>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 12 டிசம்பர், 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.12.19


Thursday, December 12, 2019


திருக்குறள்


அதிகாரம்:துறவு

திருக்குறள்:342

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

விளக்கம்:

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

பழமொழி

Anything valued where it belongs.

 எதுவும் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் மதிப்பு.

இரண்டொழுக்க பண்புகள்

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

 2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி

உழைப்பின் சக்தியே உலகில் மிக உன்னதமானது.அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வெறெந்த சக்திக்கும் கிடையாது-

ஆபிரகாம் லிங்கன்.

பொது அறிவு

1. மாவீரன் அலெக்ஸாண்டர் எந்த நோய் ஏற்பட்டதால் மரணமடைந்தார்?

மலேரியா .

  2. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை தலைவராகப் பதவியேற்ற முதல் பெண் தலைவர் யார்?

 விஜயலட்சுமி பண்டிட்

English words & meanings

Dendrology – study of trees. மரங்கள் குறித்து படிக்கும் அறிவியல் பிரிவு.

 Declared -  to state something publicly. அதிகாரபூர்வமாகவும் ஒன்றை அறிவித்தல்

ஆரோக்ய வாழ்வு

 சுண்டைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

Some important  abbreviations for students

CIA - Central Intelligence Agency

CID - Criminal Investigation Department

நீதிக்கதை

நூலும் பட்டமும்

அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், கண்ணா! நூலினுடைய வேலை என்ன என்று சொல்லு பார்க்கலாம்? பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு. அப்பா சொன்னார், இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு. பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது. ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே!

அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே என்றார்.

இன்றைய செய்திகள்

11.12.19

* 90 சதவிகித ரயில்களில் பயோ கழிவறை வசதி அமல்படுத்தப்படும் என  மக்களவையில் பியூஷ் கோயல் தகவல்.

*குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்.

*உலகிலேயே சீனாவில்தான் இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்தரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றி  ஸ்டீவ் பக்னரின் சாதனையை முறியடிக்க உள்ளார் அலீம் தார்.

*தமிழ்நாடு சடுகுடு பிரிமீயா் லீக் 2020 போட்டிகளுக்கான 8 அணிகளுக்கு 120 வீரா்களைத் தோ்வு செய்யும் முகாம் திருச்சியில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Today's Headlines

*Biotoilet facility will be implemented in 90% of rails says Biyush Goyal in Loksabha.

*Protest against citizenship amendment bill in North Eastern states.

*Maximum number of reporters were kept in prison in  china, which is the highest in the world, says reporters protection committee in a report.

*Aleem dhar to break Steve buckner's record as an umpire in cricket.

*Players selection camp for Tamilnadu Kabadi Premier League 2020 is  likely to be held in Trichy on 14th and 15th of this month in which  120 players for 8 teams will be selected.

Prepared by
Covai women ICT_போதிமரம்


............................................................