வியாழன், 4 மே, 2017
ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் அரசாணை பிறப்பிப்பு.
பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் செய்திக்குறிப்பு பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1997 முதல், 2,000 வரையிலான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களில், போதிய ஆட்கள் கிடைக்காததால், வேலை வாய்ப்பு பதிவு மூலம், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, உயர் கல்வி தகுதி பெற்றதற்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங்: சீரானது குளறுபடி
இன்ஜி., கவுன்சிலிங்குக்கான, விண்ணப்ப பதிவில் ஏற்பட்ட குளறுபடி சரிசெய்யப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மே, 1ல் துவங்கியது. அரசு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி மூலம், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதற்காக, www.tnea.ac.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் பதிவு துவங்கியது. மாணவர்களுக்கான விபரங்கள் பதிவு செய்யும் பகுதியில், 15வது பிரிவில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு இணைக்கப்பட்ட விதிகளில் குழப்பம் ஏற்பட்டது. அதே நேரம், சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு விதிகளே இணைக்கவில்லை. அதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இது குறித்து, நமது தினமலர் நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, இன்ஜி., மாணவர் சேர்க்கை குழு, இணையதளத்தை ஆய்வு செய்து, விதிகள் இல்லாத பகுதிக்கு, விதிகளை இணைத்துள்ளது. மேலும், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான விரிவான விதிகள், புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 சேர்க்கை இட ஒதுக்கீடு கட்டாயம்.
பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீட்டு விதியை மீறக் கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.
அனைத்து பள்ளிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து பள்ளிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கடந்த, 1978 மற்றும் 1994ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின் படி, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளும், இட ஒதுக்கீட்டு விதியை கடைபிடிக்க வேண்டும். பொதுப் பிரிவு, 31; பழங்குடியினர், 1; ஆதிதிராவிடர், 18; பிற்படுத்தப்பட்டோர், 20; முஸ்லிம், 3.5; பிற்படுத்தப்பட்டோர், 26.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, பொதுப்பிரிவு பட்டியலும் தயாரிக்கப்பட வேண்டும். இதில், எந்த விதிமீறலும் இருக்கக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, பொதுப்பிரிவு பட்டியலும் தயாரிக்கப்பட வேண்டும். இதில், எந்த விதிமீறலும் இருக்கக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தமிழகத்தில், மொத்தம், 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன.
இவற்றில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள், 8,402 அரசு உதவி பெறும் பள்ளிகள். இவற்றில், 86 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி அருகில் உள்ளோர் நடந்தும், சைக்கிள்களிலும் வருகின்றனர். துாரத்தில் உள்ளோர், பஸ், ரயில், வேன் போன்ற வாகனங்களில் வருகின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள். மாணவர்கள் ஏதேனும் விபத்தில் சிக்கினாலோ, திடீரென நோய் தாக்கினாலோ, அவர்களின் சிகிச்சைக்காக செலவிட, ஏழைப் பெற்றோர்களால் முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மாணவர் மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்த, திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் மற்றும் அதிகாரிகள் குழு, புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

இதன் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, இலவச மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படுகிறது. படிப்பு காலம் முழுவதும், மாணவர்கள், இலவசமாக, தரமான சிகிச்சை பெறும் வகையில், தமிழக அரசே, காப்பீடுக்கான பிரீமியம் தொகையை செலுத்த உள்ளது. 'சட்டசபையில் பட்ஜெட் மானிய கோரிக்கையின் போது, இதற்கான அறிவிப்பு வெளியாகும்' என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோடை விடுமுறையில் பயிற்சி : ஆசிரியைகள் கொந்தளிப்பு.
கோடை விடுமுறையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆசிரியைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில் கணிதம், அறிவியல் பாடங்களுக்கான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி மே, 8 முதல், 12 வரை நடக்கிறது. இதில், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, வருவாய் மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு பாடத்திற்கும் தலா, 50 பேர் தேர்வு செய்யப்பட்டு முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
தென் மண்டலத்தில் கணித பாடத்திற்கு திண்டுக்கல், அறிவியல் பாடத்திற்கு திருச்சியில் உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின், முதன்மை கருத்தாளர்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பர். கோடை விடுமுறையில், ஐந்து நாட்கள் பயிற்சியளிக்கப்படுவதால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியை ஒருவர் கூறியதாவது: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது எனக் கூறும் கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கலாமா.
கோடை விடுமுறையில் பெண் ஆசிரியைகள் வெளிமாவட்டங்களுக்கு சென்று தங்குவதில் சிரமம் உள்ளது. கோடையில் பயிற்சி வகுப்பை கல்வித்துறை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோடை விடுமுறையில் பெண் ஆசிரியைகள் வெளிமாவட்டங்களுக்கு சென்று தங்குவதில் சிரமம் உள்ளது. கோடையில் பயிற்சி வகுப்பை கல்வித்துறை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் அரசாணை பிறப்பிப்பு.
பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் செய்திக்குறிப்பு பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1997 முதல், 2,000 வரையிலான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களில், போதிய ஆட்கள் கிடைக்காததால், வேலை வாய்ப்பு பதிவு மூலம், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, உயர் கல்வி தகுதி பெற்றதற்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களில், போதிய ஆட்கள் கிடைக்காததால், வேலை வாய்ப்பு பதிவு மூலம், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, உயர் கல்வி தகுதி பெற்றதற்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
"TNTET சரியான கால இடைவெளியில் நடத்தாமையால் கடந்த TET கடைசி வாய்ப்பு என கூறிய இயக்குநரின் செயல்முறைகளுக்குத் தடை" - The Hindu
Court injunction on clearing TET in one attempt
- The Hindu News paper
Press Trust of India
CHENNAI
T.N. has not conducted test since 2013, points out petitioner
The Madras High Court has granted an interim injunction restraining the Tamil Nadu government from insisting that teachers clear the Teachers Eligibility Test (TET) in a single attempt to continue in service.
Justice T. Raja was hearing a petition filed by one R. Sathiamurthi, BT Assistant (Science), SKDJ Higher Secondary School, Thiruverkadu, here challenging the directive of the Principal Secretary, School Education Department and Director of School Education that teachers pass TET in one attempt to continue in service.
‘Just and necessary’
The petitioner, while referring to the amendment to the provisions of Right To Education Act, 2009, to provide time till March 31, 2019, submitted that in the interest of justice, it is just and necessary to restrain the School Education Department from insisting on passing Teachers Eligibility Test in a single attempt to continue in service pending disposal.
Mr. Sathiamurthi claimed that as per a February 11, 2011, notification of National Council for Teacher Education and a November 15, 2011, Government Order issued by the School Education Department, respective governments should conduct TET at least once each year.
Therefore, it is mandatory for the government in Tamil Nadu to conduct TET every year, he contended.
Also, the petitioner claimed if necessary, more than one TET examination could be conducted within a single year.
×
Stating that the Tamil Nadu government last conducted TET in 2013, the petitioner said it had not done so in subsequent years and no valid reason had been given.
As the Teachers Eligibility Test was not held, teachers who had not cleared the test but had educational qualification as per Special Rules were appointed.
2017-18 DEE UNIT TRANSFER APPLICATION !!
2017-18 DEE UNIT TRANSFER APPLICATION...DOWNLOAD HERE
...https://app.box.com/s/ozza3mgal4kss6voqrobib26c2fsxerl
...https://app.box.com/s/ozza3mgal4kss6voqrobib26c2fsxerl
2017-18 DEE- NEW MUTUAL TRANSFER APPLICATION. !!
2017-18 DEE- NEW MUTUAL TRANSFER APPLICATION... DOWNLOAD HERE
...https://app.box.com/s/ozza3mgal4kss6voqrobib26c2fsxerl
...https://app.box.com/s/ozza3mgal4kss6voqrobib26c2fsxerl
புதன், 3 மே, 2017
பிளஸ் 2 விடைத்தாளில் 'டவுட்' : 'டம்மி' தேர்வு நடத்தி விசாரணை
பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கையெழுத்து மாறுபட்ட மாணவர்களிடம், அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, 'டம்மி' தேர்வு நடத்தினர். முந்தைய ஆண்டுகளில், பிளஸ் 2 தேர்வில், பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இரு ஆண்டுகளுக்கு முன், தேர்வு நாளில், 'வாட்ஸ் ஆப்'பில், கணித வினாத்தாள் வெளியானது. ௨௦௧௬ல், தனியார் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு, ஆசிரியர்களே தேர்வை எழுதி கொடுத்தது தெரிய வந்தது. இதனால், இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வை, எந்த முறைகேடுக்கும் இடமின்றி நடத்தி, முடிவை வெளியிட, அரசு உத்தரவிட்டு உள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில், விடைத்தாள் தெரிந்தால், அதை ஆய்வுக்கு அனுப்புமாறு, ஆசிரியர்களுக்கு, தேர்வுத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, 500க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் தேர்வுத் துறைக்கு வந்தன. அவற்றை, தேர்வுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாணவர்களையும், பெற்றோரையும் வரவழைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில், கையெழுத்து மாறுபாடு, பேனாவை மாற்றி எழுதியதால் எழுத்துக்களின் நிறம் மாற்றம், எழுத்துக்களின் வடிவத்தில் வித்தியாசம், விடைத்தாளில் அலங்கரிப்பு, ஒரே கேள்வியை இரண்டு முறை எழுதுவது போன்றவை குறித்து விசாரிக்கப்பட்டு உள்ளன.

சில கேள்விகளுக்கு பதில் எழுதுமாறு, மாணவர்களுக்கு தனி அறையில், 'டம்மி' தேர்வு நடத்தப்பட்டு உள்ளது.முடிவில், 'தேர்வை நான் தான் எழுதினேன்; எந்த முறைகேடுக்கும் இடம் அளிக்கவில்லை' என, உறுதிமொழி கடிதம் பெறப்பட்டு உள்ளது. வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள, இந்த உறுதிமொழி கடிதம் பெறப்படுவதாக, அதிகாரிகள் கூறினர்.
CEO, - DEOக்களுக்கு 'டென்ஷன் பிரீ' முகாம்
மதுரையில் அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஒ.,க்களுக்கு புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று (மே 3) துவங்குகிறது.
இதுகுறித்து அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு, விடைத்தாள் திருத்தம், ஆய்வக உதவியாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட்ட கல்வி அதிகாரிகளின் பணிச்சுமை மற்றும் மனச்சுமையை தவிர்க்கவும், கல்வியாண்டை உத்வேகத்துடன் துவங்கும் வகையிலும் இம்முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி செயலாளர் உதயசந்திரன் துவக்கி வைக்கிறார். கல்வி மேம்பாடு, நிர்வாகம் தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் ஒடிசா கூடுதல் தலைமை செயலர் பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இறையன்பு, விஜயகுமார், தாரேஷ் அகமது, நந்தகுமார், எழுத்தாளர்கள் ராமகிருஷ்ணன், டாக்டர் கு.சிவராமன், பேராசிரியர் ஞானசம்பந்தன் மற்றும் கல்வியாளர் பேசுகின்றனர். நாகமலைபுதுக்கோட்டை பில்லர் ஹாலில், நிகழ்ச்சி நடக்கிறது. மே 5 நிறைவு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கிறார், என்றார்.
முதுகலை மருத்துவ படிப்பு : ஐகோர்ட் இன்று உத்தரவு.
முதுகலை மருத்துவ படிப்பில், மாணவர்கள் சேர்க்கை தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
'முதுகலை மருத்துவப் படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கையை, இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்த விதிமுறைகளின் படி நடத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, 10க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், 'மருத்துவக் கல்விக்கான தேர்வுக் குழு வெளியிட்ட விளக்க குறிப்பின் படி, விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்' என, கூறப்பட்டது.மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள், சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய சிறப்பு பெஞ்ச், நேற்று விசாரித்தது.

அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், மணிசங்கர் ஆஜரானார்.மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், பி.வில்சன், விஜயன், வழக்கறிஞர்கள் எல்.சந்திரகுமார், ஜி.சங்கரன், திலகவதி உள்ளிட்டோரும், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், மூத்த வழக்கறிஞர், விஜய் நாராயணன், வழக்கறிஞர் வி.பி.ராமன் ஆஜராகினர். வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், இவ்வழக்கு மீதான உத்தரவை, இன்று பிறப்பிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.
புத்தகங்களை ஆசிரியர்கள் சுமக்க வேண்டாம் : இலவசங்களை வினியோகிக்க புது திட்டம்
பள்ளிகள் திறந்ததும், பாடப் புத்தக கட்டுகளை ஆசிரியர்கள் சுமக்கும் பிரச்னை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. 'புத்தகங்களை கல்வித் துறையே வினியோகிக்கும்' என, அமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த, ஆசிரியர் சங்க கலந்துரையாடல் கூட்டத்திற்குப் பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை, நிதி நிலைமை, சூழலுக்கு ஏற்ப தீர்க்க முயற்சிப்போம். அரசு அறிவித்துள்ள, மாணவர்களுக்கான, 14 இலவச திட்டங்களின் பொருட்களை எடுத்து வந்து, வினியோகம் செய்வதில் சிரமம் இருப்பதாக, ஆசிரியர்கள் கூறினர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், 14 வகை இலவச திட்டங்களுக்கான பொருட்களை, அரசே நேரடியாக பள்ளிகளுக்கு வழங்கும்.
மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் பள்ளி, ரத்த வகை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய, 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தேசிய, சர்வதேச அளவில் தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். புதிய கல்வி ஆண்டில் பாடப் புத்தகங்களில் மாற்றம் இல்லை. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்ததும், லேப் - டாப் வழங்கப்படும். தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் முறைகேடு நடந்திருந்தால், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நிதி இல்லை : அமைச்சர் வருத்தம்கலந்துரையாடல் கூட்டத்தில், 'அரசு பள்ளிகளில், யோகா பயிற்சிக்கு, 13 ஆயிரம் புதிய பயிற்சியாளர்களை நியமிப்பது ஏன்; பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்தலாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறினார்.
இதற்கு பதிலளித்த, அமைச்சர் செங்கோட்டையன், ''13 ஆயிரம் பேர், யோகா பயிற்சி முடித்து, இலவசமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு, யோகா கற்றுத்தர தயாராக உள்ளனர். அரசிடம் நிதி இல்லை; எனவே, கூடுதல் செலவின்றி, இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது,'' என்றார்.

5 மணி நேரமாக கோரிக்கை வைத்த ஆசிரியர்கள் : கலந்துரையாடலில் அதிகாரிகள் தவிப்பு.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேசி, கோரிக்கைகளை கொட்டியதால், அதிகாரிகள் தவித்தனர்.
தமிழகத்தில், 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியாகவும், ஒன்றாக இணைந்தும் போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும், அமைச்சரையும், செயலரையும் சந்திக்க முடியாததால் அதிருப்தியடைந்தனர்.
ஆறு ஆண்டுகளுக்கு பின், பள்ளிக்கல்வி துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, செங்கோட்டையன்,
ஆசிரியர் சங்க நிர்வாகிகளை குளிர்விக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை, தி.நகரில், தன் சொந்த செலவில், நேற்று கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.
இதில், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த, 200 பேர் பங்கேற்றனர்.
சங்க நிர்வாகிகளிடம், அதிகாரிகள் தனித்தனியே, கோரிக்கை மனுக்களை வாங்கினர். அமைச்சர் வந்ததும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பேச அனுமதித்தார். பல மூத்த நிர்வாகிகள், அரசியல்வாதிகள் போல, அமைச்சரையும், அரசையும் வாழ்த்தி பேசி, அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும், 'ஐஸ்' வைத்தனர்.
சங்க நிர்வாகிகள் சுருக்கமாக கோரிக்கைகளை கூற அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், இயக்குனர் இளங்கோவன், அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி பூஜா குல்கர்னி மற்றும் அதிகாரிகள், மேடையில் அமர்ந்து, கோரிக்கைகளை குறிப்பெடுத்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய நிர்வாகிகள், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, நுாற்றுக்கணக்கான கோரிக்கைகளை கொட்டியதால், அதிகாரிகள் தவித்தனர்.
ஆசிரியர்களுக்கு, மதிய உணவாக பிரிஞ்சி, தயிர் சாதம், தக்காளி சாதம் போன்றவையும், இடைவேளையில், கேசரி, வடை, டீ மற்றும் காபியும் தரப்பட்டது. நிகழ்ச்சி முடியும் வரை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், வெளியே அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி நடந்த வளாகத்தில், இரும்பு கேட்டுகள் பூட்டப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Special TET :நனவாகுமா தகுதி தேர்வு : எதிர்பார்ப்பில் 50 ஆயிரம் சிறப்பாசிரியர்கள்
தமிழகத்தில் சிறப்பாசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என, 50 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பில் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இசை, ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல் என இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடங்கள், 2005ம் ஆண்டு முதல் காலியாக உள்ளன.
அரசு பள்ளிகளில் உள்ள நிரந்தர பணியிடங்களில் தேவை கருதி, 2006ல் தொகுப்பூதியம் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட பின், 11 ஆண்டுகளாக கல்வித்துறையில் இவ்வகை ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் நடக்கவில்லை. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2012 முதல் தமிழகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடத்த முடிவான போது சிறப்பாசிரியர்களுக்கான, தகுதித் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில், பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில், அதுதொடர்பான முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்ட நிலையில், சிறப்பாசிரியர் தகுதி தேர்வும் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
செயலாளர் கவனிப்பாரா
இசை ஆசிரியர் கழக செயலாளர் பெரியசாமி, சட்ட ஆலோசகர் வெங்கடேஷன் கூறியதாவது: மாநிலத்தில் 2005ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற இவ்வகை ஆசிரியர் பணியிடங்களில், நிரந்த நியமனங்கள் நடக்கவில்லை. சிறப்பாசிரியர்கள் முறையே லோயர் மற்றும் ைஹயர் கிரேடு படிப்பு, பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள். பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பில்லாததால் பலர், பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளுக்கு தினக் கூலிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர்களாக இருந்தவர்கள் சிறப்பாசிரியர் விஷயத்தில் இதுவரை ஆர்வம் காட்டவில்லை. செயலாளர் உதயச்சந்திரன் பொறுப்பேற்ற பின், மூன்று ஆண்டுகளாக நடக்காமல் இருந்த டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
இதைபோல் 50 ஆயிரம் பேர் எதிர்பார்க்கும் சிறப்பாசிரியர் தகுதித் தேர்வையும் நடத்த செயலர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதைபோல் 50 ஆயிரம் பேர் எதிர்பார்க்கும் சிறப்பாசிரியர் தகுதித் தேர்வையும் நடத்த செயலர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண் இயக்குனராக டி.ஜெகந்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்படி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செயலராக இருந்த ஏ.ராமலிங்கம் கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண் இயக்குனராக இருந்த மைதிலி கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டு,பொதுத்துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வரின் முன்னாள் செயலர் ஏ.ராமலிங்கம், கலை மற்றும் பண்பாட்டுக்கழக ஆணையராகவும், அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் டி.ஜெகந்நாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருகிறார்களா? முதல்வர் அதிரடி
லக்னோ: அரசு பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்களின் புகைப்படங்களை அந்தந்தபள்ளிகளில் பெரிதாக ஒட்டப்பட வேணடும்என உத்தரபிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
யோகியின் அதிரடிகள்
உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர்யோகிஆதித்யநாத் அம்மாநிலத்தில்முதல்வராக பொறுப்பேற்றது முதல்பல்வேறு அதிரடியான உத்தரவுகளைபிறப்பித்து வருகிறார். அரசுஅலுவலகங்களில் துப்பினால் அபராதம்,வருகை நேரம் குறித்து பயோமெட்ரிக் முறை,அதிகாரி மாற்றம், 15 பொது விடுமுறைதினங்கள் ரத்து என அதிரடியானஉத்திரவுகளை பிறப்பித்து வருகிறார்.
ஆசிரியர் புகைப்படம்
நேற்று 02.05.17) அவரின் அடுத்த அதிரடி,அரசு பள்ளிகளில் வேலைபார்க்கும்ஆசிரியர்களின் புகைப்படங்களை அந்தந்தபள்ளிகளில் பெரிதாக ஒட்டப்பட வேண்டும்எனவும், ஒட்டப்பட்டுள்ள படங்களில் உள்ளஆசிரியர்கள் சரியாக பள்ளிக்குவருகிறார்களா என அதிகாரிகள் சோதனைசெய்ய வேண்டும். அப்படி சோதனைசெய்யும்போது மாணவர்களிடம்புகைப்படத்தை காட்டி சரியாகவருகிறார்களா என கேட்டு உறுதிப்படுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கல்வியின் நிலைமை
உ.பி., முதல்வர் இது குறித்து கூறும்போது:உத்திரபிரதேசத்தில் உள்ள அரசுபள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாகவேலைக்கு வராததால் கல்வியின் நிலைமைமிக மோசமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல்அதிக சம்பளம் வாங்கும் அரசு பள்ளிஆசிரியர்கள் பாடம் எடுக்க தங்களுக்குபதிலாக வேறு ஒருவரை அனுப்புவதாகபுகார் வந்ததால் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டதாகவும், கல்வியின் தரத்தைமேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைஎடுப்பதாகவும் தெரிவித்தார்.
அரசு நடவடிக்கை
மேலும் அவர் கூறும்போது: அரசுபள்ளிகளில் ஆசிரியர்கள் ஒழுங்காகபள்ளிக்கு வரவேண்டும். அதிகாரிகள்மாணவர்களிடம் புகைப்படத்தில் உள்ளஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? எனஅடிக்கடி ஆய்வு செய்து உறுதிப்படுத்தவேண்டும், அப்படி வேலை செய்யாதஆசிரியர்கள் சம்பளம் வாங்கமுடியாது எனதெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)