனந்த கிருஷ்ணனையும் சந்தித்து, ஆலோசனை தெரிவித்தார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
* பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் மேற்பார்வையில், கல்லுாரிகள் அளவில், 25 ஆண்டுகளாக தன்னாட்சி முறை சிறப்பாக உள்ளது. பள்ளிக் கல்வியிலும், தன்னாட்சி முறை கொண்டு வந்தால், கல்வி முறையை இன்னும் மேம்படுத்தலாம்
* கல்வித் தரம் உயர, கல்வி நிறுவனங்களுக்கும், அவற்றை நடத்துபவர்களுக்கும் சுதந்திரம் தர வேண்டும் என, 1986 மற்றும், 1992ம் ஆண்டு, தேசிய கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்ட உள்ளது. அதன்படி, பள்ளிகளுக்கு, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம்
* கல்லுாரிக்கு தன்னாட்சி தர, யு.ஜி.சி., சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. ஒரு கல்லுாரி, குறைந்தபட்சம், 10 ஆண்டுகளாவது தொடர்ந்து இயங்க வேண்டும்; மாணவர்களின் கல்வித்தரம், ஆசிரியர்களின் கல்வித்தகுதி, ஆய்வக, நுாலக, விடுதி வசதிகள், உள்கட்டமைப்பு போன்ற தகுதிகள்நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிக் கல்விக்கும் விதிகள் கொண்டு வரலாம்
* தன்னாட்சிக்கு விரும்பும் பள்ளிகளின் விண்ணப்பத்தை, நிபுணர் குழு, 30 நாட்களில் பரிசீலித்து, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இதன்படி, தன்னாட்சி குறித்து, அரசு முடிவு எடுக்கலாம்
* தன்னாட்சி அந்தஸ்து பெறும் பள்ளிகள், தனியாக நிர்வாக குழு, நிதிக்குழு, கல்விக்குழு, பாடத்திட்ட குழு, தேர்வு மற்றும் மதிப்பீட்டுக்குழு போன்றவற்றை உருவாக்கி கொள்ள வேண்டும்
* பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம். மேம்படுத்தப்பட்ட கல்வியை, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு வழங்கும் போது தான், அது பெரும் சுமையாகவோ, திறமைக்கு அப்பாற்பட்டதாகவோ இருக்காது
* பாடத்திட்ட குழுவில் இடம் பெற்றுள்ள, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தொழிற்துறையினர் சேர்ந்து, அவ்வப்போது, பாடத்திட்டத்தை புதுப்பித்து கொள்ளலாம்
* தரமான பாடத்திட்டம், மாணவர்களின் செயல்திறன் பரிசோதனை, தேர்வு முறையில் மேம்பாடு போன்ற அனைத்திலும், பள்ளிகளுக்கும், அரசுக்கும் உரிய ஒத்துழைப்பு இருந்தால், சாதாரண பள்ளியையும், தரம் மிக்க பள்ளியாக மாற்றலாம்
* பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க நியமிக்கப்பட்டுள்ள,உயர்மட்டக் குழுவையே தன்னாட்சி முறைக்கான நடைமுறைகளை வகுக்கச் செய்யலாம். அதற்கான விதிகளை, இந்த ஆண்டு, டிச.,க்குள் முடித்தால், 2018 ஜன., யில் விண்ணப்பங்கள் பெறலாம். 2018, ஜூன் முதல் தன்னாட்சி வழங்கலாம்
* இந்த திட்டத்தின் மூலம், சி.பி.எஸ்.இ., மற்றும் சர்வதேச பாடத்திட்டம் மீதுள்ள மோகம் குறைந்து விடும். ஜே.இ.இ., - நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கு ஏற்ப, மாணவர்களுக்கு, நாமே பாடத்திட்டம் உருவாக்கலாம். இதன்மூலம், கல்விப்புரட்சி ஏற்பட்டு, இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக மாறும்.இவ்வாறு,அந்த கருத்துருவில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தையும் பகிரலாம்! :
* பள்ளிகளுக்கான தன்னாட்சி குறித்த கருத்துரு மற்றும் பாடத்திட்ட மாற்றம் குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துகளை, 'தினமலர்' வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம். தங்களின் எண்ணங்கள், கருத்துகளை, rlp@dinamalar.in என்ற,'இ - மெயில்' முகவரியில் தெரிவிக்கலாம்.

பாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை 'முதல்வன்' பட ஸ்டைலில் பெட்டி

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கருத்து கேட்க, 'முதல்வன்' பட ஸ்டைலில், கருத்து அறியும் பெட்டி, பள்ளிகளில் வைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 14 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பாடத்திட்டத்தை மாற்ற, அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் மற்றும் இயக்குனராக இளங்கோவன் பதவியேற்றதும், பள்ளிக் கல்வியில் அதிரடி மாற்றங்கள்துவங்கின.
கருத்துக் கேட்பு கூட்டம்
இதன்படி, 'ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பாடத் திட்டம் மாற்றப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி., மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககத்தில், நிபுணர்களிடம்கருத்துகள் பெறப்பட்டன. தொடர்ந்து, நாளை மதுரையிலும், ஆக.,11ல், கோவை; 22ல், சென்னை; 25ல், தஞ்சாவூரில், கருத்துக் கேட்பு கூட்டம்நடக்க உள்ளது.இதைத் தவிர, 'முதல்வன்' திரைப்படத்தில், பொதுமக்களின் கருத்துகளை கேட்க, ஆங்காங்கே புகார் பெட்டி வைப்பது போன்று, தற்போது, பள்ளிகளில், கருத்து அறியும் பெட்டிகள் வைக்கப்பட உள்ளன.
கருத்தறியும் பெட்டி
இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரும், பாடத்திட்ட குழு ஒருங்கிணைப்பாளருமான, கே.அறிவொளிகூறியதாவது:பாடத்திட்ட தயாரிப்பில், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிற்துறையினரிடம் கருத்து கேட்கப்படுகிறது. மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களின் கருத்துகளை கேட்க, இன்று முதல், 11ம் தேதிவரை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கருத்தறியும் பெட்டி வைக்கப்படும். ஆசிரியர்களும், மாணவர்களும், பாடத்திட்டம் தொடர்பாக, தங்களின் கருத்துகளை எழுதி, பெட்டியில் போடலாம்.பெயர்களை குறிப்பிட விரும்பாவிட்டால், பாடத்திட்ட கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம். அவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொகுத்து, முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அனுப்பலாம். மாவட்டம் முழுவதும் சேர்த்த விபரங்கள், வரும் 18ம் தேதிக்குள், மாவட்டங் களிலிருந்து பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ கவுன்சிலிங் எப்போது

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன. இதன்படி 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங்
ஜூலை, 13, 14ம் தேதிகளிலும் மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 5லும் நடந்து முடிந்தது.நிகர்நிலை பல்கலைகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய,85 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.
அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.அதேபோல் இந்தாண்டு 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

3 மாதங்களுக்குள் தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

3 மாதங்களுக்குள் தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் பயிற்சிபெற சிடி வடிவில் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.
அதில், 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் நீட் தேர்வில் விலக்கு கோரும் நிலையில் சிடி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தி இந்து: தலையங்கம்:: புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.
ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும்
கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.
அமைச்சர்களின் உறுதிமொழி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.
ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.
எப்படி வந்தது?
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.
இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே
தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.
எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.
தமிழகத்தால் முடியும்
பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை
 எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.
புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.
விருப்பம் இல்லையா?
மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.
புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.
சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு.

SCERT - 2017 - 2018 பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் "நிர்வாக திறன் வளர் பயிற்சி" - இயக்குனர் செயல்முறைகள்  ....

நீட் தேர்வுக்கு சி.டி வடிவில் கையேடு! செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழக மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராக்கும் வகையில் 54,000 கேள்வி-பதில்கள் அடங்கிய கையேடு, சி.டி. வடிவில் வழங்கப்படும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக, தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. இதற்காக, தமிழக சட்டப்பேரைவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வலியுறுத்திவருகிறார்

தமிழக கல்வித்துறை அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் : அமைச்சர் செங்கோட்டையன்...

மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக சனிக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 
தமிழக கல்வித்துறை அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் என்றார். 
அரசுத் துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரமணாக தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றப்படும் என்றார். 1 - 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு சீருடையும், 6 - 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வேறு வண்ண சீருடையும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கம் மாணவர்களுக்கு வேறு வண்ணத்திலான சீருடை என மூன்று வண்ணங்களில் சீருடைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

வரும் காலங்களில் 2 செட் பள்ளி சீருடைகள் மற்றும் 2 செட் சீருடைகள் வாங்கத் தேவையான பணத்தையும், மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 CBSE பாடத்திட்டத்தறிக்கு இணையாக அடுத்த 3 மாதங்களுக்குள் கல்வி திட்டம் முறையாக மாற்றியமக்கப்படும் என்றார். மேலும் பேசிய அவர் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக 54,000 கேள்விகள் அடங்கிய சி.டி வடிவிலான கையேடு தரப்படும் என்றார். இதில் கேள்வி மற்றும் விடைகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் என்றார். இந்த சி.டி வடிவிலான கையேடு சுமார் 30 மணி நேரம் ஓடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்

பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க உத்தரவிட முடியாது : பொது நல மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.

பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேசிய யோகா கொள்கைகளை வகுத்து நாடு முழுவதும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை அதனை கட்டாய பாடமாக போதிக்க வேண்டும் என கூறி பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யா மற்றும் டெல்லி பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ஜே சி சேத் ஆகியோர் இந்த பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், மாணவர்களின் நலன் காக்கும் விதமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அனைத்து பள்ளிகளுக்கும்  யோகாவை கட்டாயமாக்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகாவால் மாணவர்களின் உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கும். எனவே யோகாவை கட்டாய பாடமாக்க வேண்டும் என வாதிட்டார். வழக்கை விசாரித்த மதன் பீமாரவ் லோகூர் தலைமையிலான அமர்வு, மாணவர்களின் உடல் நலனை காப்பது என்பது அடிப்படை உரிமை. அதனை நீதிமன்றம் மறுக்கவில்லை ஏற்று கொள்கிறது.  ஆனால் இது பற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என கூறினர்.
பள்ளிகளில் என்ன பாடத்தை கற்பி்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என கூறி நீதிபதிகள் பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டனர். இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்கும் எண்ணம் இல்லை என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மருத்துவ கவுன்சிலிங் எப்போது

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன. இதன்படி 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், 
ஜூலை, 13, 14ம் தேதிகளிலும் மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 5லும் நடந்து முடிந்தது.நிகர்நிலை பல்கலைகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய,85 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.
அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.அதேபோல் இந்தாண்டு 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSA - சிறந்த படைப்புக்களை தரும் 40 ஆசிரியர்களுக்கு தலா 10000/- பரிசு - இயக்குனர் செயல்முறைகள்

SR DIGITALIZATION | SPECIMEN BOOKLET