சிபிஎஸ்இ 10, +2-ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் 10, +2-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வியாழக்கிழமை (மார்ச் 9) தொடங்குகின்றன.
நாடு முழுவதும் மொத்தம் 8.86 லட்சம் மாணவ-மாணவிகள் 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு 10-ஆம் வகுப்புத் தேர்வுக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த முறையைக் காட்டிலும் 15.73 சதவீதம் அதிகரித்துள்ளது. 12-ஆம் வகுப்புத் தேர்வை மொத்தம் 10.98 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இந்த முறை 2.82 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 16,363 மையங்களில் 10-ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மொத்தம் 10,678 மையங்களில் நடைபெற உள்ளது. சில வளைகுடா நாடுகளில் 58 தேர்வு மையங்களும், மற்ற நாடுகளில் 6 தேர்வு மையங்களும் சிபிஎஸ்இ தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ளன.