ராணுவ கல்லூரி சேர்க்கைக்கு தகுதி தேர்வு
ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லுாரியில், 8ம் வகுப்பில் சேர, மாணவர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு நடக்க உள்ளதாக, தமிழக அரசு தலைமை செயலக பொது (ராணுவம்) துறை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கலெக்டர் பிரபாகர் வெளியிட்ட அறிக்கை:ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லுாரியில், 8ம் வகுப்பில் சேர்வதற்கான தகுதித்தேர்வு, மாணவர்களுக்கு மட்டும் நடக்க உள்ளது. நடப்பு, 2017 ஜன., 1 அன்று, ஏழாம் வகுப்பில் பயில்பவராக அல்லது, ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம்; 11.5.17 முதல், 13 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், 'தி கமாண்டன்ட், ஆர்.ஐ.எம்.சி., - டேராடூன் - 248 003, உத்தரகண்ட்' என்ற முகவரியில் விண்ணப்பம் பெறலாம்.

விண்ணப்பபடிவம், விரைவு அஞ்சலில், பொதுப்பிரிவினர், 490 ரூபாய்க்கும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 435 ரூபாய்க்கும் செலுத்த வேண்டும். ஜூன், 1, 2ல் தேர்வு நடக்கவுள்ளது. ஆங்கிலம் - 125 மதிப்பெண்; இரண்டு மணி நேரம் தேர்வு, கணிதம் - 200 மதிப்பெண்; 1:30 மணி நேரம்தேர்வு, பொது அறிவு - 75 மதிப்பெண் - ஒரு மணி நேரம் தேர்வு நடக்கும்.'தி கன்ட்ரோலர் ஆப் எக்சாமினேஷன்ஸ், டி.என்.பி.எஸ்.சி., சென்னை - 3' என்ற முகவரிக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 31க்குள் அனுப்ப வேண்டும். மேலும், 50 மதிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வு, அக்., 4ல் நடக்கவுள்ளது. நேர்முக தேர்வு உட்பட அனைத்து பாடங்களிலும், 50 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு,www.rimc.orgஎன்ற இணைய தளம் வாயிலாக அறியலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது