>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

👌👌👌Excellent
🔘 INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES 🔘

*Obtain:
🔴1.  Birth Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1

🔴2.  Caste Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4

🔴3.  Tribe Certificate
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8

🔴4.  Domicile Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5

🔴5.  Driving Licence
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6

🔴6.  Marriage Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3

🔴7.  Death Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2

Apply for:
🔴1.    PAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15

🔴2.     TAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3

🔴3.     Ration Card
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7

🔴4.     Passport
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2

🔴5.     Inclusion of name in the Electoral Rolls
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10

Register:  
🔴1.    Land/Property
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9

🔴2.    Vehicle
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13

🔴3.    With State Employment Exchange
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12

🔴4.    As Employer
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17

🔴5.    Company
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19

🔴6.    .IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18

🔴7.    GOV.IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25


Check/Track:
🔴1.    Waiting list status for Central Government Housing
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9

🔴2.     Status of Stolen Vehicles
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1

🔴3.    Land Records
http://www.india.gov.in/landrecords/index.php

🔴4.    Cause list of Indian Courts
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7

🔴5.    Court Judgments (JUDIS )
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24

🔴6.    Daily Court Orders/Case Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21

🔴7.    Acts of Indian Parliament
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13

🔴8.    Exam Results
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16

🔴9.    Speed Post Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10

🔴10. Agricultural Market Prices Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6

Book/File/Lodge:
🔴1.     Train Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5

🔴2.     Air Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4

🔴3.     Income Tax Returns
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12

🔴4.     Complaint with Central Vigilance Commission (CVC)
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14

Contribute to:
🔴1.      Prime Minister's Relief Fund
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11

Others:
🔴1.      Send Letters Electronically
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20

Global Navigation  
🔴1.     Citizens
http://www.india.gov.in/citizen.php

🔴2.     Business (External website that opens in a new window)
http://business.gov.in/

🔴3.     Overseas
http://www.india.gov.in/overseas.php

🔴4.     Government
http://www.india.gov.in/govtphp

🔴5.     Know India
http://www.india.gov.in/knowindia.php

🔴6.     Sectors
http://www.india.gov.in/sector.php

🔴7.     Directories
http://www.india.gov.in/directories.php

🔴8.     Documents
http://www.india.gov.in/documents.php

🔴9.     Forms
http://www.india.gov.in/forms/forms.php

🔴10.    Acts
http://www.india.gov.in/govt/acts.php

🔴11.  Rules
http://www.india.gov.in/govt/rules.php

PLS FORWARD TO ALL GROUPS AND FRIENDS.
Keep ds msg handy...u may need it anytime.

சூரியக் குடும்பத்தில் ஒன்பதாவது கிரகம்?



சூரியக் குடும்பத்தில் பல ஆச்சரியமான விசயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில், தற்போது கண்டுபிடிக்க இருக்கும் விசயம் பெரியது. கிரகங்களின் எண்ணிக்கை ஒன்பதில் இருந்து எட்டாக குறைக்கப்பட்டது. புளூட்டோ என்ற, அளவில் மிகச் சிறியது என்ற காரணத்தினால் அதை Dwarf planet (சிறிய கிரகம்) இணைத்துவிட்டனர்.
இப்போது, புளுட்டோ கிரகத்தைத் தாண்டி பூமியைவிட அளவில் 10 மடங்கு பெரியதாக ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது கிரகம்தானா? அல்லது சிறிய கிரகமா? என்ற கோணத்தில் ஆராய்ச்சியை தீவிரப்படுத்தி வருகின்றனர் விஞ்ஞானிகள். UZ224 என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகத்தை Dark Energy Camera (DECam) என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதைக் கண்டுபிடித்ததுமே, இது குறித்த தகவல்கள் முறையாக விஞ்ஞானிகள் அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 13.6 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 1,100 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆராய்ச்சியின் முடிவில் கிரகம் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டால், ஒன்பதாவது கிரகமாக இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..
Check how many you know before good night...Some Fullforms of important words : -
1.) *GOOGLE* - Global Organization Of Oriented Group Language Of Earth.
2.) *YAHOO* - Yet Another Hierarchical Officious Oracle.
3.) *WINDOW* - Wide Interactive Network Development for Office work Solution.
4.) *COMPUTER* - Common Oriented Machine Particularly United and used under Technical and Educational Research.
5.) *VIRUS* - Vital Information Resources Under Siege.
6.) *UMTS* - Universal Mobile Telecommunicati ons System.
7.) *AMOLED* - Active-matrix organic light-emitting diode.
8.) *OLED* - Organic light-emitting diode.
9.) *IMEI* - International Mobile Equipment Identity.
10.) *ESN* - Electronic Serial Number.
11.) *UPS* - Uninterruptible power supply.
12. *HDMI* - High-Definition Multimedia Interface.
13.) *VPN* - Virtual private network.
14.) *APN* - Access Point Name.
15.) *SIM* - Subscriber Identity Module.
16.) *LED* - Light emitting diode.
17.) *DLNA* - Digital Living Network Alliance.
18.) *RAM* - Random access memory.
19.) *ROM* - Read only memory.
20.) *VGA* - Video Graphics Array.
21.) *QVGA* - Quarter Video Graphics Array.
22.) *WVGA* - Wide video graphics array.
23.) *WXGA* - Widescreen Extended Graphics Array.
24.) *USB* - Universal serial Bus.
25.) *WLAN* - Wireless Local Area Network.
26.) *PPI* - Pixels Per Inch.
27.) *LCD* - Liquid Crystal Display.
28.) *HSDPA* - High speed down-link packet access.
29.) *HSUPA* - High-Speed Uplink Packet Access.
30.) *HSPA* - High Speed Packet Access.
31.) *GPRS* - General Packet Radio Service.
32.) *EDGE* - Enhanced Data Rates for Globa Evolution.
33.) *NFC* - Near field communication.
34.) *OTG* - On-the-go.
35.) *S-LCD* - Super Liquid Crystal Display.
36.) *O.S* - Operating system.
37.) *SNS* - Social network service.
38.) *H.S* - HOTSPOT.
39.) *P.O.I* - Point of interest.
40.) *GPS* - Global Positioning System.
41.) *DVD* - Digital Video Disk.
42.) *DTP* - Desk top publishing.
43.) *DNSE* - Digital natural sound engine.
44.) *OVI* - Ohio Video Intranet.
45.) *CDMA* - Code Division Multiple Access.
46.) *WCDMA* - Wide-band Code Division Multiple Access.
47.) *GSM* - Global System for Mobile Communications.
48.) *WI-FI* - Wireless Fidelity.
49.) *DIVX* - Digital internet video access.
50.) *APK* - Authenticated public key.
51.) *J2ME* - Java 2 micro edition.
52.) *SIS* - Installation source.
53.) *DELL* - Digital electronic link library.
54.) *ACER* - Acquisition Collaboration Experimentation Reflection.
55.) *RSS* - Really simple syndication.
56.) *TFT* - Thin film transistor.
57.) *AMR*- Adaptive Multi-Rate.
58.) *MPEG* - moving pictures experts group.
59.) *IVRS* - Interactive Voice Response System.
60.) *HP*
- Hewlett Packarad
*Do we know actual full form of some words???*
*News paper =*
North East West South past and present events report._
*Chess =*
Chariot, Horse, Elephant, Soldiers
*Aim =*
Ambition in Mind.
*Date* =
Day and Time Evolution.
*Pen =*
Power Enriched in Nib
*Smile =*
Sweet Memories in Lips Expression.
*SIM =*
Subscriber Identity Module
*etc.* =
End of Thinking capacity
*OK*=Objection Killed
*Or*=
Orl Korec (Gk Word)
Bye =
Be with you Everytime
Share with your friends...
அப்துல் கலாமின் பொன்மொழிகள்

நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.


கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை.


கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.


அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.

அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பல முள்ளவர்களாகவும் மாற்றுகிறது.

தேசம் என்பது எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது.

கருணையில்லாத அறிவியல் முழுமை பெறாது.

ஒரு தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள்தான்.
உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே பறந்து செல்லுங்கள்.

தோல்விகளை எதிர்கொள்ள  கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.

மதிப்பீடுகளுடன் கூடிய கல்வி முறையே இன்றைய தேவை.

உங்களிடம் கேளுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்?

மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.

கடவுள் நம்முடன் இருந்தால், நமக்கு எதிராக யார் இருக்க முடியும்?

நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.

வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.

கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.

800 சதுர அடியில் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் பிரமாண்ட ஓவியம். அரசுப் பள்ளி மாணவர்கள் வரைந்து சாதனை.

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் R.வெங்கடாபுரம், அரசு ஆ தி ந ஆரம்பப் பள்ளி, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இச் சாதனையை புரிந்தார்கள்.
ஏவுகனை நாயகன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாம் பிறந்த நாளான (15-10-2016) நேற்று  இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாட வேண்டி இப்பிரமாண்ட ஓவியம் வரைந்தனர்.
நட்புடன்
ஜானகிராமன் தேவராசன்.


காலை வணக்கம்.


தினம் ஒரு திருக்குறள்.


குறள். 204.   தேதி. 14.10.2016.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

விளக்கம் :

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது  எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

அல்லது :

மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது@ அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.   நன்றி.பால.ரமேஷ்
*கவிதை*
அப்துல் கலாம்

மண்ணின் மாண்பு குறைந்துவிட்டதால்
விண்ணைப் பார்க்கச் சென்றாயா…?!

விண்ணைப் பற்றிய விவரம் தெரிந்ததால்
மண்ணை விட்டுச் சென்றாயா…?!

விழித்திருக்கச் சொன்னதெல்லாம்
விடைகொடுக்கத் தானா….?!

படைப்பலங்கள் என்னாகும்
பாதியிலே போனா.....?!

உன் எளிமை
போற்றுதற்க்குரியது.....!!

உன் பெருமை
பூசிக்கத்தக்கது.....!!

ஆயிரம் அறைகள்
கொண்ட மாளிகையில்
ஆடம்பரமின்றி
அமைதியாய் வாழ்ந்தாய்....!!

உன் எளிமை
போற்றுதற்க்குரியது.....!!
உன் பெருமை
பூசிக்கத்தக்கது.....!!


கையளவு
காசுகிடைத்தாலே
கடலளவு
ஆசைப்படும்
கூட்டத்தில்.....
கடலளவு
வசதிகளை,
கையளவு கூட
அனுபவிக்காத
அற்புதப் பிறவி நீ....!!

மக்கள் தலைவன்
மாளிகைப் பார்க்க
வந்து சென்ற
உறவுகளை
சொந்த செலவில்
உபசரித்து......அவர்கள்
உண்ட உணவுக்கான
தொகையைக் கூட
பிறரறியாமல்
செலுத்தியதென்பது
வரலாற்றுப் புரட்சி....!!


எங்களூர்
முன்னாள் அமைச்சர்
வீட்டுச் சமையலுக்கு
இன்னமும்
இனாமாகவே
வந்து கொண்டிடுக்கிறது
இறைச்சி.......!!

உன்
பாதுகாவலன்
நெடுதூரம்
நிண்றுகொண்டே
பயணித்ததை
நேசத்துடன்
விசாரித்ததை......
எங்கள்
தலைவர்கள்
பயணத்தில்
தொங்கிக்கொண்டு
போனதை நினைத்து
நொந்துக் கொண்டிருப்பவர்கள்
நினைத்து, நினைத்து
வியக்கிறார்கள்.......!!

நீ
விஞ்ஞான யுகத்தின்
வீரிய வித்து….!!
எம் பாரதத்தின்
தேசியச் சொத்து…..!!

முனகிக் கொண்டிருக்கும்
மொகல் தோட்டப் பூக்களுக்கு
நீர் வார்க்க ஆட்களுண்டு…..!!
நேசத்தை வார்த்தவன் நீ….
நிரந்தரமாய்த் தூங்கலாமா…..??

அரசே….!

அப்துல் கலாம்
ஐம்பது வருடங்களுக்கு
மேலாக
ஒரு அரிய புத்தகத்தை
பாதுகாத்து
வைத்திருந்தாராம்….!!
அதைக் கொஞ்சம்
பிரதியெடுத்து
எங்கள்
பிள்ளைகளூக்குப்
படிக்கக் கொடுங்கள்….!!

தாய்மார்களே…!!

இனி உங்கள்
குழந்தைகள்
“அ” என்றால்
அப்துல் கலாம்
என்றே
அறிய வையுங்கள்….!!!

புதன், 12 அக்டோபர், 2016

போக முடியாத தூரத்தில் 'வாங்க பழகலாம்' திட்டம்

எங்க ஊருக்கு வாங்க... பழகலாம்' திட்டத்தில், நீண்ட துார பள்ளிகளை இணைப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. செயல்வழி கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், இரு பள்ளி மாணவர்களை பழகவிட்டு, படிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஒரு கிராமத்து பள்ளி மற்றும் நகர பள்ளியை இணைத்து, ஒருவர் பள்ளிக்கு ஒருவர் சென்று, இரு பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படும். இத்திட்டத்தில் சேர, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளும் ஆர்வமாக முன்வந்தன. ஆனால், 30 கி.மீ.,க்கு மேல் துாரத்தில் உள்ள, இரு பள்ளிகளை இணைத்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் உத்தரவிட்டதால், பல பள்ளிகள், திட்டத்தில் இருந்து விலகி வருகின்றன.
இதுகுறித்து, ஆசிரியர் கள் சிலர் கூறியதாவது: 'வாங்க பழகலாம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு பள்ளியும், முதலில் இரு நாட்களும், பின், ஒரு நாள் வீதம் ஆறு முறையும், மற்ற பள்ளிகளுக்கு சென்று, அங்கு உள்ள மாணவ, மாணவியருடன், அந்த பகுதியை சுற்றி பார்க்க வேண்டும். இதனால், கிராமப்புற மாணவர்கள், நகரங்களையும்; நகர்ப்புற மாணவர்கள், கிராமங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
இதில், நீண்ட துாரத்தில் உள்ள பள்ளிகளை இணைப்பதால், போக்குவரத்து மற்றும் உணவுக்கு அதிக செலவாகும். நீண்ட துார பயணத்தால், மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். குறைந்த துாரத்தில் உள்ள நகர பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்; அருகில் இல்லாவிட்டால் மட்டும், தொலைவில் உள்ள பள்ளிகளை இணைக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியல், தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பற்றிய விவரங்களை கணினியில் பதிவு செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 
தமிழகத்தில் தசரா விடுமுறைக்கு பிறகு, வரும் 13ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். அடுத்த  ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்வுத் துறை இறங்கியுள்ளது. இதையடுத்து, அனைத்து அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் பற்றிய விவரங்களை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு எழுதுவோரின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சேகரிக்க வேண்டும். பின்னர் மாணவர்கள் கொடுத்த தகவல்கள் சரியாக உள்ளதா என்று தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். அதற்கு பிறகு அந்த விவரங்களை பள்ளியில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் தயாரிக்கப்படும் இந்த பட்டியல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
டிசம்பர் மாதம் சென்னையில் நடக்க இருக்கும் தேர்வு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மேற்கண்ட பட்டியல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகே தேர்வுத்துறை அந்த பட்டியல்களை சரிபார்க்கும். அதில் சந்தேகம் இருந்தால் அவற்றை திருத்த வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் செய்முறைத் தேர்வுக்குரிய மாணவ, மாணவியர் விவரங்களும் தனியாக தயாரிக்க வேண்டும் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் அனைத்து பள்ளியிலும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது.

பிளஸ் 2 தேர்வு வினா எப்படி இருக்கும்?

பிளஸ் 2 பொதுத்தேர்வில், எந்த வகையான வினாக்கள் இடம்பெறும் என தெரியாமல், குழப்பத்தில் உள்ள மாணவர்கள், தேர்வுத் துறையின் வினா வகை குறித்த அறிவுரைகளை எதிர்பார்த்து உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆண்டுதோறும் வினாக்களின் வகைகள் மாற்றப்படுகின்றன. முன்னர், பொதுத்தேர்வில், பாட புத்தகத்தின் பின்பக்க வினாக்கள் மட்டுமே இடம்பெற்றன. கடந்த ஆண்டு, பாடங்களின் உட்பகுதிகளில் இருந்தும், வினாக்கள் கேட்கப்பட்டன.
இது குறித்து, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே, தேர்வுத் துறையால் சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், 'புத்தகம் முழுவதையும், மாணவர்கள் படிக்க வேண்டும்; எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும், வினாக்கள் இடம் பெறும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு, அது போன்ற சுற்றறிக்கை எதையும், தேர்வுத் துறை வெளியிடவில்லை. பெரும்பாலான பள்ளிகள், பாடங்களை நடத்துவதுடன், புத்தகத்தின் பின் பக்க கேள்வி களுக்கே முக்கியத்துவம் அளித்து, மாதிரி தேர்வுகளை நடத்துகின்றன.
அதனால், இந்த ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாளில், எந்த வகை வினாக்கள் இடம் பெறும்; புத்தகம் முழுவதையும் படிக்க வேண்டுமா அல்லது பின் பக்க வினாக்கள், வினா வங்கியில் உள்ள வினாக்களுக்கான பதில்களை படித்தால் போதுமா என, மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

காலாண்டு தேர்ச்சி பள்ளி வாரியாக ஆய்வு

காலாண்டு தேர்வில், அதிக தேர்ச்சி பெற்ற பள்ளிகள் குறித்து, ஆய்வு நடத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும், காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண்கள், மாணவர்களுக்கு காட்டப்படுகின்றன. தேர்வெழுதிய முறை குறித்தும், தவறுகள் குறித்தும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது; அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள், பள்ளிகளின் காலாண்டு தேர்வு தேர்ச்சி பட்டியலை பெற்று வருகின்றனர்.
பாட வாரியாக தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், பின்தங்கிய பள்ளி மற்றும் பாட ஆசிரியர்களுக்கு, எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட உள்ளது. 'வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய வேண்டும். அதிக மதிப்பெண் பெறும் வகையில், சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.

நாளை விடுப்பு எடுக்க அரசு ஊழியர்களுக்கு தடை

பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால், அரசு ஊழியர்கள், நாளை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுடன், ஆயுத பூஜை, விஜயதசமி மொகரம், பண்டிகை முன்னிட்டு, அரசுஊழியர்களுக்கு, இன்று வரைஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், அரசு அலுவலகங்களில், பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, நாளையும், நாளைமறுநாளும், அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த மாத இறுதியில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால், அரசு நலத் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. இம்மாதம், 17, 19ல், நடக்கவிருந்த தேர்தலுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டன. இதனால், திட்ட பணிகள் முழு வீச்சில் துவங்க உள்ளன.
இந்த சூழலில், ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் என, தொடர்ந்து விடுமுறை இருந்ததால், பலர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அவர்களில் பலர், வியாழன், வெள்ளியும் விடுப்பு எடுத்து கொள்வதாக, தொலைபேசியில் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, காலி பணியிடங்களால், ஒருவரேபலரது வேலையை செய்யவேண்டியுள்ளது. வியாழன், வெள்ளி விடுப்பு எடுத்தால், அரசு உதவியை எதிர்பார்த்து, அலுவலகம் வரும் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, இரு நாட்களும் விடுப்பு எடுக்கக்கூடாது; கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் என, ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாதாந்திர தேர்வு ரத்து

விடுமுறை நாட்களை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, மாதாந்திர தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது; அரையாண்டுக்கு முந்தைய தேர்வு மட்டும் நடத்தப்பட உள்ளது.பள்ளிகளுக்கு, விஜயதசமி விடுமுறை, ஐந்து நாட்கள் விடப்பட்டது; இன்று விடுமுறை முடிகிறது; நாளை, பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில், தீபாவளி உட்பட பல்வேறு பண்டிகை நாட்களும், விடுமுறை நாட்களும் தொடர்ந்து வர உள்ளன. அதனால், நவம்பர் மற்றும் டிசம்பரில், குறைந்த நாட்களே வகுப்புகள் நடக்கும். எனவே, பாடங்களை விரைந்து முடிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாதந்தோறும் நடத்தப்படும் தேர்வுகள், பல மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாதத் தேர்வுகளுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதாவது, அரையாண்டு தேர்வுக்கு முன்பாக, நவ., 8 முதல், 25க்குள் ஒரு தேர்வு நடத்தும்படி, பள்ளிகள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளன. இதையடுத்து, டிச., மூன்றாம் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.

"ஸ்பீடு' முக்கியம் ,ஆதார் பதிவிட்டால் மட்டுமே "ஸ்மார்ட்' கார்டு வரும் !!!

"ஸ்பீடு' முக்கியம்!ஆதார் பதிவிட்டால் மட்டுமே "ஸ்மார்ட்' கார்டு வரும்:வரும், 31ம் தேதிக்குள் "ஸ்கேன்' செய்ய அவகாசம்!!!
ஆதார் விவரங்களை பதிவு செய்த கார்டுதாரர்களுக்கு மட்டுமே,"ஸ்மார்ட்' கார்டு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்; வரும், 31க்குள், ஆதார் "ஸ்கேன்' செய்து கொள்ளும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,135 ரேஷன் கடைகளில், ஏழு லட்சத்து, 29 ஆயிரத்து, 370 ரேஷன் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 23 லட்சத்து, 45 ஆயிரத்து, 548 நபர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள்
வழங்கப்படுகின்றன.மாவட்டத்தில் அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கு தாலுகாவில், 4.75 லட்சத்துக்கு அதிகமானவர்களும்; திருப்பூர் தெற்கு தாலுகாவில், 4.12 லட்சத்துக்கு அதிகமானவர்களும்; "மொபைல்' மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த வார நிலவரப்படி, மாவட்ட அளவில் இதுவரை, 14 லட்சத்து, 48 ஆயிரத்து, 315 பேர், ஆதார் விவரத்தை "ஸ்கேன்' செய்துள்ளனர். திருப்பூர் வடக்கில், 55 சதவீதம் பேர்; திருப்பூர் தெற்கில், 56 சதவீதம் பேர், ஆதார் விவரங்களை "ஸ்கேன்' செய்துள்ளனர். தபால் மூலம் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை "ஸ்கேன்' செய்வது எளிதாக உள்ளது. "ஆன்-லைன்' மூலம் பதிவிறக்கம் செய்த அட்டைகளை "ஸ்கேன்' செய்வதில் குளறுபடி நீடிக்கிறது.
பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகள், டிச., 31ல் காலாவதியாகிறது. வரும் ஜன., முதல், "ஸ்மார்ட்' கார்டு மூலம், பொருள் வினியோகம் நடக்க உள்ளது. வரும், டிச., மாதம், "ஸ்மார்ட்' கார்டு அச்சிட்டு வழங்கும் பணி நடக்கும் என்பதால், ஆதார் "ஸ்கேன்' செய்யும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாவட்டத்தில், ரேஷன்
பயனாளிகளில், 62 சதவீதம் பேரின் ஆதார் விவரம் "ஸ்கேன்' செய்யப்பட்டுள்ளது. "பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ரேஷன் கார்டு, "மொபைல்' மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே, புதிய ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள், கார்டில் <உள்ள, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நீங்கலாக, அனைவரின் ஆதார் விவரத்தையும் "ஸ்கேன்' செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வரும் நவ., மாதம் முதல், அனைத்து குடும்ப உறுப்பினரின் ஆதார் விவரத்தை பதிவு செய்தவர்கள் மட்டுமே, பொருட்கள் பெற முடியும். ரேஷன் கார்டில் உள்ள, அனைத்து நபர்களின் ஆதார் விவரம் பதியாமல் இருந்தால், கார்டு தானாக ரத்தாகிவிடும். குடும்ப தலைவர் அல்லது யாராவது ஒருவரின் ஆதார் பதிவு செய்தால் மட்டுமே, பொருட்கள் கிடைக்கும். வரும் டிச., மாதத்தில், "ஸ்மார்ட் கார்டு' தயாரித்து வழங்கும் பணி நடக்க உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கலர் "ஜெராக்ஸ்' தேவையில்லை
ரேஷன் கடையில் உள்ள "பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ஆதார் அட்டையை "ஸ்கேன்' செய்ய முடியாதவர்கள், கலர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு பதிலாக, கருப்பு-வெள்ளை ஜெராக்ஸ் எடுத்தால், எளிதாக "ஸ்கேன்' செய்யலாம் என, அலுவலர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
பதிவு செய்தும், இதுவரை ஆதார் கிடைக்காதவர்கள், அருகில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர்களில், ஆதார் அட்டை நிலவரத்தை அறிந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை நிலவரம் தெரியாதவர்கள், அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தில், உடற்கூறுகளை மீண்டும் பதிவு செய்து, கார்டு பெறலாம்.
"ஸ்மார்ட்' போனில் கூட பதியலாம்
ஆதார் பதிவுக்கு, ரேஷன் கடைக்கு செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள், தங்களது "ஸ்மார்ட்போன்' மூலம், ரேஷன் கடை நிலவரத்தை அறியலாம்; ஆதார் எண்ணையும் "ஸ்கேன்' செய்து கொள்ளலாம். கடையின் இருப்பு விவரம், முகவரி, குடும்ப உறுப்பினர் விவரம், பரிவர்த்தனை போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு, கூகுள் பிளே ஸ்டோரில், "கூNகஈகு' என்ற செயலியை பதிவிறக்கும் செய்து, அதன் வழியாக சென்று, ரேஷன் கடையில் கொடுக்கப்பட்டுள்ள "மொபைல்' எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்பின், மொபைல்போனுக்கு வரும் "பாஸ்வேர்ட்' கொண்டு, பொதுவினியோக திட்ட செயலில், ஆதார் விவரம் பதிவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.