சனி, 8 ஜூலை, 2017
HOW TO APPLY RATION "SMART CARD" ONLINE
"தமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி..?"
இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனை அரசு அலுகலகங்கள் சென்று நமக்குத் தேவையான குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டைப் போன்றவற்றைப் பெறுவது என்று கூறலாம். உங்களுக்கு இணையதளம் மூலமாகத் தமிழகத்தில் எப்படி எளிதாக வீட்டில் இருந்தபடியே குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது என்று இஙு விளக்கமாக அளிக்கின்றது. இதனைப் படித்துப் பயன்பெறுங்கள்.
2016-ம் ஆண்டுத் தீபாவளி முதல் தமிழக அரசு இணையதளம் மூலம் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க www.tnpds.gov.in இணையளத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த இணையதளம் மூலமாக எப்போதும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியது. இணையதளம் மூலம் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மட்டுமே புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். அது எப்போது என்று செய்திகள் மூலம் அறிந்து கொண்டு பதிவு செய்வது நல்லது.
படி 1 www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க என்ற தெரிவை தேர்வு செய்யவேண்டும். பூர்த்திச் செய்யப்படக் கட்டாயமானவை * குறிக்கப்பட்ட அனைத்துப் புலங்களும் விண்ணப்பதாரரால் பூர்த்திச் செய்யப்படவேண்டியது கட்டாயமாகும். புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள "இப்போது விண்ணப்பிக்க" பொத்தானை கிளிக் செய்யவும்.
குடும்ப விவரங்கள் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி (கதவு எண், வீடு / அப்பார்ட்மெண்ட் பெயர் , தெரு பெயர் ) தமிழ் (அ ) ஆங்கிலத்தில் உள்ளிடவும். மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை அதனதன் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும். உறுப்பினரை எப்படிச் சேர்பது குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, "உறுப்பினரைச் சேர்க்க" பொத்தானை அழுத்தவும் . .
முதலில் குடும்பத் தலைவரின் விவரங்களை உள்ளீடு செய்யவும். குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் பின்வரும் விவரங்களை உள்ளிடவும் பெயர் தமிழ் (அ ) ஆங்கிலத்தில் - கட்டாயம் பிறந்த தேதி - கட்டாயம் பாலினம் - கட்டாயம் தேசிய இனம் - கட்டாயம் உறவுமுறை - கட்டாயம் தொழில் - கட்டாயமற்றது மாத வருமானம் - கட்டாயம் வாக்காளர் அட்டை எண் - கட்டாயமற்றது ஆதார் எண் - கட்டாயம் குடும்ப அட்டை வகை குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்யவும் பொருட்களில்லா அட்டை, அரிசி அட்டை , சர்க்கரை அட்டை, காவல்துறை அட்டை. குடியிருப்புச் சான்று குடியிருப்புச் சான்றை பதிவேற்ற, குடியிருப்புச் சான்று பிரிவில் உள்ள ப்ரவ்ஸ் பொத்தானை அழுத்தவும். பின் கணினியில் தகுந்த கோப்பை தேர்ந்தெடுத்து, பதிவேற்றுப் பொத்தானை அழுத்தவும் . குடியிருப்புச் சான்றுக்கான ஆவணத்தைத் தேர்வு செய்யவும் (மின்சாரக் கட்டணம், தொலைப்பேசி கட்டணம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை, இதர.,).
பதிவேற்றும் படிவங்கள் இருக்க வேண்டிய வடிவம் பதிவேற்றம் செய்யும் குடியிருப்புச் சான்று png, gif, jpeg வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஆவணத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும். எரிவாயு இணைப்பு விவரங்கள் ஏற்கனவே எரிவாயு இணைப்புப் பெறப்பட்டிருந்தால், சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும். எரிவாயு இணைப்பு பற்றிய கீழ்க்கண்ட விவரங்களை அளிக்கவும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களும் இணைப்பு 1 பிரிவில் பூர்த்திச் செய்வது கட்டாயமாகும்.
1. எரிவாயு இணைப்புக்குரிய நபரின் பெயரைத் தேர்வு செய்யவும்
2. எண்ணெய் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்
3. எல்.பி.ஜி நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்
4. எரிவாயு நிறுவனத்தின் பெயரை உள்ளிடவும்
5. சிலிண்டர் எண்ணிக்கை தேர்வு செய்யவும்
குறிப்பு: குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கும் நபரிடம் இரண்டு எரிவாயு இணைப்பு இருந்தால், அந்த விவரங்களை இணைப்பு 2 பிரிவில்; உள்ளிடவும். உள்ளிட்ட விவரங்களை ஒப்புக்கொள்ள, உறுதிப்படுத்தல் பகுதியில் உள்ள சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள பதிவு செய் பொத்தானை கிளிக் செய்யவும். விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களுக்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும்.
இந்த எண் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியப் பயன்படுத்தப்படும் மேலும் எதிர்காலப் பயன்பாட்டிற்கும் உதவும். ஆதார் அட்டை இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணைய (UIDAI) இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த ஆதாரை பொது விநியோகத் திட்ட (PDS) பயன்பாட்டில் பதிவேற்றம் செய்தால் அந்தக் கோப்பின் பெயர் ஆதார் அட்டையில் உள்ள முகவரியின் அஞ்சல் குறியீடாக இருக்க வேண்டும். விண்ணப்பத்தின் நிலையை எப்படிச் சரிபார்ப்பது இந்த இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலையை உங்களுக்குக் கிடைத்த குறிப்பு எண்ணை உள்ளிட்ட சரி பார்க்கலாம்.
வைரலாகி வரும் 2-ம் வகுப்பு படிக்கும் பெரியமருது எழுதும் அழகுத் தமிழ் வீடியோ! #GovtSchoolStudent
"அரசுப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு தன்னலமற்று உழைக்கும் ஒவ்வொருவரும் பாராட்டுக்கு உரியவர்கள். தொடரட்டும் அவர்களின் பணி"
‘என் மகன் எட்டாம் வகுப்புப் படிக்கிறான். ஆனால், தமிழ் படிக்கவோ எழுதவோ தெரியல' இப்படிக் கூறும் பெற்றோரைச் நாம் பார்த்திருப்போம். எட்டு வருடங்கள் படித்தும் தாய்மொழியான தமிழில் படிக்கவும் எழுதவும் முடியவில்லை என்பது நம்மை ஆச்சர்யப்படுத்துவதான் இல்லையா? சமீபத்தில், அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் பெரியமருதுவின் எழுதும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது. அந்த வீடியோவைப் பார்க்கும்போது ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஒருசேர நம்மைச் சூழந்துகொள்கின்றன. அந்த வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள ஆர்வமா? பள்ளி நோட்புக்கில் மூன்று கேள்விகள் எழுதப்பட்டிருந்தன.
1. பசு எங்கு மேய்ந்தது?
2. கன்றுக்குட்டி என்னவெல்லாம் செய்தது?
3. பசு, கன்றுக்குட்டியிடம் எவ்வாறு அன்பு காட்டியது?
https://www.youtube.com/feature=player_embedded#t=0
இவைதாம் அந்தக் கேள்விகள். இதற்கான பதிலை, ஓர் இடத்திலும் தவறு இல்லாமல் எழுதுகிறார் இரண்டாம் வகுப்புப் படிக்கும் பெரியமருது. அதுவும் வார்த்தைகளை ராகம்போட்டுக்கொண்டு படிப்பது கொள்ளை அழகு. எந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர் எனத் தேடினோம்.
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், பாதிரி எனும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் மாணவர்தான் அவர். அப்பள்ளியின் ஆசிரியர் கணபதியிடம் பேசினோம்.
கணபதி“பெரியமருது மட்டுமல்ல, எங்கள் பள்ளியின் ஒன்றாம், இரண்டாம் வகுப்புப் படிக்கும் அனைத்து மாணவர்களும் தெளிவாகப் படிக்கவும் எழுதவும் செய்வார்கள். இத்தனைக்கும் அவர்கள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி எல்லாம் படித்தவர்கள் அல்ல. நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்கள்தாம். இதற்குக் காரணம், இருவர்தாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒலக்கூர் ஒன்றிய மையத்தில் நடைபெற்ற வகுப்பில், சென்னையைச் சேர்ந்த ஆசிரியை கனகலெட்சுமி என்பவர் புதிய முறையில் தமிழைக் கற்பிக்கப் பயிற்சி அளித்தார்.
‘தொல்காப்பியரின் சொற்பிப்பு’ என்று அதற்கான பெயரைக் கூறினார். அவர்தான் இந்த வெற்றிக்கு முதல் காரணம். அடுத்தது, அந்தப் பயிற்சியை வகுப்பில் நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்கள். நீங்கள் பார்த்த பெரியமருதுவின் ஆசிரியர் கிறைஷ்டியன் நிஷா. அவர், வகுப்பு மாணவர்கள் அனைவருக்குமே சிறப்பான பயிற்சி அளித்துவருகிறார். வழக்கமாகக் கற்பிப்பதை விட, தொல்காப்பியரின் சொற்பிப்பு முறை எளிமையானதாக இருக்கிறது. மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதியவும் உதவுகிறது" என்கிறார் கணபதி.
'தொல்காப்பியரின் சொற்பிப்பு' முறை என்றால் என்னவென்ற கேள்வி எழுந்ததும் பயிற்சி அளித்த ஆசிரியை கனகலெட்சுமியிடமே கேட்டோம். இவர் சென்னை, ஷெனாய் நகரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறார்.
“தமிழைத் தமிழாகக் கற்பிப்பதுதான் தொல்காப்பியரின் சொற்பிப்பு முறை. உதாரணமாக, 'அ' எனும் எழுத்தை எழுதவதற்கு கனக லெட்சுமிமாணவர்களிடம் இப்படிக் கூற வேண்டும். முதலில், சுழியை எழுதிகொள்ளுங்கள். பின் கீழ்ப் பிறை, அடுத்து, படுக்கைக் கீற்று, இறுதியாக மேலிருந்து இறங்கும் கீற்று எழுதினால் 'அ' எழுதிவிடலாம். இப்படிச் சொன்னால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் புரியுமா என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வி. முட்டைப் போடு, பக்கத்துல கோடு போடு, குறுக்குக் கோடு போடு என்றால் பிள்ளைகளுக்குப் புரியும் என்றால் அவற்றையே திருத்தமாகச் சொன்னாலும் புரியும். இதை ஒரு தொடர்ப்பயிற்சியாகச் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளதால் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன். சின்ன வயது பிள்ளைகளுக்கு மூளை வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அந்தக் காலக்கட்டத்தில், இந்த முறை பயிற்சி நிச்சயம் பலன் அளிக்கும். அதற்கு நல்ல உதாரணம் பெரிய மருது எழுதியதைப் பார்க்கிறீர்கள்.
பதினேழு ஆண்டுகளுக்கு முன் பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஒரு கையேடு தந்திருந்தார்கள். அதில் கொடுக்கப்பட்டிருந்த பயிற்சி முறைதான் இது. (நன்னூல் விருச்சிகத்தில் இது உள்ளது.) அந்தப் பயிற்சியை இன்னும் எளிமையாக்கி, மாணவர்களிடையே கொண்டுசேர்க்கிறேன். ஒலக்கூர் ஒன்றியத்தைத் தேர்ந்தெடுத்து, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்ததன் பலன் இப்போது நன்றாகத் தெரிகிறது. தொடக்க வகுப்புகளிலேயே மொழியைச் சரியாகக் கற்றுக்கொடுத்துவிட்டால் அது அவர்களின் வாழ்நாள் முழுக்க உதவும்." எனக் கூறும் கனகலெட்சுமியின் குரல்களில் வழிகிறது நம்பிக்கை.
"அரசுப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு தன்னலமற்று உழைக்கும் ஒவ்வொருவரும் பாராட்டுக்கு உரியவர்கள். தொடரட்டும் அவர்களின் பணி"..
TET மூலம் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள்
ARGTA STATE NEWS
இன்று நமது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் அய்யா,
பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் அய்யா,தொடக்கக் கல்வித் துறையின் இயக்குநர் அய்யா, SSA இணை இயக்குநர் அய்யா,DSE இணை இயக்குநர் (ப.தொ) அய்யா ஆகியோர்களுடன் CONVERSION & GENERAL COUNSELING நடத்துவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது
இதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்ட தகவல்கள்
✅ TRB மூலம் சமீபத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 1114 TET இல் இருந்து DSE க்கு TRB மூலம் ஒதுக்கப்படும் எண்ணிக்கைக்கு ஏற்ப்ப CONVERSION (WILLING) நடத்தப்படும்.இவை இன்னும் 3 தினங்களுக்குள் தெரியவரும்
✅ அரசு விதிமுறைகளை பின்பற்றி பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்டும்
✅ புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியமர்த்தப்படுவார்கள்
✅ இவை அனைத்தும் நடைபெறும் நாள் ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும்
✅ *புதியதாக தரம் உயர்த்தப்படும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான அரசாணை வெளியிப்பட்டதும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்
நமது கோரிக்கையை ஏற்று மிக மிக விரைவில் அனைத்தும் நடைபெறும் என உறுதி அளித்த மதிப்பிற்குரிய SSA SPD, DSE DIRECTOR, DEE DIRECTOR, SSA JD,DSE JD (P) அனைவருக்கும் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் (ARGTA FOR BRTEs) நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
அடுத்து CONVERSION &COUNSELING தொடர்பாக ARGTA தகவல் வெளியிடும் வரை சிலர் பரப்பும் வதந்திகளை நம்பவேண்டாம்
இவண் ARGTA வின் அனைத்து மாநில ,மாவட்ட,வட்டார நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக
மா.இராஜ்குமார், மாநிலத் தலைவர்.
தா.வாசுதேவன், மாநில பொதுச் செயலாளர்,
மு.நவநீதக்கிருஷ்ணன்
மாநில பொருளாளர் ....
ரூபி டீச்சர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ரூபி டீச்சர்
ரூபி டீச்சர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அட்டகாசமான கணக்கு ஆசிரியை. ஏதேனும் பள்ளிகளுக்குச் செல்லும் போது அவரது சில யூடியூப் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டு செல்வதுண்டு. பெருக்கல் வாய்ப்பாட்டிலிருந்து வகைக்கணிதம் தொகைக்கணிதம் வரைக்கும் எல்லாவற்றையும் ஏதேனும் வித்தையை வைத்துச் சொல்லிக் கொடுத்து அதை சலனப்படங்களாக்கி யூடியூப்பிலும் பதிவு செய்து வைத்திருக்கிறார். இவற்றிலிருந்து கற்றுக் கொண்டு பள்ளிக்கூடங்களில் பேசினால் ‘இவன் மண்டைக்கு இதெல்லாம் தெரியுமா?’ என்று யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் பாடம் எடுக்கும் எந்தக் கணக்கு ஆசிரியராக இருந்தாலும் ரூபி டீச்சரின் சலனப்படங்களைத் தாராளமாகக் கொடுக்கலாம். அப்படித்தான் கொடுத்து வருகிறேன்.
Big Short Films காரர்கள் அவர் குறித்தான சிறு ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பாக அமர் ரமேஷ் தொடர்பு கொண்டார். அவர் வழியாக ஆவணப்படங்களின் இயக்குநர் மாவீரன் பழக்கமானார். பெயரே மாவீரன்தான். திருத்துறைப் பூண்டியைச் சார்ந்தவர். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வெளியுலகில் அதிகம் அறிமுகமாகாத ஆனால் இந்தச் சமூகத்திற்காக ஏதாவதொரு வகையில் செயல்படுகிறவர்களைப் பற்றிய ஆவணப்படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள்.
இதில் வருமானம் எதுவுமில்லை. ஆனால் அவர்களின் Super cop, விதைப்பந்து போன்ற படங்கள் வெகு கவனம் பெற்றவை. லட்சக்கணக்கானவர்கள் பார்த்து பகிர்ந்திருக்கிறார்கள். நமக்கும் கூட வாட்ஸப்பில் வந்திருக்கும். ஆனால் இவர்கள்தான் தயாரித்திருக்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்க மாட்டோம். நேரமிருக்கும் போது அவர்கள் எடுத்திருக்கும் படங்களைப் பார்க்கலாம். அதிகபட்சம் மூன்று நிமிடங்கள்தான்.
இன்று ரூபி டீச்சர் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. ரூபி டீச்சர் unsung heroine. பாடப்படாத நாயகி. அவரைப் பற்றிய சுவாரஸியமான தகவல் ஒன்று உண்டு. சில மாதங்களுக்கு முன்பாக ஏதோவொரு கல்வித்துறை சார்ந்த கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றிருக்கிறது. பன்னாட்டு ஆசிரியர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் தென்கிழக்காசிய நாட்டின் ஆசிரியர்கள் ‘நாங்களே உங்க ஊர் டீச்சரோட வீடியோ பார்த்துத்தான் சில டெக்னிக் எல்லாம் பழகுகிறோம்’ என்றார்களாம். அதன் பிறகுதான் நம்மவர்களுக்கு அவரைப் பற்றித் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
ரூபி டீச்சர் குறித்து இன்னமும் பரவலாகத் தெரிய வேண்டும். அவர் கண்டறிந்திருக்கும் நுட்பங்களைப் போலவே ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு பாடத்திலும் நுட்பங்களைக் கண்டறிய வேண்டும். அதற்கான உத்வேகத்தை ரூபி டீச்சர் அளிக்கிறார். அநேகமாக இந்த ஆவணப்படம் அவரைப் பற்றிய தேடலை அதிகமாக்கிவிடக் கூடும் என்றுதான் நினைக்கிறேன்.
சிறந்த ஆசிரியர்களின் பலமே தனக்கான அசல் தன்மையும், தனித்துவமும்தான். அசலும் தனித்தன்மையும் ஒரு நாளில் வந்துவிடுவதில்லை. அர்பணிப்புணர்வோடு புதிய புதிய தேடல்களோடு நெடுங்காலம் உழைப்பதன் வழியாகத்தான் தமக்கான தனித்த கற்பித்தல் முறையைக் கண்டறிகிறார்கள். அந்த தனித்துவமான கற்பித்தல் முறையே ஆசிரியர்களை மாணவர்களுடன் பிணைக்கிறது. ரூபி டீச்சரின் நுட்பங்கள் ஒரே நாளில் வசமாகாதவை என்று உறுதியாகச் சொல்ல முடியும். இந்த நுட்பங்களைக் கண்டறிய எத்தனை ஆண்டுகாலம் உழைத்திருப்பார் என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளலாம். அசாத்தியமான உழைப்பு.
தமது உழைப்பின் வழியாகத் தான் கண்டடைந்தவற்றை சலனப்படங்களாக எடுத்து தயக்கமேயில்லாமல் உலகிற்குக் கொடுக்கிறார். 'நீங்களும் தெரிஞ்சுக்குங்க’ என்கிற மனநிலை அது. இதுதான் அவர் மீதான மரியாதையை பன்மடங்காக்குகிறது. கல்வித்துறைக்கு இத்தகைய ஆசிரியர்கள்தான் முன்னுதாரணம். முன்னே செல்லும் ஏர்கள். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான இளக்காரமான பார்வையை ரூபி டீச்சர் மாதிரியானவர்கள்தான் அடித்து நொறுக்கிறார்கள்.
மனம் நிறைகிறது. சல்யூட் டீச்சர்.
ரூபி டீச்சரை ஆவணப்படமாக்கிய குழுவினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
- வா.மணிகண்டன்
https://youtu.be/b_4AYcIsn5s...
தவறுகளை சுட்டிக்காட்டினால் போராட்டம் அறிவிப்பதா? ஆசிரியர் சங்கங்களுக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை....
மாணவர்களுக்கு தரமான கல்வியைத் தராத ஆசிரியர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் போராட்டம் நடத்த திட்டமிடுவதா என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், அப்படி போராட்டம் நடத்த அறிவித்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து, அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பள்ளி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரைணக்கு வந்தபோது, மாணவர்களின் கல்வித் தரம் உயர அரசிடம் இந்த நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியது.
நீதிபதி அளித்த உத்தரவில், “ கடந்த 2012 ஜூலை 17ம் தேதி அரசு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில் எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று அரசு ஏன் கட்டாய உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பது உள்ளிட்ட 20 கேள்விகளுக்கு ஜூலை 14ம் ேததிக்குள் அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் படித்த 9ம் வகுப்பு மாணவர்கள் 42 பேர் தோல்வி அடைந்ததை எதிர்த்தும், அந்த மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மாணவர்களின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பள்ளிக்கே ஒழுங்காக செல்வதில்லை. இதுகுறித்து எனக்கு 1500க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன. பள்ளி நாட்களான 165 நாட்களில் 65 நாட்கள் மட்டுமே ஒரு ஆசிரியர் பள்ளிக்குச் சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. இப்படி பள்ளிக்குச் சென்றால் அவர்களால் எப்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியுமா? சம்பளம் மட்டும் அதிகம் வாங்குகிறார்கள். கடமையை செய்யாமல் அவர்கள் சாப்பிடுவது எப்படி ஜீரணிக்கும். ஒரு சில பள்ளிகளில் ஒரே ஒரு மாணவன் மட்டுமே படிக்கிறான். அதற்கு அந்த பள்ளியில் 2 ஆசிரியர்கள், 2 பணியாட்கள். இவர்களால் எப்படி கல்வி தரத்தை உயர்த்த முடியும்.
மாணவர்கள் நலன் கருதி நீதிமன்றம் கேள்விகளை எழுப்பினால் அதற்கு எதிராக போராட்டத்தை அறிவிப்பதா? பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கற்று தருவதை விட்டுவிட்டு சிறு வயதிலேயே குழந்தைகள் செல்போன், இன்டர்நெட்டில் விளையாடுவதை ரசிக்கிறார்கள். மாணவர்களை 8ம் வகுப்பு வரை பெயிலாக்க கூடாது என்ற சட்டம் உள்ளதால் அதுவரை அந்த குழந்தைகளை பற்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலைப்படுவதில்லை. 9ம் வகுப்புக்கு அந்த மாணவர் வரும்போது, அவர்கள் மீது எல்லா கல்வி சுமையையும் சுமத்துகிறார்கள். இதுபோன்ற தவறுகள் நடைபெறுவதை நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், அதற்கு எதிராக போராட்டத்தை அறிவிப்பதா?
அந்த ஆசிரியர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டி வரும்” என்று நீதிபதி கூறினார். மேலும், ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் 42 பேரின் தேர்ச்சி தொடர்பான வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கிறேன். அப்போது, ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ரூ.500க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: ஜியோ அடுத்த அதிரடி

மிகக் குறைந்தகட்டணத்தில் டேட்டாவழங்கி மற்றதொலைதொடர்புநிறுவனங்களை அதிர்ச்சிஅடைய வைத்தரிலையன்ஸ்ஜியோநிறுவனம், அடுத்தஅதிரடிக்கு தயாராகிஉள்ளது.
ஜியோ அறிவித்த குறைந்தவிலையில் 4ஜி டேட்டாதிட்டத்தால் இந்த ஆண்டுஏப்ரல் மாதம் வரை ஜியோவாடிக்கையாளர்களின்எண்ணிக்கை 112.55மில்லியனை எட்டி உள்ளது.இந்நிலையில் அடுத்தகட்டமாக ரூ.500 க்கு 4ஜிமொபைல்போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
நிறுவனத்தின் ஆண்டுபொதுக் கூட்டம் ஜூலை 21 ம்தேதி நடக்க உள்ளது.அன்றைய தினம் அல்லதுஆகஸ்ட் துவக்கத்தில்இத்திட்டத்தை ஜியோமுறைப்படி அறிமுகம் செய்யஉள்ளது. ரூ.1000 க்குமொபைல் போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்பட்டு வந்த நிலையில்,எதிர்ப்பார்ப்புக்களை விடமேலும் விலையைகுறைத்து, ஸ்மார்ட்போன்களை விற்பனைக்குகொண்டு வர உள்ளதுஜியோ.
ஆகஸ்ட் 15 அன்றுதங்களின் புதிய திட்டத்தைதுவக்கவும், ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.வாடிக்கையாளர்களைகவருவதற்காக 2ஜிவாடிக்கையாளர்கள் இந்தபுதிய போன் மூலம்நேரடியாக 4ஜி க்குதங்களை மாற்றிக்கொள்ளலாம். இதன் விலைரூ.500 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்டஎண்ணிக்கையிலேயேஇந்த குறைந்த விலைஸ்மார்ட்போனை விற்பனைசெய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.இருந்தாலும் 2ஜிவாடிக்கையாளர்கள்தங்களை 4ஜி க்கு மாற்றிகொள்வதற்காக இந்தபோனை அதிகம்வாங்குவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் ஜியோ, தனது‛டன் டனா டன்' சலுகையின்புதிய திட்டத்தின் ஆரம்பவிலையை மாதத்திற்குரூ.150 ஆகநிர்ணயித்துள்ளது. மேலும்ரூ.80 முதல் 90 என்ற சலுகைகட்டண திட்டத்தையும்ஜியோ அறிமுகம் செய்யஉள்ளது. தற்போது டன் டனாடன் திட்டத்தில் ரூ.309அல்லது ரூ.509 க்கு இலவசவாய்ஸ், அளவில்லாஎஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ்,தினமும் 1 முதல் 2 ஜிபிடேட்டா சேவையை வழங்கிவருகிறது. பிரைம்உறுப்பினர்களுக்கு இந்தசேவை ரூ.99 க்குவழங்கப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.புதுடில்லி:மிகக் குறைந்தகட்டணத்தில் டேட்டாவழங்கி மற்றதொலைதொடர்புநிறுவனங்களை அதிர்ச்சிஅடைய வைத்தரிலையன்ஸ் ஜியோநிறுவனம், அடுத்தஅதிரடிக்கு தயாராகிஉள்ளது. ஜியோ அறிவித்தகுறைந்த விலையில் 4ஜிடேட்டா திட்டத்தால் இந்தஆண்டு ஏப்ரல் மாதம் வரைஜியோவாடிக்கையாளர்களின்எண்ணிக்கை 112.55மில்லியனை எட்டி உள்ளது.இந்நிலையில் அடுத்தகட்டமாக ரூ.500 க்கு 4ஜிமொபைல்போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்நிறுவனத்தின் ஆண்டுபொதுக் கூட்டம் ஜூலை 21 ம்தேதி நடக்க உள்ளது.அன்றைய தினம் அல்லதுஆகஸ்ட் துவக்கத்தில்இத்திட்டத்தை ஜியோமுறைப்படி அறிமுகம் செய்யஉள்ளது. ரூ.1000 க்குமொபைல் போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்பட்டு வந்த நிலையில்,எதிர்ப்பார்ப்புக்களை விடமேலும் விலையைகுறைத்து, ஸ்மார்ட்போன்களை விற்பனைக்குகொண்டு வர உள்ளதுஜியோ. ஆகஸ்ட் 15 அன்றுதங்களின் புதிய திட்டத்தைதுவக்கவும், ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.வாடிக்கையாளர்களைகவருவதற்காக 2ஜிவாடிக்கையாளர்கள் இந்தபுதிய போன் மூலம்நேரடியாக 4ஜி க்குதங்களை மாற்றிக்கொள்ளலாம். இதன் விலைரூ.500 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்டஎண்ணிக்கையிலேயேஇந்த குறைந்த விலைஸ்மார்ட்போனை விற்பனைசெய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.இருந்தாலும் 2ஜிவாடிக்கையாளர்கள்தங்களை 4ஜி க்கு மாற்றிகொள்வதற்காக இந்தபோனை அதிகம்வாங்குவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.இத்துடன் ஜியோ, தனது‛டன் டனா டன்' சலுகையின்புதிய திட்டத்தின் ஆரம்பவிலையை மாதத்திற்குரூ.150 ஆகநிர்ணயித்துள்ளது. மேலும்ரூ.80 முதல் 90 என்ற சலுகைகட்டண திட்டத்தையும்ஜியோ அறிமுகம் செய்யஉள்ளது. தற்போது டன் டனாடன் திட்டத்தில் ரூ.309அல்லது ரூ.509 க்கு இலவசவாய்ஸ், அளவில்லாஎஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ்,தினமும் 1 முதல் 2 ஜிபிடேட்டா சேவையை வழங்கிவருகிறது. பிரைம்உறுப்பினர்களுக்கு இந்தசேவை ரூ.99 க்குவழங்கப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.
மிகக் குறைந்தகட்டணத்தில் டேட்டாவழங்கி மற்றதொலைதொடர்புநிறுவனங்களை அதிர்ச்சிஅடைய வைத்தரிலையன்ஸ்ஜியோநிறுவனம், அடுத்தஅதிரடிக்கு தயாராகிஉள்ளது.
ஜியோ அறிவித்த குறைந்தவிலையில் 4ஜி டேட்டாதிட்டத்தால் இந்த ஆண்டுஏப்ரல் மாதம் வரை ஜியோவாடிக்கையாளர்களின்எண்ணிக்கை 112.55மில்லியனை எட்டி உள்ளது.இந்நிலையில் அடுத்தகட்டமாக ரூ.500 க்கு 4ஜிமொபைல்போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
நிறுவனத்தின் ஆண்டுபொதுக் கூட்டம் ஜூலை 21 ம்தேதி நடக்க உள்ளது.அன்றைய தினம் அல்லதுஆகஸ்ட் துவக்கத்தில்இத்திட்டத்தை ஜியோமுறைப்படி அறிமுகம் செய்யஉள்ளது. ரூ.1000 க்குமொபைல் போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்பட்டு வந்த நிலையில்,எதிர்ப்பார்ப்புக்களை விடமேலும் விலையைகுறைத்து, ஸ்மார்ட்போன்களை விற்பனைக்குகொண்டு வர உள்ளதுஜியோ.
ஆகஸ்ட் 15 அன்றுதங்களின் புதிய திட்டத்தைதுவக்கவும், ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.வாடிக்கையாளர்களைகவருவதற்காக 2ஜிவாடிக்கையாளர்கள் இந்தபுதிய போன் மூலம்நேரடியாக 4ஜி க்குதங்களை மாற்றிக்கொள்ளலாம். இதன் விலைரூ.500 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்டஎண்ணிக்கையிலேயேஇந்த குறைந்த விலைஸ்மார்ட்போனை விற்பனைசெய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.இருந்தாலும் 2ஜிவாடிக்கையாளர்கள்தங்களை 4ஜி க்கு மாற்றிகொள்வதற்காக இந்தபோனை அதிகம்வாங்குவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் ஜியோ, தனது‛டன் டனா டன்' சலுகையின்புதிய திட்டத்தின் ஆரம்பவிலையை மாதத்திற்குரூ.150 ஆகநிர்ணயித்துள்ளது. மேலும்ரூ.80 முதல் 90 என்ற சலுகைகட்டண திட்டத்தையும்ஜியோ அறிமுகம் செய்யஉள்ளது. தற்போது டன் டனாடன் திட்டத்தில் ரூ.309அல்லது ரூ.509 க்கு இலவசவாய்ஸ், அளவில்லாஎஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ்,தினமும் 1 முதல் 2 ஜிபிடேட்டா சேவையை வழங்கிவருகிறது. பிரைம்உறுப்பினர்களுக்கு இந்தசேவை ரூ.99 க்குவழங்கப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.புதுடில்லி:மிகக் குறைந்தகட்டணத்தில் டேட்டாவழங்கி மற்றதொலைதொடர்புநிறுவனங்களை அதிர்ச்சிஅடைய வைத்தரிலையன்ஸ் ஜியோநிறுவனம், அடுத்தஅதிரடிக்கு தயாராகிஉள்ளது. ஜியோ அறிவித்தகுறைந்த விலையில் 4ஜிடேட்டா திட்டத்தால் இந்தஆண்டு ஏப்ரல் மாதம் வரைஜியோவாடிக்கையாளர்களின்எண்ணிக்கை 112.55மில்லியனை எட்டி உள்ளது.இந்நிலையில் அடுத்தகட்டமாக ரூ.500 க்கு 4ஜிமொபைல்போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்நிறுவனத்தின் ஆண்டுபொதுக் கூட்டம் ஜூலை 21 ம்தேதி நடக்க உள்ளது.அன்றைய தினம் அல்லதுஆகஸ்ட் துவக்கத்தில்இத்திட்டத்தை ஜியோமுறைப்படி அறிமுகம் செய்யஉள்ளது. ரூ.1000 க்குமொபைல் போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்பட்டு வந்த நிலையில்,எதிர்ப்பார்ப்புக்களை விடமேலும் விலையைகுறைத்து, ஸ்மார்ட்போன்களை விற்பனைக்குகொண்டு வர உள்ளதுஜியோ. ஆகஸ்ட் 15 அன்றுதங்களின் புதிய திட்டத்தைதுவக்கவும், ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.வாடிக்கையாளர்களைகவருவதற்காக 2ஜிவாடிக்கையாளர்கள் இந்தபுதிய போன் மூலம்நேரடியாக 4ஜி க்குதங்களை மாற்றிக்கொள்ளலாம். இதன் விலைரூ.500 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்டஎண்ணிக்கையிலேயேஇந்த குறைந்த விலைஸ்மார்ட்போனை விற்பனைசெய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.இருந்தாலும் 2ஜிவாடிக்கையாளர்கள்தங்களை 4ஜி க்கு மாற்றிகொள்வதற்காக இந்தபோனை அதிகம்வாங்குவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.இத்துடன் ஜியோ, தனது‛டன் டனா டன்' சலுகையின்புதிய திட்டத்தின் ஆரம்பவிலையை மாதத்திற்குரூ.150 ஆகநிர்ணயித்துள்ளது. மேலும்ரூ.80 முதல் 90 என்ற சலுகைகட்டண திட்டத்தையும்ஜியோ அறிமுகம் செய்யஉள்ளது. தற்போது டன் டனாடன் திட்டத்தில் ரூ.309அல்லது ரூ.509 க்கு இலவசவாய்ஸ், அளவில்லாஎஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ்,தினமும் 1 முதல் 2 ஜிபிடேட்டா சேவையை வழங்கிவருகிறது. பிரைம்உறுப்பினர்களுக்கு இந்தசேவை ரூ.99 க்குவழங்கப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.
தொடக்கப்பள்ளி மாணவர்கள் சாலை மறியல்... பதறியடித்து ஓடி வந்த அரசு அதிகாரிகள்...!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ளது கைகாட்டிப்புதூர். இவ்வூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், போதிய அளவிலான ஆசிரியர்கள் இல்லாததால், தங்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுவதாகக்கூறி அப்பள்ளி மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட கைகாட்டிப்புதூர் பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர வீட்டுக் குழந்தைகள் இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில்தான் கல்வி பயின்று வருகின்றனர். 1 முதல் 6-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், கடந்த சில வருடங்களாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், இப்பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முறையான கல்வி அளிக்க முடியாமல் திணறி வருகிறது பள்ளி நிர்வாகம்.
''தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டாலும், யாரும் சரியாகப் பாடமும் நடத்துவதில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. பெரும்பாலும் பள்ளியின் தலைமை ஆசிரியரே அனைத்து வகுப்புகளுக்கும் சென்று பாடம் எடுக்க வேண்டிய நிலைமைதான் கடந்த இரண்டு வருடங்களாக நீடித்து வருகிறது'' என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களும் பலமுறை மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டும் மாவட்டக் கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தக் கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதமாகியும் இன்றளவும் இப்பள்ளிக்கு ஆசிரியர் நியமனம் செய்யப்படாததால், கொதித்தெழுந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களின் பள்ளி சீருடை அணிந்தவாறு சாலையில் அமர்ந்து, "எங்களின் பள்ளிக்கு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என்ற முழக்கத்துடன் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிராஜ், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
அவருடன் வருவாய்த் துறையினரும் இணைந்துவந்து மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசெல்லுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு போராட்டக்காரர்கள் உடன்படாததால், மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலரும் சம்பவ இடத்துக்கு வந்து தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட, இறுதியில், 'கைகாட்டிப்புதூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு வருகிற திங்கட்கிழமைக்குள் நிரந்தரமாக இரண்டு ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர். தேவைப்பட்டால் மேலும் ஓர் ஆசிரியரை பணியமர்த்தவும் ஏற்பாடு செய்கிறோம்' என்று உத்தரவாதம் அளித்த பிறகே சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர் மாணவர்கள்.
தங்களுக்கான உரிமையைப் பெற சின்னஞ்சிறு குழந்தைகளும் போராட்டக் களத்தை நாடத் தொடங்கிவிட்டனர்.
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு...
வரும், 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவதால், அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர், மறைந்த காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
காமராஜரின் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காமராஜரின் ஆட்சி, அவரது எளிய வாழ்க்கை, அவரது கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல, மாணவர்கள் மத்தியில் போட்டி நடத்தி, பரிசு வழங்கவும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், வரும், ௧௫ம் தேதி சனிக்கிழமை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 4 ஐஏஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்
தமிழகத்தில் 4 ஐஏஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
*சுதா தேவி ஐஏஎஸ் - சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம்.
*ஜெயாசந்திர பானு ஐஏஎஸ் - தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராக நியமனம்.
*நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசன்ட் திவ்யா ஐஏஎஸ் நியமனம்.
* அரியலூர் மாவட்ட ஆட்சியராக லஷ்மி ப்ரியா நியமனம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியை !!....
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநுறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
தமிழணங்கே - உன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநுறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
தமிழணங்கே - உன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !
--------------------------------------------------------------------------------
நீராரும் = நீர் ஆரும் - நீர் அலைகளாய் எழுந்து ஆர்ப்பரிக்கின்ற
நீராரும் = நீர் ஆரும் - நீர் அலைகளாய் எழுந்து ஆர்ப்பரிக்கின்ற
கடலுடுத்த = கடல் உடுத்த - கடலைத் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டுள்ள
நிலமடந்தைக்கு = நிலம் என்னும் பெண்ணுக்கு
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு = நீரலைகள் ஆர்ப்பரிக்கின்ற கடலை ஆடையாக உடுத்திக்கொண்டுள்ள நிலம் என்னும் பெண்ணுக்கு.
உலகில் உள்ள நிலப்பரப்புகள் யாவும் நீர்சூழ்ந்தவை. கடல்சூழ்ந்தவை. நிலமென்னும் மடந்தை நீரலைகள் ஆர்ப்பரிக்கின்ற கடலை ஆடையாகத் தன்னைச் சுற்றி உடுத்திக்கொண்டவள்.
எழிலொழுகும் = எழில் ஒழுகும் - அழகு கொஞ்சுகின்ற, அழகு வழிகின்ற
சீராரும் வதனம் என = சீர் ஆரும் வதனம் என - சிறப்புகள் ஆர்த்து ஆடுகின்ற முகம் என
திகழ்பரதக் கண்டமிதில் = திகழ் பரதக்கண்டம் இதில் - அவ்வாறெல்லாம் திகழ்கின்ற பாரதத் துணைக்கண்டமாகிய இதில்.
இப்போது இரண்டு வரிகளையும் சேர்த்துப் பொருள்கூட்டுவோம் !
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
நீர் அலைகள் ஆர்த்தெழுகின்ற கடலை ஆடையாக உடுத்திக்கொண்டவளான நிலமென்னும் பெண்ணுக்கு அழகு கொஞ்சுவதாகவும் சிறப்புகள் நடமாடுகின்றதாகவும் திகழ்கின்ற பாரதத் துணைக் கண்டமாகிய இதில்.
உலகில் உள்ள நிலமெல்லாம் கடலை ஆடையாக உடுத்திக்கொண்ட பெண்ணாக உருவகித்துக்கொள்ளுங்கள். அந்தப் பெண்ணின் அழகிய முகமாக பாரதக் கண்டம் திகழ்கின்றது. உலகத்திற்கு முகமாவது பாரதத் துணைக்கண்டம் !
இதுதான் முதலிரண்டு வரிகளின் பொருள்.
தெக்கணமும் = பாரதத்தின் தென்பகுதியில்
அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் = அங்குச் சிறந்து விளங்குகின்ற திராவிடம் என்னும் செல்வச் செழிப்பான நாடும்
தக்க சிறுபிறை நுதலும் = நுதல் என்றால் நெற்றி. தகுந்த வடிவில் சின்னஞ்சிறு பிறைபோல் அமைந்த நெற்றியும்
தரிந்த நறுந்திலகமுமே = அந்நெற்றியில் இட்டுக்கொண்ட தோற்றத்திற் சிறந்த பொட்டு போன்றதே.
மூன்றாம் நான்காம் வரிகளைச் சேர்த்துப் பொருள் காண்போம் !
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநுறுந்திலகமுமே
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநுறுந்திலகமுமே
உலகத்து நிலங்கள் யாவும் கடலையுடுத்திய பெண்ணாள். அப்பெண்ணின் முகம்போன்றது பாரதக் கண்டம். அந்த முகத்தின் அழகிய நெற்றியைப் போன்றது தென்னிந்தியா. அந்தத் தென்னிலம் என்னும் பிறை நிலவு போன்ற நெற்றியில் இட்டுக்கொண்ட பேரழகு கொஞ்சும் குங்குமப் பொட்டுபோல் திகழ்வது திராவிட நாடு.
அத்திலக வாசனைபோல் = அந்த மங்களத் திலகத்திற்கு எத்துணை நற்புகழ், நல்லியற்கை உண்டோ அதுபோல்.
அனைத்துலகும் இன்பமுற = எல்லா உலகங்களும் இன்பத்தில் திளைக்கும்படி
எத்திசையும் புகழ்மணக்க = எட்டுத் திக்குகள் மட்டுமல்ல, எல்லாத் திக்குகளிலும் புகழ் என்னும் இன்ப வாசனை மணமணக்கப் பரவும்படி
இருந்த பெரும் தமிழணங்கே = வாழ்ந்த பேராற்றல் வாய்ந்த தமிழ் என்னும் தெய்வமே !
உன் சீரிளமைத் திறம்வியந்து = தொன்றுதொட்டு வாழ்ந்தவள் என்றாலும் குன்றாத இளமையுடையவளாய்த் திகழும் உன் ஆற்றலை வியந்து
செயல்மறந்து = செய்வதறியாது மெச்சியவராய் எங்கள் மெய்மறந்து
வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே = வாழ்த்துகின்றோமே வாழ்த்துகின்றோமே வாழ்த்துகின்றோமே !
ஒட்டுமொத்தப் பாட்டுக்கும் பொருள் சொல்கிறேன்,
இதன்பின் பாடல் தெற்றென விளங்கும்.
இதன்பின் பாடல் தெற்றென விளங்கும்.
நீரலைகள் எழுந்தாடுகின்ற
கடலை ஆடையாக
உடுத்திக்கொண்டவள்
நிலம் என்னும் அழகிய பெண்ணாள்.
நிலமாகிய அப்பெண்ணுக்கு,
அழகு கொஞ்சுகின்ற
சிறப்புகள் சூழ்ந்தாடுகின்ற
முகம்போன்று திகழ்வது பாரதக் கண்டம்.
அம்முகத்திற்கு
அழகிய பிறைபோன்று
அமைந்த நெற்றிதான்
தெற்குப் பகுதி.
அந்த நெற்றியில்
சூடிக்கொண்ட அழகிய திலகம் போன்று
புகழொளி வீசுகின்ற திருநாடுதான்
திராவிட நாடு.
அந்தத் திலகத்தின் புகழும் அழகும்போல,
அனைத்து உலகத்தவர்களும்
இன்பத்தால் திளைக்கும்படி,
எல்லாத் திக்குகளுக்கும்
பரவி வாழ்ந்து வருகின்ற
தமிழ் என்னும் தெய்வமே !
தொன்று தோன்றியவளாய்,
பெருவாழ்வு வாழ்ந்தவளாய் இருந்தும்
இன்றும் புதுமைக்குப் புதுமையாய்
என்றும் இளைமையாய்த் திகழ்கின்ற
உன் பேராற்றலை வியந்து,
ஊன் உடல் மனம்
அனைத்தும் செயலற்றவர்களாய்
மெய்ம்மறந்து
வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றோம் !
கடலை ஆடையாக
உடுத்திக்கொண்டவள்
நிலம் என்னும் அழகிய பெண்ணாள்.
நிலமாகிய அப்பெண்ணுக்கு,
அழகு கொஞ்சுகின்ற
சிறப்புகள் சூழ்ந்தாடுகின்ற
முகம்போன்று திகழ்வது பாரதக் கண்டம்.
அம்முகத்திற்கு
அழகிய பிறைபோன்று
அமைந்த நெற்றிதான்
தெற்குப் பகுதி.
அந்த நெற்றியில்
சூடிக்கொண்ட அழகிய திலகம் போன்று
புகழொளி வீசுகின்ற திருநாடுதான்
திராவிட நாடு.
அந்தத் திலகத்தின் புகழும் அழகும்போல,
அனைத்து உலகத்தவர்களும்
இன்பத்தால் திளைக்கும்படி,
எல்லாத் திக்குகளுக்கும்
பரவி வாழ்ந்து வருகின்ற
தமிழ் என்னும் தெய்வமே !
தொன்று தோன்றியவளாய்,
பெருவாழ்வு வாழ்ந்தவளாய் இருந்தும்
இன்றும் புதுமைக்குப் புதுமையாய்
என்றும் இளைமையாய்த் திகழ்கின்ற
உன் பேராற்றலை வியந்து,
ஊன் உடல் மனம்
அனைத்தும் செயலற்றவர்களாய்
மெய்ம்மறந்து
வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றோம் !
- கவிஞர் மகுடேசுவரன்
ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து போராட்டம் : ஆசிரியர் சங்கங்களுக்கு நீதிபதி எச்சரிக்கை.....
சென்னை ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படித்த 42 பேர் பெயில்ஆக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
நீதிபதியின் கருத்தை எதிர்த்து அரசு பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று(ஜூலை 7) வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தனக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர், ஐகோர்ட்டிற்கு எதிராக போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? 365 நாட்களில் பள்ளிகள் செயல்படும் 160 நாட்கள் கூட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பணிக்கு செல்வதில்லை. ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆண்டின் பாதி நாட்கள் கூட பணிக்கு வருவதில்லை. அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? பணிக்கு செல்லாமல் முறைகேடு செய்வோர் ஆசிரியர் சங்கத்தை பயன்படுத்துகிறார்கள்.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முறையாக பணிக்கு வருவது இல்லை என பிற ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நான் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. இது தொடர்பாக பலரும் எனக்கு கடிதம் எழுதி உள்ளனர். பெயில் ஆக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் வருவோர் தங்களது குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்
அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் திட்டம் ரத்து!
அடுத்த கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆல் பாஸ் திட்டத்தால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் முறையிட்டதை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
கல்வி உரிமைச்சட்டம் - 2009 படி 8 ஆம் வகுப்பு வரை எந்த மாணவ, மாணவியை பெயில் ஆக்கக்கூடாது. இதனால் நாடு முழுவதும் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகள் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசின் கட்டாய தேர்ச்சி திட்டத்தால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருவதாக அவர் கூறினார்.
இதனை முன்னிட்ட கல்வி உரிமை சட்டத்தில் இருந்து, அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆல் பாஸ் திட்டத்தை வாபஸ் பெறுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் இந்த முடிவால் அடுத்த ஆண்டு முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுகிறது.
TRB மூலம் விரைவில் தேர்வு - தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு அனுமதி: விரைவில் போட்டித் தேர்வு....
தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 765 அரசுப் பள்ளிகளில் புதிதாக கணினி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக்கல்வித் துறையில் 2007-08 கல்வியாண்டு முதல் 2015-16 கல்வியாண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 525 பள்ளிகளில் கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பாடப்பிரிவு தொடங்கப்பட்டன. தற்காலிக ஏற்பாடாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு அவை செயல்படுகின்றன. எஞ்சிய 240 பள்ளிகளில் கணினி அறிவியல்பாடப்பிரிவு இல்லை.அப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர போதிய மாணவர்கள் முன்வரும் நிலையில், நிதி ஆதாரம் இல்லாததால் பாடப்பிரிவு தொடங்க இயலவில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் அரசிடம் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட 765 பள்ளிகளிலும் கணினி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தலாம் என்றும், அதற்கு வசதியாக, காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கணினி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றி ஒப்புதல் அளிக்குமாறும் அரசிடம் கோரியுள்ளார்.பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் விரிவாக பரிசீலிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக் கல்வியை சீரிய முறையில் செயல்படுத்த வசதியாக, 765 பள்ளிகளுக்கும் பட்டதாரி ஆசிரியர் ஊதியத்தில் கணினி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிஆர்பி மூலம் விரைவில் தேர்வு
பி.எட். முடித்த பி.இ. (கணினி அறிவியல்), பிஎஸ்சி (கணினி அறிவியல்), பிசிஏ, பிஎஸ்சி (தகவல் தொழில்நுட்பம்) பட்டதாரிகள் கணினி அறிவியல் ஆசிரியர் பணியில் சேர தகுதியுடையவர்.கடைசியாக, கடந்த 2014-ம் ஆண்டு மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எழுத்துத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. எனவே, புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள 765 கணினி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













