>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 7 மார்ச், 2017

அன்பாசிரியர்' தொடர் எதிரொலி: சிலம்பு, யோகா ஆடை, பரிசுப் பொருள் - அரசுப் பள்ளிக்கு உதவிய 'தி இந்து' வாசகர்கள்!

சிலம்பாட்ட பயிற்சி மேற்கொள்ளும் மாணவிகள்.
மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.
இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் 'தி இந்து' வாசகர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அன்பாசிரியர் 31: பழனிக்குமார்- ஃபேஸ்புக் வழியே கற்றலுக்கான களம் கண்ட ஆசிரியர்! தொடரில் தங்கள் பள்ளியில் நடைபெறும் சிறப்பு யோகா பயிற்சிகள் குறித்தும், ஆங்கிலத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்குவது குறித்தும் ஆசிரியர் பழனிக்குமார் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் 'அன்பாசிரியர்' தொடரைப் படித்த 'தி இந்து' வாசகர்கள் கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு ஏராளமான உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நம்முடன் பெரு மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார் அன்பாசிரியர் பழனிக்குமார். ''லண்டனில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத 'தி இந்து' வாசகர், அனைத்து மாணவர்களின் யோகா ஆடைகளுக்கும் சேர்த்து ரூ.59,000 அளிப்பதாக வாக்களித்துள்ளார். முதற்கட்டமாக அவர் அளித்த 15,000 ரூபாயில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா ஆடை வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி வாசகர் மகாராஜன், ரூ.1000 மதிப்பில் மாணவர்களுக்கு பேனா, பென்சில், ஸ்கெட்ச் அடங்கிய பெட்டிகளை அளித்துள்ளார். போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாதாமாதம் இதுபோன்ற பெட்டியை அனுப்புவதாகவும் உறுதியளித்துள்ளார்.
'அன்பாசிரியர்' தொடரைப் படித்த 'விதை' அறக்கட்டளையினர், 6000 ரூபாய்க்கு நாவல் மரக்கன்றுகள் மற்றும் பாதுகாப்புக் கூண்டுகளை அளித்தனர். எங்கள் மாணவர்கள் அவற்றை புன்னையாபுரம் முந்தல் சாலையில் நட்டுப் பாரமரித்து வருகின்றனர். இதைப்பார்த்து நெகிழ்ந்த அருகிலிருந்த கோயில் நிர்வாகத்தினர் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வேளை உணவை அளித்தனர்.
உயிர்த்தெழுந்த சிலம்பாட்டம்
கத்தாரில் வசிக்கும் 'தி இந்து' வாசகர் முகமது அக்பர், சிலம்பு போட்டிக்காக சிலம்புகள் வாங்க ரூ.2,500 அனுப்பினார். துபாயைச் சேர்ந்த சுரேஷ் சொக்கலிங்கம் மற்றும் ஓசுரைச் சேர்ந்த செந்தமிழன் இருவரும் தலா ரூ.3,000 அனுப்பினர். இதைக்கொண்டு சிலம்பு ஆசிரியர் ஒருவரை நியமித்துள்ளோம்.
அத்தோடு, 'அன்பாசிரியர்' தொடரைப் படித்த கிருஷ்ணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சண்முகநாதன், மாலை 4.30 - 6 மணி வரை எங்கள் மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பு கற்றுத்தருகிறார்.
இதைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்புப் போட்டியில் மதன் முத்து மற்றும் பாலசுப்ரமணியன் இருவரும் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளைப் பெற்றனர். அவர்களுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த 'தி இந்து' வாசகர் அன்பு பிரணவ் கைக்கடிகாரத்தைப் பரிசாக அளித்தார்.
அன்பு பிரணவ், ஆங்கிலத்தில் சிறந்துவிளங்கும் மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் திட்டத்திலும் இணைந்து ரூ.10,000 அனுப்பியுள்ளார். அதில் 6,000 ரூபாய்க்கு 3 தங்க நாணயங்கள் வாங்கிக்கொண்டு மீதி 4 ஆயிரத்துக்கு மாணவர்களுக்கு ஆங்கில அகராதிகளும், வாய்ப்பாடுகளும் வாங்கினோம்.
மரக்கன்று நட்டவர்களின் அனுபவங்களைக் கட்டுரையாக எழுதச்சொல்லி அதில் முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு புத்தகப்பை, வண்ணத் தூரிகைகள், கைக்கடிகாரம் ஆகியவற்றையும் அன்பு பிரணவ் அமேசானில் ஆர்டர் செய்துவிட்டார்.
இதேபோல துபாயைச் சேர்ந்த முருகன் வேலு 2000 ரூபாயும், மதுரையைச் சேர்ந்த சியாமளா கிருஷ்ணமூர்த்தி 10,000 ரூபாயும் அனுப்பினர். புளியங்குடியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மாணவர்களுக்கு டிஃபன் பாக்ஸ் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி ரூ.500 அளித்தார். துபாய் வாசகர் ரவி சொக்கலிங்கம் ரூ.5000 அனுப்பியுள்ளார். ராம் சுரேஷ் என்பவர் ரூ.10,000 அனுப்பியுள்ளார்.
ஆயக்குடியைச் சேர்ந்த வீரபாகு ரத்ததானக் கழகத்தினர் 'அன்பாசிரியர்' தொடரைப் படித்துவிட்டு ரூ.3000 மதிப்பில் வயர்லெஸ் மைக்கை அளித்தனர். அதே கழகத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் மற்றும் முருகேசன் என்னும் இருவரும் ரூ.8000 செலவில், அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வேளை உணவளித்தனர்.
இன்னும் ஏராளமானோர் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். இவை அனைத்துக்கும் காரணமாக இருந்த 'தி இந்து'வுக்கு என் நன்றிகளும், பாராட்டுகளும்'' என்கிறார் அன்பாசிரியர் பழனிக்குமார்.
இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
ஆசிரியர் பழனிக்குமாரின் தொடர்பு எண்:9976804887

பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஆங்கிலம் முதல்தாள் வினாக்களில் குளறுபடி

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆங்கிலம் முதல்தாளில் 3 மதிப்பெண் வினாக்களில் குளறுபடி இருந்ததால் விடை எழுத முடியாமல் மாணவர்கள் குழப்பமடைந்தனர். 
 தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஆங்கிலம் முதல்தாள் தேர்வு நடந்தது. தேர்வு அறையில் வினாத்தாள்களை மாணவர்களுக்கு கொடுத்தவுடன் விடை எழுத தொடங்கினர்.
இதில் எளிமையான கேள்விகளை மாணவர்கள் முதலில் எழுத தொடங்கினர். கேட்கப்பட்ட கேள்விகளில் வினாத்தாளில் 8வது பக்கம் (B) read the following sets lines and answer the questions given below என்ற பிரிவில் கேள்வி எண் 61, 62, 63 என்ற ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
வழக்கமாக இந்த கேள்விகளுக்கு விடை எழுத போயம் லைன் கொடுத்துவிட்டு, அதற்கான பதிலை எழுத சொல்வார்கள். ஆனால் இந்த ஆண்டுக்கான வினாத்தாளில் 61வது கேள்விக்கு மட்டுமே போயம் லைன் கொடுத்துள்ளனர். 62வது கேள்விக்கு தரவில்லை. இதனால் மாணவர்கள் விடை எழுத முடியாமல் குழப்பமடைந்தனர். இதுகுறித்து ஆங்கில ஆசிரியரிடம் கேட்டபோது, `61வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கப்பட்டது. 62வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கவில்லை. இதையடுத்து 63வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கப்பட்டது. இந்த போயம் லைன் 62வது கேள்விக்கா அல்லது 63வது கேள்விக்கா என தெரியாமல் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். 
வழக்கமாக இந்த இலக்கியத்திற்கான கேள்விகள் எளிமையாக இருக்கும். இதற்கு மாணவர்கள் விடை எழுதி முழுமையாக 3 மதிப்பெண்களை பெற்றுவிடுவர். இந்த ஆண்டு இந்த கேள்விகளில் குளறுபடி உள்ளது. இதற்கு தேர்வுத்துறை மதிப்பெண் அளிக்குமா என்று தெரியவில்லை'' என்றார்

பள்ளிக்கல்வித்துறை செயலர் திரு. D. உதயசந்திரன் IAS !!

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னை, காஞ்சிக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் 17 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட கலெக்டராக அன்புசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
இடமாற்ற விவரம்:
1. சுனில் பாலிவால் - உயர்கல்வித் துறை முதன்மை செயலர்
2. காமராஜ் - பால் உற்பத்தி கழக மேலாண் இயக்குநர்
3. உதயசந்திரன் - பள்ளி கல்வித் துறை செயலாளர்
4. வள்ளலார் - சிறுபான்மை நலத்துறை இயக்குநர்
5. தயானந்த் கட்டாரியா - போக்குவரத்து துறை கமிஷனர் 
6. விக்ரம் கபூர் - எரிசக்தி துறை முதன்மை செயலர்
7. அடூலியா மிஷ்ரா - தொழில் துறை முதன்மை செயலர்
8. பழனிக்குமார் - தமிழ்நாடு சுற்றுலா துறை மேலாண் இயக்குநர்
9. நசிமுதீன் - சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர்
10. அன்புசெல்வன் - சென்னை மாவட்ட கலெக்டர்
11. மகேஸ்வரி - வணிக வரித்துறை இணை கமிஷனர்
12. பொன்னையா - காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்
13. சபிதா - தமிழக சிமிண்ட் கழக மேலாண் இயக்குநர்
14. வெங்கடேசன் - கனிம வளத்துறை மேலாண் இயக்குநர்
15. சத்யபிரதா சாஹீ - தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குநர்
16.ஹர் சகாய் மீனா - உப்பு கழக மேலாண் இயக்குநர்
17. கஜலெட்சுமி - சென்னை பெருநகர மாநகராட்சி துணை கமிஷனர்.

திங்கள், 6 மார்ச், 2017

2016-17ஆம் ஆண்டிற்கு உயர் தொடக்கநிலை வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு "வரைப்படங்கள் வழியாக வரலாற்றை அறிந்துகொள்ளல்" என்ற தலைப்பில் 13.03.2017 அன்று வட்டார மைய அளவில் நடைபெறவுள்ளது!!

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா மாற்றம் !!!

உயர்கல்வித்துறை செயலாளர் சபீதா  சிமெண்ட் கழக எம்.டி.யாக மாற்றம்

உயர்கல்வித்துறை முதன்மைச் செயலராக சுனில் பாலிவல் நியமனம்

சிறுபான்மை நலத்துறை செயலாளராக வள்ளலார் நியமனம்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண்மை இயக்குநராக காமராஜ் நியமனம்

போக்குவரத்துத்துறை ஆணையராக தயானந்த கட்டாரியா நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பி.பொன்னையா நியமனம்

சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் நியமனம்

சென்னை ஆட்சியராக இருந்த மகேஸ்வரி , வணிக வரி இணை ஆணையராக நியமனம்

தொற்று நோய்களுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு நாட்கள் நீடிப்பு சார்பான அரசாணை




TNTET - 2017:ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்படவுள்ளனதமிழக அரசின் வழிகாட்டுதலின்படி,
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவை, ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள்,  ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் திங்கள்கிழமை (மார்ச்6) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும்.ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்.இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிறு, 5 மார்ச், 2017

பெண்கள் கட்டுபாட்டில் இயங்கிய விமானம்!

இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் பெண்கள் தினத்தை முன்னிட்டு உலக சாதனைக்காக பெண் ஊழியர்களால் பயணிகள் விமானம் இயக்கப்பட்டுள்ளது. உலகை சுற்றிய இந்த விமானம் கடந்த வெள்ளிக்கிழமையன்று டெல்லி வந்தடைந்தது.

வரும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த தினத்தில் உலக சாதனைக்காக ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் பெண் ஊழியர்களை வைத்து விமானத்தை இயக்குவதற்கு திட்டமிட்டது.

அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றது. பசிஃபிக் பெருங்கடல் மீது பயணித்து, திரும்பி வரும்போது அட்லாண்டிக் நாடுகள் வழியாக உலகையே சுற்றி மீண்டும் டெல்லி வந்தடைந்தது.

இந்த பயணத்தின்போது, பயணச்சீட்டை சரிபார்க்கும் பணியாளார்கள், விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு பணியாளார்கள், விமானம் புறப்படுவதற்குமுன் அதற்கு சான்றிதழ் அளிக்கும் பொறியாளர்கள் மற்றும் விமானம் புறப்படவும், தரையிறங்கவும் அனுமதியளிக்கும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் என அனைவருமே பெண்கள் தான். அவர்கள் கட்டுபாட்டில் சிறப்பாக இந்த விமானம் உலகை சுற்றி வந்துள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த சாதனைக்காக கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தக நிறுவனத்திடம் ஏர் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

பெண் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு நிறுவனமான ஏர் இந்தியா ஜனவரி 18 ஆம் தேதி முதல் பெண்களுக்கு 6 தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

            TET MATERIAL - UPDATED

ஜியோவுக்கு போட்டியாக வோடஃபோன், ஐடியா அதிரடி சலுகைகள் !!

ஜியோ ஆஃபர்களுக்கு எதிராக, வோடபோன், ஐடியா நிறுவனங்கள் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஆரம்பிக்கப்பட்ட, ஒரு மாதத்திற்குள்ளாக 16 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றது
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிவேக வயர்லெஸ் இணைய சேவையில் அளவில்லா டேட்டாக்கள் மற்றும் அழைப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது.
இதனால் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன்,ஐடியா, ஏர்டெல் போன்ற ப்ரீபெய்ட் சேவையில், அழைப்புக்கட்டணம், மற்றும் டேட்டா கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது.
இந்நிலையில், போட்டி நிறுவனமான வோடபோன், ஐடியா புதிய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, புதிய சலுகைகளை ஏப்ரல் 1 முதல் இலவசமாக வழங்க உள்ளது.
இதில், ஐடியா அளவில்லா வாய்ஸ் கால், மற்றும் 500 எம்.பி டேட்டா வெரும் ரூ.348 வழங்க உள்ளது.
வோடபோன், ஜியோவின் ரூ.303 சலுகைக்கு எதிராக ரூ.342 அறிவித்துள்ளது.
இதில், அளவில்லா வாய்ஸ் கால், 28 ஜிபி டேட்டா ஒரு மதத்திற்கும், இதை நாள் ஒன்றுக்கு 1 ஜிபி வீதம் பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சலுகையில், ரூ.346-ல் அளவில்லா வாய்ஸ் கால், 10 ஜிபி டேட்டா 28 நாள் வரை பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஜியோ அதிரடியாக வெள்ளிக்கிழமை பை- ஒன் கெட்-ஒன் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், ரூ.303 ரீசார்ஜ் செய்தால் ரூ.499 வரை எக்ஸ்ட்ரா பெறலாம் என்றும், இந்த சலுகை மார்ச் 31 வரை செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையில் ரூ. 201 தொகையும், 5ஜிபி வரை இலவச டேட்டாவும் வழங்கப்பட உள்ளது.
ரூ.499 அதற்கும் மேல் ரீசார்ஜ் செய்தால் ரூ.301,10 ஜிபி இலவச டேட்டா சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.