ஞாயிறு, 27 நவம்பர், 2016
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது. பேராசிரியர் பணியில் சேரும் தகுதிக்கான, 'நெட்' நுழைவுத்தேர்வு, ஜனவரியில் நடக்கிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும் இத்தேர்வுக்கு,
சிறைச்சாலை மனநல ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள மனநல ஆலோசகர் பணியிடத்துக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள மனநல ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்: சமூகவியல், உளவியல், சமூகப் பணி மாஸ்டர் பட்டம், மனநல நிறுவனங்கள் அல்லது சமூக சேவையில் மனநல ஆலோசகர் அனுபவம் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு: (அதிகபட்சமாக) எஸ்.சி. 40, எஸ்.டி. 40, பிற்படுத்தப்பட்டோர் 35, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 35, இதர பிரிவினர் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
இதற்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை-1 (தண்டனை பிரிவு) புழல், சென்னை-66 என்ற முகவரியில் சேர்க்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04426590615 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள மனநல ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்: சமூகவியல், உளவியல், சமூகப் பணி மாஸ்டர் பட்டம், மனநல நிறுவனங்கள் அல்லது சமூக சேவையில் மனநல ஆலோசகர் அனுபவம் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு: (அதிகபட்சமாக) எஸ்.சி. 40, எஸ்.டி. 40, பிற்படுத்தப்பட்டோர் 35, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 35, இதர பிரிவினர் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
இதற்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை-1 (தண்டனை பிரிவு) புழல், சென்னை-66 என்ற முகவரியில் சேர்க்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04426590615 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை ஐடிஐ.யில் அலுவலக உதவியாளர் பணி
சென்னை திருவான்மியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானோர் டிச.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ப.மகேஸ்வரி
வெள்ளி, 25 நவம்பர், 2016
தினம் ஒரு தகவல்.
*"சிறுநீரை அடக்க வேண்டாம்..*"
ஒரு உண்மை சம்பவம்...
15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்னதாக அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.
அன்று மருத்துவரின் அறிவுரைப்படி அச்சிறுமிக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அன்று தான் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை மருத்துவரும் அச்சிறுமியின் பெற்றோரும் அறிய வந்தனர்.
என்னவெனில் அச்சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது என்பது.
அச்சிறுமியின் பெற்றோர் கலங்கி விட்டனர்.
எவ்வாறு இந்த பெரிய சங்கடம் உருவானது என்று மருத்துவர் அறிய அச்சிறுமியிடம் விசாரித்தபோது தான் தெரிந்தது அச்சிறுமி பள்ளி செல்லும் பொதெல்லாம் சிறுநீரை கழிக்கவே மாட்டாராம்.
ஏனெனில் சிறுநீர் கழிக்க அச்சிறுமிக்கு இருந்த தயக்கமும் அப்பள்ளியில் அதற்கான வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்ததுமே இதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
இந்த சிறுநீரை அடக்கும் பழக்கத்தால் அச்சிறுமியின் சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்பட்டு இறுதியில் சிறுநீரகமே செயலிழந்து போனது தான் கொடூரத்தின் உச்சம்.
அதைவிட கொடூரம் என்னவெனில் நான் சந்தித்த இரண்டாவது நாள் அச்சிறுமி மரணத்தையும் தழுவி விட்டாள் என்பது மிகுந்த மன வேதனைக்குள்ளாக்கி விட்டது.
பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கழிவறைகளை கண்டீர்களானால் நம் வயிற்றுக்குள் உணவு செல்லாது.
அவ்வளவு கொடூரமாக இருக்கிறது கழிவறைகள்.
அது மட்டுமில்லாமல் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சிறுநீர் கழிக்கும் இடைவெளியை வெறும் 10 நிமிடத்திற்கு ஒதுக்கி 400 மாணாக்கர்களை அங்கு தள்ளுகின்றனர்.
இதனால் பல மாணாக்கர்கள் கூச்சப்பட்டுக்கொண்டு இயற்கை உபாதைகளை கழிக்காமலே அடக்கிக் கொள்கின்றனர்.
இதனால் குழந்தைகள் சிறுநீர் தொற்றிற்கு உள்ளாகி உயிரை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
அன்பர்களே தயவு செய்து இந்த பதிவை முடிந்த அளவு உங்கள் நண்பர்கள் மற்றும் குழுக்களுக்கு பகிர்ந்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுங்கள்.
மேலும் அரசிற்கும், பள்ளி கல்வித்துறைக்கும், அனைத்து பள்ளிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் இப்பதிவின் மூலம் கோரும் வேண்டுகோள் என்னவெனில்
1. ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் மாணாக்கர்கள் சிறுநீர் கழிப்பதை முறையாக கொண்டுள்ளனரா என்பதை அக்கறையுடன் வினவ வேண்டும்.
2. ஆசிரியர்கள் தங்கள் மாணாக்கர்களை தங்கள் குழந்தை போல் பாவித்து இம்மாதிரியான அபாயத்திற்குள் சென்றுவிடாமல் பாதுகாக்க முனைய வேண்டும்.
3. அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பள்ளிக் கல்வித்துறை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை விட்டு கழிப்பறை இல்லாத பள்ளிகளின் கல்லூரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும்.
மேலும் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நேரத்தை மாணாக்கர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒதுக்கவும் ஆணையிட வேண்டும்.
4, பெற்றோர்கள் தவறாது குழந்தைகள் இயற்கை உபாதைகளை சரியான நேரத்தில் கழிக்கின்றனரா என்பதை தீர ஆராய வேண்டும்.
5. பெற்றோர்கள் இவ்விஷயத்தை பற்றி பள்ளிகளிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
நமது நாடு மற்றம் வீட்டின் வருங்காலத் தூண்களை சிறுநீரகமற்ற தூண்களாக மாற்றி வளரும் பயிர்களை முளையிலேயே கருகவிட்டு விடாதீர்கள்.
*"சிறுநீர் மட்டுமல்லாமல் இயற்கை உபாதைகள் (மலம், தும்மல், இருமல், தாகம், பசி, விக்கல், அபான வாயு...) எதையும் அடக்க கூடாது."*
தயவுசெய்து நண்பர்களே இப்பதிவை சாதாரண பதிவாக எண்ணிவிடாமல் அனைவரும் முக்கியத்துவத்துடன் பகிருமாறும் நம் குழந்தைகளையும் தீர கவனிக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அரசு கட்டடங்களில் மின் இணைப்பை துண்டிக்க...உத்தரவு!:ரூ.820 கோடி நிலுவையால் வாரியம் அதிரடி:டிச., 3க்குள் விபரம் தர அதிகாரிகளுக்கு கிடுக்கி
ஆண்டுக்கணக்கில், மின் கட்டணம் செலுத்தா மல், அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், 820 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதால், இந்த அதிரடி நடவடிக் கையை, தமிழக மின் வாரியம் எடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் பற்றிய விபரத்தை, டிச.,3க்குள் அளிக்கும் படியும், மின் வாரிய அதிகாரிகளுக்கு கிடுக்கிப் பிடி போடப்பட்டுள்ளது.
அரசு துறை அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகம் மற்றும் கட்டடங்களு க்கு, மின் வாரியம் சார்பில், மின் வினியோகம் செய்யப்படுகிறது.பொது மக்கள் மற்றும் தனி யார் நிறுவனங்கள், கடைகளில், மின் பயன்பாடு கணக்கெடுத்த, 20 தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும்.பின்,அபராதத்துடன்கட்டணம் செலுத் திய பிறகே, இணைப்பு வழங்கப்படுகிறது.
ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மின் கணக்கு எடுத்ததில் இருந்து, அபராதமின்றி கட்டணம் செலுத்த, 60 நாட்கள் அவகாசம் தரப்பட்டும், கட்டணம் செலுத்துவதில்லை.
தற்போது, மின் வாரி யம், பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது.அதற்கு, அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்பு கள், பல மாதங்களாக, மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளதும், ஒரு காரணம்.
நிதி நெருக்கடி அதிகரித்து வருவதால், மின் கட்டணத்தை செலுத்துமாறு, மின் வாரிய அதி காரிகள், அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்பு களுக்கு, பல முறை கடிதம் எழுதினர். ஆனால், அவை பொருட்படுத்துவதில்லை.
இதையடுத்து, பாக்கியை வசூலிக்கவும், ஒழுங் காக கட்டணம் செலுத்த வைக்கவும், அதிரடி நடவடிக்கையில் இறங்க, மின் வாரியம் முன் வந்துள்ளது. நிலுவை வைத்துள்ள உள்ளாட்சி மற்றும் அரசு துறை அலுவலகங் களில், மின் இணைப்பை துண்டிக்குமாறு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மின் வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
அரசு துறை,உள்ளாட்சி அதிகாரிகளை சந்தித்து,நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை வசூலிக்க, பொறியாளர்கள் செல்வர்; அங்கே யாரும் கண்டுகொள்வதில்லை. பல மணி நேரம் காக்க வைத்து, அனுப்பி விடுவர்.
தற்போது, கட்டணம் செலுத்தாத, அரசு அலுவலகங்களுக்கு முறைப்படி, 'நோட்டீஸ்' அளித்து, மின் இணைப்பை துண்டிக்குமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
எனவே, கட்டணம் செலுத்தாமல் அலட்சிய மாக உள்ள அரசு அலுவலகம், உள்ளாட்சி கட்டடங்கள், விரைவில் இருளில் மூழ்கும். இந்த உத்தரவு தொடர்பாக, எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை, பொறியாளர்கள், டிச., 3க்குள், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மதிப்பெண் குறைவு!
மத்திய அரசு, மாநில மின் வாரியங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, ஆண்டு தோறும் மதிப்பெண் வழங்குகிறது.
கடந்த ஆண்டு, தமிழக மின் வாரிய செயல்பாடு மோச மாக இருப்பதாக, மத்திய அரசு தெரிவித் தது. இதற்கு, அரசு துறைகளிடம் இருந்து, முறை யாக மின் கட்டணம் வசூலிக்காததும் முக்கிய காரணம்.
அரசு ஊழியர்கள் ,குறித்த அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் திருத்தம் !!
தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர்கள் புதிய பாஸ் போர்ட் பெறவோ, ஏற்கெனவே உள்ளபாஸ்போர்ட்டை புதுப்பிக் கவோ விரும்பினால், அரசிடம் இருந்து
அதற்கான விண்ணப்பத்தையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.எனவே, தமிழக அரசு ஊழியர் கள் ஏற்கெனவே உள்ள விண்ணப் பத்துடன், முன் தகவல் கடிதத் துக்கான விண்ணப்பத்தையும் சேர்த்து அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கேற்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் திருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
CCE - WORKSHEET 3rd WEEK QUESTION PAPER PUBLISHED (1 TO 10) SUBJECT WISE.
- CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 3 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.
CCE - 3rd Week Question (28.11.2016 - 2.12.2016)
வியாழன், 24 நவம்பர், 2016
HSC NR ONLINE UPLOAD | நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.
நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.
நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணியின் முதற்கட்டமாக, அரசுத் தேர்வுத் துறை இணையதள வழியே அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பெயர்ப்பட்டியலை Offline-ல் தயாரித்திட உதவக்கூடிய வெற்று மென்பொருளை பதிவேற்றம் செய்து, அனைத்து பள்ளிகளும் அவரவர் User ID, Password ஐ பயன்படுத்தி 07.10.2016 முதல் 26.10.2016 வரையிலான நாட்களுக்குள் பதிவிறக்கம் செய்து, உறுதிமொழிப் படிவங்களின் அடிப்படையில் Offline-ல் பெயர்ப்பட்டியலை தயாரித்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணியின் முதற்கட்டமாக, அரசுத் தேர்வுத் துறை இணையதள வழியே அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பெயர்ப்பட்டியலை Offline-ல் தயாரித்திட உதவக்கூடிய வெற்று மென்பொருளை பதிவேற்றம் செய்து, அனைத்து பள்ளிகளும் அவரவர் User ID, Password ஐ பயன்படுத்தி 07.10.2016 முதல் 26.10.2016 வரையிலான நாட்களுக்குள் பதிவிறக்கம் செய்து, உறுதிமொழிப் படிவங்களின் அடிப்படையில் Offline-ல் பெயர்ப்பட்டியலை தயாரித்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
தற்போது அப்பணிகளின் தொடர்ச்சியாக, Offline-ல் தயாரிக்கப்பட்ட பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும். பெயர்ப்பட்டியலை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்பதால் மாணவர்களது விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு முன்னரே அனைத்து விவரங்களையும் சரிபார்த்து பிழைகளின்றி பதிவேற்றம் செய்திட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்து தவறாது "Print"எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வது தொடர்பான வழிமுறைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)