மாணவர்களுக்கு பரிசு:முதல்வர் பழனிசாமி வழங்கினார்
கடந்த கல்வியாண்டில், அரசு பொதுத் தேர்வில், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற, மாணவ, மாணவியருக்கு, முதல்வர் பழனி சாமி பரிசுத் தொகை வழங்கினார்.அரசு பள்ளிகளில் படித்து, பிளஸ் 2 தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
2015 - 16ம் கல்வியாண்டில், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு, மாநில அளவில், முதலிடம்பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஏற்கனவே பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
2015 - 16ம் கல்வியாண்டில், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு, மாநில அளவில், முதலிடம்பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஏற்கனவே பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாமிடம் பெற்ற, 21 மாணவர்களுக்கு, தலா, 30 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் இடம் பெற்ற , 22 பேருக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட உள்ளது. அதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில், இரண்டாம் இடம் பெற்ற, 69 மாணவ - மாணவியருக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் இடம் பெற்ற, 424 மாணவர்களுக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட உள்ளது. இதில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த, ஏழு மாணவ - மாணவியருக்கு, 1.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார். பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு, அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள் வழங்குவர்.