>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

பிளஸ் 1 தேர்வுக்கு மாதிரி வினா தொகுப்பு..

''பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நலனுக்காக, ஓரிரு நாளில் மாதிரி வினாத்தாள் தொகுப்பு வெளியிடப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த, கொளப்பலுாரில் நேற்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:தமிழக மாணவர்கள், பல்வேறு பொதுத் தேர்வை சந்திக்கும் வகையில், 450 மையங்களில், வாரந்தோறும், சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்படும். எந்த தேர்வாக இருந்தாலும், அதை, மாணவர்கள் எளிதாக சந்திக்கும் வகையில், 54 ஆயிரம் வினாக்கள் அடங்கிய தொகுப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், வரைபடங்களுடன் வெளியிடப்படும்.
பிளஸ் 1 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு, இன்னும் ஓரிரு நாட்களுக்குள், மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். எப்படி தேர்வை எழுத வேண்டும் என்பதை, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்

MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்லாது - மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ரவிச்சந்திர பாபு அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து சிபிஎஸ்இ முறையில் படித்த மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்து, தமிழக அரசு பிறப்பித்த இடஒதுக்கீடு அரசாணையை கடந்த 14ம் தேதி நீதிபதி ரவிசந்திர பாபு ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், தமிழக மாணவர்கள் கல்வியில் பின்தங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கும், மேலும் காலம்தாழ்த்தாமல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்துமாறு தமிழக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கின் பின்னணி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதை எதிர்த்து தஞ்சையைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ மாணவர் தர்ணீஷ் குமார் சார்பில் அவரது தாயார் சி.கயல்விழி உள்பட 10-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து... இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததோடு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் புதிய தகுதிப் பட்டியல் வெளியிட்டு, அதன்படி கலந்தாய்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில்... இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவில், மாணவர் சேர்க்கை தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றமும் இவற்றை உறுதி செய்துள்ளது. அதன் அடிப்படையில், நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இயற்றப்பட்ட சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
95 சதவீத மாணவர்களின் நலன் காக்க... தமிழகத்தில் உள்ள 6,877 பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 95 சதவீத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது என்பதை தனி நீதிபதி கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அதே போன்று, நீட் தேர்வு வினாக்களை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் தயாரித்துள்ளது.
பாரபட்ச முறையில் நீட் தேர்வு: தேர்வில் 50 சதவீத கேள்விகள் மட்டுமே மாநில பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன. இது, மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை விட மத்திய இடை நிலை கல்வி வாரியத்தில் பயின்ற மாணவர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
வேறு வழியில்லாததால்... எனவே, வேறுபட்ட கல்வி வாரியங்களில் பயின்ற மாணவர்களிடையேயான வித்தியாசத்தைச் சீர்செய்ய, ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களால் மாநில பாடத்திட்டம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் பயின்ற மாணவர்களைச் சமமாகக் கருத முடியாது. ஆகவே, அனைத்துத் தரப்பு வாரிய மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவதை உறுதிப்படுத்த, தமிழ்நாடு தொழில்முறை கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைச் சட்டத்தை இது வரை அரசு பின்பற்றி வருகிறது.
எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீடு மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

விரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்': அமைச்சர் அறிவிப்பு!

ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க-வின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் எனப் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் , "தற்போது தமிழகத்தில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் 11-ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், வரும் திங்கள் கிழமையன்று மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். இதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இன்னும் மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றப்படும். அதற்கான ஆசிரியர் குழு விரைவில் அமைக்கப்படும்" என்றார்.

BT TO PGT PROMOTION PANEL - 2nd Phase Published.

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டாம் கட்டமாக முதுகலையாசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...

DEE -தொடக்கக்கல்வி -02.08.2017 செயலர் அவர்களுடன் DEEO/AEEO களுக்கு காணொலி காட்சி நடைபெற உள்ளது...

முதுகலைஆசிரியர் பதவியுயர்வு-2ம் பட்டியல்- சேர்க்கை, நீக்கம், திருத்தம் இருப்பின் 02.08.2017க்குள் முறையீடு செய்ய பள்ளிகல்வி இணை இயக்குனர் (மே.நி.க.). உத்தரவு !!

தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 200 எளிய ஆங்கில வார்த்தைச் சொற்கள் கலைக்கப்பட்டு அதனை சரியான முறையில் எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 200 வார்த்தைகளுக்கான சரியான தமிழ் அர்த்தமும் அதன் எதிரே விடைக்குறிப்பாக கொடுக்கப் பட்டுள்ளது.



சுகாதாரம் முதல் இணையவழிக் கற்றல் வரை அரசுப் பள்ளி சாதனை!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை காலக்கெடு: மத்திய அரசு..

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு நீட்டித்துள்ளது.

ஆதார் எண்ணை இணைத்த பிறகே வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், வருமான வரித் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் எண் வைத்திருக்கும் ஏராளமானோர், இதுவரை ஆதார் எண்ணை இணைக்காததால், கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது....

August diary

*3 RL Aadi18*
*4 RL varalakshmi viratham*
*5 Grievance day*

*AUG 5 Jactto-Jeo chennai protest*
*07 RL Rig upakarma*
*08 RL Gayathri jebam*
*12 primary CRC*
*14 Krishna jayanthi*
*15 Independence day*
*22 Jactto geo one day strike*
*25 Vinayagar chathurthi*

Gramiya Kalai Vizha conducted for school students


To highlight the importance of our rich tradition and culture, Gramiya Kalai Vizha, where students performed puppet show, villupattu, parayattom and silambattam, was held at Railway Colony Municipal Higher Secondary School in Kollampalayam here. School headmistress N. Thenmozhi said that 150 students were given training for one week in traditional folk songs and storytelling. Another highlight of the Vizha was the villupattu by D. Thomas Antony, a secondary grade teacher at Panchayat Union Middle School at Nadagoundampalayam village, along with four children from Class 6 and 7.
The song focused on pollution in water bodies by industries and people and called for water conservation. Mr. Thomas Antony said that his songs focused on women’s role in development of society and the nation, ill-effects of plastics and topics that focused on self-development.
Teachers said that this was a chance for students not only to express their inner talents, but also help other students know our tradition.

RMSA - ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி...

BT TO PGT PROMOTION PANEL - 2nd Phase Published.

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டாம் கட்டமாக முதுகலையாசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...

திங்கள், 31 ஜூலை, 2017

தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 200 எளிய ஆங்கில வார்த்தைச் சொற்கள் கலைக்கப்பட்டு அதனை சரியான முறையில் எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 200 வார்த்தைகளுக்கான சரியான தமிழ் அர்த்தமும் அதன் எதிரே விடைக்குறிப்பாக கொடுக்கப் பட்டுள்ளது...



ஞாயிறு, 30 ஜூலை, 2017

Flash News: High school HM Promotion Regarding Chennai High Court Judgment Copy.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தால் தற்போது விடுக்கப்பட்டுள்ள ஆணை.

Click here - High school HM Promotion Regarding Chennai High Court Judgment Copy...

எழுத்து தேர்வில் அசத்தியவர்கள் உடற்தகுதி தேர்வில் 'அவுட்'

போலீஸ், இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற, இன்ஜினியரிங் பட்டதாரிகள், உடற்தகுதி தேர்வில், வெற்றி பெற முடியாமல், பரிதாபமாக அவுட்டாகி வெளியேறி உள்ளனர்.6.32 லட்சம் பேர்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, போலீஸ், சிறைத் துறை, தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள, 15 ஆயிரத்து, 711, இரண்டாம் நிலை காவலர்கள், காலி பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வுக்கு, ஜன., 23ல் அறிவிப்பு வெளியானது.

தேர்வுக்கு, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; மே, 21ல் நடந்த எழுத்து தேர்வில், 4.82 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு, ஜூலை, 7ல், இணையதளத்தில் வெளியானது.
வெற்றி பெற்றவர்களில், 18 சதவீதத்தினர், அதாவது, 16 ஆயிரத்து 185 பேர், இன்ஜினியரிங் பட்டதாரிகள்; 20 சதவீதத்தினர், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள்.
வெற்றி பெற்ற, 90 ஆயிரத்து, 185 பேருக்கு, உடல் தகுதித் தேர்வுகளுக்கான அழைப்பு அனுப்பப்பட்டது; ஜூலை, 27ல், 
உடல் தகுதி தேர்வுதுவங்கியது.
கடந்த மூன்று நாட்கள் நடந்த உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்ட, இன்ஜினியரிங் பட்டதாரிகளில், பெரும்பாலானோர், தோல்வியை சந்தித்து வெளியேறி உள்ளனர்.
தேர்வு பணியில் ஈடுபட்டு வரும், டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது:முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது, எழுத்துத் தேர்வில், இன்ஜினியரிங் பட்டதாரிகள், முதுகலை, இளங்கலை பட்டதாரிகள், அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், அவர்களால், உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.
3 சதவீதத்தினர் தேர்ச்சிஉடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டஇன்ஜினியரிங் பட்டதாரிகளில், 3 சதவீதத்தினர் 
மட்டுமே தேர்ச்சிபெற்றனர்.அடுத்த சில நாட்களில் நடைபெற உள்ள கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், 400 மீ., ஓட்டத்திலும், வெற்றி பெற்றால் மட்டுமே, அவர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது.
கடந்த மூன்று நாட்கள் நடந்த தேர்வில், பிளஸ் 2, விளையாட்டு வீரர்கள், ஐ.டி.ஐ.,யில் தேர்ச்சி பெற்றவர்கள் தான், அதிக அளவில் தேர்ச்சி பெற்று
உள்ளனர்.குறிப்பாக, நகர்ப்புற மாணவர்களை விட, கிராமப் புற மாணவர்கள் தான், அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கூறினார்.

ஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால் சர்ச்சை...

தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர் இடமாறுதலில் முறைகேடு புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் சமீபத்தில் 150 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டன.
இப்பள்ளிகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் கலந்தாய்வு முறையில் பணி மாறுதல் செய்யப்பட வேண்டும். ஆனால், கலந்தாய்வு அறிவிக்கப் படாமலேயே மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 3 லட்ச ரூபாய் முதல் 8 லட்ச ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் நேர்மையானவர். அவருக்கு தெரியாமல் ஒரே நாளில் பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். வெளிப்படையான கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்க வேண்டும்' என்றார்

மின்சாரத்திலிருந்தும் உணவு தயாரிக்கலாம்...விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

பின்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மின்சாரம் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடை பயன்படுத்தி புரோட்டின் கலந்த உணவைத் தயாரித்துள்ளது.

'அரிசியை வாட்ஸாப்பில் டவுன்லோட் செய்து கொள்ள முடியுமா?', 'உணவை இயந்திரத்தால் உற்பத்தி செய்து கொடுக்க முடியுமா' என்ற வாசகங்கள் விவசாயத்தின் அருமையை சொல்லிப் பெருமைப்பட வைத்தன. ஆனால், இப்போது அதையெல்லாம் உடைக்கும் விதமாகச் செயற்கையான முறையில் உண்ணும் உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பின்லாந்திலுள்ள ஆராய்ச்சிக் குழு நிகழ்த்திக் காட்டியுள்ளது. மின்சாரம் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடை உபயோகப்படுத்தி உணவைத் தயார் செய்திருக்கிறார்கள். மறுசுழற்சிக்கான ஆற்றலாக இருக்கும் சோலாரை உபயோகப்படுத்தி உணவில் புரோட்டீனை உற்பத்தி செய்து கொள்ளலாம்.
தயார் செய்யப்பட்ட உணவானது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கொடுக்கக் கூடிய வகையில் தயாராவது இதன் ஸ்பெஷல். முடிவாகக் கிடைத்த உணவில் 50 சதவிகிதம் புரோட்டீன், 25 சதவிகிதம் கார்போஹைட்ரேட் என சத்துக்களைக் கொண்டதாக உற்பத்தி செய்துள்ளது. இதற்கான மூலப்பொருட்கள் எல்லாம் காற்றில் இருந்து பெறப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்த உணவானது ஒரு மாற்று உணவாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த உணவைத் தயாரிக்கும் பணியில் பின்லாந்தின் வி.டீ.டி மற்றும் எல்.யூ.டி யுனிவர்சிட்டி ஆகியவை இணைந்து பணியாற்றுகிறது. உணவானது பூமியில் உற்பத்தி செய்யாவிட்டால் சுற்றுச்சூழல் சீர்குலைந்து விடும் என்பதும் அதே அறிவியலாளர்களின் கருத்துதான். இதில் எந்தக் கருத்து வெல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இ.சி.இ துறையை விரும்பும் பொறியியல் மாணவர்கள்..!

பொறியியல் படிப்புக்கான ஏழாவது நாள் கலந்தாய்வின் முடிவில் 31,030 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியநிலையில் இன்று ஏழாவது நாள் கலந்தாய்வு நடைபெற்றது. ஏழாவது நாள் கலந்தாய்வில் 7,261 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதில் 2,390 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை.
இதுவரையில் 31,030 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகமாக இ.சி.இ துறை மற்றும் மெக்கானிக்கல் துறையில் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவருகின்றனர். இதுவரையில் இ.சி.இயில் 6,631 பேருக்கும் மெக்கானிக்கலில் 5,191 பேருக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரையிலான ஏழு நாள்கள் கலந்தாவில் 27 % பேர் கலந்து கொள்ளவில்லை. அதனால், கடந்த வருடத்தைவிட இந்த ஆண்டு அதிக இடங்கள் காலியாக இருக்கும் என்று கல்வியலாளர்கள் கருதுகின்றனர்.

31ம் தேதி உங்களுக்கு ஒரு நியூஸ் வச்சிருக்கேன்.. மாணவர்களுக்கு செங்கோட்டையன் தகவல்!


திருவண்ணாமலை: மாணவர்களின் தேர்வு அச்சத்தை போக்கும் வகையில் வரும் 31ஆம் தேதி புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் இன்று தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக திருவண்ணாமலைக்கு இன்று வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு ஏற்படுத்தி தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில், வரும் 31ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது என்றார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களையும், சீர்திருத்தங்களையும் அறிவித்து வருகிறார். சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
வரும் 31 தேதி வெளியிடப்படவுள்ள தேர்வு குறித்த அறிவிப்பை மாணவர்களும், ஆசிரியர்களும் பெற்றோர்களும் இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.