>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 13 டிசம்பர், 2019

School Morning Prayer Activities - 13.12.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்


திருக்குறள்


அதிகாரம்:துறவு


திருக்குறள்:343

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

விளக்கம்:

ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.

பழமொழி

A guilty  conscience needs no accuser

 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

 2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி


அன்பு இல்லாத மனிதம்  பற்றற்ற நிலைக்கு மாறும். ஞானமில்லாத பலனைத் தரும்

           .....கண்ணதாசன்

பொது அறிவு

1. தாஜ்மஹாலை உருவாக்கிய தலைமை சிற்பி யார்?

 இஸ்தாக் உஸ்தாத்.

2. வாஸ்கோடகாமாவின் கல்லறை எங்கு உள்ளது?

 கேரளாவிலுள்ள கொச்சியில்.

English words & meanings

• Embryology – study of embryos. முளையவியல் - தாயின் கர்ப்பத்தில் கரு உருவாகி வளர்ந்து வருவது குறித்த அறிவியல் பிரிவு.

 • Eager - ஆவலுள்ள

ஆரோக்ய வாழ்வு

 முள்ளங்கி சாறுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண் வாய் புண் குணமாகும்.

Some important  abbreviations for students

IMO - In My Opinion

IRL - In Real Life

நீதிக்கதை

இதுதான் பார்வை!

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அவ்வழியாக வந்த ஒருவன், ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி , இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை என்றார். சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான். அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான் என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள் என்று பணிவோடு கூறினான். உடனே துறவி, மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத் தான் கேட்டனர். என்றார்.

மிகவும் வியந்த அரசன், துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான். அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும். முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது. ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள் என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

வெள்ளி
சமூகவியல்

கோயம்புத்தூர்

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய ஜவுளி மற்றும் பொறியியல் மையம். இது தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என குறிப்பிடப்படுகிறது,தென்னிந்தியாவின் பண்டைய கொங்குநாடு பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும்.மேலும் ஜவுளி ஆலைகள், பொறியியல் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள்,  மற்றும் கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளன.

இன்றைய செய்திகள்

13.12.19

◆குரூப்-1 நேர்முகத் தேர்வு திட்டமிட்ட தேதியில் நடக்கும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

◆வைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு.

◆டிசம்பர் 2019 கணக்கெடுப்புப்படி நாடு முழுவதும் 344 தனியார் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

◆காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

◆சென்னை சேப்பாக்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் சில வீரர்கள் இன்று சென்னை வந்து சேர்ந்தனர்.

◆ஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Today's Headlines

*TNPSC announces that the interview for Group-1 candidates will be conducted on the scheduled date.

*No objection to release water from vaigai dam for kiruthumal river ordered Highcourt.

*As per december 2019 census, 344 autonomous universities are functioning in India declares the HRD minister Ramesh Pokhriyal.

*Greta Thunberg, who continuously voices against climatic changes is selected as the best person in 2019 by  the  Times Magazine.

*Some Indian players under the captainship of Virat Kohli reached chennai today  for the one day match to be held on coming sunday in chennai chepauk stadium.

*Indian cricket's vice captain Rohith Sharma is appointed as India's first ambassador for Spain's famous football league La Liga.

Prepared by
Covai women ICT_போதிமரம்

......................................

Flash News : TRB - வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO ) தெரிவு அறிவிக்கை தொடர்பான கூடுதல் தகவல் வெளியீடு





வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவு 2018 - 2019 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது.

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதிகளுக்கு இணையான கல்வித் தகுதி விவரங்கள் ADDENDUM TO NOTIFICATION NO.13/2019 , இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும்,  வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அறிவிக்கையின் அடிப்படையில் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019 - ADDENDUM TO NOTIFICATION


Click - Notification...

Click - G.O..





................................................................

5, 8ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்ற செய்ய தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவு!



பொதுத்தேர்வு எழுதும் 5, 8ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவு

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் கல்வியாண்டிலிருந்து கல்வியாண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்துவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே , 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப்பட்டியலை தயார் செய்யும் பொருட்டு மாணவர்களின் அனைத்து விவரங்களையும் மிகச் சரியாக EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.


...................................................

2003-04 தொகுப்பூதிய நியமன ஆசிரியர்களுக்கு நியமனம செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை, பண ப்பலன் வழங்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு -judgement copy



2003-04 தொகுப்பூதிய நியமன ஆசிரியர்களுக்கு நியமனம செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை, பண ப்பலன் வழங்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு -judgement copy








.............,.................

EMIS ல் மாணவர்களின் தொலைபேசி எண்களை எவ்வாறு சரி செய்வது?








🌈📡🔬🛶⏳☂️♻️
*இரா.கோபிநாத்*
*இடைநிலை ஆசிரியர்*
*9578141313*
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்

வியாழன், 12 டிசம்பர், 2019

SCAN செய்யாமல் DIKSHA QR CODE பயன்படுத்துவது எப்படி? கம்ப்யூட்டரில் DIKSHA QR CODE பயன்படுத்துவது எப்படி?





இரா.கோபிநாத்




..........

ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு!!


Thursday, December 12, 2019




ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி தொடரப்பட்ட வழக்கில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடரந்து குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.


....................

மகாகவி பாரதியார் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா

Thursday, December 12, 2019


 திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலக அஞ்சல்தலை சேகரிப்பு நிலையத்தில் மகாகவி பாராதியார் 137வது பிறந்ததின சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா நடைபெற்றது.  திருச்சிராப்பள்ளி அஞ்சல் கோட்டம், முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் தலைமை உரையாற்றினார்.
தேசியக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மாணிக்கம் சிறப்புரையில்,
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி  டிசம்பர் 11, 1882 பிறந்தார்.  கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்  என்றார்.
முன்னதாக அஞ்சல் தலை சேகரிப்பு நிலைய பொறுப்பாளர் ராஜேஷ் வரவேற்க,
ராக்போர்ட் அஞ்சல்தலை ஆராய்ச்சி மைய நிறுவனர் ஷர்மா நன்றியுரையாற்றினார். அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி ,லால்குடி விஜயகுமார் ,மதன், யோகா ஆசிரியர் விஜயகுமார் , நாசர், தாமோதரன், ராஜேந்திரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்


.................................

INTERNATIONAL SCIENCE COMMUNICATION ONLINE PROGRAM



Thursday, December 12, 2019

INTERNATIONAL SCIENCE COMMUNICATION ONLINE PROGRAM FOR ENHANCEMENT – ISCOPE – Hands on activity online course-2020

CLIK HEAR
https://activityeducator.wordpress.com/2019/12/12/iscope-online-course


...........................

வாக்குச்சாவடி அலுவலரின் பணிகள்



Thursday, December 12, 2019


...................................

Pindics sample-13 pages



Thursday, December 12, 2019


.......................

Pindics படிவம் எளிமையாக பூர்த்தி செய்ய தமிழாக்கம்



Thursday, December 12, 2019

.......................................

Shalla Siddhi Offline format


Thursday, December 12, 2019


..........................

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.12.19


Thursday, December 12, 2019


திருக்குறள்


அதிகாரம்:துறவு

திருக்குறள்:342

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

விளக்கம்:

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

பழமொழி

Anything valued where it belongs.

 எதுவும் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் மதிப்பு.

இரண்டொழுக்க பண்புகள்

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

 2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி

உழைப்பின் சக்தியே உலகில் மிக உன்னதமானது.அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வெறெந்த சக்திக்கும் கிடையாது-

ஆபிரகாம் லிங்கன்.

பொது அறிவு

1. மாவீரன் அலெக்ஸாண்டர் எந்த நோய் ஏற்பட்டதால் மரணமடைந்தார்?

மலேரியா .

  2. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை தலைவராகப் பதவியேற்ற முதல் பெண் தலைவர் யார்?

 விஜயலட்சுமி பண்டிட்

English words & meanings

Dendrology – study of trees. மரங்கள் குறித்து படிக்கும் அறிவியல் பிரிவு.

 Declared -  to state something publicly. அதிகாரபூர்வமாகவும் ஒன்றை அறிவித்தல்

ஆரோக்ய வாழ்வு

 சுண்டைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

Some important  abbreviations for students

CIA - Central Intelligence Agency

CID - Criminal Investigation Department

நீதிக்கதை

நூலும் பட்டமும்

அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், கண்ணா! நூலினுடைய வேலை என்ன என்று சொல்லு பார்க்கலாம்? பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு. அப்பா சொன்னார், இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு. பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது. ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே!

அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே என்றார்.

இன்றைய செய்திகள்

11.12.19

* 90 சதவிகித ரயில்களில் பயோ கழிவறை வசதி அமல்படுத்தப்படும் என  மக்களவையில் பியூஷ் கோயல் தகவல்.

*குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்.

*உலகிலேயே சீனாவில்தான் இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்தரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றி  ஸ்டீவ் பக்னரின் சாதனையை முறியடிக்க உள்ளார் அலீம் தார்.

*தமிழ்நாடு சடுகுடு பிரிமீயா் லீக் 2020 போட்டிகளுக்கான 8 அணிகளுக்கு 120 வீரா்களைத் தோ்வு செய்யும் முகாம் திருச்சியில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Today's Headlines

*Biotoilet facility will be implemented in 90% of rails says Biyush Goyal in Loksabha.

*Protest against citizenship amendment bill in North Eastern states.

*Maximum number of reporters were kept in prison in  china, which is the highest in the world, says reporters protection committee in a report.

*Aleem dhar to break Steve buckner's record as an umpire in cricket.

*Players selection camp for Tamilnadu Kabadi Premier League 2020 is  likely to be held in Trichy on 14th and 15th of this month in which  120 players for 8 teams will be selected.

Prepared by
Covai women ICT_போதிமரம்


............................................................

செவ்வாய், 10 டிசம்பர், 2019

TNTP New user id and password HomeTNTP New user id and password TNTP New user id and password  




Dear All, So far there was a separate Teacher ID (17 digit) and separate teacher login ID (8 digit) for all teachers. 











Since this was causing difficulties for teachers to remember and use, and because there were issues with login for some HMs, a Unified unique Teacher ID is being rolled out. 

The New Username / ID is made available for viewing in the school login (Staff -> Teacher Login Details). Kindly inform all teachers to be aware of this ID. From tomorrow, this new ID will become effective. 

Teacher login on EMIS, Mobile App and TNTP will be using this new ID only. Kindly pass on this information to the teachers in your respective districts. In case of any questions / clarifications, please get in touch with the Monitoring team member coordinating with your district.


ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய செய்தி: 



# இனிவரும் காலங்களில் 17 டிஜிட் கொண்ட Login id செயல்படாது.அதே போல் Teacher login id யாக செயல்பட்டு வந்த 8 டிஜிட் கொண்ட Login-ம் இனி வரும் காலங்களில் செயல்படாது.இரண்டு வெவ்வேறு Login இருப்பதால் ஆசிரியர்களுக்கு சற்று சிரமமாக உள்ளதை கருதி நாளை முதல் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password மட்டுமே செயல்படும். 

 # புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password அந்தந்த பள்ளி EMIS Login-ல் Staff Details என்பதை தேர்வு செய்து அதில் Teachers login Details என்பதில் கொடுக்கப்பட்டுள்ளது. 

 # புதிய பயனர்பெயர் / ஐடி EMIS website login ல் கிடைக்கிறது (Staff -> Teacher Login Details) # நாளை முதல், இந்த புதிய id நடைமுறைக்கு வரும். EMIS, மொபைல் பயன்பாடு மற்றும் TNTP இல் ஆசிரியர் உள்நுழைவு இந்த புதிய ஐ Idயை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

 # மேலும் இனிவரும் காலங்களில் Teachers Transfer Counseling மற்றும் TNTP போன்றவற்றுக்கும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் password மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.


..................

NMMS EXAM DEC 2019-2020 (15/12/19) HALL TICKET (NEW) PUBLISHED. 

சனி, 7 டிசம்பர், 2019

EMIS ல் சனிக்கிழமை வேலை நாளுக்கு Time Table உருவாக்குவது எப்படி?

சனி, 7 டிசம்பர், 2019





வெள்ளி, 6 டிசம்பர், 2019

TERM 3 – ALL BOOKS WITH QR CODE – DOWNLOAD......

மூன்றாம் பருவம் அனைத்து புத்தகங்கள் க்யூஆர் வடிவில் தனித்தனி பாடமாக தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் எந்த வகுப்பு எந்த பாடம் வேண்டுமோ அந்த க்யூஆர் கோடினை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி

..............................

TNTP தளத்தில் வெளியிடப்பட்டுள்ள திறனாய்வு தேர்வு கையேடு



TNTP தளத்தில் வெளியிடப்பட்டுள்ள திறனாய்வு தேர்வு கையேடு

அசைவ உணவுகளில் இருக்கும் ஆபத்துகள்..! முதலில் தெரிந்து கொள்ளுங்கள்..!




அசைவ உணவால் உடலுக்கு அதிக சத்து தருகிறது, அதில் கலோரிச்சத்து  அதிகம் இருக்கிறது. கொழுப்பும், புரதமும் மிகுந்து காணப்படுகிறது. என்றாலும், சில தீய விளைவுகளும் அதனால் ஏற்படுகிறது.


அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதும் இருதய நோய்க்கான ஒரு காரணமாகும்.

 



அசைவ உணவில் அதிகம் இருக்கும் இந்த புரதச்சத்து அதிகளவில் ஜீரண நீர் சுரக்கக் காரணமாக இருப்பதால் ஜவ்வுப் பகுதியில் இருக்கும் க்ளைகோ புரதத்தைப் பாதித்து மியூகஸ் ஜெல் என்ற ஜவ்வு சேதமடைந்து பெப்டிக் அல்சர் குடல்புண் ஏற்பட காரணமாகிறது.


சரும நோய்கள், அலர்ஜி நோய்கள், ஆஸ்துமா போன்ற வியாதிகள் உள்ளவர்களுக்கு அசைவ உணவால் பெருமளவு தொந்தரவு ஏற்படுவதை அறிந்து இயற்கை மருத்துவ நிபுணர்கள் மாமிச உணவைத் தவிர்க்கும்படி பரிந்துரை செய்கின்றனர்.

அசைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுவோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதில்லை என்று தெரிய வந்துள்ளது


...............................................

UPPER PRIMARY TEACHER'S CCE - MANUAL GUIDE