>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 8 ஏப்ரல், 2017


1,861 மையங்களில் 'டெட்' தேர்வு : கண்காணிப்பாளர் நியமனம் தீவிரம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29ம் தேதியும், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30லும் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, மார்ச், 23ல், முடிந்தது. இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, 8.47 லட்சம் விண்ணப்பங்கள் விற்றன. அவற்றில், இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு, இரண்டு லட்சத்து, 37 ஆயிரத்து, 293 பேர்; பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, ஐந்து லட்சத்து, இரண்டாயிரத்து, 964 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை, பள்ளிக் கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா மேற்கொண்டு வருகிறார். தேர்வுக்கு, 1,861 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 598 மையங்கள், ஏப்., 29 தேர்வுக்கானவை. தற்போது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தலைமையில், கண்காணிப்பாளர், பறக்கும் படையினருக்கான நியமனம் நடந்து வருகிறது.


தினமலர் செய்தி எதிரொலி : பிளஸ் 2 தேர்வில் போனஸ் மதிப்பெண்

நமது நாளிதழ் செய்தியை அடுத்து, பிளஸ் 2 விலங்கியல் தேர்வில், மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல் துவங்கி, 31ல் முடிந்தது.    இறுதி நாளில் கணிதம், அறிவியல் இணைந்த பிரிவு மாணவர்களுக்கு, உயிரியல் தேர்வு நடந்தது. அதில், விலங்கியலில், 75 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெற்றிருந்தன. 

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரு வகையான வினாத்தாள்களில், 'ஏ' வகை வினாத்தாளில்,                 14ம் எண் மற்றும், 'பி' வகையில், 16ம் எண் கேள்விகளுக்கு, சரியான விடையை தேர்வு செய்வதில், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. 'பிறந்த குழந்தையின் உடல் எடையில், எத்தனை சதவீதம் நீர் இருக்கும்' என, கேள்வி இருந்தது. இதற்கு, 85 முதல், 90 சதவீதம் என்பது சரியான விடை. ஆனால், வினாத்தாளில் இருந்த நான்கு விடைக்குறிப்புகளில், இந்த விடை இல்லை. எனவே, இந்தக்       கேள்விக்கு போனஸ் மதிப்பெண் வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலை யில், நேற்று முன்தினம் விடை      திருத்தம் பணி துவங்கியது. அப்போது, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விடை தொகுப்பில், 'வினாத்தாளில் இடம் பெற்ற விடைகளில், 80 முதல், 90 சதவீதம் என்பதையோ அல்லது    விடைக்குறிப்பில் இல்லாத, 85 முதல், 90 சதவீதம் என்ற சரியான விடையை, மாணவர்கள்                 சிந்தித்து எழுதியிருந்தாலும், மதிப்பெண் அளிக்கலாம்' என, கூறப்பட்டுள்ளது.

       சிறப்பு ஆலோசனை மையங்கள் பிளஸ் 2


          மாணவர்கள்




குழந்தைகளின் புத்தக சுமை : பெற்றோருக்கு மனச்சுமை அமலுக்கு வருமா மெட்ரிக் இயக்குனர் உத்தரவு.



கலந்தாய்வுக்கு காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்.


TNTET - 2017:ஆசிரியர் தகுதித்தேர்வில் பழைய ‘வெயிட்டேஜ்’ முறையே கணக்கிடப்படும் | வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டும் மையம் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
 வழிகாட்டும் நிகழ்ச்சி
 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளவும், என்ன படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும் அரசு சார்பில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை கருத்தரங்கு முகாம்கள் நடத்த திட்டமிட்டது. அதன்படி மாநகராட்சி, மாவட்ட தலைநகரங்கள், நகராட்சிகளில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் வட்டம் பொன்மார் பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஷ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரியில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது.கலெக்டர் பொன்னையா தலைமை வகித்தார். கருத்தரங்கை அமைச்சர் செங்கோட்டையன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கையேட்டை அவர் வெளியிட்டார்.
சுய வேலைவாய்ப்பு
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:- இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் இது போன்ற கருத்தரங்கு நடத்துவதன் மூலம், எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும். இன்று (வெள்ளிக்கிழமை) ஊராட்சி ஒன்றியங்களில் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஏழை மாணவர்களின் அறிவுத்திறனை அறிந்து அவர்கள் எந்த துறையில் ஆர்வமாக உள்ளார்களோ அந்த துறையில் வேலைவாய்ப்பு சார்ந்த உயர்கல்வியை தொடர ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் அதனை கற்க கல்வி நிறுவனங்கள் எங்கு அமைந்து உள்ளன என்பதற்கான வழிக்காட்டு கையேடும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த கையேட்டில் கல்விஉதவித்தொகை சார்ந்த விவரங்கள், சுய வேலைவாய்ப்பு, திறன்மேம்பாடு பயிற்சி பற்றி விளக்கப்பட்டுள்ளது. வழிகாட்டும் மையம் வரும் கல்வி ஆண்டு முதல் உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டும் மையம் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். இணை இயக்குநர் பி.குப்புசாமி, எம்.கோதண்டபாணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ச.ராஜேந்திரன், பிரின்ஸ் கல்விக்குழும தலைவர் கே.வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் முதன்மை கல்வி அலுவலர் உஷா நன்றி கூறினார்.
 புதிய பாடத்திட்டம் முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- 'நீட்'தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கக்கோரி சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதால் விதிவிலக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை எப்படி அமைக்கலாம் என அரசு ஆய்வு செய்து வருகிறது. இதனை கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது சட்டமன்றத்தில்அறிவிக்க உள்ளோம். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விரைவில் அச்சிடும் பணி தொடங்கப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வில் பழைய 'வெயிட்டேஜ்'முறையே கணக்கிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் தகுதிதேர்வை தள்ளிவைக்கலாம்!- தினமலர் (உங்கள் பக்கம் பகுதி பதிவு)

புலவர் சுப்பு.லட்சுமணன், மாவட்டக் கல்வி அலுவலர் (பணி நிறைவு), பீர்க்கன்காரணை, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
ஆசிரியர் தகுதித் தேர்வு, 2003ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது; 2010 முதல், பிற மாநிலங்களிலும், தமிழகத்தில், 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.
பின், 2012ல் அடுத்த தேர்வு நடைபெற்றது. அதன் பின், ஐந்து ஆண்டுகள் கழித்து, 2017 ஏப்ரல், 29, 30ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது.இதற்கிடையில், '2012க்கு பின் பணியில் சேர்ந்தோர், 2016க்குள் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றால், பணி வாய்ப்பு உறுதி செய்யப்படும்' என, தமிழக அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அரசே ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்தாதது தவறு; இது, மத்திய அரசின் அரசாணையை மீறிய செயல்!ஐந்தாண்டில், மூன்று முறை தேர்வு நடைபெற்று இருந்தால், தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் அடுத்தடுத்த தேர்வில் வெற்றி பெற்றிருப்பர்; பணி நிரந்தரம் ஆகி இருக்கும். புதிய ஆசிரியர்களுக்கும் பணி வாய்ப்பு கிடைத்து இருக்கும். இப்படி, அரசே ஆசிரியர்களை பழிவாங்குவது நியாயமா?தமிழக அரசு, தன் தவறை உணர்ந்து, 2012லிருந்து, 2017 மார்ச் முடிய பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம். தற்போது நடைபெறும் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, புதிதாக பணி வழங்கலாம்.
வருங்காலத்தில் மத்திய அரசின் ஆணைப்படி, அவ்வப் பருவங்களில் தகுதித் தேர்வு நடைபெற வேண்டும்.வரும், ஏப்., 29, 30ல் நடைபெறும் தகுதித் தேர்வை ஓரிரு திங்கள் தள்ளி வைக்கலாம். ஐந்தாண்டு தள்ளியவர்களுக்கு, இரு திங்கள் பொறுக்க முடியாதா...ஏனெனில், 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முடிந்து விட்டது.
இனி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்குச் செல்ல வேண்டும்; ஏனைய ஆசிரியர்கள்,பள்ளித் தேர்வை நடத்தி, விடைத்தாள் திருத்த வேண்டும்.பின், தேர்வு முடிவு அறிவிக்க வேண்டும்.கோடை விடுமுறையில் தான், ஆசிரியர்களுக்கு படிக்க, தயாரிப்பு பணி செய்ய போதிய காலம் கிடைக்கும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் முடிய பள்ளி உண்டு. பள்ளி பணி பாதிக்க வாய்ப்பு ஏற்படும்.எனவே, அரசும், துறை அலுவலர்களும் ஆராய்ந்து, தகுதித் தேர்வை, ஜூன், ஜூலையில் வைக்க ஏற்பாடு செய்யலாம்!

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ஏப்ரல் 10 முதல் தொடங்குகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் தொடர்ந்து 30 வேலை நாட்களில் எவ்வித முன்னறிவிப்பின்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாக கருத வேண்டும்.
பள்ளியே செல்லா குழந்தைகள், எட்டாம் வகுப்பு முடிக்காமல் இடை நிற்பவர்கள் கண்டறியப்பட வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடைபெற வேண்டும்.
18 வயதுக்குட்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளி மாணவர்களையும் கண்டறிய வேண்டும்.
வகுப்பு மாணவர்களிடம் கருத்துகேட்பு நடத்தி இடைநின்ற குழந்தைகள் உள்ளனரா என்று கேட்டறிதல் வேண்டும்.
கடந்த ஜூன் முதல் இந்நாள் வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் வருகைப் பதிவேட்டை மாதவாரியாக சம்மந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Shaala siddhi எப்படி முடிப்பது? தயார் செய்ய வேண்டியது என்னென்ன? பயனுள்ள குறிப்புகள் உங்களுக்காக…

வரும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் shaala siddhi பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.அதற்காக தலைமை ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டிய தகவல்களை பற்றி பதிவு இதோ உங்களுக்காக.
1.students profilesஇந்த பகுதில் நாம் 2016-2017 நடப்பு கல்வியாண்டின்மாணவர்கள் விவரத்தை பதிய வேண்டும். இனவாரியாக sc st obc General minority totalஇதில் minority பகுதியில் bcm bcc மாணவர்களை பதிய வேண்டும் . இவர்களை தவிர்த்து மற்றவர்களை obc ல் பதிய வேண்டும் .
2. Class wise annual attendance rate – இந்த பகுதியில் 2015-2016 கல்வி ஆண்டின் மாணவர்களின் ஆண்டு சராசரி வருகை சதவீதத்தை பதிவிட வேண்டும் . வகுப்புவாரியாக ஆண் பெண் தனிதனியாக கணக்கிட வேண்டும். இதனை கணக்கிடும் முறையை பற்றி பார்ப்போம் . உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 5 ஆண் மாணவர்கள் எனில் அவர்களின் மொத்த வருகை நாட்கள் 206,210,207,200,198 எனில் மொத்த கூடுதல் 1021/1050*100=வருகை சதவீதம் .இது போன்று அனைத்து வகுப்புகளும் ஆண் பெண் என்று தனி தனியாக கணக்கிட்டு தயார் செய்ய வேண்டும் .
3.learning outcomes annual report பகுதி -இங்கு 2015-2016 கல்வி ஆண்டின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களின் ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும் . உதாரணமாக ஒன்றாம் மாணவன் முதல் பருவம் 350/400 இரண்டாம் பருவம் 370/400 மூன்றாம் பருவம் 360/400 எனில் 1080/1200*100= என்ற படி கணக்கிட்டு கொள்ள வேண்டும் . இவ்வாறு வகுப்புவாரியாகதயார் செய்து கொண்டு கீழ்கண்ட இடைவெளியில் <33 .="" 33-40="" p="">
4.teachers profiles இதில் 2016-2017 நடப்பு கல்வியாண்டின் பணிபுரியும் ஆசிரியர் விவரம் ஆண் பெண்வாரியாக பதிவிட வேண்டும். இந்த பகுதியில் trained , untrained என பிரிக்கப்பட்டுள்ளது . நமது பள்ளியில் அனைவரும் trained teacher . நடுநிலை பள்ளியில் part-time teachers இருந்தால் அவர்களை untrained பகுதியில் காட்டக்கூடாது . Only subject teachers மட்டும். Untrained teacher's எனபது high , her secondary level pta staff -ஐ குறிக்கும்.
5. Teachers attendance இந்த பகுதியில் 2015-2016 கல்வியாண்டில் ஆசிரியர்கள் விடுப்பு விவரம் பதிய வேண்டும் . விடுப்பை கணக்கிடும் போது ஒருமாதத்திற்கு மேல் விடுப்பு எடுத்தவர்கள் , ஒரு வாரத்திற்க்குள்ளாக விடுப்பு எடுத்தவர்கள் என தனி தனியாக கணக்கிட்டு குறித்து கொண்டு பதிவேற்றம் செய்யவேண்டும் . Cl தவிர பிற விடுப்புகள் .

பட்டப் படிப்புகள்: பல்கலை அறிவிப்பு.

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக கூடுதல் தேர்வாணையர் ராமு தெரிவித்துள்ளதாவது:
இளங்கலை, முதுகலை பட்டங்கள், பி.எட்., பி.எல்.ஐ.சி., எம்.எல்.ஐ.,சி., பி.ஜி.எல்., சான்றிதழ், பட்டய சான்றிதழ் படிப்புக்கு ஏப்., 2017ம் ஆண்டு நடக்கும் அல்பருவ தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்.,17 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இளங்கலைக்கு தேர்வு மே 5, முதுகலை ஜூன் 2, சான்றிதழ், பட்டய சான்றிதழ் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,விற்கு ஜூன் 12ம் தேர்வுகள் துவங்குகின்றன. ஏப்., 24 வரை அபராதத்துடன் விண்ணப்பம் பெறப்படும். கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்தி அதற்கான 'இ ரிசிப்ட்'யும் இணைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

இசை பள்ளிகள் கல்லூரிகளுடன் இணைக்கப்படுமா : பல்கலை சான்றிதழ் எதிர்பார்க்கும் மாணவர்கள்

'தமிழகத்தில் இசை பள்ளிகள் கல்லுாரிகளுடன் இணைக்கப்பட்டு, பல்கலை சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்,' என இசை ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தினர்.
எல்லோரும் இசை கலையை கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நெல்லை, சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம் உட்பட 17 மாவட்டங்களில் இசை பள்ளிகள், மதுரை, திருவையாறு, கோவை, சென்னை ஆகிய நான்கு இடங்களில் இசை கல்லுாரிகள் செயல்படுகின்றன. பள்ளிகளில், குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், வயலின் உட்பட சான்றிதழ் படிப்புகளும், கல்லுாரிகளில் குரலிசை, தவில், வயலின், மிருதங்கம், நாதஸ்வரம் உட்பட டிப்ளமோ சான்றிதழ்களாகவும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் சேர பள்ளி, கல்லுாரிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி தகுதி இருந்த நிலையில், கல்லுாரிக்கு மட்டும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி என இந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிற்கு நுாற்றுக்கும் மேற்பட்டோர் பட்டம் பெறுகின்றனர். இதன் மூலம் கோயில் அர்ச்சகர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இசை இன்ஸ்டிடியூட்களில் பணி வாய்ப்பு கிடைக்கின்றன. இசை ஆசிரியர்கள் தேவை, வெளிநாடுகளில் அதிகம் உள்ளன.
ஒரே வகை பாடத்திட்டம்: இசை மற்றும் கல்லுாரி சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்பிற்கான பாடத்திட்டங்கள், ஒரே மாதிரியாக உள்ளன. பள்ளியில் வழங்கும் சான்றிதழில் எந்த உயர் அலுவலரின் கையொப்பமும் இல்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தாலும், இசையில் உயர்நிலை படித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் சம்பள விகிதத்திலும் அதிகம் மாற்றம் இல்லை. இதனால் இசைப் பள்ளிகளை, கல்லுாரிகளுடன் இணைத்து, தமிழ்நாடு அரசு கவின்கலை மற்றும் இசை பல்கலையின் உறுப்புக் கல்லுாரிகளாக இவற்றை மாற்றம் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இசை ஆசிரியர்கள், மாணவர்கள் கூறியதாவது: இசை பள்ளிகள் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., கல்லுாரிகள் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது என்பது தான் இரண்டிற்குமான வித்தியாசம். பாடத்திட்டங்கள், ஆசிரியர் சம்பள விகிதம் உட்பட பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இதனால் பள்ளிகள், கல்லுாரிகளுடன் இணைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கவின் கலை மற்றும் இசை பல்கலையின் கீழ் செயல்பட்டால் இப்படிப்புகளுக்கு இன்னும் மவுசு அதிகரிக்கும். சாதாரண சான்றிதழுக்கு பதில், பல்கலை அளவிலான சான்றிதழ் வழங்கப்படும்பட்சத்தில், இப்படிப்பிற்கான எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
வெளிநாடுகளில் மதிப்பு அதிகரிக்கும். இப்பள்ளி, கல்லுாரிகள் கலை பண்பாட்டுத்துறை உதவி, துணை இயக்குனர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இவர்களுக்கு, இசை அறிவு என்பதை கூடுதல் தகுதியாக்க வேண்டும். தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் இசை படிப்புகளுக்கான எதிர்காலம் சிறக்கும், என்றனர்.

இலவச எல்.கே.ஜி., அட்மிஷனில் சிக்கல் : தனியார் பள்ளிகள் திடீர் முட்டுக்கட்டை.

நிலுவைத்தொகை, 124 கோடி ரூபாயை தராவிட்டால், வரும் கல்வி ஆண்டில், இலவச மாணவர் சேர்க்கையை நடத்த மாட்டோம்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத இடங்களில், ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கான கட்டணம், பள்ளிக்கல்வித் துறை சார்பில், மானியமாக வழங்கப்படும்.
இதன்படி, இரண்டு ஆண்டுகளாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, தமிழக அரசு, 300 கோடி ரூபாய் வரை வழங்காமல், பள்ளிகளுக்கு பாக்கி வைத்துள்ளது. அதனால், பல பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளன.
இது குறித்து, தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது: முதல் கட்டமாக, 124 கோடி ரூபாய் தருவதாக அரசு அறிவித்துள்ளது. அந்த நிதி இன்னும் பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை. கோடை விடுமுறைக்குள், பாக்கி தொகையை தர வேண்டும். இல்லையெனில், இலவச அட்மிஷன் வழங்க முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெறுவது எங்கே? : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு.

'நீட்' தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எங்கே பயிற்சி பெறுவது என தெரியாமல், அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
வரும் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
இந்த தேர்வு, அனைத்து மாநிலங்களிலும், மே, 7ல் நடக்கிறது. இதற்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு தனியார் மையங்களில், 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை துவக்கி உள்ளனர். ஒரு மாத பயிற்சிக்கு, 20 ஆயிரம் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும், நகர, கிராமப்புற மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமா என, தவித்து வருகின்றனர்.
இது குறித்து பெற்றோர் கூறியதாவது: 'நீட்' தேர்வு தமிழகத்துக்கு வராது என, ஆளும் கட்சி அமைச்சர்கள் கூறி வந்தனர். ஆனால், இதுவரை அதற்கான சட்ட அனுமதியை பெறவில்லை. அதை நம்பி, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி எடுக்கவில்லை. எனவே, அரசு பள்ளி மாணவர்கள் அதிக சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளிக்கல்வித் துறையோ, 'நீட்' தேர்வுக்கு பொறுப்பான சுகாதாரத் துறையோ, அரசு பள்ளி மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. 'நீட்' தேர்வுக்கு தயாராக, தமிழக அரசு பயிற்சி தராததால், ஏழை மாணவர்களின், டாக்டராகும் கனவு நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
'நீட்' விண்ணப்பத்தில் பிழையா? : ஏப்., 12 முதல் திருத்தலாம் - 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோர், சுய விபரங்களை, ஏப்., 12 முதல் திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு முதல், தேசிய அளவிலான, 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்., 5ல் முடிந்தது. இந்நிலையில், விண்ணப்பித்தோரின் சுய விபரங்கள் மற்றும் கூடுதலாக சேர்க்க வேண்டிய விபரங்களை சரி செய்ய, சி.பி.எஸ்.இ., அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஏப்., 12ல் வெளியாகும் என, அதிகாரிகள் கூறினர்.

CBSE., பள்ளிகளில் ஒரே மதிப்பீட்டு முறை : வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வியாண்டிலிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரை, நாடு முழுவதும் ஒரே மதிப்பீட்டு முறை அறிமுகமாகிறது. நாடு முழுவதும், 19 ஆயிரம் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் இயங்குகின்றன.
இந்தப் பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டு வரை, 10ம் வகுப்புக்கு, சில மாணவர்களுக்கு பொது தேர்வும், சில மாணவர்களுக்கு பள்ளி அளவிலான தேர்வும் நடத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டிலிருந்து, 10ம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளி அளவில், சிறப்பு மதிப்பீட்டு முறை மேற்கொள்ளப்பட்டு, 'கிரேட்' என்ற தர வரி சை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் ஒரே வகையான மதிப்பீட்டு முறையை பின்பற்ற, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.
இரண்டு பருவத்துக்கும், தனித்தனியே மதிப்பீடு செய்யப்பட உள்ளது. 20 மதிப்பெண்களுக்கு மாத வாரியாகவும், 80 மதிப்பெண்களுக்கு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வு அடிப்படையிலும், மதிப்பீடு செய்யப்படுகிறது.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., சேர்மன், ஆர்.கே.சதுர்வேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில் ஒவ்வொரு விதமான மதிப்பீட்டு முறையை கையாள்வதால், நாடு முழுவதும், ஒரு பள்ளியிலிருந்து, மற்றொரு பள்ளிக்கு மாறும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. தேசிய அளவில் ஒரே மதிப்பீட்டு முறை இருந்தால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும், அதை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மாடல் தயாரித்து கற்றல் : நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களே செயல்திட்ட மாடல்களை
தயாரித்து, கற்கும் முறை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 'செயல் திட்டவழிக் கற்றல்' திட்டத்தை தொடக்கக் கல்வித்துறை செயல்படுத்தி உள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தாங்களே அறிவியல், கணித பாடங்களுக்குரிய செயல்திட்ட மாதிரிகளை தயாரித்து கற்க உள்ளனர். இதற்காக மாவட்டத்திற்கு 35 நடுநிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒரு பள்ளிக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் மாவட்டத்திற்கு 1.05 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம்
மாடல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொள்ளலாம். இதன்மூலம் மாணவர்
களின் அறிவியல் சிந்தனை துாண்டப்பட்டு, படைப்பாற்றல் அதிகரிக்கும்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அறிவியல், கணித ஆர்வமுள்ள 10 மாணவர்கள் மற்றும் ஆசிரியரை கொண்ட ஒரு குழு அமைத்து மாடல்கள் தயாரிக்கப்படும். கடைகளில் விற்கும் மாடல்களை வாங்கி பயன்படுத்தினால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாடல்கள் மூலம் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படும், என்றார்.

ஆய்வக உதவியாளர் பணி: நாளை சான்றிதழ் சரிபார்ப்பு.

ஆய்வக உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாநிலம் முழுவதும், நாளை துவங்குகிறது. அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்
களுக்கு, 2015, மே, 30ல் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வு முடிவுகள், மார்ச், 24ல் வெளியாகின. இவர்களுக்கு, நாளை முதல், வரும், 11ம் தேதி வரை, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலம், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.எழுத்துத் தேர்வுக்கு, 150; வேலைவாய்ப்பு பதிவில், இரண்டு ஆண்டு வரை காத்திருப்போருக்கு, 2; நான்கு ஆண்டுகளுக்கு, 4; ஆறு
ஆண்டுகளுக்கு, 6; எட்டு ஆண்டுகளுக்கு, 8; பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போருக்கு, 10 மதிப்பெண்கள் என, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் தரப்படுகிறது.பிளஸ் 2வுக்கு, இரண்டு; பட்டம் மற்றும் அதற்கு மேலான படிப்புகளுக்கு, மூன்று மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆய்வக உதவி யாளராக அனுபவம் இருந்தால், இரு மதிப்பெண்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
'பத்தாம் வகுப்பு முடித்த பலர், கல்லுாரி களுக்கு செல்ல முடியாமல், தொலை நிலை கல்வியில், டிப்ளமோ முடித்துள்ளனர். பட்ட படிப்புக்கு வழங்குவது போல, டிப்ளமோ படித்த தங்களுக்கும், வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும்' என, அவர்கள் கோரிஉள்ளனர்.
போலி சான்றிதழ் கண்காணிப்பு : ஆய்வக உதவியாளர் பணி அனுபவத்துக்கு, இரண்டு மதிப்பெண் வழங்கப்படுவதால், பல பள்ளி, கல்லுாரிகளில் பணம் வாங்கிக்கொண்டு, போலி சான்றிதழ் வழங்குவதாக, புகார் எழுந்துள்ளது. எனவே, பணி அனுபவ சான்றிதழை, பள்ளி, கல்லுாரிகளின் ஆவணங்களில் சரிபார்க்க, அதிகாரிகள் முடிவு செய்துஉள்ளனர்.

TRB:உதவி பேராசிரியர் பணி 20ல் சான்றிதழ் சரிபார்ப்பு.

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், தமிழ் வழிக்கான ஒதுக்கீட்டிற்கு, வரும், 20ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. அரசு இன்ஜி., கல்லுாரிகளில்,
காலியாக உள்ள, 192 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 2016 அக்., 22ல், எழுத்துத் தேர்வை நடத்தியது. இதில், 28 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
தேர்ச்சி பெற்றோருக்கு, இட ஒதுக்கீட்டு விதிகள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில், ஜன., 19, 20ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்நிலையில், தமிழ் வழியில் படித்தோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் தேர்வானவர்களின் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, வரும், 20ல், டி.ஆர்.பி., அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.

50 ஆண்டு அரசுப்பள்ளி : கவுரவிக்கிறது கல்வித்துறை.

50 ஆண்டுகளாக இயங்கும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கவுரவிக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
சில பள்ளிகள், அப்பகுதியினரின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுகின்றன. இதில், ௫௦ ஆண்டுகள் பழமையான பள்ளிகளும் உண்டு; இப்பள்ளிகளை கவுரவிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இப்பள்ளிகளை தேர்வு செய்வதற்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மேற்பார்வையாளராகவும், தொடக்கக் கல்வி அலு
வலரின் நேர்முக உதவியாளர் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்; உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் என, 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.