>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 5 மார்ச், 2017

இனி வங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும் !!

வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்க தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது.
*மினிமம் பேலன்ஸ்ரூ.5000* :
பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.
*குறைந்தால் அபராதம் :*
இந்த அபராத தொகை, குறைந்த பட்ச இருப்பு தொகையை விட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில் வசூலிக்கப்படும். உதாரணமாக, 50 முதல் 75 சதவீதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் ரூ.75 மற்றும் அத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.50 உடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.
ஏடிஎம்.,களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.50 முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் கூறி உள்ளன. இந்நிலையில் ஏடிஎம்.,களில் பணம் எடுக்க மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த நடைமுறையும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நள்ளிரவுமுதல் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூபாய்3.78ம், டீசல் விலை ரூபாய் 1.76ம் உயர்த்தப்பட்டது.
இந்தவிலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான வாட் வரி 21.43சதவிதத்தில் இருந்து 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

TET தேர்வில் தேர்ச்சி பெறாமல் வேலையில் சேர்ந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் நடைபெறும் தகுதித் தேர்வே இறுதி வாய்ப்பு: பள்ளிக் கல்வித் துறை திடீர் அறிவிப்பு.

தமிழகத்தில் 2010 ஆகஸ்ட் மாதத்துக்கு பின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமாக்கப்பட்டது.
இதற்குப்பின் அரசு உதவி பெறும் இதர பள்ளிகளில் பணியில் சேர்ந்தாலும் 5 ஆண்டுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுவரை 2 முறை தகுதித் தேர்வு நடந்தது. 3-வதாக ஏப்ரல் 20, 30-ல் தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்அலுவலகம் மார்ச் 1-ல் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு ஓர் உத்தரவு நகல் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் இதர பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஏப்ரல் 29, 30-ல் நடக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முடிவு வெளிவரும் வரை ஊதியம், இதர படிகளைப் பெறலாம். இதுவே கடைசி வாய்ப்பு. இதைப் பயன்படுத்திக்கொள்ளாத ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாமல், தேர்ச்சி பெறாமல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் இதர பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இதன் விவரத்தை தெரிவிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் மூலம் விவரத்தை தெரிவித்து ஒப்புதல் பெறவேண்டும். இதன்மீது எந்த மேல் முறையீடும் ஏற்கப்படமாட்டாது என தெளிவுபடுத்த வேண்டும்.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எழாது. சிறுபான்மை பள்ளிகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களின் கல்வித் தகுதியை முன்னேற்றும் வகையில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் கோடை விடுமுறை நாட்களில் புத்துணர்வு சிறப்புப் பயிற்சி முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மை பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டோரின் விவரங்களைப் பட்டியலிட்டு உடனடியாக அனுப்ப வேண்டும்.2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையில் தேர்ச்சி பெற்றவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க லாம். இந்த அறிவுரைகளைப்பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புது உத்தரவு 23.8 2010-க்கு பின், அரசு உதவி பெறும், இதர பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் முருகன் கூறியதாவது:தரமான ஆசிரியர்களை உரு வாக்கவே தகுதித் தேர்வு வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடக்கவில்லை. 2013-ல் 82 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 2012-ல் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்றனர். ஒரே வேலைக்கு முரண்பாடான மதிப்பெண். எனவே, 2012-ல் 82-க்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். தேர்ச்சி பெறாதவர் களுக்கு ஏப்ரலில் நடக்கும் தகுதித் தேர்வே கடைசி வாய்ப்பு என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற சுமார் 1000 ஆசிரியர்களும், அரசு உதவி பெறும் இதர பள்ளிகளில் 2 ஆயிரம் பேரும் பாதிக்கப்படுவர். சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கான சலுகையை தேர்ச்சி பெறாத அரசு உதவி பெறும் இதர பள்ளிகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் வழங்கலாம். கல்வித் துறை இதை பரிசீலிக்க வேண்டும் என்றார்.

ரூ.130 கட்டணத்தில் 100 சேனல்கள் கேபிள் 'டிவி'யில் இனி பார்க்கலாம் !!

மாதம், 130 ரூபாய் கட்டணத்தில், 100 கேபிள், 'டிவி' சேனல்கள் வழங்க வேண்டும்' என, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு பெருநகரங்களில் கேபிள் ஒளிபரப்பை,
'செட் - டாப் பாக்ஸ்' வாயிலாக, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும் என, 2011ல் டிராய் உத்தரவிட்டது. பின், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் அமல்படுத்த உத்தரவிட்டது.
இறுதியாக, அனைத்து கிராமப் பகுதிகளிலும், 2017 மார்ச்சுக்குள், டிஜிட்டல் சேவை கட்டாயமாக்கப்பட வேண்டும் என, கெடு விதித்தது. இது, ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், கேபிள் கட்டணம் தொடர்பான புதிய அறிவிக்கையை டிராய் வெளியிட்டுள்ளது. அதன்படி, கேபிள் ஆபரேட்டர்கள், குறைந்தபட்சம், 130 ரூபாய் மாத கட்டணத்தில், 100 சேனல்களை, வாடிக்கையாளர்களுக்கு தருவது
கட்டாயமாகி உள்ளது.
அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் வந்ததை தொடர்ந்து, எம்.எஸ்.ஓ.,க்களுக்கு கடிவாளம் போடுவதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 100 சாதாரண சேனல்களின் பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளது. அவற்றை, கேபிள் ஆபரேட்டர்கள், 130 ரூபாய்க்கு தர வேண்டும்.
மேலும் கட்டண சேனல்களை பொறுத்தவரை, 25 சேனல்கள் உடைய தொகுப்புகள் உருவாக்கப்பட வேண்டும். சென்னையில் தற்போது குறைந்தபட்சம், 180 ரூபாய் இல்லாமல், கேபிள் இணைப்பு பெற முடியாத நிலை உள்ளது. இந்த புதிய உத்தரவு மூலம், 130 ரூபாய்க்கு, 100 சேனல்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிலவும் குழப்பங்கள்!
சென்னை மற்றும் சில இடங்களை தவிர மற்ற பகுதிகளில், 'செட் - டாப் பாக்ஸ்' வினியோகிக்கப்படவில்லை. சென்னையிலேயே டிஜிட்டல் சேவை முழுமையாக வழங்கப்படவில்லை. பல இடங்களில் சாதாரண ஒளிபரப்பு தொடர்கிறது.
பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை உடைய அரசு கேபிள் நிறுவனத்திற்கு, டிஜிட்டல் சேவைக்கான உரிமம் மறுக்கப்படுகிறது. அதனால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு, 'செட் - டாப் பாக்ஸ்' தர முடியாத நிலை உள்ளது.
அங்கெல்லாம், சாதாரண தரத்திலான சேனல்களை மட்டுமே மக்கள் பார்த்து வருகின்றனர்.
என்ன பயன்?
இதுநாள் வரை, எம்.எஸ்.ஓ., எனப்படும், கேபிள் ஒளிபரப்பு சேவைக்கான உரிமம் பெற்ற பெரு நிறுவனங்களும், கேபிள் ஆபரேட்டர்களும் நிர்ணயித்ததே விலையாக இருந்தது.
இனி, அந்த பிரச்னை இல்லை. எல்லாமே வெளிப்படையாக இருக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் அறியும் வகையில், கட்டண சேனல்களின் விலை விபரத்தை, எம்.எஸ்.ஓ.,க்கள் தெரிவிக்க வேண்டும்.

கட்டணமில்லாமல் 10 முறை பணம் எடுக்கலாம் - இன்ப அதிர்ச்சி கொடுத்த எஸ்பிஐ....!!

ஏடிஎம்மில் 10 முறை இலவசமாக பணமெடுக்கலாம்
ரூபாய் நோட்டு பண மதிப்பு இழப்பிற்கு பிறகு, நாட்டில் பல்வேறு துறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டது . மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டது. அந்த வேளையில் புதியதாக புழக்கத்தில் விடப்பட்ட 2,௦௦௦ ரூபாய் மற்றும் பழைய 1௦௦ ரூபாய் தாள்களை ஏ டி எம்மில் இருந்து
எடுப்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதிய சம்பவம் எதனையும் யாரும் மறந்திருக்க முடியாது.
இதனை தொடர்ந்து, ஏ டி எம் இலிருந்து எத்தனை முறை வேண்டுமாளாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து இருந்தது அதாவது பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்க படமாட்டாது என தெரிவிக்கப்பட்டது . இந்த நடைமுறை தற்போது மாறி , பல தனியார் வங்கிகள் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப் படும் என தெரிவித்து இருந்தது.
அதன்படி, ஏடிஎம்.,களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.50 முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் கூறி உள்ளன. இந்நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கியானது, ஏடிஎம்.,களில், மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது
இந்த நடைமுறையும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மேலும் சேவிங் வங்கி கணக்கில் குறைந்தபட்ச கையிருப்பாக 5௦௦௦ ரூபாய் வரை , வாடிக்கையாளர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என எஸ் பி ஐ ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், கட்டணமில்லாமல் மாதத்திற்கு 10 முறை ஏடிஎம் மில்லிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிராட்பேண்ட் இருந்தால் போதும்; சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி அறிமுகம் - நெட்வொர்க் இல்லாத இடத்திலும்செயல்படும்.

சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில் பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால், நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட செல்போன் மூலம் பேசமுடியும்.
தனியார் தொலைபேசி நிறுவனங்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகள், சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தி வருகிறது. அந்த வரிசையில், ‘எல்எஃப்எம்டி’ (Limited Fixed Mobile Telephony) என்ற புதிய சேவையைதற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை தொலைபேசி வட்டத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி, கூறியதாவது:பிஎஸ்என்எல் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள எல்எப்எம்டிசேவையைப் பயன்படுத்த வீட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரை வழி தொலைபேசி (லேண்ட்லைன்) இணைப்பு, பிராட் பேண்ட் இணைப்பு அவசியம் வைத் திருக்க வேண்டும். பிராட்பேண்டில் ஸ்டேடிக் ஐபி, டைனமிக் ஐபி என 2 வகை உள்ளது.
இதில் ஸ்டேடிக் ஐபி வைத்துள்ளவர்களுக்கு மட்டும் தற்போது இப்புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.இந்த புதிய வசதியைப் பெற விண்ணப்பித்தால் முதலில் அவர்களுக்கு ‘2999’ என்ற எண்ணில் தொடங்கும் ஒரு டம்மி எண் வழங்கப்படும். இதை ஏற்கெனவே உள்ள லேண்ட்லைன் தொலைபேசி எண்ணுடன் இணைக்க வேண்டும்.மேலும், ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ‘ஜொய்ப்பர்’ என்ற செயலியை (Zoiper App) பதிவிறக்கம் செய்ய வேண் டும். அதில் யூஸர் நேம், பாஸ்வேர்டு கொடுத்து இணைக்க வேண்டும். பிறகு, ‘அவுட்கோயிங்’, ‘இன்கமிங்’, டேட்டாசேவை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். செல் போனில் சிம் கார்டு இல்லாமல் மேற்கண்ட செயலி மூலம் ‘கால்’ செய்யலாம். இதுதான் இச்சேவையின் சிறப்பம்சம்.சிலர் வீடுகளில் வாய்ஸ்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்பார்கள். அவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி ‘கால்’ செய்யலாம்.
இச்சேவையைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் கிடையாது. தற்போதைக்கு ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். செல்போன் சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் இச்சேவையைப் பயன்படுத்தி பேச முடியும். அத்துடன், குரல் அழைப்பும் (வாய்ஸ் கால்) நன்கு தெளிவாக கேட்கும்.இவ்வாறு கலாவதி கூறினார்.

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2-4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட்ட அகவிலைப்படி வழங்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று புதிய நுண்ணுயிர்கள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி !!

நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிர் கிருமிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.
*பூனே:*
நாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகளில் நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பாக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 
கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பாக்டீரியா மற்றும் கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும் ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10-12 வகையான கிருமிகள் இருப்பது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் சில கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத இரண்டு வித பாக்டீரியா மற்றும் பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னாலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொருத்த வரை நிலைமை இன்னும் கட்டுக்குள் இருக்கும் போதும், வாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என கூறப்படுகிறது. எனினும் ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்யும் போது அவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவல்கள் பிரபல செய்தி நிறுவனமான பிடிஐக்கு அறிவியல் ஆய்வாளர் பல்லவி பாக்லா வெளியிட்ட கட்டுரை தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Don't have minimum balance in your SBI account? Get ready to pay fine from April 1

Making it compulsory for account-holders to maintain a minimum balance, the State Bank of India (SBI) said on Thursday said it will be charging defaulters a penalty from April 1 onwards. 
Making maintenance of Rs 5,000 mandatory for accounts in metropolitan areas, Rs 3,000 in urban areas, Rs 2,000 in semi-urban areas and Rs 1,000 in rural areas, the SBI listed out the charges to be effective from April 1. 
These charges will be based on the difference between the minimum balance required and the shortfall. For metropolitan areas, if the shortfall is greater than 75 per cent. the charges would be Rs 100 plus service tax. 
If the shortfall is between 50-75 per cent, the bank would charge Rs 75 plus service tax and for below 50 per cent shortfall, a fee of Rs 50 plus service tax would be levied, according to the SBI notification of new charges. 
Similarly, for rural areas, the penalty for non-maintenance of minimum balance ranges from Rs 20-50 plus service tax, it said.               
The public sector lender would also renew from April 1, the Rs 50 charge for people carrying out over three cash transactions at its branch within a month. This charge is applicable currently as well. However, there is no upper limit on the amount of cash transacted. 
"These cash transaction charges at branches are already existing. The same have been renewed for the next financial year from April 1. It is to deter the customers from visiting the branch but the charges are very nominal. As it is, the customer does not need to visit the branch often because we provide 10 free withdrawals in a month from ATMs," a SBI official told IANS.

TET NEW STUDY MATERIAL - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்... TET -1

ஆள் பற்றாக்குறையால் திணறும் தேர்வு துறை

தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறையால், தேர்வு பணிகளை கண்காணிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 2ல் துவங்கியது. இந்த தேர்வில், முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, மாவட்ட வாரியாக இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்வு பணிகள் குறித்த புகார்கள், தேர்வில் பங்கேற்ற மாணவர் எண்ணிக்கை, தேர்வுக்கு வராதவர்கள் எண்ணிக்கை, காப்பியடித்தோர் எண்ணிக்கை குறித்த விபரங்களை, மாவட்ட வாரியாக பெற, தேர்வுத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என, இரண்டு தேர்வுகளிலும், மாவட்டங்களிலிருந்து விபரங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து விசாரித்த போது, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் போதுமான ஆட்கள் இல்லாததால், தேர்வு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிந்தவுடன் காப்பியடித்தவர்கள் விபரம், தலைமை
செயலகத்துக்கும், ஊடகங்களுக்கும் வழங்கப்படும். இந்த ஆண்டு ஆள் பற்றாக்குறையால், தலைமை செயலகத்துக்கு தகவல் அனுப்பவே ஊழியர்கள் திணறுவதால், ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறை தரப்பில், தேர்வுத் துறைக்கு கூடுதல் ஊழியர்களை அனுப்ப மறுப்பதால், தகவல் சேகரிப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

வாக்காளர் அட்டை காணவில்லையா? இ - சேவை மையத்தில் பெறலாம்..

வாக்காளர் அட்டையை தொலைத்தவர்கள் அல்லது கிழிந்த நிலையில் வைத்திருப்பவர்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களில் செயல்படும், இ - சேவை மையம் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா அலுவலக வளாகத்தில், அரசு கேபிள், 'டிவி'யின் இ - சேவை மையம் இயங்கி வருகிறது. இதில், கோபி தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்கள், வாக்காளர் அட்டை தொலைந்தவர்கள் அல்லது விண்ணப்பித்தவர்கள், இந்த மையத்தை அனுகி, கலர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: தாலுகா அலுவலகங்களில் செயல்படும், இ - சேவை மையங்கள் மூலம், புதிய வாக்காளர் அட்டை கோரியவர்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆதாரத்துடன் வந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வந்திருந்தால், அதை காட்டி புதிய கலர் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். வாக்காளர் அட்டை தொலைத்தவர்கள் அல்லது கிழிந்திருந்தால், அந்த எண்ணை கொண்டு, 25 ரூபாய் கட்டணம் செலுத்தி, புதிய அட்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு ஊழியர்கள் சம்பளத்தில், மாதந்தோறும், வருமான வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது

.இதுதொடர்பாக,அரசு
பிறப்பித்துள்ள உத்தரவு:
'வருமான வரியை, 2018 பிப்ரவரியில், ஒரே தவணை யாக பிடித்தம் செய்யக்கூடாது. இந்த ஆண்டு மார்ச் முதல், மாதந்தோறும் தவறாமல் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருமான வரித் துறை அறிவுறுத்தி உள்ளது.எனவே, மார்ச் மாத சம்பளத்தில் இருந்து, பொது வருங்கால வைப்பு நிதியான, ஜி.பி.எப்., சந்தா தொகையை, அதிகரிக்கவோ 
அல்லது குறைக்கவோ விரும்பும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வரும், 8ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TET தேர்வு நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
'அரசு, உதவிபெறும் பள்ளி களில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, 2010 முதல் TET தேர்வு கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ல் முதல் முறையாக இத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, '23.8.2010க்குபின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET தேர்ச்சி கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, 'அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 3,200 ஆசிரியர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடக்கும்TET தேர்வு களில், தேர்ச்சி பெற வேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது; ஆனால், 2013க்கு பின் தேர்வு நடக்கவில்லை. இந்நிலையில், கல்வித்துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட உத்தரவில், '23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏப்.,29, 30 ல் நடக்கும் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாதபட்சத்தில் நியமனம் ரத்து செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்களை அழைத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் கடிதம் பெறுகின்றனர். இதனால், சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளை சேர்ந்த 3௦00 ஆசிரியர்களின் நியமனம் கேள்விக்குறியாகி உள்ளது.ஆசிரியர் சங்க நிர்வாகி  கூறியதாவது:'குறுகிய கால அவகாசம் கொடுத்து, ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற வேண்டும்' என, அரசு நெருக்கடி கொடுப்பதை ஏற்க முடியாது. ஏழு ஆண்டுகளாக அரசு சம்பளம் பெற்றுள்ளனர். அவர்களின் குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறுபான்மையினர் பள்ளிகளில், TET தேர்ச்சிஇல்லாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 'சிறப்பு பணியிடை பயிற்சி' அளித்து பணியில் தொடரவும், தேர்ச்சி மதிப்பெண் 82 எனவும் உத்தரவிட்டது போல், உதவிபெறும் பள்ளிகளில் 23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.கடந்த 2013 முதல் தேர்வே நடத்தாமல் திடீரெனஇப்போது அறிவித்து, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார்.

இந்தியா முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட தங்களுடைய ஆதார் எண்களை கொடுக்க வேண்டும்

நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஏழை மாணவ - மாணவிகள் பள்ளிகளிலேயே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்களை பள்ளி களில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்து உள்ளது. இது தொடர்பான அறிவிக்கை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதே போல் சமையலர்கள், உதவியாளர்களும் ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தர விடப்பட்டு உள்ளது.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பித்து ஆதார் அட்டை பெற்றுக் கொண்டு வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதிய உணவு திட்டத்தில் சில இடங்களில் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதற்கான உணவுப் பொருட்களை பெற்றுக் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வழங்குவதாக புகார்கள் வந்தன. மேலும் பல மாணவர்கள் வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதாக கணக்கிடப்படுகிறது.
எனவே இது போன்ற முறைகேடுகளை தடுக்கவே ஆதார் அட்டை கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சனி, 4 மார்ச், 2017

மாணவர்களுக்கு பரிசு:முதல்வர் பழனிசாமி வழங்கினார்

கடந்த கல்வியாண்டில், அரசு பொதுத் தேர்வில், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற, மாணவ, மாணவியருக்கு, முதல்வர் பழனி சாமி பரிசுத் தொகை வழங்கினார்.அரசு பள்ளிகளில் படித்து, பிளஸ் 2 தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
2015 - 16ம் கல்வியாண்டில், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு, மாநில அளவில், முதலிடம்பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஏற்கனவே பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாமிடம் பெற்ற, 21 மாணவர்களுக்கு, தலா, 30 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் இடம் பெற்ற , 22 பேருக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட உள்ளது. அதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில், இரண்டாம் இடம் பெற்ற, 69 மாணவ - மாணவியருக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் இடம் பெற்ற, 424 மாணவர்களுக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட உள்ளது. இதில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த, ஏழு மாணவ - மாணவியருக்கு, 1.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார். பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு, அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள் வழங்குவர்.
ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க......?அதுக்கு இவ்ளோ கோவமா?

 உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்
வேட்டையாடும்
 காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.

1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல்
செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.

2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான்
நிற்கும்.

3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
 லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?

4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.

5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?

6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?

7. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?

8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.

9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.

10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
---------------------------------------------
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...

பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...

தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...

ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...

மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் ...

"மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்" ...

கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம்...!

ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!

உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!

ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. ...

புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. ...

குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா....

நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ....

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா....

நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.

ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..

20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா...

சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்...

இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .

சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...

ஹெல்மெட்_அணிவதால். ...
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..

கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது...

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே...

வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். ...

இப்பொழுது சொல்லுங்கள்
ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்....

இந்த பதிவை ஏற்றுக்கொள்பவர்கள்
முடிந்த அளவுக்கு ஷேர் பண்ணுங்கள்..!

பிளஸ் 2 விடைத்தாள் ஏப்.1ல் திருத்தம்

பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1 முதல் துவங்கும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, 2ம் தேதி துவங்கியது. இதில், 9.33 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
மொத்தம், 2,434 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; 4,000 பறக்கும் படைகள், தேர்வு நாட்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகள், 31ல் முடிகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்தமும் துவங்கியது. அதனால், ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். விடைத்தாள் திருத்துவதா; தேர்வு பணி பார்ப்பதா; பிளஸ் 1 மாணவர்களை கவனிப்பதா என, குழப்பம் ஏற்பட்டது.
இதை தடுக்க, இந்த ஆண்டு தேர்வு முடிந்த பின், ஏப்., 1 முதல் விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுவையில், 150 விடை திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு, திருத்த பணிகள் நடக்க உள்ளதாக, தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்., 20க்குள், அனைத்து பாடங்களுக்கான திருத்தத்தையும் முடிக்க, தேர்வுத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

TET தேர்வு நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
'அரசு, உதவிபெறும் பள்ளி களில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, 2010 முதல் TET தேர்வு கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ல் முதல் முறையாக இத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, '23.8.2010க்குபின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET தேர்ச்சி கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, 'அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 3,200 ஆசிரியர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடக்கும்TET தேர்வு களில், தேர்ச்சி பெற வேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது; ஆனால், 2013க்கு பின் தேர்வு நடக்கவில்லை. இந்நிலையில், கல்வித்துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட உத்தரவில், '23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏப்.,29, 30 ல் நடக்கும் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாதபட்சத்தில் நியமனம் ரத்து செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்களை அழைத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் கடிதம் பெறுகின்றனர். இதனால், சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளை சேர்ந்த 3௦00 ஆசிரியர்களின் நியமனம் கேள்விக்குறியாகி உள்ளது.ஆசிரியர் சங்க நிர்வாகி  கூறியதாவது:'குறுகிய கால அவகாசம் கொடுத்து, ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற வேண்டும்' என, அரசு நெருக்கடி கொடுப்பதை ஏற்க முடியாது. ஏழு ஆண்டுகளாக அரசு சம்பளம் பெற்றுள்ளனர். அவர்களின் குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறுபான்மையினர் பள்ளிகளில், TET தேர்ச்சிஇல்லாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 'சிறப்பு பணியிடை பயிற்சி' அளித்து பணியில் தொடரவும், தேர்ச்சி மதிப்பெண் 82 எனவும் உத்தரவிட்டது போல், உதவிபெறும் பள்ளிகளில் 23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.கடந்த 2013 முதல் தேர்வே நடத்தாமல் திடீரெனஇப்போது அறிவித்து, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார்.

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.