>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

படிக்கும் பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் : செங்கோட்டையன் தகவல்.....

வரும் ஆண்டுகளில் அந்தந்த பள்ளிகளிலேயே அரசுப் பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படுமென அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 
பெரம்பலூரில், அரசு சார்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மாணவ, மாணவியர் எத்தகைய போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் கேள்வி, பதில்கள் அடங்கிய வினா, விடை புத்தகம் தயாரிக்கப்பட்டு தேவையான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை. முயற்சி நின்று போவதும் மரணத்திற்கு சமமானதுதான். எனவே மாணவ, மாணவியர் போட்டி தேர்வுகளுக்கு முயற்சிப்பதை நிறுத்தக்கூடாது. வரும் ஆண்டுகளில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அலைச்சலை குறைக்கும்விதமாக அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு நடத்த ஏதுவாக  தேர்வு மையங்களை அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல தடை : பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு....

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை காலாண்டு தேர்வுக்குமுன் சுற்றுலா அழைத்துச்செல்ல திட்டமிட்டதால் பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றுலாவிற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. 
தமிழகத்தில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச்செல்வது வழக்கம். பள்ளிக் கல்வித்துறை வழிமுறை, அறிவுரை அடிப்படையில் மாணவர்கள் சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர்.
அதன்படி, இந்த கல்வி ஆண்டிற்கு அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுக்கு முன் கல்விச்சுற்றுலா செல்ல திட்டமிட்டன. சில தனியார் பள்ளிகள், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களையும் சுற்றுலா அழைத்துச்செல்ல முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் இந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதால் மாணவர்களை சுற்றுலா அழைத்துச்சென்று நாட்களை வீணடிக்க வேண்டாம் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தனியார் பள்ளிகளில் கல்வித்துறை அனுமதியுடன் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். ஆனால் இந்த கல்வி ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி வீதம் அதிகரிக்க வேண்டும் என்பதால், மாணவர்களின் நலன்கருதி சுற்றுலா அழைத்துச்செல்ல பள்ளிக்கல்வி இயக்குனரகம் வாய்மொழியாக தடை விதித்துள்ளது. 
மேலும் கடந்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களையும் சுற்றுலா அழைத்துச்சென்றனர். ஆனால் இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பும் பொதுத்தேர்வின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் பிளஸ் 1 மாணவர்களுக்கும் சுற்றுலா அழைத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SPECIAL TEACHERS TET : சிறப்பாசிரியர் தேர்வில் அரசாணை மீறல் டி.டி.சி கல்வி தகுதியை புறக்கணிக்கும் டிஆர்பி....

தமிழகத்தில், கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை எண் 185ஐ தமிழக அரசு வெளியிட்டது. இந்த அரசாணையில், ‘நீதிமன்ற  உத்தரவுப்படி போட்டித்தேர்வு மூலம் நிரந்தர சிறப்பாசிரியர் பணியிடம் பள்ளிகளில் நிரப்பப்படும். 
போட்டித்தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடக்கும். இதில்  195 கேள்வி கேட்கப்படும். என்சிசி, என்எஸ்எஸ், வேலைவாய்ப்பு பதிவு உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு 5 மதிப்பெண் வழங்கப்படும்’ என  தெரிவிக்கப்பட்டது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தயாரித்த சிறப்பாசிரியர்களுக்கான பாடத்திட்டம்  வெளியிடப்பட்டது. ஆனால், தேர்வு நடத்தவில்லை. தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டுக்கு பின் நிரந்தர சிறப்பாசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை.  
இதனால், தமிழக பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக  பொறுப்பேற்ற செங்கோட்டையன், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆகிய 4 பாடங்களில் 1,188 பணியிடம், விவசாய பாடத்தில் 25 பணியிடம் என  1,123 பணியிடம் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்றார். இந்த தேர்வு, வரும் ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கிறது.  விண்ணப்பிக்க, காலஅட்டவணை குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. 
2012ம் ஆண்டு வரை நடந்த நிரந்தர சிறப்பாசிரியர் பணி நியமனத்தில், 1985ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 753ன்படி கல்வித்தகுதியாக  10ம் வகுப்பு தேர்ச்சி, அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி, தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு, முன்னுரிமை  இனசுழற்சி ஆகிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது. 
சிறப்பாசிரியர் நியமனத்திற்கு இதே கல்வித்தகுதியை அரசாணை 185ஐ கூறுகிறது. ஆனால், தற்போது டிஆர்பி இணையதளத்தில் சிறப்பாசிரியர் போட்டி  தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ தேர்ச்சி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக, அரசாணை கூறிய கல்வித்தகுதி தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி மற்றும் சிறப்பாசிரியர்கள் அடிப்படையான அரசு தொழில்நுட்ப தேர்வு  தேர்ச்சி குறித்து டிஆர்பி இணையதளத்தில் தெரிவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட இரு முக்கிய கல்வித்தகுதி குறிப்பிடப்படாததால், தேர்வர்கள் கடும்  குழப்பம் அடைந்துள்ளனர். 
தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக டி.டி.சி பயிற்சி நடத்தாமல் உள்ளது. டி.டி.சி கல்வித்தகுதி அவசியம் என்றால், 20 ஆயிரம் பேர்  விண்ணப்பிப்பார்கள். 
டி.டி.சி கல்வித்தகுதி இல்லையென்றால், அதனை முடிக்காத பகுதிநேர ஆசிரியர்கள் உள்பட 1.50 லட்சம் பேர் விண்ணப்பிக்க  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசாணை தொழில்நுட்ப தேர்வு தேர்ச்சி, டி.டி.சி பயிற்சி கல்வித்தகுதி எனக்கூறும் நிலையில், டிஆர்பி கல்வித்தகுதியை வெளியிட்டு தேர்வர்களுக்கு  அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குழப்பமான அறிவிப்பு உள்ளதால் தேர்வர்கள் தேர்வு எழுத முடியுமா? முடியாதா? என்ற அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளிக்கவேண்டும் என  தேர்வர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது.

ஒரு DVD குழந்தைகளுக்கு ஆங்கில பயத்தைப் போக்கி சரியான உச்சரிப்பை சொல்லிக் கொடுக்குமா...? கொடுக்கும்.

ஒரு DVD குழந்தைகளுக்கு ஆங்கில பயத்தைப் போக்கி சரியான உச்சரிப்பை சொல்லிக் கொடுக்குமா...?
கொடுக்கும்.

ஆசிரியர்கள் ஆர்வமாக, எளிதாக 42 நாட்களில் அத்தனை பேரையும் ஆங்கிலம் வாசிக்க வைக்க முடியுமா...?
எளிதில் முடியும்.

முயன்று பாருங்கள். முடிய வில்லையெனில் நாங்கள் ஒரு குழுவாக உதவி செய்ய முன் வருகிறோம்.

ஒரு 5 unit வரையுள்ள சிறிய Promo இது.
Click Here

SPECIAL TEACHERS TET : சிறப்பாசிரியர் தேர்வில் அரசாணை மீறல் டி.டி.சி கல்வி தகுதியை புறக்கணிக்கும் டிஆர்பி..

தமிழகத்தில், கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை எண் 185ஐ தமிழக அரசு வெளியிட்டது. இந்த அரசாணையில், ‘நீதிமன்ற  உத்தரவுப்படி போட்டித்தேர்வு மூலம் நிரந்தர சிறப்பாசிரியர் பணியிடம் பள்ளிகளில் நிரப்பப்படும். 
போட்டித்தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடக்கும். இதில்  195 கேள்வி கேட்கப்படும். என்சிசி, என்எஸ்எஸ், வேலைவாய்ப்பு பதிவு உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு 5 மதிப்பெண் வழங்கப்படும்’ என  தெரிவிக்கப்பட்டது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தயாரித்த சிறப்பாசிரியர்களுக்கான பாடத்திட்டம்  வெளியிடப்பட்டது. ஆனால், தேர்வு நடத்தவில்லை. தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டுக்கு பின் நிரந்தர சிறப்பாசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை.  
இதனால், தமிழக பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக  பொறுப்பேற்ற செங்கோட்டையன், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆகிய 4 பாடங்களில் 1,188 பணியிடம், விவசாய பாடத்தில் 25 பணியிடம் என  1,123 பணியிடம் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்றார். இந்த தேர்வு, வரும் ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கிறது.  விண்ணப்பிக்க, காலஅட்டவணை குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. 
2012ம் ஆண்டு வரை நடந்த நிரந்தர சிறப்பாசிரியர் பணி நியமனத்தில், 1985ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 753ன்படி கல்வித்தகுதியாக  10ம் வகுப்பு தேர்ச்சி, அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி, தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு, முன்னுரிமை  இனசுழற்சி ஆகிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது. 
சிறப்பாசிரியர் நியமனத்திற்கு இதே கல்வித்தகுதியை அரசாணை 185ஐ கூறுகிறது. ஆனால், தற்போது டிஆர்பி இணையதளத்தில் சிறப்பாசிரியர் போட்டி  தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ தேர்ச்சி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக, அரசாணை கூறிய கல்வித்தகுதி தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி மற்றும் சிறப்பாசிரியர்கள் அடிப்படையான அரசு தொழில்நுட்ப தேர்வு  தேர்ச்சி குறித்து டிஆர்பி இணையதளத்தில் தெரிவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட இரு முக்கிய கல்வித்தகுதி குறிப்பிடப்படாததால், தேர்வர்கள் கடும்  குழப்பம் அடைந்துள்ளனர். 
தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக டி.டி.சி பயிற்சி நடத்தாமல் உள்ளது. டி.டி.சி கல்வித்தகுதி அவசியம் என்றால், 20 ஆயிரம் பேர்  விண்ணப்பிப்பார்கள். 
டி.டி.சி கல்வித்தகுதி இல்லையென்றால், அதனை முடிக்காத பகுதிநேர ஆசிரியர்கள் உள்பட 1.50 லட்சம் பேர் விண்ணப்பிக்க  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசாணை தொழில்நுட்ப தேர்வு தேர்ச்சி, டி.டி.சி பயிற்சி கல்வித்தகுதி எனக்கூறும் நிலையில், டிஆர்பி கல்வித்தகுதியை வெளியிட்டு தேர்வர்களுக்கு  அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குழப்பமான அறிவிப்பு உள்ளதால் தேர்வர்கள் தேர்வு எழுத முடியுமா? முடியாதா? என்ற அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளிக்கவேண்டும் என  தேர்வர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது.

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு: 1,953 பணியிடங்களுக்கு 7.50லட்சம் பேர் போட்டி

டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மொத்தம் 1,953 காலி பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் போட்டி போடுகிறார்கள்.
தமிழக அரசின் துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங் கள் டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ தேர்வு மூலமாக நேரடியாக நிரப் பப்படுகின்றன. பட்டப்படிப்பை கல்வித் தகுதியாக கொண்ட இப்பணிக்கு எழுத்துத்தேர்வு அடிப்படையில்தான் பணியாளர் கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு எதுவும் கிடை யாது.இந்த நிலையில், பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள உதவியாளர் பதவி, தலைமைச் செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேர்முக எழுத்தர் பதவி, தலைமைச் செயலகத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவி ஆகியவற்றில் 1,953 காலியிடங் களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி அண்மையில் குருப்-2ஏ-தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இத்தேர்வுக்கு 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.குரூப்-2ஏ எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
அதன்படி, எழுத்துத்தேர்வு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.தேர்வில், பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்வி களுக்கும், பொது ஆங்கிலம் அல்லது பொது தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகளுக்கும் (மொத்தம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்) விடையளிக்க வேண்டும். குரூப்-2ஏ பணிக்கு நேர்முகத்தேர்வு கிடையாது என்பதால் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு பணி உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்டோ- ஜயோ போராட்டத்திற்கு செவிசாய்க்கவில்லையென்றால் காலவரையறையற்ற போராட்டம் !!!

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சென்னையில் இன்று போராட்டம்
புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி சென்னையில் இன்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அமைப்புகள் இணைந்த ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில்
நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் கூறியதாவது:-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(சனிக்கிழமை) சென்னையில் கோட்டை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டோம். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள மாவட்டங்களில் இருந்து பஸ், வேன்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களை போலீசார் மிரட்டுவதாக தகவல் வந்துகொண்டு இருக்கிறது.
எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு அழைத்து பேசவேண்டும். பேசவில்லை என்றால் ஏற்கனவே திட்டமிட்டபடி 22-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும். அதன் பிறகும் கோரிக்கைகள் புறந்தள்ளும் பட்சத்தில் 26 மற்றும் 27-ந் தேதிகளில் மாவட்ட அளவிலான வேலைநிறுத்த மாநாடுகளை நடத்த உள்ளோம். இறுதியாக செப்டம்பர் 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்குவது என்று திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு ஜெ.கணேசன் தெரிவித்தார். பெ.இளங்கோவன் உடன் இருந்தார்...

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ தரத்துக்கு இணையான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: நிபுணர் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் தற்போதுள்ள பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையானதாக மாற்றியமைக்க வேண்டும் என பாடத்திட்ட மேம்பாட்டு நிபுணர் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் மெட்ரிக்பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, கேணிக்கரை செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார்.அவர் தனது மனுவில், நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலில் இருந்தால் நீட் போன்ற அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறுவர் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழகத்தில் அமலில் உள்ள பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், மாற்றி அமைக்கவும், கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருப்பதுபோல தமிழகத்திலும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக பாடத் திட்டத்தை மேம்படுத்த நிபுணர் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அங்கன்வாடி மைய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு....

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 1104 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் 17 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இனசுழற்சி அடிப்படையில் பொது பிரிவினர்,  தாழ்த்தப்பட்டோர்(அருந்ததியர்),  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லீம் தவிர), தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) என தனித்தனியே பிரிக்கப்பட்டுள்ளது.
அதில், முதன்மை அங்கன்வாடி- 544 காலி பணியிடம், குறு அங்கன்வாடி மைய பணியாளர்-77, அங்கன்வாடி மைய உதவியாளர்-483 என மொத்தம் 1104 காலி பணியிடங்கள் உள்ளன. முதன்மை மற்றும் குறு அங்கன்வாடி மைய பணியாளருக்கான தகுதிகள்- 1.7.2017 அன்று 25 வயது முடிந்தும், 35 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்- 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மலைப்பகுதி விண்ணப்பதாரர்கள்- 20 முதல் 40 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் 25 வயது முதல் 38 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி- மலைப்பகுதி விண்ணப்பதாரர்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியும், மற்றவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் காலி பணியிடம் சார்ந்த அதே கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தகுதியான நபர் அக்கிராமத்தில் இல்லாவிட்டால், அதே ஊராட்சியை சேர்ந்த அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிட்ட கிராம ஊராட்சியில் தகுதியான நபர் இல்லாவிட்டால், 10 கி.மீ., தொலைவிற்கு உட்பட்ட அருகில் உள்ள ஊராட்சியை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கலாம். நகர்புறத்தில் அதே வார்டினை சேர்ந்தவராக இருக்க வேண்டும், அல்லாத பட்சத்தில் அருகில் உள்ள வார்டினை சேர்ந்தவரை தேர்வு செய்யலாம். வசிப்பிட ஆதாரத்திற்கு வாக்களர் அடையாள அட்டை, வீட்டுவரி ரசீது, குடும்ப அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும்.    
அங்கன்வாடி உதவியாளருக்கான தகுதிகள்- 20 வயது முடிந்து 40 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர், மலைப்பகுதி விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும். கல்வி தகுதி எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. குடியிருப்பு- அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூறிய அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும். எனவே, விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம். ஆகஸ்ட் 17 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களை அணுகலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

சென்னையை அதிரவைத்த அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில், இன்று சென்னையில் பேரணி நடத்த திட்டமிருந்தனர். இந்தப் பேரணியை ஜாக்டா - ஜியோ  (Joint Action Committee of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) ஒருங்கிணைத்தன.
பேரணிக்கான அனுமதி கோரி, சென்னை மாநகரக் காவல் துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேரணிக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வது, எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்துவதும், இடைப்பட்ட காலத்தில் இடைக்கால நிவாரணமாக 20 சதவிகித ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.சென்னை மன்றோ சிலையிலிருந்து தொடங்கி, தலைமைச்செயலத்தில் முடிவடையும் விதத்தில் பேரணிக்கான அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில், பேரணிக்கு ஏன் அனுமதி மறுக்கக்கூடாது எனக் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு காவல்துறை பதில் அனுப்பியது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளித்தது.
இதையடுத்து, இன்று காலை சென்னை, வாலாஜா சாலையிலுள்ள விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அங்கு தங்கள் கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் குவிந்ததால் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் அதிர்ந்தது.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

பயனுள்ள மருத்துவ நூல்கள்*
*🌐(PDF மின்நூல்கள்)♻*

1. எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள் (PDF)⬇
http://fahim.link/EliyaIyarkaiVaithiyam

2. இயற்கை உணவும் சிகிச்சையும் (PDF)⬇
http://fahim.link/IyarkaiUnavumSikichaiyum

3. புண்கள் ஆற எளிய வைத்தியம் (PDF)⬇
http://fahim.link/PungalAaraEliyaVaithiyam

4. மஞ்சள் – மருத்துவ பயன்கள் (PDF)⬇
http://fahim.link/Manjal-MaruthuvaPayangal

5. உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்! (PDF)⬇
http://fahim.link/UdalEdaiAdhikarikka


6. கீரைகளின் மருத்துவ குணங்கள் (PDF)⬇
http://fahim.link/KeeraihalinMaruthuvaGunangal


7. உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள் (PDF)⬇
http://fahim.link/UdalVeppathaiThanikkum


8. தலைவலி குறைய (PDF)⬇
http://fahim.link/ThalaivaliKuraiya

9. நாட்டுமருந்து பதிவு (PDF)⬇
http://fahim.link/NaattuMarundhu

10. நலம் தரும் வாழை நாட்டுமருந்து (PDF)⬇
http://fahim.link/NalamTharumVaalai


11. நல்ல சோறு - ராஜமுருகன் (PDF)⬇
http://fahim.link/NallaSoru


12. அல்சர் உணவுகள் (PDF)⬇
http://fahim.link/AlsarUnavuhal

13. திரிபலா தரும் நன்மைகள் நாட்டுமருந்து (PDF)⬇
http://fahim.link/ThiripalaTharumNanmaigal

14. தாய் பால் அதிகம் சுரக்க (PDF)⬇
http://fahim.link/ThaaiPaalAdihamSurakka

15. கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க (PDF)⬇
http://fahim.link/KaruvalayangalNeenga


16. கருவளையங்கள் வரக்காரணம் (PDF)⬇
http://fahim.link/KruvalayangalVaraKaranam

17. மூல நோய் (PDF)⬇
http://fahim.link/MoolaNoi


18. கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் (PDF)⬇
http://fahim.link/KarpinihalSaapidaVendiya

19. முடி உதிர்வு முடிவளர  நாட்டுமருந்து  (PDF)⬇
http://fahim.link/MudiUdhirvu-MudiValara


20. படர் தாமரை குணமாக (PDF)⬇
http://fahim.link/PadarThamaraiGunamaha

21. பிரண்டையின் மருத்துவ குணங்கள் ⬇
http://fahim.link/PirandaiyinMaruthuvaGunangal

22. பொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் (PDF)⬇
http://fahim.link/PoduhuThollaiNeenga

🌐🌐💐💐💐💐♻♻

NAS MODEL QUESTIONS & PREVIOUS YEAR QUESTION PAPERS 3 STD

த.அ.உ.ச 2005 - சேலம் விநாயக நிகர்நிலை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மான்யக் குழுவால் அங்கீகாரம் பெற்று இருப்பின் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி உண்டு என மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) தெரிவித்துள்ளார்.

DEE - தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி-இயக்குனர் செயல்முறைகள்....

மாண்புமிகு கல்வி அமைச்சர் மற்றும் மதிப்புமிகு கல்வி செயலாளர் அவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 40,000-கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப் படுத்திடுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்....


சமச்சீர் கல்வியில் 2011-ஆம் ஆண்டில் 6-10  வகுப்பு அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட பாடத்திட்டங்களில் கணினி அறிவியல் பாடமும் ஒன்று.
* ஆனால், இந்த பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட வேகத்திலேயே கைவிட்டதன் விளைவுதான் இன்று அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை சற்றே சரித்துள்ளது.
* CBSE, MATRICULATION போன்ற தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் தரமான கல்வியை பெற்று பயனடையும் விதமாகக் கொண்டுவரப்பட்டதுதான் இந்த 6-10 வகுப்புகளுக்கான கணினி அறிவியல் பாடத்திட்டம்...
* இந்த பாடத்திட்டம் நடைமுறையில் இருந்திருந்தால், இன்று 60,00,000 அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்திருப்பார்கள்.... இதற்காக, ரூ.300 கோடி செலவில் 2011-ல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அந்த பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் குடோனிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
* தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்தே கணினி அறிவியல் பாடம் ஒரு அங்கமாக இடம்பெற்றுள்ளது.  ஆனால், அரசு பள்ளிகளில் கணினி அறிவியலை தேர்வு செய்யும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே கணினியைக் காணும் வாய்ப்பு கிட்டுகிறது.
*முதல்முறையாக கணியைக் கையாளும் அரசு பள்ளி மாணவன் அதன் முழு பயன்பாட்டினை அறியும் முன்னரே பள்ளிப் படிப்பை முடித்து பள்ளியை விட்டு வெளியேறுகிறான். கல்வியின் இந்த தொடர் பாரபட்சம் தமிழகத்தில் மட்டுமே தொடர்கதையாக நீள்கிறது.
*  கல்லூரியில் உயர்கல்வியை தொடரும்போது... கணினி அறிவியல் துறையைத் தவிர்த்து அனைத்து துறைகளிலும் கணினி அறிவியல் ஒரு இன்றியமையாத பாடமாக இடம்பெற்றுள்ளது. கிராமாப்புறங்களிலிருந்து செல்லும் பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களுடன் ஈடுகொடுக்க முடியாமல் அங்கு ஒரு உளவியல் போரே நிகழ்கிறது!!
*கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களுடன் ஒத்துப்போக கடுமையான தாழ்வு மனப்பான்மையை (Extremed Superiority Complex) எதிர்கொள்ளகிறார்கள் என்பது கல்வியாளர்களின் தொடர் குற்றச்சாட்டு. இப்படி சமநிலையற்ற கல்விமுறையால் கல்வியின் வளர்ச்சியில் பின்னடைவே ஏற்படுகிறது.
*அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதலே தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு கணினி அறிவியல் கற்பிக்கும் பட்சத்தில் இந்த நிலை வெகுவாக குறைய வாய்ப்புகள் உருவாகும்.
*கணினிமயமாகிவிட்ட இந்த நவீன யுகத்தில் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. ஆனால், தமிழக அரசின் பெரும்பாலான துறைகளில் இன்று வரையில் கணினி சார்ந்த பணிகளுக்கு எந்தவொரு நிலையான வாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.
* அப்படி, அரசு சார்ந்த வேலைவாய்ப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிந்தும் பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியலையே பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆர்வத்துடன் தேர்வு செய்து படிகின்றனர். தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி இனி வருங்காலங்களில் கணினி அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
*  ஒரு மாணவனுக்கு ஒரு இலவச மடிக்கணினியை வழங்கும் தமிழக அரசு ஒரு பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமனம் செய்து தரமான கல்வியை வழங்கும் பட்சத்தில் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் உயரும் என்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்திலும் கட்டாயத் தேர்ச்சி என்ற அளவிற்கு முன்னோடியாய் திகழ்கிறது.
* இதிலிருந்து ஒரு உண்மை என்னவென்றால், மாணவர்களை இந்த சமுதாயம் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்பதே!! ஏமாற்றம் செய்கிறோம் என்பதைவிட மாணவர்களை நாம் அனுதினமும் தண்டிக்கின்றோம் என்பதே சரியாக இருக்கும். சரியான விழிப்புணர்வு இல்லாத எந்தவொரு நிகழ்வும் தோல்வியில் முடியும் என்பதே நிஜம்.
* மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்குவது முற்றிலும் வரவேற்கத்தகுந்த திட்டமாகும். ஆனால், அந்த கணினிகளை எப்படி இயக்குவது என பாடம் சொல்லிக் கொடுக்க பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்பதே அதிர்ச்சியான உண்மை. இதனால், மாணவர்கள் கணினிகளை ஒரு விளையாட்டு சாதனமாக பயன்படுத்தி வருவதே இன்றைய அவல நிலையாகிவிட்டது.
* இதனால், இலவசமாக கணினிகள் வழங்கியும் மாணவர்களின் கணினி சார்ந்த பயன்பாடு இறங்குமுகமாகவே உள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இனியாவது ஒன்றாம் வகுப்பிலிருந்து கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
*  தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இன்னும் துவங்கப்படவில்லை. அங்கு கணினி அறிவியலை நிறுவி தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடம் கற்பிக்கும் பட்சத்தில் அந்த வட்டாரத்தில் பயிலும் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
* அரசு வேலை கிடைக்கவில்லை என்பதை விட, அரசு பள்ளிகளில் இனிவருங்காலங்களில் கணினி அறிவியல் அழிந்துவிடக்கூடாது என போராடும் ஒரே கூட்டம் பி.எட்., படித்துவிட்டு காத்திருக்கும் கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களே!!
**  பி.எட்., படித்த கணினி அறிவியல் பட்டதாரிகளைப் பற்றி சில வரிகள்...
*  மற்ற துறை ஆசிரியர்கள் நிழலில் படித்து இன்று ஏ.சி.யில் வாழ்கின்றனர்!! ஆனால், கணினி அறிவியல் பட்டதாரிகள் ஏ.சி. அறையில் படித்துவிட்டு இன்று வெயிலில் வதைபடுகிறார்கள்..
*  பி.எட். பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகளில் கூட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்பதே வேதனையான ஒரு உண்மை
* "படிக்கவில்லையே என்ற காலம் போய், இவ்வளவு படித்தும் பயனில்லையே" என்ற கூற்று மற்ற துறை ஆசிரியர்களைக் காட்டிலும் கணினி அறிவியல் படித்த ஆசிரியர்களுக்கே மிகவும் பொருத்தமாக இருக்கும்
* திருமண வயதைத் தாண்டியும் பல ஆசிரியர்கள் இன்னும் திருமணமாகாமலேயே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்... மிகவும் கஷ்டப்பட்டு, கடன்பட்டு கல்லூரி படிப்பை முடித்த பெண் கணினி ஆசிரியைகள் இன்னும் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்து கொண்டுள்ளனர்
*கசாப்புக்கடை முதல்... கரும்பு வெட்டும் தொழிலாளி வரை... கணினி ஆசிரியர்களின் துயரச்சித்திரம் நீண்டு கொண்டேதான் செல்கிறது... எங்களுக்கான நிலையான நீதி என்றுதான் கிடைக்கும்??
*கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு TRB, TET போன்ற போட்டித் தேர்வுகளிலும் கூட எந்தவொரு வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை..
*EMIS Update, Aadar Card Update, Smart-Board Trainer, System Admin -போன்ற பணிகளுக்கு தனியார் ஒப்பந்த ஊழியர்களே நியமிக்கப்படுகிறார்கள். அதில் கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் வழங்கினால் உதவிகரமாக இருக்கும்.
*மாண்புமிகு கல்வி அமைச்சர் மற்றும் மதிப்புமிகு கல்வி செயலாளர் அவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 40,000-கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப் படுத்திடுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம் ..
கு. ராஜ்குமார், MCA., BEd.,
9698339298,
இணையதள ஆசிரியர்,
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
பதிவு எண்®655/2014.

9 முதல் 12ம் வகுப்பு வரை நவோதயா பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக சேர்க்க முடியுமா?: ஐகோர்ட் கிளை கேள்வி...

நவோதயா பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையில், தமிழை ஒரு பாடமாக சேர்க்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயக்குமார் தாமஸ். குமரி மகா சபா செயலாளரான இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்  செய்த மனு: ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, கடந்த 1986ல் ஜவஹர் நவோதயா வித்யாலயா கல்வி முறை நாடு முழுவதும்  அறிமுகமானது. இந்த கல்வி முறை இதுவரை தமிழகத்தில் அமலாகவில்லை. எனவே, மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளை  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் துவக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘தமிழகத்தில் நவோதயா பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மொழி பாடமே இல்லை. எனவே  நவோதயா பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை’ என தெரிவிக்கப்பட்டது. மனுதாரரர் தரப்பில், ‘நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டால், ஒரே மாதிரியான  கல்வி பெற முடியும்’ என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, ‘தேவையான நிலமும், சுமார் 250 மாணவர்களுடன் பள்ளி இயங்கக்கூடிய வகையிலான தற்காலிக கட்டிடமும்  கொடுத்தால் உடனடியாக பள்ளிகள் துவக்க மத்திய அரசு தயாராக உள்ளது. சொந்த கட்டிடம் கட்டியதும் தற்காலிக கட்டிடம் சம்பந்தப்பட்டவர்களிடம்  ஒப்படைக்கப்படும்’ என்றார். 
இதையடுத்து, ‘நவோதயா பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையில் தமிழை ஒரு பாடமாக சேர்க்க முடியுமா என்பது குறித்து மத்திய அரசுடன்  ஆலோசித்து, நவோதயா சமிதி சார்பில் தெரிவிக்க வேண்டும்’ என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆக. 29க்கு தள்ளி வைத்தனர்.