>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 3 ஜூன், 2017

பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளத்தில் முறைகேடு..


அரசு ஊழியர் 2 மாத சம்பளம் முன் பணமாக பெறும் வசதி SBI வங்கி அறிமுகம்...


SALARY ACCOUNTS UNDER STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)

Salary Accounts under SGSP a gamut of privileges and other value added services to the employees of State Government, Union Territories and their Boards/Corporations. Salary Accounts under this package are available in four variants, namely Silver, Gold, Diamond and Platinum depending on the designation of the personnel.
Benefits to the Employer
Convenient way to manage salaries across a large number of centers through Core Power and the Bank's award winning Corporate Internet Banking
Reduces employer's paperwork and salary administration cost.
No charges for uploading of salaries
Employees receive instant credit of salaries
Benefit to the Employee
Convenience of Anywhere Banking at
The largest network of more than 16,000 Core Banking Branches
Extensive alternative channels.
53,000 plus ATMs of State Bank Group
Free Internet Banking, Mobile Banking
Complete gamut of Banking Services including:-
Unique Lifetime Account Number
Zero Balance Account facility with no penal charges for non-maintenance of minimum balance
Auto sweep (in & out) facility (on request)-Surplus amount in Savings bank account beyond threshold balance is transferred automatically into Term Deposits (multi option deposits) in multiple of Rs.1000/- and vice versa
Facility for Auto Sweep Switch On/Off through Internet Banking
Free Personal Accident Insurance (Death) Cover to Primary Salary Package Account*
Free personalized Multi City Cheques
RTGS/NEFT
Free Core Power: Anywhere banking facility with the widest network of more than 16,000 branches. Free updating of pass-books at any branch
Easy overdraft up to 2 months' salary repayable within 6 months*
SMS Alerts
Free Debit Cards : Domestic cards for Silver Accounts, Gold Debit cards for Gold and Diamond Accounts and Platinum Debit Card for Platinum Accounts.
Maximum daily withdrawal of Rs. 40,000 on Domestic Cards, Rs. 50,000 on Gold Cards and Rs. 1,00,000 on Platinum Cards.
Various Personal loans like Home loan/ Auto loan/ Xpress Credit loan, etc. at attractive terms
Demat facility, 3-in 1 Trading Account available
Systematic Investment Plan in Mutual funds
Range of other value added benefits

கல்வித்துறை செயலர் மதிப்புமிகு.த.உதயச்சந்திரன் அவர்களைப்பற்றிய பதிவு!!


கல்வித்துறைச் செயலராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் உயர்திரு. உதயச்சந்திரன் அவர்களின் பழைய நேர்காணல் ஒன்று இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது....

உயர்திரு உதயச்சந்திரன் ஐ ஏ எஸ் அவர்கள் நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரம் அருகே இருக்கும் இன்று நாமக்கல் நகரோடு இணைந்த சின்னமுதலைப்பட்டி என்ற சிறிய ஊரில் பிறந்தவர்.. நடுத்தரக் குடும்பம். நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்தவர், அவர் படித்த சமயத்தில் அவருடைய பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ‘பஞ்சாப் மாநில முதல்வர் யார்?’ என்கிற ரீதியில் பொது அறிவு கேள்விகளைக் கேட்டுத்தான் பாடங்களை அடுத்து ஆரம்பிப்பாராம். அந்த ஆசிரியருக்கு பதில் சொல்வதற்காகவே தினமும் நாளிதழ்களை வரிவிடாமல் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டதாக நினைவில் வைத்துச் சொல்லியிருந்தார்.

அதுதான் உதயச்சந்திரனுக்கு பொது அறிவு மீது ஈர்ப்பை உண்டாக்கியிருக்கிறது. நேர்காணலைப் படித்த அன்றிலிருந்து

இன்று வரையிலும் உதயச்சந்திரனைவிடவும் அந்த ஆசிரியர் மனதுக்குள்ளேயே நிற்கிறார்.

ஆசிரியருக்கு ‘இவன் கலெக்டர் ஆவான்’ என்று தெரிந்திருக்காமல் இருக்கலாம். பாடம் நடத்துவது மட்டும்தான் அவரது கடமை. ‘முதல்வர் யார்?’ என்று கேட்பது கடமையைத் தாண்டி அவர் கொளுத்திய ஒரு திரி. அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு நிமிடத்தை அவர் இதற்காக ஒதுக்கியிருக்கக் கூடும். அந்த ஒரேயொரு நிமிடம் சமூகத்திற்காக, தனது மாணவர்களுக்காக சிந்தித்திருக்கிறார் அல்லவா? அது இன்றைக்குத் தமிழகத்தின் முக்கியமான ஆளுமையை உருவாக்கியிருக்கிறது. ஆசிரியர்களுடன் பேசுகிற வாய்ப்பு கிடைக்கும் போது இந்த உதாரணத்தை சுட்டிக்காட்டுவதுண்டு. தினசரி ஐந்து நிமிடம் ஆசிரியர்கள் தமது கடமையைத் தாண்டிச் சிந்தித்தால் போதும். அது மிகப்பெரிய விளைவுகளை உண்டாக்கிவிடக் கூடும். மாதாவுக்கும் பிதாவுக்கும் பிறகு குருதான் என்று சொன்னதில் அர்த்தமில்லாமல் இல்லை.

உதயச்சந்திரன் ஈரோடு மாவட்டத்தில் சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படித்தவர். அப்பொழுதிருந்தே அவரது கனவு ஐ.ஏ.எஸ். நம் ஊரில்தான் வித்தியாசம் பார்க்காமல் சகலரையும் கலாய்ப்பார்கள் அல்லவா? உதயச்சந்திரனை மட்டும் விடுவார்களா? அவர் தங்கியிருந்த கல்லூரியின் விடுதி அறையில் சக மாணவர்கள் நக்கலாக ‘ஜில்லா கலெக்டர்’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகாக தமது கல்லூரிக்குச் செல்கிறார். பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்காகக் தான் தங்கியிருந்த அதே விடுதி அறைக்குச் சென்று பார்க்கிறார். அப்பொழுதும் ‘ஜில்லா கலெக்டர்’ என்ற எழுத்துக்கள் மங்கிப் படிந்திருந்திருக்கின்றன. ஆனால் அப்பொழுது அவர் அதே ஈரோடு மாவட்டத்துக்கு உண்மையிலேயே ஜில்லா கலெக்டர் ஆகியிருந்தார். மிக இளம்வயதில் ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் வென்றவர்களில் உதயச்சந்திரனும் ஒருவர். 1995 ஆம் ஆண்டு அவர் தேர்ச்சியுற்ற போது அவரது வயது 23.

ஈரோடு மாவட்டத்திற்கு எப்பொழுதுமே ஒரு ராசி உண்டு. உதயச்சந்திரன் மாதிரியான அட்டகாசமான ஆட்சியர்கள் அத்திப்பூத்தாற்போல வந்துவிடுவார்கள்.

சமீபத்தில் எங்கள் ஊரைச் சார்ந்த பனைமரம் ஏறு தொழிலாளியின் மகன் ஒருவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர். குடும்பத்தில் வறுமை. அப்பனைச் சிரமப்படுத்தாமல் ஏதாவதொரு படிப்பில் சேரலாம் என்று நினைத்திருக்கிறார். அப்பொழுது உதயச்சந்திரன்தான் ஈரோடு மாவட்ட ஆட்சியர். அந்தச் சமயத்தில் ஏகப்பட்ட மாணவர்களுக்கு வங்கிகளில் கல்விக்கடன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். வங்கிகள் தயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கிட்டத்தட்ட நூற்றுப்பத்து கோடி ரூபாய் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கல்விக்கடனாக விநியோகம் செய்ய வழிவகை செய்து கொடுத்தவர் அவர்தான். அதில் பலனடைந்தவர்களில் பனைமரத் தொழிலாளியின் மகனும் ஒருவர். இப்பொழுது இஸ்ரோவில் பணியில் இருக்கிறார். ‘கலெக்டர் கல்வித்துறைக்கே வந்துட்டாரு’ என்று அவ்வளவு பூரிப்பு அவருக்கு.

உரமானியம் என்ற பெயரில் அரசாங்கம் உர நிறுவனங்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட நிறுவனங்களிலிருந்து விவசாயிகளுக்கு உரங்கள் நேரடியாக வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதில் நடக்கும் குளறுபடிகளைக் களைய ‘விவசாயிகளுக்கே நேரடியாக பணத்தைக் கொடுத்துடுங்க..என்ன உரம் வாங்கணும்ன்னு அவங்களே முடிவு செஞ்சுக்கட்டும்’ என்று கமிஷன் அடித்துக் கொண்டிருந்தவர்களின் கண்களைக் கட்டி காட்டுக்குள் விட்டார். எங்கள் ஊர் விவசாயிகள் இன்னமும் சொல்லிக் காட்டுகிறார்கள்.

ஆட்சியராக இருந்த காலத்தில் வறட்சி நிலவும் பகுதிகளில் சொட்டு நீர் பாசனத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவம், நூலகங்களை மேம்படுத்தி பராமரிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்டவற்றை இன்னமும் ஊர்ப்பக்கம் பேசிக் கொண்டிருக்கிற ஆட்களைப் பார்க்க முடியும். இப்படி கிராமப்புற மேம்பாடு, கல்வி, நிர்வாகம் உள்ளிட்ட பல தளங்களில் கலக்கிக் கொண்டிருந்தவர் உதயச்சந்திரன்.

மதுரை மாவட்டத்தில் கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை மறந்திருக்க முடியாது. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தனிப்பஞ்சாயத்துக்களாக மாற்றப்பட்ட பிறகு தேர்தலே நடத்தவிடாமல் செய்து கொண்டிருந்தார்கள். மீறி தேர்தல் நடத்தினால் பதவியேற்ற அதே தினத்தில் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுவார்கள். அந்தச் சமயத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று அந்த ஊராட்சிகளில் தேர்தலை நடத்தி தலைவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களைத் தொடரச் செய்ததும் உதயச்சந்திரன்தான். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுவுக்கு பிரச்சினை வந்த போது மாவட்ட நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்து ஜல்லிக்கட்டுவை நடத்தினார்.

உதயச்சந்திரன் குறித்து நிறையச் சொல்ல முடியும். வெறுமனே அவரைப் புகழ்வது நோக்கமில்லை.

உதயச்சந்திரன் கல்வித்துறைச் செயலாளராக பதவியேற்கிறார் என்று தெரிந்தந்திலிருந்தே மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைக்கு தமிழகத்தில் அதிகளவிலான சீரமைப்புத் தேவைப்படுகிற துறை அதுதான் அல்லவா?. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகார மட்டத்தினால் வழங்கப்பட்ட சலுகைகளின் காரணமாக அரசுப்பள்ளிகள் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, மிரட்டக் கூடாது என்று ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் தனியார் பள்ளிகளில் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் மாணவர்களைச் சித்ரவதை செய்வார்கள். மாணவர்களை ப்ராய்லர் கோழிகளாக மாற்றி இரவு பகல் பாராமல் கண்விழிக்கச் செய்து மதிப்பெண்களைக் கக்க வைத்துவிடுவார்கள். நம் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்வதன் முக்கியமான காரணமே இதுதான். ‘அங்க மார்க் வாங்க வெச்சுடுறாங்க’ என்பார்கள்.


  ஏன் வாங்க வைக்க முடியாது? தனியார் பள்ளிகளில்தான் ப்ளஸ் ஒன்னிலிருந்தே ப்ளஸ் டூ பாடத்தைத்தானே படிக்கிறார்கள். இரண்டு வருடங்களாக உருவேற்றப்படும் அவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குவார்களா அல்லது ஒரேயொரு வருடம் மட்டும் எந்தக் கண்டிப்புமில்லாமல் பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களைப் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் மதிப்பெண்கள் வாங்குவார்களா? இத்தகைய தகிடுத்தங்களுக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக பதினொன்றாம் வகுப்பையும் பொதுத்தேர்வாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறையில் தொடங்கியிருக்கிறார்கள். ப்ளஸ் டூ பாடத்தை ப்ளஸ் டூவில் மட்டும் படிக்கட்டும். அற்புதமான நடவடிக்கை இது. ஆயிரம் கும்பிடு போடலாம்.

தனியார் பள்ளிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்படும் சலுகைளை ஒழுங்குபடுத்தி வழிக்குக் கொண்டுவந்தாலே போதும். அரசுப்பள்ளிகள் ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களைவிடவும் எந்தவிதத்திலும் மோசமானவர்கள் இல்லை. ஆனால் அவர்களது கைகளை அவிழ்த்துவிட வேண்டும். மாதம் ஒரு முறையாவது ‘பயிற்சி’ என்று அவர்களை அழைத்து வைத்து கல்வி அதிகாரிகள் தாளிக்கிறார்கள். ஆசிரியர்களிடம் பேசினால் கதறுகிறார்கள். பெரும்பாலானவை தேவையற்ற பயிற்சிகள் அல்லது தூக்கம் வரவழைப்பவை. ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு உருப்படியான பயிற்சிகளைக் கொடுத்தால் போதும். பயிற்சியரங்கில் எதைச் சொல்லித் தர வேண்டும், சொல்லித்தருகிற ஆளுமை யார் என்பதையெல்லாம் தெளிவுடன் வடிவமைத்து பயிற்சிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் கவனம் செலுத்தச் செய்வதுதான் இன்றைக்கு முக்கியமான காரியமாகத் தெரிகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் இப்பொழுதெல்லாம் ஊழியர்களுக்கான பயிற்சிகளை மிகத் தெளிவாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துகின்றன. பயிற்சிகளின் எண்ணிக்கையைவிடவும் effective என்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். அதையே அரசுத்துறைகளும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.

உதயச்சந்திரன் சவாலான தருணத்தில்தான் கல்வித்துறைக்கு பொறுப்பேற்றிருக்கிறார். சிபிஎஸ்இ பாடங்களுக்கு இணையாக தமிழக பாடத்திட்டங்களை மாற்றுவது, நீட் தேர்வு உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் தடைகளைக் கண்டறிதல் (Gap analysis) என நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆனால் அவரால் இந்தத் துறையில் மறுமலர்ச்சியை உண்டாக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சமீபத்தில் ஆசிரியர்களின் சங்கங்களை அனைத்து ‘இந்தத் துறையில் என்ன தேவை?’ என்று எழுத்துப் பூர்வமாக எழுதித் தரச் சொல்லியிருக்கிறார். மேல்மட்ட அதிகாரியொருவர் இறங்கி வந்து பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கான எத்தனங்களைத் தொடங்குவதே பாஸிடிவ்வான விஷயம்.

கல்வித்துறையில் அமைச்சராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே பல துறை அமைச்சர் பதவிகளில் இருந்து அனுபவம் பெற்ற மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்களும்... செயலாளராக நம் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் இயக்குநர்களாக செ.கார்மேகம், இளங்கோவன் உள்ளிட்டவர்கள் இணைந்த அற்புதமான அணி அமைந்திருக்கிறது. அவர்களுக்கான சுதந்திரத்தை அரசு வழங்கினால் பெருமளவு சீரமைப்புகளைச் செய்துவிடுவார்கள். நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. தமக்குக் கீழாக இத்தகையதொரு அணியை அமைத்துக் கொண்ட அமைச்சருக்கும் வாழ்த்துக்கள். கல்வித்துறையைக் காப்பாற்றுங்கள் அய்யா! இன்றைக்கு அதுதான் சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.

இவருடைய பேட்சில் ஐ.ஏ.எஸ் தேர்வாகி அதிகாரிகளாக வந்த 45 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் ஒற்றுமையுடன் எந்தொரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இந்திய அளவில் பல்வேறு இடங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவது மிகவும் பெருமையான செய்தியாகும்....
நன்றி ஐயா!!!
வாழ்த்துக்கள்....
உங்கள் பணி மேலும் மேலும் சிறக்கட்டும்...
முனைவர் டி.எம். மோகன்.
தலைவர், நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை.
நாமக்கல்...

+2 - பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் இன்று (2.6.2017) பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது....

பிளஸ் 2 விடைத்தாள் பதிவிறக்கம் செய்யலாம் | பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் இன்று (2.6.2017) வெளியாகும்' என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு :



  பிளஸ் 2 தேர்வில், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள், இன்று பிற்பகல், 2:00 மணி முதல், http://scan.tndge.in/ என்ற இணையதளத்தில், தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.அதன்பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இரண்டு நகல்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த இரண்டு நகல்களையும், நாளை முதல், 6ம் தேதி மாலை, 6:00 மணி வரை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்; ஞாயிற்றுக் கிழமை விண்ணப்பிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தரம் குறைந்த கல்லூரிகள் பட்டியல்: பல்கலை மானிய குழு வெளியிடுகிறது

உயர் கல்வித் தரத்தை மேம்படுத்த, தரம் குறைந்த கல்லுாரிகளின் பட்டியல் வெளியிடப்படும்' என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.


மூன்று பிரிவுகல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய திட்டங்களை, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, கல்லுாரிகளை, அவற்றின் கல்வித் தரம் அடிப்படையில், மூன்று பிரிவாக பிரிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தேசிய தர மதிப்பீட்டுக் குழுவான, 'நாக்' மூலம், 3.5 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, தேசிய தரவரிசை பட்டியலில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, முதல், 50 இடங்களுக்குள் வந்த கல்லுாரிகள், முதல் பிரிவில் சேர்க்கப்படும்.

நாக் மதிப்பீட்டில், 3.01 முதல், 3.49 வரை மதிப்பெண் பெற்று, தேசிய தரவரிசை பட்டியலில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள், 51 முதல், 100 இடங்களில் வந்த கல்லுாரிகள், இரண்டாம் பிரிவில் இடம்பெறும். இவற்றில் வராத கல்லுாரிகள், மூன்றாம் பிரிவில் இடம்பெறும்.

இந்த பிரிவுகளின்படி, கல்லுாரிகளின் தரம் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, அவற்றுக்கான தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்படும்.நாக் மதிப்பீட்டையும், தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பெறுவதையும், தொடர்ந்து கடைபிடிக்காவிட்டால், அந்த கல்லுாரிகள், பின்னுக்கு தள்ளப்படும். 


செயல் திறன் ஆய்வு :

இதற்காக, ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மற்றும் டிசம்பரில், கல்லுாரிகளின் செயல் திறன் ஆய்வு செய்யப்படும். அதே போல, இந்திய பல்கலைகளுடன் இணைய உள்ள, வெளிநாட்டு பல்கலைகளும், கல்லுாரிகளும், சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என, விதிகள் கொண்டு வர உள்ளதாக, யு.ஜி.சி., அறிவித்து உள்ளது. இது குறித்த வரைவு விதிகள், www.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கல்வியாளர்கள், பொது மக்கள், தங்கள் கருத்துக்களை, ஜூன், 15க்குள், feedback2ugc@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பலாம் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

புதுடில்லி: ''சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கல்வி கட்டணங்கள் குறித்த விபரங்களை அளிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
புத்தகங்கள், நோட்டுகள், சீருடை உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மாறக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும், கல்விக் கட்டணம் உயர்ந்து வருவதே, பெற்றோரின் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.
கல்விக் கட்டணம் எவ்வளவு, முந்தைய ஆண்டுடன் எந்த அளவுக்கு அது உயர்த்தப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை வந்துள்ள தகவல்கள் குறித்து ஆராயப்படுகிறது. தகவல் அளிக்காத பள்ளிகளுக்கு மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குஜராத் மாநிலத்தில், கல்வி கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில், புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களும், அதனடிப்படையில் மசோதா கொண்டு வர திட்டமிட்டுள்ளன. நாடு முழுவதும் அதுபோன்ற மசோதா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

10ம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சிக்கு பதிவு துவக்கம்....

சென்னை: 'அடுத்த ஆண்டு, ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு, ஜூன், 5 முதல் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நடப்பு கல்வி ஆண்டில், ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வை முதன்முறையாக எழுத உள்ளோர், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர, பதிவு செய்து கொள்ளலாம். 2012க்கு முன், பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, அறிவியலில் தேர்ச்சி பெறாதோரும்; புதிய பாடத்திட்டத்தில் செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யாதோரும் விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து தனித்தேர்வர்களும், ஜூன், 5 முதல், 30 வரை, மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகங்களில், பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின், கல்வி அதிகாரியால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிக்குச் சென்று, செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். பயிற்சி வகுப்பில், 80 சதவீதம் வருகை தந்தவர்கள் மட்டுமே, பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காதவர்களின், பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்ப படிவத்தை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியீடு....

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதில், நாடு முழுவதும், 8.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நேற்று 

வெளியாவதாக இருந்தன; ஆனால், மதிப்பெண் பட்டியல் இறுதி செய்வதில், தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எந்த நேரம் என்பதை தெரிவிக்க வில்லை. பெரும்பாலும், நண்பகலுக்கு முன் வெளியாகலாம். தேர்வு முடிவுகளை, www.results.nic.in, www.cbseresults.nic.in, மற்றும் www.cbse.nic.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும், www.bing.com 
என்ற தேடல் தளம் மூலமும், தேர்வு முடிவை அறியலாம். 

கலந்தாய்வு மூலம் 1,323 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 31 மற்றும் 1ம் தேதி என 2 நாட்களில் அரசு நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 2 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவது தொடர்பாக இணையதளம் மூலம் கலந்தாய்வு நடந்தது. 


இதில் 1,323 ஆசிரியர்கள் கலந்து கொண்டு, மாவட்டம் விட்டு மாவட்டம் தாங்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் நேரடியாக சேர்க்கும் திட்டம் அமலாக்கம்

Image result for samacheer kalvi books
உடுமலை : உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தக வினியோகம் துவங்கியுள்ளது.உடுமலை மற்றும் குடிமங்கலத்தில் 179 துவக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 34 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்திலும், கல்வித்துறை அலுவலகங்களிலிருந்து, பள்ளி நிர்வாகத்தினர் புத்தகங்களை எடுத்து வந்தனர். நடப்பு கல்வியாண்டு முதல், அரசின் மூலமே,அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் மற்றும் நலத்திட்ட உதவி பொருட்கள் நேரடியாக கொண்டு சேர்க்கப்படும் என அறிவித்தது. உடுமலை மற்றும் குடிங்கலம் வட்டாரங்களில், புத்தகங்கள் இருப்பு வைக்கப்படும் மையப்பள்ளிகளுக்கு கல்வித்துறையின் மூலம் புத்தகங்கள் வழங்கப்பட்டன. தற்போது, அங்கிருந்து, வரிசைப்படி, வாகனம் மூலம், புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக கொண்டு சேர்க்கும் பணிகள் துவங்கியுள்ளன. அதேபோல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும், முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வரப்படுகின்றன.

பிளஸ் 2 தேர்வில் மறுமதிப்பீடு 'நோ'

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியாகின. மாணவர்களுக்கு, 'டிஜி லாக்கர்' என்ற, டிஜிட்டல் முறையில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடைத்தாள் ஆய்வுக்கு, ஜூன், 5க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. விடைத்தாள் ஆய்வில், மதிப்பெண் மாற்றம் இருந்தால், விண்ணப்பித்தோருக்கு கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பித்தோர் தேவைப்பட்டால், விடைத்தாள் நகலை ஆன்லைனில் பெறலாம்.
இதற்கு, ஜூன் 14 முதல், 19க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நகல் கிடைத்த பின், விடைத்தாளில் கூட்டல் பிழைகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி மதிப்பெண் கேட்கலாம். விடைகள் மதிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தாலும், விடைத்தாள் நகல் கிடைத்த ஏழு நாட்களில், மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆனால், 'திருத்தப்பட்ட விடைகளுக்கு, மறுமதிப்பீடு வழங்கப்படாது' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கல்விதரம் மேம்படுத்த 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு.......

வேலூர்: கல்வி தரத்தை மேம்படுத்த `வேலூர் மாவட்டம்'' 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பதற்கு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. மேலும் 3 ஆயிரம் தனியார் பள்ளிகள் மற்றும் 421 நர்சரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 30 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவுப்படி உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.
மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் முதன்மை கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் அதிகளவு அரசு பள்ளிகள் உள்ளதால் பல ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் மாவட்டம் வேலூர் கல்வி மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டம் என பிரிக்கப்பட்டது.
தற்போது பிரிக்கப்பட்ட இரு கல்வி மாவட்டங்களிலும் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகமாக உள்ளது. இதில் அரசு பள்ளிகளே அதிகமாக உள்ளதால் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பள்ளிகளை முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. அதேபோல் அதிகளவு அரசு பள்ளிகளும், அதிகளவு மாணவர்களும் படிப்பதால் வேலூர் மாவட்டம் கல்வி தரவரிசைப்பட்டியலில் பின்தங்கியே உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் கல்வி அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தின் கல்வி தரத்தை மேம்படுத்த அதை 2 கல்வி மாவட்டங்களாக உள்ளதை 3 கல்வி மாவட்டங்களாக பிரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதாவது தற்போது வேலூர் கல்வி மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டம் என இரு கல்வி மாவட்டங்களாக உள்ளது. இதை இன்னொரு மாவட்டமாக ராணிப்பேட்டை கல்வி மாவட்டமாக பிரிப்பதற்கு பள்ளிக் கல்வி இயக்குனரிடம் முதன்மை கல்வி அதிகாரி அறிக்கை அனுப்பி உள்ளார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைமையாசிரியர் பணியிடம் நிரப்ப பட்டதாரி ஆசிரியர்கள் தீர்மானம்......

மாநில முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மண்டல வாரியாக தகவல் தொழில்நுட்பப் பயிற்சிக்கான திட்டமிடல் கூட்டம் மற்றும் பணிமனைக்கான ஆசிரியர்களின் பெயர் பட்டியல் -பணிவிடுவிப்பு சார்ந்து.....

Click Here

பிளஸ் 2 மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு.....

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பிளஸ் 2 தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நேற்று இணையதளம் மூலம் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. இதில், மதிப்பெண்கள், கூட்டு எண்ணிக்கையை, மாணவர்கள் ஆய்வு செய்யலாம். 
கூட்டலில் பிழை இருந்தால், மறு கூட்டலுக்கும், விடைகளுக்கு, சரியாக மதிப்பீடு வழங்கவில்லை என்றாலும், சில விடைகள் திருத்தப்படாமல் விடுபட்டிருந்தாலும், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர். scan.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். பின், அதை இரு நகல்களாக எடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில், இன்று முதல், 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளை விடுமுறை என்பதால், விண்ணப்பிக்க முடியாது என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

பாலிடெக்னிக் தேர்வு 5ம் தேதி 'ரிசல்ட்'

டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்வு முடிவு கள், ஜூன், 5ல் வெளியாகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள, 511 பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நான்கு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இவர்களுக்கான தேர்வுகள், ஏப்ரலில் முடிந்தன. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகின்றன.முடிவுகளை, தமிழ்நாடு தொழிற்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின், www.tndte.gov.in, intradote.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

7th PAY COMMISSION ஊதிய குழு பரிந்துரை : கருத்து கேட்பு முடிவு......

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான, கருத்து கேட்பு கூட்டம், சென்னையில், இன்று நிறைவு பெறுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், 2016ல் அமல்படுத்தப்பட்டன. அதை, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, பிப்., 22ல், முதல்வர் பழனிசாமி தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ஊதிய விகிதங்களை மாற்றிஅமைப்பது குறித்து, பரிந்துரைகள் அளிக்க, ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது.இக்குழு, சென்னை, கடற்கரை சாலையில் உள்ள, லேடி வெலிங்டன் பள்ளியில், மே, 26, 27ல், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது.
இரண்டு நாட்களில், 150க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், கோரிக்கை மனு அளித்தனர்.இரண்டாம் கட்டமாக, நேற்று விடுபட்ட சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களிடம், கருத்து கேட்கப்பட்டது. இன்று மாலையுடன், கருத்து கேட்பு நிகழ்ச்சி முடிகிறது. 

அரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போளூர் விஜயலட்சுமிக்கு குவியும் பாராட்டுகள்!

போளூர் : ஐஏஎஸ் என்று சொல்லப்படும் இந்திய குடிமைப் பணியில் அரசுப் பள்ளியில் படித்த போளூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வெற்றி
பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக தேர்வு எழுதிய ஆயிரத்து 99 பேரின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என்று இரண்டு பிரிவுகளில் இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
Thiruvannamalai government school student Vijayalakshmi cleared her IAS exams
இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று டிசம்பர் மாதம் மெயின் தேர்வை எழுதினர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 961 பேருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மனிதநேய அறக்கட்டளையில் பயின்ற 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், விஜயலட்சுமி பாத்திரக்கடையின் உரிமையாளருமானவர் ஜெயகுமார். இவரின் மகள் விஜயலட்சுமியும் நடந்து முடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடக்கக்கல்வியை அங்குள்ள நர்சரிப் பள்ளியொன்றில் பயின்ற விஜயலட்சுமி, மேல்நிலைக்கல்வியை திருவண்ணாமலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பயின்றுள்ளார். அரசுப் பள்ளியில் பயின்றாலும் மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் அனைவரிடமும் இருந்து விஜயலட்சுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

வெள்ளி, 2 ஜூன், 2017

செங்கோட்டையன் - உதயசந்திரன் கூட்டணி: ரேங்க் முறை ஒழிப்பு முதல் ஒளிவுமறைவற்ற பணிமாறுதல் கலந்தாய்வு வரை - கலக்கும் பள்ளிக்கல்வித்துறை

லஞ்சத்தை ஒழிக்க CEO, DEEO அலுவலகங்களில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரை சீருடையில்லாமல் பணியில் அமர்த்தியிருக்கிறாராம் அமைச்சர்  செங்கோட்டையன்"
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே இருக்கும் குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ளது தென்னை மரங்கள் சூழ்ந்த அந்த பிரமாண்ட வீடு. சனி, ஞாயிறு என்றாலே காலை ஏழு மணியில் இருந்தே அந்த வீட்டில் ஜன நடமாட்டம் தொடங்குகிறது. வெயில் ஏற ஏற அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் கூட்டமும் அதிகரிக்கத் தொடங்குகிறது. அதுதான் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் வீடு.


எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டவுடன் அவரது அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றவர் செங்கோட்டையன். கோபிச் செட்டிப்பாளையம் தொகுதியில் இதுவரை எட்டு முறை வெற்றி பெற்றவர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகச் சென்னையில் தனது அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வெள்ளி இரவு புறப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை கோபி வீட்டுக்கு வந்துவிடுகிறார். அவர் எழுந்து வாக்கிங் வரும்போதே மக்கள் கையில் மனுக்களோடும், கோரிக்கைகளோடும் வீடு தேடி வந்துவிடுகின்றனர்.
கைலி பனியனோடு காட்சியளித்தபடியே மனுக்களை வாங்கி தனது உதவியாளர்களிடம் கொடுக்கும் செங்கோட்டையன், எந்தெந்த துறைக்கு மனுக்கள் வந்திருக்கிறது என்பதையும் துறை வாரியாக பிரித்து அந்தந்த துறைகளுக்குத் தனது பரிந்துரையோடு அனுப்பி வைக்கிறார். இப்படியே சுமார் பதினோரு மணி வரை மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொள்ளும் செங்கோட்டையன், மேலும் அந்தந்த வார நாள்களில் நடந்த சுப, துக்க நிகழ்ச்சிகளின் பட்டியலோடு கிராமம் கிராமமாகப் புறப்பட்டு விடுகிறார்.
“தமிழக அமைச்சர்களிலேயே ஓர் அமைச்சரின் வீட்டில் இத்தனை ஆயிரம் பேர் வாராவாரம் கூடுகிறார்கள் என்றால் அது செங்கோட்டையன் வீட்டில்தான்” என்று அதிமுக-வினரே கூறுகிறார்கள்.

மேலும், “அமைச்சர் ரொம்ப சீனியர். இடையில் புறக்கணிக்கப்பட்டு இருந்தார். அப்பக்கூட அவர் வீட்டுக்கு ஜனங்க வந்துகிட்டுதான் இருப்பாங்க. இப்பவும் வர்றாங்க. மக்கள் அவரை எப்போதும் ஒரே மாதிரிதான் பாக்குறாங்க” என்கிறார்கள் லோக்கல் அதிமுக நிர்வாகிகள்.
கோபியில் இப்படி என்றால்... சென்னையிலும் அவரது பள்ளிக்கல்வித்துறையிலும்கூட செங்கோட்டையனுக்கு இன்னும் அதே முக்கியத்துவம் இருக்கிறது.
“பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சர் செங்கோட்டையன் என்றதுமே இவர் அங்கே என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எல்லாருக்கும் எழுந்தது. மேலும் கடந்த ஆறு வருடங்களாக பள்ளிக்கல்வித்துறை ராசியில்லாத துறையாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது அமைச்சர் செங்கோட்டையனும், துறையின் செயலாளர் உதயசந்திரனும் சேர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மிக முக்கியமான ஆக்கபூர்வமான மாற்றங்களை செய்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்துகே ராசியான துறையாக அதை மாற்றிவிட்டார்கள்.
உதயசந்திரன் மிகவும் நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர். அவரை அழைத்த அமைச்சர் செங்கோட்டையன், ‘நான் அமைச்சர் ஆவேன்னு எல்லாம் எதிர்பார்க்கலை சார். என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை முன்னேற்ற என்ன நடவடிக்கை எடுக்கணுமோ... அதைச் சொல்லுங்க. நல்லதை செய்வோம்’என்று கூறியிருக்கிறார்.
அதன் விளைவாகத்தான்... தேர்வு முடிவுகளில் ரேங்க் ஒழிப்பு, பதினோராம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, சீருடைகள் மாற்றம் என்று பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் அணி வகுக்கின்றன.
தர வரிசை முறையை ஒழித்ததைத் திரும்பப் பெற வேண்டும் என்று கொங்கு மண்டலத்தை சேர்ந்த கல்வி நிறுவன அதிபர்கள் ‘உரிமையோடு’ அமைச்சரை கோபி வீட்டிலும் கோட்டையிலும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால், அந்த மனுவை வாங்கி அவர்களுக்கு எதிரிலேயே கிழித்துப் போட்டுவிட்டாராம். 
மேலும், ஆசிரியர் இட மாறுதல்கள் இந்த வருடம் எந்த குழப்பமும் இல்லாமல் நேர்மையாக நடந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் செங்கோட்டையன் – உதயசந்திரன் கூட்டணிதான்” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்டக்கல்வி அலுவலகம், முதன்மைக்கல்வி அலுவலகங்களில் எங்கும் எதற்கும் லஞ்சம் பரிமாற்றப்படக் கூடாது என்பதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரை சீருடையில்லாமல் பணியில் அமர்த்தியிருக்கிறாராம் செங்கோட்டையன்.
பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
➤கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது.
➤அடுத்து கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்புக்கு பொது தேர்வு
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையைக் கைவிடப்பட்டது.
➤தேசிய அளவில் நடைபெறும் தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
➤மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதற்காக தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறை ரத்து.
➤ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் வழிகாட்டி கையேடு வழங்கப்படுகிறது.
➤ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உட்பட 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும்
➤ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு,இணையம் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
➤நீட் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த அடுத்த ஆண்டிலிருந்து பயிற்சி அளிக்க ஆலோசனை.
➤ரூ 26,913 கோடி பள்ளிக்கல்விக்கு ஒதுக்கீடு.
➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் பெயர்களை விளம்பரப்படுத்தக் கூடாது.
➤பாடத்திட்டத்தில் யோகா சேர்க்கப்பட உள்ளது.
➤சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்கத் திட்டம்.
➤கட்டாய கல்வி இடஒதுக்கீட்டில் 40 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று +2 பொதுத் தேர்வு முறையில் பல மாற்றம் கொண்டுவரப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
➤மாணவர்களின் மன அழுத்தம் குறையும் வகையில் அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் 200-ல் இருந்து 100ஆக குறைப்பு.
➤3 மணியில் இருந்து 2.30 மணியாக தேர்வு நேரமும் குறைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
➤வகுப்புக்கு ஏற்றவாறு சீருடைகள் மாற்றப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் பள்ளிகள் தொடங்கும் முன்பே அரசாணையாக வெளியிடப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
செங்கோட்டையன் - உதயசந்திரன் கூட்டணியால் மக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்மை தொடரட்டும்.