>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 12 மார்ச், 2017


ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது?

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில், முடிவுகள் தாமதமாகி உள்ளன.
அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு இடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில், நேர்முக தேர்வு நடத்தப்படும்.
நேர்முக தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பணி ஒதுக்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்திருந்தது. ஆனால், 'எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடாமல் தேர்வு நடந்தால், பணி நியமனத்தில் முறைகேடு ஏற்படும்' எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை, நீதிபதி ஹரிபரந்தாமன் விசாரித்து, 2015 ஆக., 7ல் உத்தரவு பிறப்பித்தார். அதில், 'எழுத்து தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண்ணை, மொத்தமாக கணக்கிட்டு, அதன்படி, இறுதி முடிவு அறிவிக்கலாம்' என, தெரிவித்தார்.
இந்த உத்தரவு வெளியாகி, ஒன்றே முக்கால் ஆண்டுகளை தாண்டி விட்டது. ஆனால், இன்னும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இதுகுறித்து, அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வர்கள் கூட்டமைப்பினர், பல முறை அரசுக்கு மனு அனுப்பியும், தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், தேர்வு முடிவுகள் மாயமாகி விட்டதாக, துறையில் திடீர் வதந்தி கிளம்பியது; அதை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

TNPSC - VAO இரண்டாம் கட்ட, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு.

வி.ஏ.ஓ., பதவிக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., 2016, பிப்., 28ல், எழுத்து தேர்வை நடத்தியது.இதில், தேர்வானவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, காலியிடங்கள் நிரப்பப்பட்டன.இன்னும், காலியாக உள்ள, 147 இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச், 13 முதல், 15 வரை நடக்க உள்ளது. இதற்கான பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர தவறினால், பட்டியலில் உள்ளோருக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 10 மார்ச், 2017

FLASH NEWS: TRB- TET- Direct Recruitment of Graduate Assistants - 2016 - Please click here for Online updation

தேசிய திறனாய்வு தேர்வு : இன்று வெளியாகுது 'ரிசல்ட்'



பத்தாம் வகுப்புக்கான தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.பத்தாம் வகுப்பு மாணவர்கள், உயர் கல்வி படிக்க, மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
இதற்கு தேசிய திறனாய்வு தேர்வு, மாநில அளவிலும், பின், தேசிய அளவிலும் நடத்தப்படுகிறது.மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல், தமிழகம் முழுவதும் நடந்தது. 6,580 பள்ளிகளை சேர்ந்த, 1.55 லட்சம் பேர் பங்கேற்றனர்.இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று பிற்பகல், 2:00 மணிக்கு வெளியாகிறது.'இதன் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணைய தளத்தில், அறிந்து கொள்ளலாம். மாநில அளவில் தேர்வு செய்யப்படுவோர், மே, 14ல் நடக்கும், தேசிய தேர்வில் பங்கேற்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

டெட்' தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு

 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல், சுய விபரங்கள் இன்று வெளியாகின்றன. தமிழகத்தில், 2012 முதல், 2014 வரை, 'டெட்' தேர்வு முடித்தோர், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் இருந்தனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், 'காலியாக உள்ள, 1,111 ஆசிரியர் பணியிடங்களுக்கு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப்படுவர்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. அதற்கேற்ற வகையில், ஏற்கனவே, 'டெட்' தேர்வு முடித்தோரின் மதிப்பெண் பட்டியலுடன், சுய விபரங்கள், இன்று, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகின்றன.

தேர்வர்கள், இன்று காலை, 10:00 மணி முதல், மார்ச் 20, இரவு, 10:00 மணி வரை, ஆன்லைனில், சுய விபரங்களை திருத்தம் செய்யலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


EMIS LATEST NEWS NOW...: Class 1 transfer has been enabled. If you have double entry move the duplicate to student pool.

Primary / Middle Schools - 220 Days compulsory working Day

வியாழன், 9 மார்ச், 2017

CPS - Rate of interest for the period from 01.01.2017 to 31.03.2017 is 8.0% – Orders – Issued

G.O. No.54 Dt: March 06, 2017   PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution – Rate of interest for the period from 01.01.2017 to 31.03.2017 is 8.0% – Orders – Issued

TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி

TET தேர்ச்சி பெறாமல் 15.11.2011 க்கு பின் நியமனம் செய்யப்பட்ட தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி - ஆசிரியர்களின் விபரம் சேகரிக்க உத்தரவு.

நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் உறுதி ??

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மத்திய அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த மசோதா மனிதவள மேம்பாடு, மருத்துவ நலம், சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகள் சம்பந்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மத்திய அரசின் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இன்று தமிழக முதல்வர் அனுமதியுடன் நானும், உயர் கல்வித்துறை அமைச்சரும் அரசு செயலாளர்களுடன் மத்திய அமைச்சரை சந்தித்தோம். அவரிடம் தமிழகத்திற்கு விலக்கு வேண்டி எடுத்துரைத்து வலியுறுத்தினோம். இதைப் பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார்’ எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த விஜயபாஸ்கர் கூறுகையில், "அரசு மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சட்டரீதியான எங்கள் போராட்டம் தொடர்கிறது. அதே நேரத்தில் நாங்கள் மத்திய அரசையும் வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.
மருத்துவத்தைப்போல், பொறியியல் கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. அதற்கும் தமிழகத்திற்கு விலக்களிக்க தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், "ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக நுழைவுத்தேர்வை நடத்தி தமிழகத்தின் பொறியியல் கல்விக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதை அமைச்சரிடம் எடுத்துக் கூறி எங்களுக்கு மற்றொரு நுழைவுத்தேர்வு தேவை இல்லை என வலியுறுத்தி உள்ளோம். இதையும் அவர் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்" எனத் தெரிவித்தார்.

சிபிஎஸ்இ 10, +2-ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் 10, +2-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வியாழக்கிழமை (மார்ச் 9) தொடங்குகின்றன.
நாடு முழுவதும் மொத்தம் 8.86 லட்சம் மாணவ-மாணவிகள் 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு 10-ஆம் வகுப்புத் தேர்வுக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த முறையைக் காட்டிலும் 15.73 சதவீதம் அதிகரித்துள்ளது. 12-ஆம் வகுப்புத் தேர்வை மொத்தம் 10.98 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இந்த முறை 2.82 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 16,363 மையங்களில் 10-ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மொத்தம் 10,678 மையங்களில் நடைபெற உள்ளது. சில வளைகுடா நாடுகளில் 58 தேர்வு மையங்களும், மற்ற நாடுகளில் 6 தேர்வு மையங்களும் சிபிஎஸ்இ தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

மார்ச் 16-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்:

தமிழக சட்டப்பேரவை அடுத்த கூட்டத்தொடர் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே, 2017- 2018 நிதி
ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 16.3.2017-ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை-9, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று காலை 10.30 மணிக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவை யில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார்.
அதன்பிறகு அதிமுகவில் எழுந்த பிரச்சினைகளால் தமிழக அரசிய லில் பரபரப்பும் குழப்பமும் நிலவி யது. பின்னர் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித் துறை இருந்தது. கடந்த 23-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்ட பிறகு பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இந்நிலையில், வரும் 16.03.2017 அன்று காலை 10.30 மணிக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு வயது உயர்த்தப்படுமா?
இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இது தொடர்பாக, அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை ஊதியத்தை நம்பியுள்ளனர். இதை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரையை ஏற்று செயல்படுத்தினாலும், அடுத்த 4 மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு நிதி தேவைப்படும்.
ஏற்கெனவே தமிழக அரசுத் துறைகளில் 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்படாத சூழலில், தமிழக அரசின் இந்த முடிவு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ராணுவ கல்லூரி சேர்க்கைக்கு தகுதி தேர்வு

ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லுாரியில், 8ம் வகுப்பில் சேர, மாணவர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு நடக்க உள்ளதாக, தமிழக அரசு தலைமை செயலக பொது (ராணுவம்) துறை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கலெக்டர் பிரபாகர் வெளியிட்ட அறிக்கை:ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லுாரியில், 8ம் வகுப்பில் சேர்வதற்கான தகுதித்தேர்வு, மாணவர்களுக்கு மட்டும் நடக்க உள்ளது. நடப்பு, 2017 ஜன., 1 அன்று, ஏழாம் வகுப்பில் பயில்பவராக அல்லது, ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம்; 11.5.17 முதல், 13 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், 'தி கமாண்டன்ட், ஆர்.ஐ.எம்.சி., - டேராடூன் - 248 003, உத்தரகண்ட்' என்ற முகவரியில் விண்ணப்பம் பெறலாம்.
விண்ணப்பபடிவம், விரைவு அஞ்சலில், பொதுப்பிரிவினர், 490 ரூபாய்க்கும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 435 ரூபாய்க்கும் செலுத்த வேண்டும். ஜூன், 1, 2ல் தேர்வு நடக்கவுள்ளது. ஆங்கிலம் - 125 மதிப்பெண்; இரண்டு மணி நேரம் தேர்வு, கணிதம் - 200 மதிப்பெண்; 1:30 மணி நேரம்தேர்வு, பொது அறிவு - 75 மதிப்பெண் - ஒரு மணி நேரம் தேர்வு நடக்கும்.'தி கன்ட்ரோலர் ஆப் எக்சாமினேஷன்ஸ், டி.என்.பி.எஸ்.சி., சென்னை - 3' என்ற முகவரிக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 31க்குள் அனுப்ப வேண்டும். மேலும், 50 மதிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வு, அக்., 4ல் நடக்கவுள்ளது. நேர்முக தேர்வு உட்பட அனைத்து பாடங்களிலும், 50 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு,www.rimc.orgஎன்ற இணைய தளம் வாயிலாக அறியலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது

வெளிநாட்டு வேலை கிடைத்தும் சேர முடியலை - அண்ணா பல்கலை மாணவர்கள் தவிப்பு.



அண்ணா பல்கலையில் பட்ட சான்றிதழ் கிடைக்காமல், லட்சக்கணக்கான இன்ஜினியர்கள், வெளிநாடு வேலை வாய்ப்பைஇழந்துள்ளனர்.சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில், அரசு கல்லுாரிகள், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள் என, 600க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இவை அனைத்தும், அண்ணா பல்கலை பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. தன்னாட்சி கல்லுாரிகள் மட்டும், சிலபாடங்களுக்கு தாங்களே பாடத்திட்டம் தயார் செய்து, பல்கலை அனுமதி பெற்று, பாடம் நடத்துகின்றன.இந்த கல்லுாரிகளில், ஆண்டுதோறும், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட இளநிலை பட்டதாரிகள் சேர்கின்றனர். ஐந்து லட்சத்துத்துக்கும் மேற்பட்டோர், படிப்பை முடிக்கின்றனர். அவர்களுக்கு அண்ணா பல்கலை, பட்ட சான்றிதழை வழங்கும்.அதற்கு முன், பல்கலையில் பட்டமளிப்பு விழா முடிந்து, சிண்டிகேட் ஒப்புதல் வழங்கியதும், கல்லுாரிகளில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு துணைவேந்தர் இல்லாததால், பட்டமளிப்பு விழா நடத்த தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், பட்டம் கிடைக்காமல், படிப்பு முடித்தோர் காத்திருக்கின்றனர்.இவர்களுக்கு பல கல்லுாரிகளில், நேரடி கேம்பஸ் தேர்வு நடத்தப்பட்டு, வெளிநாடுகளில், வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்தந்த நாட்டு துாதரகம் மூலம், பட்ட சான்றிதழை காட்டி, அனுமதி பெற்றால் மட்டுமே, வெளிநாட்டு நிறுவனங்களில், வேலையில் சேர முடியும்.தற்போது பட்ட சான்றிதழ் இல்லாததால், இந்த வேலைகளில் சேர முடியாமல், புதிய பட்டதாரிகள் தவிக்கின்றனர். எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்து, பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க, மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.