>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 9 செப்டம்பர், 2019

EMIS UPDATED NEWS: Teacher Profile Part - III புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது - இதை எவ்வாறு பூர்த்தி செய்வது?


Teacher Profile Part - III


எமிஸ் இணையத்தில் ஆசிரியர் பகுதியில் புதிதாக பகுதி மூன்று இணைக்கப்பட்டுள்ளது.அதில் ஆசிரியர்களது கல்வித்தகுதி மற்றும் ஆசிரியர்கள் எடுத்துள்ள கூடுதல் பணி விவர நாட்கள் ( OD ) பூர்த்தி செய்ய வேண்டும்.


BIO METRIC - வருகைப் பதிவு சில முக்கிய தகவல்கள்



ஆசிரியரின் தனிப்பட்ட பயனர் உட்புகுதல் வழியாக, பயோ மெட்ரிக் வருகைப் பதிவில் என்னென்ன வசதிகள் மேற்கொள்ள முடியும்? அல்லது திருத்தங்கள் செய்ய முடியும்?

What can be done in the Employee Corner:

Update the demographic information submitted on BAS portal.

Set reminder to receive SMS alert for marking opening & closing attendance.

View Employee Attendance Register.

Add Full/Half day Leave records. (requires verification by nodal officer to be displayed on Attendance register)

Add Tour records. (requires verification by nodal officer to be displayed on Attendance register)


Note:
a. Adding Leave and Tour Records will help in displaying appropriate representation on the Attendance Register.

b. Update your Designation, Division/Unit of Organization in case of change so that Attendance reports are generated correctly and your name features in the correct organization unit.

c. You can view historical attendance register data by selecting the month and year below the photograph.


 விடுப்பு பதிவு செய்யும் முறை: (தனிநபரின் பயனர் பெயரிலிருந்து ஆன்லைனில்)

Instructions for adding a leave

 record Select Leave type

Select Leave category

Enter the leave start and end date in dd-mm-yyyy format

Enter the leave description.

Note:
a. Employee leave record added in the leave register will be represented accordingly in the employee attendance register.

ஒரு மாதத்தில் பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், நாம் பணிக்கு வந்த நாட்கள், விடுப்பு நாட்கள், மாற்றுப் பணி நாட்கள், Absent நாட்கள், பள்ளியில் இருந்த கால அளவு (மணியில்), எங்கிருந்து வருகையை பதிவு செய்தோம் (அட்ச ரேகை, தீர்க்க ரேகை அடிப்படையில்) போன்ற விவரங்களும் பதிவாகும். இதில் பதிவான தகவல்களை மாற்றவோ, அழிக்கவோ முடியாது.

பயோ மெட்ரிக் வருகையை பதிவு செய்ய SMS அலர்ட் வசதி உண்டு!

Instructions for setting up reminder

Select the time for Opening Attendance marking alert.

Enter the message you want to receive.

In case updating your reminder please check whether the service is active/Inactive.

Note:
a. Employee can set custom reminders with custom message, these messages are delivered on mobile through SMS service.


பயோ மெட்ரிக் வருகைப் பதிவுக்காக, பதிவு செய்யப்பட்ட தகவல்களில் எவற்றை update செய்யலாம்?

Instructions to update Employee Information.

Aadhaar number is not allowed to be edited.

Correct only the fields where you require correction

Submit the corrected information.

Upload your scanned JPG pic of max file size 100kb.

Please review the form thoroughly before submission.

Note:
a. Please ensure that the data is updated carefully, if you are unable to do it yourself please contact your concerned officer for support.

b. If any of the pre-requisite information is not available in the form (select options only), please get in touch with the concerned officer in your department to get the details updated.

.........................................................................................................................................................................

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ Android Mobile App


இதுதான் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ Android App.

தற்போது சோதனை வடிவில் மட்டுமே.

கீழே இருக்கும் link-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து உங்கள் கைபேசியிலேயே கல்வி தொலைக்காட்சியை கண்டு மகிழுங்கள்.





................

Dr. Radha Krishnan life history short film



Directed by

T.J. Nagendran BT Assistant Maths PUMS SURYANAGARAM Tiruttani BLOCK
CELL: 99408 59760.

.....................................



uScreen cast மூலம் mobile ல் பார்க்கும் அனைத்தும் நேரிடையாக laptop ல் பார்க்க முடியும்.

பள்ளிக்கு கொடுத்த lAptop ல் screen cast எளிமையாக செய்ய முடியும். அதன் வழிமுறை தான் இந்த வீடியோ..

.........................................
HOW TO APPLY LEAVE ON BIOMETRIC ATTENDANCE SYSTEM IN TN EDUCATION DEPARTMENT.

CLIK HEAR
https://youtu.be/0HCFu9uam2k
https://youtu.be/0HCFu9uam2k

பயோ மெட்ரிக் வருகைப் பதிவில், விடுப்பு அல்லது மாற்றுப் பணிக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு என்பதை விளக்கும் காணொலி!

சனி, 7 செப்டம்பர், 2019

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா பாகம் எண் வரிசை எண் தெரிந்து கொள்ள வேண்டுமா?? Download this Mobile app.



வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா பாகம் எண் வரிசை எண் தெரிந்து கொள்ள வேண்டுமா??  download this mobile app


பருவம் -2, 1-5 வகுப்பு , புதிய பாடப் புத்தகங்கள் (2019)

இரண்டாம் பருவம், ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையிலான PDF பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய ,
CLICK HERE
👇👇👇👇👇👇


1.முதல் வகுப்பு

தமிழ் & ஆங்கிலம் , CLICK HERE

கணக்கு * சூழ்நிலையியல்,(TM) , CLICK HERE

கணக்கு & சூழ்நிலையியல்,(EM), CLICK HERE


2. இரண்டாம் வகுப்பு

தமிழ் & ஆங்கிலம், விரைவில்

கணக்கு &சூழ்நிலையியல்,(TM), DOWNLOAD, CLICK HERE

கணக்கு & சூழ்நிலையியல் (EM), CLICK HERE

3.மூன்றாம் வகுப்பு

தமிழ் & ஆங்கிலம் ,CLICK HERE

கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல், (TM), விரைவில்

கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல், (EM), CLICK HERE

4. நான்காம் வகுப்பு

தமிழ் & ஆங்கிலம், CLICK HERE

கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல், (TM), விரைவில்

கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல்,(EM), CLICK HERE

5. ஐந்தாம் வகுப்பு

தமிழ் & ஆங்கிலம், CLICK HERE

கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல், (TM), விரைவில்

கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல், (EM), விரைவில்

NMMS - தேர்ச்சி பெற்ற மாணவர்களது விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும்.




பள்ளிக் கல்வி - திட்ட ஆண்டு 2019 - 20 மத்திய அரசின் உதவித் தொகை திட்டம் - தேசிய வருவாய் வழி திறன் தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

..................................



ஆசிரியை, மாணவிகள் படங்களை வலை தளங்களில் பதிவிடக் கூடாது : பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு


Saturday, September 7, 2019



தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டு விழா, விளையாட்டு விழா உள்ளிட்ட பல்ேவறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவ்விழாக்களில் பங்கு பெறும் பெண் ஆசிரியைகள், மாணவிகள் சார்ந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற படங்களை பதிவிடுவதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெண் ஆசிரியைகள், மாணவிகளின் புகைப்படத்தை பாதுகாப்பு கருதி சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஆசிரியைகள், மாணவிகளின் அனுமதி இன்றி பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும். இதனை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை தக்க கட்டுப்பாடுகளுடன் சுய கோப்புகளாக சேமிக்கலாம். பதிவிறக்கம் செய்ய இயலாத பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிளாக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

.......................................
நம் உடலில் ஏற்படும் அனைத்துநோய்களும் குணமாக்கும் மாபெறும்ஒரு சித்தரகசியம்.



நம் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாக்கும் மாபெரும் ஒரு சித்த ரகசியத்தை என் குரு திருமூலர் பெருமான் திருமூலர் கருக்கடை வைத்தியம் நூலில் கூறியுள்ளார்.  அந்த முழு ரகசியங்களை யும் நம் திருமந்திர வகுப்பில் கற்பித்து வருகிறேன். அதில் ஒரு முக்கியமான ரகசியத்தை இன்று நம் சித்தர்களின் குரலில் பகிர்கிறேன்.  இரவில் #தொப்புளில் தினமும் மூன்று  சொட்டு #எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் #நன்மைகள்!! என்ன என்பதை இன்று விரிவாக பார்ப்போம்.

நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர். நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு. 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது.   இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டுவிட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்....

அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.

நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான். அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம். 

காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.

 முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன.

நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.

அத்தகைய தொப்புளை பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவும், ஆண்களிடம் கண்டு கொள்ளாமலும் வைத்திருக்கிறோம். இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சிறிது எண்ணெய் துளி விட்டதும் அடுத்த நொடியை குழந்தை நிப்பாட்டுவது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

வாயுக் கோளாறுகள் இருந்தால் தொப்புளில் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும் என்பதில் சந்தெகமில்லை.
   
தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு,  முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

#கண்கள்_வறட்சி_நீங்க #குறைந்தபார்வை_சரியாக #பளபளப்பான_தலைமுடி_பெற #மெருகூட்டப்பட்ட_சருமம்_பெற
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

#முழங்கால்_வலி_குணமடைய
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

#நடுக்கம்_மற்றும்_சோர்வு, #மூட்டுவலி_மற்றும்_வறண்ட_சருமத்திலிருந்து_நிவாரணம்_பெற
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி  கடுகு எண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரைஇன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.

#தொப்புளில்_ஏன்_எண்ணெய்விட_வேண்டும்?

எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது.

சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது.

அப்படி உடனடி நிவாரணம் தரும் முக்கிய புள்ளியான தொப்புளில் எண்ணெய் சிறிது விடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவீர்களா? தொடர்ந்து

கண்பார்வை :
***************
தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது

பாதவெடிப்பு, சருமபிரச்சனை :
*********************************

உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.

மூட்டுவலி :
**************

முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.

உடல்சோர்வு :
****************

உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.

நரம்புபாதிப்புகள் :
*********************

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

தேங்காய்எண்ணெய் :
*************************

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

விளக்கெண்ணெய்
*********************
இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன.

வேப்பெண்ணெய் :
*********************

வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

எலுமிச்சை எண்ணெய் :
***************************

எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.

பாதாம் எண்ணெய் :
**********************

சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

ஆலிவ் எண்ணெய் :
************************

தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.
................................,.....,.......

வியாழன், 5 செப்டம்பர், 2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்.

06-09-2019


*இன்றைய திருக்குறள்*

*குறள் எண்-233*

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
 பொன்றாது நிற்பதொன் றில்.

✍மு.வ உரை:

உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

✍கருணாநிதி  உரை:

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

✍ சாலமன் பாப்பையா உரை:

தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

நீங்கள் உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற்றால் விரோதிகள் தோன்றுவது இயற்கையாக இருந்தாலும்,நாம் நமது வெற்றிப் பாதையில் நடந்து கொண்டிருக்க வேண்டும்.

   - அப்துல் கலாம்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*Important  Words*

 Sprain சுளுக்கு

 Sinus நீர்ச் சேர்க்கை

 Sleep தூக்கம்

 Insomnia தூக்கம் வராமை

 Sweat வியர்வை

♻♻♻♻♻♻♻♻

*பழமொழி மற்றும் விளக்கம்*

*கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்* .

நாம் அறிந்த விளக்கம் :

கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

விடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல அந்த விடாமுயற்சிக்கு மிகுந்த உடல்வலிமை மனவலிமை வேண்டும் என்பது தான் இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1) எரிமலை இல்லாத கண்டம் எது?

*ஆஸ்திரேலியா*

2.) உலகில் இராணுவமே இல்லாத நாடு?

*கோஸ்டாரிகா*

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1. கிட்ட இருக்கும்  பட்டணம். எட்டிப் பார்க்க முடியவில்லை. அது என்ன?

*முதுகு*

2.கீழேயும் மேலேயும் மண். நடுவில் அழகான பெண். அது என்ன?

*மஞ்சள் செடி*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*இனிப்பைத் தின்ற எறும்பு*

அவலூரில் கிழவன் ஒருவன் இனிப்பு கடை நடத்தி வந்தான். சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைப் பிடிக்காது. ஆனால், ஏதேனும் வேலை செய்வதற்கு மட்டும் அழைப்பான்.

இந்த வேலையை முடியுங்கள் இனிப்பு தருகிறேன் என்று பொய் சொல்லி ஏமற்றி வேலைவாங்குவார். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது.

மதிய நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். அந்த நேரத்தில் சிறுவனாக இருந்த அவன் மகன், கடையைப் பார்த்துக்கொள்வான்.

அந்தக் கடைக்காரன் ஒரு நாள் பலகாரங்கள் வைப்பதற்காக மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்று முப்பது பானைகள் செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்? என்று கேட்டான். ஒரு வாரத்தில் தயாராகி விடும், என்றனர்.

குறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர சிறுவர்களை அழைத்து மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வாருங்கள். நான் இனிப்பு தருகிறேன் என்றார்.

அவர் சொன்னதை நம்பி அவர்களும் பானைகளை கடைக்குக் கொண்டு வந்தனர். நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியாக இருந்தனர் சிறுவர்கள்.

எங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம், என்றனர் சிறுவர்கள். உங்களுக்கு இனிப்பு தரமாட்டேன் என்று சொல்லி விரட்டியடித்தான் கடைக்காரன்.

தாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணி அழுது கொண்டே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள். அந்த வழியாக வந்த சதீஷ், ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்.

சதீஷ் மாமா! அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார், என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர். கவலைப்படாதிற்கள்! உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் வெளியே நில்லுங்கள், என்று சொல்லிவிட்டு சதீஷ், கடைக்குள் நுழைந்தார்.

அப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான்.

இவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த சதீஷ், இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், பணம் தராமல் எதையும் தொடக்கூடாது, என்று கத்தினான்.

தம்பி! உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார், என்றான் சதீஷ் அப்பா! கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது, என்றான் சிறுவன்.

தூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், மகனே! எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா? என்று கத்தினான். இதைக் கேட்ட சதீஷ், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே இனிப்பு பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு சிறுவர்களுக்குக் கொடுக்கச் சென்றார். இதைப் பார்த்த அவன், அப்பா நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை, என்று கத்தினான்.

இதைக் கேட்ட கடைக்காரன் கோபமடைந்தான். என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது? என்று திட்டினான். பின்பு, இனிப்புகளை சிறுவர்கள் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர். உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன், என்று சொல்லி சதீஷ், கிளம்பிவிட்டான்.

தூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே நின்றான்.

நீதி :
பிறரை ஏமாற்றுதல் கூடாது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

T. தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮 தமிழக அரசு சார்பில் 377 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

🔮உலகில் சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் வரிசைபட்டியலில் இந்தியா 34 வது இடத்தில் உள்ளது.

🔮விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்.

🔮தமிழகம்தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர் காமராஜ்.

🔮நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸில் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

🔮India extends $1 billion line of credit for development of Russia’s Far East.

🔮Narendra Modi to witness soft-landing on moon.

🔮83 Tejas LCA pricing issue resolved: Defence Ministry official.

🔮IIT Madras, BHU, DU among five institutions to get eminence status.

🔮Rahmat Shah becomes first Afghan player to score Test century.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்

04-09-2019


*இன்றைய திருக்குறள்*

*குறள் எண் - 157*

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
 அறனல்ல செய்யாமை நன்று.

மு.வ உரை:

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

கருணாநிதி  உரை:

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:

கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

பிறருக்கு உதவும் வாழ்க்கை மேலான வாழ்க்கை ஆகும்,
வாயில்லாத ஜீவன்களுக்கு உதவும் வாழ்க்கை உறைவனின் அருளைப் பெற்ற வாழ்க்கை ஆகும்.

    - அப்துல் கலாம்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*பழமொழி மற்றும் விளக்கம்*

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது .

நாம் அறிந்த விளக்கம் :

இமையின் குறைபாடுகளை அதனுள் இருக்கும் கண்ணால் பார்க்க முடியாது. இது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

நம்முடைய மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக் கொண்டிருந்தாலும் அதன் குற்றங்கள் நமக்குத் தெரிவதில்லை. அதுபோல தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது. தன் முதுகு தனக்குத் தெரியாது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

✡✡✡✡✡✡✡✡

*Important  Words*

 Jenny Ass பெண் கழுதை

 Jellyfish சொறி மீன்

 Kangaroo கங்காரு

 King Cobra நாகப் பாம்பு

 Kitten பூனைக் குட்டி

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1) நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார்?

*கிரேக்கர்கள்*

2) உலகின் மிகப்பெரிய பாலைவனம்?

*சஹாரா*

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு கூட ரத்தம் வராது. அது என்ன?

*ஈசல்*

2. செய்தி வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே? அது என்ன?

*தொலை பேசி*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*நண்பகல் தூக்கம்*

ஒரு நாள் மத்தியம் வெயில் அதிகமாக இருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த ஒரு விறகுவெட்டி அவனைப்பார்த்து, இவன் கடுமையான உழைப்பாளி போல தெரிகிறது. உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான் என நினைத்துக் கொண்டுச் சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான். இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான். அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் என நினைத்துக் கொண்டுச் சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் வந்தான். காலையிலேயே நன்றாக குடித்துவிட்டும் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான் என நினைத்துக்கொண்டுச் சென்றான்.

சற்று நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் என அவரை வணங்கிவிட்டுச் சென்றார்.

நீதி :

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

*தொகுப்பு*

T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
💐💐💐💐💐💐💐💐

*செய்திச் சுருக்கம்*

🔮இந்தியாவின் புல்லட் ரெயில் திட்டம்: ஜப்பானில் பயணம் செய்து ராஜ்நாத் சிங் ஆய்வு.

🔮பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு விமான நிலையத்தில் விசா வழங்கும் திட்டத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்தார்.

🔮சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு.

🔮தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல்; விரைவில் தமிழில் வெளியாகும் -சி.வி.சண்முகம்.

🔮வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி.

🔮உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்.

🔮Marine police seize sea cucumber after intercepting fishing boat.

🔮PhD-holders demand exemption from teacher eligibility tests.

🔮 Kanpur teacher has 700 kinds of Ganesh idols  ranging 2 cm to 50 cm in height.

🔮ICC Test Rankings: Steve Smith overtakes Virat Kohli to become the No. 1 batsman.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
...................................


TERM 2 – NEW SYLLABUS ALL BOOKS DOWNLOAD HERE இரண்டாம் பருவம், ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையிலான PDF பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய , CLICK HERE.!!!


1.முதல் வகுப்பு
2. இரண்டாம் வகுப்பு
தமிழ் & ஆங்கிலம், விரைவில்
3.மூன்றாம் வகுப்பு
கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல், (TM), விரைவில்
4. நான்காம் வகுப்பு
கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல், (TM), விரைவில்
5. ஐந்தாம் வகுப்பு
கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல், (TM), விரைவில்
கணக்கு & அறிவியல் -மிக விரைவில் & சமூகஅறிவியல்-மிகவிரைவில்
.......................................
........

.......

Flash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் தொட்டுணர் கருவி வருகைப் பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பணிப்பதிவேட்டில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக செயல்படுத்த பள்ளிக்கத்துறை இயக்குநர் உத்தரவு.


Tuesday, September 3, 2019




அனைத்து ஆசிரியர்களுக்கும் தொட்டுணர் கருவி வருகைப் பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பணிப்பதிவேட்டில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக செயல்படுத்த பள்ளிக்கத்துறை உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு / அரசு உதவிபெறும் / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை சார்ந்த பணியாளர்களின் பணிப்பதிவேட்டில் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
...........

சனி, 31 ஆகஸ்ட், 2019

EMIS - இணையத்தில் புதிதாக ஏற்ற வேண்டிய தகவல்கள் என்ன? எப்படி ஏற்ற வேண்டும்?




தற்போது Emis இனைய தளத்தில் school profile  பகுதியில் மேற்காணும் PDF formatல் உள்ள படத்தில் உள்ளவாறு

1) Additional profile details

2) UDISE+Declaration

என்ற இரண்டு பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள Pdf file-ஐ Download செய்து தெரிந்துகொள்ளவும்.



..................................

5 கி.மீ., சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றுவர இலவச வாகனம்: அரசு திட்டம் துவக்கம்

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் அரசு செலவில் மாணவர்களை வாகனத்தில் அழைத்து வரும் திட்டம் சிவகங்கையில் துவக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் இணைப்பு திட்டத்தால் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்லாமல், இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில், 5 கி.மீ., சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றுவர ஏதுவாக, இலவச வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மாவட்டத்தில் பரிட்சார்த்தமாக காளையார்கோவில் ஒன்றியத்தில் காளையார் மங்கலம், மானாமதுரை ஒன்றியத்தில் வேதியரேந்தல், கண்ணங்குடி ஒன்றியத்தில் மங்கலம் ஆகிய இடங்களில் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏற்படுத்தியுள்ளனர்
இதற்காக மாதம் ஒரு மாணவருக்கு 500 முதல் 600 ரூபாய் வரை அரசு வழங்குகிறது. காளையார்மங்கலத்தில் நடந்த விழாவிற்கு ஒருங்கிணைந்த கல்வி திட்ட மேற்பார்வையாளர் பிளோரா தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் இந்திராணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெயா வரவேற்றார். ஆசிரியர்கள் சகாயதிரவியம், கோபிகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
EMIS -HOW TO ENTRY TEACHER TRAINING DETAILS IN ON LINE

CLIK HEAR
https://youtu.be/ZFCOpECZh4M

https://youtu.be/ZFCOpECZh4M

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

IT - ஸ்டேட்டஸ் பார்க்காததால் வந்த வினை..! நம் ஸ்டேட்டஸை எப்படிப் பார்ப்பது..?

வருமான வரி சீசன் அடுத்த சில நாட்களில் முடியப் போகிறது. பலரும் தங்கள் வருமான வரிப் படிவத்தை சமர்ப்பித்துவிட்டார்கள். ஆனால் அதற்குள்ளேயே தங்கள் வருமான வரி ஸ்டேட்டஸ் பற்றி இணையத்தில் பெரிதாக பேசத் தொடங்கிவிட்டார்கள் நம் மக்கள். ஆக இந்த கட்டுரையில் நம் ஸ்டேட்டஸை எப்படிப் பார்ப்பது, நம் ஸ்டேடஸ் என்னவாக இருக்க வேண்டும். அதில் E verification எவ்வளவு முக்கியமான பங்கு வகிக்கிறது போன்ற விவரங்களை விரிவாகப் பார்க்கப் போகிறோம். வாருங்கள் ஸ்டேட்டஸை எப்படிப் பார்ப்பது..? என்கிற கேள்வியில் இருந்தே தொடங்குவோம்.



ஸ்டெப் 1 முதலில் https://www.incometaxindiaefiling.gov.in/home லிங்கை சொடுக்கவும். அதன் பின் Registered User? என்கிற ஆப்ஷனுக்குக் கிழ் Portal Login என்கிற பட்டனை சொடுக்கவும். மீண்டும் Go to Portal Login பட்டனை க்ளிக் செய்யவும். உள்ளே சென்ற உடன் நம் யூசர் ஐடி கேட்கும். நம் பான் அட்டை தான் நம் யூசர் ஐடி. நம் பாஸ்வேர்ட், கேப்சா போன்ற தேவையான அனைத்து விஷயங்களையும் நிரப்பி லாக் இன் செய்யவும்.

ஸ்டெப் 2 உள்ளே சென்றதும் Filing of Income tax Returns மற்றும் View Returns / Forms என இரண்டு ஆப்ஷன் இருக்கும். அதில் View Returns and form-ஐ க்ளிக் செய்யவும். அதன் பின் நம் பான் அட்டை எண் முதலில் காட்டப்படும். அதன் பின் Select an option-ல் Income tax returns-ஐ தேர்வு செய்து சமர்பிக்கவும். அதன் பின் நம் பான் அட்டை, அசேஸ்மெண்ட் ஆண்டு (நிதி ஆண்டுக்கு அடுத்த ஆண்டு), எந்த ஐடிஆர் படிவம், எந்த வருமான வரிப் படிவத்தை சமர்பித்தோம், நாம் தாக்கல் செய்த வருமான வரிப் படிவம் ஒரிஜினலா அல்லது ரிவைஸ் செய்தவையா, வருமான வரிச் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்தோம், நாம் வருமான வரி சமர்பித்ததற்கான அத்தாஅட்சி எண் மற்றும் ஸ்டேட்டல் கொடுக்கப்பட்டு இருக்கும். பொருள் சரி இந்த வருமான வரி ஸ்டேட்டஸ் என்றால் என்ன..? நாம் செலுத்திய வருமான வரிப் படிவத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் ப்ராசெஸ் செய்து முடித்துவிட்டார்களா..? என்று பார்ப்பது தான் இந்த வருமான வரி ஸ்டேட்டஸ். சுருக்கமாக நாம் ஹோம் வொர்க் செய்தால் ஆசிரியர் சரி பார்ப்பாரே அது போன்ற வேலை தான் இதுவும். 

சரி இந்த ஸ்டேட்டஸ் என்னவாக இருக்க வேண்டும்..? ஸ்டேட்டஸின் கீழ் ITR Processed என்று வரும் வரை வருமான வரிப் படிவம் தாக்கல் செய்யும் வேலை முடியவில்லை. ஆக நம் ஸ்டேட்டஸை ITR Processed என்றும் வருவதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டும் ஒருவர் வருமான வரிப் படிவத்தை சமர்பித்துவிட்டார். ஆனால் E Verification செய்யவில்லை என்றால், அவருடைய ஸ்டேட்டஸ் Returns Uploaded, Pending for ITR - V / E Verification என இருக்கும். எனவே கட்டாயமாக E verify செய்ய வேண்டும். இப்போது நமக்கு இன்னொரு கேள்வி வரும். நம் வருமான வரிப் படிவத்தை எப்படிE verify செய்வது..? நாம் ஸ்டேட்டஸ் பார்க்கிறோம் இல்லையா அந்த அட்டவணைக்கு மேலேயே பச்சை நிறத்தில் Click here to view your returns pending for e verification என குறிப்பிட்டு இருப்பார்கள்.



ஸ்டெப் 3

மேலே சொல்லி இருக்கும் Click here to view your returns pending for e verification என்கிற பட்டனை அழுத்தினால், மீண்டும் நம் பான் அட்டை, அசேஸ்மெண்ட் ஆண்டு (நிதி ஆண்டுக்கு அடுத்த ஆண்டு), எந்த ஐடிஆர் படிவம், என்று வருமான வரிப் படிவத்தை சமர்பித்தோம், நாம் தாக்கல் செய்த வருமான வரிப் படிவம் ஒரிஜினலா அல்லது ரிவைஸ் செய்தவையா, நாம் வருமான வரி சமர்பித்ததற்கான அத்தாட்சி எண் மற்றும் ஸ்டேட்டஸ், E verify என வரிசையாக கொடுக்கப்பட்டு இருக்கும். ஒருவேளை நாம் e verify செய்துவிட்டோம் என்றால் இந்த Click here to view your returns pending for e verification என்கிற பட்டனை அழுத்தி உள்ளே சென்றால் No returns pending for e-verification என வரும்.



ஸ்டெப் 4 Click here to view your returns pending for e verification என்கிற பட்டனை அழுத்தி உள்ளே சென்ற உடன், ஸ்டேட்டஸ் ITR filed எனக் குறிப்பிடப்பட்டு, e verify என்கிற சொல் சிவப்பு நிறத்தில் இருந்தால் நாம் இன்னும் வருமான வரிப் படிவத்தை e verify செய்யவில்லை என்று பொருள். மேற்கொண்டு e verify செய்ய சிவப்பு நிறத்தில் இருக்கும் e verify என்கிற வார்த்தையை சொடுக்கவும். அதன் பின் நம் பான் அட்டை, அசெஸ்மெண்ட் ஆண்டு, வருமான வரி படிவத்தின் எண், வருமான வரி தாக்கல் செய்ததற்கான அத்தாட்சி எண் போன்றவைகள் வரும். அதற்குக் கீழ் e verify செய்ய மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.



ஸ்டெப் 5 அதில் ஆதார் அட்டையில் கொடுத்திருக்கும் ஃபோன் நம்பருக்கு ஓடிபி மூலமாக e verify செய்கிறேன் என மூன்றாவது ஆப்ஷன் இருக்கும். அதை சொடுக்கவும். 'அதன் பின் ஆதார் ஓடிபி ஜெனரேட் செய்ய விரும்புகிறேன்' என்பதை சொடுக்கவும் (I would like to generate aadhar otp now). அதை சொடுக்கவும். அதன் பின் நம் ஆதார் அட்டையில் கொடுத்திருக்கும் போன் நம்பருக்கு ஒரு ஆதார் ஓடிபி வரும். அந்த ஓடிபி-யை டைப் செய்ய ஒரு காலி இடம் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த இடத்தில், நமக்கு வந்த ஆதார் ஓடிபியை நிரப்பி, கீழே I agree to validate my aadhaar details with uidai என்கிற ஆப்ஷனையும் டிக் செய்து சமர்பிக்க வேண்டும்.



ஸ்டெப் 6 நம் மொபைல் ஃபோனுக்கு வந்த ஓடிபியை முறையாக சமர்பித்த பின்னர் தான் நாம் முழுமையாக வருமான வரி தாக்கல் செய்ததாக பொருள். இதையும் நாம் மீண்டும் சரி பார்த்துக் கொள்ளலாம். அதற்கு, e verify செய்து சில நாட்கள் பிறகு மீண்டும் ஸ்டேட்டஸை செக் செய்தால் நம் வருமான வரிப் படிவத்துக்கு e verified என இருக்கும். மீண்டும் சில நாட்கள் கழித்துப் ஸ்டேட்டஸைப் பார்த்தால் E Verification Accepted என்று வரும். அடுத்த சில நாட்கள் கழித்துப் பார்த்தால் ITR Processed என்று வரும். அதாவது நம் வருமான வரிப் படிவம் தொடர்பாக அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது என்று பொருள். கவனம் மக்களே ஆக நாம் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்துவிட்டு எனக்கு என்ன என்று ஜாலியாக இருக்க முடியாது. கொஞ்சம் இந்த ஸ்டேட்டஸ் விஷயங்களையும் கவனியுங்கள். அது தான் நம் எதிர்காலத்துக்கு நல்லது. 

ஒருவேளை நீங்கள் e verification செய்ய மறந்தால், உங்கள் வருமான வரிப் படிவம் ப்ராசெஸ் செய்யப்படாது. ப்ராசெஸ் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் வருமான வரி செலுத்தியதாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதன் பின் வழக்கம் போல வருமான வரித் துறையில் இருந்து நமக்கு நோட்டீஸ் வரும்.