>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

I.T : FORM 12BB-TO BE ATTACHED BY ALL WITH INCOMETAX CALCULATION STATEMENT

I.T - CPS ல் பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை - 80CCD ல் காண்பிப்பது குறித்த தெளிவுரை!!

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் ரூபாய் 150000 மேல் சேமிப்பு உள்ளவர்கள் கூடுதலாக ரூபாய் 50000 வரை 80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம் என மண்டல இணை இயக்குநர், கருவூல கணக்குத் துறை அலுவலர் தெளிவுரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருச்சி மாவட்டம் கிளைக்கு வழங்கியுள்ளார்.

அவர்களுக்கு அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்:

உதுமான் மாவட்டச் செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருச்சி மாவட்டம் 9790328342
தமிழக அரசு ஊழியர்கள் (ஆசிரியர்கள்) - CPS ல் பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை IT - 80CCD ல் காண்பிப்பது குறித்த தெளிவுரை - மண்டல இணை இயக்குநர், கருவூல கணக்குத்துறை, திருச்சி (நாள்:02.02.2017)

வியாழன், 9 பிப்ரவரி, 2017

INCOME TAX - 2016-17 FORMS AND EXCEL FILE ... 
         
  www.kalvicikaram.blogspot.in  
                                                                                                                                                                      CLICK HERE TO DOWNLOAD - IT TAX EXCEL FILE | PART 1 |    
                                 P.MANIMARAN (Thanks sir)

Today Deal $50 Off : https://goo.gl/efW8Ef

Group I - HALL TICKET PUBLISHED..

IGNOU - Offer Letter, Merit List & Waiting List for B.Ed Counselling 2017 - RC MADURAI

பள்ளிகளில் நடைபெறும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி திட்டம் குறித்து தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்


ஆசிரியர்களை உதவித்தொடக்கக் கல்வி அலுவலகங்களில் எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என திட்டவட்ட அறிவிப்பு - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

DSE - மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2017பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கூட அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக இயக்குனர் செயல்முறைகள்..

கோப்புகளில் தூசி படிய விட்டால் 'சஸ்பெண்ட்' : கல்வி துறையினருக்கு இயக்குனர் எச்சரிக்கை

பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர்களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில்போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.
தமிழக பட்ஜெட், அடுத்த மாதம் தாக்கலாக உள்ளது. அதனால், கல்வித் துறை உட்பட அனைத்து துறைகளிலும், முன்னேற்பாடுகள் துவங்கி உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியம், பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்புதல்,தேர்வு பணிகள் உள்ளிட்டவற்றில், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களுக்கு, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்களும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களும், பல கோப்புகளை, மாதக் கணக்கில் கிடப்பில் போட்டுள்ளது தெரிய வந்தது. அதுபற்றி, சி.இ.ஓ.,க்களிடம், பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
 இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டு, நிர்வாகத்தில் சிக்கலை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதே போல, டி.இ.ஓ., மற்றும் சி.இ.ஓ.,க்கள் புகார்களுக்குஇடமின்றி செயல்படவும், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.

மாத சம்பளக்காரர்கள் கவனத்திற்கு.. இனி ரூ.50,000 மேல் அன்பளிப்பு பெற்றால் வரி செலுத்த வேண்டும்..!!!

இனி இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள், நிறுவனத்தின் வாயிலாகவோ அல்லது பிற வழிகளில் கிடைக்கும் அன்பளிப்புக்கு வரி செலுத்த வேண்டும். இப்புதிய மாற்றத்தை பட்ஜெட் அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட நிதியியல் மசோதா 2017இல் பகுதி 56
வருமான வரி சட்டத்தின் புதிய திருத்தமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது என மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2016 - விருது பெறுவதற்கு ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவம் & இயக்குநரின் செயல்முறைகளும்

பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2016 - விருது பெறுவதற்கு ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவம் & இயக்குநரின் செயல்முறைகளும்

சேமிப்பு கணக்கில் இருந்து இனி வாரம் ரூ.50 ஆயிரம் எடுக்கலாம்: ஆர்.பி.ஐ

பொதுமக்கள் வரும் 20-ஆம் தேதி முதல் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து இனி வாரம் ரூ.50 ஆயிரம் பணம்  எடுக்கலாம் என்று ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 8-ஆம் தேதி அன்று பிரதமர் மோடி புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தார். அத்துடன் வங்கியில் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன் பிறகு ஐம்பது நாட்கள்  கழித்து கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளரத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று ஒரு அறிவிப்பை ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் வரும் 20-ஆம் தேதி முதல் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து இனி வாரம் ரூ.50 ஆயிரம் பணம்  எடுக்கலாம் என்று ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம்.

1. ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம்  துவங்க உள்ளது | விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN) | விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்கள்| பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே மையத்தில் ஒப்படைத்தல் வேண்டும் | கடைசி தேதி 28.02.2017.
2.Last date for Sale of Application Forms tentatively 27-02- 2017 and receipt of Filled-in Application forms in the District Educational Offices on 28.02.2017 should be closed at 05.00 PM without fail.
3.Paper I and Paper II Application Forms should be separated (two different colours).
4.Challans for Rs.250 and Rs.500 should be separated for Paper I and Paper II, and these separated Challans should be kept in four separate envelopes (Paper I – Rs. 250, Paper II - Rs. 250, Paper I - Rs. 500 and Paper II - Rs. 500).

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

டிமிக்கி' ஆசிரியர் இருவர் 'சஸ்பெண்ட்' : தொடர்'களை'யெடுப்பால் கலக்கம்

பணியின்போது 'டிமிக்கி' கொடுத்து வெளியே சென்ற கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்கள் இருவரை, 'சஸ்பெண்ட்' செய்து இணை இயக்குனர் பொன்குமார் உத்தரவிட்டார்.
இரண்டு மாதங்களில், இத்துறையில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர், இதுவரை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதால், துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இத்துறையில் 290 பள்ளிகள் உள்ளன. 54 விடுதிகளில் 4800க்கும் மேல் மாணவர் தங்கி படிக்கின்றனர். விடுதிகளில், மாணவர் எண்ணிக்கையை போலியாக கணக்கு காட்டி அதற்கான அரிசி, பருப்பு மற்றும் சமையல் பொருட்கள் வினியோகம் பெற்று முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்து, திண்டுக்கல் அரசு விடுதி காப்பாளர் காசிராஜன், உசிலம்பட்டி மாணவர் விடுதி காப்பாளர் பாலமுருகன், மாணவிகள் விடுதி காப்பாளர் ராணி ஆகியோரை, இணை இயக்குனர் பொன்குமார், ஜன.,27ல் 'சஸ்பெண்ட்' செய்தார். மேலும் போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்த உசிலம்பட்டி விடுதி சமையலர் பால்பாண்டி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதற்கு முன் ஜன., முதல் வாரத்தில் திண்டுக்கல், தேனி மாவட்ட விடுதி காப்பாளர்கள் உட்பட 3 பேர் முறைகேடு புகார்களில் சிக்கி 'சஸ்பெண்ட்' செயப்பட்டனர்.

தொடர் 'களை'யெடுப்பு: இந்நிலையில், பணி நேரத்தில் வருகைபதிவேட்டில் கையெழுத்திட்டு, சொந்த வேலைக்காக ஆசிரியர்கள் சிலர் வெளியில் செல்வதாக புகார் எழுந்தது.

இதுகுறித்த விசாரணையில், பயிற்சிக்கு செல்வதாக கூறி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பயிற்சியில் பங்கேற்காத, போடி கிழக்கு கள்ளர் நடுநிலைபள்ளி ஆசிரியர் வாஞ்சிநாதன், தாமதமாக பள்ளிக்கு சென்று வருகை பதிவேட்டில் திருத்தம் செய்ததால் கருவேலநாயக்கன்பட்டி ஆசிரியர் மலைச்சாமி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பொன்குமார் கூறுகையில், "உரிய விசாரணைக்கு பின் 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்," என்றார்

RMSA - பள்ளிகளுக்கு மார்க், ஆர்.எம்.எஸ்.ஏ., கணிப்பு

INCOME TAX : CPS, 80Cபடி வருமான வரி தொகையை எவ்வாறு கழிக்கலாம் - RTI

அரசு பள்ளியில் விடுப்பு எடுத்து 5 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணி ஆசிரியைக்கு கல்வித்துறை நோட்டீஸ்

பள்ளிபாளையம்- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன்சந்தைபேட்டையை சேர்ந்தவர் மீனலோசனி. இவர், இங்குள்ள ஆவத்திபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த 2012 பிப்ரவரி 16ம் தேதி முதல் பள்ளிக்கு வரவில்லை. மாநில தொடக்க கல்வி இயக்குனருக்கு அப்போதே ஒரு பதிவு தபால் அனுப்பியுள்ளார். அதில் மூன்று வருடங்கள் விடுப்பில் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உரிய காரணம் இல்லாததால், தொடக்க கல்வி இயக்குனர் விடுப்புக்கு அனுமதி மறுத்தார். இதையடுத்து ஆசிரியை மீனலோசனி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, கல்வி அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அமெரிக்காவில் உள்ள தனியார் பள்ளியில், அவர் ஆசிரியையாக பணியாற்றுவது தெரியவந்தது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். அவரது வீட்டு முகவரிக்கு அனுப்பிய கடிதம் திரும்பி வந்தது. அவரது கணவர் புவனேஷ்வரனுக்கு அனுப்பிய கடிதமும் பெறாமல் திருப்பி அனுப்பப்பட்டது.
இதனிடையே, ஆசிரியையிடமிருந்து உரிய விளக்கம் கிடைக்காததால், ஆவத்திபாளையம் நடுநிலைப்பள்ளியில் புதிய ஆசிரியை நியமிக்கப்படாததால், 5 ஆண்டாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு சென்றது தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு விளக்கம் அளிக்காத ஆசிரியை மீது மாவட்ட கல்வி அதிகாரி 17(பி) சட்ட விதிகளின் படி குற்றச்சாட்டு குறிப் பாணை பிறப்பித்துள்ளார்.
இதற்கான நோட்டீஸை நேற்று புதன்சந்தையில் உள்ள ஆசிரியை மீனலோசனி வீட்டு கதவில் பள்ளிபாளையம் உதவி கல்வி அலுவலர் ஒட்டினார். இன்னும் இரண்டு நாட்களில் இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்காவிட்டால், அலுவலக ஆவணங்களின் அடிப்படையில் இறுதியாணை பிறப்பிக்கப்படுமென நோட்டீசில் மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை செய்துள்ளார்.

கணினி ஆசிரியர் வாழ்வில் விடியல் மாபெரும் பொதுக்குழுக் கூட்டம் கடலூா் மாவட்டம் தொழுதூரில் ....

கணினி ஆசிரியர்கள் கவனத்திற்க்கு.....
 எங்களுக்கு  வேலை கொடுங்க...!
ஏழைக் குழந்தைக்கு தமிழகத்தில் தரமிகு கல்வி கொடுங்க..!
கடலூர் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்கள் பொதுக் கூட்டம்
19.02.2017ஞாயிறு அன்று நடைபெற உள்ளது கணினி  ஆசிரியர்கள்  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேணடும்.
(வேலையில்லாமல் வாடும் கணினி ஆசிரியர்களே உங்கள் பணி வாயப்பை உறுதி செய்ய அனைவரும் 
வாரீர்.)
இடம்:  ராமநத்தம் ஊராட்சி மண்டபம்.
தொழுதூர்  NH - 45
நாள் :19.2.2017
நேரம்:9.00 காலை மணி.
மதிய உணவு  வழங்கப்படும்.
குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.
இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு
கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இலவச  உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
இரண்டு புகைப்படம்,
பி.எட் சான்றிதழ் நகல்,
வேலைவாய்ப்பு அட்டை நகல்,
இவற்றுடன் தங்களின்
சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்.
பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.
கணினி ஆசிரியர்களே வாரீர் வாரீர் கடலூர் நோக்கிய வெற்றிப் பயணத்ததிற்க்கு அனைவரும்  வாரீர் .......
கடலூர் மாவட்ட நிர்வாகிகள் தொடர்புக்கு:
9655542577, 9942380309,
9698339298,9443562682.
வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச் செயலாளர்,
9626545446.
தமிழ்நாடு  பி.எட்  கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .
பதிவு எண்:655/2014

அரசுப் பள்ளி மாணவர்களும் சாதிக்க உதவும் Tan Excel பயிற்சி!

கல்வி தனியார்மயமான பிறகு கற்றலில் போட்டி என்பது முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. அந்தப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் செயல்படவேண்டிய கட்டாயம் அரசுப் பள்ளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் பெறவேண்டிய 35 மதிபெண்ணைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றாலே பெரிதாக எண்ணிய காலம் மலையேறிவிட்டது.
இப்போது எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள்? என்பதை விட, எத்தனை பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள்? எத்தனை பேர் 90 விழுக்காடு மதிப்பெண் பெற்றார்கள்? எத்தனை பேர் எத்தனை பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்றார்கள்? என்று ஆய்வு செய்யும் நிலை உருவாகியுள்ளது.
தனியார் பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவர்களைத் தேர்வுசெய்து டாப்பர் வகுப்பு எனச் சிறப்புப் பயிற்சி அளிப்பார்கள். அந்தத் தொடர் பயிற்சியின் காரணமாகப் பல மாணவர்கள் பெரும்பாலான பாடங்களில் நூற்றுக்குநூறு பெறுவார்கள். அதுபோல ஒரு வாய்ப்பினை அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கினால் அவர்களும் அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்று எண்ணி ஒரு புதிய செயல்திட்டத்தை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களில் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்கு டேன் எக்ஸெல் (Tan Excel) என்று பெயர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெறும்  மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சனி, ஞாயிறுகளில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு பாடத்திலும் அதிகபட்ச மதிப்பெண் பெற வைப்பது, மேலும் அவர்களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது என்கிற நோக்கத்தில் இப்பயிற்சி  வகுப்புகள் நடைபெறுகின்றன.
இதற்குத் தேசிய இடைநிலைக் கல்வித்திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமும் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குப் பயணப்படியும் வழங்கப்படுகிறது. இந்த வகுப்புகள் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதால் சில மாணவர்கள் இதில் விருப்பத்தோடு கலந்துகொள்வதில்லை. சிலர் செல்வதே இல்லை. இதுகுறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு இல்லை. பெற்றோர்களின் பொறுப்பில் மாணவர்கள் இவ்வகுப்புக்குச் செல்லவேண்டும் என்பதால் பெற்றோர்கள் தங்களின் வேலைகளைத் தம் குழந்தைகளுக்காக விட்டுவிட்டு இரு நாட்களை ஒதுக்கி  இவ்வகுப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
2/1/2017 2:07:58 PMகல்வி தனியார்மயமான பிறகு கற்றலில் போட்டி என்பது முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. அந்தப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் செயல்படவேண்டிய கட்டாயம் அரசுப் பள்ளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் பெறவேண்டிய 35 மதிபெண்ணைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றாலே பெரிதாக எண்ணிய காலம் மலையேறிவிட்டது. இப்போது எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள்? என்பதை விட, எத்தனை பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள்? எத்தனை பேர் 90 விழுக்காடு மதிப்பெண் பெற்றார்கள்? எத்தனை பேர் எத்தனை பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்றார்கள்? என்று ஆய்வு செய்யும் நிலை உருவாகியுள்ளது.
தனியார் பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவர்களைத் தேர்வுசெய்து டாப்பர் வகுப்பு எனச் சிறப்புப் பயிற்சி அளிப்பார்கள். அந்தத் தொடர் பயிற்சியின் காரணமாகப் பல மாணவர்கள் பெரும்பாலான பாடங்களில் நூற்றுக்குநூறு பெறுவார்கள். அதுபோல ஒரு வாய்ப்பினை அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கினால் அவர்களும் அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்று எண்ணி ஒரு புதிய செயல்திட்டத்தை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களில் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்கு டேன் எக்ஸெல் (Tan Excel) என்று பெயர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெறும்  மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சனி, ஞாயிறுகளில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு பாடத்திலும் அதிகபட்ச மதிப்பெண் பெற வைப்பது, மேலும் அவர்களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது என்கிற நோக்கத்தில் இப்பயிற்சி  வகுப்புகள் நடைபெறுகின்றன.
இதற்குத் தேசிய இடைநிலைக் கல்வித்திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமும் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குப் பயணப்படியும் வழங்கப்படுகிறது. இந்த வகுப்புகள் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதால் சில மாணவர்கள் இதில் விருப்பத்தோடு கலந்துகொள்வதில்லை. சிலர் செல்வதே இல்லை. இதுகுறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு இல்லை. பெற்றோர்களின் பொறுப்பில் மாணவர்கள் இவ்வகுப்புக்குச் செல்லவேண்டும் என்பதால் பெற்றோர்கள் தங்களின் வேலைகளைத் தம் குழந்தைகளுக்காக விட்டுவிட்டு இரு நாட்களை ஒதுக்கி  இவ்வகுப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் வகுப்பு நடைபெறும் இடமும் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களின் விவரமும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும். இத்தகவலை அப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய மாணவர்களிடம் தெரிவித்து கலந்து கொள்ளச் செய்யவேண்டும். இது அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. இதனை முழுமையாக மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டால் எந்தப் போட்டித் தேர்வையும் எளிதாக எதிர்கொள்ளலாம். மதிப்பெண்களையும் சற்றுக் கூடுதலாகப் பெறலாம்.
திறமையான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. சென்ற ஆண்டு இதுபோல் பயிற்சியில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் சில பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். இப்பயிற்சியின் சிறப்புகளைப் பெற்றோர்களும் மாணவர்களும் உணர்ந்து ஒத்துழைப்பு நல்கினால் அரசுப் பள்ளிகளில் கல்வியில் சிறந்துவிளங்கும் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் உயரும்.
இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திடவேண்டும். இதனை உரிய அலுவலர்கள் மேற்பார்வை செய்து இத்திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து  மேலும் சிறப்பாகச் செயல்படுத்தினால் வாய்ப்புகளற்ற ஏழை எளிய மாணவர்கள் பயனடைவார்கள். விடுமுறை நாட்களில் வகுப்பு எடுக்கவேண்டியிருப்பதால்  ஆசிரியர்கள் கூடுதல் சுமையாகக் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
Tan Excel திட்டத்தில் பயிலும் ஒரு மாணவர் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றால் அந்தப் பாடத்தை நடத்திய ஆசிரியருக்கும் மாணவருக்கும் சிறப்புப் பரிசுகள் அளித்து ஊக்கப்படுத்தலாம். எந்த மையத்தில் அதிகபட்ச மாணவர்கள் அதிக விழுக்காடு மதிப்பெண் பெறுகின்றனரோ அந்த மையத்தில் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பரிசளிக்கலாம். களத்தில் நேரடியாகப் பங்கேற்கும் ஆசிரியர் மாணவர்களிடையே உரிய அலுவலர்கள் கலந்துரையாடி இன்னும் வெற்றிகரமாக இந்தச் செயல்திட்டத்தை நிறைவேற்றத் தேவையான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்தினால் முழுவெற்றி  நிச்சயம்.

PLI - Premium + service Tax யும் சேர்த்து IT deduction - Under Section 80C ல் காட்டலாம்