>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 19 நவம்பர், 2016

பள்ளிகளில் புகார் பெட்டி : ஆசிரியர்கள் திறக்க தடை

பள்ளிகளில் மாணவ, மாணவியர், தங்கள் குறைகளை தெரிவிக்க, புகார் பெட்டி வைக்கப்படுகிறது. 'அந்த பெட்டியை, தலைமை ஆசிரியர் மட்டுமே திறக்க வேண்டும்; மாணவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் குரூப் 1 தேர்வு புத்தகங்களுடன் இலவச பயிற்சி வகுப்புகள் : தமிழக அரசு அறிவிப்பு

குரூப் 1 தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து,

மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி - நெகிழ வைத்தது நேரு ஸ்டேடியம்

கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடினர்.மாவட்ட பள்ளிக்கல்வி துறை, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் மாற்றத்திறனாளி

ஐடிபிஐ வங்கியில் 500 எக்ஸ்யூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஐடிபிஐ வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 500 எக்ஸ்யூட்டிவ் பணியிடங்களுகான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: IDBI Bank Ltd
மொத்த காலியிடங்கள்: 500
பணி: Executive
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. மற்ற பிரிவினருக்கு ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.01.2017
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு மையங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisement-for-post-of-Executive-2016.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

அரசு பள்ளிகளில் கழிப்பறை... அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற் படுத்த தாக்கலான வழக்கில், 'மேலும் அவகா சம் தேவை' என்ற அரசுத்தரப்பு பதிலை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 'ஏன் போர்க்கால நடவடிக்கை எடுக்கக்கூடாது?' என கேள்வி எழுப்பி விசாரணையை ஒத்தி வைத்தது.
மதுரை ஆனந்தராஜ் 2014ல் தாக்கல் செய்த மனு:
'தமிழகத்தில் 5720 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை' என 2014 ஆக.,8 தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. திறந்தவெளியை கழிப் பிடமாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும். பயனற்ற கழிப்பறைகளை பயன் பாட்டிற்கு கொண்டுவர மத்திய, மாநில அரசு களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவுபடி மதுரை,திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களில் சில அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி களில் வழக்கறிஞர் கமிஷனர்கள் ஆய்வு செய்தனர். 
அவர்கள், 'மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பறைகள், தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன. போதிய துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என்பன உட்பட பரிந்துரைகளை அறிக்கையாக தாக்கல் செய்தனர்.
'இக்குறைகளை நிவர்த்தி செய்யவும், பள்ளிக ளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் எத்தகைய உறுதியான நடவடிக்கை 
மேற்கொள்ளப்படும் என்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என நவ.,2ல் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நவ.,11ல் முதன்மைச் செயலரின் அறிக்கையை படித்த நீதிபதிகள், 'அறிக்கை ஒரே கதையாக உள்ளது. திட்டம் மற்றும் அதை நிறைவேற்று வதற்கான நிதி ஆதாரம் பற்றி எதுவும் குறிப்பிட வில்லை. அதை நிராகரிக்கிறோம்' என அதிருப் தியை வெளிப்படுத்தினர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், 'பள்ளிகளில் கழிப்பறைஅமைக்க தேவையான நிதியை எவ்வாறு பெறுவது, எவ்வளவு காலத்திற்குள் நிறைவேற்றுவது என்பது பற்றிய தெளிவான, திடமான திட்ட அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் நவ.,18ல் தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.
நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, டி.கிருஷ்ணகுமார் கொண்ட அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. முதன்மைச் செயலரின் அறிக்கையை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் (ஏ.ஏ.ஜி.,) சமர்ப்பித்தார். இதை படித்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள், 'அறிக்கை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை,' என்றனர்.
மேலும் நடந்த விவாதம்:
நீதிபதிகள்: அரசுப் பள்ளிகளுக்கு மின்கட்டணமாக (சிறப்பு பயன்பாடு) யூனிட்டிற்கு 5.75 ரூபாய் வசூலிக் கப்படுகிறது. இது வணிக பயன்பாட்டிற்குரிய கட்டணத்தைவிட அதிகம். இதற்கு அரசு போதிய நிதி ஒதுக்குகிறதா?
அரசுப் பள்ளிகளில் 28 லட்சத்து 25 ஆயிரம் மாணவர் கள் படிக்கின்றனர். 20 பேருக்கு ஒன்று வீதம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 288 கழிப்பறைகள் தேவை. ஆனால் சிறுநீர் கழிக்கக்கூடிய 66 ஆயிரத்து 610 கழிப்பறைகள்தான் உள்ளன. எவ்வளவு காலத்திற் குள் தேவையான கழிப்பறைகளை அரசு அமைக்கும்?
ஏ.ஏ.ஜி: இரண்டு ஆண்டுகளுக்குள்அமைக்கப்படும்.
நீதிபதிகள்: 'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி களில் போதிய,முழுமையான கழிப்பறைகள் உள்ளன. நபார்டு திட்டம் மற்றும் தொண்டு நிறு வனங்கள் மூலம் கூடுதல் கழிப்பறைகள் கட்டப் பட்டுள்ளன' என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், 
இந்நீதிமன்றத்தில் ஏற்கனவே தவறான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 
இந்நீதிமன்றத்தை தவறாக நடத்தியுள்ளார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் 
உள்ளது.இது பற்றிய ஆய்வு செய்யவே இந் நீதிமன்றம் வழக்கறிஞர்களை, கமிஷனர்களாக நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இயற்கை உபாதையை போக்க, இன்னும் மரத்திற்கு அடியில் மாணவிகள் ஒதுங்கும் நிலை உள்ளது.
இந்நீதிமன்றம், 'அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தண்ணீர் வசதியுடன் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும்.பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என 2014 ல் உத்தர விட்டது. 'பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்ப டுத்த வேண்டும்' என உச்சநீதி மன்றம் 2012 ல் 
உத்தரவிட்டது.
சுனாமி மற்றும் வெள்ள பாதிப்பின்போது அரசு உடனடி நிவாரண நடவடிக்கை மேற்கொள்கி றது. இவ்விவகாரத்தில் போர்க்கால அடிப்படை யில், நடப்பு நிதியாண்டிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?
ஏ.ஏ.ஜி.,: நடப்பு நிதியாண்டில் சாத்தியமில்லை. அடுத்த நிதியாண்டில் 75 ஆயிரம் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 22 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப் பட்டு, பணி நடக்கிறது.
நீதிபதிகள்: பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் நவ.,22 ல்தெளிவான அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதம்நடந்தது.

பள்ளிகளில் தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு: செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவுப்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தினந்தோறும் தேர்வுகளை நடத்த ஆகும் நிதிச் செலவுகளை யார் ஏற்பது என்பதில் ஆசிரியர்களிடையே குழப்பம் அதிகரித்து வருகிறது.
அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தினந்தோறும் ஒரு பாடத்துக்கு தேர்வு நடத்த வேண்டும் எனவும், இதற்கான வினாத்தாள் தமிழகம் முழுமைக்கும் சேர்த்து சென்னையில் தயாரிக்கப்பட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள், குறுவள மையங்கள் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனவும் அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வுகள் நவம்பர் 14 முதல் நடத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு இத்தேர்வுகளை நடத்தி, அதன் நகலை உயர் அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்யும்போது காண்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்டது.
அதில், அனைத்து குறுவள மையப் பொறுப்பாளர்களுக்கும் அந்த வாரத்துக்கான வினாத்தாள்கள், ஒரு குறுவள மையத்துக்கு ஒன்று வழங்கப்பட்டு அவற்றை நகல் எடுத்து அவர்களுக்குக் கீழ் உள்ள பள்ளிகளுக்கு அளித்து மாணவர்களுக்கு தனித்தனியாக தேர்வுகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
குறுவள மையங்களின் கீழ், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ள நிலையில், அதன் பொறுப்பாளர்களிடம் வினாத் தாள்களைப் பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர்கள் அதை நகலெடுத்து மாணவர்களுக்கு வழங்க பள்ளியில் 50 மாணவர்கள் எனும் நிலையில் தினமும் இரு பக்கம் கொண்ட அந்த வினாத்தாளை நகலெடுத்து வழங்க ஆகும் செலவை யார் ஏற்பது எனக் கேட்கின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
பள்ளியின் கரும்பலகையில் எழுதித் தேர்வுகளை நடத்துங்கள் என கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒரு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள நிலையில், இரு ஆசிரியர்கள் பள்ளிகளில் இரு கரும் பலகைகளில் ஐந்து வகுப்புகளுக்கான வினாக்களை எழுதித் தேர்வு நடத்துவது எப்படி எனக் கேட்கின்றனர். ஒரு சில பள்ளிகளில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களை குழுவாக அமரச் செய்து ஒருவரிடம் வினாத்தாளை அளித்து, அதை மற்ற மாணவர்கள் பார்த்து எழுதிக் கொள்ளச் செய்கின்றனர்.
இதனால் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசே வினாத்தாள்களை தயாரித்து வாரந்தோறும் பள்ளிகளுக்கு வழங்கினால் ஆசிரியர்கள், தேர்வுகளை நடத்த எளிதாகும் என்கின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், இத்திட்டம் அருமையானத் திட்டம் எனவும், தனியார் பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற கற்றல் கற்பித்தல் முறைகளை அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தும் தமிழக அரசின் இத்திட்டம் பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தனர்.
எனவே அரசு உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களுக்கான பொருளாதார சுமையைக் குறைத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

5 Days Inservice Training for Maths Teachers

5 நாட்கள் பணியிடைப்பயிற்சி அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் - ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி பாட வாரியாக வெளியீடு.

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் !!

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்த அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும்,

வெள்ளி, 18 நவம்பர், 2016

G.O No 264 dt:06.07.2012

பள்ளிகளில் காலைவழி பாட்டு கூட்டம் எவ்வாறு நடத்த பட வேண்டும் அதற்கான நிமிடங்கள்
 மதிய உணவு இடைவெளிக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பாட இணை செயல்பாடுகள்
மதிய உணவு இடைவேளைக்கு பின் செய்ய வேண்டிய செயல் பாடுகள்
மற்றும் ஒவ்வொரு வார இறுதி வேலைநாளன  வெள்ளிகிழமை மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தக் கூடிய செயல்பாடுகளை செய்தல்

முழு விவரத்தினையும் பதிவிறக்கம் செய்ய ...........

பெட்ரோல் பங்குகளில் பணம் பெறும் வசதி: SBI அறிமுகம்


பெட்ரோல் பங்குகளில் பணம் பெறும் வசதியை அறிமுகம் செய்தது பாரத ஸ்டேட் வங்கி
பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டுகளை 'ஸ்வைப்' செய்து நாளொன்றுக்கு ரூ.2,000 பெறலாம்.
பாரத ஸ்டேட் வங்கியின் ஸ்வைப்பிங் மெஷின் வசதிகொண்ட 2,500 பெட்ரோல் பங்குகளில் முதற்கட்டமாக இந்த வசதி அறிமுகம்

கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு.

தமிழக அரசு பணியில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate in computer on office automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். (இந்த பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, அரசு கணினி சான்றிதழ்

சேமிப்புக் கணக்கு தொடங்கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை அஞ்சலகங்களில் பணம் எடுக்கலாம்.

தமிழக வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி தகவல்அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங் கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று தமி ழக அஞ்சல் வட்ட தலைமை அதிகாரி சார்லஸ் லோபோ கூறினார்.
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள்

விடுப்பு எடுக்காத மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ்: தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகமாகிறது.

விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இந்த ஆண்டு அறிமுகமாகிறது.
ஆண்டு முழுவதும் ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

மாணவர்கள் குறைகளை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

மாணவர்கள் தங்களது குறைகளையும் பிரச்சினை களையும் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்து வகை பள்ளி களிலும் மாணவ, மாணவிகள்தங்கள் குறைகள், நிறைகள் மற்றும் பிரச்சினைகளைத் தெரிவிக்க புகார் பெட்டி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் பள்ளி ஆய்வின்போது உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல, மாவட்டங்களில் களப்பணி மேற்கொள்ளும் இணை இயக்குநர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ள விவரத்தை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.